Thursday, July 24, 2025
Home Blog Page 24

இதழியலாளரின் தகுதிகள் யாவை?

இதழியலாளரின் தகுதிகள்

இதழியலாளரின் தகுதிகள் யாவை?


            ஒருவர் இதழியலாளராக வாழ்க்கையை நடத்தி, பெயரும் புகழும் பெற்றுத்திகழ வேண்டுமானால், அவரிடம் இதழியல் தொழிலுக்கு வேண்டிய சில பொதுத் தகுதிகளும் (General Qualifications), சில சிறப்புத் திறன்களும் (Special skills) இருக்க வேண்டும். இவை இயல்பாக அமையாவிட்டால் பயிற்சியின் மூலமாகவும், முயற்சியின் வாயிலாகவும் ஒருவர் பெற்றுக்கொள்ள முடியும். இதழியலாளர்களுக்கு வேண்டிய தகுதிகளையும் திறன்களையும் விளக்கிக் கூறலாம்.

(i) பொதுத் தகுதிகள் :

            இதழியலில் பணி செய்கின்றவர்களிடம் அமைந்திருக்க வேண்டிய குறிப்பிடத்தக்க பொதுத் தகுதிகளைத் தொகுத்துக் கூறலாம்.

1.கல்வித் தகுதி :

      இதழியலாளராகப் பணி செய்ய விரும்புபவர் ஓரளவு நன்கு எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். பெரும்பாலான இதழ்கள் பொதுவாகப் பட்டம் பெற்றவர்களையே பணியிலமர்த்த விரும்புகின்றன. பொதுக்கல்வித்தகுதியோடு, எந்த மொழி இதழில் பணியாற்றச் செய்கின்றாரோ அந்த மொழியில் எழுத்தாற்றல் பெற்றிருக்க வேண்டும். பல மொழிகளைத் தெரிந்திருப்பது இதழியல் பணிகளுக்குப் பேருதவியாக இருக்கும். தட்டெழுத்து, சுருக்கெழுத்து பயிற்சி பெற்றவர்களால் இதழியல் பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியும்.

2. பொது அறிவுத்தேர்ச்சி:

      பொது அறிவில் தேர்ச்சி பெற்றிருப்பது இதழியலுக்கு வேண்டிய ஒரு தகுதியாகும். எடுத்துக்காட்டாக, செய்தியாளர் எந்தச் செய்தியைத் திரட்டினாலும், அந்தச் செய்தி சரியானதா வென்பதைத் தீர்மானிக்கவும், அதனைப் பற்றி எழுதவும் பொது அறிவு தேவையாகும். உலகியலறிவு பெற்றவர்களால் இதழியல் பணிகளை அருமையாகச் செய்ய முடியும்.

3. வீர தீரச் செயல்களில் ஆர்வம்:

இதழியல் பணியில் பல வகை இடர்களை எதிர் நோக்க வேண்டியதிருக்கும். இக்கட்டான சூழ்நிலைகளிலும் அறிவாற்றலோடும், துணிச்சலோடும் இதழியலாளர்கள் செயல்பட வேண்டும். அதற்குரிய அஞ்சாமை இயல்பு இதழியலாளர்களுக்குத் தேவை.

4. கடின உழைப்பு :

இதழியலாளர்கள் காலம் கருதாமல் உழைக்கும் இயல்புடையவராக இருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, செய்தியாளர்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் செய்திகளுக்காகக் காத்திருக்க வேண்டும். ஓய்வு ஒழிவின்றி அல்லும் பகலும் அயராமல் உழைக்கின்றவர்களால் தான் இதழியலில் பெயரும் புகழும் கொண்ட சிறப்பினைப் பெற முடியும்.

5. பொறுப்புணர்ச்சி:

இதழியலாளா மிருந்த பொறுப்பு வுணர்ச்சியோடு செயல்பட வேண்டும். தனது பணிகளின் விளைவுகளை உணர்ந்து செயல்பட வேண்டும். சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றிய தெளிவு இதழியலாளருக்கு வேண்டும்.

6. சுதந்திரமாகச் செயல்படல்:

இதழியலாளர்கள் எந்த விதக் கட்டுப்பாட்டிற்கும் ஆட்படாமல், சுதந்திரமாகச் செயல்படும் மனப்பாங்கினைப் பெற்றிருக்க வேண்டும். சுதந்திர உணர்வு இல்லாதவர்களால் இதழியலில் புதுப்புது சாதனைகளை நிகழ்த்த முடியாது.

7. சத்திய வேட்கை:

இதழியலாளர்கள் சத்திய வேட்கை வுடையவர்களாக இருக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் பொய்யானவற்றைப் பரப்பக் கூடாது.

8. அற உணர்வு :

இதழியலாளர்கள் நடுநிலை நின்று அறவுணர்வோடு செயல்பட வேண்டும். எந்த நிலையிலும் சமுதாய நீதிக்குப் புறம்பாகச் செயல்படக் கூடாது.

9.நாட்டுப் பற்று :

இதழியலாளர்களிடம் தாய் நாட்டுப் பற்றிருக்க வேண்டும். அப்பொழுது தான் இதழியல் பணியைத் தொண்டு மனப்பான்மையோடு செய்ய முடியும். நாட்டின் முன்னேற்றத்திற்கு இதழியல் பணி மூலம் தொண்டு செய்கின்ற நோக்கம் இருந்தால், அவரது பணியால் பெரும்பலன்கள் விளையும்.

(ii) சிறப்புத் திறன்கள்:

ஆசிரியர் தொழில், மருத்துவர் தொழில் போன்று இதழியல் தொழிலும் தனித்திறமைகளைச் சார்ந்து அமைகின்றது. செய்யும் தொழிலுக்கு வேண்டிய திறமைகளைப் பெற்றிருக்காவிட்டால், இத்தொழிலில் வெற்றி பெற இயலாது. இதழியல் தொழிலுக்கு வேண்டிய சிறப்புத் திறமைகளைச் சுட்டிக்காட்டலாம்.

1. எழுத்துத்திறன் :

இதழியலில், குறிப்பாக செய்தித்திரட்டுதல், செப்பனிடுதல் (Editing) போன்ற பணிகளைச் செய்பவர்களிடம் எதற்கும் வடிவமைத்து எழுதும் திறன் இருக்க வேண்டும். எழுதுவது ஒரு கலையாகும். எழுதுவதை விளக்கமாகவும், நுட்பமாகவும், பிறர் மனங்கொள்ளத்தக்க வகையிலும் எழுத வேண்டும். சுவையான எழுத்து நடையை வாசகர்கள் விரும்பிப் படிப்பார்கள். எழுத வேண்டியதை உரியகாலத்தில், விரைந்து எழுதித்தரும் ஆற்றலை இதழியலாளர்கள் முயன்று வளர்த்துக் கொள்ள வேண்டும்.

2. தேர்ந்தெடுக்கும் திறன் :

உலகத்தில் எவ்வளவோ நிகழ்ச்சிகள் நடக்கலாம். அவை எல்லாம் இதழ்களில் வெளியிடும் தகுதி பெறுவதில்லை. எவற்றை எப்படி வெளியிட வேண்டுமென்பதைத் தெரிந்தெடுக்கும் திறன் இதழியலாளர்களுக்குத் தேவை.

3.மெய்ப்பொருள் காணும் திறன்:

‘எப்பொருள் எத்தன்மைத் தாயின்’, எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும்’ அப்பொருளில் மெய்ப் பொருள் காணும் திறன் இதழியலாளருக்குத் தேவை. உண்மை இதுவென்று ஆராய்ந்தறியாமல் எதனையும் வெளியிடக் கூடாது.

4.நினைவாற்றல்:

இதழியலாளர்களிடம் நல்ல நினைவாற்றல் இருக்க வேண்டும். எல்லா நிகழ்வுகளையும் உடனுக்குடன் எழுத இயலாது. பலவற்றை நினைவில் நிறுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். அப்பொழுது தான் செய்திகளைச் சீர்குலைக்காமல் வெளியிட முடியும்.

5. சிறப்புப்பயிற்சி:

தொழிலில் பயன்படுத்துகின்ற கருவிகளை இயக்கவும், பிற பணிகளைச் செய்யவும் சிறப்புப்பயிற்சி பெற்றிருக்க வேண்டும். எதிர்காலத்தில் இதழியல் துறையில் மேலும் நிறைய வேலைவாய்ப்புக்கள் தோன்றும் சூழல் இருக்கின்றது. அவற்றைப் பலரும் குறிப்பாக இளைஞர்கள், நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பு

கட்டுரையானது டாக்டர் மா.பா.குருசாமி நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

முருக நாயனார் புராணம்

முருக நாயனார்

முருக நாயனார்

இறைவர் திருப்பெயர் :ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் :ஸ்ரீ கருந்தார்குழலி

அவதாரத் தலம் :திருப்புகலூர்

முக்தி தலம் : ஆச்சாள்புரம்

குருபூஜை நாள் : வைகாசி – மூலம்

“புலரும் பொழுதின் முன்னெழுந்து புனித நீரில் மூழ்கிப் போய்

மலரும் செவ்வித் தம்பெருமான் முடிமேல் வான்நீர் ஆறுமதி

உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த

அலகில் மலர்கள் வெவ்வேறு திருப்பூம் கூடைகளில் அமைப்பார்.”


பாடல் விளக்கம்:

            பொழுது விடிவதற்கு முன்பாக எழுந்து, தூய நீரில் மூழ்கிச் சென்று, தம்பெருமானின் திருமுடிமேல் பிறையுலவும் திருச்சடையிடத்து முகையவிழ்ந்து மலர்கின்ற செவ்வி பார்த்து, எடுத்த அளவற்ற மலர்களை வெவ்வேறாகத் திருப்பூங்கூடைகளில் சேர்ப்பாராய்.

திருப்புகலூர் தெய்வமணம் கமழும் பழம்பெரும் திருத்தலம்! இத்தலத்திலுள்ள சிவன் கோயிலுக்கு வர்த்தமானேச்சுரம் என்று பெயர். இத்தலத்தில் அந்தணர் குலத்தில் முருகனார் என்னும் சிவத்தொண்டர் தோன்றினார். முருகனார் இளமை முதற்கொண்டே இறைவனின் பாதகமலங்களில் மிகுந்த பற்றுடையவராய் வாழ்ந்து வந்தார்! பேரின்ப வீட்டிற்குப் போக வேண்டிய பேறு பரமனின் திருத்தொண்டின் மூலம்தான் கிட்டும் என்ற பக்தி மார்க்கத்தை உணர்ந்திருந்தார் முருகனார்.

எந்நேரமும் அம்பலத்தரசரையும் அவர் தம் அடியார்களையும் போற்றி வணங்கி வந்தார் முருகனார். தேவார திருப்பதிகத்தினை ஓதுவார். ஐந்தெழுத்து மணிவாசகத்தை இடையறாது உச்சிரிப்பார். இத்தகைய சிறந்த சிவபக்தியுடைய முருக நாயனார் இறைவனுக்கு நறுமலர்களைப் பறித்து மலர்மாலை தொடுக்கும் புண்ணிய கைங்கரியத்தைச் செய்து வந்தார்.


            முருக நாயனார் தினந்தோறும் கோழி கூவத் துயிலெழுவார். தூயநீரில் மூழ்குவார். திருவெண்ணீற்றை மேனியில் ஒளியுறப் பூசிக் கொள்வார். மலர்வனம் செல்வார். மலர்கின்ற பருவத்திலுள்ள மந்தாரம் கொன்றை, செண்பகம் முதலிய கோட்டுப் பூக்களையும், நந்தியவர்த்தம், அலரி, முல்லை, சம்பங்கி, சாதி முதலிய கொடி பூக்களையும், தாமரை, நீலோற்பவம், செங்கழுநீர் முதலிய நீர்ப்பூக்களையும் வகை வகையாகப் பிரித்தெடுத்து வெவ்வேறாகக் கூடைகளில் போட்டுக் கொள்வார்.


            இவ்வாறு பறிக்கப்பட்ட வகை வகையான தூய திருநறுமலர்களைக் கொண்டு, கோவை மாலை, இண்டை மாலை, பக்தி மாலை, கொண்டை மாலை, சர மாலை, தொங்கல் மாலை என்று பல்வேறு விதமான மாலைகளாகத் தொடுப்பார். வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்குப்ப பூமாலையாம் பாமாலை சாத்தி அர்ச்சனை புரிவார்.


            இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார். அரனாரிடம் அளவற்ற பக்தி பூண்டுள்ள முருக நாயனார் சிவன் அடியார்களுக்காகச் சிறந்த மடம் ஒன்றைக் கட்டுவித்தார். முருக நாயனாரின் திருமடத்திற்கு திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் போன்ற சைவ சண்மார்க்கத் தொண்டர்கள் எழுந்தருளியுள்ளார்கள். அவர்கள் முருகநாயனாரின் அன்பிற்கினிய நண்பர்களாகவும் மாறினர்.


            இறுதியில் திருநெல்லூரில் நடந்த திருஞானசம்பந்தரின் பெருமணத்திலே கலந்துகொள்ளச் சென்ற முருக நாயனார் , இறைவன் அருளிய பேரொளியிலே திருஞானசம்பந்தர் புகுந்த போது தாமும் புகுந்தார். என்றும் நிலையான சிவானந்தப் பேரின்ப வாழ்வைப் பெற்றார். இறைவனின் திருவடி நிழலை அடைந்தார்.


“அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து அவர் தம் கழல் நிழல் கீழ்

விரவு புகலூர் முருகனார் மெய்ம்மைத் தொண்டின் திறம் போற்றிக்

கரவில் அவர்பால் வருவாரைக் கருத்தில் உருத்திரம் கொண்டு

பரவும் அன்பர் பசுபதியார் பணிந்த பெருமை பகர் உற்றேன்.”


பாடல் விளக்கம்:


பாம்பணிந்த திருவரையையுடைய பெருமானைப் போற்றி வழிபட்டதன் பயனாக அவருடைய திருவடி நிழற்கீழ் இன்புற்றிருக்கும் முருக நாயனாரின் உண்மைத் தொண்டின் நெறியினை வணங்கி, இனி வஞ்சனையிலாத நெஞ்சுடையவர்பால் தோன்றி நிற்கும் சிவபெருமானைத் தமது கருத்தில் கொண்டு, உருத்திர மந்திரம் கொண்டு வழிபட்ட அன்பர் உருத்திர பசுபதி நாயனார்பணிந்த பெருமையைச் சொல்கின்றேன்.

சோழநாட்டிலுள்ள திருப்புகலூரில், வேதியர் குலத்தில் பிறந்தவர் முருக நாயனார். சிவபெருமான் மீதும் அடியவர்கள் மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.


            நாள்தோறும் மரம், கொடி, செடி, நீர் இவைகளில் பூக்கும் மலர்களைப் பறிப்பார். அவைகளைக் கொண்டு மாலைகள் தொடுப்பார். அவற்றை சிவபெருமானுக்குச் சூட்டி வணங்குவார். ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பார்.


இவ்வாறு திருத்தொண்டு செய்து வந்த இவர், திருஞான சம்பந்தப் பெருமானுடனும் திருநாவுக்கரசு சுவாமிகளுடனும் நட்பும் பக்தியும் கொண்டிருந்தார். சிவ வழிபாட்டில் வழுவாது நின்ற முருக நாயனார் சிவனடி நிழலில் சேர்ந்தார்.


கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

14.ஆனாய நாயனார் வரலாறு

15.மூர்த்தி நாயனார் புராணம்

மூர்த்தி நாயனார் புராணம்

மூர்த்தி நாயனார்

மூர்த்தி நாயனார்

            பாண்டி நாட்டின் தலைநகரான மதுரையில், வணிகர் குலத்தில் பிறந்தவர் மூர்த்தி நாயனார் ஆவார். சிவபெரு மான் மீது அரும்பக்தி கொண்டிருந்தார். அவர், மதுரை சொக்கநாதப் பெருமானுக்கு சந்தனக் காப்பணிவதைத் தன் பெரும் பேறாகக் கருதி, அத்திருத் தொண்டை. தவறாது புரிந்து வந்தார்.

இவ்வாறிருக்கையில் கர்நாடகத்து மன்னன் ஒருவன் பாண்டியனை போரில் வென்று மதுரையின் அரசனானான். அவன் சமண மதத்தைத் தழுவியவன். சைவர்களை வெறுத்தான். சிவனை வழிபடுவோரை பல்வகையில் துன்புறுத்தினான்.

மூர்த்தியார் சிவனுக்குச் சந்தனக்காப்பு அணிவிப்பதை அறிந்து, அவருக்குச் சந்தனம் அளிக்கத் தடை விதித்தான். இதனால் மூர்த்தியார் மிகுந்த வேதனையடைந்தார்.

சொக்கநாதப் பெருமானுக்குச் சந்தனக் காப்பிட, எங்கெல்லமோ சந்தனத்தைத் தேடி அலைந்தார். மன்னனின் கட்டளை என்பதால் அவருக்கு யாரும் சந்தனம் அளிக்கவில்லை. மூர்த்தியார், ‘இக்கொடிய மன்னன் எப்போது இறப்பான், நமக்கு எப்போது சந்தனம் கிடைக்கும்?’ என்று தவித்தார்.

நேராகக் கோயிலுக்குச் சென்றார் நாயனார். அங்கு சந்தனம் அரைக்கும் கல்லை அடைந்தார். சந்தனம்தான் கிடைக்கவில்லை! என் முழங்கையையே சந்தனக் கட்டையாகத் தேய்த்து பெருமானுக்குக் காப்பிடுவேன் என்று கூறி தன் முழங்கையைக் கல்லில் தேய்க்கலானார். அவரது கைமூட்டின் தோல் பிய்ந்தது. சதை தெறித்தது. பின்பு எலும்பும் தேய்ந்து, எலும்பினுள் இருக்கும் தசையும் வெளிவந்தது. இருந்தும் அவர் தன் கையைக் கல்லில் தேய்ப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

அக்காட்சியைக் கண்ட பெருமா,ன், “மூர்த்தியாரே! உன் துயரெல்லாம் நாளையே மாறும். இத்தேசம் உனக்குச் சொந்தமாகப் போகிறது. நீர் உம் கையைக் கல்லில் அரைப்பதை நிறுத்து வீராக!” என்று வாக்கருளினார்.  நாயனாரும் கையைத் தேய்ப்பதை நிறுத்தினார். மறுகணமே அவரது கை பழைய நிலைக்குத் திரும்பியது.


அன்றிரவே அச்சமண மன்னன் இறந்தான். மறுநாள் அரண்மனையிலிருந்தோர் அவனது உடலுக்கு ஈமக் கடன்கள் செய்தார்கள். இறந்த மன்னனுக்கு மனைவியோ, மகனோ இல்லை . அதனால் அடுத்த மன்னன் யார்? என்ற கேள்வி எழுந்தது.

அமைச்சர்கள் ஆலோசித்தார்கள். ‘பட்டத்து யானையின் கண்ணைக் கட்டி நடக்கச் செய்வோம். அது யாரைத் தூக்கி தன் முதுகில் வைத்துக் கொள்கிறதோ அவரே இந்நாட்டின் அடுத்த மன்னர்!’ என்று முடிவெடுத்தனர்.

அதன்படி யானையின் கண்ணைக் கட்டி அனுப்பப்பட்டது. வீதியெங்கும் திரிந்த யானை, மூர்த்தியாரின் முன் வந்து அவரை வணங்கியது. அவரைத் தூக்கித் தன் முதுகில் வைத்தது. அமைச்சர்களும் மூர்த்தியாரை அந்நாட்டின் மன்னராக்கினார்கள். மூர்த்தியாரும், “சமண மதத்தை ஒழித்து, எல்லோரும் சைவ மதத்தைப் பின்பற்றுவீர்களானால் நான் மன்னர் பொறுப்பை ஏற்பேன்!” என்று கூறினார்.

அமைச்சர்கள் அதற்குச் சம்மதித்தனர். நான் மன்னனாக முடிசூட்டிக் கொண்டாலும், சிவனடியார் கோலத்தில்தான் இருப்பேன் என்றும் கூறினார். அதற்கும் அமைச்சர்கள் சம்மதித்தனர்.

மூர்த்தியார் உடனே மதுரை சொக்கநாதப் பெருமான் ஆலயம் சென்று வணங்கினார். மன்னர் பொறுப்பேற்றார். இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல், அடியவராகவே இருந்தார். அவரது ஆட்சியில் சமணம் ஒழிந்து சைவம் தழைத்தது.

இவ்வாறு நெடுநாட்கள் சிறப்புற மதுரையை ஆண்ட மூர்த்தி நாயனார் இறுதியில் சிவனடி நிழலில் அமர்ந்தார்.

 

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

14.ஆனாய நாயனார் வரலாறு

ஆனாய நாயனார் வரலாறு

ஆனாய நாயனார்

ஆனாய நாயனார்

மழநாடு என்னும் நடுநாட்டில் திருமங்கலம் என்னும் ஊரில், ஆயர் குலத்தில் பிறந்தவர் ஆனாய நாயனார் ஆவார்.

 இவர் சிவபெருமான் மீது அரும்பக்தி கொண்டிருந்தார்.

 இடையர்களின் தலைவரான அவர், பசுக்கூட்டங்களை மேய்த்து வந்தார்.

 கூடவே குழல் எடுத்து இசைத்தும் வந்தார்.

 ஒருநாள் ஆயனார் பசுக்களை மேய்க்க காட்டிற்குச் சென்றார். அங்கு மரங்களில் கொன்றைப் பூக்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்திருந்தன. அவற்றைப் பார்த்ததும் ஆயனாருக்கு மனதில் பேரானந்தம் உண்டானது.

 கொன்றைப் பூக்களுடன் நிற்கும் மரங்கள் சிவபெருமானது திருமுடியாகவே தெரிந்தது அவருக்கு.

 அப்பேரானந்தத்தில் திளைத்த ஆயனார், தன் குழலை மடுத்தார்.

 ஐந்தெழுத்து மந்திரத்தை குழலில் இசைக்க ஆரம்பித்தார்.

 பொழுது போவதை மறந்து இசைத்தார்.

 அவரது குழலிசையில் மரங்கள், நதிகள், பறவைகள் இன்னபிற உயிரினங்கள் எல்லாம் அசைவற்று நின்றன.

தேவர்களும், தேவ மங்கைகளும் நிலைதடுமாறினர்.

 அவரது குழல் இசை பிரம்மலோகம், வைகுந்தம் இவைகளைத் தாண்டி கையிலாயம் வரை எட்டியது.

 ஆனாயரது இசைக்கு மெச்சிய சிவபெருமான் ஆனாயர் முன்தோன்றினார்.

 ‘இனிய இந்த இசையோடு என்னோடு வந்து கலப்பாய்’ என்று வாக்கருளினார்.

 ஆனாய நாயனார் சிவஜோதியில் கலந்தார்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

 

அரிவட்டாய நாயனார் புராணம்

அரிவாட்டாய நாயனார்

அரிவட்டாய நாயனார்


            சோழநாட்டிலுள்ள கணமங்கலம் என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் நாயனார் ஆவார். செல்வந்தராகத் திகழ்ந்த அவர் சிவபெருமான் மீது அரும்பக்தி கொண்டிருந்தார். நாள்தோறும் சிவபிரானுக்கு அரிசியும், செங்கீரையும், மாவடுவும் படைத்து வந்தார்.


            நாயனாரின் பக்தியை உலகறியச் செய்ய திருவுள்ளம் கொண்ட பெருமான், நாயனாரின் செல்வம் அனைத்தையும் கரையச் செய்தார். தாயனார் தன் நிலங்களையெல்லாம் விற்று இறைவனுக்கு அமுது படைத்தார். வறுமையுற்றார்.


            இருப்பினும் சிவனுக்கு அமுது படைக்கத் தவற வில்லை. கூலிக்கு நெல்லறுக்கச் சென்றார் நாயனார். கூலியாகக் கிடைக்கும் செந்நெல் முழுவதையும் பெருமானுக்கே படைத்தார். கார் நெல்லை மட்டுமே தான் உண்டார்.


            நாளடைவில் கார் நெல் கிடைக்காமல் போயிற்று. தாயனார் பட்டினிக் கிடந்தார். கணவர் பசியோடிருக்கப் பொறுக்காத அவர் மனைவியார் தோட்டத்திலுள்ள

            கீரைகளைப் பறித்து சமைத்துத் தந்தார். இவ்வாறு சில நாட்கள் கழிந்தன. தோட்டத்தில் கீரைகளும் தீர்ந்தன. பின் வெறும் நீரை மட்டும் அருந்தினார் தாயனார். அதனால் அவரது உடல் மெலிந்து பலகீனமானது. இருந்தும் இறைவனுக்கு செந்நெல் படைப்பதிலிருந்து விலகாது நின்றார் தாயனார்.


            ஒருநாள் வழக்கம்போல் செந்நெல்லும், செங்கீரையும், மாவடுவையும் தாங்கிய கூடையோடு ஆலயத்தை நோக்கிச் சென்றார் தாயனார். மனைவியாரும் பஞ்ச கவ்ய கலயத்தோடு அவரைப் பின் தொடர்ந்து சென்றார். அது கோடைக்காலம் ஆனதால் வழியெங்கும் நிலம் வெடித்து, பிளந்து நின்றது.


தேகம் மெலிவுற்றிருந்த நாயனார், வழியில் தடுமாறி விழப்போனார். அதைக்கண்ட மனைவியார், கலயத்தோடு கணவரைத் தாங்கிப் பிடித்தார். இருப்பினும் தாயனாரின் கூடையிலிருந்த செந்நெல்லும் மாவடுவும், தரையெங்கும் சிதறியது. நெல்மணிகள் நிலத்திலிருந்த வெடிப்புகளினுள் புகுந்தன.


            அதைக்கண்ட தாயனார், “சிவபிரானுக்கு செந்நெல் படைக்க முடியாத நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்?” என்று கூறியபடியே கத்தியால் தன் கழுத்தை அறுக்கத் தொடங்கினார்.

அக்கணம், நிலத்திலிருந்த வெடிப்பினுள், இறைவர் மாவடுக்களைக் கடிக்கும் ஒலி கேட்டது. மறுகணம் பெருமான், கழுத்தை அறுத்த கையைத் தடுத்தார். தாயனரும் அவரது மனைவியாரும் சிவகருணையை எண்ணி மெய் சிலிர்த்தனர். தாயனாரின் கழுத்தும் முன்போல் ஆனது.

            அந்நேரம் சிவபிரான் உமையன்னையுடன், இடப வாகனத்தில் தோன்றினார். “அன்பனே! வறுமையில் எமக்கு அமுதூட்டத் தவறாத நீயும் மனைவியாரும் என்னை அடைவீர்களாக!” என்று வாக்கருளினார். தாயனரும், அவரது மனைவியாரும் சிவபதம் சென்றடைந்தனர்.


            இறைவனுக்காகத் தன் கழுத்தை அறுக்க துணிந்ததால், தாயனார் அரிவட்டாயர் என்ற பெயர் பெற்றார்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

மானகஞ்சாற நாயனார்

மானக்கஞ்சாற நாயனார்


            சோழநாட்டிலுள்ள கஞ்சனூரில், வேளாளர் குலத்தில் பிறந்தவர் மானக்கஞ்சாற நாயனார் ஆவார். இவர் சோழ மன்னரிடத்தில் சேனாதிபதியாய்ப் பணியாற்றினார். சிவபக்தியிலும் அடியவர் பக்தியிலும் சிறந்து நின்றார். தன் பொருள் எல்லாம் அடியவர் பொருள் என்று கருதி வந்தார்.

            அவருக்குத் திருமணமாகி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவள் வளர்ந்து திருமணப் பருவத்தை அடைந்தாள். அப்பெண்ணை, திருப் பெருமங்கலத்திலுள்ள ஏயர்கோன் கலிக்காமருக்குத் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தார் நாயனார். திருமணமும் நிச்சயமாகி, நாளும் குறிக்கப்பட்டது.

திருமண நாளன்று ஏயர்கோன் கலிக்காமர், தன் சுற்றத் தாருடன் கஞ்சனூருக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அவ்வேளையில் சிவபிரான் மானக்கஞ்சாறரின் அடியவர் பக்தியை உலகறியச் செய்ய திருவுள்ளம் கொண்டார்.
            பெருமான் அடியவர் கோலம் தாங்கி, மானக் கஞ்சாறரின் வீட்டிற்குள் நுழைந்தார். அங்கு திருமணக் கோலாகலம் தெரிந்தது. அடியவரைக் கண்ட மானக்கஞ்சாறர் வணங்கினார். தாங்கள் வந்தவேளை நல்லவேளை’ என்று கூறி உபசரித்தார். அடியவர் நாயனாரிடம், “இவ்வீட்டில் நற்காரியம் ஏதும் நடக்கவிருக்கிறதா?” என்று கேட்டார்.

மானக்கஞ்சாறரும் மகிழ்வுடன், “ஆமாம்! என் புதல்விக்குத் திருமணம் நடக்கவுள்ளது. தாங்களும் மணமக்களை வாழ்த்தியருள வேண்டும்!” என்று கூறினார். பின் அடியவரிடம் ஆசி பெறுவதற்காகத் தன் புதல்வியை அழைத்தார்.

நாயனாரின் புதல்வியும் வந்து அடியவரைப் பணிந்து வணங்கினாள். அப்போது, மணப்பெண்ணின் நீண்டு வளர்ந்திருந்த கூந்தலைக் கண்ட அடியவர், “இப்பெண்ணின் கூந்தலை எனக்குத் தருவீரோ?! என் பூணூலுக்கு அது பயன்படும்!” என்று கேட்டார். அடியவர் கேட்டு நாயனார் மறுப்பாரோ?
பெண்ணிற்குத்
சற்று நேரத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது என்பதைப் பற்றி சிறிதும் யோசிக்காமல், நாயனார் தன் மகளின் கூந்தலை வாள் கொண்டு அறுத்து அடியவரிடம் தந்தார். அக்கணமே அடியவர் மறைந்தார். சிவபிரான் உமாதேவியாருடன் விடை வாகனத்தில் திருக்காட்சி தந்தார். அனைவரும் மெய் சிலிர்த்தனர்.

பெருமான் நாயனாரிடம், “அன்பரே! உமது அடியவர் பக்தியை சோதிக்கவே இவ்வாறு செய்தோம். வாழ்வாங்கு வாழ்ந்து சிவபதம் அடைவீராக!” என்று வாழ்த்தி மறைந்தரு ளினார். மணப்பெண்ணின் கூந்தலும் முன்போலவே நீண்டு வளர்ந்தது.

சற்று நேரத்தில் கஞ்சனூரை அடைந்த ஏயர்கோன் கலிக்காமர், நடந்ததைக் கேட்டறிந்தார். ‘அக்காட்சியைத் தான்காணவில்லையே!’ என்று வருந்தினார். மறுகணமே, “யாமே வந்தோம்!” என்று இறைவன் வாக்கருளினார். கலிக்காமருக்கும் மானக்கஞ்சாறரின் புதல்விக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது.


  மானக்கஞ்சாறரும் சிறப்புற வாழ்ந்து, அடியவர் தொண்டை வழுவாது செய்து சிவபதம் அடைந்தார்.


கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

குங்கிலியக் கலய நாயனார் புராணம்

குங்குலியக் கலய நாயனார்

குங்கிலியக் கலய நாயனார்

    சோழநாட்டிலுள்ள திருக்கடவூரில் வேதியர் குலத்தில் பிறந்தவர் கலயனார் ஆவார். சிவபக்தியில் சிறந்து நின்ற அவர், திருக்கோயிலில் குங்கிலியம் என்னும் வாசனைப் பொருளால் தூபமிட்டு அருந்தொண்டாற்றி வந்தார். அதனால் அவரைக் குங்கிலியக் கலய நாயனார் என்று மக்கள் அழைத்தனர்.

     நாயனாரின் பெருமையை உலகறியச் செய்ய சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். கலயனாரின் செல்வம் கரையத் தொடங்கியது. இருப்பினும் தன் நிலங்களை விற்று குங்கிலியத்தூபமிடும் பணியில் வழுவாது நின்றார் நாயனார். நாளடைவில் வறுமையின் கோரப் பிணி அவரது குடும்பத்தை வாட்டியது. உணவிற்கே திண்டாட்டமானது.

        அதைக்கண்ட கலயனாரின் மனைவி, தன் திருமாங்கல்யத்தைக் கழற்றித் தந்தார். அப்பொன்னை விற்று நெல் வாங்கி வரும்படி கணவரிடம் கூறினார். நாயனார் திருமாங்கல்யத்தோடு வீதியில் நடந்தார். அப்போது எதிரில் குங்கிலியம் விற்றபடி ஒருவர் வந்தார். நாயனாருக்கு, தன் பசியும் வீட்டிலுள்ளோரின் பசியும் மறந்து போனது.

         நேராகக் குங்கிலியம் விற்பவரிடம் சென்று, தன் மனைவியின் திருமாங்கல்யத்தைக் கொடுத்தார். அதற்குப் பதிலாக குங்கிலியம் பெற்று கோயிலுக்குச் சென்று, மிக்க மகிழ்ச்சியோடு பெருமானுக்குத் தூபமிட்டார்.

         நாயனாரின் குடும்பத்தார் பசியால் உறங்கிப் போயினர். அக்கணம் சிவபிரானது அருளால் நாயனாரின்  செல்வம் நிரம்பியிருப்பதை சிவபிரானும், நாயனாரின் மனைவியார் கனவில் தோன்றிக் கூறினார். நாயனாரின் மனைவி விழித்துப் பார்த்தார். வீடு செல்வத்தால் நிரம்பியிருந்தது கண்டு பெருமகிழ்ச்சி கொண்டார்.

         கோயிலில் உறங்கிக் கொண்டிருந்த நாயனாரின் கனவிலும் தோன்றிய பெருமான் அச்செய்தியைக் கூறினார். நாயனாரும் வீடு திரும்பினார். செல்வங்களைக் கண்டார். கலியானாரும் அவரது மனைவியாரும் சிவனருளை எண்ணி மெய் சிலிர்த்தனர். நாயனார் அச்செல்வத்தைக் கொண்டு, தன் குங்கிலியத் தூபத்தொண்டினையும், அடியவர்க்கு அமுதூட்டும் தொண்டினையும் குறைவறச் செய்து மகிழ்ந்திருந்தார்.

       இவ்வாறிருக்கையில் ஒருநாள் திருப்பனந்தாள் என்னும் ஊரிலுள்ள ஆலயத்தின் சிவலிங்கம் சாய்ந்தது. அதனை நிமிர்த்த பலர் முயன்றும் இயலவில்லை. செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னர் தன் அரண்மனை யானைகளைக் கொண்டுவந்து கயிற்றைக் கட்டி இழுத்தான். இருப்பினும் சிவலிங்கம் நிமிரவில்லை. மன்னன் பெரிதும் வருத்தமுற்றான்.

       மன்னனின் வருத்தத்தைக் கேள்விப்பட்ட கலயனார், திருப்பனந்தாள் சென்றார். சிவலிங்கத்தின் கழுத்திலுள்ள கயிற்றின் மறுமுனையைத் தன் கழுத்தில் கட்டி இழுத்தார். மறுகணமே சிவலிங்கம் நிமிர்ந்தது. மன்னனும் கலயனாரை வணங்கினான். கலயனாரின் பெருமையை ஊரறிய பறைசாற்றினான்.

            திருப்பனந்தாள் விட்டு திருக்கடவூர் திரும்பி தம் அருந் தொண்டினைத் தொடர்ந்தார்கலயனார். திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் திருக்கடவூர் வந்தபோது, அவர்களை வணங்கி அமுது படைத்தார். அவ்விரு பெரியோர்களும் நாயனாரை வாழ்த்தினர்.

இவ்வாறு தமது திருத்தொண்டை தவறாது செய்த குங்கிலியக் கலய நாயனார் சிவபதம் சென்றடைந்தார்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிக..

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

செயல்பாடுகளே உங்களின் மதிப்பை உயர்த்தும்!

செயல்பாடு உங்கள் மதிப்பை உயர்த்தும்

செயல்பாடு உங்கள் மதிப்பை  உயர்த்தும்

(தன்னம்பிக்கை கட்டுரை)

     உலகில் உள்ள மனிதர்களைப் பற்றி அறிய வேண்டும் என்றால் அவர்களின் செயல்பாடுகளைக் கவனித்தால் போதும். அவரவர் செயல்பாடுகளின் மூலமாக அவர்களின் மீது மதிப்பு உண்டாகிறதா? அவமதிப்பு ஏற்படுகிறதா? என்பதை கணிக்கலாம்.

          நமது ஊர்களில் சிலர் பேசும்போது கேட்டிருக்கலாம். அவர்கள் வாயைத்திறந்தால் போதும் தவறான சொற்களை மட்டுமே பேசுவார்கள். அவற்றை தவிர மற்ற வார்த்தைகளைப் பேசி பழகாதவர்கள். இவர்களின் பேச்சில் யாரேனும் குறுக்கிட்டால் அவ்வளவுதான், அவர்களின் ஆஸ்தியையே அழித்ததைப் போன்று கோபத்துடன் லபோ திபோ என்று கத்துவார்கள். பாவம் இவர்களுக்கு மதிப்பு என்பது பற்றி ஏதேனும் தெரியுமா? என்றால் ஒன்றும் தெரியாது.

தனித்தன்மையை வெளிப்படுத்துங்கள்

          உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை அந்த பிறவிக்கே உரிய ஆக்க சக்தி என்பது இருக்கும். அவர்கள் அதை உணர்ந்து தன் ஆற்றலை பெருக்கிக்கொண்டால் போதும். தானாகவே மதிப்பு உயரும். சமூகத்தில் மற்றவர்கள் எவ்வாறு இருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் யோசிக்காதீர்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? என்ன கூறுவார்களோ? என்று எண்ணி உங்களுக்குள்ள ஆற்றலை மாற்றிக் கொள்ளாதீர்கள்.

        இந்த உலகம் இராமனின் சீதையையே ஐயப்பட்டு அக்னியில் குளிக்க வைத்தது. அதனால் அவற்றை பற்றியெல்லாம் கண்டு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் ஆழ்மன உந்துதலே செயல்பாடுகளாக வெளிப்படுகின்றன. எனவே மற்றவரின் போற்றுதலுக்காக உங்களின் தனித்தன்மையை மாற்றிக் கொள்ளாதீர். ஆனால் உங்களின் தன்மையால் நன்மதிப்பை பெறுங்கள். அதுவே நிலையான மதிப்பு.

பொறுப்பைச் செயலில் காட்டுங்கள்

       ஒரு தனியார் கம்பெனி ஒன்று இளைஞர்கள் நேர்முகத்தேர்வு ஒன்றுக்கு அழைத்திருந்தது. காலையில் பத்து மணிக்கு வந்து சேர்ந்து விட்டனர். வேலைதேடும் பட்டதாரிகள். அது ஒரு பெரிய பரந்த அறை. அந்த இடத்தில் டேபிள், நாற்காலி, சோபா என்று போடப்பட்டு இருந்தன. அவற்றின் மீது நாளிதழ்கள், வார இதழ்கள் என்று தாருமாறாகக் கிடந்தன. காலண்டர், கடிகாரம் எதுவும் சரியான முறையில் இல்லை. அந்த அறையில் சுமார் நாற்பதுபேர் அமர்ந்திருந்தனர். நேர்முகதேர்வுக்கு ஆயத்தம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு பெண்மணி அவர்க்கான இடத்தில் அமர்ந்து கொண்டார். ஐந்து நிமிடங்கள் சென்றிருக்கும், அந்த பெண் எழுந்தார். சிதறிக்கிடந்த இதழ்களை பொறுக்கி எடுத்தார். தேதியைப் பார்த்து வரிசை படுத்தி டேபிள் மீது வைத்தார். நாற்காலிகளை ஒழுங்காக்கினார். சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் ஓடியது. ஆனால் நேரத்தைத் தவறாகக் காட்டியது. அதனை சரிசெய்து அதன்இடத்தில் மாட்டி வைத்தார். காலண்டரில் தாள்கள் கிழிக்கப்படாமலே இருந்தது. அதை கிழித்துத் தூசுதட்டி உரிய இடத்தில் வைத்தார்.

ஒரு ஓரமாகப் பிள்ளையார் படம் ஒன்று இருந்தது, அருகில் விளக்கு திரி ஊதுபத்தி என்று சகிதமும் இருந்தன. விளக்கில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி ஊதுபத்தி கொழுத்தி வைத்தார். பிள்ளையாரை வணங்கிவிட்டு தன்இடத்தில் வந்து அமர்ந்து கொண்டார். அந்த அறையே ஊதுபத்தியின் மணம் கமழ்ந்தது. ஒவ்வொருவராகத் தேர்வுக்கு உள்ளே அழைக்கப்பட்டனர். அவர்களும் உள்ளே செல்லும்போது பிள்ளையாருக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு சென்றனர். இந்தப் பெண்ணையும் நேர்முகத்தேர்வுக்கு பெயர் சொல்லி அழைத்தனர். மற்ற எல்லோருக்கும் ஒரு ஐயம். இந்தப்பெண் இங்கு ஏற்கனவே வேலை பார்க்கவில்லையா? ஆனால் அந்த பெண் வேலைதேடி வந்துள்ளார் என்பதே உண்மை. கவனியுங்கள் மற்றவர்களுக்கு இல்லாத சிந்தனை பொறுப்பு இவருக்கு மட்டும் எப்படி வந்தது? இந்த பெண் செய்தவற்றை கேமரா மூலம் பார்த்துக்கொண்டு இருந்த அந்தக் கம்பெனியின் முதலாளி அப்போதே முடிவு செய்தார். காலி பணியிடம் அந்தப் பெண்ணிற்கு என்று. அவ்வகையான செயல்பாடுகள் மற்றவரின் மத்தியில் அவர்களின் மீதுள்ள கணிப்பை உயர்த்திக்காட்டும். அவர் மற்றவர்களைபோல நமக்கென்ன என்று இருக்கவில்லை. அவற்றை நன்றாக மாற்றவேண்டும் என்று எண்ணினார். அது அவருடைய தனித்தன்மை என்பதை உணருங்கள்.

செயல்கள் மதிப்புமிக்கவை

      படித்த நிகழ்வு ஒன்று. ஒரு கல்லூரியில் அழகான இளமைக்காலத்தில் மாணவர்கள் பறவைகள் போல பாடித்திரிய வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே அவர்கள் வாக்கிடாக்கியில் பாடல்களைக் கேட்டுகொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பார்கள். பின்னர் வேறுவேலை பார்ப்பார்கள். ஆனால் ஒரு மாணவன் மட்டும் அந்த வாக்கிடாக்கியைக் காதுகளின் இருந்து அகற்றுவதே இல்லை. எல்லா நேரங்களிலும் மாட்டிக்கொண்டு திரிவான். அதேவேளை தேர்வில் மதிப்பெண்களையும் அதிகமாகப் பெற்றுவிடுவான். இது எவ்வாறு என்று கவனித்தபோதுதான் தெரிந்தது. அவன் கேட்டவை பாடல்கள் அல்ல பாடங்கள். மற்ற மாணவர்கள் சினிமாப்பாடல்களைக் கேட்கும்போது இவன் மட்டும் பாடத்தை ஒருமுறை உறக்க படித்து அதில் பதிவுசெய்து கொண்டு தனக்கு மனதில் பதியும்வரை மீண்டும்மீண்டும் கேட்டுக்கொண்டே இருப்பான். அதனாலேயே அவன் மதிப்பெண்கள் உயர்ந்தன. பேராசிரியர்கள் மத்தியில் இவன் மதிப்பும் உயர்ந்தது.

பெரிய மாற்றம்தரும் சிறிய செயல்

         செய்யும் செயல்கள் மற்றவர்க்கு உதவுமாறு நல்ல நோக்கத்துடன் செய்யுங்கள். எப்போதோ படித்த ஒன்று. ஒரு கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் பலநூறு மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குப் பேருந்துவசதி கிடையாது. பலமுறை போக்குவரத்து துறைக்கு விண்ணப்பம் அனுப்பி வைத்தனர். என்றாலும் அவர்கள் எந்தஊர், எந்தக் கிராமம் என்று விசாரணை செய்துவிட்டு அப்படியே விட்டு விடுவார்கள். அது அவ்வளவு தான். அந்த ஊர் மக்களும் பலமுறை எழுதிஎழுதி சலித்து விண்ணப்பம் செய்வதையே விட்டு விட்டனர். பேருந்து இனி வரப்போவதில்லை என்று அவர்களே முடிவு செய்து கொண்டனர். அதற்குக் காரணம் அந்தக் கிராமத்தைச் சுற்றி ஒரு மலை கிழக்கு திசையிலிருந்து தொடங்கி தெற்கு மேற்கு திசை வரை மூன்று பக்கமும் மதில்சுவர் போன்று காணப்பட்டது. அந்த ஊருக்கு செல்பவர்கள் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ளே சென்றால் மீண்டும் அதே வழியில்தான் திரும்பி வர வேண்டும். மலைக்கு அந்தப்பக்கம் இருவழி சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஊருக்கு எந்தப்பேருந்தும் வராது.

        இவ்வாறு இருக்க அந்தக் கிராமத்திற்கு எந்த வசதியும் கிடையாது. பள்ளிக்கூடம் ஏழு கிலோமீட்டர் செல்ல வேண்டும். மருத்துவ வசதி பத்து கிலோமீட்டர் செல்ல வேண்டும். பால்நிலையம், காவல் நிலையம் என்று எதுவும் கிடையாது. அக்கிராமம் பல தலைமுறைகளாக எந்தவொரு முன்னேற்றத்தையும் பார்க்க வில்லை. கிராமத்தில் ஐம்பது வயது தாண்டிய  நபர் ஒருவர் தினமும் சுத்தியலுடன் உளியையும் எடுத்து கொண்டு தனக்கு மதிய உணவை தயார் செய்து கொண்டு சென்று விடுவார். எங்கு செல்வார்? அந்த மலைக்கு சென்று  பாறையாக உயர்ந்திருக்கும் அதன் அருகில் சென்று அமர்ந்து கொள்வார். உளியை பாறையில் வைத்து சுத்தியலைக் கொண்டு பலமாக அடிப்பார். அடித்து சிறிது சிறிதாக உடைப்பார். மாலை ஐந்து மணி வரை இதே வேலையை சலைக்காமல் செய்வார். இந்த வேலை பல வருடங்களாகத் தொடர்ந்தது. இதைக்கண்ட மற்றவர்கள் கேலி செய்தனர், ஏளனமாக நகைத்தனர். பைத்தியம் என்றனர்.

         இவர் சுமார் பதினைந்து வருடங்களாக அந்த பாறையைக் குடைந்து எடுத்துள்ளார். பின்னர் இவரின் இறுதிக்காலம் நெருங்கும் நிலையில் படுக்கையில் இருந்து கொண்டு “நான் பாறையை உடைத்த இடத்தில் சென்று பாருங்கள்” என்றார். அங்கு சென்று பார்த்தவுடன்தான் தெரிந்தது, அந்த மலைப்பாறை குடையப்பட்டு மறுப்பக்கத்தில் சாலை தெரியுமாறு ஒரு துவாரம் செய்யப்பட்டிருந்தது. ஆகா என்ன ஆச்சர்யம் மக்கள் எல்லோரும் அந்த மலைக்கு சென்று அந்த துவாரத்தைக் குடைந்து மேலும் பெரிதாக்கி தமக்கு சாலை அமைக்க ஒருவழி கிடைத்திருப்பதை உணர்ந்தனர். அந்த மனிதரை பைத்தியம் என்று கேலி செய்தவர்கள் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு கைக்கூப்பினர். அந்தப் பெரியவரும், எத்தனையோ ஆண்டுகளாகச் செய்ய இயலாத ஒன்றை தம்சந்ததியினருக்கு செய்து விட்டோம் என்ற மன நிம்மதியுடன் கண்களை மூடினார். இவருடைய சிறிய செயல் கிராமத்தின் தலையெழுத்தை மாற்றியது.

       இவர் மற்றவரைப் போல இல்லாமல் வேறு விதமாக மக்களின் அவலத்தை போக்க வேண்டும் என்று நினைத்து மற்றவர்கள் செய்கிறார்களா? என்று பார்க்கவில்லை தானே முன்வந்து செய்தார். அந்தக்கிராம மக்கள் அவரை தெய்வமாக மதித்தனர். அது அவருடைய தனித்தன்மை.

     எந்தப் பிறவி பலனையும் எதிர்பாராமல் சமுதாயத்திற்கு ஒரு நன்மையைச் செய்யும் நீங்கள் தனித்துவம் கொண்டவர்கள்தான்.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்.

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

9.அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

அமைதியான-அணுகுமுறை

அமைதியான அணுகுமுறை

உங்களின் வாழ்க்கையில் சோம்பலை விரட்டிவிட்டீர்கள் என்றால் அதன் இறுதியில் கிடைப்பது முன்னேற்றத்தின் தொடக்கம்தான். ஒன்றின் முடிவு இன்னொன்றின் தொடக்கமாகும். இப்போது நீங்கள் செய்வதற்கு கண்முன்னே ஆயிரம் கடமைகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் மாற்றி அதைப்போன்று கற்பனை செய்து பாருங்கள். உங்களின் அகக்கண்களின் மூலம் உங்களால் செய்யப்பட்ட சமுதாய மாற்றம் தெளிவாகத் தெரியும். 

அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

          நிதமும் இந்தச் சமுதாயத்தில் உள்ள சீர்கேடுகளைச் சரிசெய்ய நீங்கள் சிந்தனை செய்து கொண்டு அதனால் ஏற்படும் மாற்றங்களை கண்முன்னே கொண்டு வாருங்கள். சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவது என்றால் அது அவ்வளவு எளிதல்ல. எத்தனை தடைகள், எதிர்ப்புகள், வசைகள், இன்னல்கள் பலவும் நிகழும். அவற்றை எதிர்கொள்ள வேண்டும். அதுவும் சலைக்காமல் மீண்டும் முன்னேற்றத்தைத் தொடர வேண்டும். நன்றாகக் கவனியுங்கள். நல்ல காரியம் செய்யும்போது ஒவ்வொரு படிநிலையிலும் மற்றவர்களால் இடையூறுகள் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால்தான் நீங்கள் வெற்றிபெறும் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

இலக்குகளின் பாதைகள்

        இலக்கை நோக்கி பயணம் செய்யும் போது உங்களுக்கு எந்தவித தடைகளும் எதிர்ப்புகளும் இல்லாமல் நீங்கள் பாதையை கடந்துவிட்டீர்கள் என்றால் வந்த பாதையை விட்டு விலகி வேறுபாதையில் பயணிக்க வேண்டும். வாழ்க்கையில் சுவாரஸ்யம் என்பது வெற்றியைப் பெறுவதில் மட்டுமல்ல, அதை அடைவதற்கு கடந்து வந்த பாதையில் சவால்களைச் சமாளித்துக் கற்றுக்கொண்ட பாடங்கள், அனுபவங்கள், பழகிய மனிதர்கள், மாமனிதர்கள், சுரண்டல்காரர்கள், கண்முன்னே நமது பொருட்களைப் பறிக்கும் கடத்தல் பேர்வழிகள் என்று பலவிதமான மனிதர்களை அறிந்துகொண்ட சந்தர்ப்பங்கள் சுவாரஸ்யமானவை. இவற்றையெல்லாம் நீங்கள் எத்தனை பல்கலைக்கழகங்களுக்குச் சென்றாலும் கற்றுக் கொள்ள இயலாது.

வருவது துன்பமல்ல சவால்

         இலக்கின் பாதையில் துன்பங்களை பேச்சுக்களை மனிதர்களைச் சந்திக்கின்ற போது இதற்குமுன் இந்த அனுபவம் பெற்றிருக்க மாட்டீர்கள். முதன்முறை எதிர்கொள்ளும்போது திரும்பி சென்றுவிடலாமா? என்று தோன்றும். இவற்றை முடிக்க நம்மால் இயலுமா? போன்ற பல வினாக்கள் முன்னே வந்து நிற்கும். எவை வந்தாலும் நிறைவான வெற்றியால் பெறும் மாற்றத்தை எண்ணிப்பாருங்கள். உங்களுக்கு கஷ்டங்களை சமாளிக்கும் திறன் தானாகவே வரும். எப்போதுமே துன்பங்களை வேதனையோடு எதிர்பார்க்காதீர்கள். அவற்றை சவாலாக ஏற்றுச் செயல்படுங்கள். பார்த்துவிடலாம்! என்று மனதிற்கு ஒரு போட்டியை ஏற்படுத்துங்கள். அப்போது மனதில் ஒரு வேகம் ஆற்றல் உண்டாகும். மீண்டும் மீண்டும் இதையே பின்பற்றுங்கள். இவ்வாறு தொடர்ந்து மனதிற்கு சலிப்பே வராமல் பார்த்துக்கொண்டால் நாளடைவில் வெற்றி என்பது உங்களின் அருகில் வந்து விடும். வெகுதூரத்தில் இல்லை என்பதை உணர்வீர்கள்.

          உங்களுடைய ஆற்றலை யாரால் உணர்ந்து கொள்ள முடியுமோ அவர்களின் முன்னே செயல்படுத்த வேண்டும். உங்கள் செயல்பாடுகளின் அருமை யாருக்கு புரிகிறதோ அவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்துச் செயல்படுங்கள். ஒரு வெற்றியை நீங்கள் பெறவேண்டும் என்றால் அதற்கு சிலரின் ஒத்துழைப்பாவது உறுதியாகத் தேவைப்படும். எனவே மற்றவரிடம் உங்கள் கருத்துக்களை நீங்கள் கூறுவதைப் பொறுத்தே உங்கள் மீது அவர்களுக்கு உதவவேண்டுமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும். முதல் சந்திப்பிலேயே உங்கள் மீது உயர்ந்த அபிப்பிராயம் உண்டாகுமாறு நடந்தது கொள்ளுங்கள்.

அமைதியான அணுகுமுறை

      நீங்கள் சமுதாயத்திற்காகச் செய்யப்போகும் செயல்கள் அதனால் அங்கு வாழும்மக்கள் பெறப்போகும் நன்மைகள் இவற்றையெல்லாம் செய்வதற்கு உங்களைத் தூண்டும். தேசப்பற்று போன்றவற்றை அவரின் மனம்குளிர எடுத்துக்கூறுங்கள். அமைதியாகக் கனிவான பேச்சில் உங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையை உதவுபவர்க்கு உருவாக்குங்கள். உங்களின் ஆற்றலை உணர்ந்து உதவும் அவர்களை அருகிலேயே வைத்திருங்கள்.

       நீங்கள் வெற்றியை அடைந்து விடுவீர்கள் என்று உங்கள் மனம் நம்பிவிட்டால் போதும் நீங்கள் சாதனையாளர்தான். இதை மற்றவர்க்கு கூறி நம்பவைக்க முடியாதா? முடியும். எவரஸ்ட் சிகரத்தை அடைந்த ஐம்பத்திரண்டு வயதான நபர் ஒருவர். அவரிடம் “இந்த வயதில் சிகரத்தை ஏற உங்களால் எவ்வாறு முடிந்தது? கடினமாக இல்லையா? ஏறுவதற்குக் கால்கள் தடுமாறவில்லையா?” என்று கேட்டதற்கு அவர் “மலை ஏறும்போது என் கால்கள் தடுமாறவில்லை. ஏறுவதற்கு எந்தவித கஷ்டமும் இருக்கவில்லை. ஆனால் இந்தச் சிகரத்தின் உச்சியை அடையமுடியும் என்று என்மனதை நம்ப வைத்ததுதான் எனக்கு கடினமாக இருந்தது. மற்றப்படி இது எனக்கு எளிமையாகவே இருந்தது” என்று கூறினார். உங்கள் மனதை நம்பவைப்பது முன்னேற்றத்தின் அடுத்தபடியாகும். சமுதாயத்திற்காக வரும் துன்பங்களைத் தாங்கிக்கொள்ள மனதிற்குப் பயிற்சி அளித்து தயார் படுத்துவது அடுத்தபடியாகும். செல்லும் பாதையில் படிகள் இருந்தால் ஏறி சென்றுவிடுவீர்கள். முட்கள் இருந்தால் என்ன செய்வீர்? பாதையில் முட்கள், பாறைகள், பள்ளத்தாக்குகள் என்று நிறைய இருக்கும். அவை உங்களுக்குத் தடைகள் அல்ல, நீங்கள் சாதிப்பதற்கான சவால்கள் என்பதை உணருங்கள்.

மற்றவர்க்காக ஒன்றை செய்வதற்கு நீங்கள் தயாரா!

          நமது நாட்டில் விடுதலைப் போராட்ட வீரர்களைக் கவனித்தீர்கள் என்றால் ஒன்று புரியும். அவர்கள் எதையும் தனிப்பட்ட அவர்க்கென்று செய்யவில்லை மற்றவர்களுக்கு செய்தனர். ஆங்கிலேயர்கள் நம்மக்களை அடிமை செய்த போது அவர்கள் குறைந்த எண்ணிக்கையே இருந்தனர். இந்தியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். வெள்ளைக்காரர்களைக் கையால் அடித்தே துரத்தியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. நம் மக்கள் நமக்கென்ன என்று இருந்ததால் சிலநூறு வருடங்கள் அவர்கள் நம்மை அடிமைப் படுத்திவிட்டனர். அதனை முறியடிக்க யாரேனும் முன்வர வேண்டுமல்லவா வந்தனர். திலகர், கோகலே, சுபாஸ்சந்திரபோஸ், காந்தி, நேரு, செக்கிழுத்த செம்மல் போன்றோர் வந்தனர். இவர்கள் அனைவரும் தமக்காகப் போராடவில்லை, பிறருக்காகப் போராடினர். கொடிகாத்தகுமரன் அடிபட்டு குருதி பெருகி கீழே விழும் நிலையிலும் கொடியை விடாமல் பிடித்துக்கொண்டு முழக்கம் செய்தார். இவர்களைக் கவனித்தால் சமுதாயத்தின் மீதும் தேசத்தின் மீதும் கொண்ட அக்கறை அடுத்து வரும் சந்ததியினர் மீது கொண்ட பற்று இவையெல்லாம் அவர்களின் மனதில் வியாபித்து இருந்தன. அவர்களை செயல்பட வைத்தன.

நெருப்புக் கோழியின் குணம் வேண்டாம்

         ஒரு செயலை மற்றவர்க்காகத்தான் செய்கிறோம். அதனால் எந்தத் துன்பமும் வராது என்று நினைத்து நீங்கள் செயலை ஆரம்பித்தால் நெருப்புக் கோழியின் செயலைப் போல ஆகிவிடும். அந்த நெருப்புக் கோழி தனது எதிரிகள் தன்னை தாக்க துரத்தும் போது காத்துக்கொள்ள ஓடிச்சென்று ஒரு குழிக்குள் தன் தலையை புதைத்துக் கொள்ளுமாம். அது தன் உருவம் வெளியே யாருக்கும் தெரியாது என்று நினைக்க எதிரிகளான வேடர்கள் எளிமையாகப் பிடித்து விடுவார்களாம். அவ்வாறுதான் நீங்கள் நினைப்பதும். தொடங்கும் செயல் எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி அறிந்து கொண்டு அல்லது அதைப்பற்றி தெரிந்தவர்களிடம் சென்று கருத்துக்களை அவர்களின் அனுபவங்களை சேகரித்துத் தன்னை தயார்படுத்திக் கொண்ட பின்னரே செயலில் இறங்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒருவர் கூறும் கருத்துக்களை அப்படியே நம்பி விடவும் கூடாது. எந்த அளவிற்கு இவை உண்மையான செய்திகள் இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று மெய்யானவற்றை  சிந்தனை செய்து தெளியவேண்டும்.

         உங்களை மற்றவர்கள் புகழ வேண்டும். போற்ற வேண்டும். பெருமையாக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த செயலையும் செய்யாதீர்கள். எதையும் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்வதே தியாக மனப்பான்மை.

       ஒன்றைப் பெறுவதற்காக இன்னொன்றைச் செய்வது சேவையாகாது. அது பண்டமாற்று முறையே ஆகும். உங்களின் மதிப்பு மிகுந்த செயல்களை வியாபாரமாக மாற்றி விடாதீர்கள்.

      உங்களால் என்ன நன்மைகளைச் சமுதாயத்திற்கு செய்ய முடியுமோ அதனைச் செய்யுங்கள். ஆர்வத்துடன் விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். சோகங்களைச் சவாலாக எதிர்கொள்ளும் நீங்கள்தான் சமுதாயத்தின் நாயகன் இதில் ஐயமில்லை.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்.

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

கண்ணப்ப நாயனார்‌ புராணம்

கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார்‌

பொத்தப்பி என்னும்‌ மலைநாட்டில்‌ வேடர்‌ குலத்தில்‌ பிறந்தவர்‌ திண்ணனார்‌. இவர்‌ வேடர்‌ குலத்‌ தலைவராக விளங்கினார்‌.

திண்ணனார்‌ வேட்டையாடுவதில்‌ நிகரற்ற வீரராகத்‌ திகழ்ந்தார்‌. தன் பணியாளர்‌ சிலருடன்‌ காட்டிற்குச்‌ சென்று வேட்டையாடி, விலங்குகளைக்‌ கொன்றார்‌. அதைத்‌ தம்‌ இனத்தவருக்குத்‌ தந்தும்‌ தானும்‌ உண்டும்‌ வாழ்ந்தார்‌.

ஒருநாள்‌ தன்‌ நண்பர்களான காடன்‌, நாணன்‌ என்பவர்களுடன்‌ சேர்ந்து காட்டிற்கு வேட்டையாடச்‌ சென்றார்‌. கொழுத்த பன்றி ஒன்றை வேட்டையாடினார்‌. அவர்கள்‌ நடந்து நடந்து பொன்முகலி ஆற்றங்கரையை அடைந்தனர்‌. அப்போது அவர்களுக்கு மிகுதியான பசி உண்டானது. திண்ணனார்‌ அப்பன்றியை தீயில்‌ வாட்டும்படி காடனிடம்‌ கூறினார்‌.

அப்போது அருகிலிருந்த மலை திண்ணனாரைக்‌ கவர்ந்தது. அவர்‌ அம்மலைமீது ஏறிச்‌ சென்றார்‌. அவரது முற்பிறவி வாசனையால்‌ அவரை அறியாமல்‌ அவரது கால்கள்‌ சென்றன. அங்கே மரங்களின்‌ நடுவில்‌ சிவலிங்கம்‌ ஒன்றைக்‌ கண்டார்‌. ஏனோ அவரை அறியாமல்‌ பெருமானின்‌ மீது பேரன்பு சுரந்தது.

அச்சிவலிங்கத்தின்‌ மீது சில பூக்களும்‌ இலை தழைகளும்‌ இருந்தன. அதைக்கண்ட திண்ணனார்‌, நாணனிடம்‌ “இந்தக்‌ கொடிய காட்டில்‌ இந்த வேலையை யார்‌ செய்கிறார்கள்‌?” என்று கேட்டார்‌.

நாணனும்‌, ஒரு வேதியர்‌ அவ்வாறு தினமும்‌ செய்து அன்னம் படைப்பதாகக் கூறினான். உடனே திண்ணனார்‌, “இக்காட்டில்‌ தனித்திருக்கும்‌ இவருக்குப்‌ பசிக்காதோ! உடனே இவருக்கு உணவு படைக்க வேண்டும்‌!” என்று கூறியபடி மலையை விட்டு இறங்கினார்‌. அவரது செய்கைகள்‌, நாணனுக்கு வேடிக்கையாக இருந்தது.

மலையை விட்டு இறங்கிய திண்ணனார்‌, காடன் சுட்டு வைத்திருந்த பன்றிக்‌ கறியை எடுத்து சுவைத்துப்‌ பார்த்தார்‌. அதில்‌ நல்ல தசைகளை மட்டும்‌ எடுத்து வைத்தார்‌. பின்‌ பொன்முகலி ஆற்றிற்குச்‌ சென்று நீரை எடுத்து வாயில்‌ அடக்கிக்‌ கொண்டார்‌. நேராக மலைக்கு ஒடினார்‌.

அச்சிவலிங்கத்தின்‌ மீது வாயிலுள்ள நீரை உமிழ்ந்தார்‌. தான்‌ கொண்ட வந்த பன்றிக்கறியை அதன் முன்‌ வைத்தார்‌. நெடுநேரம்‌ சிவலிங்கத்தையே பார்த்தபடி நின்றார்‌. நாணனும்‌ காடனும்‌ தங்கள்‌ தலைவர்‌ திண்ணனாருக்கு ஏதோ தீவினை தொற்றிக்‌ கொண்டது என்று நினைத்தார்கள்‌. செய்தியை திண்ணனாரின்‌ தந்தையிடம்‌ கூறச்‌ சென்றார்கள்‌.

ஆனால்‌ திண்ணனாரோ அவவிடத்தைவிட்டு அசையவில்லை. இரவில்‌ தனித்திருக்கும்‌ சிவலிங்கத்திற்குக்‌ கொடிய விலங்குகளால்‌ தீங்கு ஏதேனும்‌ நேர்ந்துவிடுமோ என்று அஞ்‌ச இரவு முழுவதும்‌ அவ்விடத்திலேயே நின்றார்‌. மறுநாள்‌ காலையிலேயே மலையை விட்டு இறங்கிச்‌ சென்றார்‌.

காலை வழக்கம்போல்‌ வேதியர்‌ சிவலிங்கத்திற்கு பூசை செய்ய அங்கு வந்தார்‌. லிங்கத்தின்‌ முன்‌ இருந்த மாமிசத்தைப்‌ பார்த்தார்‌. “ஐயோ! இந்தப்‌ பாதகத்தையார்‌ செய்தது! என்று துடித்தார்‌. உடனே அவற்றை அப்புறப்படுத்தினார்‌. சிவலிங்கத்தை நீராட்டி, பூக்கள்‌ சூடி, அன்னம்‌ படைத்தார்‌. பெருமானை வணங்கிவிட்டு அவ்விடம்‌ விட்டுச்‌ சென்றார்‌. அன்றிரவும்‌ திண்ணனார்‌ வந்து, பன்றிக்‌ கறியைப்‌ படைத்தார்‌. மெய்யுருக நின்றார்‌. இவ்வாறு பல நாட்கள்‌ நடைபெற்றது.

ஒருநாள்‌ மனம்‌ பொறுக்காத வேதியர்‌, “சிவபெருமானே! இவ்வாறு மாமிசம்‌ படைக்கும்‌ அடாத செயலைச்‌செய்பவர்‌ யாரோ? இக்கொடிய செயலை நீரே மாற்ற வேண்டும்‌” என்று வேண்டிக்‌ கொண்டார்‌. பின்‌ தன்‌ இல்லம்‌சென்றடைந்தார்‌.

சிவபெருமான்‌ அவ்வேதியரது கனவில்‌ தோன்றினார்‌. “வேதியரே!. எனக்குத்‌ இனமும்‌ இரவில்‌ ஒருவன்‌ வந்து மாமிசம்‌ படைப்பது என்மேலுள்ள அன்பினாலேயே! அவனது அன்பை நீர்காண வேண்டுமென்றால்‌ இன்று இரவு வரவேண்டும்‌. அவன்‌ அறியாதபடி ஒளித்திருந்து கவனிக்க வேண்டும்‌!” என்று சொல்லி அருளினார்‌.

வேதியரும்‌ இரவில்‌ மலைக்குச்‌ சென்று ஒரு மரத்தின்‌ பின்னால்‌ ஒளிந்திருந்தார்‌. வழக்கம்போல்‌ இரவில்‌ மலையை நோக்கி வந்தார்‌ திண்ணனார்‌. வரும்‌ வழியில்‌ அவருக்குச்‌ சில கெட்ட சகுனங்கள்‌ தோன்றின. அவர்‌ மனதில்‌ துயரம்‌ உண்டானது. அவர்‌ நேராக சிவலிங்கத்தின்‌ அருகில்‌ ஒடிவந்தார்‌. அப்போது சிவலிங்கத்தின்‌ ஒரு கண்ணிலிருந்து ரத்தம்‌ வடிந்து கொண்டிருந்தது.

அதைக்கண்ட திண்ணனார்‌ மனம்‌ பதைத்தார்‌. “ஐயோ! இந்த அடாத காரியத்தைச்‌ செய்தவர்‌ யார்‌?” என்று கூறியபடி அங்கும்‌ இங்கும்‌ யாராவது தென்படுகிறார்களா என்று தேடினார்‌. யாரையும்‌ காணவில்லை. உடனே, அவர்‌ கணமும்‌ யோசிக்காமல்‌ தன்‌ அம்பை

எடுத்து தன்‌ ஒரு கண்ணைத்‌ தோண்டி எடுத்தார்‌. சிவபெருமானின்‌ பழுதுபட்ட கண்ணை அகற்றி, அவ்விடத்தில்‌ தன்‌கண்ணைப்‌ பொருத்தினார்‌. ரத்தம்‌ வடிவது நின்றது. திண்ணனார்‌ மனம்‌ கொஞ்சம்‌ சமாதானம்‌ அடைந்தது.

ஆனால்‌ சிறிது நேரத்திலேயே சிவலிங்கத்தின்‌ மறுகண்ணிலிருந்து ரத்தம்‌ வழிந்தது. அதைக்கண்ட திண்ணனார்‌ பதறிப்போனார்‌. உடனே அம்பை எடுத்தார்‌. தன்‌ மறு கண்ணைத்‌ தோண்டி எடுக்க முன்வந்தார்‌. தன்‌ மறுகண்‌ணையும்‌ எடுத்து விட்டால்‌ தனக்குப்‌ பார்வை போய்விடுமே என்பதால்‌, அடையாளத்திற்காக சிவலிங்கத்தின்‌ கண்ணின்‌ மீது தன்‌கால்‌ விரல்களைப்‌ பதித்துக்‌ கொண்டார்‌. பின்‌ அம்பை எடுத்து தன்‌ மறுகண்ணைத்‌ தோண்டி எடுக்க முயன்றார்‌.

அக்கணமே சிவபெருமான்‌, “கண்ணப்பா நில்‌! கண்ணப்பா நில்‌!” என்று அசரீரியாய்‌ ஒலித்தார்‌. திண்ணனாரின்‌ கையைத்‌ தடுத்தார்‌. அத்திருக்காட்சியை, மரத்தின்‌ பின்‌ மறைந்திருந்த வேதியர்‌ கண்டார்‌. திண்ணனார்‌ பெருமான்‌ மீது கொண்டிருந்த பேரன்பை உணர்ந்தார்‌. பெருமகிழ்ச்சி அடைந்தார்‌.

சிவபெருமான்‌ திண்ணனாரிடம்‌, “என்‌ மீது பேரன்பு கொண்டதால்‌ எப்போதும்‌ என்‌ நிழலில்‌ விற்றிருப்பாயாக!” என்று பேரருள்‌ புரிந்தார்‌. இறைவனுக்குக்‌ கண்‌ தந்ததால்‌, இறைவராலேயே ‘கண்ணப்பர்‌’ என்று அழைக்கப்பட அழியாப்‌ பேறு பெற்றார்‌.

 

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

 

மற்றொரு கனாக்காலம் 

மற்றொரு-கனாக்காலம்

தன்னம்பிக்கை கட்டுரை

கட்டுரையின் ஆசிரியர்

ஹமீது தம்பி,

கீழக்கரை, ராமநாதபுரம் மாவட்டம்.

      நண்பர் புன்யமீனை சந்திக்க போய் இருந்தேன் . அப்போது அவரை சந்திக்க இன்னொருவரும் வந்திருந்தார். புன்யமீண் அவரை எனக்கு அறிமுகம்  செய்து வைத்தார் .இவர் என் பால்ய நண்பர் ராஜசேகர். சிறந்த கல்வியாளர், அவரிடம் படித்த பலர் பெரும் பதவிகளில் இருப்பதாகவும் சொன்னார் .

       பிறகு அவர்களுக்கிடையே நடந்த உரையாடல், எனக்குள் ஏற்கனவே இருந்த பல கேள்விகளுக்கு விளக்கமோ, விடையோ கிடைத்தது போலிருந்தது.

      ராஜசேகர் “நான் கற்பித்ததெல்லாம் பணம் சம்பாதிக்க தான் .ஆனால் எப்படி வாழ்வது என்று இந்த முதிய வயதில் இதுவரை கற்றுக்கொள்ளவில்லை”, அதற்காகத்தான் உங்களிடம் யோசனை கேட்க வந்திருக்கிறேன்” என்றார்  .

    அதற்கு  புன்யமீண்” நீங்கள் உங்கள் அறிவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். உங்கள் துறையில் ஒரு பெரிய ஆளுமை. நான் வெறும் அந்த கால சாதாரண பட்டம் படித்தவன், என்னிடம் யோசனை கேட்க வந்திருப்பது வேடிக்கை தான்” என்றார் .   

     வந்தவர் நீங்கள் “இப்படி பேசுவது தன்னடக்கமா, அல்லது உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியவில்லையா?.  உங்களைப் பற்றி நான் நன்கு அறிவேன் .நம் சம வயதினரில்  மிகவும், சந்தோசமாகவும், நிம்மதியாகவும் ,திருப்தியாகவும் வாழ்வது நீங்கள்தான். நீங்கள் பெரிய பணக்காரர் இல்லை. பெரிய சேமிப்பும் இல்லை. கோயில், குளம், என்று போகிற பெரிய ஆன்மீகவாதியும் இல்லை.  மூத்த பிள்ளையின் குடும்பத்தோடுதான் இருக்கிறீர்கள். இந்த வயதில் எப்படி வாழ்வது? என்று உங்களிடம்தான் தெரிந்துகொள்ளமுடியும்.

இது,பள்ளிகளிலோ, கல்லூரியிலோ கற்றுக்கொடுப்பதில்லை. ஆன்மீகவாதிகளிடமும் அதற்கான நிவாரணம் இருக்கும் என்று தெரியவில்லை” என்றார்.  

தன்னடக்கமில்லை. நான் பெரிய   சிந்தனைவாதியோ, சித்தாந்தவாதியோ இல்லை. சாதாரணமான மனிதன். வாழ்க்கை ஓடம் கால நீரோட்டத்தில் போகும் போக்கில் போகிறவன். என் சித்தாந்தம் என்றால் ஒன்று தான் .

அது “நன்றும் தீதும் பிறர் தர வாரா” .

“நாம் தான் எல்லாவற்றிற்கும் காரணம். நான் நாத்திகனுமல்ல, உங்களைப்போல் ஆத்திகனுமல்ல . கடவுள்  இருக்கிறார் என்று நம்புகிறேன். அது இயற்கையாகக்கூட இருக்கலாம். ஆனால் அவர் நம்மிடம் எதையும் எதிர்பார்க்கிறார் என்று தோன்ற வில்லை” என்றார்  புன்யமீண் .

வந்திருந்தவர் கடவுள் பற்றியோ, ஆன்மிகம் பற்றியோ கேட்க வரவில்லை. எனக்குள்ள பிரச்சினைகளுக்கு உங்களிடம், தீர்வு இருக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன் என்றார்.

 புன்யமீண், நான் பரிகாரம் சொல்ல ஆன்மீகவாதியோ, மதநம்பிக்கை உடையவனோ , அல்ல . என்னிடம் உங்களைப்போன்ற அறிஞர் வந்து தீர்வு கேட்பது வினோதம் என்றார் .

வந்தவர் விடாமல், நீங்கள் ஆன்மீகவாதியோ, மதநம்பிக்கை இல்லாதவராகவோ, இருக்கலாம், உங்கள் வாழ்கையில் சில கொள்கைகள் இருக்கும் . அரசியல் ,சமூகம் ,உறவு, நட்பு  என்று. அதுபோக உங்களுக்கு வழிகாட்டியோ, ஆதர்ச மனிதரோ இருக்கலாம். அதுபற்றி சொல்லுங்கள் என்றார் . 

புன்யமீண் எனக்கு வழிகாட்டிகள் என்றால், புத்தகங்கள்தான். நான் படித்த அகடமிக் கல்வி எனக்கு சம்பாதிக்க வழிகாட்டியது. மற்றபடி, எனக்கு வழிகாட்டி என்றால் படித்ததுதான். எந்தக்காலத்திலும் படிப்பதை நிறுத்தியதில்லை.

தினம் குறைந்தது ஐந்துமணி நேரம்படிப்பேன் என்றார். நான் எல்லாவித புத்தகங்களும் படிப்பேன். தமிழ், ஆங்கிலம் என்று வித்யாசமில்லை . கதை, இலக்கியம், அறிவியல், சரித்திரம், மனநலம், சுய முன்னேற்றம் என்று உலக இலக்கியங்களிலிருந்து, இன்றைய தமிழ் எழுத்தாளர்கள்வரை  எதையும் படிப்பேன். பிடித்த பிடிக்காத எழுத்தாளர்கள் உண்டு. ஆனால் வழிகாட்டி என்று இவர்களில் யாரும் இல்லை. அவர்களின் நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்வேன். பெரியாரையும் படிப்பேன். கி.வா.ஜெகநாதனையும், கிருபானந்தவாரியாரையும் படிப்பேன். டால்ஸ்டாய், டோவ்ச்டோவ்ச்கி.கோர்கி போன்ற ருஷியா எழுத்தாளர்களையும் படிப்பேன். ஜேன் ஆஸ்டின், சார்லஸ் டிக்கன், போன்ற அன்றைய ஆங்கில எழுத்தாளர்களின் புத்தகங்களிலிருந்து படிப்பேன். அன்றைய தமிழில் சங்க இலக்கியங்களிலிருந்து தமிழ் எழுத்தளர்கள்  சாண்டில்யன்,கல்கி ,கிவாஜ, ஜெயகாந்தன், சுஜாதா, இன்றைய கி.ராஜநாராயணன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என்று எல்லோரையும் படிப்பேன்.

முக்கியம் என்னுடைய சொந்த வாழ்கையில் ஏற்பட்ட அனுபவங்கள். அவை கற்பித்த பாடங்களும் எனக்கு என் சொந்த வாழ்கையில் கற்றது ஒரு ஐம்பது வருட பாடம்தான். ஆனால் படிக்கும் பழக்கத்தில் பல நூறு நபர்களின் வாழ்கையை தெரிந்து கொண்டேன். இவற்றிலிருந்து தேவையானவற்றை  மட்டும் எடுத்துக்கொள்வேன் என்றார் .

ராஜசேகர் தேவையானவை எது என்று எப்படி தெரியும் ? என்றார்

புன்யமீண் “மிகவும் சுலபம். ஒரு குழந்தை மனதைப்போல, திறந்த மனதை வைத்திருக்க வேண்டும். அந்த கருத்தை ஒரு நடுநிலையில்தான் பார்க்க வேண்டும் .  நம்முடைய சொந்த கருத்து, நம்பிக்கைகள் வேறுபட்டிருந்தாலும், சொல்லப்பட்டிருப்பது தர்க்கரீதியாக, அறிவியல் பூர்வமாக சரியானதாகப்பட்டால், ஏற்றுக்கொள்ளலாம். முக்கியமாக அந்தந்ததுறையில் வல்லுனர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். உதாரணமாக நமக்கு ஏதாவது உடல் நல பிரச்சினை என்றால், நமக்கு தெரிந்த கைவைத்தியம் பார்ப்பதில் தவறில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் நாமே பரிகாரம் கண்டுகொண்டிருக்ககூடாது. உலகத்தில் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ, அத்தனைபேரும் மருத்துவர்கள்தான். ஒருவரிடம் தலை வலிக்கிறது என்று சொல்லிப்பாருங்கள். நிச்சயம் ஒரு மருத்துவம் சொல்வார். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மருத்துவம் சொல்வார்கள். அதற்காக உடனே ஒரு ஸ்பெசலிஸ்டை பார்க்கவேண்டியதில்லை. குடும்ப டாக்டர் என்று ஒரு சாதாரண GP அருகில் இருக்கும் டாக்டரை தொடர்பில் வைத்திருங்கள். நீங்கள் சுலபமாக அணுகக்கூடியவராக எந்தநேரத்திலும் தொலைபேசியில் அணுகக்கூடிய மருத்துவராக இருத்தல் நலம். அவரிடம் ஆலோசனை பெறுங்கள். அவர் ரெபர் செய்தால் தவிர ஸ்பெசலிஸ்ட் இடம் போகாதீர்கள் .

     இதேபோன்று எந்த பிரச்சினையிலும் உங்களுக்கு அடுத்து இருப்பவர்களிடம் யோசனை கேட்பதில் தவறில்லை. ஆனால் முடிவு செய்வது நீங்களாகத்தான் இருக்க வேண்டும். எல்லோரிடமும் பகுத்தறிவு இருக்கிறது. தற்போது பகுத்தறிவு என்றால் நாத்திகம் என்று தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. எதையும் பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு.  

         அதிகமாக நமக்கு கிடைக்கும் யோசனைகள் பொதுப்புத்தியிலிருந்துதான். அநேகமாக அந்த பொதுவான நம்பிக்கைகள் மூடநம்பிக்கைகளின் அடிப்படையிலோ, முன்னோர்கள் அவர்கள் காலத்திற்கு ஏற்ப ஏற்பட்ட பழக்கங்ளாகவோ இருக்கலாம். ஆனால் அது எதார்தத்திலோ, தர்கரீதியாகவோ பொருந்தாமல் போகலாம். அதை கலாச்சாரம், நம் பாரம்பாரிய பழக்கம் என்று பிடித்துக்கொண்டு செய்வது அறிவுடைமை ஆகாது. பதிலுக்கு பிரச்சினைகளைத்தான் கொடுக்கும். சரி  உங்கள் பிரட்சினைதான் என்ன? நான் உங்கள் நிலையில் இருந்தால் என்ன செய்வேன் என்று வேண்டுமானால் சொல்கிறேன். ஆனால் அவற்றில் எதை எடுத்துக்கொள்வதென்று முடிவு செய்யவேண்டியது நீங்கள்தான். என்றார் புன்யமீண். 

        ராஜசேகர் தனக்குள்ள மனவருத்தத்தை சொல்ல ஆரம்பித்தார் .“என்னிடம் நல்ல வசதி இருக்கிறது. மகள் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாள். உங்களைப்போல் மகன் குடும்பத்துடன் இருக்கிறேன். இருக்கும் வீடும் மற்றும் சொத்துக்களும் நான் சம்பாதித்தவைதான். வசதிக்கு எந்த குறையும் இல்லை. ஆனால் இன்று ஒரு அனாதை போல் உணருகிறேன். நான் ஐந்து ஆண்டுக்கு முன்பு ஓய்வுபெற்றேன். அதிலிருந்து என்னிடமிருந்து எல்லோரும் விலக ஆரம்பித்துவிட்டார்கள். வீட்டிலுள்ளவர்களே என்னை மதிப்பதில்லை. மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் யாரும் என்னை மதிக்கவில்லை. ஒவ்வொருநாளும் அவமானங்களுக்கும், மன வருத்தங்களுக்கும் குறைவில்லை . முப்பத்தைந்து காலம் , அன்போடு வாழ்ந்த என் இனிய மனைவிகூட என்னை அவமானப்படுத்துகிறாள் . அவளின் அன்பு எங்கே போனது ? நீங்கள்தான் என் இன்ஸ்பிரேசன், வழிகாட்டி என்று சொன்ன மகன் இன்று நாங்க பாத்துக்குறோம், நீங்க உங்க வேலையப்பாருங்க  என்கிறான். மருமகள் ஜாடை மாடையா, வயசான காலத்துல அமைதியா பைபிள், சர்சுன்னு இல்லாம, எல்லாத்துலயும் தலைய விட்டுக்கிட்டு பிரட்சின 

பண்ணுது “ என்று ஒருமையில் பேசுகிறாள் . 

“நான் வீட்டில் இப்போது வேண்டாத லயபிளிடி ஆகிவிட்டேன் .

          தினசரி என்னுடைய நேரங்களில் மனசுக்கு சற்று ஆறுதலான நேரம், மாலையில் பார்க்கில் கார்த்திகேயன், குணா, மனோகரன், எட்வின், உசைன் போன்ற நண்பர்களைச் சந்திக்கும்போதுதான். இவர்கள் எல்லோருமே உன்னைப்போல், என் பால்யகால நண்பர்கள். பள்ளியிலும் கல்லுரியிலும் ஒன்றாக படித்தவர்கள். இவர்கள் எல்லோரும் பலதரப்பட்ட சமூக பொருளாதார நிலைகளில் உள்ளவர்கள் . 

பெரும்பாழும் நாங்கள் பகிர்ந்து கொள்வது எங்களுக்கு ஏற்பட்ட  அவமானங்களையும், சோகங்களையும்தான். அந்த நேரத்தில் அதில் ஒரு ஆறுதல் கிடைப்பதாகப்படும். இதற்காகவே மாலையில் அந்த பூங்காவில் கூடுவோம்.  வாக்கிங் போவதாக காரணம் சொல்லிக்கொண்டு வருவோம். கால் மணிநேரம் கூட வாக்கிங் இருக்காது. சும்மா ஒரு சுற்று சுற்றிவிட்டு நாங்கள் கூடும் அந்த தூங்குமூஞ்சி மாரத்தடியில்   சிமன்ட் பெஞ்சுகளில் கூடிவிடுவோம். எங்களுக்கு அன்றாட வாழ்க்கையின் சோகங்களை பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்வோம். இளமைக்கால இனிய நிகழ்வுகளை நினைவூட்டி அரட்டையடிப்போம். ஒரு நாளில் நாங்கள் சந்தோசமாக இருப்பது அந்த கணங்கள் மட்டுமே. அவர்களிளும் ஒவ்வொருவராக சொல்லாமால் கொள்ளாமல்,விடை பெற்றுக்கொண்டிருகரார்கள். நான்குநாட்களுக்குமுன்  ஜோபிசேட்டன் போய் சேர்ந்துட்டான். அவனின் கேலியும் கிண்டலும் ஒரு பெரிய இழப்பு எங்கள் க்ரூப்பிற்கு .

உன்னைத்தான் வெகுநாளாக பார்க்க வேண்டுமென்றிருந்தேன். உன் வாட்சப் பதிவுகளில் எனக்கு உன் வாழ்க்கையின் மகிழ்வும், திருப்தியும் புரிந்தது. அடிக்கடி வந்து பார்க்க விருப்பம்தான். ஆனால் நீ இத்தனை தூரத்தில் இருக்கிறாய். எப்படியும் இன்று உன்னைபார்த்துவிடவேண்டுமென்று கிளம்பி வந்துவிட்டேன் என்றார்.

சந்தோசம் .”உனக்கு நான்  இப்போது என்ன சொல்ல  வேண்டும்?” என்றார் புன்யமீண். 

“எப்படி உன்னால் சந்தோசமாக , திருப்தியாக இருக்கிறாய் ? அந்த ரகசியத்தை சொல் “ என்றார் ராஜசேகர்.

ரகசியம் என்று ஏதுமில்லை . ரகசியம் (SECRET) ரோண்டா பைன்(Rhonda Byrne) என்பவர்   எழுதிய ஒரு புத்தகம் ஆங்கிலத்தில் உள்ளது. உலக அளவில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்று. தமிழில் கூட மொழிபெயர்ப்பு கிடைக்கிறது. அதில் நிறைய  நல்ல விடயங்களை பதிவிட்டுள்ளார். வாழ்கையின் வெற்றி ரகசியங்கள் அவை. ஆனால் வெற்றி பெற்றிவிட்டால் மட்டும் மகிழ்ச்சி வந்துவிடுமா என்றால் இல்லை. அந்த வெற்றியின் மகிழ்ச்சி சில கணங்கள்தான். அதன் பின் வேறொரு குறிக்கோள் வந்து, அதன் வெற்றியைநோக்கி பயணிக்க வேண்டியதிருக்கும். அதனால் அதுவும் சந்தோசத்தின் தேடுதலுக்கு உதவாது .

சந்தோசத்தின் தேடுதல்தான் தேவையான தேடுதல். தேடுதல் என்பதுகூட தவறு. ஏனென்றால் தேடுவதற்கு அது தொலைந்து போன பொருள் அல்ல. நம்மிடமே எப்போதும் இருப்பதுதான். நாம் வெளியில் தேடிக்கொண்டிருக்கிறோம்.  சிலர் மூக்குக்கண்ணாடியை தலையில் மாட்டிகொண்டு, அறை முழுதும், தேடிக்கொண்டிருப்பார்கள். அதுபோல் நம்மிடம் இருக்கும் சந்தோசத்தை தொலைந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு வெளியில் தேடிக்கொண்டிருபோம் .

நம்மிடம் ஏற்பட்டிருக்கும் பருவங்களின் பரிமாண வளர்ச்சி பற்றி எண்ணியதுண்டா ? 

குழந்தை பருவத்தில் எத்தனை மகிழ்வோடு இருந்தோம். இன்று அதுபோல் ஏன் இல்லை என்று நினைக்கிறோம். உருது கவிஞர் மிர்சா காலிப் எழுதிய கவிதையின் கருத்தை தழுவி, நண்பர்(என்னை காட்டி) எழுதிய கவிதை ,

குழந்தை பருவத்து மழைக்காலம்

“வெட்டிவேர் வாசத்துடன் மண் மணக்கும்,

பன்னீர் மரத்தில் மணத்துடன் சொட்டும் நீர்த்துளிகள்,

காகிதக்கப்பல் மிதக்கும் முற்றத்து மழைநீர் ,

நிரம்பி வழியும் கல்குளமும் மண்குளமும்

உம்மாவின் கைமணத்தில் இஞ்சி மணக்கும் தேநீர்,

வேலிகளில் நடத்திய தட்டான் பூச்சி வேட்டை ,

பொன்னிக்குருவி விற்றுவரும் வேடுவப்பெண்கள் ,

அடைமழையில் ஆனந்த குளியல் ,

சிமெண்டு முற்றத்து கசியலுக்கு அஞ்சி

சுண்ணாம்புத்தரை தளத்துக்குழியில் போர்வைக்குள் உறக்கம் ,

அத்தனையையும் இளமைக்காலத்தோடு தொலைத்துவிட்டு ,

மழை இல்லா இந்த பாலையில் பல்லாண்டுகளாக ஏங்கித்தவிக்கும்

நான் கேட்பது “இறைவா திருப்பித்தா என் குழந்தை பிராயத்தை. 

நீ எனக்குத்தந்த எல்லாவற்றையும் எடுத்துக்கொள்”.

இத்தனை மகிழ்ச்சியையும் குழந்தை பருவத்தோடு போய்விட்டதாகவே நினைக்கிறோம் . ஏன் தொலைத்தோம் ?”

 என்னைக்கேட்டால் தொலைந்துவிட்டதாக நினைக்கிறோம். காரணம் என்ன? பெற்றவர்கள் எல்லோருக்கும் வாழ்கையில் பெரிய கனவாக இருப்பது பிள்ளைகளின் எதிர்காலம்தான். பிள்ளைகள் எப்படி வளரவேண்டும், எப்படி வரவேண்டும் என்ற கனவுகளும்,திட்டங்களும் இல்லாத பொறுப்பற்ற பெற்றோர் யாருமில்லை. வாழ்க்கை சூழலில் இந்த கனவுகளுக்கும், திட்டங்களுக்கும் நடைமுறை சிக்கல்களும் ஏமாற்றங்களும் வருவது ஒருபுறம். இந்த கனவுகளும் திட்டங்களும் சரியானதுதானா? நியாயமானதுதானா ? ஆதாரமாக சிந்திக்கவேண்டிய விடயம். இந்த கனவுகள் பொதுவாக பொருளாதார ரீதியாக வாழவைக்க என்ற அடிப்படையில் மட்டுமே இருக்கிறது. டாக்டராகவோ, பெரிய பொறியாளராகவோ, கணக்கு தனிக்கையாளராகவோ(Auditor), இந்திய நிர்வாக சேவை (IAS), இந்திய காவல் சேவை(IPS) போன்ற பதவிகள் வகிக்க வேண்டும் என்ற கனவுகளோடுதான் அநேகமாக பெற்றோர்கள் இருக்கிறார்கள் .இதற்காக பெற்றோர்கள் சந்திக்கும் தடைகளும், விதிமீறல்களும் எத்தனை? கனவுகளை அடைய தகுதிக்கு மீறிய செலவுகளுக்கு கடன் வாங்கி வாழ்க்கை முழுவதும் கடனாளியாக வாழ்பவர்கள் எத்தனை பேர்? இத்தனை செய்தும் அவர்கள் கனவுகள் முற்றுப்பெராமல் போனவர்கள் எத்தனை பேர்?

இந்த எலிப்பந்தயத்தில்(Rat Race) கூட்டத்தோடு பொதுப்புத்தி கொண்டு ஓடத்தொடங்குகிறோம். இந்த பந்தயத்தின் இலக்கு பதவி, பணம் மட்டுமே. அதற்கு செலவிடும் காலம் வாழ்வில் பாதிக்கு மேல்.முடிவில் வெற்றி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் ,எதிர்கொள்ளகாத்திருப்பது ஏமாற்றமும் விரக்தியும்தான்.

பிறகு கனவுகாண்பதிலும் திட்டமிடுதளிலும் செயலாக்குவதிலும் என்ன தவறு செய்கிறோம்? இந்த கனவுகளில் உயரிய சரியான நோக்கமோ, வழிகாட்டலோ, செயல்முறையோ இல்லை என்பதுதான் உண்மை. கனவுகளே தவறாக இருக்கும்போது, முடிவுகள் எப்படி சரியாக இருக்கும்? கனவு காணச்சொல்லி அப்துல் கலாம் முதல் அனைவரும் சொல்கிறார்கள். மற்றும் சிலர் எல்லாவற்றிற்கும் ஆசைப்படு என்று சொல்கிறார்கள். கனவு காண்பதும், ஆசைப்படுவதும் தவறில்லை. ஆனால் இங்கே நாம் சிந்திக்கவேண்டியது நமக்கு இறைவன் அளித்த இந்த அழகிய வாழ்கையை எப்படி வாழ்வது என்பதுதான்

எதை நாம் கொண்டுவந்தோம்,

எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியில்

வாழ்கையை அன்பில் வாழ்ந்து

விடைபெறுவோம்”

மாயாவி திரைப்படத்தில் கவிஞர் பழனி பாரதி எழுதிய இறைவன் தந்த அழகிய வாழ்வு என்ற பாடலின் மேற்கண்ட வரிகள்போல் வாழ்க்கையை அன்பில் வாழ்ந்து விடை பெறவேண்டும். அடிக்கடி நான் கேட்கும் இந்த பாடலின் கருத்து நம் கனவாகவும் நம் சந்ததிகளை பற்றிய கனவாகவும் அமைந்தால் ,அதுதான்  நாம் பிறந்ததின் வெற்றி.

பல பெற்றோர்கள் முதுமைக்காலத்தை, முதியோர் மையங்களிலும், தனிமையிலும் பிள்ளைகளால் குடும்ப வாழ்க்கை நிராகரிக்கப்பட்டு வாடுவதை பார்க்கிறோம்.கஷ்டப்பட்டு ஆளாக்கிய பிள்ளைகள் தான் கொண்ட கனவுகள் போல் அவர்களின் பிள்ளைகளுக்காக தூரத்தில் தங்களின் இளமையையும் சந்தோசத்தையும் தொலைத்துக்கொண்டு பணத்திற்காக எலி ஓட்டம் ஓடுவதை பார்க்கிறோம். தனக்கும் பெற்றோர்போல் முதுமை வரும் என்றும் பணத்தால் எல்லாம் வந்துவிடாது என்று உணரும்போது பெற்றோர் போல தானும் தாமதப்பட்டது தெரியும்.

பணத்தை கொண்டுமட்டும் அன்பு சந்தோசம் போன்ற மனிதநேயமான விடயங்கள் பெறமுடியாது என்பதை சிறிய வயதிலேயே பிள்ளைகளுக்கு புரியவைக்கவேண்டும். பணம் நிச்சயம் வேண்டும் அதற்காக இளமையை, சந்தோசத்தை, அன்பை, நேசத்தை, மனிதநேயத்தை தொலைத்து விட்டு சம்பாதிக்கும் அந்த பணம் கண்ணை விற்று ஓவியம் வாங்கியதற்கு சமம் .

அது போகட்டும் .இப்போது நீங்கள் என்ன செய்யலாம் . நீங்கள் என்றில்லை, நாம் என்ன செய்யலாம் என்று பார்ப்போம். அவர்களுக்கு (குடும்பத்தினருக்கு) புரிய வைக்க முயற்சிப்பது வீண் வேலை. அதை விட்டு நாம் நமக்காக வாழவேண்டும். அவர்களுக்கு செய்யவேண்டியவைகளை செய்வோம். நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பிற்கும் ஆதரவிற்கும் குறைவைக்க வேண்டியதில்லை. ஆனால் பதிலுக்கு அவர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் ஏங்கவேண்டாம். தானாக வந்தால் ஏற்போம். இல்லையென்றால் நான் எவ்வளவு செய்திருப்பேன்.  நன்றி இல்லாமல் இருக்கிறீர்களே என்று சொல்லாதீர்கள். அன்புக்கு பதில் அன்பை எதிர்பார்க்க வேண்டாம். எந்த கண்டிசனும் இல்லாததுதான் அன்பு. நாம் செய்தது செய்வது எல்லாம் நம் கடமை. அதற்கு அவர்களிடமிருந்து பலனை எதிர்பார்ப்பது அன்பல்ல,வியாபாரம் . என்றார் புன்யமின்.

அவர்களுக்கு உங்கள்மீது அன்பில்லை, மரியாதை இல்லை, என்று அர்த்தமில்லை. நீங்கள் நினைப்பதுபோல் அவர்கள் நடக்காததால் அப்படி நினைக்கலாம். அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். அவர்களுடைய புரிதலும், அறிவும், நம்மிடமிருந்து முழுக்க முழுக்க வேறானவை .அதை புரிந்துகொண்டாலே போதும் . 

நாம் நமக்கு மகிழ்ச்சிதரும் காரியங்களை நாம் செய்வோம்  .அவர்களுக்கு விருப்பமான விடயங்களில் நாம் தலையிடவோ, விமர்சனம் செய்யவோ வேண்டாம். அவர்கள் வாழ்க்கை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அதுபோல் நமக்கு சரியென்ற காரியங்களை நாம் செய்துகொள்வோம் . அதுதான் மகிழ்ச்சியின் வழி.

தலைமுறை இடைவெளி என்பது இதுதான். இதை புரிந்துகொண்டால் போதும் .உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது என்று நினைக்கிறேன். ஒரு நட்செல்லில் சொல்லவேண்டுமென்றால், பாரதி சொன்னதுபோலே 

விட்டு விடுதலையாகி நிற்பாய் ஒரு சிட்டுக்குருவியை போலே

கணியன் பூங்குன்றனார் சொன்னதுபோல்

‘நன்றும் தீதும் பிறர்தர வாரா’

அவ்வளவுதான் என் வாழ்வின் மகிழ்வின் ரகசியம்

குழந்தை பருவம் போன்ற மற்றொரு கனாகாலத்தை வாழுங்கள்   என்றார் புன்யமின்.

ராஜசேகர் கையை பிடித்துக்கொண்டு, இனி மகிழ்வோடு இருப்பேன் நான் எனக்காக என்றார் . 

எனக்கும் புரிந்தது .

ஏனாதிநாத நாயனார் புராணம்

ஏனாதிநாத-நாயனார்-புராணம்

ஏனாதிநாத நாயனார்‌

சோழநாட்டிலுள்ள எயினனூரில்‌ ஈழகுலத்தில்‌ பிறந்தவர்‌ ஏனாதிநாத நாயனார்‌ ஆவார்‌. சிறந்த சிவபக்தராய்‌ விளங்கிய இவர்‌, அரச குலத்தவருக்கு வாள்வித்தைப்‌ பயிற்சி அளித்து வந்தார்‌. அதில்‌ கிடைக்கும்‌ வருமானத்தைக்‌ கொண்டு சிவனடியார்களுக்குத்‌ திருத்தொண்டு புரிந்து வந்தார்‌.

ஏனாதிநாதரின்‌ புகழ்‌ எங்கும்‌ பரவியது கண்டு அவ்வூரிலுள்ள அதிசூரன்‌ என்பவன்‌ ஏனாதியார்‌ மீது பொறாமை கொண்டான்‌. அதிசூரனும்‌ வாள்‌ வித்தையே கற்பித்து வந்தான்‌.

ஒருநாள்‌ தன்‌ மாணவர்களுடன்‌ புறப்பட்டு வந்த அதிசூரன்‌, ஏனாதிநாதரைப்‌ போருக்கு அழைத்தான்‌. ஏனாதிநாதரும்‌ தன்‌ மாணவர்களுடன்‌ போருக்குக்‌ கிளம்பி வந்தார்‌. அதிசூரன்‌ போரில்‌ தோற்றோடினான்‌.

அன்றிரவு அதிசூரனுக்கு உறக்கம்‌ வராது தவித்தான்‌. ‘ஏனாதிநாதரை போரில்‌ வெல்ல முடியாது, வஞ்சகத்தால்‌ தான்‌ வெல்ல முடியும்‌! என்று முடிவெடுத்தான்‌. மறுநாள்‌ காலையில்‌ ஓர்‌ ஒற்றனை அனுப்பினான். அவனிடம்‌, “ஏனாதிநாதரும்‌ நானும்‌ தனித்தனியாய்‌ப் போரிட வேண்டும்‌. இப்போரில்‌ அவர்‌ என்னை வெல்ல முடியுமோ?” என்று கேட்டு வரவேண்டும்‌ என்று கூறினான்‌. ஒற்றன்‌ அவ்வாறு போய்‌ கேட்க, ஏனாதிநாதரும்‌ உடன்‌பட்டார்‌.

ஏனாதியாரின்‌ அடியவர்‌ பக்தியை அறிந்த அதிசூரன்‌, தன்‌ நெற்றியில்‌ திருநீற்றைப்‌ பூசிக்‌ கொண்டான்‌. தன்‌முகத்தைக்‌ கேடயத்தால்‌ மறைத்தவாறு, வாளேந்தி போர்க்களம்‌ புறப்பட்டான்‌. ஏனாதியாரின்‌ முன்வந்து நின்றான்‌. அருகில்‌ வந்ததும்‌ தன்‌ கேடயத்தை அகற்றினான்‌.

அதிசூரனனின்‌ நெற்றியில்‌ திருநீற்றைக்‌ கண்ட ஏனாதிநாதருக்கு அதிசூரனும்‌ அடியவராகவேத்‌ தெரிந்‌தான்‌. உடனே அவர்தன்‌ கையிலுள்ள வாளை தரையில்‌ போட்டார்‌. அதிசூரனை வணங்கினார்‌. இதுதான்‌ சமயம்‌ என்று அதிசூரன்‌ வாளை வீசி ஏனாதியார்‌ முன்‌ பாய்ந்தான்‌.

ஏனாதியாரின்‌ மனதில்‌ அக்கணமே ஓர்‌ எண்ணம்‌ தோன்றியது. ஆயுதமின்றி நிற்கும்‌ தன்னை அதிசூரன்‌ கொன்றால்‌, ‘நிராயுதபாணியைக்‌ கொன்றவன்‌’ என்ற அவப்பெயர்‌ அவனுக்கு உண்டாகுமே! என்று எண்ணிய ஏனாதிநாதர்‌ தன்‌ வாளைக்‌ கையிலெடுத்தார்‌. எனினும்‌ திருநீறு அணிந்தவனுடன்‌ போர்‌ புரிய அவர்‌ மனம்‌ ஒப்பவில்லை. ஏதோ பெயரளவிற்கு அதிசூரனோடு போர்‌ புரிவதுபோல்‌ நடித்த ஏனாதிநாதரை, சீற்றமாய்‌ பாய்ந்த அதிசூரன்‌ வாளால்‌ வெட்டிச்‌ சாய்த்தான்‌.

ஏனாதிநாதரின்‌ அடியவர்‌ பக்தியை மெச்சிய சிவபெருமான்‌, அக்கணமே அவருக்குத்‌ இருக்காட்சி அருளினார்‌. ஏனாதிநாத நாயனாரை சிவபதம்‌ சேர்த்தார்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »