📌இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழில் தரமான ஆய்வுக்கட்டுரைகள், திறனாய்வுக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள், சுய வரலாறு கட்டுரைகள் (உங்களைப் பற்றிய சுயசரிதம்), கவிதைகள் (புதுக்கவிதைகள் | மரபுக்கவிதைகள்), சிறுகதைகள், தொடர்கதைகள், புதினம், தமிழர்கள் பயன்படுத்திய புழங்கு பொருட்கள் பற்றிய தகவல்கள், மறந்துபோன – மறைந்துபோன – மறைந்து கொண்டிருக்கின்ற அனைத்தும் மீட்டுருவாக்க உதவியோடு புதுப்பித்தல், இன்றைய தேவைகள் – நாளைய தேடல்கள் பற்றிய சிந்தனைகள் எனத் தமிழியல் சார்ந்த படைப்புகளை வருடம் மூன்றுமுறை என (ஏப்ரல், ஆகஸ்ட், டிசம்பர்) வெளியிடப்பட்டு வருகின்றது.
📌 இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் E -ISSN : 3048 – 5495 மற்றும்
ORCID : 0009-0006-0033-8847, @ Linkedln, @ EndNote ஆகிய தகுதியைப் பெற்றுள்ளது சிறப்புக்குரியதாகும்.
📌இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழில் வெளியிடப்படும் அனைத்துப் ஆய்வுக்கட்டுரைகளும் இந்தியா மட்டுமில்லாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, துபாய், ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளில் வாழும் தமிழ்ச்சங்கங்கள் மூலமாக அனைவரும் படிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
📌பிறமொழியைச் சேர்ந்த அறிஞர் பெருமக்களும் தங்களுடைய மொழியிலேயே படிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளன.
📌 இனியவை கற்றல் மின்னிதழின் புலனக்குழு வாயிலாக எளிமையாக முதன்மை ஆசிரியரைத் தொடர்பு கொள்வதற்கும் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புலனக்குழுவில் இணைய : https://chat.whatsapp.com/J3UAdkFQ3Kk9UD0G9cOqvb
📌ஒவ்வொரு படைப்புக்குக் கீழ் pdf வடிவில் சான்றிதழ் மற்றும் தங்களின் படைப்புக்குரிய தொகுப்பும் கொடுக்கப்பட்டிருக்கும்.
📌 24 மணி நேரத்திற்குள் உங்களின் படைப்பு Google – லில் வெளியாகும்.
📌இனியவை கற்றல் கல்வி அறக்கட்டளைக்கு நன்கொடையாக (Donation) ரூபாய் 1000.00 வழங்குபவர்களுக்கு இனியவை கற்றல் மின்னிதழில் ஓர் ஆண்டிற்கு 4 ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்படுவதுடன் இனியவை கற்றல் உறுப்பினர் அட்டையும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழின் கொள்கையும் விதிமுறைகளும் (Policy&Regulations)
பார்வை : ஆய்வுக்கட்டுரை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
கேள்வி : 1 ஆய்வுக்கட்டுரை எவ்வாறு எழுதுவது?
ஆய்வுக்கட்டுரைகள் முறையான ஆய்வு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடித்திருக்க வேண்டும். கீழ்க்கண்ட முறையில் உட்பட்டு இருத்தல் நலம்.
முன்னுரை
📍தங்களுடைய ஆய்வு எதை பற்றியது? யாரைப் பற்றியது? எதற்காக இந்த ஆய்வானது மேற்கொள்ளப்படுகின்றன? என்கின்ற மாதிரி படிக்கக் கூடிய வாசகர்கள் முன்னுரையிலேயே இந்த ஆய்வு எதை நோக்கிச் செல்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முன்னுரையில் மேற்கோள்கள் காட்டக்கூடாது. ஆசிரியரின் சொந்த ஆய்வுக்கருத்தாக மட்டுமே அமைய வேண்டும்.
உட்தலைப்புகள்
📍ஆய்வின் தலைப்பு, நோக்கம், பயன், கருதுகோள் என்கிற அடிப்படையில் பயணம் செய்ய வேண்டும்.
📍 ஆய்வில் ஒரு கருத்தைச் சொல்லும்போது,
1.உங்களுடைய கருத்து
2.ஆய்வில் கண்டவைகள்
3.ஆய்வில் கண்டவைகளுக்கு ஒத்த மேற்கோள்கள், திறனாய்வாளரின் கருத்துரைகள், பத்திரிக்கை செய்திகள், தகவலாளரின் தகவல்கள் ஆகியன
4.இறுதியில் உங்களுடைய ஆய்வின் முடிவுகள்
முடிவுரை
📍ஆய்வின் அனைத்துக் கூறுகளையும் ஒன்றாக இணைத்து ஒருமனதாக முடிவுரையை அமைத்திடல் வேண்டும். (குறிப்பு : முன்னுரையில் தாங்கள் சொன்னதற்கும் முடிவுரையில் தாங்கள் சொன்னதற்கும் மாற்றுக்கருத்துகள் இருக்கக் கூடாது)
சான்றெண் விளக்கம்
📍 ஆய்வுக்கட்டுரையைப் பொறுத்தவரை பாடல்களின் இறுதியிலேயே (அகம்.146:1-5) சான்றெண் விளக்கம் கொடுத்து விடலாம்.
📍 உரைநடையாக இருப்பின் மேற்கோள்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட வேண்டும். மேலும் அம்மேற்கோள்கள் யார் சொன்னார்கள் என்பதையும் தொடர்ந்து குறிப்பிட வேண்டும்.
📍 சான்றெண் விளக்கத்தில் ஆய்வு முறைப்படி ப.23, பக்.56 – 58, மேலது.ப.296, என்பது போன்று இருக்க வேண்டும்.
பார்வை நூல்கள்
📍ஆய்வாளர்கள் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட நூல்களுடன் தொடர்புடைய நூல்களையும் தரலாம்.
📍 தகவலாளர்கள் பட்டியலைச் சேர்க்கலாம்.
📍 குறைந்தபட்சம் ஐந்து நூல்களுக்குக் குறையாமல் தர வேண்டும்.
கேள்வி : 2 ஆய்வுக்கட்டுரை எவ்வாறு அனுப்புவது?
📍 பதிப்புரிமை விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்க : Click Here – PDF Format
📍 பதிப்புரிமை விண்ணப்பத்தினைச் சரியான முறையில் பூர்த்திச் செய்யப்பட்டு PDF/JPG வடிவில் தங்களின் ஆய்வுக்கட்டுரையோடு மின்னஞ்சல் செய்ய வேணடும்.
📍 Unicode font (TAU – MARUDHAM, NIRMALA UL, LATHA, Ex..) – ல் 1.15 இடைவெளிவிட்டு 13 எழுத்துருவில் எழுத்துப்பிழைகள், பொருட்பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
📍 பக்க வரையறை, அளவு என எதுவும் இல்லை.
📍ஆய்வுக்கட்டுரை மற்றும் பதிப்புரிமை விண்ணப்பம் எங்களுக்கு வந்தவுடன் பதில் மின்னஞ்சலாக ஒரு குறிப்பு எண் (Reference No.) தங்களுக்கு வழங்கப்படும். அந்தக் குறிப்பு எண்ணைப் பின்பற்றியே மற்ற பரிமாற்றங்கள் அனைத்தும் நடக்கும் என்பதை கவனத்தில் கொள்க. (குறிப்பு ஒவ்வொரு ஆய்வுக்கட்டுரைக்கும் தனித்தனியே குறிப்பு எண்கள் (Reference No.) வழங்கப்படும்)
📍 தாங்கள் அனுப்பிய ஆய்வுக்கட்டுரையினை எங்கள் மதிப்பீட்டுக் குழுவாய்விற்கு அனுப்பப்படும். இனியவை கற்றல் ஆய்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வுக்கட்டுரைகள் மட்டுமே இதழில் வெளியிடப்படும்.
📍ஆய்வுக்கட்டுரைகளில் குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டப்படும். அவற்றை சரிசெய்து ஐந்து நாட்களுக்குள் எங்களுக்கு அனுப்ப வேண்டும். மீண்டும் ஆய்வுக்குழு அக்கட்டுரையினைச் சரிப்பார்க்கும். மீண்டும் தவறு இருப்பின் ஆய்வுக்கட்டுரை நிராகரிக்கப்படும்.
📍 ஆய்வுக்கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : iniyavaikatral@gmail.com
கேள்வி : 3 ஆய்வுக்கட்டுரைக்குக் கட்டணம் உண்டா?
📍 ஆய்வுக்கட்டுரைக்கு எனத் தனியாகக் கட்டணம் இல்லை.
📍இனியவை கற்றல் கல்வி அறக்கட்டளையின் மூலமாகவே இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழானது இயங்குகிறது. கல்வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் மேற்படிப்பு படிக்க முடியாமல் தவிக்கும் மாணவ மாணவிகளுக்கும் உதவிடவும் – இணையதளம் புதுப்பித்தல், செயலாக்கம், வடிவமைப்பு போன்ற காரணங்களுக்காக ஒவ்வொரு ஆய்வுக்கட்டுரைக்கும் ரூபாய் 500.00 நன்கொடையாக வசூலிக்கப்படுகிறது.
📍 ஆய்வுக்கட்டுரையுடன் பதிப்புரிமை விண்ணப்படிவம் (pdf, Jpg) மற்றும் பணத்தொகை கட்டிய ரசீதையும் இணைத்து அனுப்ப வேண்டும். (ஒருவேளை தங்களின் ஆய்வுக்கட்டுரையானது எங்களது குழுவால் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் பணம் மீண்டும் உங்களுக்கே அனுப்பப்படும்)
📍 இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழில் ஐந்து ஆய்வுக்கட்டுரைகள் வழங்கிய பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தமிழ் பற்றாளர்களுக்கு உறுப்பினர் அட்டை (பதிவு எண்ணுடன்) வழங்கப்படும்.
(குறிப்பு : உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு சில உரிமைகள் வழங்கப்படும்)
📍இனியவை கற்றல் கல்வி அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தாலும் உறுப்பினர் அட்டை வழங்கி உரிமைகள் வழங்கப்படும். (மேலுள்ள பத்தியைக் காண்க..👆👆 )
கட்டணம் செலுத்த :
A/C Name : Iniyavaikatral Educational Trust
A/C No : 42891298562
ISBN No : SBIN0062290
Bank : State Bank Of India
Branch : Hosur Bazaar
* UPI id : iniyavaikatral@sbi
* கட்டணம் செலுத்திய பிரதியை ஆய்வுக்கட்டுரையுடன் மின்னஞ்சலில் அனுப்பவும்.
கேள்வி : 4 ஆய்வுக்கட்டுரை தவிர பிற படைப்புகளுக்கு கட்டணம் உண்டா?
📍இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழானது தமிழியல் சார்ந்த கருத்துகளை உலகறிய செய்வதைதான் நோக்காகக் கொண்டுள்ளது.
📍ஆகையால், கவிதைகள், சிறுகதைகள், நூல் மதிப்புரைகள், மீட்டுருவாக்கங்கள், கேள்வி பதில்கள், திறனாய்வு கோட்பாடுகள் என அனைத்திற்கும் கட்டணம் இல்லாமல் இலவசமாகவே பதிவு செய்யப்படும். (குறிப்பு : அனைத்துப் படைப்பிற்கும் மின்சான்றிதழ் உண்டு)
முனைவர் க.லெனின்
முதன்மை ஆசிரியர்,
இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E-ISSN : 3048 – 5495)
தொடர்பிற்கு – 70102 70575