Monday, July 21, 2025
Home Blog Page 20

சாலம் பாய் கறிக்கடை |ப பிரபாகரன்|சிறுகதை

சாலம் பாய் கறிக்கடை

     சூரியன் உதிப்பதற்காகவே, சூரிய உதயத்திற்கு முன்பே, குறைந்தது ஒரு ஆட்டையும் ஒரு கோழியையுமாவது காவு கொடுத்து விடிவார். சிலேட்டிலும், கரும்பலகையிலும் சுண்ணாம்புக் கட்டிக்கொண்டு எழுதப்பட்டும், தாளில் அச்சிடப்பட்டும் கடையின் முன்னே தொங்கவிடப்படும் விலைக்கு ஒருபோதும் ஒருவரும் மறுப்பு தெரிவித்ததே கிடையாது; அப்படியே எழுதபட்ட தொகையைக் கொடுத்துவிட்டுக் கறியை வாங்கிச் செல்வார்கள். அந்த கறிக்கடையின் உரிமையாளர் பெயர் சாலம் உசைன் அப்துல்லா. எல்லோரும் சாலம் பாய் என்று சுருக்கமாக அழைப்பதுண்டு. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று நினைத்து நேர்மை தவறாமல் வாழ்ந்து வந்த இவருக்கு என்று ஒரு பெரிய மக்கள் கூட்டம்.

            சாலையின் ஒருபுறம் விநாயகர் கோவில்; அந்த கோவிலுக்கு மணிக்கு குறைந்தது ஐந்து நபர்கள் வருவார்கள்; பயபக்தியோடு தோப்புக்கரணம் போட்டு ஏதேனும் வேண்டி விரும்பி முணுமுணுத்து பிறகுதான் போக வேண்டிய இடத்திற்கு போவார்கள்; இந்த விநாயகர் கோவிலுக்கு வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கையைவிட, இதற்கு அடுத்தடுத்து உள்ள ஐந்துக் கறிக்கடைகளுக்கும் வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கும். அதிலும் அங்கு உள்ள மூன்றாவது கறிக்கடைக்கு, வரும் வாடிக்கையாளர்கள் கூட்டம் ஏராளம்! ஏராளம்! அதுதான் சாலம் பாய் கறிக்கடை.

            அன்று ஞாயிற்றுக்கிழமை. அப்போது நேரம் சரியாக காலை 10.30 மணி இருக்கும். வழக்கம்போல், அப்பாவும் மகன் பிபுவும் இறைச்சி வாங்க சாலம்பாய் கறிக்கடைக்குப் போயிருந்தார்கள். இவர்களுக்கு முன்னதாகவே மூன்று நபர்கள் (இரண்டு கிலோ எலும்புக்கறி, ஒன்றரை கிலோ கறி மற்றும் மூன்று கிலோ சிக்கன் என்ற வீதத்தில்) ஆர்டர் கொடுத்துவிட்டு அமைதியாக வரிசையில் காத்திருந்தனர்.

பிபுவின் அப்பா “வணக்கம் பாய், எப்படி இருக்கீங்க? பசங்கலாம் நல்லா படிக்கிறாங்களா?” என்று கேட்டார்.

“வாங்க சார். வணக்கம். அல்லா கருணையால் அல்லாரும் நலம். எங்க சார் ரொம்ப நாளா அளே காணோம்!” என்று சாலம்பாய் பதிலோடு கேள்வியும் கேட்டார்.

“என்ன பாய் மறந்துட்டிங்களா? போன வாரம் ஞாயிற்றுக் கிழமை கூட ஒரு கிலோ மட்டன், அரை கிலோ சிக்கன் வாங்கிக் கிட்டு போனேனே!” இன்னிக்கு ஒரு கிலோ மட்டன் மட்டும் போதும்பாய், அதை வாங்கதான் வந்துருக்கேன்” என்றார் பிபுவின் அப்பா.

சாலம் பாய், “அடடே… ஆமா, ஆமாம். சாரி சார். கொஞ்சம் ஞாபக மறதி. வயசாகுதுல. ஓகே சார். கொஞ்ச வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்” என்றார். ஒரு வழியாக ஆர்டரை கொடுத்துவிட்டு அவர்களும் அந்த வரிசையில் நான்காவதாக காத்திருக்க தொடங்கினார்கள்.

      அப்போது கறிக்கடைக்கு எதிரே சாலையின் மறுபுறம், சக்கரம் முறிந்து உடைந்துபோய் பயன்பாட்டிலே இல்லாத ஒரு தள்ளுவண்டி இருந்தது. அந்த தள்ளுவண்டிக்கு அடியில் பொழுது விடிந்தது கூட தெரியாமல் ஒரு நாய், “கண்களை மூடித் தூங்கி கொண்டுயிருப்பதனால், இந்த உலகம் முழுவதும் இன்னும் பொழுது விடியல, இப்படி இருட்டாகத்தான் இருக்கும்” என்று நினைத்து ஆழ்ந்த உறக்கத்தில் உறங்கி கொண்டிருந்ததை அப்பாவும் மகனும் நோட்டமிட்டுக் கொண்டு நின்றனர்.

      திடீரென அங்கு ஒருவர் பைக்கில் வந்து நின்றார். அவர் பைக்கை நிறுத்தவுமில்லை; வண்டியை விட்டு கீழே இறங்கவுமில்லை. பைக்கில் அமர்ந்து கொண்டே, பாய் “லேட்டாகும் போல, நமக்கு இரண்டு கிலோ போட்டு வச்சிருங்க; நான் கொஞ்சம் மளிகை கடை வரைக்கும் போயிட்டு வருகிறேன்; மறக்காம நல்லா தொடைக்கறியா போடுங்க, அதோடு கொழுப்பும், ஈரலும் சும்மா கொஞ்மாக மருந்துக்கு வையுங்க” என்று கூறிக்கொண்டே கிளம்பிவிட்டார்.

“போட்டு வச்சிருக்கேன், போயிட்டு வாங்க சார்!” அப்படினு பாய் கூறிய பதில் பைக்கில் வந்துச் சென்ற நபருக்கு காதில் விழுந்து இருக்க வாய்ப்பெ இல்லை. காரணம் அவர் வந்தார்; சொன்னார்; சென்றார்.

     பிறகு அந்த கடைக்கு அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்த நபர் கீழே இறங்கி வேகவேகமாகவே கறிக்கடைக்கு வந்து பிபுவுக்கு பின்னே நின்றார். “பாய் ஒரு குடல் இருக்கா?” என்று வேகமாக பக்கத்தில் இருந்த கடைகளுக்கெல்லாம் கேட்கும்படியாக கத்தினார். கத்தி கேட்டவர் அப்படியே விட்டு விடவில்லை. காத்திருந்த எல்லோரையும் கடந்து, கறி வெட்டிக் கொண்டிருந்த சாலம்பாய்க்கு அருகில் உள்ளேச் சென்று அவர் காதுகளில் ஏதோ முணுமுணுத்தார்.

     சாலம் பாய், கறி வெட்டுவதை நிறுத்திவிட்டு, மேசையின் மீது இருந்த அந்த ஒரே ஒரு குடலையும் எடுத்துக் கொடுத்தார். அப்படி என்னதான் சொன்னரோ? தெரியவில்லை. மேலும் அந்த பாய் அவரிடம் குடலுக்கான தொகையையும் வாங்கவில்லை.

      ஒருவருரின் காலிலே கொதிக்கும் எண்ணெயோ அல்லது கொதிக்கும் தண்ணீரோ பட்டுவிட்டால் எப்படி குதிப்பார்? என்று யோசித்துப் பாருங்கள். அப்படியே அச்சு அசல், அது போலவே அந்த குடல் வாங்க வந்த நபரின் செயல் நடந்து முடிந்தது. இப்படி அங்கு காத்திருந்த அந்த அரை மணி நேரத்தில் அநேகர் வந்தும், சம்பவங்கள் பலபல நிகழ்ந்து கொண்டும் இருந்தது.

       ஒருவர் முதன் முதலாக இரண்டு கிலோ எலும்புக்கறி கேட்டு காத்து இருந்தார் அல்லவா! அவர் கேட்டது போலவே சூப் எலும்பு அல்லது நல்லி எலும்பு, நல்ல கறித்துண்டு, கொழுப்பு மற்றும் நெஞ்சு எலும்பு இப்படி எல்லத்தையும் எடுத்து தராசில் வைத்து அளந்தார். தராசில் சரியாக 2.025 கிகி என்று இருந்தது. அந்த எடையில் இலவசமாக சேர்த்த கொழுப்பு தான் இந்த 25 கிராம் அதிகமாக இருப்பதற்கு காரணமாகும். முதலில் சூப் எலும்புத்துண்டை எடுத்து கறி வெட்டும் கட்டையில் வைத்தார். பல ரது இடையூறுகள் அடிக்கடி வந்ததையும், சிலர் கண்ணெதிரே காத்திருப்பதையும் சாலம் பாயின் கண்கள் உணர்ந்தது. கைகள் தானாகவே எப்போதும் வெட்டும் வேகத்தை விட சற்று அதிக வேகத்தோடு கறியை வெட்டியது. அங்கு இருந்தவர்களில் யாருமே எதிர்பார்க்கவில்லை. வெட்டப்பட்ட எலும்புத்துண்டின் ஒரு பகுதி மேசையின் மீதும், மறுபகுதி நின்று கொண்டிருந்த எங்களுக்கு அருகில் தரையிலும் வந்தும் விழுந்தது.

      எலும்புத்துண்டு விழுந்த சத்தம் கூட எங்களுக்குச் சரியாக கேட்டிருக்காது. அடுத்த கணமே சாலம் பாய், இந்தடீ… இந்தடீ. என்று அதிவேகமாக கணத்தக் குரலில் கத்தி அதட்டினார். என்னவென்று பார்த்தால், விழுந்த இடத்தில் எலும்புத்துண்டைக் காணவில்லை. அந்த இடத்தில் ஒரு கல் மட்டும் உடல் முழுவதையும் பூமிக்குள்ளே மறைத்துக்கொண்டு, ஊசி போன்ற தலையை மட்டும் பூமிக்கு வெளியில் நீட்டிக்கொண்டிருந்தது. மேலும் எலும்புத்துண்டை ஒரு நாய் எடுத்துக் கொண்டு ஓடுவதை சாலம் பாயுடன் சேர்ந்து எல்லோருமாக விரட்டுவதைக் கண்டனர். ஒரு நாய் கடைக்கு எதிரே தூங்கிக் கொண்டிருந்ததே அந்த நாய் தான் அது.

     நாய் தூங்கிக் கொண்டு தான் இருந்தது என்று பார்த்தால் நல்ல சூப் எலும்புத் துண்டு வெட்டும் சத்தத்தைக் கேட்டோ அல்லது வெட்டப்பட்ட எலும்புத்துண்டு கீழே விழுந்த சத்தத்தை கேட்டொ வேகமாக எழுந்து மின்னல் வேகத்தில் வந்து, அந்த எலும்புத்துண்டை கவ்விக் கொண்டுச் சென்றது; அங்கு இருந்தவர்களில் பிபுவுக்கும் அப்பாவுக்கும் மட்டும் மிகுந்த ஆச்சரியமாகவே இருந்தது.  ஏனெனில் சிலவினாடிக்கு முன்பு தான் அவர்கள் அங்கு உறங்கிக் கொண்டிருக்கும் நாயைப் பார்த்தனர் அல்லவா!

     கையில் கற்களை வைத்துக் கொண்டு அந்த நாயைத் துரத்திச் சென்றவர்கள், கல்லால் ஒரு அடி கூட அடிக்க முடியவில்லையே என்று மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். அவர்களுடன் திரும்பி வந்த சாலம்பாய், “சரி விடுங்க போய் தொலயட்டும்!” என்று கூறி திரும்பினர்.

     அப்போது முன்பு எலும்புத்துண்டு விழுந்த இடத்தில் ஒரு சிறிய கல் இருந்தது தானே, அந்த கல் எதிர்பாராத விதமாக சாலம் பாயின் கட்டைவிரலை பதம் பார்த்தது. கட்டைவிரலின் மேல்பகுதியில் இருந்து இரத்தம் பீறிட்டு கசிந்ததை பார்த்ததும் ஏ! அல்லா! என்று கத்தி தன்னையறியாமல் கண்கள் கலங்கினார்.

       தினமும் விலங்குகளின் இரத்தத்தில் குளிக்கும் சாலம்பாய்க்கு அவருடைய இரத்தத்தைப் பார்த்ததும் அன்று எப்படி இருந்ததோ, பாவம்! வலியை சொல்லவும் முடியாமல் வேதனையை வெளிக்காட்டவும் முடியாமல் கொஞ்ச நேரம் திக்குமுக்கு ஆடிவிட்டார். ‘வெளியில சொன்னால் வெட்கக்கேடு’ என்று நினைத்து உள்ளுக்குள்ளே போட்டு புதைத்து விட்டார். அங்கு கறி வாங்க காத்திருப்பவர்களைக் கண்டதும் அவருடைய வலியானது “பாலைவனத்திலே விழுந்த மழைத்துளி போல” காணாமல் போனது.

சிறுகதையின் ஆசிரியர்

ப.ப பிரபாகரன்

இலால்குடி, திருச்சி

மேலும் பார்க்க..

1.ஃபியூசிபெலஸ்

2.பிபுகேர் ஏஜென்ஸி

பிபுகேர் ஏஜென்ஸி |சிறுகதை| ப.பிரபாகரன்

பிபு கேர் ஏஜென்ஸி

“ஐயயோ! இன்னிக்கும் லேட் ஆச்சு. எட்டு மணியாவ இன்னும் அஞ்சு நிமிடம் தான் இருக்கு. “எத்தன மணிக்கு எழுந்து வேலைய ஆரம்பிச்சாலும் இப்படித்தான் காலையில் சாப்பிட்டும் சாப்பிடாமலும் கிளம்ப வேண்டியதாதான் இருக்குது”.

“இந்த காலை நேரம் மட்டும் எப்படித்தான் இவ்வளவு வேகமாக போகுதோ புரியல” இன்னிக்கு பஸ்ஸை பிடிப்பேனோ இல்ல விட்டுடுவேனோ? தெரியலயே” என்று நினைத்துக்கொண்டு சார்ஜ் போட்டிருந்த போனை எடுத்து பார்த்தாள் டனுஜா.

அந்தோ கொடுமை! போனை சார்ஜரில் செருகுவதற்கு முன்பு இருந்த அதே பத்து சதவீதம் தான் இப்போதும் இருக்கிறது. போனில் சார்ஜ் ஏறவேயில்லை. தலை நிமிர்ந்து பார்க்க, போனை செருகிய ச்விட்ச் ஆன் செய்யாது இருப்பதைக் கண்டு கடுப்பானாள்.

“ கால் வயிறு சாப்பிட்டு, கால் வயிறு தண்ணீர் குடித்து, மேல்வயிற்றை காலியாகவே வச்சுகிட்டு, ‘இதெல்லாம் ஒரு பொலப்பு’ என்று புலம்பிக்கொண்டு வீட்டை விட்டு அலுவலகத்திற்கு அவசர அவசரமாக டனுஜா கிளம்பினாள். மேசையின் மீது இருந்த ஹேண்டுபேக்கை எடுத்து தோள்பட்டையில் தொங்கவிட்டு, கையில வாட்ச் கட்ட நேரம் இல்லாது வாட்சை எடுத்து ஹேண்ட்பாக்ல போட்டுக்கிட்டு “பஸ்ல போய் கையில் கட்டிகலாம்” என்றே நினைத்து வீட்டுக்கு வெளியில் வந்தாள்.

ஜன்னலில் எட்டிப்பார்த்த அவளுடைய இரு பிள்ளைகளுக்கும் பை பை என்று சொல்லி, பறக்கும் முத்தங்கள் இரண்டை கொடுத்து “சமமாக பங்கிட்டுக் கொள்வார்கள்” என்றே நினைத்து செப்பல் ஸ்டாண்டில் செப்பலை குனிந்து எடுத்தாள்.

ஐயோ! நேத்துதான் ஆபிஸ்ல இருந்து வரும் வழியில் இந்த செப்பல் பிய்ந்து போனதே! வாங்கி மூணு மாசம் கூட முழுசா முடியல. அதுக்குள்ளே இப்படி கிளிஞ்சு பிய்ந்து போச்சே! என்ன செய்வது? நல்ல வேளை அந்த பழைய செப்பல் இருக்கு, அதை போட்டுகிட்டு போய் இன்னிக்கு ஒரு நாள் ஒப்பேத்திடலாம் என்று எண்ணி, பழைய செருப்பை எடுத்து போட்டுக்கிட்டு பேருந்து நிற்கும் இடம் கண்ணில் தென்படும் தூரத்திற்கு விரைந்து வந்தாள்.
தினமும் அவளுடன் அலுவலகத்திற்கு வரும் இரண்டு நபர்கள், அந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பதைக் கண்டு, “அப்பாடா! நல்ல வேளை, பஸ் இன்னும் போகல” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே பேருந்து நிறுத்தம் வந்து, நின்றிருந்த இருவருக்கும் ‘குட் மார்னிங்’ சொல்லிவிட்டு வாங்கிய பெருமூச்சை, சிறுமூச்சாக மாற்ற முயற்சித்தாள்.

ஹெண்ட்பேக்கை திறந்து வாட்சை எடுத்து கையில் கட்டினாள். மணி எத்தனை என்று கட்டிய வாட்சில் பார்த்தாள். இப்போதும் நேரம், எட்டு ஆக அஞ்சு நிமிடம் இருந்தது. நன்கு உற்று நோக்கினாள். வாட்சியின் நொடியை காட்டும் முள் முன்னும் பின்னும் ஆடி ஒரே இடத்திலேயே நின்று கொண்டிருந்தது. ஒரு முறை வாட்சை தட்டியும் பார்த்தாள். எந்த பயனுமில்லை. ச்ச… இந்த ‘வாட்சியிலையும் பேட்டரி போச்சு’ போல என்று வாட்சியிடம் கோபித்தாள்.
அருகில் இருந்தவரிடம், சார் டைம் என்ன? என்று கேட்க, அவரோ “மேம், இன்னிக்கு பஸ்ஸு ஃப்வைவ் மினிட்ஸ் லேட். இப்போ சரியா நேரம் எட்டு மணி ஐந்து நிமிடம்” என்றார்.

சில விநாடிகளில் அலுவலக பேருந்து அந்த நிறுத்தத்தில் வந்து நின்றது. கடைசியாக வந்தாலும் ‘லேடிஸ் ஃபர்ஸ்ட்’ என்பதால் ‘நான் தான் முதலில் ஏறுவேன்’ என்று அடம்பிடித்து முதலில் ஏறி ஜன்னலின் ஓரம் இடமும் பிடித்தாள். இப்போதுதான் அவளுடைய மூச்சுக்காற்று சீரான வேகத்தில் உள்ளும் புறமும் சென்று வந்தும் போயும் இருந்தது.
ஜன்னலின் வெளியே நல்ல மூச்சுக்காற்று வாங்க, கண்ணாடி கதவை மெல்ல மேலே தூக்கினாள். இதமாக வீசிய இளந்தென்றல் காற்று அவளுக்குள் ஏற்பட்டு இருந்த பதற்றத்தை பறக்கடித்தது. அவ்விடத்தை விட்டு பேருந்தும் மெல்ல கிளம்ப ஆரம்பித்தது.

ஜன்னலின் வழியே எதிர்புறம் இருந்த டீ கடையில் டீ மாஸ்டர் டீ போட்டுக் கொண்டிருந்ததைக் கண்டாள். சற்றே திடுக்கிட்டாள். மறுகணமே, அச்சச்சோ! மறந்தே போயிட்டேனே!

ம்ஹும்… இன்னிக்கும் அடுப்பில வச்ச பால மறந்துட்டேனே! எப்படி மறந்து போனேனே தெரியலயே. ஆம். டனுஜா, வேலைக்கு வந்த அவசரத்தில், அடுப்பை சிம்மில் வைத்து பாலை கொதிக்க வைத்தவள் மறந்து போய் அடுப்பை நிறுத்தாமல் வந்து விட்டாள்.

“பால் போறது கூட பரவாயில்லை. கேஸ் அடுப்பு வீணா எரிஞ்சு கேஸ் சிலிண்டர் முழுதும் தீர்ந்து போயிடுமே! இப்படி மாதத்தில் மூனு முறை ஒரு நாளுக்கு ஒரு சிலிண்டர் என்று செலவிட்டால் என்னிக்கு நாம் பொருளாதாரத்தில் முன்னேறுவது? இந்த நேரத்தில் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால், ஐயோ! கடவுளே நினைத்து பார்க்கவே கொடுமையாக இருக்கிறதே!”

இப்படியெல்லாம் டனுஜா கேஸ் அடுப்பு வீணா எரிஞ்சுகிட்டு இருப்பதை புலம்பி தவித்து இருப்பாள் என்று பார்த்தால், அப்படி ஒன்றுமே நடக்கவில்லை.

இப்பதான் எல்லாம் அறிவியல் மயமாகி போனதே! இப்படி வீட்டில் மறந்து எரியவிட்ட சிலிண்டரை வெளியில் வேறு எங்காவது இருந்துகொண்டே ஆப் செய்வதற்கு இருக்கவே இருக்கு “பிபு கேர் ஏஜென்ஸி”. டனுஜா, கஸ்டமர் கேர் நம்பருக்கு ‘XXXX’ போன் செய்து அவளுடைய இணைப்பு நம்பரை கூறினாள். ட்ரிங் ட்ரிங் என்று ஒலித்து ஒரு மெஸேஜ் வந்தது. அதில் உங்கள் கேஸ் இணைப்பு எண் “YYYYY” பேராபத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டது. எங்கள் சேவையானது என்றும் எங்கும் எப்போதும் உங்களுக்கு தேவையானது” என்று பதிவிட்டு இருந்தது.

சிறுகதையின் ஆசிரியர்

ப.பிரபாகரன், திருச்சி



ஃபியூசிபெலஸ்| சிறுகதை | ப.பிரபாகரன்

ஃபியூசிபெலஸ்

என்னை கொஞ்சம் கிள்ளி விடுங்க. எனக்கு இது கனவா இல்ல வெறும் நினைவா அல்லது இரண்டும் இல்லாது நிஜமான்னு பெரிய சந்தேகமாக இருக்குது’ இப்படி பிபு பெருத்த சந்தேகத்தோடு அம்மாவிடம் கேட்டான். அதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் அம்மா விழிக்க, “அம்மா, எனக்கு ஃபியூசிபெலஸை எப்படி ஓட்டுவதுன்னு தெரிஞ்சுடுச்சு. யாருடைய தயவும் இல்லாமல் என்னால் தனியே ஃபியூசிபெலஸை ஓட்ட முடியுது” என்று பேரானந்தத்தோடு கூறினான்.

‘இது களைந்து போகும் கனவொன்றுமில்லை; நீடித்து நிலைத்து இருக்கும் நிஜம் தான்’ என்று அம்மா கூறுவதை கேட்டவுடன், பிபு தலைகால் புரியாது குதித்து மகிழ்ந்தான். வீட்டிலிருந்த பாட்டி, சித்தி, சித்தப்பா என்று எல்லோரிடமும் கூறி மகிழ்ந்தான். இறுதியாக தாத்தாவிடம் இந்த மகிழ்ச்சியான செய்தியை கூறினான்.  அப்போது தாத்தா பிபுவிடம் “ஃபியூசிபெலஸ் என்றால் என்ன?” என்று கேட்டார்.

ஐயோ! தாத்தா, உங்களுக்கு ஃபியூசிபெலஸ்னா என்னன்னு தெரியாதா? தாத்தா, இந்த உலகமே தனது வீரத்திற்கு ஈடாகாது என்று சொன்ன கிரேக்க நாட்டை சேர்ந்த மாவீரன் அலெக்ஸாண்டரின் குதிரையோட பெயர்தான் ஃபியூசிபெலஸ். அந்த மாவீரனின் பன்னிரெண்டு வயதில் இருந்து இறுதி காலம் வரை நீடித்ததொரு புனிதமான உறவின் பெயர்தான் ஃபியூசிபெலஸ். அன்று அந்த மாவீரனுக்கு அவனுடைய தந்தை மாசிடோனியாவின் மன்னன் ஃபிலிப்ஸ், ஃபியூசிபெலஸை பரிசாக வழங்கியபோது அவருக்கு வயது பன்னிரெண்டு. எனது அப்பா, எனது பிறந்த நாள் பரிசாக அளித்தபோதும் எனக்கு வயது ஏழு. அதனால் தான் அலெக்சாண்டரின் குதிரையின் பெயரான ‘ஃபியூசிபெலஸ்’ என்பதையே என்னுடைய சைக்கிளுக்கும் பெயராக வைத்திருக்கிறேன்”என்று கூறிவிட்டு தரையில் கால் படாமல் தாவி குதித்து ஓடினான்.

பிபு எப்படியெல்லாம் சைக்கிளை ஓட்ட கற்று கொண்டோம் என்று யோசித்தும் நினைத்தும் உள்ளத்தில் பெருமிதம் அடைந்தான். முதன் முதலாக கற்றுக் கொண்டபோது அப்பாவிடம், “சைக்கிளை நன்றாக பிடித்துக் கொள்ளுங்கள். கைகளை எடுத்து என்னை தனியே விட்டு விடாதீர்கள்”. என்று பயத்தோடு கூறியதையும், இப்போது எதிரில் ஏதேனும் வாகனம் வருவதைக் கண்டவுடன் அப்பா பிபுவின் பாதுகாப்பு கருதி சைக்கிளை பிடிக்க வந்தால் கூட, உடனே பிபு ‘அப்பா, பிடிக்க வேண்டாம், கையை எடுங்கள், தனியே விடுங்கள்; நான்தான் கற்று கொண்டு விட்டேனே!’ என்று கூறி அப்பாவை விரட்டுவதையும் நினைத்துப் பார்த்தான்.

தினமும் தனது வீட்டில் இருந்து சுமார் 1.5 கி மீ தொலைவில் உள்ள பெரிய ஏரிக்கரை வரை அப்பாவுடன் சைக்கிளைக் கற்று கொள்ள சென்று வருவான். ஆனால் இப்போது பிபு தன்னந்தனியே யாரும் பிடிக்காமல் சைக்கிளை ஓட்டக் கற்றுக் கொண்டதன் பொருட்டு, தனியாக ஏரிக்கரை வரை சென்றுவர புறப்பட்டான். அந்த சாலையில் ஓரமாக தனது பிஞ்சு பாதங்களால் சைக்கிளை மகிழ்ச்சியுடன் அழுத்திக் கொண்டு சென்றான்.

இப்படி தனியே செல்லும் வேளையில், பிபுவின் கண்களின் இமைகள் இறகுகளை மூடி திறக்கும் ஒவ்வொரு முறையும், அப்பா கற்றுக் கொடுக்கும் போது சொல்லித்தந்த வழிமுறைகளையும், அப்போது நடந்த சுவாரசியமான நிகழ்வுகளையும் அசைப்போட்டுக் கொண்டு செல்லலானான்.

முதன் முதலாக பிபு சைக்கிளில் தனியே ஏறி ஓட்ட முயற்சி செய்த போது கீழே விழுந்தான். அப்போது நல்லவேளை எவ்வித அடியும் விழவில்லை. ஒரு வேளை அப்படி விழுந்த போது கொஞ்சம் அடி விழுந்து இருந்தால் கூட, நான் இப்படி சைக்கிள் முழுவதும் ஓட்ட கற்று இருப்பேனோ? தெரியவில்லை.

ச்ச, ச்ச… எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது? அப்படியே கால் தரையில் ஊன்றாமல் பறப்பது போலவே தோன்றுகிறது. வாவ், இப்போ டர்னிங் வருது உடனே பெல் அடிக்க மறக்கக் கூடாது; ட்ரிங், ட்ர்ங், ட்ரிங் … பெல் அடித்துவிட்டு சாலையின் இடது ஓரமாக பெருமிதத்தோடு சைக்கிளை ஓட்டிச் சென்றான்.

ஹா ஹா… இந்த இடத்திலேதான் அப்பா சைக்கிளை பிடித்து கொள்வதற்கு முன்பாகவே ஏறுகிறேன் என்று ஏறி, சைக்கிளில் ஏறியதும் இடமும் வலமுமாக சைக்கிளை ஆட்டி கீழே சாய்ந்து விழுந்தோம். அப்போது வலது முழங்காலில் கொஞ்சம் சிராய்ப்பும் ஏற்பட்டதே. “ப்பா, ப்பா…. என்ன எரிச்சல், இரண்டு நாளா வலியோடே நடந்தோம். எரிச்சல் வேறு. நல்ல வேளை அப்படி ஏற்பட்ட சிராய்ப்பு இப்போ தழும்பாக மாறியே போச்சு” என்று நினைத்துக்கொண்டு அந்த தழும்பு இருந்த இடத்தை ஒற்றை கையில் தடவி பார்த்தான்.

புதிதாக கற்றுக்கொண்டதால் பிபு சைக்கிளை ஓட்டும் போது நடு சாலையிலே ஓட்டிச் சென்றான். அப்படி செய்யக்கூடாது என்று பலமுறை அப்பா எச்சரிக்கையும் செய்திருந்தார். ஆனால் அது அவனுக்கு சைக்கிள் ஓட்டும் உற்சாக மிகுதியால் மறந்து திரும்ப திரும்ப சாலையின் நடுவே ஓட்டிகொண்டிருந்தான். அப்படி அந்த இடம் வந்ததும் பிபுவை ஒரு மௌனம் சூழ்ந்தது. 

ஒரு நாள் கற்றுக் கொண்டிருந்த போது பின்புறமாக ஏதோ இரு சக்கர வாகனம் வருகிற சத்தம் கேட்க, பிபு சைக்கிளை இடது ஓரமாக ஓட்ட ஆரம்பித்தான். பின்னர் அந்த வாகனம் அவனை கடந்து முந்தி முன்னேச் செல்வதை கண்டு, மீண்டும் சைக்கிளை நடு சாலைக்கு திருப்பினான். அப்போது இரண்டாவதாக பின்னே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் சர்ட், கிரீச்…என்று பிரேக் அழுத்தி டயர் தேய்ந்த சத்தம் கேட்டது. ஜெஸ்ட் மிஸ். இரண்டு வண்டிகள் ஒன்றன் பின்னாக ஒன்றாக வரும் போது சத்தம் ஒன்றாக மட்டுமே கேட்கும் போல என்பதை உணர்ந்தான். அந்த நபர் வேறு அப்பாவை திட்டிவிட்டு சென்றார். ச்ச, ச்ச அன்றில் இருந்துதான் சைக்கிளை மிகவும் கவனமாக ஓட்ட ஆரம்பித்தோம்ல. 

இவ்வாறாக அப்பா சொல்லிக் கொடுத்த எல்லா மந்திரங்களையும் தந்திரங்களையும் நினைவுக்கு கொண்டு வந்த வண்ணமாகவே பிபுவின் பயணம் பெரிய ஏரிக்கரை வரை தொடர்ந்தது. வீட்டிற்கு திரும்ப நினைத்து சைக்கிளை வட்டமிட்டுத் திருப்பினான்.

எதிபாராத விதமாக திடீரென்று பட்டென்று ஒரு சத்தம் காதுகளில் ஒலித்தது. பாதங்கள் அழுத்தும் பெடல்கள் கட்டுப்பாட்டை இழந்து இருந்தது. என்னடா இந்த சோதனை? பிபுவுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பா சொல்லிக்கொடுக்காத ஏதோ ஒன்று நடந்ததை எண்ணி அச்சமுற்றான். தனியாக வந்த அவனுக்கு சற்று திகிலாக இருந்தது.

பிபு சிறிதும் யோசிக்காமல் மறுகணமே சைக்கிளில் இருந்து குதித்து விட்டான். சைக்கிளின் கீழே சக்கரத்தை பார்க்க எப்போதும் செயினின் இருமுனைகளும் இணைந்து இருப்பதை பார்த்திருந்த பிபுவுக்கு இன்று ஒரு புதிய அனுபவம். சைக்கிளில் செயின் கட் ஆகி ஒரு முனை தரையை தொட்டும் மறுமுனை சைக்கிளில் சிக்கியும் இருக்கக் கண்டான். எப்படியாவது ‘தள்ளிக்கொண்டே வீடு வரை சென்று விடலாம்’ என்று ஆயத்தமானான். சைக்கிளின் செயின் அறுந்து விட்டதை உணர்த்த கட கட கட என்று சைக்கிளும் அழுது கொண்டே வீடு திரும்பியது. புதிதாக முளைத்த புதிருக்கு விடைத்தெரியாது பிபுவும் தேம்பி தேம்பி அழுதுக் கொண்டும் சைக்கிளை தள்ளிக் கொண்டும் சென்றான்.

பிபு அழுது தேம்பும் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பா, பிபு என்ன ஆச்சு, என்ன ஆச்சுப்பா! என்று படுக்கையறையில் அழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பிபுவை தட்டி அதட்டி எழுப்ப முயற்சித்தார். பிபுவின் தூக்கம் தெளிந்து, கனவு களைந்து போனது; எல்லாம் வெறும் கனவா! அல்லது கனவிலும் கனவா! இன்று அவன் தனியாக சைக்கிள் ஓட்டியதாக கண்ட அந்த கனவு பலிக்குமா அல்லது பலிக்காதா என்ற கேள்வியோடு படுக்கையை விட்டு எழுந்து ‘அப்பா, ஃபியூசிபெலஸை ஓட்ட போலாமா’ என்றான்.

சிறுகதையின் ஆசிரியர்

ப.பிரபாகரன் , திருச்சி

தூவானம் | சிறுகதை | கோ.ஆனந்த்

தூவானம் - கோ.ஆனந்த்

          தூறல் நின்றபாடில்லை.அலுவலக வாசல் ஒட்டிய சாலையோர மின்விளக்கின் இளமஞ்சள் ஒளியினால் தங்கத் துகள்களாய் சிதறிய தூறலின் அடர்த்தி குறையக் காத்துக்கொண்டிருந்தேன்.சிரமம் பார்க்காமல் குடையை பையில் போட்டுக் கொண்டு வந்திருக்கலாம்.ஆனால் இப்போதெல்லாம் தண்ணீர் பாட்டில் கூட கூடுதல் சுமையாகத் தெரிகிறது.வயதாகி விட்டால் உடல் கூட சுமை தான்.அலுவலகத்திலிருந்து பஸ் நிறுத்தம் ஒரு கிலோமீட்டராவது இருக்கும். நனைந்தபடியே ஓடி விடலாம்.ஆனால் நாளை வரும் தும்மலையும் ஜலதோஷத்தையும் யார் தாங்குவது?. சாலையில் வடியாமல் குளம் போல நிற்கும் தண்ணீர் வேறு பயமுறுத்தியது.இங்கேயே இப்படி இருந்தால் வீட்டருகே எப்படியிருக்கும்?அதுவும் ஏற்கனவே கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில்? நினைத்துப் பார்க்கவே பகீரென்றிருந்தது.தூறல் சற்றே குறைந்த நேரத்தில் கைப்பையையே குடையாக்கி விரைந்து சென்று பஸ்ஸைப் பிடித்து வீடு வந்து சேர்ந்தேன்.

          நினைத்தவாறே வீட்டின் வாசலில் கழிவு நீர் மழைநீருடன் கலந்து குளம்போல் தேங்கியிருந்தது.சாலையிலிருந்து வீட்டுக்குச் செல்ல செங்கற்கள் போட்டு மேடாக்கி வைக்கப் பட்டிருந்தது. அநேகமாக எங்கள் ஹவுஸ் ஓனர் நாராயணன் தான் அப்படி செய்திருக்க வேண்டும்.கொட்டும் மழையில் கம்பி மேல் நடக்கும் தெருக்கூத்தாடி போல் செங்கல் வழுக்கிவிடாமல் இருக்க பேலன்ஸ் செய்தவாறே நடந்து வாசலைக் கடந்து சென்றேன்.மழை இப்போதைக்கு விடுவதாய் தெரியவில்லை.கீழ் வீட்டுக் கதவு சாத்தியிருந்தது.நாராயணன் குடும்பத்தார் உறங்கியிருக்க வேண்டும்.குடும்பத்தார் என்ன குடும்பத்தார்?தம்பதியர் இருவர் மட்டுமே அவர்கள் குடும்பத்தில்.

          நாராயணன் சாருக்கு ஒற்றை நாடி. அதென்னவோ சொல்லி வைத்தாற்போல் அவருடைய மனைவி சூடாமணிக்கு இரட்டை நாடி. இவர்களின் ஒரே மகன் திருமணமாகி ‘யுஎஸ்ஏ’ வில் செட்டிலாகி விட்டிருக்க,இருவரும் தங்கள் ஒரே சொத்தான இந்த வீட்டின் மாடி போர்ஷனை வாடகைக்கு விட்டு,பிழைப்பையும்,காலத்தையும் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

         இந்த கழிவுநீர் பிரச்சனையால் நேற்று சாயந்திரத்திலிருந்தே நாராயணன் சாருக்கு இருப்புக் கொள்ளவில்லை. இருக்காதா பின்னே?வாசல் பக்கம் போகவே முடியவில்லை. மூக்கைத் துளைத்து உள்ளிறங்கியது கழிவுநீர் நாற்றம்.நாங்கள் மாடியில் குடியிருப்பதால் தப்பித்தோம்.

       குடித்தனக்காரர்களான எங்களுக்கு போக வர வீட்டின் இடதுபுற சுற்றுச் சுவரையொட்டி படிக்கட்டும், காம்பவுண்ட் கேட்டும்.சொந்தக்காரர் நாராயணனுக்கு கீழே விஸ்தாரமான ஹால் மத்தியில் வாசல் கதவும்,நேர் எதிரே காம்பவுண்ட் கேட்டும்.வீட்டின் வலதுபுறம் இருவீட்டாரின் கழிவுநீர்க் குழாய்கள் சுற்றுச்சுவரை ஒட்டிச்சென்று மாநகராட்சியின் பாதாளச் சாக்கடையில் இணைகின்றன.அங்கு தான் சிக்கல். இரண்டு நாட்களாக எங்கோ அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வீட்டிலிருநது வெளியேறும் இடத்தில் போடப்பட்டிருக்கும் சிறிய தொட்டி போன்ற அமைப்பின் மூடி வழியாக வழிந்து கொண்டிருந்தது.

      நாராயணன் அவரால் முடிந்தவரை குளியலறை மற்றும் கழிவறைகளில்  நிறைய நீர் வேகமாக ஊற்றிப் பார்த்தார்.எங்களையும் அவ்வாறே செய்யச் சொன்னார்.எல்லாம் சேர்ந்து இன்னும் அதிகமாக கழிவு நீர் வழிந்ததே தவிர அடைப்பு நீங்கியபாடில்லை.நல்ல வேளையாக எங்களுக்கு இடது புற வாசல் என்பதால் சிரமம் குறைவாக இருந்தது.எனினும் நாற்றத்திற்கு பயந்து எங்களுடைய படுக்கையறை சன்னல்களைத் திறக்க முடியாமல் உள்ளே வெந்து கொண்டிருந்தோம்.

          காலையில் பிரச்சினை பற்றி பேசிக்கொண்டிருந்த போது அவரிடம் “கார்ப்பரேஷனில் சொல்லி வைத்தால் வந்து சரி செய்வார்களே” என்றதற்கு.”வருவான்,ஆனா பிடுங்கிடுவானே” என்று முகம் கோணினார்.”வேற வழியில்லையே அடைப்பை சரி செஞ்சாகனுமே” என்றேன்.”அது எனக்குத் தெரியாதா” என்பது போல் லேசாக முறைத்துப்பார்த்தபடி ஒரு கையால் நெற்றியை அழுத்தியவாறே “கோவிந்தன் இருக்கானான்னு பார்க்கிறேன். எப்பேர்ப்பட்ட அடைப்பையும் எடுத்துடுவான்’என்று சொல்லிவிட்டு செல்போனைத் தேடி உள்ளே போனார்.நானும் கிளம்பி வந்து விட்டேன்.கோவிந்தன் கிடைத்தாரோ இல்லையோ தெரியவில்லை.அலுவலக வேலையில் இதைச் சுத்தமாய் மறந்திருந்தேன்.

       நான் காம்பவுண்ட் கிரில் கேட் திறந்த சத்தம் கேட்டு வெளியே வந்த நாராயணன், “மழையில மாட்டிக்கிட்டீங்களா.குடை கொண்டு போயிருக்கலாமே” என்றவர்,என் பதிலுக்கு காத்திராமல்.நல்லவேளை சார் கோவிந்தனைப் பிடிச்சிட்டேன். நாளைக்கு ஊருக்குப் போறதா இருந்தானாம். நம்ம வீடுன்றதால காலம்பற வர்றேன்னு ஒத்துகிட்டான்”  என்றார் வாயெல்லாம் பல்லாக.அவருடைய சந்தோஷத்தில் பங்கேற்கும் விதமாக நானும் ஒரு அசட்டுப் புன்னகை புரிந்துவிட்டு வந்தேன்.

       எப்படியோ பிரச்சனை சரியானால் நாளையாவது ஜன்னலைத் திறந்து வைத்து தூங்கலாம் என்றெண்ணி மாடிப்படி ஏறி மேலே போனேன். “என்னவாங்க?” என்ற மனைவியிடம், ஒரு ஆள ஏற்பாடு பண்ணிட்டாராம்.நாளைக்கு அடைப்பு சரியாகிடும்னு நினைக்கிறேன்.ஆனா அந்த ஆள நினைச்சாத் தான் பாவமா இருக்கு.இவர் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கப் போறார்.வேலையும் நல்லா வாங்குவார். காசும் தர மாட்டார்” என்று பெருமூச்செறிந்தவாறே சாப்பிட அமர்ந்தேன்.

     “சூடாமணி, கோவிந்தன் வந்தாச்சு”.நாராயணனின் குரல் ஞாயிற்றுக்கிழமை காலை காபியை ருசித்துக் கொண்டிருந்தவன்  காதில் விழுந்தது. வாசல் வந்து பார்த்தபோது வானம் தெளிவாய் தெரிந்தது. மழை சுத்தமாக விட்டிருந்தது.பரவாயில்லை வேலை கொஞ்சம் சிரமமில்லாமல் இருக்கும்.

        டிஃபன் முடித்து கீழிறங்கிச் சென்றேன். “அந்த பைப்ப கொண்டா சார்” என்றவாறே கழிவு நீர் பாதையில் திறந்து பார்க்கப் பொருத்தப்பட்ட மூடிகளைத் திறந்து அடைப்பு இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தார் கோவிந்தன். நான் மூக்கைப் பொத்தியவாறே அருகில் சென்றேன். “வா சார்,புதுசா குடி வந்துகீறீங்களா?” என்று வெற்றிலை வாயோடு சிரித்தவாறே கேட்டார். “ஆமாம்” என்று தலையசைத்தவாறே,நாற்றம் தாங்காமல் நழுவ முயன்றவனை,”பாலா சார் ஒரு நிமிஷம்”என்ற நாராயணன் குரல் தடுத்தது.”இந்தா கோவிந்தா பைப்” என்று அடைப்பு நீக்க உதவ ஒரு நீள பைப்பை கொடுத்து விட்டு என்னிடம் வந்தார்.

      “சார் கொஞ்சம் இப்படி வாங்கோ” என்று சற்று தள்ளி அழைத்துச் சென்று, “விடியற்காலைல ஒரு துக்க செய்தி. கண்டிப்பா போயாகனும்.நல்ல வேளயா மழை விட்டிருக்கு. போயிட்டு தலைய காட்டிட்டு வந்துட வேண்டியது தான்.இன்னைக்கு ஞாயித்துக்கிழமை. உங்களுக்கு லீவு தானே? கொஞ்சம் கூட இருந்து பார்த்துக்கங்க.எவ்வளவு நேரமானாலும் முடிக்கிற வரை விடாதீங்க.முடிச்சவுடன் ஐநூறு கொடுங்க.நான் 250, நீங்க 250.(ஐயோ இது என் லிஸ்ட்லேயே இல்லியே) மேல கேப்பான்.அவ்ளோ தான்னு கறாரா சொல்லிடுங்க” என்று சொல்லிக் கையில் தயாராக வைத்திருந்த 250 ரூபாயைக் கொடுத்தார்.பின் கோவிந்தனிடம் சென்று விஷயம் சொல்லி விடைபெற்றுக் கொண்டார்.

     வேறுவழியின்றி மேலே சென்று மனைவியிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு, அவள் முறைத்ததைக் கண்டும் காணாதது போல கடந்து வந்தேன்.

       இதனிடையே தன்  ஆராய்ச்சியெல்லாம் முடித்திருந்த கோவிந்தன் “சார் மேல,கீழ எல்லாம் சரியா இருக்குது.இந்த பக்கத்திலிருந்து தொட்டிக்குப் போற பைப்பிலயும் அடைப்பில்லை. தொட்டியிலிருந்து கார்ப்பொரேஷன் பைப்புக்கு போற வழியில தான் அடைச்சிகிட்டிருக்கு” என்று தன் முதல் கட்டத் தகவல் அறிக்கையை சமர்ப்பித்தார்.

     பிறகு அந்த தொட்டியிலிருந்து வெளியே செல்லும் குழாய் முனையை அடைப்பு நீக்கும் பைப்பை வைத்துத் துழாவிக் கண்டுபிடிக்க முயற்சித்தார்.ஆனால் அந்த தொட்டி முழுவதுமாக கழிவு நீர் தேங்கியிருக்க குழாய் முனையை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. “ஒரு பக்கெட் குடு சார்” என்று கேட்டு வாங்கி, தேங்கியிருந்த நீரை எடுத்து தோட்டம் பக்கம் ஊற்றினார்.”வேற வழியில்ல சார்.வெளிய ஊத்தினா அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க சண்டை போடுவாங்க.நீங்க தான் கொஞ்சம் பொறுத்துக்கனும்.நான் போறப்போ பினாயில் ஊத்திட்டுப் போறேன்” என்றார்.

        வேலையினூடே “சாருக்கு எத்தனை பசங்க?என்று கேட்டார்.நான் “ரெண்டு.பையன் ஒண்ணு.பொண்ணு ஒண்ணு” என்றேன்.”நமக்கு ஒரே ஒரு புள்ளைங்க.பன்னென்டாவது படிக்கிறான்”என்றார்.

       அவர் வெறுங்கையுடன் பக்கெட்டால் கழிவு நீரை இறைத்து ஊற்ற ஊற்ற ,மேலும் நாற்றம் அதிகமாகிக் கொண்டே போனது.ஒரு கட்டத்தில் கையால் எட்ட முடியாத அளவு நீர் இறங்கி விட, சட்டென்று அந்த சிறு தொட்டியில் இறங்கி பக்கெட்டை நிரப்பி மேலே வைத்துவிட்டு ஏறி அந்த நீரைத் தோட்டத்தில் ஊற்றினர்.இதே போல நாலைந்து முறை செய்தபின் நீர் சற்று வடிந்து தரை தெரிந்தது.அதற்குள் அவர் உடலெங்கும் கழிவுநீர் அபிஷேகம்.

‘குடிக்க கொஞ்சம் தண்ணி குடு சார்”

       உபயோகமற்ற பழைய தண்ணீர் பாட்டில் ஒன்றைத் தேடி எடுத்து அதில் நீர் பிடித்து வந்து, அவர் கையை நீட்டி வாங்க முற்படுமுன் தரையில் வைத்து எடுத்து கொள்ளச் சொன்னேன்.

        தண்ணீர் குடித்து முடித்ததும், அடைப்பு நீக்கும் பைப்பைக் குழாயினுள் நுழைக்க முயன்றார்.வளைவாக இருந்த பைப் செங்குத்தான தொட்டியில் இறங்கி வெளியே செல்லும் குழாயினுள் நுழைய அடம் பிடித்தது.வளைவை நீக்கினால், குழாயிலிருந்து வெளியே வந்தது. குழாயினுள் நுழைத்தால் வளைவாக சுருண்டு கொண்டு மேலே நுழைய மறுத்தது.பாவம் இப்படி ஒருத்தராக கஷ்டப்படுவதற்கு,அவர் பையனையும் கூட்டி வந்திருந்தா கொஞ்சம் உதவியா இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

      ஒருவழியாக வளைத்து, நெளித்து குழாயினுள் நுழைத்து குத்த ஆரம்பித்தார்.சிறிது நேரம் கழித்து, களைப்பாய் “எங்கயோ இடிக்குது சார்.மேல போக மாட்டேங்குது.மணி என்னா சார்? என்று கேட்டார்.

” இரண்டு” என்றேன்.

      ‘சரி சார்.சாப்பிட்டு வந்து பாக்கிறேன்.ஒரு நூறு ரூபா தாங்க” என்று சொல்லிவிட்டு கைகால் கழுவ பின்பக்கம் சென்றார்.

    “ஐயோ இந்த நூறு எந்த கணக்கில சேரும்?நாராயணன் இதப் பத்தி சொல்லவே இல்லையே’என்று மனதிற்குள் புலம்பியவாறே நூறு ரூபாய் கொண்டு போய் கொடுத்தேன்.

       நான் மறுபடி கீழிறிங்கி வந்த பார்த்தபோது,பார்சல் சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட்டு விட்டு, வாசல் படிக்கட்டில் அமர்ந்து பீடி புகைத்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தும்.பீடியை அவசரமாக எறிந்து விட்டு வேலையை ஆரம்பித்தார்.

         சாப்பிட்ட தெம்பில் நான்கைந்து முறை வேகமாக குத்தியதில் பைப் அடைப்பை நீக்கி சரசரவென வேகமாக உள்ளே நுழைந்தது.”சார் தொறந்துகிச்சி.நீங்க போய் நிறைய தண்ணி ஊத்திப் பாருங்க” என்றார்.நானும் அவ்வாறே ஊற்றி விட்டுப் பார்க்க தண்ணீர் எங்கும் நிற்காமல் வேகமாக வெளியேறி நிம்மதியளித்தது.

    கோவிந்தன் தான் உபயோகப்படுத்திய பொருட்களையெல்லாம் கழுவி வைத்துவிட்டு, திறந்த தொட்டிகளையெல்லாம் மூடினார்.பின் தரையைக் கழுவி, பினாயில் தெளித்து விட்டு குளித்து முடித்துக் கிளம்பினார்.

       அவரிடம் ஐநூறு ரூபாயை நீட்டினேன்.”என்னா சார் எவ்ளோ வேல வாங்கிச்சி பாத்த இல்ல?” போட்டு குடு சார் என்றார்.’இன்னுமா ? சாப்பாட்டுக்கான  காசையே நாராயணனிடம் எப்படி பேசி வாங்கறதுன்னு தெரியல’ என்று எண்ணியவாறே “அவ்வளவு தாம்பா அவர் குடுக்க சொன்னாரு.வேணுன்னா அவர் வந்தப்பறமா வந்து கேட்டுப் பாரு”என்றேன்.உடனே பேச்சை மாற்ற வேண்டி “ஊருக்கு போறதா இருந்தீங்களாம்?” என்றேன்.

“ஆமா சார்.புள்ளயப் பாக்க போலாம்னு இருந்தேன்.சார் கூப்பிடவே வந்தேன்.புள்ளய நான் நாளைக்கு கூட போய் பாத்துக்கலாம்.பாவம் இந்த நாத்தத்தில நீங்க எவ்வளவு நாள் இருப்பீங்க?” என்றார் கரிசனத்துடன்.

“புள்ள உங்க கூட இல்லையா?படிக்கிறான்னு சொன்னீங்க’

         “ஆமா சார்.ஊர்ல படிக்கிறான்.இங்க இருந்தா,என்ன வேலைக்கு கூப்பிடறவங்க புள்ளையையும் கூட்னு வாயேன் ஒத்தாசைக்குங்கிறாங்க. ஒவ்வொரு நாள் எனக்கு உடம்பு முடியல வேற ஆள் வச்சி பாத்துக்குங்கன்னு சொன்னா ஏன் உம் புள்ள செய்ய மாட்டான்? அவன அனுப்பேன்றாங்க சார். எதுக்கு சார் அந்த புள்ளைக்கு இந்த நாத்த பொழப்பு?இது நம்மோடேயே போவட்டும்னு தான் என் மாமியார் ஊட்டுக்கு அனுப்பி நிம்மதியா படிக்கட்டும்னு விட்டுட்டேன்.காலேஜ் போய் படிக்கனும்றான்.படிடானு சொல்லியிருக்கேன்.நாளைக்குப் போய் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன். வரட்டா சார்”.

      யாரோ என்னைப் பளாரென அறைந்தார் போலிருக்க அவருக்கு “சரி’ என்பதாக தலையைக் கூட அசைக்க முடியாமல்   கூனிக்குறுகி உறைந்து போயிருந்தேன் நான்.

“சொட்,சொட்’ என்று மறுபடியும் தூறல் போட ஆரம்பித்தது.

சிறுகதையின் ஆசிரியர்

கோ.ஆனந்த்

கனவு காணுங்கள் | முனைவர் நா.சாரதாமணி

கனவு காணுங்கள்

கனவு காணுங்கள்

       உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கனவுகள் உண்டு. சிலர் அந்தக் கனவுகளைப் பகல்கனவாகவே வைத்திருப்பர். ஆனால் சிலர் அந்தக் கனவை நனவாக்கிக் கொள்வர். அப்துல்கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று கூறினார். அவர் கூறியது இளைஞர்களின் இலட்சியக்கனவு. “உறங்கும்போது வருவது கனவல்ல. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு” என்றார்.  விவேகானந்தர் கூறினார் “நீ மீண்டும் மீண்டும் எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்றார். இலக்கின் நன்மையைக் கனவு காணுங்கள். வெற்றி அடைந்தால் எவ்வாறு இருக்கும் என்பதை உங்கள் மனநிலையில் மகிழ்ச்சியை உணர்ந்து பாருங்கள்.

           ஒருவரின் ஆழ்மனதில் இலட்சிய விதை விழுந்து விட்டால், அது வளர்ந்து மரமாகி பலன் தருவதை எந்தச் சக்தியாலும் தடுக்க இயலாது. மாற்ற முடியாது. உங்களின் வெற்றியைக் கனவு காணுங்கள். மகிழுங்கள். அது நாளடைவில் உங்களின் உறுப்புகள் அதை நனவாக்கும்.

கனவின் பலன்

             பழங்காலத்தில் ஆடைகள் தைப்பது என்றால் ஊசியை எடுத்து அதை நூலில் கோர்த்து ஆடையின் ஒருபுறம் ஒருவர் பிடித்துக்கொள்ள மறுபுறம் ஒருவர் துணியைத் தைப்பார் ஊசி முழுமையாக உள்ளே சென்று மறுபக்கம் வெளியே வரும். அதன் அடிப்பகுதியில் துவாரம் ஒன்று இருக்கும். இவ்வாறுதான் பழங்கால ஆடை தைப்பது நடைபெற்றது. சிலகாலம் சென்றது. ஒருவர் தன்மனைவிக்கு தையல் இயந்திரம் ஒன்றை தயார் செய்தார். ஆனால் அதற்கு ஊசியைக் கண்டறியவில்லை. பல மாதங்களாக அதைப்பற்றிய சிந்தனையாகவே இருந்தார். ஊசி முழுமையாக உள்ளே செல்லாமல் எப்படி தைப்பது? அவருக்கு உறக்கமே வரவில்லை. ஊசி எவ்வாறு அமைப்பது என்று விழித்திருக்கும் நேரத்தில் எல்லாம் அதே யோசனையாக இருந்தார். இரவெல்லாம் கண்விழித்திருந்த அவர் அதிகாலையில் உறங்கி விட்டார். அப்போது அவருக்கு கனவு ஒன்று வந்தது. அந்தக் கனவில் ஒரு தேவதை ஈட்டி ஒன்றை கையில் பிடித்துக் கொண்டு “என்ன உறங்கிக் கொண்டு இருக்கிறாய். இன்னும் ஊசியைக் கண்டு பிடிக்காமல் என்ன செய்கிராய். கண்டு பிடிக்கவில்லை என்றால் இந்த ஈட்டியால் உன்னை குத்தி கொன்று விடுவேன்” என்று நெஞ்சை பிளக்க வந்தது. அப்போது அந்த ஈட்டியின் குத்தும் முனையில் ஒரு துவாரம் இருந்தது. இதைப்பார்த்த அவர் பயந்து உறக்கம் களைந்து எழுந்து விட்டார். எழுந்த அவர் அந்தப் பயம் சென்றதும் நிதானமாக அந்த கனவை நினைவுக்கு கொண்டு வந்தார். அவ்வேளையில் அவரின் மூளையில் ஒன்று தோன்றியது. தையல் இயந்திர ஊசியைக் கண்டுபிடித்து விட்டார். எவ்வாறு இது சாத்தியம். அவர் கனவில் கண்ட அந்தத் தேவதையின் கையில் இருந்த ஈட்டியின் முனைப்பகுதியில் துவாரம் இருந்தது. அந்த துவாரம் ஊசியின் முனையில் அமைக்கப்பட்டது. அதனாலே இயந்திர ஊசி கிடைத்து விட்டது.

     கவனியுங்கள்! அவருடைய யோசனை சிந்தனை கனவு மூலமாக ஒரு வெற்றியை தந்தது. அவரின் இலக்கை அடையும் வெற்றி கனவாகவே வந்து விட்டது.

 கட்டிட நிபுணர்களைப் போன்று செயல்படுங்கள்

     கட்டிட நிபுணர்களைக் கவனியுங்கள். அவர்கள் ஒரு அரண்மனை அந்தப்புரம் அரசவை என்றாலும் ஒரு பெரிய வீடு பங்களா எதுவாக இருந்தாலும் முதலில் திட்டமிட்டு அவற்றை தெர்மாகோல் போன்றவற்றால் அமைத்து கண்முன்னே வைத்துவிடுவார்கள். மற்றவர்கள் கனவு காணுவார்கள். ஆனால் இவர்கள் அதனையும் கண்முன்னே வைப்பார்கள். அவற்றைச் சுற்றிப் பூங்காக்களும் அமைக்கப்பட்டு இருக்கும். அதனுள்ளே தண்ணீர்க்குழாய்கள் செல்லும் வழி மின்சாரம் செல்லும் வழி கழிவுநீர் மழை நீர் எனச் செல்லும் வழி இவ்வாறு எத்தனை அறைகள்? தரை எந்தக் கற்களால் அமைக்க வேண்டும்.  எந்த இடத்தில் சோபா வைப்பது? சுவர்களுக்கு என்ன வண்ணம் பூச வேண்டும் போன்ற அனைத்தையும் செய்து முடித்து கண்முன்னே வைத்திருப்பார்கள். இவ்வாறு வெற்றியடையப் போகும் நீங்களும் உங்களின் எதிர்கால வாழ்வை  வசந்தமான சமூகத்தை அகக்கண்களில் காணுங்கள். கற்பனையாக உருவத்தை செய்து கொள்ளுங்கள். உங்களின் இலக்கை அடைய நீங்கள்தான் செயல்பட வேண்டும். உழைக்க வேண்டும். உங்களின் உழைப்பு மட்டுமே உங்கள் கனவை நனவாக்க முடியும். எளிமையாக எந்த வெற்றியும் கிட்டாது. அவ்வாறு கிட்டும் என்று நீங்கள் நம்பினால் அது அழிவையே கொடுக்கும்.

இலவசம் – எளிமையாகக் கிடைப்பவை ஆபத்தானவை

             இலவசமாக கிடைக்கிறது என்று எவற்றையும் பெறவேண்டாம். படித்த கதை ஒன்று, ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் இருந்தார். அவர் தனது நிலத்தை உழுது பயிர் செய்து தன்குடும்பத்தை காத்து வந்தார். அறுவடை முடிந்து விட்டது. சிலமாதங்கள் ஆகும் மீண்டும் பயிர் செய்வதற்கு. அந்த இடைப்பட்ட காலத்தில் நிலம் உழுது போட்டிருக்கும். அந்த நேரத்தில் விவசாயி தன்னுடைய நிலத்தில் உள்ள மண்புழுக்களை ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு சந்தையில் விற்பதற்காக சென்றார். செல்லும் ஒரு காட்டு வழியில் மரங்கள் அடர்ந்து காணப்பட்டன. அந்த மரத்தில் ஒரு பறவை அமர்ந்திருந்தது. அது இந்த உழவரிடம் கேட்டது “எங்கு செல்கிறாய்? கூடையில் என்ன? என்றுது. அவர் “கூடையில் மண்புழுக்கள் உள்ளன. அவற்றை விற்பதற்காகச் சந்தைக்குச் செல்கிறேன்” என்றார். அந்தப் பறவை “எனக்கு மண்புழுக்களைத் தருகிறாயா? அதற்குப் பதிலாக என் மென்மையான இறகுகளைத் தருகிறேன்” என்று கூறியது. அந்த உழவரும் சரி என்று புழுக்களைக் கொடுத்து விட்டு இறகுகளைப் பெற்றுக்கொண்டு சந்தையை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார். இதேபோன்று ஒவ்வொரு வாரமும் அந்தப் பறவை உழவனிடம் புழுக்களைப் பெற்றுக்கொண்டதால்  வேறு எங்கும் பறந்து செல்லவில்லை. மரத்தின் கூட்டிலேயே இருந்தது. ஏனென்றால் விவசாயி புழுக்களைக் கொடுத்ததால் உழைக்க வேண்டிய தேவை இல்லை.

    விலங்கினம் என்றால் நடக்க வேண்டும். பறவை என்றால் பறக்க வேண்டும். மனிதன் என்றால் உழைக்க வேண்டும் இவையே அவற்றின் ஆரோக்கியம். இது மனிதனுக்கும் விளங்கவில்லை. இதை அறியாத அந்த பறவை மிகவும் சந்தோஷப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு அதன் உடலும் பறக்க மறுத்தது. அந்தப் பறவை ஒவ்வொரு முறையும் அதன் இறகுகளை பிடுங்கி கொடுத்துக்கொண்டே இருந்தது. நாளடைவில் அதன் உடலில் பறப்பதற்கு இறக்கைகளில் இறகுகளே இல்லை. உழவருக்கு புழுக்களுக்குg பதிலாக கொடுப்பதற்கும் இறகுகள் இல்லை. இனி பறக்கவும் முடியாது, பறவைக்கு இனி உணவும் கிடைக்காது. எளிமையாக கிடைக்கிறது என்று எண்ணி செய்த இந்தச்செயல் அந்த பறவையின் உயிரையும் இழக்கச் செய்தது.

           பறந்து சென்று தானே இரையைத் தேடிச்சென்று உண்டு நீர்நிலையைக் கண்டறிந்து நீரை பருகிவிட்டு சுதந்திரமாக வானத்தில் பறந்து தென்றல் காற்றை நுகர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருந்த பறவையானது  எளிமை இலவசம் என்று நம்பி உழைப்பைக் கைவிட்டதால் உயிர் விட்டது. எனவே எளிமையும் வேண்டாம் இலவசமும் வேண்டாம் உழைப்பே நிரந்தரமானது. உன்னதமானது. மற்றவையெல்லாம் எப்படி வந்ததோ அப்படியே சென்று விடும். நீங்கள் இதனை உணர்ந்து செயல் படுங்கள்.

மாறுபட்ட கருத்துக்களையும் பரிசீலனை செய்யலாம்

        உங்களுக்கு மற்றவருடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறதா? ஒன்றும் தவறில்லை. நீங்கள் அவருடன் இன்னும் நெருங்கிப் பழகுங்கள். உங்கள் மீது அல்லது உங்களின் செயல்மீது நம்பிக்கை கொண்டவரால் மட்டுமே உங்களிடம் மாறுபட்ட கருத்துக்களைக் கூற முடியும். அவர்கள் கூறும் கருத்துக்களைச் செவிமடுத்து எந்த காரணத்தால் அவ்வாறு கூறினார்கள் என்பதை அவரின் கண்ணோட்டத்திலிருந்தே கவனியுங்கள். அப்போதுதான் கருத்தின் உண்மைநிலை விளங்கும். யாரிடமும் எதிர்மறையான கருத்துக்களையோ சொற்களையோ முன்வைக்காதீர்கள். அது வாதத்தில் கொண்டு விட்டுவிடும். பொதுவான ஒன்றைப்பற்றி கருத்துக்களைக் கூறுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. எனவே அனைவரின் கருத்துக்களையும் கேட்டு பரிசீலனை செய்து கொள்ளுங்கள். எத்தனை பேர் எவ்வளவு முக்கியமான நபர்கள் கருத்துக்களைக் கூறியிருந்தாலும் உங்களின் மூளை எவ்வாறு கூறுகிறதோ அதுவே தீர்க்கமான முடிவு என்பதை உணருங்கள். ஆதலால் முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும்.

பலவீனம், வெளிக்காட்டலாகாது

          ஒருவர் உங்களிடம் ஒரு கருத்தைக் கூற முன்வருகிறார் என்றால் முதலில் நீங்கள் பேசாதீர்கள். அவருக்கு வாய்ப்பளியுங்கள். அவர் முழுவதுமாகப் பேசி முடிக்கும்வரை அமைதியாக இருந்து கவனியுங்கள். அவரின் கண்களையே கவனித்தீர்கள் என்றால் அவர் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறாரா? என்பதை உங்களால் கணிக்க இயலும். சிலர் உங்களிடம் அவரின் காரியங்களை நடத்திக்கொள்ள நடிப்பாகப் பேசலாம். எப்பொழுதும் உங்களின் பலவீனத்தை வெளிக்காட்டலாகாது. மற்றவர்க்கு அது தெரிந்தால் உங்களை செல்லாக்காசாக மாற்றிவிடுவார்கள். பலவீனத்தைக் கொண்டே வீழ்த்தி விடுவார்கள்.

பலவீனத்தால் மாண்ட நந்திவர்மன்

        நந்திவர்மபல்லவ அரசர் ஆட்சி செய்து வந்தார். அவர் மாபெரும் ஆற்றல் மிக்கவர். அவருடன் யார் போர் செய்தாலும் தோற்றுவிடுவர். இவர் எந்த நாட்டிற்கு போர்தொடுத்துச் சென்றாலும் வாகை சூடிக்கொள்வார். போர்முனையில் நேருக்கு நேராக நின்று இவரை யாராலும் வீழ்த்த முடியவில்லை. அந்த அளவிற்கு ஆட்சி செய்து மக்களைக் காக்கும் மன்னர் இவர்.

      இந்த மாமன்னருக்கு அறம் பற்றிய பாடல்களைக் கேட்பதில் மிகவும் ஆர்வம் அதிகம். இந்த நந்திவர்ம பல்லவனை வீழ்த்தவே முடியவில்லையே! வேறுவழியில் இவனை தோற்கடிக்க நினைத்தனர். மன்னனின் உறவின சகோதரர்கள். எனவே நந்திவர்மனின் பலத்தை தெரிந்து கொண்ட அவர்கள் அவனுடைய பலவீனம் என்ன? என்பதை ஆராய்ந்தனர். மன்னன் அறம் பற்றிய பாடல்களைக் கேட்கும் ஆர்வத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். முதலில் அறம் பற்றிய நூறு பாடல்களைப் புலவர்களைக் கொண்டு எழுதச் செய்தனர். பின்னர் அதனை வாசித்துக்காட்ட ஒரு புலவனை அனுப்பி வைத்தனர். அப்புலவன் நந்திவர்மனை வணங்கி தான் அறப்பாடல்களை எழுதியுள்ளதாகக் கூறினான். நந்திவர்மனும் அவற்றை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில், புலவனை வாசிக்குமாறு கேட்டார். அதற்கு அப்புலவன் ஒரு நிபந்தனை விதித்தான் “நூறு பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலையும் இந்தப் பந்தலின் கீழ் அமர்ந்து கேட்க வேண்டும். அடுத்த பாடலுக்கு அடுத்து அமைக்கப்பட்டுள்ள பந்தலின் கீழ் சென்று அமர்ந்து கொள்ள வேண்டும்” என்றான். அதற்கும் நந்திவர்மன் ஒத்துக்கொண்டான். முதலாவது பந்தல் அரண்மனை வாயிலில் அமைக்கப்பட்டு நூறாவது பந்தல் மயானத்தில் முடிக்கப்பட்டிருந்தது. புலவரும் பாடல்களை ஒவ்வொன்றாக வாசிக்க தொடங்கினான். மன்னனும் ஒவ்வொரு பந்தலின் கீழும் அமர்ந்து அந்தப் பாடல்களைக் கேட்டான், அவர் இறங்கிச்சென்றதும் பந்தலானது தீப்பற்றி எரிந்தது. இவ்வாறே அனைத்துப் பந்தல்களும் எரிந்தன. மன்னர் நூறாவது பாடலைக் கேட்க, நூறாவதாக அமைக்கப்பட்டிருந்த பந்தலின் கீழாக அமர்ந்து பாடலை கேட்டார். பாடலைக் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே பந்தல் தீப்பற்றி எரிந்தது. அதில் மன்னனும் எரிந்து இறந்துவிட்டான் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. கவனியுங்கள் நந்திவர்மனைப் பலத்தால் வெல்ல முடியாத அவர்கள் அவரின் பலவீனத்தை அறிந்து கொண்டு அதன்மூலம் வீழ்த்தி விட்டனர். எனவே உங்கள் பலத்தை வெளியே காட்டுங்கள். பலவீனத்தை அல்ல. கனவு காணுங்கள். கனவு மெய்ப்பட உழையுங்கள். வெற்றி நிச்சயம்.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

9.அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

10.செயல்பாடு உங்கள் மதிப்பை  உயர்த்தும்

11.நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்

12.அமைதியான அணுகுமுறை

13.விருட்சத்தின் விதை – வெற்றி

14.உங்களை வித்தியாசப்படுத்துங்கள்

கற்பனை என்பது என்ன? கற்பனையின் வகைகள் யாவை?

கற்பனை


            கலையுலகில் விளக்குவதற்கு மிகவும் அரியதாய் உள்ள மொழிகள் பகுதிகளில் ஒன்று கற்பனை என்பது. உலக மொழிகள்  பலவற்றையும் சார்ந்து பிறந்த பல்வேறு இலக்கியங்களைத் திறனாய்வு செய்யும் பல்வேறு அறிஞர் ‘கற்பனை’ என்பதனை வரையறை செய்ய முயன்றுள்ளனர். ஆயின் எந்த ஒரு வரையறையும் குறிப்பிட்ட கவிஞர் சிலர்க்கோ அல்லது சில வகை இலக்கியங்களுக்கோ பொருந்துவதாய் உள்ளதேயன்றிக் கற்பனையின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாய் முழுமையும் செம்மையும் நிறைந்ததாய் அமையவில்லை. ஆயினும் கற்பனை பற்றிய பல்வேறு வரையறைகளும், ஏதேனும் ஒரு வகையில் அல்லது பல வகையில், கற்பனையின் வண்ணத்தையும் கற்பனை ஊற்றெடுத்துப் பொங்குதற்குரிய தன்மையையும் வெளிப்படுத்துவதாய் நிலைக்களத்தின் விளங்குகின்றன. கற்பனை பற்றிய ஒரு முழு வரையறை திறனாய்வு உலகில் இன்னும் எழவில்லையாயினும் இது வரையும் எழுந்துள்ள வரையறைகள் பலவும் கூடி, கற்பனை பற்றி நமக்கு ஒரு பெரிய சிந்தனையை எழுப்புவனவாய் உள்ளன.


            இனி கற்பனையாவது யாது என்பது பற்றி ஒருவாறு காண்போம். கவிஞன் கண்ட காட்சி அல்லது உணர்ந்த உணர்வு அல்லது ஆழத் தோய்ந்த அழகின் கோலம் அவனது படைப்பின் வாயிலாக வெளிப்பட்டு விளங்குகின்றது. உருவாக்கப்பட்ட பாட்டைப் பயிலும்போது அழகுடையது என்றும், ஆற்றல் மிக்கது என்றும், அருமையாக அமைந்தது என்றும், அற்புதமாக உள்ளது என்றும் நாம் பாராட்டி மகிழுகின்றோம். கவிஞன் தன் படைப்புக் கலையில் வெற்றி பெறும்போது இவ்வாறு நாம் பாராட்ட முடிகின்றது. கவிஞன் வெற்றி பெறவில்லையெனில் பாட்டு நன்றாக இல்லை என்றும் சுவை குறைந்துவிட்டது என்றும் வெறுங்கற்பனை என்றும் குறை கூறி ஒதுக்கிவிடுகின்றோம். ஆகவே, பாட்டு அழகாக உள்ளது என்றோ நன்றாக அமையவில்லை என்றோ ஏதோ ஒரு வகையில் நம்மால் கண்டுகொள்ள முடிகின்றது. கவிஞன் படைத்த பாட்டு நம் உள்ளத்தைத் தொட்டு உணர்வுக்கு விருந்தாக சொல்லடுக்கு வித்தையாகக் கழிவதையும் நோக்கிக் கவிஞனின் அமைவதையும் மாறாக உள்ளத்தைத் தொடாது வெறுஞ் வெற்றி தோல்விகளை நம்மாற் கணிக்க முடிகின்றது. எனவே கவிஞன் ஒருவனின் பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் இவ்வெற்றி தோல்விகளே கலையுலகக் கட்டளைக் கற்களாக அமைகின்றன. வெற்றியைப் பற்றிய சிந்தனையே இப்போது நமக்கு வேண்டுவது. பாட்டுக் கலையில் கவிஞன் எதன் துணை கொண்டு வெற்றி பெறுகின்றான்? சொல்லாலா? பாட்டின் பொருளாலா? ஓவியத்தாலா? உணர்ச்சிப் பெருக்காலா? உவமை, உருவகம் போன்ற அணிகளாலா? தான் கண்டதைப் பிறருக்குக் காட்ட வல்ல ஆற்றலாலா?


            சொல்லும் பொருளும் ஒலிநயமும் பாட்டின் அடிப்படைக் கூறுபாடுகள்; உடலுக்கு உயிர் அமைந்தது போலப் பாட்டுக்கு உயிராக உள்ளவை. இவையும் கவிஞனின் வெற்றிக்கு இன்றியமையாக் கருவிகளே; ஆயினும் படைப்போன், பயில்வோன் ஆகிய இருவர் தம் கூட்டு முயற்சியாக இயங்கும் கலையுலகில் கவிஞன் வாகை சூடுவதற்கு இவை மட்டும் போதா, இவற்றுக்கு அப்பாலும் ஒன்று வேண்டும். அதுதான் கற்பனை, கற்பனையாவது கவிஞன் தான் உணர்ந்த உணர்ச்சியையோ பெற்ற அழகின்ப அனுபவத்தையோ அல்லது கண்ட காட்சியையோ நாமும் முழுமையாகவும் தெளிவாகவும் உணர்ந்தோ அனுபவித்தோ கண்டோ அமைத்துக்காட்டும் அரிய கலைத்திறனாகும். இவ்வுண்மை இன்புறுமாறு கவிதையல்லாத ஏனைய இலக்கிய வகைகளுக்கும் பொருந்தும்.

கற்பனையும் பயனும்

            கவிஞன் அழகை வியந்து நோக்கிப் புதுப்புது இன்ப அனுபவம் பெறுவதில் குழந்தை போன்றவன். அழகு. இயற்கை உலகிலும் உண்டு; மனிதர்கள் நடமாடும் செயற்கை உலகிலும் உண்டு; இயற்கையை மனிதன் அனுபவிக்கும் அனுபவத்திலும் உண்டு. இம் மூவகை அழகிலும் ஈடுபட்டுத் தன்னை மறந்து இன்ப அனுபவ உலகில் வாழவல்ல பேராற்றல் அல்லது கலையியல்பு கவிஞனுக்கு இயல்பாக வளர்ந்திருக்கிறது. அம்மறந்த நிலையினின்றும் மீண்டும் விழிப்பு நிலைக்கு வந்தவுடன் அந்த அழகையும் அனுபவத்தையும் ஒருமுகப் படுத்தியும் ஒழுங்குபடுத்தியும் தன் உள்ளம் விரும்பியவாறு. கூட்டியோ குறைத்தோ சீராக்கி, சொல்லோவியங்களாகத் தீட்டிக் காட்டும்போது, அவனிடம் இயல்பாக அமைந்த இயல்பூக்கக் கலையுணர்வு புதிய ஒளியும் மெருகுங் கொண்டு கற்பனைத் திறனாய் இயங்கிப் பயன் விளைவிக்கின்றது எனலாம்.

            கவிஞன் தன் கற்பனையின் துணைகொண்டு நம்மைப் புதியதோர் உலகிற்கு அழைத்துச் செல்லுகின்றான். இதுகாறும் நாம் காணாத அழகையெல்லாம் முழுமையாக நமக்குக் காட்டி இன்புறுத்துகின்றான்; தெளிவாகக் காணாத பொருள்களைத் தெளிவாகக் காணச் செய்கின்றான்; எங்கெங்கோ பிரிந்து கிடந்த இயற்கைக் கூறுபாடுகளை நம் மனக் கண்முன் கொணர்ந்து ஒன்றுபட நிறுத்தி நம்மை உணர்ச்சிப் பெருங்கடலில் மூழ்கச் செய்கின்றான்; மண்ணிலே நின்று விண்ணை அளக்கின்றான்; விண்ணிலே பறந்து மண்ணுக்கு வருகின்றான்; அருவப் பொருள்களை உருவப் பொருள்களாக மாற்றுகின்றான்; உருவப் பொருள்களை அருவப் பொருள்களோடு இணைக்கின்றான்; பொருள்களையும் நிகழ்ச்சிகளையும் உற்று நோக்கி அவற்றின் உண்மைத் தன்மைகளை ஒளியுடன் படைத்துக் காட்டுகின்றான்; முரண்படுவது போலத் தோன்றுகின்ற இருவேறு காட்சி களுக்கிடையே ஓர் ஒற்றுமையைக் காட்டி நம் உள்ளத்தை நெகிழச் செய்கின்றான்; உருவிலும் வடிவிலும் சிறியதாயிருக்கும் பொருள்களைப் பெரிய தாக்குகின்றான்; பெரியதாயிருக்கும் பொருள்களைச் சிறிதாக்கிக் காட்டுகின்றான்; அனைத்துக்கும் மேலாக எல்லையற விரித்து பரந்து கிடக்கும் இயற்கைப் படைப்புக்குள் அமிழ்ந்துள்ள அமரத் தன்மையை உணர்த்தி நம் உள்ளம் உருக வைக்கிறான்.


கற்பனை வகைகள்

            வின்சென்டர் என்னுந் திறனாய்வாளர் கற்பனையை மூவகையாகப் பிரிக்கின்றார். படைப்புக் கற்பனை, இயைபுக் கற்பனை, கருத்து விளக்கக் கற்பனை என்பன அவை ”தன்னுடைய அனுபவத்தில் கண்ட பண்புகளைக் கவிஞன் ஒருவன் எத்தகைய கட்டுப்பாடும் இல்லாமல் தானே தேர்ந்தெடுத்து, அவற்றை ஒன்றாக இணைத்துப் புதியதொரு முழு நிறைவான வடிவத்தைப் படைத்துக் காட்டுந் திறனே படைப்புக் கற்பனையாகும். உணர்ச்சி கருத்து வகையிலோ காட்சி வகையிலோ வகையிலோ ஒரு நிகராகத் தான் கண்டவற்றை இணைத்துக் காட்டுவது இயைபுக் கற்பனை எனலாம் ஆன்மிகத் தன்மை அல்லது ஆன்மிகச் சிறப்பை உணர்ந்ததால், பொருள்களைச் சித்திரித்துக் காட்டும்போது அவ்வியல்பு பொருந்தியுள்ள பகுதிகளையோ அவ்வியல்புகளையோ புலப்படுத்தும் வகையில் கற்பனை செய்வது கருத்து விளக்கக் கற்பனையாகும்.

            இனி, படைப்புக் கற்பனை, இயைபுக் கற்பனை, கருத்து விளக்கக் கற்பனை என்ற மூன்றுக்கும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.


படைப்புக் கற்பனை

            நாம் ஒரு பொருளைக் காணும்போது மேற்போக்காகக் கண்டு மகிழும் அளவிலே நின்றுவிடுகின்றோம். ஆயின் கவிஞர் அதே பொருளைக் காணும்போது அழகை முழுமையாகவும் தெளிவாகவும் காணுகின்றனர்.  அதன் கற்பனையின் துணைகொண்டு காட்டவும் வல்லவராகின்றனர். பெற்றுவிடுகின்றோம். ஆயின் கவிஞர் அந்த அழகை மறவாது. போற்றி வேறோர் இடத்தே மற்றொரு பொருளின் அழகைக் காணும்போது இருவகை அழகுணர்ச்சியையும் ஒன்றாக்கிப் புதியதோர் அழகின்ப உலகத்தைப் படைத்துக் காட்டுகின்றனர். கண்முன்னே நாம் காணும் பொருள்களைக் கொண்டே கைபுனைந்தியற்றாக் கவின் பெருவனப்பைக் கண்டு மகிழ்ந்து அத்துடன் அமைதி வல்லவராகின்றனர். சான்றாக,


பாலாழி மீதுபடர்ந்த வெண்ணெய் – ஒரு

பந்தா யுருண்டு திரண்டதுவோ

மேலா யுலகில் ஒளிசெயவே-ஈசன்

விண்ணகமிட்ட விளக்கிதுவோ?

                                                        (மலரும் மாலையும்-312)


பொன் மரம் காய்த்த கனியிதுவோ? இந்தப்

பூமகள் ஆடும் கழங்கிதுவோ?

கன்மன முங்களி கொள்ளக் – கவினொளி

காட்டி விளங்கும் மதியிதுவோ?

                                                                      (மலரும் மாலையும் 314)

என்னும் கவிமணியின் பாடலில் படைப்புக் கற்பனை அமைந்துள்ளதனை அறியலாம்.


            கவிமணி நிலத்திலே நிற்கின்றார்; மேல் நோக்கி வானத்தை அண்ணாந்து பார்க்கின்றார்; தம் கற்பனைச் சிறகு கொண்டு மண்ணுக்கும் விண்ணுக்குமிடையே சிறிது நேரம் பறந்து பார்க்கின்றார். இயற்கையில் நிகழும் விந்தையை முழுமையாகக் காண முயல்கின்றார் பிண்ணையும் படைத்தான் என அவர் நெஞ்சம் நினைக்கின்றது. மண்மகள் என்று அழைத்து மகிழ்கின்றோம். மண்ணைப் படைத்தவன் தானே மண்ணை விண்ணிலே தெரிவதோ வட்ட நிலா. சிறிது நேரத்திற்கு முன் ஒரு பந்தாகத் தெரிந்தது. இப்போதோ மண்ணிலி விண்ணுக்குச் சென்ற கழங்கு அதுபோலத் தெரிகின்ற யார்? அப்படியென்றால் விண்ணிலே கழங்கை விட்டெறிந்தவர் இத்துணை அருமையும் பெருமையும் வெண்மையும் குளுமையுங் கொண்ட ஒரு கழங்கை மண்மகள் அன்றி வேறு எவர்தாம் விடடெறிய முடியும்! ஆகவே இந்தப் பூமகள் கழங்கிதுவோ” எனக் கவிமணி பாடி இன்புறுகின்றார்.


            எங்கெங்கோ பரவிக் கிடக்கும் அழகெல்லாம் ஒன்றுகூடிப் பெருவனப்பாக நம் மனக் கண்முன் காட்சியளிப்பது போல நாமும் உணருகின்றோம். கவிஞனின் கூரிய கண்கள் மண்ணிலிருந்து விண்ணையும் விண்ணிலிருந்து மண்ணையும் விரைந்து நோக்க வல்லன.” என்னும் சேக்ஸ்பியரின் கருத்தையும் நினைந்து மகிழுகின்றோம்.


            எனவே இதுகாறும் கூறியவற்றால், தன்னுடைய அனுபவத்தில் கண்ட பண்புகளைக் கவிஞன் ஒருவன் எத்தகைய கட்டுப்பாடும் இல்லாமல் தானே தேர்ந்தெடுத்து அவற்றை ஒன்றாக இணைத்துப் புதியதொரு முழு நிறைவான வடிவத்தைப் படைத்துக் காட்டும் திறனே படைப்புக் கற்பனையாகும் என்பதனை உணரலாம்.


இயைபுக் கற்பனை

            காட்சி, உணர்ச்சி, கருத்து முதலியவற்றால் ஏதோ ஒரு வகையில் ஒன்று போலத் தெரிவனவாய்த் தன் மனத்திற்குப் பட்டவற்றை ஒன்றோடு ஒன்று இயைய வைத்து அழகுறச் காட்டுவது இயைபுக் கற்பனையாகும். இதற்கு எடுத்துக்காட்டாக

“வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்

சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி

யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல்,

வேரொடு மரம் வெம்ப, விரிகதிர் தெறுதலின்

அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள்வெஃகிக்

கொலையஞ்சா வினைவரால் கோல் கோடியவனிழல்

உலகுபோ லுலறிய வுயர்மர வெஞ்சுரம்


                                                       (கலித்தொகை, பாவைக்கலி, பா-10, வரி 1-7)

என்னும் பாடலைக் குறிக்கலாம்.


            பெருங்கடுங்கோ என்னும் புலவர் என்றோ ஒருநாள் வறியவன் ஒருவனின் இளமையானது வலுவின்றிப் பொலிவிழந்து வாடியிருந்ததைக் கண்டிருத்தல் வேண்டும். தன்பால் செல்வம் சேர்ந்தும் தன்னைச் சார்ந்தவர்களுக்கு ஒன்றும் ஈயாது இரக்கம் கொள்ளாது ஒரு பயனும் இன்றிக் கீழ் மகன் ஒருவன் வாழ்நாள் கழித்தலைக் கண்டிருத்தல் வேண்டும். தீயவன் ஒருவன் எவருக்கும் அடங்காது. ஒழுக்கம் பற்றிக் கவலை கொள்ளாது, தீவினைகளைச் செய்து, புகழ் கெட்டுப் போனதைப் பார்த்திருத்தல் வேண்டும். கொலைத் தொழிலுக்கும் அஞ்சாது, குடிமக்களின் குரலுக்குச் சிறிதும் செவிசாய்க்காது, தன்னைச் சுற்றியிருக்கும் அமைச்சர்களின் பேச்சைக் கேட்டு நெறியின்றி வரிவாங்கிக் கொண்டு செங்கோல் வளையப் பெற்ற மன்னவன் ஒருவனைக் கண்டிருத்தல் வேண்டும். இக் காட்சிகள் அனைத்தும் புலவரின் உள்ளத்தே விரைந்து சென்று ஆழ ஊன்றி நின்று உணர்வினை எழுப்பியிருத்தல் வேண்டும். இங்ஙனம் ஊன்றப்பட்ட உணர்வுகளுக்கே இடனாகிவிட்ட புலவர், பாலை வழியில் வேறொருநாள் வாடிய கொம்புகளையும், நிழலின்றி நிற்கும் மரங்களையும், மரங்கள் வெம்பி நிற்கும் நிலையினையும், நீரற்றுப் போய் முற்றும் உலர்ந்துவிட்ட கொடிய நிலத்தையும் கண்டுள்ளார். கண்ட இக்காட்சி. முன்னே இவர் பெற்ற உணர்வுகளோடு இயையத் தொடங்குகின்றது. இதன் விளைவே இயைபுக் கற்பனையாக வெளிப்பட்டுள்ள மேற்கூறிய பாடலாகும்.

கருத்து விளக்கக் கற்பனை

            இயற்கையாக நடக்கும் ஒன்றினிடத்துப் புலவர் தாம் நினைத்த கருத்து ஒன்றை ஏற்றி வைத்துக் கற்பனை செய்து பாடுவது கருத்து விளக்கக் கற்பனை ஆகும்.

            மனித வாழ்க்கையில் இறப்பும் பிறப்பும் வளர்ச்சியும் கேடும் வானத்தில் ஒளி வீசிக் கொண்டிருந்த திங்களைப் பார்த்த போது மாறிமாறி வருவதனைப் புலவர் ஒருவர் நன்கு உணர்ந்தார். பார்த்தார். பின், வானத்தில் இயல்பாகத் திரியும் அந்நிலவை, தம் அதற்கும் வளர்ச்சியும் தேய்வும் இருப்பதை நீடு நினைந்து கருத்திற்கு ஏற்ப, வளர்தல் தேய்தலாகிய வாழ்க்கை நிலையினை உலகத்தவர்க்கு உணர்த்துவதற்காகவே இங்கும் அங்கும் திரிவதாகக் கற்பனை செய்கின்றார்.


“தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்

மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்

அறியா தோரையும் அறியக் காட்டித்

திங்கட் புத்தேள் திரிதரும்”  (புறநானூறு, 27, வரி: 11 – 14)

கற்பனையும் வெறுங் கற்பனையும்

            ஆழமான பொருத்தம் நிறைந்த சிந்தனை, உணர்ச்சி ஆகியவற்றிற்கு வற்றாத கலை விருந்தாய் அமையும் கற்பனை போலவே, ஆழமற்ற, பொருத்தக் கூறுகள் குறைந்த, சிந்தனை உணர்ச்சி ஆகியவற்றிற்குச் சுவையான கலை விருந்தை அளிக்காததாய், வேடிக்கைப் போக்கும், விளையாட்டும் நிறைந்த கற்பனையும் உண்டு. இத்தகைய கற்பனை வெறுங்கற்பனை எனப்படும்.

            புலவரின் உணர்ச்சி வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் அமையும்போது, ஆழ்ந்த பண்புகளற்ற, நிலையற்ற வெறும் கற்பனைகள் தோன்றும். புலவரின் உணர்ச்சி ஆழமுடையதாகவும், உயர்வுடையதாகவும் அமையும்போது நிலைபெற்ற விழுப்பமுடைய கற்பனைகள் தோன்றும்’17 என்கிறார் டாக்டர் மு.வரதராசனார். இதனால், ஆற்றல் மிக்க கற்பனையை ஒருவகையாகவும், ஆற்றல் குறைந்த கற்பனையை ஒருவகையாகவும் கொள்ள முடிகிறது. ஆற்றல் குறைந்த கற்பனை சுவை உள்ளதாக அமையலாம்; கற்பனைக்கு முரண்படாததாகவும் இருக்கலாம். ஆயின் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் இன்பத்தை ஊட்டுவதாய் அமரத்தன்மை வாய்ந்த கூறுகள் உள்ளதாய் இருக்க இடமில்லை.


            நல்ல கற்பனைக்கும் வெறுங்கற்பனைக்கும் இடையே உள்ள வேற்றுமைகளைக் கோல்ரிட்ஜ் என்னும் திறனாய்வாளர் எடுத்துரைத்துள்ளார். ‘கற்பனையை நான் இரண்டு வகையாகப் பாகுபடுத்துகிறேன். ஒன்றை முதன்மையானது என்றும். மற்றொன்றை இரண்டாம் நிலையானது அல்லது ‘சார்புக்’ கற்பனை என்றும் கூறலாம். மனிதனுடைய புலனுகர்ச்சிகள் அனைத்திலும், முதன்மையானதாகவும் உயிர்த்துடிப்பு மிக்க ஆற்றலாகவும் விளங்குவது முதனிலைக் கற்பனையேயாகும். வரம்பற்ற “நானிலிருந்தும் படைப்பெனும் வரம்பிலாச் செயலிலிருந்தும் வரம்புடைய மனத்திற்கு என்றுமுள படைப்பாற்றலைத் திரும்பக் கொண்டு வருவதே முதனிலைக் கற்பனையாகும்.


            இரண்டாம் நிலைக் கற்பனை, முதனிலைக் கற்பனையின் எதிரொலியாகும். தன்னுணர்வுமிக்க உள்ள உறுதியோடு அது எனினும், இயங்கும் நிலையில் முதனிலைக் உடனுறைகிறது. கற்பனையோடு ஒப்புமையுடையதாகவே அது தோன்றுகிறது; இயங்கும் முறையின் அளவிலும் அது சிறிது வேறுபடுகிறது. அது வெறுங் கற்பனை என்பது இதற்கு எதிர் நிலையில் உள்ள எத்தகைய பொருளையும் உணர்த்துவது அன்று. ஆனால், நிலைபேறான இயல்புகளையும் தெளிவான எல்லைகளையும் வெறுங்கற்பனை என்பது உடையது. உண்மையில் நினைவாற்றலின் ஒரு செயல் வகையே அன்றி வேறில்லை. அச்செயல்வகை, காலத்தையும் இடத்தையும் வென்றதாக அமைகிறது. உள்ளவுறுதியின் அனுபவத்தால் அறியப்படுகின்ற இயற்காட்சியால் அது மாற்றமுறுகிறது.


            ஆயின் கோல்ரிட்ஜின் கருத்து வெளிப்படுவதற்கு முன்னர் வெறுங்கற்பனை (Fancy) பற்றி மாறுபட்ட கருத்துக்களும் இருந்திருக்கின்றன. இக்கருத்துகளை ஒட்டியே, வெறுங்கற்பனை என்பதனை விளையாட்டுப் போக்கோடும், வேடிக்கையோடும் கூடிய கற்பனையாகக் கொள்கின்றோம்.


தொல்காப்பிய உவமை இயலும் கற்பனையும்


            தொல்காப்பியர் உவமை இயலில் கற்பனையோடு தொடர்புடைய சில செய்திகளையும் கூறியுள்ளார். ஒரு பொருளைப் பற்றிக் கவிஞர் பாடும்போது அதனை வேறு ஒன்றோடு ஒப்ப வைத்துச் சிந்தனைக்கும் உணர்வுக்கும் விருந்தாக அமையுமாறு செய்வதும், கற்பனை ஆற்றலின் வண்ணங்களில் ஒன்றாகக் கொள்ளலாம். உபமானம், உபமேயம் இரண்டையும் இணைக்கும்போது அவ்விரண்டுக்கும் பொதுத்தன்மைகள் அமையக்கூடும். அப்பொதுத் தன்மைகள் தொழில், பயன், வடிவம், நிறம் என்னும் நான்கின் அடிப்படையில் அமையலாம் என்பது தொல்காப்பியரின் கருத்தாகும்.


‘வினை பயன் மெய் உரு என்ற நான்கே

வகை பெற வந்த உவமத் தோற்றம்” (உவமையியல்-1)

            உவமையானது இந்த நான்கின் அடிப்படையில் அமையும்போதே கவிஞரின் கற்பனைக்கு இடமுண்டு என்பதைப் பின்வரும் சான்றுகளால் அறியலாம்


“புலி போலப் பாய்ந்தான்” வினையாகிய பொதுத் தன்மையில் எழுந்த உவமை.


“மாரியன்ன வண்கை’ பயனாகிய பொதுத்தன்மையில் எழுந்த உவமை.


‘”துடிபோலும் இடை” – வடிவாகிய பொதுத் தன்மையில் எழுந்த உவமை.


“தளிர்போலும் மேனி-நிறமாகிய பொதுத்தன்மையில் எழுந்த உவமை.


தொல்காப்பியர் கருத்துப்படி, மேற் கூறிய நான்கும் கட்புலன் ஆகும். (கண்ணுக்குத் தெரிவன).


            இனி, கண்ணுக்குப் புலனாகா வண்ணம், ஆனால், செவிக்கும், நாவிற்கும், மூக்கிற்கும், தொடுபொறிக்கும் (மெய்க்கும்) மனத்துக்கும் புலனாகும் உவமைகளும் உண்டு.


செவிப்புலனாவது ஓசை -“குயில் போன்ற மொழி’ என்பது போல்வன.


நாவிற்குப் புலனாவது கைப்பு, காய்ப்பு முதலிய சுவை – “வேம்பு போலக் கைக்கும்’ என்பது போல்வன.

மெய்யினால் அறியப்படுவன வெம்மை, தண்மை முதலாயின-“தீப்போலச் சுடும்” என்பது போல்வன


மூக்கால் அறியப்படுவன நறு நாற்றம் தீ நாற்றம்-“ஆம்பல்  நாறுந்துவர் வாய்” (குறுந்தொகை 300) என்பது போல்வன.

மனத்தால் அறியப்படுவன  இன்பம், துன்பம் முதலியன

 “தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு” (குறள் : 1107)


            ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ் என்பார் கற்பனை என்ற சொல்லுக்கு வழங்கி வரும் பொருள்களைக் குறைந்தது ஆறு ஆகப் பிரிக்கலாம் ‘உருவகத்தையும் என்கிறார். அவ்வாறு பிரிக்கும்போது. உவமையையும் பயன்படுத்துவோர். குறிப்பாக மிக அற்புதமான முறையில் பயன்படுத்துவோர் கற்பனை கருதப்படுகின்றனர் எனக் குறிப்பிடுகின்றார்.

            ரிச்சர்ட்ஸின் இக்கருத்துகள் தொல்காப்பியரின் உவமை இயல் கருத்துகளோடு ஒப்ப வைத்து எண்ணத் தக்கனவாகும். ஒரு பொருளையும் அதற்கு உவமையாகக் கவிஞர் காணும் ஒன்றையும் நாம் நன்கு அறிந்து மகிழுமாறு அமைக்கும் அணிவகை உவமை எனலாம். பொருளையும் உவமையையும் வேறுபடுத்தி அறியாது இரண்டையும் ஒன்று போலவே காணும் கலைப்பார்வையிலிருந்து பிறப்பது உருவகம் எனலாம்.


            ‘மதிபோலும் முகம்’ என வரும் போது முகம் என்னும் பொருளும், மதி என்னும் உவமப் பொருளும், வேறுவேறாய் நிற்க, போலும் என்னும் ஓர் உவம உருபினால் உவமைத்தன்மை உருவாகின்றது. இதனையே முகமதி என்னும்போது போலும் என்னும் உவம உருபு – மதிக்கும் முகத்திற்கும் இடையே வேற்றுமையைக் காட்டுகின்ற உவம உருபு – மறைந்துவிடுகின்றது. முகத்தையும் மதியையும் ஒன்றென்றே காணுகின்ற ஒரு வகைக் காட்சி அமைந்துவிடுகின்றது. எனவே உருவகம் என்பது செறிவுற வைக்கப்பட்ட உவமையாகும் என விளங்குகின்றது. எனவே கற்பனை முறையில் பயன்படுத்தப்படும் உவமைக்கும் உருவகத்திற்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை உண்டென்று அறியலாம். உருவக இயல் என்ற ஒன்றைத் தனியே அமைக்காது 3 இயல் ஒன்றையே அமைத்து உருவக முறையிலும் வரும் உவமையியலிலேயே தொல்காப்பியர் சில செய்திகளை கூறியுள்ளது ஈண்டு எண்ணத்தக்கது.


            உவமை இயலில் உவமை அணியின் அமைப்புப் பற்றித் தொல்காப்பியர் சொல்லும் சில செய்திகளும் இலக்கியப் படைப்பாளரின் கற்பனையோடு தொடர்புடையனவாகும். இனி, அவற்றைக் காண்போம். வினை, பயன், மெய், உரு என்பனவற்றுள் ஏதேனும் ஒன்றால் மட்டுமே உவமை அமைய வேண்டும் என்பது இல்லை; ஒன்றுக்கு மேற்பட்ட பலவற்றாலும் அமையலாம். சான்றாக;


“இலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்று”

(அகநானூறு, கடவுள் வாழ்த்து வரி 9)

என்னும் உவமையில், வடிவு நிறம் ஆகிய இரண்டு பற்றியும் உவமை அமைந்துள்ளது.
            உவமை அணியே ஐவகை விகற்பம் கொண்டு வரும் என்று தொல்காப்பியர் கூறுவது கற்பனை வகையில் அணிக்குள்ள சிறப்பிடத்தைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. இனி நூற்பா வருமாறு:


“உவமைப் போலி ஐந்தென மொழிப.’ (உவமையியல் 24)


இளம்பூரணர் இதற்கு உரை கூறும் போது,


‘அவையாவன இதற்கு உவமையில்லை எனவும், இதற்கிதுதானே உவமை எனவும் பல பொருளிலும்உள்ளதாகிய உறுப்புகளைத் தேர்ந்தெடுத்துக் இதற்குவமையாம் எனவும் பல கொண்டு சேர்த்தின் பொருளினுமுளதாகிய கவின் ஓரிடத்துவரின் இதற்குவமையாம் எனவும், கூடாப் பொருளோடு உவமித்து வருவனவும் என விரித்துரைக்கின்றார்.

            மேற்கூறிய விளக்கத்தின் வண்ணம் அமைந்த உவமை அணியின் அமைப்புகளைப் புறநானூறு போன்ற இலக்கியங் களிலும் தண்டி அலங்காரம் போன்ற இலக்கணங்களிலும் முடிகிறது. சான்றுகளை இனிக் காண்போம்;


“நின்னோரன்னோர் பிறரிவணின்மையின்.

மன்னெயின் முகவைக்கு வந்திசிற் பெரும.”  (புறநானூறு, 373, வரி: 33,34)


என்னும் பகுதியில் இதற்கு உவமை இல்லை” என்பதாகிய உவமையின் விகற்பத்தைக் காண்கின்றோம்.


“திருமருவு தண்மதிக்குஞ் செந்தா மரையின்

விரைமலர்க்கு மேலாந்தகையால் கருநெடுங்கண்

மானே யிருளளகஞ் சூழ்ந்த நின்வாண் முகம்

தானே யுவமை தனக்கு.’

 (தண்டியலங்காரம், பொருளணியியல், பொது நீங்குவமை)


என்னும் பாட்டில் ‘இதற்கு இது தானேயுவமை’ என்னும் உவமை விகற்பம் காணப்படுகின்றது.


“நல்லார்கள் நல்ல வுறுப்பாயின தாங்கள், நாங்கள்

எல்லா முடனாதுமென் றன்ன வியைந்த வீட்டாற்

சொல்வாய் முகங்கண் முலைதோளிடை யல்குல் கைகால்

பல்வார் குழலென் றிவற்றாற்படிச் சந்தமானாள்.”

            என்னும் பகுதியில் பல பொருளினும் உளதாகிய உறுப்புக்களைத் தெரிந்தெடுத்துக் கொண்டு சோத்தின் இதற்கு உவமையாம் என்னும் முறைமை உள்ளது.


“எல்லாக் கமலத் தெழிலுந் திரண்டொன்றின்

வில்லேர் புருவத்து வேனெடுங்கண் – நல்லீர்!

முகம் போலுமென்ன முறுவலித்தார் வாழும்

அகம் போலு மெங்களகம்.”

(தண்டியலங்காரம், பொருளணியியல், அபூதவுவமை.) என்னும் பகுதியில், பல பொருளினும் உளதாகிய கவின் ஓரிடத்துவரின் இதற்குவமையாம் என்னும் உவமை விகற்பத்தைக் காணுகின்றோம்.

“வாரா தமைவானோ வாரா தமைவானோ

வாரா தமைகுவன் அல்லன் மலைநாடன்

ஈரத்துளின்னவை தோன்றின் நிழற்கயத்து

நீருட்குவளை வெந்தற்று” (கலித்தொகை: 41)


என்னும் பாட்டில் கூடாப் பொருளோடு உவமித்துப் பாடும் முறைமை உள்ளது.’ ஒரு பொருளைப் பாடும்போது அஃது இன்னது என வெளிப்படையாக அன்றிக் குறிப்பாகத் தெரியுமாறு பாடுவதும் உண்டு. அங்ஙனம் பாடும்போது உபமேயப் பொருளுக்கு ஒத்த உபமானப் பொருளை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு உபமேயப் பொருளை நாம் உய்த்து உணருமாறு செய்வர். உவமையில் அமையும் இவ்வுத்தி கற்பனைக்கு விருந்தாக அமையும். தொல்காப்பியர்,


“உவமப் பொருளின் உற்ற துணருந்

தெளிமருங் குளவே திறத்தியலான. (உவமையியல்-20)


எனக் கூறும் போது, உவமப் பொருளால் உற்றதை உணருதல் ஆகிய உவமையைச் சுட்டுகின்றார். இளம் பூரணர் இதற்குத் தரும்
சான்றுகள் வருமாறு:


“ஐதேய்ந் தன்று பிறையுமன்று

மைதீர்ந் தன்று மதியு மன்று

வேயமன் றன்று மலையு மன்று

பூவமன்றன்று சுனையு மன்று

மெல்ல வியலும் மயிலு மன்று

சொல்லத் தளருங் கிளியு மன்று” (கலித்தொகை 55)


“கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன்

செயலெழுதித் தீர்ந்த முகந்திங்களோ காணீர்

                                                (சிலப்பதிகாரம், கானல் வரி 11)


            இவ்வாறெல்லாம் உவமையைப் பற்றிய பல செய்திகளை நாம் அறிந்து கொள்ளுமாறு தொல்காப்பியர் உவமையியலை’ அமைத்ததன் காரணம் இலக்கியப் படைப்பாளரின் கற்பனையில் உவமைக்குரிய சிறப்பிடம் பற்றியேயாகும். எனவே, உவமையியல் வாயிலாகத் தொல்காப்பியர் கற்பனைத் திறன்கள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுகின்றார் எனக் கொள்ளலாம்.

நன்றி

இலக்கியத் திறனாய்வு, டாக்டர் சு. பாலச்சந்திரன்

டிம்மி | சிறுகதை

டிம்மி முனைவர் க.லெனின்

      இடுப்பில் சொருகியிருந்த சட்டையை எடுத்துவிட்டான். முழுக்கைச் சட்டையைக் கொஞ்சமாய் சுருட்டி விட்டுக்கொண்டான். அப்பாடா என்றிருந்தது ராசுவுக்கு. எப்படியோ வேலை கிடைச்சிடுச்சி. இனிமேல் குடும்பத்த ஓட்டிடலாம். பெங்களூருக்கு வேலை தேடி வந்தன். ஐடி கம்பெனியில வேல கிடைச்சிடுச்சு. ஒரு வருஷமாவது ஒரே கம்பெனியில வேல பாக்கனும். ஏதாவது காரணத்தனால வேலைய விட வேண்டிய சூழ்நிலை வந்துடுது. இதுல என் மனைவிக்குதான் அதிக கோபம். நிரந்தரமா ஒரு வேலையில இருக்க மாட்டிங்களான்னு அடிக்கடி கேட்பா.. என்ன பன்றது. எல்லாம் என் தலைவிதி. மனசு நிறைவாத்தான் இருந்தது. இன்டர்வியூக்கு வந்துததுல காலையிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை. வயிறு வேற கிள்ளியது. வயிற்றுக்கு ஏதாவது டீயையோ அல்லது காப்பியையோ இறக்கினால் நல்லா இருக்குமுன்னு தோணுச்சி. எனக்கு நேரே இருக்கும் காப்பி ஷாப்பிற்குள் நுழைந்தேன்.  அந்த நேரத்தில் அனைத்து நாற்காலிகளிலும் ஆட்கள் உட்காந்திருந்தனர். யாரேனும் எழுந்திருந்தால் உடனே போய் உட்காந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் ராசு. அப்போது ஒரு நாற்காலியிலிருந்து ஒருவர் எழுந்து போகவே, ராசு உடனடியாக அந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

       அது இரண்டு நாற்காலிகள் கொண்ட டேபிள். ராசுக்கு எதிரே இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் ஏதோ சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அந்நேரத்தில் வெயிட்டர் ராசுவிடம்,

“சார் என்ன சாப்பிடுறீங்க…” என்றான்

“காபி மட்டும். ம்ம்.. அப்புறம் ஒரு கிளாஸ் சுடுதண்ணி” என்றான் ராசு.

தொலைபேசியில் வந்த அழைப்புக்கு பதில் கொடுக்க தயாரானான் ராசு. வெயிட்டரும் ராசுவுக்கு நேரெதிரே உட்காந்திருக்கும் இளைஞனிடம்,

“சார் உங்களுக்கு வேற எதாவது வேண்டுமா?” என்றான். அவனும் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டே,

“ஒரு கப் காபி” என்றான்.

        கொஞ்ச நேரத்தில் வெயிட்டர், இருவருக்கும் காபியை மேஜையின் மீது அவரவருக்கு எதிரே வைத்தான். இரண்டு காபி கப்பிலிருந்தும் ஆவி பறந்தது. காபியின் மனம் மூக்கை சுண்டியிழுத்தது. இருவரும் ஒரே நேரத்தில் காபி டம்ளரை பிடித்தனர். மூக்கிற்கு கொண்டு வந்து முகர்ந்து பார்த்தனர். கொஞ்சம் கீழே இறக்கி வாயில் வைத்து சிறியதாய் உறிஞ்சினார்கள். மீண்டும் டம்ளர் மேஜையின் மீது ஒரே நேரத்தில் வைத்தனர். மீண்டும் இருவரின் நினைவுகளும் வேறுவேறு பக்கம். மீண்டும் காபியை ஒரே நேரத்தில் உறிஞ்சுகிறார்கள். இருவரின் செய்கைகளும் ஒரே மாதிரியாகவே இருந்தது. அவசர காலத்தில் இவைகளையெல்லாம் யார் பார்த்து ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். அந்தக் கடையில் வருவதும் போவதுமாய்  வியாபாரம் சூடு பிடித்துக்கொண்டிருந்தது.

     ராசு அப்பொழுதுதான் கவனித்தான். தன்னெதிரே அமர்ந்திருப்பவனும் தன்னை போலவே காபியை உறிஞ்சுவதும் வைப்பதுமாகவே இருக்கிறானே..

       அவனும் இதையேத்தான் நினைத்திருந்தான். இருவரும் ஒரே சமயத்தில் நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டனர். இரண்டு பேர் முகத்திலும் எந்தவொரு சலனமும் இல்லாமல் பொம்மை மாதிரி பார்த்துக்கொண்டனர். அந்த இரண்டு பார்வைகளுக்கும் அர்த்தங்கள் நிறையவே இருப்பதாகத் தோன்றியது.

    ராசுவின் மனதில் பெரும் போராட்டமே நடந்தது. சின்னதா புன்னகைப்பதா… அல்லது சிரிப்பதா… இல்லன்னா ஹாய்.. ன்னு சொல்லலாமா? என்று பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தான். இப்போது எதிரில் உட்காந்து இருப்பவனே முதலில் புன்னகைத்தான். ராசுவும் பதிலுக்குப் புன்னகைத்தான்.

“ஹாய்… ராசு! எப்படி இருக்க?” எதிரில் அமர்ந்திருப்பவன் கேட்டவுடன் ராசுவுக்கு மூச்சே நின்றுவிடும் போலாகி விட்டது. பதில் சொல்ல நா எழவில்லை. திக்கி தினறிப்போனான். முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது.  எப்படியோ,

“நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?” என்றான் ராசு.

“ம்.. நானும் நல்லா இருக்கேன். நீ எங்க இங்க? என்றான் அவன்.

“இன்டர்வியூக்கு வந்தேன்”

“என்னாச்சு”

“வேலை கிடைச்சிடுச்சி. வர்ற மண்டேயிலிருந்து ஜாயின் பண்ணிக்க சொல்லியிருக்காங்க..”

“எங்க தங்கியிருக்க”

“இனிமேலுதான் வீடு பாக்கனும்”

“சரிடா வீட்டுக்கு வா.. ரெண்ட்டுக்கு வீடும் பாத்துத் தரன்”

“இல்ல.. ஊருக்கு போகலாமுன்னு இருக்கன். நாளை மறுநாள்தான் பெங்களூர்க்கு வருவேன்”

“சரி.. அப்ப வரும்போது எங்க வீட்டுக்கு வா” என்று தன்னுடைய மேல் பாக்கெட்டில் இருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து ராசுவின் கையின் கொடுத்தான்.

“சரி ராசு, அப்ப நான் கிளம்புறேன். பாக்கலாம்!” என்று சொல்லிவிட்டு அந்த காபி ஷாப்பை விட்டு வெளியேறினான் அவன்.

அவன் என்னவோ நார்மலாத்தான் பேசினான். ஆனால் ராசுதான் ஒவ்வொரு வார்த்தையும் அளந்து அளந்து பேசினான். இன்று நடந்தது அவனுக்குக் கனவு போல் இருந்தது. உண்மையாலுமே ராசு பூரித்துப்போனான்.

     பேருந்து பயணத்தின் போது ஜன்னல் ஓரம் சீட்டைப் பிடித்துக்கொண்டான். காற்று சுகமாய் மனதை வருடியது. காபி ஷாப்பில் என் எதிரே அமர்ந்திருந்தவன் என்னுடைய சின்ன வயசு நண்பன்தான். பேரு பாலமுருகன். நாங்களெல்லாம் அவனை பாலுன்னுதான் கூப்பிடுவோம். ரொம்ப நல்லவன். பழையதை அசைப்போட்டுக்கொண்டான்.  இப்போது பழச நினைச்சு பார்க்கிறதுல ஒரு சுகம் இருந்தது ராசுவுக்கு. நினைச்சு பாக்கனுமுன்னும் தோனிச்சு அவனுடைய மனசு.

     அப்ப நாங்க ஐஞ்சாவது படிச்சிட்டு இருந்தோம்.  எங்க கிளாஸ்ல பசங்க இருபது பேரு. பொண்ணுங்க பதினைஞ்சு பேரு. மொத்தம் முப்பத்தி ஐஞ்சு. நான் எல்லாத்துக்கிட்டேயும் பேசுவன். ஆனா எனக்கு உயிர் நண்பன்னா.. அது பாலமுருகன்தான். அவனை எனக்கு அவ்வளவு புடிக்கும். அவனுக்கும் அப்படித்தான். எப்பவுமே நாங்க ரெண்டு பேரும் ஒன்னாதான் சுத்துவோம். வாத்தியாரு கூட எஙகள இரட்டையர்கள்ன்னு சொல்லுவாரு. நான் மத்த பசங்க கூட பேசறது பாலுவுக்குச் சுத்தமா புடிக்காது. ஏன்னு கேட்டா, நீ என்னோட உயிர் நண்பன்டா… என்பான். அவனும் மத்த பசங்க கூட அவ்வளவா வச்சிக்க மாட்டான். எங்களோட நட்பு யாரு கண்ண உறுத்துச்சின்னு தெரியல.

      அன்னிக்கும் வழக்கம் போல நானும் பாலுவும் வகுப்புல உட்காந்து வாத்தியாரு நடத்தின கணக்க போர்டுல பாத்து எழுதிட்டு இருந்தோம். வாத்தியாரும் வெளியில நின்னு யாரு கூடயோ பேசிட்டு இருந்தாரு. நான் எழுதிய கணக்கு தப்பாயிடுச்சு. அதை அழிக்கனுமுன்னு என்னுடைய பையில கைய விட்டு இரப்பரை தேடினேன். இரப்பர் என்கிட்ட இல்ல. பாலுகிட்ட கேட்டேன். அவனும் அவனுடைய பையிலிருந்து தேடி ஒரு இரப்பரை என்னிடம் கொடுத்தான்.  பாலுவிடமிருந்து வாங்கிய இரப்பரை உற்றுப்பார்த்தேன். அது என்னோட இரப்பர். போன வாரம் நான் தொலைத்தது. இரப்பருக்குப் பின்னால் R என்ற என்னோட பெயரின் முதல் எழுத்துப்  போடப்பட்டிருந்தது. போன வாரம் தொலைந்து போன இரப்பரை வகுப்பு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. பாலுதான் எடுத்து வைத்திருக்கிறான்.

“டே பாலு, இது என்னோட இரப்பர்டா.. நீ தான் திருடி வைச்சிருந்தியாடா”

“அப்படியா! இது உன்னோட இரப்பரா… நான் திருடலடா. இந்த இரப்பர் என்னோட பைக்குள்ள எப்படி வந்ததுன்னே தெரியல”

“அது எப்படி உன்னோட பைக்குள்ள உனக்கு தெரியாம இரப்பர் வந்திருக்கும். ஒருவேளை இரப்பருக்குக் கால் முளைச்சி உன் பைக்குள்ள போயிருக்குமா?”

“தெரியலடா ராசு.. எப்படி வந்ததுன்னு… கண்டிப்பா நான் எடுக்கல. நான் உன்னோட பிரண்டுடா. நான் எப்படி எடுப்பேன்”

“திருடி வைச்சிட்டு… மாட்டிகிட்டவுடனே பொய் பேசுறியாடா.. நீதான்டா திருடன்.. திருடன்…” என்று ராசு கத்தினான். அந்தச் சத்தம் அறை முழுவதும் கேட்டது. மத்த பசங்களோட சத்தத்துல ஆசிரியருக்கு இவுங்க பேசிக்கிறது கேட்க வாய்ப்பில்லைதான். பசங்க மத்தியில ராசு பாலுவை திருடன்னு சொன்னது, பாலுவுக்கு பெரிய அவமானமாய் போய்விட்டது.

“ஏன்டா என்னையா திருடன்னு சொல்லுற, நீதான்டா திருடன். உங்கப்பா ஜோப்புல இருந்து நீதான்டா காச திருடிகிட்டு வருவ. எனக்கு தெரியாதா” என்றான். தனக்கும் பாலுவுக்குமே தெரிந்த இரகசியம். இன்றைக்கு அனைவருக்கும் முன்னால் இப்படி போட்டு உடைத்துவிட்டானே என்ற ஆத்திரம் ராசுவுக்கு.

“டே உங்க அம்மா டிம்மிடா”  பாலுவின் முகத்துக்கு நேராகக் கையை நீட்டி மீண்டும் மீண்டும் உங்க அம்மா டிம்மிடா.. டிம்மிடா.. என்றான்.

பாலுவுக்கு கோபம் தலைக்கேறியது. ராசுவை அடிக்க கை ஓங்கினான். அதற்குள் ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்திருந்தார். வகுப்பு அமைதியானது. அவர்களும்தான். பள்ளிக்கூடம் முடிஞ்சு வீட்டுக்குப் போகும்போது இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.

அடுத்தநாள் ராசு கொஞ்சம் தாமதமாகவே பள்ளிக்கு வந்தான். வகுப்பறைக்குள் நுழைந்ததும் அனைவரும் அவனையே பார்த்தனர். நேராகத் தன்னுடைய இடத்தில் போய் உட்காந்து கொண்டான். அப்போதுதான் தன்னுடைய நண்பன் பாலுவின் ஞாபகம் வந்தது. கண்களைச் சுழற்றி வகுப்பறை முழுவதும் பாலுவைத் தேடினான். பாலு இன்னிக்குப் பள்ளிக்கூடத்திற்கு வந்ததாகத் தெரியவில்லை.

“ஏன் பாலு இன்னிக்கு ஸ்கூலுக்கு வரல” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான் ராசு. இன்னமும் அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் ராசுவையேப் பார்த்துக்கொண்டிருந்தனர். ராசுவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“ஏங்கடா… எல்லோரும் என்னையே பார்த்திட்டு இருங்கீங்க”

கொஞ்சநேரம் அமைதிக்கு பின், அந்த வகுப்பின் பெண் பிள்ளை ஒருத்திதான் போட்டு உடைத்தாள்.

“டே ராசு… நீ எந்த வாயில பாலுவோட அம்மா டிம்ம்மின்னு சொன்னியோ… தெரியல, உண்மையாலுமே அவுங்க அம்மா நேத்துச் சாயந்திரமே செத்துப்போச்சுடா” என்றாள்.

       ராசுவுக்கு உடம்பு நடுங்கிப்போனது. நெஞ்சிலிருந்து இதயம் வெளியே தள்ளுகின்ற மாதிரி ஒரு வலியை அனுபவித்தான்.

       “உன் வாயி நாரவாயிடா…”

       “இந்த வாயி ஊத்தவாயி…”

       “இது கருநாக்கு வாயிடா…”

       “ஆளையும் மூஞ்சையும் பாரு.. ஒத்த சொல்லால ஒர் உசிரையே வாங்கிட்டு நிக்கிறத…”

       “இனிமே எங்ககூட நீ பேசக்கூடாது. எங்களுக்கும் அதுமாதிரி ஏதாவது சொல்லிட்டன்னா, நாங்களும் அம்மா இல்லாம இருக்கிறதா… அப்பா… எங்களால அம்மா இல்லாம இருக்க முடியாதுடா”

       மாணவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களின் வாயிக்கு வந்தபடிக்குப் திட்டிக்கொண்டிருந்தார்கள். அனைத்து வசவுகளையும் ராசு ஏற்றுக்கொண்டான்.

       டிம்மி என்றால் என்ன? டிம்மின்னா என்ன அர்த்தம்? இதற்கு அர்த்தம் எனக்கு தெரியுமா? கூட படிக்கிற பசங்க கோபம் வரும்போது மத்த பசங்கள,

              “உங்க ஆயா டிம்மி”

              “உங்க அப்பா டிம்மி”

              “உங்க அம்மா டிம்மி” ன்னு சொல்லுவாங்க. கண்டிப்பா அதுக்கு அர்த்தம் எல்லாம் எனக்கு தெரியாதே! நானும் கோவத்துல சாதாரணமாத்தானே பாலுவ சொன்னேன். உண்மையாலுமே பாலுவோட அம்மா செத்துப்போச்சா… அவுங்க அம்மா செத்ததுக்கு நான்தான் காரணமா? தலையைப் பிய்த்துக்கொண்டான் ராசு.  பையைத் தூக்கிப்போட்டு விட்டு பாலுவின் வீட்டிற்கு ஓடினான்.

       பாலுவின் வீட்டின் சந்தில் நுழையும்போதே மோளம் சத்தம் கேட்டது. கிட்ட போகப்போக பெண்களின் ஒப்பாரி சத்தம் ராசுவுக்கு என்னவோ செய்தது.

      வீட்டு வாசலில் மொட்டை அடித்துக்கொண்டு கழுத்தில் பூமாலையுடன் கண்கள் சிவந்து நின்றிருந்தான் பாலு. ராசு தூரத்தில் இருந்து பாலுவையே பார்த்துக்கொண்டு கிட்டே வந்து நின்றான். பாலு இப்படி நிற்பதற்கு முழுக்காரணம் தான்தான் என்று நினைத்தான் ராசு.

       ராசுவைக் கண்டவுடன் பாலு கோபத்தின் உச்சிற்கே சென்றான்.  தனக்கு முன்னே நின்று கொண்டிருந்த ராசுவை, ஓடிச்சென்று நெஞ்சிலே ஒரு உதை விட்டான். பாலுவின் உதையில் மல்லாந்து கீழே விழுந்தான் ராசு. கீழே விழுந்த ராசுவின் சட்டையைப் பிடித்துக்கொண்டு ஐந்து விரல்களையும் மடக்கி பிடித்தபடி மூஞ்சிலேயே குத்துக்குத்தென்று குத்தினான்.

“நீதான்டா எங்க அம்மாவை கொன்ன… நீ டிம்மின்னு சொன்னதனாலதான் எங்க அம்மா செத்துப்போனாங்க. உன்னாலதான் நான் இப்ப மொட்ட அடிச்சிட்டு அம்மா இல்லாத அநாதயா நிக்கிறன். நீ எனக்கு பிரண்டே இல்ல. என்னோட முத எதிரி நீதான்டா… உன்ன கொல்லாம விட மாட்டேன்” என்று ராசுவை தன் பலவந்த மட்டும் அடித்துக்கொண்டிருந்தான்.

அப்போது பக்கத்தில் இருந்த பெரியோர்கள் உடனே ஓடி வந்து பாலுவை இழுத்தார்கள்.

“என்ன விடுங்க.. அவன நான் கொல்லாம விடமாட்டேன். அவந்தான் எங்கம்மாவ கொன்னான். அவந்தான் எங்கம்மா டிம்மின்னு சொன்னான். என்ன விடுங்க.. என்ன விடுங்க…” என்று கத்தினான் பாலு.

முகம் வீங்கி வாயிலிருந்து இரத்தம் ஒழுக கிழிந்த சட்டையுடன் தேம்பி தேமபி அழுத கண்களுடன் நின்றான் ராசு. அங்கிருந்தவர்கள் அனைவரும் ராசுவையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

     பேருந்து முன்பை விட இன்னும் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது. காலமும் எவ்வளவு வேகமாய் ஓடுகிறது. காலத்திற்கு எதனையும் மாற்றும் சக்தி உள்ளதோ? இந்த இருபத்தைந்து வருடங்களில் என் மனதை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நிகழ்வு. அது இன்றோடு முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணுகிறேன். என்மீது இன்னமும் கோபத்தில் இருப்பான் என்றே நினைத்திருந்தேன். என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். அழகாய் சிரித்தான். வீட்டிற்கு வா என்றான். எனக்காக வீடு பார்த்துத் தருகிறேன் என்றான். அவனுடைய விசிட்டிங் கார்டை என்னிடம் கொடுத்து விட்டு போயிருக்கிறான். தன்னுடைய கையில் இருந்த விசிட்டிங் கார்டை ஒருமுறை முன்னாலையும் பின்னாலையும் திருப்பி பார்த்தான்.

      ராசு, கார்டின் பின்பக்கத்தைப் பார்த்து பிரமித்துப்போனான். எந்தக் கம்பெனிக்கு இன்டர்வியூ போனானோ, அதே கம்பெனியின் தலைமை அதிகாரிதான் பாலு என்கிற பாலமுருகன். வாய்விட்டே சிரித்தான் ராசு. அவன் என்னுடைய உயிர் நண்பன். அவன் சந்தோசமா நல்லா இருக்கனும் என்று மனதார இறைவனை வேண்டினான்.  பேருந்துக்கு வெளியில் மழைத் தூரல் கொஞ்சகொஞ்சமாய் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

எழுத்தாளர்

iniyavaikatral@gmail.com

நாட்டு நலப்பணித் திட்டம் தோற்றமும் வளர்ச்சியும் | பகுதி – 2

நாட்டு நலப்பணித்திட்டம்

நாட்டுநலப்பணித்திட்டத்தின்கீழுள்செயல்திட்டங்களாவன

 அ. தொடர்பணிகள் (Regular / Concurrent Programmes)

 ஆ. சிறப்பு முகாம் திட்டங்கள் (Special Camps)

தேர்ந்தெடுத்து கொண்ட பகுதிகளில் பணிகள்:

            நாட்டுநலப்பணி திட்ட வழிகாட்டி குறிக்கோளின்படி இத்திட்டத்தின் அலகுகள் ஒவ்வொன்றும் தாங்கள் நலப்பணித்திட்டங்களை நிறைவேற்ற குறிப்பிட்ட ஒரு பகுதியை தேர்வு செய்து கொள்ள வேண்டும்நடைமுறையில் அவை ஒரு கிராமம் அல்லது ஒரு குடிசை பகுதி அல்லது ஒரு குடியிருப்பு பகுதியை தேர்ந்தெடுத்துத் கொள்கின்றன. சம்பந்தப்பட்ட பகுதிகள் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்ற அதிகார பூர்வமான அல்லது மரபு ரீதியான தலைவர்கள் கலந்து ஆலோசனை செய்து பணிக்காலத்தை தீர்மானித்து கொள்கின்றனர். சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள மக்களின் ஆதரவு, நல்லிணக்கம், இடத்தின் அருகாமை முதலி கணக்கில் கொண்டு அவற்றின் அடிப்படையில் பணிக்காலம் தெர்ந்தெடுக்கப்படும்.

            அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களிலும், குடிசை பகுதிகளிலும் பால்வாடி எனப்படும் குழந்தை காப்பகங்கள் தொடங்கப்பட்டு உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் துணைகொண்டு நடத்தப்படும். நோய் தடுப்பு மருத்துவ பிரசார பணிகள், பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல், சுற்று சூழல் சுகாதாரம், விவசாயத்தை பற்றி மக்களுக்கு அறிவுறுத்துதல் மருத்துவ நலன் மற்றும் சுகாதாரம் குறித்து நிகழ்ச்சி திட்டங்கள். போர்கால நடவடிக்கைகளால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நூலகங்கள்/புத்தக வங்கிகள் முதலியவற்றை உருவாக்குதல். மாநில மண்டல்களை துவக்குதல், இளைஞர் சங்கங்கள், பால் சேகரிக்கும் மையங்கள் தொடங்குதல் முதலியவை நாட்டு நலப்பணித்திட்டதின் கீழ் மேற்கொள்ளப்படும் சில செயல்பாடுகள்.

            கிராம மக்களுக்கு வங்கி கடன் கிடைக்க வழி செய்தல், மக்களுக்கு போய்வர மிக அத்தியாவசியமான சாலைகள் அமைத்தல், பராமரித்தல், முதலிய பணிகள் பல்வேறு கல்லூரிகளிலும் கிராமங்களிலும் உள்ள நாட்டு நலப்பணித்திட்ட பிரிவுகளால் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டு நலப்பணித்திட்ட பிரிவு பூங்காக்களை வளர்த்தல், பராமரித்தல், இலங்கை அகதிகள் மறுவாழ்வு திட்டப் பணிகளில் ஈடுபாடு / கிராமங்களில் இறைவிழாக்களை நடத்துதல், காய்கறி தோட்டம் வளர்த்தல், மருத்துவ நலத் தேவைகள் குறித்து கணக்கெடுப்பு, பண்டிகைக்கால கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், ரயிலில் பயண சீட்டு வாங்காமல் போய் வருபவர்களை திடீர் என சோதனை செய்து கண்டுபிடித்தல் / கைதிகளுக்கு விளையாட்டுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், முதலமைச்சர் சத்துணவு கூடங்களுக்கு விஜயம் செய்தல் நாட்டு நலப்பணித்திட்டம் குறித்து சமாதான பேரொளி கருத்தரங்கம் ஏற்பாடு செய்தல், பார்தினியச் செடிகளை அழித்தல், இவை பிற நாட்டு நலப்பணித்திட்டம் செய்து வரும் பணிகள்.


பொது மக்களுக்கு எழுத்தறிவுத் திட்டம்

            உலக அளவில் நமது நாட்டில் ஜனத்தொகை இரண்டாவது இடத்தில் உள்ளது. நமது நாட்டின் முன்னேற்ற பாதையில் முக்கிய தடைக்கல்லாகி இருப்பது மக்களின் எழுத்தறிவற்ற நிலையே என்று கருதப்படுகிறது. உலகின் 69 எண்ணிக்கை நாடுகளோடு உடன் நோக்கில் நமது நாட்டின் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதுஎன்பது நம் எல்லோருக்கும் கவலையளிக்கும் செய்தியாக இருக்கிறது. உலகிலிலுள்ள 85.7 கோடி படிப்பறிவற்ற மக்களில் நம் நாட்டில் இருப்பவர்கள் 44 கோடியாகும். 1981ஆம் வருட புள்ளி விவரங்களின் படி இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் 36.23 சதவீதம்தான். நம் நாட்டிலுள்ள 220.89 மில்லியன் படித்தவர்களில் 3.5 மில்லியன் பேர் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் இருக்கிறார்கள்.


            இந்தியாவில் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்களின் எண்ணிக்கை 15 லட்சம். தமிழ்நாட்டில் 1.7 லட்சம் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உள்ளனர். நாட்டு நலப்பணித் திட்டத்தால் செயலாக்கப்பட்ட 2 லட்சம் அங்கத்தினர்களை எழுத்தறிவு திட்டத்தில் ஈடுபடுத்தவேண்டும் என்று மத்திய அரசு பரிந்துறை செய்துள்ளது. ஒரு தொண்டர் ஒருவருக்கு எழுத்தறிவு புகட்டவேண்டும் என்ற முறையில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இயங்குகிறார்கள். முதியோர் கல்விக்கான மாநில பள்ளிசாரா கருவாலயத்திலிருந்து நாட்டுநலப் பணித்திட்ட தொண்டர்களுக்கு தேவையான கற்பிக்கும் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அப்படி வழங்கப்படும் கல்வி உபகரணங்கள் எழுத்தறிவு பணிக்கு கையேடு என்றழைக்கப்டும். இந்த எழுத்தறிவு பைகளில், கீழ் கண்டவை உள்ளன.


1. அட்டைகள் அல்லது அடிப்படை எழுத்தறிவு பயிற்சி பொருந்திய ஒரு தொகுதி.

2.எழுத்தறிவு பயிற்சி பெறுவதில் வாழ்க்கையோடு சம்பந்தமுடைய விஷயங்களை அடங்கிய ஒரு சிறு புத்தகம், பாடப்புத்தகங்களோடு சேர்த்து அதிகப்படி வாசிப்பிற்காகவும் அறிவு விளக்கத்திற்காகவும் தரப்படுகிறது.

3. மதிப்பாய்வு தாள்….

4. ஆசிரியர் வழிகாட்டி நூல்.

5. கற்பவர் குறித்து தனிப்பட்ட விவரங்களும் கற்பிக்கப்படும் விஷயமும்.

6. நான்கு அஞ்சலட்டைகள், இரண்டு ஆரம்ப உபயோகத்திற்காக. இரண்டு கல்வி காலகட்டத்தின் இறுதி உபயோகத்திற்காக.

            சமுக நலப்பணிகளில் அதிக ஈடுபாடு கொண்ட நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் பாமர மக்களின் எழுத்தறிவு பெறும் முயற்சிகளில் முழு முனைப்போடு பங்கெடுத்துக் கொள்கிறார்கள். சிலர் இரண்டு, மூன்று நபருக்கு மேலாக கூட கற்றுத்தருகிறார்கள், அப்படி எழுத்தறிவு பெற்றவர்கள் தங்கள் பெயர்களை எழுதுகிறார்கள் பேருந்துகளிலுள்ள பெயர் பலகைகளை படிக்கிறார்கள். செய்தித்தாள்களை படிக்க முயற்சி செய்கிறார்கள். கிராமங்களில் ஐந்தாம், நான்காம் வகுப்பு படித்தவர்கள் கூட எழுத தெரியாமல் இருப்பதை காணமுடிகிறது. அத்தைகைய குழந்தைகளும் நாட்டு நலப்பணித்திட்டதில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

            தரநிலைச் சான்றிதழ்கள் (எத்தனை பேர்களை எழுத்தறிவுக் கொண்டவர்களாக்கினார்கள் என்ற எண்ணிக் கையை அடிப்படையாகக் கொண்டு) மாவட்ட முதியோர் கல்வி அதிகாரி, செயல் திட்ட அதிகாரி அல்லது கல்லூரித் தலைவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஆயருடன் ஆலோசனை நடத்தி பிறகு நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்களுக்கு வழங்கப்பட வேண்டும். சான்றிதழ்களின் தரநிலை பின்வருமாறு 1. மூன்று அல்லது மூன்று பேருக்கு மேல் எழுத்தறிவூட்டியவர்களுக்கு முதற்நிலைச் சான்றிதழ்கள். 2. இரண்டு அல்லது இரண்டுக்கு மேல் எழுத்திறிவூட்டியவர்களுக்கு இரண்டாம் நிலை அல்லது (பி கிரேடு) நிலை சான்றிதழ்கள். 3 ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு எழுத்திறிவூட்டியவர்களுக்கு மூன்றாம் நிலை அல்லது (சி கிரேடு) சான்றிதழ்கள்.


எல்லோருக்கும் மருத்துவ உதவி

            கிராம மக்கள் அனைவருக்குமான உடல் நல மருத்துவ பரிசோதனைக்கு நாட்டு நலப்பணி திட்ட அமைப்புகள் அரசாங்க மருத்துவ மனைகளிலிருந்து மருத்துவர்களின் உதவி பெற்று முகாம்கள் ஏற்பாடு செய்யவேண்டும்.

பின்வரும் மருத்துவ நல செயல் திட்டங்களை மேற்கொள்ளலாம்.

 1. எல்லா குழந்தைகளுக்கும் நோய்த்தடுப்பூசிகள், மருந்துகள்.

2.கிராம மக்கள் அனைவருக்கும் அம்மை தடுப்பூசிகள் மற்றும்  தொற்றுநோய் தடுப்பூசிகள், மருந்துகளும் கிடைக்கச்செய்தல்

3. குடும்பக்கட்டுப்பாட்டு திட்டத்திற்கு தகுந்த தம்பதிகளை தேர்ந்தெடுத்தல்,

4.எல்லோருக்கும் நோய்குறி சோதனையும் அதன் தொடர்ச்சியாக நோய்க்காரணிகளான நுண்ணுயிர்களை தகுந்த மருந்துகளின் மூலம் அழித்தல்

5.தொழுநோய்/காசநோய்/சர்க்கரை வியாதிகள் சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்கிறதா என்று கண்டறியும் மருத்து பரிசோதனைகள் அனைத்தும் கிராமத்து மக்களுக்கும் கிடைக்க செய்தல். பரிசோதனைக்கு பின் தொடர்
நடவடிக்கை ஏற்பாடு செய்தல்.


சத்துணவு திட்டம்

            கிராமத்து மக்களுக்கு அவர்களுடைய பகுதியில் கிடைக்கும் பல்வேறு வகையிலான உணவு பொருட்களிலிருந்த பெறக்கூடிய ஊட்டச்சத்துப் பற்றி அறிவூட்டுதல்.  தாய்பாலின் தேவையையும் பயன்பாட்டையும் எடுத்துரைத்தல் / குழந்தை வளர்ப்பு பற்றி அறிவூட்டுதல். இந்தப் பணியில் சுகாதார ஊழியர்களின் உதவியையும் தேவையெனில் பெற்றுக்கொள்ளலாம்.
 

            எலுமிச்சை மரம், பப்பாளி மரம், முருங்கை மரம், வாழை மரம், கீரை வனக மற்றும் பல இலைகள் கூடிய காய்கறி, செடிகளடங்கிய காய்கறித் தோட்டம் ஒவ்வொரு குடும்பத்திலும் உருவாக வேண்டியதை மேற்படி சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஒரு முக்கிய அம்சமாக கொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழல் சுகாதாரம்

            குறைந்த செலவிலான பாராபள்ளி / நச்சுதடை மலக்குழியை தங்கள் வீட்டில் அமைத்துகொள்ளும்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் செயலூக்கம் தர வேண்டும். சுற்றுச் சூழல் சுகாதாரத்தை பராமரித்துப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு குடும்பமும் உரக் குழிகளைக் கொண்டிருத்தல் அவசியம்.

மாற்று சக்தி வன ஆதார வழிகளைப் பயன்படுத்துதல் (Alternative Energy Sources)

            இயற்கை எரிவாயு முதலான மாற்று சக்திவள ஆதாரங்களைக் கைக்கொள்ளுதல், புகைவராத அடுப்புகளை யோகித்தல், சூரிய வெப்பத்தில் இயங்கும் சூரிய அடுப்பை கிராம மக்களிடையே பிரபலமாக்குதல் முதலிய வேலைகள் கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்..

குடும்ப வரவு செலவு திட்டமிடுதலும், சிறு சேமிப்பும்

            கிராமத்து மக்கள் தங்கள் குடும்பத்தின் வரவு, செலவுக் கணக்கை திட்டமிட்டு செய்ய வேண்டிய அவசியம் பற்றி நாட்டு தல பணித்திட்ட தொண்டர்கள் அவர்களுக்கு எடுத்துரைத்து வருகிறார்கள். தவிர சிறு சேமிப்புப் திட்டத்தில் சேர்ந்து பணம் | சேமிப்பதிலுள்ள பயன்களையும் சேமிப்பின் அவசியம் பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைத்து சேமிக்க வேண்டுமென்ற செயலூக்கமளித்து வருவதையும் தங்கள் பணிகளில் ஒன்றாகக் கொண்டிருக்கிறார்கள்.


சாலை செப்பனிடுதல்

            கிராம மக்களின் உதவியோடு நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் தங்கள் வழக்கமாக முகாம்கள் சமயம் அல்லது சிறப்பு முகாம்கள் சமயம் பொருவாரியான மக்களின் பங்கேற்போடு கிராமத்தின் இணைப்புச் சாலை மற்றும் செல்வழிச் சாலைகளைச் செப்பனிடுவார்கள். இந்த சாலைகள் போக்குவரத்திற்கும், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வதற்கும், பிள்ளைகள் பள்ளிகளுக்கு செல்வதற்கும் பிற பல வேலைகளுக்கும் உதவும்.


வீடுஇல்லாதவர்களுக்குவீடு

     நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் ஏழை எளியவர்களுக்கு வீடுகள் கட்டிதரும் பொருட்டு மாவட்ட அதிகாரிகளை சந்தித்துப் பேசுவார்கள். இவர்களுடைய முயற்சிக்கு ஒரு உதாரணம் பின்வருமாறு : ஆழ்வார் குறிஞ்சியிலுள்ள பரமகல்யாணி கல்லூரியிலும் நாட்டு நலப்பணி திட்டத்தினர் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி மாணவிகள் (நாகர்மூலம் கோவில்) தங்களுடைய சிறப்பு முகாம் திட்டத்தின் சமலம் கட்டுவதற்கான கச்சாபொருட்களை வேறு வழிகளின் திரட்டி அதன்வழி ஆதரவற்ற பெண்களுக்கு ஒரு இல்லம் கட்டினார்கள். இதுபோன்று வீடற்ற ஏழைகளுக்கு வீடுகளை கட்டி தருகின்றனர்.

கலைநிகழ்ச்சிகள்

            கிராமங்களில் அங்குள்ள நாட்டுநலப் பணித்திட்டம் கிளைகளினால் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படலாம். உள்ளூரிலுள்ள கலையார்வம் மிக்கவர்களைக் கொண்டு கலைநிகழச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு கிராமத்து மக்களுக்கும் செயலூக்கம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, குடியரசு தினம் முதலியன பல்வேறு முக்கிய தினங்கள் கிராமத்து மக்களின் ஒத்துழைப்போடும். பங்கேற்போடும் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்களால் கொண்டாடப்படவேண்டும். வருடா வருடம் வரும் பல்வேறு பண்டிகை தொடர்பான விழாக்கள், கொண்டாட்டங்களில் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் ஊர் மக்களோடு ஒத்துழைத்துப் பணியாற்ற வேண்டும்.


மரம் நடுதல்

            நமது நாட்டின் தட்ப வெப்ப சீர்குலையாமலிருக்கவும், பஞ்சம் பட்டினியிலிருந்து நம்மைக் நிலைகள் காத்துக் கொள்ளவும், மண் வளத்தையும், பாதுகாத்துக் கொள்ளவும், மரம் நடுதல் முக்கியமே. தொழிற்சாலைகளின் தேவைகளை நிறைவேற்றவும், மரங்கள் மற்றும் தாவரங்களை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம். நாம் ஒவ்வொரு வருடமும் மரம் நடும் செயல் திட்டம் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்களால் பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகிறது. கல்லூரி வளாகத்திலும் பல்கலைக்கழகங்களிலும் கிராமங்களிலும் பணி செய்யத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பகுதிகளிலும் இந்த தொண்டர்கள் வனத்துறையின் ஒத்துழைப்போடு பல மரங்களை நட்டு வருகிறார்கள், இளைய சமுதாயத்தினரின் திறமையும் ஆற்றலும், ஆர்வமும் இந்தியாவை பசுமையாக்குகின்றன.


நிவாரணப்பணிகள்

            இயற்கையன்னை தனது சீற்றத்தை அள்ளிக் கொட்டியதில் புயலும் சூறாவளியுமாய் மக்களுக்கு சொல்லொனத் துன்பங்கள் ஏற்பட்டது. இயற்கை தந்த சவுக்கடியின் வலி அளப்பறியது. அதன்வினையால் மனிதர்கள் வீடிழந்து நிற்கின்றனர். எப்பொழுதெல்லாம் வேதனையும், துயரமும்ஆதரவற்ற நிலைமையும் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் நாட்டு நல பணித்திட்டத்தினர் உதவி செய்கின்றார். அவ்விதமே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் உள்ளூர் மக்களிடமிருந்து பழைய துணிமணிகள் நன்கொடைகள் சேகரிக்கும் பணியை மேற்கொள்கின்றனர். அப்படி சேகரிக்கப்பட்ட துணிமணிகள் பிற பல பொருட்கள் எல்லாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. குடிசைகளில் வாழும் மக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை சரியான முறையில் தரப்படவும், குடிசைகள் கட்டுதல் மற்றும் சேதத்திற்குள்ளானவைகளை பழுது பார்த்தல் முதலிய பணிகளிலும் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் தங்கள் உதவிக் கரங்களை நீட்டுதல், மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் உதவி செய்ய முன் வந்தது கிராம மக்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டன.

            1977 நவம்பர் புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த பாபட்லா தாலுக்காவிலும் பிரகாசம் மாவட்டத்திலுள்ள சீராளா தாலுக்காவிலும் 10,000 பேருக்கும் மேலாக இறந்தது மட்டுமல்லாமல் மக்களின் உடமைகளுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டப்போது ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பல்வேறு கல்லூரிகளிலிருந்து 300 நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் நிவாரணப்பணிகளில் பங்கெடுத்துக்கொண்டார்கள். இவர்கள் 300 கோணிப்பைகளில் ஏறத்தாழ 1,50,000 ரூபாய் பெறுமானமுள்ள புதுத் துணிகள், 70 சாக்கு மூட்டைகளில் அரிசி, 24 கோணி மூட்டைகளில் புதிய பாத்திர பண்டங்கள், மருந்துகள் முதலியவற்றை குறிப்பிட்ட பகுதிகளில் நிவாரணப்பணிப் பொறுப்பேற்றிருந்த அதிகாரிகளால் தரப்பட்ட அளவுக்கு மேலாக சேகரித்து வழங்கினார்கள். காவலி பகுதியிலுள்ள தொண்டர்கள் நாகாலந்தா பகுதியிலிருந்து 20 சடலங்களை ஜவஹர் பாரதியைச் சேர்ந்த நாட்டு நலப் பணித்திட்ட அகற்றினார்கள். அதே கிராமத்தில் இருந்த வேறு 60 நாட்டு நலப் பணித்திட்ட அங்கத்தினர்கள் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த சினி சீமாவிலிருந்த கடற்கரையை ஒட்டிய ஒரு மீனவ கிராமமான கங்கமேஸ்வரத்திற்கு நாகாலந்தாவிலிருந்து செல்லும் சாலையை சீர்படுத்தித்தந்தார்கள். இதுபோல் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் திண்டுக்கல் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகள் செய்தனர். இதே மாதிரியான நெருக்கடி கால நிவாரணப் பணிகள் நாடெங்கும் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்களால் செய்யப்பட்டு வருகின்றன.

தகவல்

            அரசாங்கம் தாமதமாக தொகையை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செலுத்தும் காலங்களில் நாட்டு நலப்பணித்திட்ட செயல்பாடுகள் முடங்கி கிடக்கும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அக்காலங்களில் சில கல்லூரி/பள்ளி நிறுவனங்கள் முன்பணம் கொடுத்து திட்டங்கள் குறித்த நேரத்தில் செயல்பட உதவி செய்கின்றன. இது தவிர சில நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் வேறு சில நிறுவனங்களில் இருந்து நன்கொடை பெற்று சமுதாய பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.

நிர்வாக அமைப்பு முறை
                                                               NSS நிர்வாக அமைப்பு முறை

பயிற்சி மையங்கள்


            ஒரு தொழிலை நன்கு செய்ய, பயிற்சி இன்றியமையாதத காணப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த மத்தி அரசாங்கம் பல பயிற்சி நிறுவனங்களை நாடு முழுவதும் நிறு அதற்கு தேவையான பண உதவியையும் செய்து வருகிறது.

நாட்டு நலப்பணித்திட்டத்தில் பயிற்சிகள் கீழ் கண்ட வகுப்பினருக்கு அளிக்கப்படுகின்றன


திட்ட ஒருங்கிணைப்பனப்பாளர் பயிற்சி


1. துணை திட்ட ஆலோசகர், உதவி திட்ட அலுவலர், இளைஞர் அலுவலர், நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாநில தொடர்பு அலுவலர்.

2.கல்லூரி முதல்வர்கள், மேல்நிலை பள்ளி தலைமை
ஆசிரியர்கள், ஆசிரியைகள்

3. நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள்

4. மாணவத் தொண்டர்கள்


நாட்டு நல பணித்திட்டத்தில் புதிய திட்டங்கள் – மாற்றங்கள் ஏற்படும் பொழுது புத்துணர்வுப் பயிற்சி திட்ட மேலாளர்களுக்கு அளிக்கப்படுகின்றன. கல்லூரி முதல்வர்களுக்கும், மேல்நிலை பள்ளி தலமை ஆசிரியர், ஆசிரியைகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நாட்டு நல பணித்திட்ட கொள்கைகள், பண ஒதுக்கீடு கையாளும் முறை ஆகியவற்றை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது

தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் வெவ்வெறு துறையை சார்ந்தவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சமுதாய பணியை குறித்து அனுபவம் இருக்காது. இதை மனதில் கொண்டு அவர்களுக்கு இரண்டு விதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அங்கீகரிக்கப்பட்ட மையங்களுக்கு10நாள் முதல் நிலை பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார்கள் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து புத்துணர்வு பயிற்சிக்காக (5 நாட்கள்) அனுப்பப்படுகிறார்கள்.


கீழ்கண்ட மையங்கள் நாட்டு நலப் பணித்திட்டதிற்காக மத்திய அரசால் அங்கீகரிக்கப்படுகிறது.


பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள்

மாநில நிர்வாக அமைப்பு முறை
                                                           மாநில நிர்வாக அமைப்பு முறை


இம்மையங்கள் மேற்குறிப்பிட்ட பயிற்சிகளை தவிர பல விதமான காலத்திற்கு ஏற்ற ஆராய்ச்சிகளை செய்து வருகின்றது. பொதுவாககல்லூரிகளிலும், தொழில்நுட்ப பயிலகங்களிலும், மேல் பள்ளிகளிலும் நடைபெறும் நாட்டு நலப் பணித்திட்ட மதிப்பீடு செய்கின்றன. கீழ்க்கண்ட மையங்கள் பயிற்சி மற்ற மத்திய ஆராய்ச்சிமையங்களாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

1. சமுதாயப் பணித்துறை, டில்லி பல்கலைக்கழகம்

 2. டாடா விஞ்ஞான பயிலகம் மும்பை

3. சென்னை சமுதாய பணிக்கல்லூரி, சென்னை – 8

4.ராமகிருஷ்ணா தொண்டு நிறுவனம், கொல்கத்தா

            இம்மையங்கள் பி.எச்.டி பயிலும் மாணவ / மாணவிகளுக்கு தகுந்த ஆலோசனை கொடுத்து வருகின்றது. அதை தவிர நாட்டி நலப்பணித்திட்டத்தை சார்ந்த பலபுத்தகங்களை வெளியிடுகின்றன. இம்மையங்கள் பல்கலைக்கழகங்களுக்கும் தொழில்நுட்ப பயிலகங்களுக்கு மேல்நிலை பள்ளிகளுக்கு தேவையான ஆலோசனைகளை கொடுத்து வருகின்றன.

முதல் நிலைப் பயிற்சியில் கீழ் கண்ட தலைப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

1. நாட்டு நலப் பணித்திட்டத்தின் வரலாறு, தத்துவம், வளர்ச்சி

2. தொடர்பணிகள் செயலாற்று முறை

 3. சிறப்பு முகாம்கள் நடத்தும் முறை ஆளுமை வளர்ச்சி

4.சமூக காடுகள்

5.முதலுதவி

6.சமுதாயபணி

7.தாய்சேய நலபராமரிப்பு

8.சாலைபாதுகாப்புபணி

9. பண ஒதுக்கீடு கையாளும் முறை

10.கிராமம்,குடிசைபகுதிகளைத் தத்து எடுக்கும் முறை

11.மக்கள்எழுத்தறிவுஇயக்கம்

12. எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி போன்ற பலவிதமான பாடங்கள்.

13.சமுதாயஆராய்ச்சி

14.ஊனமுற்றோருக்குமறுவாழ்வு

15.ஊரகவளர்ச்சி

16.நகரவளர்ச்சி

            சமுதாயப் பணியை தகுதியான முறையில் செய்வதற்கு கலந்துரையாடல் மூலமாக கொடுக்கப்படுகிறது. நாட்டு நல வகுப்பில் பயிற்றுவிக்கும் பயிற்சியும் களப்பணி பயிற்சியும் பணித்திட்ட அலுவலர்கள் களப்பணிக்காக எஸ்.ஓ.எஸ். குழந்தைகள்கிராமம் தாம்பரம், ஜெர்மன் தொழுநோய் மருத்துவமனை -ஷெனாய் நகர், பொது சுகாதார நிறுவனம் – பூந்தமல்லி போன்ற இடங்களுக்கு செல்லுகிறார்கள்.

புத்துணர்ச்சி பயிற்சிக்காக வரும் நாட்டு நலப்பணித்திட்ட  கொண்டு 5 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

1.மக்கள்எழுத்தறிவுஇயக்கம்

2. சுற்று சூழல் விழிப்புணர்ச்சி

3. நீர்பிடிப்பு பகுதி, மற்றும் நீர்வளம்

4. எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி

5. உடல் ஊனமுற்றோருக்கு மறுவாழ்வு

6. இளம் குற்றவாளிகளுக்கு சீர்திருத்த முறை

7. ஆலோசனை கொடுக்கும் முறை

8. மனித உரிமைகள்

9. இளைஞர்கள் நலம்


நிதி

            இந்திய அரசு பல்கலைக்கழகங்களின் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் பல்வேறு அர்த்தமுள்ள பயன் வாய்ந்த, ஆக்கபூர்வாமான செயல் திட்டப் பணிகளில் பங்கெடுக்க உதவியாய் நாட்டு நலப் பணி திட்டங்களை நடைமுறைபடுத்தவும், தொடர் பணிகளுக்கும் சிறப்பு முகாமிற்கும் திட்டத்தை செயல்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.


            இந்த திட்டமானது மத்திய மாநில அரசின் நிதியுதவியோடு நடத்தப்படுகின்றது. அதில் மத்திய அரசு பன்னிரெண்டு பங்கில் 7 பங்கையும், மீதி ஐந்து பங்கினை மாநில அரசும் கொடுக்கின்றது. தற்போது 1,70,000 தொண்டர்கள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும், தொழில்நுட்ப பயிலகங்களிலும், உள்ளனர். மத்திய அரசு தங்களது பங்கையும் சேர்த்து மாநிலதிட்ட  தங்களது பங்கை மாநில அரசுக்கு அனுப்பி வைக்க மாநில அரசு ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி வைக்கின்றது. இந்த தொகையில் மாநில அரசு 5/12 கொடுக்கின்றது. மீதி பங்கை மத்திய அரசு தருகின்றது. தற்போது தொடர் பணிகளுக்காக ரூ 160/ ம் சிறப்பு முகாம்களுக்கு ரூ. 300/- செலவழிக்கப்படுகிறது. பள்ளி இயக்குனருக்கும் அளிக்கிறது. கல்லூரி கல்வி இயக்குனர் இத்தொகையை மாநில அரசு கல்லூரிகளில் இயக்குனருக்கு பகிர்ந்து கொடுக்கின்றார்.

            பல்கலைக்கழகங்கள் பயிற்சி பல்கலைக்கழகங்களுக்கும் தொழில்நுட்ப பயிலகங்களுக்கும் நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள் முகாம்களுக்குான திட்டங்களை பல்கலைக்கழகங்களின் அளவில் நடத்துகின்றன. திட்ட அலுவலர்களுக்கு மத்திய அரசால் ஊக்கத்தொகையை கல்லூரி ஆசிரியர்களுக்கு ரூ. 400/- மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ரூ.200/- வழங்கப்படுகின்றது. இந்த தொகையைானது அவர்கள் நிர்வாக செயல்கள் மற்றும் பணிபுரிபவர்களை நடத்தி செல்வதற்காக வழங்கப்படுகிறது. அத்தொகையானது மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து முடிவு எடுக்கப்படுகிறது. கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்ப | பயிலகங்களில் ஒரு அணிக்கு 100 மாணவ மாணவிகள் சேர்க்கப் படுகிறார்கள். பள்ளிகளில் 50 மாணவ, மாணவியர் ஒரு அணிக்கு சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். ஒரு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஒரு அணிக்கு அமர்த்தப்படுகிறார். அரசாங்கத்தினரால் கொடுக்கப்படும் தொகையானது மாணவர்களுடைய களப்பணி, போக்குவரத்து செலவிற்காகவும் மேலும் திட்டப்பணிகளுக்கும் பயண்படுத்தப்படுகின்றன.


பொதுவாக மத்திய அரசு மாநிலங்களுக்கு தங்கள் தொகையை தாமதிக்காமல் குறிப்பிட்ட காலத்தில் அனுப்புகின்றன. ஆனால் சில மாநிலங்கள், மிக தாமதமாகவே பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் அனுப்புகின்றன. நமது மாநிலத்தில் இம்மாதிரியான தாமதங்கள் ஏற்படுவதில்லை.

 

மேலும் பார்க்க..

நாட்டு நலப்பணித் திட்டம் தோற்றமும் வளர்ச்சியும் – பகுதி – 1

 

கட்டுரையின் ஆசிரியர்

டாக்டர் ஜெ. விசுவதாஸ் ஜெயசிங்

இயக்குநர்,

பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

சென்னை சமுதாய பணிக்கல்லூரி, சென்னை – 8.

நாட்டு நலப்பணித் திட்டம் தோற்றமும் வளர்ச்சியும்

நாட்டு நலப்பணித் திட்டம் தோற்றமும் வளர்ச்சியும்

           ஒரு நாட்டின் எதிர்காலம் அந்த நாட்டின் குழந்தைகள் மற்றும் இளைய சமுதாயத்தினரின் வளர்ச்சியையும், மேம்பாட்டையும் சார்ந்திருக்கிறது. இந்த குறியிலக்கு, இளைஞர்களை வளர்த்தெடுப்பதற்கான செயல்திட்டங்கள் அமைப்புத் திட்டங்கள், நிகழ்ச்சி நிரல்கள் முதலியவற்றின் அவசியம் பற்றி தொடர்ந்து வலியுறுத்துகிறது. சக்தி குவிந்த, ஆற்றல் வாய்ந்த இந்த முன்னேற்றத்திற்குரிய உந்துசக்திகளையும், வழிகாட்டுதல்களையும் இளைஞர்கள் தங்கள் எதிர் நோக்கியிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் ஆளுமையை மேம்படுத்திக் கொள்ளவும், தங்கள் சொந்தக்கால்களில் நிற்கவும் கல்வியை நாட வேண்டியது அத்தியாவசியம் என்று பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்கள். இன்று பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழுந்தைகளுக்குப் பல வசதிகளை செய்து தருவதோடு அவர்களுடைய எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றித் தந்து விடுகிறார்கள். எனவே குடும்ப நிர்வாகம் என்பதில் இளைய தலைமுறையின் பொறுப்பு அதிகமிருப்பதில்லை. தவிர சமூக விஷயங்களிலும் அவர்கள் பங்கேற்றல் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது. நகர மயமாக்கப்பட்ட சமூகத்தின் ஒரு உள்ளார்ந்த தன்மை இது. இந்த கணிப்பொறி யுகத்தில் தவிர்க்க முடியாத நிலை இது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த உண்மையைக் கணக்கில் கொண்டால் இளைய தலைமுறையினரின் ஆளுமையை சமுதாயப் பணிகளின் மூலம் வளர்க்கும் பொறுப்பு கல்வி நிறுவனங்களைச் சார்ந்ததாகிறது. சமுதாயப் பணிகள் இளம் வயதிலேயே வாழ்வுண்மைகளை மனப்பக்குவத்தை உடையவர்களாக இளைய தலைமுறையினரை அறிந்துணரும் மேம்படுத்துகிறது என்று சொன்னால் மிகையாகாது.

‘நாம் முன்பு தொண்டு கொண்ட
வேள்வியில் அன்று நீ கொண்ட கோல….”

            என்ற சேக்கிழார் வரிகளுக்கேற்ப பல பெற்றோர்கள் சமுதாயத்து தொண்டின் மதிப்பை உணர்ந்து தங்கள் ஆருயிர் செல்வங்களை பொதுத் தொண்டு மற்றும், நாட்டு நலப்பணித் திட்டத்திலும் ஈடுபடுத்துகின்றனர். ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் நாட்டு நலப்பணித் திட்டத்தைப் பயில்வோரின் எண்ணிக்கையை வருடத்திற்கு 10% என்ற அளவில் இந்த செயல்திட்டத்தின் தரம், நிர்வாகம் முதலியனவற்றின் முக்கியத்துவத்தில் கவனம் செலுத்தி, விரிவாக்கத்தோடு கூட வலுப்படுத்த வேண்டியதும் அவசியம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

சமூகம் என்பது ஒரு தனி மனிதனை மட்டும் உள்ளடக்கியதல்ல; பாரதியாரின் வரிகள்,

அனைத்து கெள் உன்னை சங்கமம் ஆக்கு
மானிட சமுத்திரம் நானென்று கூவு போல, அஃது

ஒரு சமுத்திரம் அம்மானிட சமுத்திரத்தில் புதிய 20 அம்ச கல்வி திட்டம் சங்கமம் ஆகும் போது மேன்மேலும் சமுதாயபணி வளர வழி வகுக்கிறது.

நாட்டு நலப்பணித்திட்டம் தோற்றமும் வளர்ச்சியும்

தோன்றிற் புகழோடுத் தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

-திருவள்ளுவர்


ஆம் சமுதாயப்பணி திட்டங்கள் விநாடிப் பொழுதில் மறையும் நீர் குமிழி போல அல்லாமல் அதன் தொண்டு தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. ஆங்கிலேய கல்வி முறை ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து நடக்கும்படியாக அதிகாரிகளை உருவாக்கித தருவதான குறுகிய நோக்கங்கள், அடங்கிய குறிக்கோள்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தது. நமது நாடு சுதந்திரமடைந்த பின்னரும் இந்த கல்வி முறை தொடர்ந்தது. இந்த கல்விமுறை தான் படித்தவர்கள், படிக்காதவர்கள், அறிவாளிகள், பொது ஜனங்கள் ஆகிய பிரிவினர்களுக்கிடையேநிலவும் பெரிய இடைவெளிக்கு காரணம். எனவே ஏட்டுக் கல்வியோடு தனிமனிதன் என்ற அளவிலும், சமூக அங்கத்தினர் என்ற வகையிலும் முழுமை உடையவனாக்கும் பயிற்சியும் மாணவர்களுக்குத் தரப்பட வேண்டியது அவசியம் என்று சுதந்திரத்திற்குப் பின்னர் சிந்தனையெழுந்தது.

தவிர அரசாங்கம் மற்றும் கல்வியாளர் ஆகிய இருதரப்பினருமே மேற்குறிப்பிட்ட சிந்தனையெழுச்சியின் விளைவாக, கல்வியின் எல்லா நிலைகளிலும், இன்றியமையாத ஒரு பிரிவாக சமூக மற்றும் தேசியப் பணிகள் சில பலவற்றை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்று கருதினார்க்ள் நற்பண்புகள், கட்டுப்பாடு, உடலுழைப்பின் உயர்வில் நம்பிக்கை முதலியவற்றை மாணவர்கள் மனதில் உருவாக்கவும் மேம்படுத்தவும் இளைய சமுதாயத்தினரிடம் தங்கள் சமூகப் பொறுப்பு குறித்த நினைப்பை வளர்த்தெடுக்கவும் சமூக நலத்திட்டம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் குறித்த கல்விப்பயிற்சி முக்கிய கருவியாக உபயோகப்படும் என்று நம்பப்பட்டது.

நமது நாடு சுதந்திரமடைந்ததிலிருந்தே சமுதாய நலப்பணியை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவது என்ற கருத்து நாட்டின்முன்பு பரிசீலனைக்கென வைக்கப்பட்டது. இளைஞர்களால் சமூதாயப்பணி மேற்கொள்ளப்படுவது என்ற ஆலோசனையை இராதாகிருஷ்ணன் ஆலோசனைக் குழுதான் முதலில் முன்வைத்தது என்றாலும் அது சோதனைத்திட்ட முயற்சியின் அடிப்படையில் ஒரு தன்னார்வ அணுகுமுறையை உருவாக்கி தந்தது. இந்த பரிந்துரையின் பலனாய் உழைப்பாற்றல் மற்றும் சமூக நலப்பணி முகாம்கள் அமைக்கப்பட்டன.


            1955-ல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு மாணவர்களால் சமுதாயப்பணி மேற்கொள்ளப்படுதல் என்ற கருத்தை முதல் மந்திரிகளின் முன் வைத்து 19 வயதிலிருந்து 22 வயதான எல்லா இளைஞர்களும் மங்கையரும் தேசத்திற்கான சமுதாயப்பணிகளில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறினார். அதற்குக் தேவைப்பட்ட மிக அதிகசெலவுகளையும் நிர்வாக இயந்திரங்களையும் கருதி நேழு அவர்கள் இந்த திட்டம் ஆரம்பத்தில் பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கு மட்டும் இருக்கட்டும் என்றும், அந்த மாணவ மாணவியர் பட்டப் படிப்பை முடிக்கும் வரை குறிப்பிட்ட சில துறைகளில் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு சமுதாயப் பணியாற்ற வேண்டுவதை மேற்குறிப்பிட்ட திட்டம் மூலம் கட்டாயமாக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார்..டாக்டர். சி .டி. தேஷ்முக் தலைமையில் ஒரு குழு நாட்டு நலப்பணித் திட்டங்குறித்து பரிசீலிக்கவும் அதன் பேரில் நிலையான சில பரிந்துரைகள் முன் வைக்கவுமாய் அமைக்கப்பட்டது. இந்த குழுவானது உயர்நிலைப்பள்ளிப் படிப்பை படித்து கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ சேரும் நிலையிலுள்ள எல்லா மாணவர்களுமே 9 முதல் 12 மாதங்களுக்கு சமூகப் பணி செய்ய வேண்டியது அத்தியாவசியமாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது.மேற்படி சமூக நலப்பணித்திட்டத்தில் கொஞ்சம் ராணுவப் பயிற்சி, சமூக நலப்பணி, உடலுழைப்பு மற்றும் பொதுக்கல்வி முதலியவை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. பல நிலைகளில் இந்த திட்டம் பரீசீலிக்கப்பட்டது என்றாலும் இறுதியில் அதன் செலவினம் மற்றும் நடைமுறைப்படுத்துவதிலுள்ள சிரமங்கள் முதலியவற்றை எண்ணி திட்டம் கைவிடப்பட்டது. தவிர இந்தத் திட்டம் சமூக நலப்பணியை கட்டாயமாக்கியதும் கல்வி கற்பதற்காகும் வருடங்கள் இந்த திட்டத்தினால் ஒரு வருடம் அதிகமாகக் கூடிப்போனதும் பொது மக்களிடையே ஆதரவைப்பெற முடியாமல் இந்த திட்டம் கைவிடப்பட்டதற்கு ஒரு காரணமாகிறது.


            1960ஆம் வேண்டுகோளுக்கிணங்க பேராசிரியர் கே. ஜி. சாயிதேன் ஆண்டில் இந்திய அரசின் யுகோஸ்லாவியா, செக்கோஸ்லாவாகியா, ஜெர்மெனி, ஜப்பான், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள், நார்வே மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் நாட்டு நலப்பணிகள் நடந்தேறும் விதங்களைக் கண்டறிந்தார். அவருடைய ஆய்வலசல்கள் இை பள்ளிப்படிப்பை முடித்து வேலைக்கோ அல்லது மேற்படிப்புக் இளைய தலைமுறையினர் காகப் பல்கலைகழகத்திற்கோ செல்லும் முன்னர் ஒரு வருட காலம் நாட்டு நலப்பணிகளை அவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்பதால், நாட்டு நலப்பணித்திட்டம் மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற தேஷ்முக் ஆலோசனை குழுவின் பரிந்துரை வரவேற்கப்படவில்லை. கல்வி பயிலும் காலக்கட்டத்தில் ஒரு இறுக்கமற்ற அமைப்புத் திட்டம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலுமான பாடத்திட்டங்களுக்கு இணையாகத் தரப்படும் நாட்டு நலப்பணித் திட்டப் பயிற்சி என்ற கல்வி முறை பரிந்துரை செய்யப்பட்டது. மேல் ஆரம்பநிலைக் கல்விக் கட்டத்திலிருந்து தொடங்கி பல்கலைக்கழகப் படிப்பிலும் தொடர்வதாய் இந்த நாட்டு நலப்பணித் திட்டப் பயிற்சி அமைய வேண்டும் என்றும் அப்படியிருந்தால் தான் இளம் பருவத்திலிருந்தே தகுந்த கண்ணோட்டங்களும், கருத் தோட்டங்களும் வளர்த்தெடுக்கப்பட்டு எல்லா இளைய தலைமுறையினரையும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் கொண்டு வர முடியும் என்றும் கருதப்பட்டன.

நாட்டு நலப்பணித்திட்டம் தோற்றம்

            தேசிய கல்வி குழுமம் (1964–66) பள்ளிக்கும், சமூகத்திற்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தித் தரவேண்டியதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது. மாணவர்கள் அவர் தம் கல்விகாலகட்டத்தின் எல்லா நிலைகளிலும் ஏதாவது ஒரு சமூகப்பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டியது அவசியம் என்பது இந்த குழுமத்தின் பரிந்துரையில் ஒன்று. 1967 ஏப்ரல் மாதம் நடந்த மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் இந்த பரிந்துரை கவனத்தில் கொள்ளப்பட்டது. பல்கலைக்கழகப் படிப்பில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் ஏற்கனவே தன்னார்வத்தின் அடிப்படையில் இயங்கிவரும் தேசிய மாணவர் படைப்பிரிவில் சேர்ந்துகொள்ள அனுமதிக்கப்படலாம் என்றும் இந்த பிரிவிற்கு ஒரு மாற்றாக நாட்டுநலப்பணித்திட்டம் என்று அழைக்கப்படும் ஒரு புதிய செயல்திட்டத்தை மாணவ சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தலாம் எனவும் இந்த மாநிலக் கல்வி அமைச்சர்கள் பரிந்துரை செய்தார்கள். 1967ல் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாடு இந்தப்பரிந்துரையை வரவேற்றது. 1967ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் நாள், காந்திஜியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டச் சமயம் அப்பொழுது மத்திய அரசின் கல்வி அமைச்சராக இருந்த டாக்டர். வி.கே.ஆர்.வி.ராவ் எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கி 39 பல்கலைக்கழகங்களில் 40,000 மாணவர்களை அங்கத்தினராகச் சேர்த்துக்கொண்டு நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பை துவக்கி வைத்தார்.

            சமூகத்தின் நடப்புண்மைகளை மாணவ சமுதாயம் அறிந்துகொள்ள வழிவகுப்பதன் மூலம் கல்வி என்பது சமூகத்தினின்று பிரித்து நிற்பது என்ற கண்ணோட்டத்தையும், நடப்புநிலையையும், சீர்ப்படுத்துவதே இந்த பயிற்சி திட்டத்தின் முக்கிய நோக்கம். நேரடி அனுபவத்தின் மூலம் சமுதாய பிரச்சினைகளை பற்றி அறியவும், ஆராய்ந்து அலசவும் அதிக அளவில் மாணவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவதன் மூலம் அந்த வாய்ப்புகளின் வழி அத்தகைய பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகளை பற்றியும் புரிதலை மாணவர்களிடையே உருவாக்க வாய்ப்பளிப்பதன் மூலமும் அத்தகைய நடவடிக்கைகளில் மாணவு சமுதாயம் முனைப்போடு இறங்கி பணியாற்ற உத்வேகமளிப்பதன் மூலமும் மேற்குறிப்பிட்ட இடைவெளியை சரிப்படுத்தப் புகுந்தது, இந்த திட்டம். சேவை வழி கல்வி என்ற கூடுதல் பரிமாணத்தை நமது கல்வி திட்டத்திற்கு நாட்டுநலப்பணித்திட்டம் வழங்குகிறது.

நாட்டு நலப்பணித்திட்ட நோக்கங்கள்

            நோக்கமில்லா செயல் ஏக்கம் தரும் ஆகவே நாட்டுநலப்பணித்திட்டம் கீழ்காணும் நோக்கங்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.


1. மாணவர்களின் சமூகப்பிரச்சினையைத் தட்டியெழுப்புதல் பொது மக்களோடு, பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை மாணவ சமுதாயத்தினருக்கு வழங்குதல்.

2. மாணவர்களை, வன்முறையற்ற ஆக்கப்பூர்வமான சமூகத்தைச்சார்ந்த நடவடிக்கைளில் ஈடுபடுத்துதல்

3. மாணவர்கள் அவர்களைப் பற்றியும், அவர்களைச் சார்ந்த சமுதாயத்தினை பற்றியும், சமூக அரசியல்சார் மற்றும் பொருளாதார நடப்புண்மைகளை எதிர்கொள்வதன் மூலம் அறிவுவிளக்கம் பெறச் செய்தல்.

4. அவர்களுடைய அறிவாற்றலை அவ்வப்பொழுது உருவாகும் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் உபயோகப் படுத்தும்படிச் செய்தல்.

5.ஜனநாயகமேற்கொள்வதற்கானரீதியான தலைமைப் பொறுப்புகளை திறமைகளை மாணவசமுதாயத்தினரிடம் வளர்த்தெடுத்தல்,

            பொதுவாக நாட்டு நலப்பணித் திட்டத்தின் குறிக்கோள்களும், இலக்குகளும் கல்வி மற்றும் சேனை என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பணித்திட் ஈடுபடுவதன் வாயிலாக மாணவர்களின் கண்ணோட்டமும் சமூகத்தின் எதார்த்த நிலை அல்லது நடப்புண்மைகளை பற்றி அவர்களின் திறன் தெளிவா வாக மதிப்பிடுதலும் மேம்படுத்தப்படவேண்டும் என்பது முக்கிய குறிக்கோள்களாகக் கொள்ளப்படுகிறது. இப்படி செய்வதின் பலனாய் கல்வியை சமூகத்தோடு இணைத்து மாணவர்களின் சமூகச்சாரி செய்யும். தன்னை பற்றி தான் சார்ந்த சமுதாயத்தை பற்றி அறிதல் வாழ்க்கைக்கு அவன் கற்கும் கல்வியை சம்பந்தமுடையதாக மூலம் ஏற்படுத்துவதும் அப்படி பெறப்பட்ட கருத்தில் அறிவுக்கான செயலாக்க தளத்தைத் தருவதும், இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள். இந்த திட்டத்தின் இரண்டாவது குறிக்கோள் அதனுடைய நலப்பணியை ஒரு முகப்படுத்தலோடு தொடர்புடையது.சமூகங்களை வெறுமே கல்வி கற்க தேவையான தீவனமாக மட்டும் பார்த்து அவற்றின் பிரச்சனைகளை தீர்ப்பதில் உதவ அக்கறை காட்டாமல் பயன்படுத்திக்கொள்வது. மனிதநேயம் அற்ற போக்கு, இந்த – கண்ணோட்டத்தின் விளைவாய் மாணவர்கள் சமுதாயத்திற்கு சேவை செய்வது, புறக்கணிக்கப்படமுடியாதது. அதற்கும் மேலாய் இந்த பணி மாணவரின் கடமையாய் கருதப்படவும், செய்தேஆகவேண்டிய, தவிர்த்துவிடலாம் என்றுநினைக்ககூடாத தலையாய கடமையாய் கொள்ளப்படவேண்டியது அவசியம்.

நாட்டு நலப்பணித்திட்ட பொதுக்கொள்கைகள்

பூவினைசூடாவிட்டால்
பூவைக்கு பொலிவே இல்லை


            திட்டங்களில் கொள்கைகள் இல்லாவிட்டால் திட்டத்திற்கு மதிப்பே இல்லை. எனவே இத்திட்டம் பல பொதுக் கொள்கைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. நாட்டு நலப்பணித்திட்டம் என்பது அடிப்படையில் ஒரு கல்வி திட்டமாகும். மாணவ மாணவியர். ஆசிரியர்கள் ஆகிய இரு சாராரும் வாழ்வுண்மைகளைக் கண்டறிய எதிர் கொள்ள வைக்கப்பட வேண்டியது அவசியம். அவர்கள் கிராமங்களிலும், நகர்ப்புற பகுதி களிலும் நிலவும் ஆழமைவுகளை ஆய்ந்தறியவும், புரிந்துகொள்ளவும், கொள்வதோடு மனித அளவிலும், பொருளளவில லுமா வளர்ச்சிக்குத் தகுந்த தேவை அடிப்படையிலான திட்டங்களைத் தீட்டவும் வேண்டும்.

அவர்கள் தேவையான சில பல விஷயங்களை அறிந்து கொண்டவர்களாக்கிக் கொள்ள வேண்டும். தேவையா திறன்களைத் தங்களிடம் வளர்த்துக் கொள்வதோடு, திட்டம் தீட்டுதல் மற்றும் செயல் திட்டங்களை நடைமுறைப் படுத்துதல் முதலியவற்றையும் கற்றுத் தர வேண்டும். இந்த திட்டத்தின் முழுப்பயன் என்ற விதத்தில் மாணவு’ மற்றும் ஆசிரிய விருப்பார்வத் தொண்டர்கள் ஒரு தேசியத் ” கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்வதோடு நாளைய குடிமகன்கள் என்ற அளவில் தங்கள் ஆளுமைகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இரண்டுவருடகால தொடர்ச்சியான செயல் திட்டங்கள், அவற்றிற்கிடையே ஒரு சிறப்பு முகாம் திட்டம் முதலியவைதனக்குத் திருப்தியளிக்கும் படியான நலப்பணி ஈடுபாட்டிற்குரிய ஒரு ஒருங்கிணைந்த வழிமுறை அல்லது அணுகுமுறையாக உபயோகப்படுத்தப்படண்ேடும்.


நாட்டு நலப்பணித் திட்டத்தின்உள்ளடக்கம்

  நாட்டு நலப்பணித்திட்டத்தின் பொதுக்கருத்துக்கு ஏற்ற விதத்தில் ஒரு கல்வி நிறுவனம் நேரிய வலுவான ஒரு செயல் திட்டத்தை வளர்த்தெடுக்க கீழே தரப்பட்டுள்ள படிநிலைகளை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது. “எண்ணிதுணிகக்கருமம்” என்ற வள்ளுவரின் கூற்றுங்கிணங்க தனக்குத்தானே குறிக்கோள்களை வகுத்துக்கொண்டு அதன் வழியே செல்ல வழி வகுக்கிறது. கல்லூரிக்கு அருகாமையிலேயே கிராமம் அல்லது’குடிசைவாரிய பகுதிகளை தேர்ந்தெடுத்து சேவை செய்யவேண்டும்.

சமூக மற்றும் பொருளாதாரக் ‘ கண க்கெடுப்புகளைத் (SURVEY) தாங்கள் தத்தெடுத்த கிராமங்களிலாவது அல்லது குடிசை வாரிய பகுதிகளிலாவது மேற்கொள்ளுதல். மேற்கொண்ட கணக்கெடுப்பு/அல்லது ஆராய்ச்சிகளின் மூலம் சமுதாயத்திலுள்ள பிரச்சினைகளை கண்டறிந்து ஆவண ‘ செய்யமுயற்ச்சித்தல்.

‘தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமும், மக்களிடமும் அரசாங்க நிறுவனங்களிடமும் தொடர்பு கொண்டு அவர்களின் ‘செயல்பாடு திட்டங்களின் முன்னுரிமைகளைக் கண்டறிதல். மக்களின் தேவைகளின் அடிப்படையில் அவர்களுடைய பிரச்சனைகளுக்குத் தகுந்த திட்டம் தீட்டுதல்

அந்த செயல் திட்டங்களை ஆக்க பூர்வமான வழியில் நடை முறைப் படுத்துவதற்கென மூன்றிலிருந்து ஐந்து வருட காலகட்டத்திற்குரிய ஒரு அமைப்புத் திட்டத்தினை வரைந்து கொள்ளவும் அவ்வப்பொழுது அதன் விளைவு அல்லது தாக்கம் பற்றி மதிப்பாய்வு நடத்த திட்டம் தீட்டிக் கொள்ளவும். எந்த ஒரு திட்டத்தையும் எழுத்துருவில் வடித்து, மனித மற்றும் பொருட்கள் அளவிலான தேவையான வள ஆதாரங்களையும் வழிவகைகளையும் கைக்கொண்ட பிறகு ஒரு சிறப்பு முகாம் நடத்துவதற்கான செயல் திட்டம். அப்படி தீட்டப்படும் திட்டம் செயலாக்கம் பெற்றதாக, இரண்டு அல்லது மூன்று – மாதங்களுக்கு முன்னதாகவே அத்தகையதொரு திட்டத்தைத் – தீட்டுவதும், அதற்கான வழிவகைகளைக் கைக்கொள்வதும் அவசியமாகியது.

            பணி செய்யும் இடங்களைப் படிப்படியாக அதிகரித்து பலருக்கு பயன்படுமாறு திட்டங்களை அமைத்தல்* நாட்டு நலப்பணித் திட்டத்தில் பங்கேற்கும் அனைத்துத் தொண்டர்களையும் சுழல்முறை அடிப்படையிலோ அல்லது செயல்திட்ட அடிப்படையிலோ அணிகளாக இயங்கச் செய்யபோதுமான எண்ணிக்கையில் வேறு செயல்திட்டங்களும்
இருக்கலாம்.


நாட்டுநலப்பணித்திட்டத்தின் கீழுள்ள செயல் திட்டங்களாவன

 
அ. தொடர்பணிகள் (Regular / Concurrent Programmes)

 ஆ. சிறப்பு முகாம் திட்டங்கள் (Special Camps)

அ.தொடர்பணிகள்

            மாணவ தன்னார்வத் தொண்டர்கள் ஒவ்வொரு வாரமும் ஓய்வு நேரங்களில் சமூக நலப்பணி நடவடிக்கைகளி பங்கெடுக்கிறார்கள் என்பதை இது குறிக்கிறது. அவர்கள் தங்கள் கல்லூரிப் படிப்பிற்காகும் காலகட்டத்தின் ஒரு வருடத்தி என்று குறைந்த பட்சம் 120 மணிநேரமாவது சமூக நலப்பணிக் திட்டங்களில்உழைப்புஎதிர்பார்க்கப்படுகிறார்கள்.வேண்டும் நல்க சமூக சேவைத் திட்டங்களில் மாணவர்களைப் பங்கேற்கச் செய்யும் நோக்கங்களாவன உள்ளு கொள்வதும், (1) தாங்கள் வாழும் சமூக சூழலைப் பற்றிய தங்கள் அறிதலை மாணவர்கள் ஆழமாக்கி பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வைத் தங்களிடம் வளர்த்துக் கொள்வதும் செயல் திட்டங்களைத் தீட்டுவதில் ஆற்றல் பெற்றவர்களாகவும் மக்கள் பிரச்சினைகளில் சிலவற்றைத் தீர்க்கவும் குறைக்கவும் ஜனத்தொகையில் பலதரப்பட்ட பிரிவுகளோடு இணக்கமாய் செயலாற்றவும். ஒத்துழைக்கவும் கற்றுக்கொள்வது முதலியனவாகும். நாட்டு நல பணித்திட்டத்தில்
நிலைத்த முழு முதற் செயல்பாடுகள் :


1.நிறுவனம்சார்ந்தசேவைகள்

2.மருத்துவநலப்பணிகள்

3. தேர்ந்தெடுக்கும் பகுதிகளில் பணிகள் (தத்தெடுத்த)

4.சமூகசுற்றாய்வு

5. விபத்து அல்லது திடீர் இடர் நிர்வாகம்.. (Disaster Relief)


(1) நிறுவனம் சார்ந்த சேவைகள்

            நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் பள்ளிகள், அனாதை இல்லங்கள், இளங்குற்றவாளிகள் கல்வி நிலையம்,  ஊனமுற்றோருக்கான இல்லங்கள், முதியோர் இல்லங்கள் ஆதரவற்றோர் இல்லங்கள், சீர்திருத்தப்பள்ளிகள், பிற்பாதுகாப்பு இல்லங்கள், முதலிய நிறுவனங்களுக்குச் சென்று சமுதாயப்பணி/செய்து வருகிறார்கள்.


(2)பள்ளிகள்

            சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நலிந்த ‘ பிரிவுகளைச் சார்ந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டத் தொண்டர்கள் சேவை செய்கிறார்கள். தவிர, மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளின் கற்பனையையும், படைப்பாற்றலையும் வளர்த்தெடுக்க இயலாதவர்களாய்இருப்பின்அவர்களுக்கு மாணவர்கள் நலப்பணிசெய்யப்போகிறார்கள்.


பள்ளிகளின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆற்றி வரும் பலதரப்பட்ட சேவைகள் கீழே தரப்பட்டுள்ளன


1. குறைந்த மதிப்பெண்கள் வாங்குகிற மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருதல்.

2. பள்ளியிலிருந்து பாதியில் நின்று விடுபவர்களைப் (school dropout) பற்றி ஆய்ந்தலசி அவர்களை மீண்டும் பள்ளிக்கு வர செய்தல்.

3. மாணவர்களுக்குப் புதிர்ப் போட்டிகள் ஏற்பாடு செய்தல்.

4. விளையாட்டுகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தி பரிசுகளும் வழங்குதல்.

5. குழந்தைகளுக்காக விடுமுறை முகாம்கள் ஏற்பாடு செய்தல்

6. ஏழை, எளிய மாணவர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்து குழந்தைக்கும், அதன் பெற்றோருக்கும் ஆலோசனை கூறல், உதவிகள் கிடைக்கும் வழி வகைகளை எடுத்துக் கூற, – பரிந்துரைத்தல், பொருளாதார உதவி கிடைப்பதற்கான உத்திரவாதம் போன்றவற்றின் மூலம் குழந்தைக்கு உதவி செய்ய முயலுதல்.

7 மருத்துவ நலப் பணி மருத்துவப் பயிற்டு போ வகுப்புகளை ஏற்பாடு செய்தல்.

8. தேவைப்பட்டால் குழந்தைகள் குறித்த கணக்கெடுத்தல்

பொருளாதார ரீதியாகவும், சமூகரீதியாகவும், பிரிவினருக்காக உள்ள நிறுவனங்கள்!


            மேல் குறிப்பிட்ட நிறுவனங்கள் தாய், தந்தையர அனாதை குழந்தைகளுக்கு, அல்லது ஆதரவற்றோருக்கு இளங்குற்றவாளிகளுக்கு, பிச்சைக்காரர்களுக்கு முதியோர்களுக்கு என்று தொடரும் பல நலிந்த பிரிவினருக்குரியதாக இருக்கலாம். இந்த குழுக்கள் அல்லது பிரிவினர், சமூகத்தின் பிற பிரிவுகளிலிருந்து மாறுபட்டணாக அந்த விதத்தில் அவர்களுக்கு நிறுவனத்தை சார்ந்த பராமரி பாதுகாப்பும் தேவைப்படுகிறது. நாட்டுநலப் பணிதிட்ட தொண்டர்கள் மேற்குறிப்பிட்ட பிரிவினருக்கு குறிப்பிட்டிருப்பது போன்ற சேவைகளைச் செய்து வருகிறார்கள்

 1. உடை உணவு, மருத்துவ உதவி முதலியவற்றை பெறுவதற்காக உள்ளுர் வள ஆதாரங்களைத் திரட்டுதல்,

 2. ஓய்வு, நேரத்தை மகிழ்ச்சியாகப் கழிக்க மனமகிழ் திட்டங்களும், பாட்டுப் போட்டிகளும் நடத்துதல்,

3. கல்வித் திட்டங்கள் ஏற்பாடு செய்தல்.


உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், ஊனமுற்றோர்களுக்கான சேவை

            வாய் பேச முடியாத, காதுகேளாதோருக்கான, சேவை நிறுவனங்கள், பார்வை இழந்தோருக்கான இல்லங்கள், மனநோயாளிகளுக்கான மையங்கள், மற்றும் கை, கால் ஊனமுற்றவர்களுக்கான அமைப்புகள் போன்ற நிறுவனங்களில் நாட்டு நலப்பணித்திட்டத் தொண்டர்கள் மேற்கொள்ளும் பணிகள் பின்வருமாறு.

1. பார்வையற்றவர்களுக்குப் படித்துக்காட்டுதல் / எழுதித்தருதல்  

2. ப்ரெயில் மொழியில் பார்வையற்றவர்களுக்கும் பாடங்களை தயாரித்தல்.

3. உதட்டசைவு, வாசிப்பு மற்றும் சமிக்ஞைகள் வாசிப்பு முதலியவற்றைப் பயின்று அதன்மூலம் காது கேளாதோருடன் உரையாடுதல்.

4.பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தடை

5. ஊனமுற்றோருக்கு கடிதம் எழுதித்தருதல்,

6.இந்த பிரிவினரின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும்
உறவினர்களைத் தொடர்பு கொள்ளுதல்,

7. மேற்குறிப்பிட்ட நிறுவன அதிகாரிகளுக்கு நிதித்திரட்டும்
பணிகளில் உதவி புரிதல்,


மருத்துவப்பணிகள்

            நகரிலுள்ள கல்லூரிகள், பள்ளிகளிலுள்ள நாட்டு நலப்பணித்திட்டத் தொண்டர்கள் மருத்துவமனைகளிலும் சேவை செய்து வருகிறார்கள். அரசாங்க மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளுக்கும், மருந்துகளுக்கு மிக அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வருவதால் நிலைமையை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த மருத்துவமனைகளில் போதுமான ஊழியர்களும் இல்லை. எனவே இங்கு நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களின்
பணிகள்மருத்துவமனைக்கு உள்ளும் புறமும் தேவைப்படும் பணிகளாகும்.:

மருத்துவமனைக்கு உள்ளே

1. நோயாளிக்கு வழிகாட்டிகளாக பணிபுரிவது, நோயாளிகள் பெயர், முதலான விவரங்களைப் பதிவு செய்வதில் உதவி, மருந்துகள் வழங்குவதில் உதவி, தவிர மருத்துவர்களுக்கும், செவிலியருக்கும் உதவி புரிபவர்களாக இயங்குவது.

2. வார்டுகளைப் பராமரிக்கும் பணி, நோயாளிகளுக்கு உணவு ஊட்டுவதில் உதவி செய்வது, அவர்களுக்கு கடிதங்கள், எழுதிக் தந்து உதவுவது அவர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல்.

3. அங்க ஊனத்துறை : கைவினைத் தொழில்கள் கற்றுத்தருதல், பொம்மைவங்கிகள், நூலகங்கள், முதலியவற்றை நோயாளிகளுக்கு ஏற்பாடு செய்தல்.

4. அயன் மருத்துவம் மற்றும் வாழ்க்கைத் தொழில் சார மருத்துவம் : உடற்பயிற்சிகளை செய்வதில் நோயாளிகளுக்கு உதவுதல்.

5. இரத்த வங்கி : நோயாளிகளின் உறவினர்களிட இரத்ததானம் கொடுக்க ஊக்கப்படுத்துதல், X இரத்ததானம் செய்ய ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் நிர்வாக வேலை


மருத்துவமனைக்கு வெளியேயான பணிகள்

1. குழந்தைகள் நல மருத்துவக் காப்பகங்களில் உதவி.

2. நோய்தடுப்பு பிரசாரப் பணிகள்.

3. கிராமங்களிலும், குடிசை பகுதிகளிலும் சுகாதார நலக் கல்ல
நிகழ்ச்சிகள்.
4. சுற்றுச் சூழல் சுகாதார செயல் ஊக்கப் பணிகள்.

5. கண் மருத்துவ முகாம்கள், பல் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு. செய்தல், தொழுநோய் பற்றிய பிரசாரப் பணிகள் செயலாக்க
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.

6.குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற ஊக்குவித்தல்

இதன் தொடர்ச்சி அடுத்த  இதழில்….

கட்டுரையின் ஆசிரியர்

டாக்டர் ஜெ. விசுவதாஸ் ஜெயசிங்

இயக்குநர்,

பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

சென்னை சமுதாய பணிக்கல்லூரி, சென்னை – 8.

பத்திரிகை மன்றம் (PRESS COUNCIL)

பத்திரிகை மன்றம் (PRESS COUNCIL)

     பத்திரிகைகள் சுதந்திரத்தோடும் பொறுப்போடும் நடந்து கொள்ள வேண்டும். நமது நாட்டில் அமைந்த முதல் பத்திரிகைக் குழு (Press commission) நாட்டிலுள்ள பத்திரிகைகளின் நிலையையும் தரத்தையும் பற்றி ஆராய்ந்தது. சில நன்கு அமைந்த செய்தித்தாட்கள் உயர்ந்த தரத்தோடு வி செயல்பட்டாலும், பெரும்பாலான பத்திரிகைகள் தங்களது விற்பனையைக் கூட்டும் வாணிபநோக்கில் ‘தரக்குறைவாகவும்’ பண்பற்ற முறையிலும் தனிமனிதர்களைத் தாக்கும் வகையிலும் மஞ்சள் இதழியல் ‘போக்கிலும்’ எழுதுவதாகச் சுட்டிக்காட்டியது. பத்திரிகை மன்றம் (PRESS COUNCIL)

            பத்திரிகைக் குழு “பத்திரிகைகளின் சுதந்திரத்தைக் கட்டிக் காக்கவும், இதழியல் தொழிலில் ஈடுபட்ட அனைவரிடமும் பொறுப்புணர்ச்சியையும் தொண்டு மனப்பான்மையையும் வளர்க்கவும்” ஒரு பத்திரிகை மன்றத்தை (Press council) அமைக்க வேண்டுமென்று பரிந்துரைத்தது. ஸ்வீடனில் 1916இல் முதல் தடவையாக பத்திரிகை மன்றத்தை அமைத்தனர். இதனைப் பின்பற்றி உலகில் பல்வேறு நாடுகளிலும் பத்திரிகை மன்றங்களை அமைத்திருக்கின்றனர். இப்பொழுது 40 நாடுகளில் பத்திரிகை மன்றங்கள் உள்ளன.

சட்டப்பின்புலம்

            நமது நாட்டில் முதல் பத்திரிகைக் குழுவின் (Lok ) பரிந்துரையைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவையில் sabha) பத்திரிகை மன்ற மசோதாவை’க் (Press Council Bill) கொண்டு வந்தனர். ஆனால் பொதுத் தேர்தலுக்காக 1957 ஏப்ரலில் நாடாளுமன்றம் கலைக்கப் பெற்றதால் மசோதா சட்டமாகாமல் செயலற்றுப் போனது.

            எட்டாண்டுகளுக்குப் பிறகு தேசிய ஒற்றுமை மன்றம் (National Integration Council), பத்திரிகை மன்றம் அமைக்க வேண்டிய தேவையை வலியுறுத்தியது. இதன்படி 1965-இல் ‘பத்திரிகை மன்றச் சட்டத்தை’ (The Press Council Act) நிறைவேற்றியது. இந்திய பத்திரிகை மன்றத்தை 1966 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் அமைத்தனர். இதன் தலைவராக நீதிபதி ஜே.ஆர். மதோல்கார் (J.R. Madhoíkar) பொறுப்பேற்றார். பத்திரிகை மன்றத்தின் அமைப்பினில் சிறிது மாற்றம் செய்து, அதன் காலத்தை நீட்டிக் கொண்டிருந்தனர். 1975இல் நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தபொழுது குடியரசுத் தலைவர் 1975 டிசம்பர் 8-இல் ஓர் ஆணை பிறப்பித்து,1976 ஜனவரி 10 முதல் பத்திரிகை மன்றத்தை நீக்கினார். பத்திரிகை மன்றம் திறமையாகச் செயல்படவில்லை என்று காரணம் கூறி ‘ பத்திரிகை மன்றம் (நீக்குதல்) சட்டத்தை’ (The Press Council Repeat Act) 1976இல் நிறைவேற்றினர்.


            நெருக்கடி நிலை நீங்கிய பிறகு. 1978-இல் பத்திரிகை மன்றச்சட்டத்தை மறுபடியும் கொண்டு வந்தனர். இந்தச் சட்டம் 1979 மார்ச்சு ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இப்பொழுது பத்திரிகை மன்றத் தலைவராக நீதிபதி ஏ.என்.சென் (Justice A N sen) இருக்கின்றார்.


அமைப்பு முறை

             பத்திரிகை மன்றத்தில் ஒரு தலைவரும் 28 உறுப்பினர்களும் இருப்பார்கள். உறுப்பினர்களில் 20 பேர் பத்திரிகையாளர்களாகவும்  5 பேர் நாடாளுமன்றத்தைச் சேர்ந்தவர்களாகவும், 3 பேர் கல்வி, அறிவியல், சட்டம், இலக்கியம், பண்பாடு ஆகிய துறைகளில் சிறப்பறிவு பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

            பத்திரிகை மன்றத்தின் தலைவரை, நாடாளுமன்ற மேலவைத் தலைவர், மக்களவைத் தலைவர், பத்திரிகை மன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஓர் உறுப்பினர் ஆகியவர்களைக் கொண்ட குழு தீர்மானிக்கும். பத்திரிகை மன்றம் சில நீதிமன்றப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் உயர்மட்ட நீதிமன்ற (Supreme court) நீதிபதிகளையே பொதுவாக பத்திரிகை மன்றத் தலைவராக நியமிக்கின்றனர்.


மன்றத்தின் பணிகள்

            பத்திரிகையின் சுதந்திரத்தைப் பேணிக்காப்பதும், செய்தித்தாட்கள், செய்தி நிறுவனங்களின் தரத்தைக் காத்து மேம்படுத்துவதும் பத்திரிகை மன்றத்தின் தலையாய் நோக்கமாதலால், அதனை நிறைவேற்றும் வகையில் மன்றம் பணிகளை மேற்கொள்கின்றது.

            மன்றம், செய்தித்தாட்களும், செய்தி நிறுவனங்களும் உயர்ந்த தொழில் தரத்தை நிலைநாட்டும் வகையில் பின்பற்ற வேண்டிய நெறி முறைக் கோட்பாடுகளை உருவாக்கித் தர வேண்டும். செய்தித்தாட்களும் செய்தி நிறுவனங்களும் சுதந்திரமாகச் செயல்பட உதவுவதும் மன்றத்தின் பணியாகும். செய்தித் தாட்களும் செய்தி நிறுவனங்களும் இதழியலாளர்களும் பொது நல நாட்டத்தோடும், பொறுப்போடும் உரிமை உணர்வோடும் பணி செய்யத் துணை செய்ய வேண்டும். இதழ்களை வெளியிடுவதில் ஈடுபட்டுள்ள எல்லாப் பிரிவினரிடமும் உருவாக்க முயல வேண்டும்.

            மன்றம், பத்திரிகைகளின் அமைப்புமுறை, செய்தித்தாட்கள், செய்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் உடைமை குவிதல் நிலை ஆகியவற்றை ஆராய்ந்து, பத்திரிகைகள் சுதந்திரமாகச் பரிந்துரைகளைச் செய்ய வேண்டும். வெளிநாட்டு உதவிகளைப் பெறும் செயல்பட வேண்டிய மதிப்பிட்டுக் கூறும் பணியும் இந்த மன்றத்தினுடையதாகும்.


செயல்பாடு

    பத்திரிகை மன்றம் அதனிடம் வரும் குற்றச்சாட்டுக்களை விசாரித்துத் தீர்ப்பளிக்கின்றது. வரையறுத்த அதிகாரத்திற்குள் 1966 1981 வரை இம்மன்றம் 800 குற்றச்சாட்டுகளை விசாரித்துள்ளது. இவற்றில் 214 குற்றச்சாட்டுகள் பத்திரிகை சுதந்திரம் தொடர்பானவைகளும் மத்திய மாநில அரசுகளின் மீது பத்திரிகைகள் கொண்டு வந்தவைகளுமாகும். 566 குற்றச்சாட்டுகள் பத்திரிகைகளின் மீது தனிமனிதர்களும், நிறுவனங்களும், மத்திய, மாநில முடிவுகளை அரசுகளும் கொண்டு வந்தவை.  மன்றத்தின் முடிவுகளை பல செய்தித்தாட்களில் வெளியிடுகின்றனர்.


    பத்திரிகை மன்றம் இதழியலாளர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வரையறுத்துக் கூறவில்லை. காலப்போக்கில் வருகின்ற வழக்குகளை விசாரித்துக் கூறுகின்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நெறிமுறையினை உருவாக்க இயலுமென்று கருதுகின்றது. பத்திரிகைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பத்திரிகை மன்றம் ஒரு பாலமாக விளங்குகின்றது.


மதிப்பீடு

            பத்திரிகை மன்றத்திற்கு இதழ்களைக் கட்டுப்படுத்த, தண்டிக்க போதுமான அளவு அதிகாரம் வழங்கப்பெறவில்லை. ஆதலால் அவை திறமையாகப் பணிபுரிய இயலவில்லை என்று கருதுகின்றனர். பத்திரிகை மன்றத்தை, “இது ரப்பர் பற்களைக் கொண்ட காகிதப் புலி’ ; ” தெளிவற்ற அதிகாரமற்ற ஓர் அமைப்பு” என்றெல்லாம் தொடக்க காலத்தில் வர்ணித்தனர். ஆனால் பத்திரிகை மன்றம் இப்பொழுது ஆற்றல் பெற்று வளர்ந்து வருகின்றது. இதன் தேவையை எல்லாத்தரப்பினரும் உணர்ந்துள்ளனர். பத்திரிகை சுதந்திரத்தையும் தரத்தையும் காக்கக் கூடிய நிறுவனமாக பத்திரிகை மன்றம் இருப்பதால், இதனை வலுவானதாக்கி, திறமையாகச் செயல்படத்தக்க சூழ்நிலையை உருவாக்கித் தருவது இந்தியப் பத்திரிக்கை வளர்ச்சிக்குத் துணை செய்யும்.

பத்திரிகை மன்றம் (Press council)

            நமது நாட்டில் பத்திரிகை மன்றத்தை அமைத்த பொழுது, அது, “செய்தித்தாட்களும, செய்தி நிறுவனங்களும், செய்தியாளர்களும் உயர்ந்த தொழில் தரத்தை நிலைநாட்டும் வகையில் பின்பற்ற வேண்டிய ‘நடத்தைக் கோட்பாட்டை’ (Code of Conduct) உருவாக்கித் தர வேண்டும்,” என்று எதிர்பார்த்தனர். ஆனால் பத்திரிகை மன்றமோ, “காலப்போக்கில்தான அறக்கோட்பாட்டை உருவாக்க இயலும்,” என்று கருதியது

            1966 இல் பத்திரிகை மன்றம் செய்தித்தாட்கள் பின்பற்றத் தக்க சில வழிமுறைகளைத் தொகுத்து, 10,000 செய்தித்தாட்களுக்கும் இதழ்களுக்கும் அனுப்பியது. அந்த தொகுப்பில், சமுதாயத்தின் உண்மையான, சட்டத்திற்குட்பட்ட தேவைகளையும் குறைகளையும் எடுத்துரைக்கும் இதழ்களுக்கும் உரிமையை ஏற்றுக் கொண்டு ஆனால் கீழ்க்கண்டவற்றை விலக்க வேண்டும் என்று தொகுத்துக் கூறுகின்றது

சாதி தொடர்பான நிகழ்ச்சிகளையோ விவரங்களையோ மிகைப்படுத்தியோ, சிதைத்தோ கூறுதல்; உண்மைகளைப் போல சரி பார்க்காத வதந்திகளையோ ஐயப்பாடுாடுகளையோ ஊகங்களையோ பரப்புதல்; அவற்றைப் பற்றி விமாசித்தல்.

இலக்கிய நயத்தோடு அமைய வேண்டுமென்றோ  எதுகை மோனைக்காகவோ, அழுத்தம் தருவதற்காகவோ செய்திகளையோ, கருத்துக்களையோ வெளியிடும் பொழுது,பண்படாத, கட்டற்ற மொழிநடையைப் பயன்படுத்துதல்;


உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறைகளைத் தீர்க்கும் வழிமுறையாக, ஆத்திரப்படும் சூழ்நிலையில் கூட வன்முறைக்கு ஆக்கமும் ஊக்கமும் தருதல்.


ஒரு குறிப்பிட்ட சமுதாயம் அல்லது சாதியின் உறுப்பினர்கள் என்பதற்காக, அதுவும் குறிப்பாக அவர்களது நடத்தைப்பற்றிக் குற்றச்சாட்டுகள் இருக்கும் பொழுது, தனிமனிதர்களையோ, சமுதாயங்களையோ குதர்க்கமாகவோ, பொய்யாகவோ தாக்கி எழுதுதல்;

பல்வேறு சமுதாயங்களின் உறுப்பினர்கள் தற்செயலாக ஈடுபட்டிருக்கும் நிகழ்ச்சிகளுக்குத் தவறாக சாதி வண்ணம் பூசுதல்;

சாதிகளுக்கிடையில் வெறுப்பையோ,கெட்டஎண்ணங்களையோ,அவ நம்பிக்கை உணர்வையோஏற்படுத்தக் கூடியவற்றிற்கு அழுத்தம் கொடுத்தல்;

உண்மைக்குப் புறம்பானவற்றை அச்சப்படுத்தும் வகையில் வெளியிடுதல்; சாதிகள், வட்டாரங்கள், மொழிப் பிரிவினருக்கிடையில் கசப்பான தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய செய்திகள், கருத்துக்கள் பற்றி வெறி ஏற்றும் விமரிசனங்களை வெளியிடுதல்;

சமுதாய ஒற்றுமையைப் பாதிக்கும் செய்திகளுக்கு, உணர்ச்சியைத் தூண்டுவதற்காக நடந்தவற்றை மிகைப் படுத்தியோ, பெரிய செய்தித் தலைப்புகளோடோ வேறுபட்ட எழுத்துக்களில் அச்சிட்டோ வெளியிடுதல்;


பல்வேறு மதங்களைப் பற்றியோ, நம்பிக்கைகளைப் பற்றியோ, அவற்றின் நிறுவனங்களைப் பற்றியோ மரியாதையற்ற, மட்டம் தட்டுகின்ற, கேவலப்படுத்துகின்ற கருத்துரைகளைக் கூறுதல்.

நிறைவுரை

            இதழ்கள் தங்களது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் சில அறவிதிகளை ஏற்றுச் செயல்படுதல் தேவையாகும். அறவழி நிற்கும் இதழ்கள் தான் மக்களின் மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றுச் சிறக்கும்.


நன்றி

இதழியல் கலை – டாக்டர் மா.பா.குருசாமி

நோக்கு என்றால் என்ன?

நோக்கு-என்றால்-என்ன

            ‘நோக்கு’     என்னும் சிந்தனை செய்யுள் பற்றியது. செய்யுளியலின் முதல் நூற்பாவில் செய்யுள் உறுப்புக்கள் பற்றிக் கூறும் தொல்காப்பியர் ‘நோக்கு’ என்பதைப் பத்தாம் உறுப்பாக வைத்துள்ளார். நோக்கு வடிவம் சார்ந்த உறுப்புக்களுள் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. நோக்கு என்பது ஒரு கருத்தைச் சொல்லுங்கால் வரிசையாக இயையுமாறு தொடர்ந்து செல்வது எனக் கூறப்படுகிறது. இடையில் முறிவு இன்றி ஒரு போக்காகக் கருத்துச் செல்லுமாறு ‘நோக்கு’ ஆகும். யாதானும் தொடுக்குங்காலத்துக் கருதிய பொருளை முடிக்குங்காறும் பிறிது நோக்காமல் அதனையே நோக்கி நின்ற நிலை நோக்கு’ என்பது இளம்பூரணர் கருத்து.” இது செய்யுளின் ஓரடியிலும் அல்லது பா முழுதும் அமையலாம். இந்நோக்கு மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி என்ற ஐவகைக் கூறுகளும் இணைந்துருவாகும் ஓர் இலக்கியச் சிறப்பு என்று ச.வே.சுப்பிரமணியன் ‘இலக்கிய வகையும் வடிவும்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.


‘மாத்திரை முதலா அடிநிலை காறும்
நோக்குதற் காரணம் நோக்கு எனப்படுமே‘       

            என்று நோக்கு என்பது பற்றித் தொல்காப்பியர் விளக்குகின்றார். இதன்கண் ‘அடிநிலை காறும்` என்றதனான் ஓர் அடிக்கண்ணும் பல அடிக்கண்ணும் இந்நோக்கு அமையும் என்பது இளம்பூரணர் கருத்து. இது ஒரு நோக்காக ஓடுதலும், பல நோக்காக ஓடுதலும் இடையிட்டு ஓடுதலும் என மூவகைப்படும்.

            ஒரு செய்யுள் முழுவதும் ஆற்றொழுக்காகப் பொருள் அமைந்து நிற்றல் என்பது ஒரு நோக்காக ஓடுதலாகும். பல நோக்காக ஓடுதல் என்பது செய்யுள் ஆங்காங்கு நின்று பொருள் முடிவதாகும். இடையீட்டு நோக்குதல் என்பது செய்யுளில் ஓரிடத்து நின்ற சொல் பிறிதோரிடத்துச் சென்று இயைந்த பொருள் தருதலாகும். செய்யுளில் எத்தனை அடிகள் இருப்பினும் அவற்றில் அமைந்துள்ள மாத்திரையும் எழுத்தும், அசையும் சீரும் ஆகிய எல்லாம் மீண்டும் நோக்கி நோக்கிப் பயன் கொள்ளும் வகையில் வற்றாத அறிவின் ஊற்றாய்ப் புதியபுதிய கருத்துக்களைத் தருவனவாய் இருத்தல் வேண்டும். அதுவே நோக்கு என்னும் உறுப்பாகும்.

            மாத்திரை முதல் அடிநிலை வரை சொல்லப்பட்ட ஒவ்வொரு உறுப்பும் இந்நோக்கு நிலைக்கு உதவுவனவாய் அமைதல் வேண்டும். ‘படைப்போன் படைப்பு வன்மையால் நோக்கு அமையப் படைப்பானெனினும், அது துலங்குவது, வெளிப்படுவது, பாராட்டப்படுவது, நிறைகுறை அறியப்படுவது நோக்குவோன் இடத்திலேயாம். எனவே இக்கோட்பாட்டிற்கு ‘நோக்கு’ எனப் தமிழண்ணல் குறிப்பிடுகின்றார்.” நோக்கு என்ற சொல் தமிழ் பெயரிட்டது. இன்று நோக்கினும் புதுமையாக உள்ளது’ என்று பல இலக்கியத்தில் பயிற்சியுடைய சொல்லாகும். திருக்குறளில் இடங்களில் வந்துள்ளது. காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுதலை ‘நோக்கு’ என்னும் சொல்லால் அவர் குறிக்கிறார்.


முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
பைங்கால் கொன்றை மென்பிணி அவிழ
இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பின்
பரலவல் அடைய இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக்
கருவி வானம் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே கவின்பெறு கானம்
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நரம்பார்ப் பன்ன வாங்குவள் பரியப்
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மான்பினைத் தேரன்
உதுக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்
கறஞ்கிசை விழவின் உறந்தைக் குணாது
நெடும்பெருங் குன்றத்து அகன்ற காந்தள்
போதவிழ் அலரின் நாணும்
ஆய்தொடி அரிவைநின் மாண்நலம் படர்ந்தே”
           

           என்ற செயயுள் ஒரு நோக்காக ஓடிப் பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளதால் இது ஒரு நோக்காக அமைந்த நோக்குச் செய்யுளாகும். இச்செய்யுளில் முல்லை என்ற சொல் தொடங்கிப் ‘படர்ந்தே’ என்னும் சொல் முடிய ஒரே வரிசையாக நின்று பொருள் இயைவதைக் காண முடிகிறது.

            முல்லை வைந்நுனை தோன்ற; மென்பிணி அவிழ; இரலை தெறிப்ப; புலம்பு புறக் கொடுப்பக் கழுதறை சிதறிக் கானம் கார் செய்தன்று; காந்தள் நாறும் அரிவை; நின் நலம் படர்ந்து வள்பரிய, வதிந்த பறவை பேதுறல் அஞ்சி, ஆர்த்ததேரனாய் நாடன் தோன்றும்! இதுவே இதன் வாக்கிய முடிபு. மேலும் இச்செய்யுளின்கண் அமைந்துள்ள சொற்களும் சொற்றொடரும் சிறந்த கருத்துக்களையும் குறிப்பால் உணர்த்துவதையும் நோக்க முடிகிறது. அதனாலும் இஃது நோக்கு என்பதன் பாற்படும்.

நன்றி

இலக்கியத்திறனாய்வு இசங்கள் – கொள்கைகள் – அரங்க.சுப்பையா

பத்திரிக்கையாளரின் பணிகளும்  பொறுப்புக்களும் | Duties and Responsibilities of a Journalist

பத்திரிக்கையாளரின்-பணிகளும்-பொறுப்பகளும்

பத்திரிக்கையாளரின் பணிகளும்  பொறுப்புக்களும்

       செய்தியாளர் உண்மையில் தகவல்களைப் பரப்பும் சமுதாயக் கல்வியாளராகப் பணியாற்றுகின்றார். ஒரு வகையில் அவரது பணி சமுதாயத் தொண்டாகும். மக்களாட்சியில், நாட்டின் அன்றாட நடப்புக்களை உடனுக்குடன் தெரிவித்து, மக்கள் விழிப்போடு செயல்படத் தூண்டுகின்ற பணியை செய்தியாளர் மேற்கொள்கின்றார்.

கடினமானபணி

            செய்தியாளரின் பணிமிகவும் கடினமானதாகும். இருபத்தி நான்கு மணிநேரமும் அவர் விழிப்போடு செய்திகளைத் தேடி அலைய வேண்டும். எங்கிருந்து செய்தி, எப்படி வெடித்துச் சிதறுமென்று கூறமுடியாது. நாளிதழில் ஒவ்வொருசெய்தியாளர்*செல்ல இடத்தையும் (Beat)’ என்ன ‘பணி (Assignment) வேண்டுமென்பதையும் தலைமைச் செய்தியாளர் ஒதுக்குவார். பணியைச் செய்து முடிக்க கடினமாக உழைக்க வேண்டும், ‘தூங்காடை கல்வி, துணிவுடைமை” உள்ள செய்தியாளர்கள் கருமமே கண்ணாய் உழைத்தால் சிறப்பாகச் செய்திகளைத் தேடிக் கண்டு திரட்டித் தந்து புகழ் பெற முடியும்.

ஆபத்தான பணி

            செய்தியாளர் நடக்கும் பாதையில் மலர்கல் தூவப்பட்டிருப்பதில்லை, நெருஞ்சி முள் காட்டிற்குள் பயில்பவர்களைப் போன்றே செய்தியாளர்கள் பணிபுரியவேண்டியுள்ளது. உண்மைகளை வெளிக்கொணரும் பணியைச் செய்வதால், அதனால். பாதிக்கக் கூடியவர்கள் எப்பொழுதும் செய்தியாளர்களுக்குப் பாதகங்கள் செய்யத் தயங்கமாட்டார்கள். செய்தியாளர்கள் அடிதடிக்கும், அவமானத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகின்றனர். செய்தியாளர்கள் எதற்கும் துணிந்தவர்களாக இருக்க வேண்டும்.செய்தியாளர்களைத் சுட்டுக்கொன்ற நிகழ்ச்சிகளும் கூட நடைபெற்றிருக்கின்றன.

             செய்தியாளரின் பணி எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு ஒரு நிகழ்ச்சியைச் சான்றாகக் கூறலாம். 1988 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் நமது நாட்டின் தலைமையமைச்சர் ஒய்வெடுக்க இலட்சத்தீவுகளுக்குச் சென்றார். அவரோடு சென்றவர்கள் பற்றிய சில விவரங்களை அரசு வெளியிடவில்லை. 7.1.88 வியாழக்கிழமை இலட்சத்தீவிலிருந்து ஒரு ஹெலிகாப்டரில் வந்து புகழ் பெற்ற இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கொச்சி விமானதளத்தில் இறங்கினார். இதனை புகைப்படம் எடுத்த ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ Indian Express’ புகைப்படக்காரர் ஜீவன் ஜோஸ் (Jeevan Jose) அமிதாப்பச்சன் தடுத்திருக்கின்றார். அதற்கு மேலும் புகைப்படம் எடுக்கவே, தாக்கி, விலை உயர்ந்த புகைப்படக்கருவியைப் பறிக்க முயன்றிருக்கின்றார். நடிகரோடு ஒரு வெளிநாட்டுக்காரரும் உடன் இருந்து இருக்கின்றார். 8.1.88 வெள்ளிக்கிழமை ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ இதழில் புகைப்படங்களோடு இச்செய்தி வெளியாகியுள்ளது. இதிலுள்ள இடர்ப்பாட்டின் கடுமையைச் சொற்களால் விளக்க இயலாது.

செய்தித் திரட்டும் பணி

            எது செய்தியாகும் என்பதை முதலில் தெரிந்தெடுத்து, அந்த செய்தி உண்மையானதா என்பதை அறிந்து, செய்தி மூலத்தை அணுகி, செய்தியைத் திரட்டி தருவது தான் செய்தியாளர் பணி. காலத்தோடு போட்டியிட்டு விரைந்து செயல்படுகின்ற செய்தியாளர் வெற்றி பெறுகின்றார்.

    செய்தியைத் திரட்டுவதில் சில நிலைகள் உள்ளன

      முதலாவதாக செய்தியாளர் செய்திக்குத் தன்னை வெளிப்படுத்திக் (Exposure கொள்ள வேண்டும். அதாவது செய்தியின் மூலத்தோடு நேரடித் தொடர்பு கொள்ள வேண்டும். முடிந்தால் செய்திக்குரிய நிகழ்ச்சி நடந்த இடத்தை அடைந்து, நேரடியாக செய்தியைப் பெற வேண்டும். அல்லது செய்தி மூலமாக இருப்பவரை அணுகி செய்தியை அறிந்து கொள்ள முயல வேண்டும்.

       இரண்டாவதாக, நடந்தவற்றை பார்க்க (Perception) கவனித்து நோக்க வேண்டும். உண்மையை அறிந்து எழுத இப்படி வேண்டும். விருப்பு, வெறுப்பின்றி நேரடியாகக் காணக்கூடியவற்றைக் பார்வையிடுதல் துணை செய்கின்றது. அறிக்கைகளாகவோ, புள்ளி விவரங்களாகவோ செய்திகள் கிடைத்தால் அவற்றைப் புரிந்து படித்து, அவற்றிலுள்ள செய்திகளை மட்டும் தெளிவான முறையில் வழங்குவது செய்தியாளர் பணி.

       மூன்றாவதாக, பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் நினைவில் (Retention) வேண்டும். செய்தியாளருக்கு பதித்துக் கொள்ள நினைவாற்றல் என்பது கைவந்த கலையாக மாற வேண்டும். முதலில் குறிப்புகள் எடுத்துக் கொண்டு பின்பு விரித்து எழுத நினைவாற்றல் துணை செய்கின்றது. பதிவு செய்யும் கருவிகளை (Tape Recorder)பயன்படுத்தலாம்.

      நான்காவதாக, கிடைக்கின்ற விவரங்களில் எவை சரியானவை என்பதைத் தீர்மானித்து தெரிந்தெடுக்க (Selective Judgement) வேண்டும். எந்த நிலையிலும் செய்தியில் பொய்மை கலந்து விடக் கூடாது. “ஐயத்துக்குரியதை விட்டுவிட வேண்டும்” (when in Doubt,Leaveit out) என்பது செய்தியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில் ஒன்று.

      ஐந்தாவதாக, எதனைப் பெரிது படுத்தித் (Amplify) தரவேண்டும் என்பதை அறிந்து, அதனையே செய்தியாக, சரியான கோணத்தில் எழுதித் தர வேண்டும். நிறைய விபரங்களை சேகரித்து இருக்கலாம்.எல்லாவற்றையும் செய்தியாக்கவேண்டியதில்லை.முக்கியமானவற்றையும்,குறிப்பிடத்தக்க மனிதர்களையும் சேர்த்து, பின்னிப் பிணைத்து சுவையான, பயனுள்ள செய்திகளை படைத்து தருதல் செய்தியாளர் பணியாகின்றது.

பொறுப்புக்கள்

            செய்தியாளர் மேற்கொள்வது சமுதாயப் பொறுப்பான பணியாகும். செய்தித்தாட்களில் வெளிவருவனவற்றை “அச்சிட்டது நம்பிப் பெரும்பாலான மக்கள் செயல்படுகின்றனர். உண்மையாகவே”, இருக்கும் என்பது மக்கள் நம்பிக்கை. இந்த நம்பிக்கையைக் கட்டிக்காக்கும் வகையில் செய்தியாளர் நடந்து கொள்ள வேண்டும்.

       சிலசெயல்கள் உண்மையில் நடந்திருக்கலாம், அதற்கான தக்கு ஆதாரங்களும் செய்தியாளரிடம் இருக்கலாம். ஆனால் அவற்றை அப்படியேவெளியிட்டால் சில தனிமனிதர்களோ, சமுதாயமோ பாதிக்கப்படுமானால்,அவற்றை வெளியிடக் கூடாது. எடுத்துக்காட்டாக, கற்பழிப்புச் செய்தியில் கற்பழிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடுவது நல்லதல்ல. சாதி, சமயப் பூசலைத் தூண்டி சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக் கூடிய விவரங்களை வெளியிடக்கூடாது.

      கூடியவரை தங்களது செய்தி மூலங்களை இரகசியங்களாகக் காப்பாற்ற வேண்டியது செய்தியாளர்கள் கடமையாகும். சான்றுகளை வெளியிடாமல் வைத்துக்கொள்ள சட்டப் பாதுகாப்பும் இருக்கின்றது. சில வேளைகளில் செய்திகளைத் தருகின்றவர்கள் தங்களை. வெளிக்காட்டிக்
கொள்ள விரும்புவதில்லை.

      நேர்காணல் பேட்டி (Interview) மூலம் விவரங்களைச் சேகரிக்கும்பொழுது, பேட்டியாளர் வெளியிட வேண்டாமென்றக் குறிப்போடு விளக்கத்திற்காகச் சிலவற்றைக் கூறலாம். அவை சுவையானதாக இருந்தாலும் அவற்றைச் செய்தியில் சேர்க்கக் கூடாது.

       செய்தியாளர் தான் ஒரு நிறுவனத்தைச் சார்ந்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது. தான் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் நற்பெயரைக் கட்டிக் காப்பது என்றும் அவரது கடமையாகும். தான் சேகரிக்கும் செய்திகளை தனது நிறுவனத்திற்கே தர வேண்டும். வேறு எந்த வகையிலும் ஆதாயம் கருதி திரட்டிய செய்திகளைச் செய்தியாளர் பயன்படுத்தக் கூடாது.

குறிப்பு

கட்டுரையானது டாக்டர் மா.பா.குருசாமி அவர்களின் இதழியல் கலை என்னும்  நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

மேலும் பார்க்க..

1.பத்திரிகைச் சட்டங்கள் |PRESS LAWS

2.இதழியல் விளக்கமும் இலக்கணமும்

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »