Friday, September 12, 2025
Home Blog Page 25

வீழ்வேனென்று நினைத்தாயோ! – சிறுகதை

வீழ்வேனென்று நினைத்தாயோ - சிறுகதை

“வீழ்வேனென்று நினைத்தாயோ!”

           அந்த வரிசையில் கடைசி ஆளாக உட்காந்திருந்தான் கருப்பசாமி. மாநிறம்தான் இருப்பான். கொஞ்சமாய் மீசையும் அரும்பியிருந்தது. ஒல்லியான உடம்பு. உடம்புக்கு சற்றும் பொருத்தமில்லாத பேண்டும் சட்டையும் தொளதொளவென்று அணிந்திருந்தான். தலையில் தேங்கண்ணெய் நிறையவே தடவி அழகாய் முடியை சீவி விட்டிருந்தான். தன்னுடைய கண்ணாடியை அவ்வவ்போது மூக்குக்கு மேலே தூக்கி விட்டுக்கொண்டான். அவனைப் போலவே இன்னும் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அந்த நேர்காணலுக்கு ஆண்களும் பெண்களுமாய் வந்திருந்தனர். ஆனால் கருப்பசாமியை விட மற்றவர்கள் தங்களின் உடையிலேயே வேலையை வாங்கி விடுவார்கள் போல் இருந்தார்கள். மிடுக்காக வந்திருந்தார்கள்.

         வெளிநாட்டு உயர்தர கம்ப்யூட்டர் நிறுவனம். கை நிறைய சம்பளம். வீடு வாங்கலாம். கார் வாங்கலாம். நல்ல பொண்ணு கிடைப்பா. இப்படி யாருக்குத்தான் ஆசை வராது. கருப்பசாமிக்கும் ஆசை வந்தது. பி.இ இன்ஜினியரிங் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளான். வீட்டில் அம்மாவுக்காகவாவது கண்டிப்பாக வேலைக்கு சென்றே ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். படிப்பு முடிஞ்சு நாலு வருஷம் ஆச்சு. இன்னும் வேலை கிடைக்கல. அப்பாவும் எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்கார். எந்த கம்பெனிக்கு போனாலும் போன வேகத்திலேயே சுவற்றில் அடிச்ச பந்து மாதிரி திரும்ப வந்திடுறேன். ஞா வேலை கிடைக்கலன்னு சத்தியமா எனக்கு புரியல. கம்பெனிக்காரங்க எதிர்ப்பார்க்கிற திறமை என்கிட்ட இல்லையா? இல்லை.. என் திறமையை அவங்ககிட்ட காட்ட என்னால முடியலயா? தெரியலையே… கேட்கிற கேள்விக்கு சரியா விடைய சொன்னாலும் போங்க கூப்பிட்டு அனுப்புறோம்ன்னு சொல்லிடுறாங்களே… எனக்குன்னு ஒரு தடம் எப்ப அமையும்மின்னு தெரியலயே! மனதில் நிறைய குழப்பங்களோடு உட்காந்திருந்தான் கருப்பசாமி.

“அடுத்தது கருப்பசாமி… உள்ள போங்க…” என்றாள். அந்தப்பெண் மிகவும் ஒய்யாரமாய் சிரித்து அழகாய் பேசினாள்.

        அவள் சொன்னதும் கருப்பசாமிக்கு உடம்பு வேர்த்தது. எழுந்து நேராக அந்த அறைக்குள் சென்றான். ஏசி காற்று ஜில்லென்று வீசியது. உடம்பு குளிந்தது. ஆனால் கைகள் மட்டும் வியர்த்து கொட்டின. உள்ளே மிகவும் கம்பீரத்துடனும் குகைக்குள் கர்ஜிக்கும் சிங்கத்தைப்போலவும் கோர்ட் அணிந்து டை கட்டி நால்வர் அமர்ந்திருந்தார்கள். கருப்பசாமியை உச்சி முதல் உள்ளங்கால் வரை தங்களின் கண்களாலயே அளவெடுத்துக் கொண்டார்கள். கருப்பசாமி கொடுத்த பைலை திறந்து பார்க்காமலே ஏதோ இரண்டு மூன்று கேள்விகள் கேட்டார்கள். அந்தக் கேள்விகள் பன்னிரெண்டாம் வகுப்பு கம்ப்யூட்டர் படிக்கும் மாணவனைக் கேட்டால் கூடச்சொல்லி விடுவான்.

“சரிப்பா போ… சொல்லி அனுப்புறோம்” என்றார்கள்.

       இந்த இரண்டு நிமிடத்தில் நான் எவ்வாறு என்னை நிருபித்திருக்க முடியும். இல்லை… அவர்களும் என்னை எவ்வகையில் மதிப்பிட முடியும். போ… என்றால் என்ன அர்த்தம். வேலை கிடைக்கும் போ என்றா…. வேலை கிடைக்காது போ என்றா…. தெரியவில்லை. கருப்பசாமி என்னன்வோ நினைத்துக் கொண்டிருந்தான்.

“சரிப்பா போ… சொல்லி அனுப்புறோம்” என்று மீண்டும் கூறினார்கள்.

“எனக்கு வேலை இருக்கா.. இல்லையா சார்..” நேரடியாகவே கேட்டுவிட்டான் கருப்பசாமி. உட்கார்ந்திருந்த நான்கு பேரும் ஒருவர்க்கொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“வேல இல்ல போ…” என்றார்கள்

“ஏன் வேல இல்ல… என்னோட பைலை கூட பார்க்காம போ.. ன்ன.. என்ன அர்த்தம்?”

         “இனிமேல் பார்க்க என்ன இருக்கிறது. உன்னோட டிரஸ் சரியில்ல.. பேச்சு சரியில்ல.. கண்ணாடி போட்டுறுக்க… ஆளும் ஒல்லியா இருக்க… மொத்தத்தில உன்னோட மூஞ்சே சரியில்ல… நீயெல்லாம் கம்ப்யூட்டர் வேலைக்கு லாயக்கே இல்லாதவன். முதல்ல இடத்த காலி பண்ணு” நால்வரில் ஒருவர் மிகவும் கடுமையாகவே பேசினார். எழுந்து நின்றான் கருப்பசாமி. உட்காந்திருந்த சேரை தூக்கி ஒரே வீசாக வீசி அவர்கள் மேல் அடித்து விடலாம் என்று கூட எண்ணினான். என்ன செய்வது தனிமரம் தோப்பாகதே… அவர்களைப் பார்த்துச் சின்னதாய் ஒரு புன்னகை செய்தான். இந்தப் புன்னகையைக் கருப்பசாமியிடமிருந்து அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஏதோ தங்களைப் பார்த்து நகைத்த மாதிரி அவர்கள் உணர்ந்தார்கள்.

    தன்னுடைய எந்த துக்கமானாலும் சரி அஞ்சல் தாத்தாவிடம் சென்று முறையிடுவதை வாடிக்கையாகவே வைத்திருந்தான் கருப்பசாமி. அன்றும் நேர்காணலில் நடந்ததை அப்படியே சொன்னான். அவனின் முகம் வாடிப்போயிருந்தது.

       “அதெல்லாம் ஒன்னுமில்ல கருப்பு… உன்னோட திறமைய பத்தி அவனுங்களுக்கு என்ன தெரியும்? நீ யாருன்னு எனக்குத்தானே தெரியும். நீ நடந்ததை நினைச்சி வருத்தப்படாத. உனக்குன்னு ஒரு நேரம் வரும்பாரு அப்ப எதிர்த்து அடி. அதுவரை பொருமையா இருய்யா…” என்றார் அஞ்சல் தாத்தா.

        அந்தக் கிராமத்துல அப்பவே பத்தாவது படிச்சவரு. அவரு வீடுதான் நூலகம், அஞ்சல் பெட்டி எல்லாமுமே.. கல்யாணம் பண்ணிக்கல. ஒண்டிக்கட்டையாவே வாழ்ந்துட்டாரு. எதையாவது கேட்கனுமின்னா அவருகிட்டதான் ஓடி வருவாங்க அந்த ஊரு மக்கள். இந்தக் கிராமத்துப் பயலுவள நல்லா படிக்க வைச்சு பெரிய ஆளாக்கனுமுன்னு நினைப்பாரு. அவுங்கள்ள கருப்பசாமின்னா அவருக்கு உசுரு. கருப்புசாமிகிட்ட ஏதோ ஒன்னு இருக்குன்னு நினைச்சாரு.

       அந்த நேரம் பார்த்துக் கருப்பசாமியின் தொலைபேசியில் குறுந்தகவல் ஒன்று வந்தது. வங்கியிலிருந்து எஸ்எம்எஸ்-காக பதினெட்டு ரூபாய் பிடிக்கப்பட்டது. “காசு இல்லாத நேரத்துல இது ஒன்னா?” என்று மனதில் திட்டிக்கொண்டே தொலைபேசியை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். அஞ்சல் தாத்தாவும் கருப்பசாமியும் நிறைய பேசினார்கள். அவ்வவ்போது கருப்பசாமியின் தொலைபேசியில் மெசேஜ் வந்த வண்ணமே இருந்தன.

“என்னப்பா மெசேஜ் வந்துகிட்டே இருக்கு. யாருப்பா அத? பதில்தான் அனுப்பி வைச்சிடேன்” என்றார் அஞ்சல் தாத்தா.

“இல்ல தாத்தா… பேங்கல இருந்து எஸ்.எம்.எஸ் சார்ஜ், மெயின்டனஸ் சார்ஜ், லோ பேலன்ஸ் சார்ஜின்னு டெபிட் பண்ணிட்டே இருக்காங்க”

அஞ்சல் தாத்தா கருப்பசாமியைப் பார்த்து சிரித்தார்.

“என்ன பாத்தா சிரிப்பா வருதா தாத்தா…”

ம்… என்று தலையை மட்டும் ஆட்டுவித்தார். “கருப்பு நீ என்ன பேங்கல அக்கௌண்ட் வச்சிருக்க”

“மக்கள் மணி பேங்க் – சுருக்கமா எம்.எம்.பி னு சொல்லுவாங்க..”

“இந்தப் பேங்குல இந்தியா முழுவதும் ஒரு பத்து இலட்சம் பேரு அக்கௌண்ட் வைச்சிருப்பாங்களா”

“அதுக்கு மேலேயும் இருக்கும். ஏன் தாத்தா கேட்குரீங்க”

           “எல்லா பேங்குலேயும் நீ சொல்ற மாதிரி ஒவ்வொரு மாசமும் பணம் எடுத்துட்டுத்தான் இருக்காங்க. இது மட்டும் இல்லாம சின்னதா ஒரு கணக்கு சொல்றன் கேளு… உதாரணமா நீ எனக்கு ஒரு ஆயிரம் ரூபா நெட் பேங்கிங் மூலமா அனுப்புறன் வச்சுக்கு. ஏதோ காரணத்தனால பெயில்டுன்னு வந்திருச்சுன்னா… சில நேரங்களில்ல பணம் உனக்கு டெபிட் ஆயிடும். எனக்கு பணம் வராது. உனக்கு டெபிட் ஆன ஆயிரம் ரூபா கண்டிப்பா மீண்டும் உன்னோட அக்கௌண்ட்க்கே வந்திரும். உடனேவும் வரும். சில மணி நேரங்களிலும் வரும். ஒரு நாள் ரெண்டு நாள்… ஏன் ஒரு வாரம் கூட ஆயிடும். உனக்கு என்னுமோ வெறும் ஆயிரம் ரூபாதான். அந்தப் பணம் ரெண்டு நாள் கழிச்சு வந்தா கூட உனக்கு பெரிய அளவு பாதிப்பு கிடையாது. வங்கிகளில் இருக்கும் தவிற்க முடியாத காரணங்கள் எவ்வளவுதான் இருப்பினும் முடிந்தவரை இருபத்திநாலு மணி நேரத்திற்குள்ளாகவே பணம் திரும்ப வந்து விட வேண்டும். ஆனால் ஒரு வாரமோ அல்லது பதினைந்து நாளோ ஆவது எவ்வாறு?

       இன்னும் சொல்லப்போனால் ஒருசில நேரங்களில் நேரடியாகப் பேங்கிற்கே சென்று விவராமாகக் கடிதம் கொடுத்தால்தான் பணம் திரும்ப கிடைக்கும். இப்படி ஒருவரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை சுமார் ஒரு இலட்சம் பேரிடம் இதுபோல் பிடித்தம் செய்து ஒரு வாரம் கழித்து மீண்டும் அக்கௌண்டில் போடப்பட்டால், அவ்வளவு பணம் ஒரு வாரம் முழுக்க எங்கேயிருக்கும்? நம்முடைய அக்கௌண்டிலும் இருக்காது. பிடித்தம் செய்த அவ்வளவு பணத்தை ஒரு வாரம் மட்டும் வட்டிக்குக் கொடுத்தால் எவ்வளவு வரும். ஆனால் நமக்கு பிடித்தம் செய்த ஆயிரம் ரூபாய் மட்டும் ஒரு வாரத்தில் வந்து சேரும். எந்தவித நன்மையும் இல்லாமல்”

           “இதுவெல்லாம் நீங்க நினைக்கிறபடி நடக்குமா தாத்தா? அதெப்படி ஒரே சமயத்துல இப்படி பணம் புடிப்பாங்க… அந்தப் பணம் எங்கேயும் போகாம அப்படியே மறைஞ்சுதான இருக்கும். நாம் டெபிட் செஞ்சது சரிதான்னு தெரிஞ்சவுடனே அமோண்ட்டும் கிரிடிட் ஆகிடுது இல்லையா…” இது கருப்பசாமியின் வாதம்.

           “நீ சொல்றது நூத்துக்கு நூறு சதவீதம் சரிதான். மற்ற வாடிக்கையாளர்க்கிட்ட  பணம் புடிக்கிறது உனக்கு எப்படி தெரியும். நீ சொல்ற மாதிரி யாரும் நம்மோட பணத்த எடுக்காம இருந்தா சரி.. ஒருவேளை எடுத்தா… ” அஞ்சல் தாத்தா கண்களை உருட்டி கருப்பசாமியைப் பாரத்தார்.

         “அப்படி எடுத்தாங்கன்னா… சாதாரணமாவே பத்துக்கோடி வருமே. அவ்ளோ பணமா..” கருப்பசாமி மனதில் கை வைத்துக்கொண்டான்.

         “இன்னொன்னு சொல்ற கேளு… நீ உன்னோட தொலைபேசிக்கு ரீசார்ஜ் நூறுக்குப் பன்ற. ரீஜார்ஜ் ஆகல. பணம் மட்டும் டெபிட் ஆகிடுது. பேங்குல கடிதம் குடுங்க செக் பன்றோம்முன்னு சொல்லுவாங்க. தொலைபேசி வாடிக்கையாளர் இன்னும் உங்க நெம்பருக்கு ரீஜார்ஜ் ஆகலம்பார். நீ என்ன பன்னலாம்முன்னு முழிச்சிட்டு நிப்ப” என்று கருப்பசாமியை நேருக்கு நேராய் பார்த்தார் அஞ்சல்காரர்.

          இன்ஜினியரிங் படிக்கும் போது ஒரு புரோஜெக்ட்டோடு அஞ்சல் தாத்தாவைப் பார்க்க வந்திருந்தான் கருப்பசாமி. கருப்பசாமி புரோஜெக்ட் பற்றி சொல்லசொல்ல வாயடைத்துப் போனார்.  இந்தப் பையன்கிட்ட இவ்வளவு திறமையா என்று வியந்து போனார். அவனுடைய புரோஜெக்ட் பேங் ஹேக்கிக் பற்றியது.  இந்தப் புரோஜெக்ட் வெளியே வந்தால் என்னன்ன நடக்குமோ என்று பயந்தார். ஒருவேளை தீயவர்களின் கைகளில் கிடைத்துவிட்டால் அவ்வளவுதான். நம் நாடே பிச்சைக்கார நாடாக மாறிவிடும்.  அஞ்சல் தாத்தா அவனை கண்டித்து வைத்தார். இந்தப் புரோஜெக்ட் இனி இவ்வுலகத்தில் இருக்கக் கூடாது என்பதற்காக அன்றே முழுவதுமாக அழித்து விட்டார். ஆனால் இன்று மீண்டும் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றினார் போல் பற்ற வைத்துள்ளார்.  அழித்து விட்டால் எல்லாம் போய்விடுமோ? கருப்பசாமி என்னும் ஹேக்கர் இன்னும் உயிரோடுதானே இருக்கிறார். உண்மையாலுமே அஞ்சல்காரர் கில்லாடிதான்.

      கருப்பசாமி அஞ்சல் தாத்தாவின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான். அஞ்சல் தாத்தா என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று ஆராய முற்பட்டிருந்தான். இரண்டு மனமும் ஒன்றாய் பயணித்தன.

    “வாய்ப்பு கிடைக்கும்போது உச்சியில் ஏறி அடித்து விடு கருப்பு. இது உனக்கான நேரம். நீ யாரென்று இவ்வுலகத்திற்கு நிரூபித்துக் காட்டு” அஞ்சல் தாத்தாவின் நம்பிக்கையான வார்த்தைகள் கருப்பசாமிக்கு என்னவோ செய்தன.

    இரவு பத்து மணிக்குத்தான் வீட்டிற்கே சென்றான். விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு இருட்டாயிருந்தது.அம்மாதான் வந்து கதவை திறந்தாள்.

“இன்டர்வியூக்கு போனியே என்னாட ஆச்சு.. வேலை கிடைச்சுதா இல்லையா”

     எதுவும் பேசாமல் அம்மாவைத் தாண்டி உள்ளே சென்றான். நேராய் சமையற்கட்டிற்குச் சென்று காய்ந்த ரெண்டு தோசையைத் தட்டில் போட்டுச் சாப்பிட ஆரமித்தான்.

       “ஏன்டா நான் கேட்டுட்டே இருக்க. நீ சாப்பிட்டு இருக்க. பதில் சொல்றா.. உங்க அப்பா வேற ரொம்ப கோவத்துல இருக்குறாரு. சாயங்காலம் வந்ததிலிருந்தே உன்னை கேட்டுட்டே இருந்தார். உனக்கு வேல கிடைச்சுதா இல்லையான்னு… இதுல எனக்கு வேற திட்டு. புள்ளைய ஒழுங்க வளக்கலன்னு…”

       “உன்னைய ஞா திட்டுறாரு.. இன்ஜினியரிங் முடிச்சிட்டு நாலு வருஷமா நான்தானே வேலைக்குப் போகமா சும்மா தின்னுட்டு இருக்கேன். ஞா விதி. இன்னைக்கும் வேல கிடைக்கல..” கொஞ்ச நேர அமைதி. இருவரும் எதுவும் பேசவில்லை. கருப்பசாமியே பேச ஆரமித்தான்.

       “அப்பா சொல்ற மாதிரி நான் தண்டச்சோறு… உதாவாக்கரை… உருப்படாதவன்… நைட்டுல எல்லாம் இந்த லேப்டாப்ப நோண்டிக்கிட்டே இருக்கிறனல்ல அதனால நான் சாமக்கோழிதான்… எதிர்த்த வீட்டுப் பையன் இவ்வளவு சம்பாதிக்கிறான். பக்கத்து வீட்டு பையன் இவ்வளவு சம்பாதிக்கிறான். நீ மட்டும் திங்கற… தூங்குற… அவ்வளவுதான். திட்டுங்க.. திட்டுங்க… நல்லா திட்டுங்க… எனக்குன்னு ஒரு காலம் வராமலா போயிடும். அப்பெல்லாம் நான் உங்கள திட்ட மாட்டேன். என்னோட உள்ளங்கையில வைச்சு தாங்குவ பாருங்க…”

       “இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. இப்படி டிரஸ் போட்டுட்டுபே போன யாரு வேல தருவா.. நல்லா டிப்டாப்பா டிரஸ் போட்டாதானே வேல தருவாங்க” என்றால் அம்மா.

       “வேல எனக்கா! இல்ல டிரஸ்க்கா..” சொல்லிக்கொண்டே படுக்கைக்குச் சென்றான்.

        விடிகின்ற காலை கருப்பசாமியை எப்படியெல்லாம் அலைகழிக்கப்போகிறது என்பது தெரியவில்லை. எப்போதும் போலத்தான் அன்றும் கொஞ்சம் தாமதமாகவே எழுந்தான். உடம்பில் சுறுசுறுப்பு இல்லை. மந்தமாகவே காணப்பட்டான். தங்கை வந்து வம்பிலுத்து விட்டு சென்றாள். அம்மா வந்து வசை பாடிவிட்டு சென்றாள். அப்பாவின் குரல் மட்டும் கேட்கவில்லை. எப்போதும் அவர்தான் திட்டுவார். இன்று இவர்கள் எல்லாம் என்னை காலையிலே வறுத்துதெடுக்கிறார்கள். சோம்பலுடனே வெளியே வந்தான். மேசையின் மீது அப்பாவின் ஏடிஎம் இருந்தது. அதை பார்த்தும் பாக்காமலும் இருந்தான்.

“டே கருப்பு… சீட்டுக்குப் பணம் கட்டணுமிண்டா. ஐஞ்சாயிரம் பணம் ஏடிஎம் ல போயி எடுத்துட்டு வாடா..” அம்மா

“சும்மா இருக்கன்னு எனக்கு வேல வைக்கிரிங்களா?”

         “அதெல்லாம் ஒன்னும் இல்லடா.. நாம நைட்டு பேசிட்டு இருந்தத உங்கப்பாவும் கேட்டுட்டுத்தான் இருந்திருக்காரு. மத்த பசங்கள வச்சு உன்ன திட்டிட்டோம்முன்னு ரொம்ப வருத்தப்பட்டாருடா…” சமையல் கட்டிலிருந்தே பேசினாள் அம்மா.

“நான் போயி பணம் எடுத்துட்டு வரன். அதுக்காக ரொம்ப பில்டப்பெல்லாம் பண்ண வேண்டாம்”

         பக்கத்தில் இருக்கும் ஏ.டி.எம் சென்டருக்கு சென்று பின்னை அழுத்தி ஐஞ்சாயிரத்தை எண்ணால் பதிவு செய்தான் கருப்பசாமி. மிஷின் சுற்றியது. திரையில் பணம் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. சீட்டு மட்டும் வெளியே வந்தது. பணம் வர வில்லை. டெக்லைன் என்று சீட்டில் போடப்பட்டிருந்தது. திரையும் பழைய படிக்கு வந்திருந்தது. இப்போது அப்பா போன் செய்து பணம் டெபிட் ஆகிவிட்டது எனக் கூறினார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரடியாகவே பேங்கிற்கே சென்றேன்.

      எம்எம்பி பேங். இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டதும் எப்போதும் கூட்டமாகவே இருக்கும் வங்கி. நான் போகும்போது கூட்டம் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. ஒவ்வொரு கௌவுண்ட்டரிலும் யாரோ ஒருவர் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு பெண்மணி மட்டும் கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் யாரும் இல்லை. நேராக அப்பெண்மணியிடம் சென்றென்.

      “எக்ஸ்கீயூஸ் மீ மேம்… மேம்… மேம்…” அவர்கள் நிமிர்ந்து பார்ப்பதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்த வண்ணமாய் இருந்தான். அப்பெண்மணி கைகளில் இருந்த பணத்தை அவ்வளவு மெதுவாக எண்ணிக்கொண்டிருந்தார்கள். எண்ணிய பணத்தை டிராயரில் வைத்து விட்டு மீண்டும் எடுத்து எண்ணினார்கள். கருப்பசாமிக்குத் தாங்க முடியவில்லை. மீண்டும் அழைத்தான்.

“என்னப்பா.. என்ன வேணும்” கோபமாய் முறைத்துக் கேட்டாள்.

“ஏடிஎம் ல பணம் ஐஞ்சாயிரம் எடுத்தேன். பணம் வரல. டெக்லைன்னு ரெசிப்ட் மட்டும் வந்தது. ஆனா பேங்குல இருந்து பணம் டெபிட் ஆயிடுச்சு மேம்”

“நீங்க எங்க ஏடிஎம் ல பணம் எடுத்திங்களா?”

“இல்ல. வேற பேங் ஏடிஎம் ல மேம்”

“நீங்க கண்ட கண்ட ஏடிஎம் ல பணம் எடுப்பிங்க. அப்புறம் பணம் வரல. அது வரலன்னு இங்க வந்து புலம்ப வேண்டியது” காட்டமாகவே பேசினார் அந்தப்பெண் ஊழியர்.

“நாங்க வாடிக்கையாளர். இப்படி ஏதாவது பிரச்சனைன்னு வந்தா பேங்குக்கு வராம, வேற எங்க போறது”

       “எங்கையாச்சும் போ.. நானா உன்ன இங்க வரசொன்னேன். ஞா உயிர வாங்குறதுக்கே எங்கிருந்துதான் வருங்கீளோ தெரியல. போ.. போ…” அப்பெண்ணின் கையை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்ட சொன்னாள். வாய் ஒரு பக்கமாய் போனது.

“மேம் மரியாதையா பேசுங்க.. இப்படியெல்லாம் பேசாதீங்க.. எனக்கு பணம் டெபிட் ஆயிடுச்சு.. என்ன பண்ணனுமுன்னு சொல்லுங்க”

“மரியாதையா பேசனுமா… எப்படி பேசனும்… நீ வந்து சொல்லி கொடு. வா.. வா..” என்று அழைத்தாள்.

       எழுந்து நின்று கைக்கட்டி வாய்பொத்தி நின்றாள். “இப்படி மரியாதை சாருக்குக் கொடுத்தா போதுமா?” நக்கலாகச் சிரித்தாள். கொஞ்ச நேரத்தில் இருவருக்கும் சண்டை முற்றிப்போனது. வங்கியில் உள்ள அனைவரும் அவர்களின் வாய்ச்சண்டையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அப்பெண்ணிற்குத் துணையாக வங்கியில் உள்ளவர்களும் சேர்ந்து கொண்டார்கள். கருப்பசாமியும் அவர்களுக்கு ஈடு கொடுத்து திருப்பி கொடுத்துக்கொண்டிருந்தான். சத்தம் கேட்டு மேனேஜரும் வெளியே வந்தார்.

        “என்ன சத்தம். இது பேங்கா இல்ல சந்த கடையா.. யாருய்யா நீ முதல்ல வெளிய போ..” என்று எந்தவொரு விசாரணையும் இல்லாம கருப்பசாமியை வெளியே போகச்சொன்னார்.

        “சார் அது வந்து….” என்று சொல்லுவதற்கு முன்னாலே பியூன் வந்து கருப்பசாமியை கழுத்தைப் பிடித்து வெளியே இழுத்துக்கொண்டு வந்து வாசலிலே கீழே தள்ளினான். வாசல் மண்ணில் முதுகுபட விழுந்தான். அப்படியே அண்ணாந்து மேலே பார்த்தான்.  அங்கிருந்தவர்கள் அச்சம்பவத்தைப் பார்த்து நகைத்தார்கள். வேடிக்கைப்பார்த்தார்கள். பரிதாப்பட்டார்கள். வங்கி ஊழியர்கள் கருப்பசாமியை ஒருபொருட்டாகவே நினைக்கவில்லை. கீழே விழுந்த கருப்பசாமிக்கு ரொம்ப அவமானமாகப் போய்விட்டது. முகம் வேர்த்த்து. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

       “ஏ… ஞா பணத்த கேட்க வந்த என்னை கீழ தள்ளி அவமானப்படுத்திட்டிங்கள்ள…” சின்னதாய் சிரித்து, “நான் இதுலதாண்டா பெஷலிஸ்டே.. உங்கள எல்லாரையும் இன்னும் இருபத்திநாலு மணி நேரத்திற்குள்ளாக என் வீட்டு வாசலில் நிக்க வைக்கிறேன் பாருங்க….”

“போ..போ… முதல்ல அத செய்யி…” என்று கிண்டலடித்தாள் அந்த வங்கி ஊழியப்பெண்.

    தண்ணீரைத் தலையில் மொண்டு மொண்டு ஊற்றிக்கொண்டான். தன்னுடைய புரோஜக்ட்டைப் பற்றி நினைத்துப்பார்த்தான். பேங்கில் நாம் அக்கௌண்ட் வைத்திருந்தாலே போதும். அதன் மூலமாகவே அந்த பேங்கின் மொத்த கணினியையும் நம்முடைய கண்ட்ரோல்க்கு கொண்டு வரமுடியும். மேனேஜரின் கணினி நம் கைக்கு வந்து விட்டால் அதன்மூலம் தலைமை அலுவலகத்தின் கணினி என இந்தியாவின் ஒட்டு மொத்த நெட்வெர்க்கையும் ஹேக் செய்து விடலாம்.  ஒரு உணவு சங்கிலியைப் போல.  தலையைத் துவட்டிக்கொண்டே கணினியை ஆன் செய்தான். தன் திட்டத்தை மிக சாதாரணமாகச் செய்தான். கொஞ்சகொஞ்சமாய் எம்எம்பி வங்கியின் அனைத்து சர்வர்களும் கருப்பசாமியின் கணினியில் வந்து கொண்டேயிருந்தன. இப்பொழுது ஒவ்வாரு அக்கௌண்டாகப் பணம் முழுமையாக காலியாகிக்கொண்டிருந்தது.  எம்எம்பியில் அக்கௌண்ட் வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ஜீரோ பேலன்ஸ் மட்டுமே காட்டியது. மொத்த பணமும் கருப்பசாமியின் கைகளில்.

       அனைத்து எம்எம்பி பேங்குகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. “என்னோட பேலன்ஸ் ஜீரோ காட்டுது” “என்னோட பேலன்ஸ் ஜீரோ காட்டுது” என ஒவ்வொருவராய் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இப்போது எம்எம்பியின் தலைமை அக்கௌண்டிலும் ஜீரோ பேலன்ஸ் வந்த்து. ஆக எம்எம்பியின் மொத்த அக்கௌண்டும் ஜீரோதான். கிட்டதட்ட எம்எம்பி பேங் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டது. காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விசாரணையின் போது முதலில் ஒரு குறிப்பிட்ட பேங்கில் இருந்துதான் அனைத்துப் பணமும் டெபிட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எந்தவொரு ஹேக்கராலும் கருப்பசாமியை நெருங்ககூட முடியவில்லை. சம்பந்தப்பட்ட வங்கியின் மேனேஜருக்கு விசாரணைக்கான பேக்ஸ் அனுப்பப்பட்டது. வங்கியில் உள்ளிருந்த பொதுமக்கள் காவல் துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டனர். வங்கி ஊழியர்கள் மட்டும் சிபிஐ வருவதற்காக காவல் துறையினரால் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள். தாங்கள் கூண்டில் சிக்கிய எலியாய் ஆகிவிட்டதை உணர்ந்திருந்தார்கள். அப்பொழுதுதான் காலையில் நடந்த கருப்பசாமியின் சம்பவம் நினைவுக்கு வந்தது அந்தப்பெண் ஊழியருக்கு. காவல் துறை உதவியுடன் அடுத்த பத்து நிமிடத்தில் வங்கி ஊழியர்கள் அனைவரும் கருப்பசாமியின் வீட்டு வாசலில் வந்து நின்றார்கள்.

        போலிஸ் மறைந்திருக்க வங்கி ஊழியர்கள் மட்டும் வீட்டினுள்ளே சென்றார்கள். கருப்பசாமியின் அப்பா மகனின் அறையைக் காட்டினார். சேரில் நன்றாகச் சாய்ந்து உட்காந்திருந்தான். அவனின் முன்னால் அனைவரும் யு வடிவில் நின்றார்கள்.

கருப்பசாமி சிரித்தான். “நீங்களெல்லாம் வருவீங்கன்னு தெரியும். ஏன்னா உங்க குடுமி என்னோட கைல”

“நீதான் பணத்தை எடுத்தியா” மேனேஜர்.

“ஆமா! நான்தான் எடுத்தேன். மொத்த பணத்தையும் ஹேக்கிங் பண்ணி சுட்டுட்டேன்”

“ஏ இப்படி பண்ண? உனக்கு என்ன வேணும்” மேனேஜர்

“எனக்கு என்னோட பிடித்தம் செய்யப்பட்ட ஐஞ்சாயிரம். ஒருநாலுக்கான வட்டி நாற்பதைந்து ரூபாய். மொத்தம் ஐஞ்சாயிரத்து நாற்பதைந்து ரூபாய் கொடுங்க. உங்க பிரச்சனைய முடிச்சு வைச்சுடுறேன்”

“சார்…. இவனை புடிச்சு போலிஸ்கிட்ட கொடுத்து, அடிக்கிற அடியில பணம் எப்படி வருதுன்னு பாருங்க. உடனே வெளிய நிக்கிற போலிஸ உள்ள வரச்சொல்லுங்க சார்” என்றார் அந்த வம்புக்கார பெண்.

      பலமாகச் சிரித்தான். விழுந்து விழுந்து சிரித்தான் கருப்பசாமி. “ஏங்க சார் கொஞ்சம் கூட யோசனையே பண்ண மாட்டிங்களா? போலிஸ கூட்டிட்டு வந்திருக்கிங்களா! எப்படி இப்படி முட்டாள இருக்கிங்க..” மீண்டும் சிரித்தான்.

       கருப்பசாமி சிரிக்கும்போதே சிபிஐ  வீட்டிற்குள் வந்து விட்டார்கள். பேங்க் மேனேஜர் கருப்பசாமியைக் கை நீட்டினார். சிபிஐ அதிகாரி கருப்பசாமியை உற்றுப்பார்த்தார். இவனா பல கோடிகளைத் திருடியது. மனதில் குழப்பங்களோடு மேனேஜரைப் பார்த்தார். இப்போது மேனேஜரின் தொலைபேசியில் குறுஞ்செய்தி ஒன்று வந்ததற்கான சத்தம் கேட்டது. மேனேஜர் எடுத்துப் பார்த்து வாயடைத்துப் போனார். அவரது அக்கௌண்டில் சில கோடி ரூபாய்கள் கிரிடெட் ஆகியிருந்தது. அடுத்தடுத்த மற்ற வங்கி ஊழியர்களின் தொலைபேசியிலும் குறுஞ்செய்தி வந்த வண்ணம் இருந்தன. வங்கி ஊழியர்களின் அனைவரின் அக்கௌண்டிலும் சில பல கோடிகள் என மொத்த பணமும் அவர்களிடத்தில் கிரிடெட் ஆகியிருந்தன. சிபிஐ அதிகாரிகள் இப்பொழுது வங்கி ஊழியர்களைக் கோபக்கண்களோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

எழுத்தாளர்

பெண்களின் மறுமலர்ச்சிக்காக உருவாகிய நிறுவனங்கள்

பெண்களின் மறுமலர்ச்சிக்காக உருவாகிய நிறுவனங்கள்

        மேல்நாட்டுக் கல்வி பயின்று, முற்போக்கு எண்ணங்கள் கொண்ட இந்திய இளைஞர்களும், சமூக, மத சீர்திருத்தவாதிகளும் இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு நிறுவனங்களை நிறுவிப் பாடுபடலாயினர். இவர்கள் இந்திய மதம், கலாச்சாரம், இவற்றின் பழம் பெருமை, தற்கால இந்திய சமூகத்தில் நடைமுறையில் உள்ள மதிப்புகளின் நன்மை, தீமை இவைகளைப் பகுத்தறிந்து ஆராய்ந்து, இந்தியப் பண்பாட்டின் நற்பண்புகளை வலியுறுத்திக் கடைப்பிடிக்கவும், தீய பண்புகளைக் களையவும் முற்பட்டனர்.

            இந்நிலை ஏற்படச் சில காரணங்களும் இருந்தன 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயர்களும், கிருத்துவ மதத்தினரும் இந்திய மக்களைப் பற்றிய செய்திகளைத் தொகுத்துக் கொண்டிருந்தனர். தாம் பழகும் மக்களைப்பற்றி நன்கு அறிந்து கொள்ள இவ்வாறான விவரங்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டன. இவ்வாறு அவர்களுக்குத் தெரியவந்த செய்திகள், அதிலும் அச்சமூகம் பெண்களை நடத்திய விதம், அவர்களுக்கு இந்திய மக்களைப் பற்றித் தாழ்வான எண்ணத்தை ஏற்படுத்தியது.

            இந்திய மக்கள் காட்டு மிராண்டித்தனமான பழக்க வழக்கங்களை உடையவர்கள் என அவர்கள் எள்ளி நகையாடினர் இந்திய முற்போக்குவாதிகளுக்கு இது பெருத்த அவமானத்தை அளித்தது. இக்கால கட்டத்தில் இந்திய மதமும், கலாச்சாரமும், அதன் மதிப்பீடுகளும், மக்களின் வாழ்க்கை முறைகளும் பெருமைக்குரியவை; ஏௗனத்திற்குரியவை அல்ல என்பதனை இந்திய முற்போக்குவாதிகள் நிலை நாட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது இதற்காக இவர்கள் தங்களது சமூகம், மதம் முதலியவற்றின் நற்பண்புகளை எடுத்துக்காட்டி, அவற்றிற்கு மறுமலர்ச்சியளிக்க விழைந்தனர் அதே சமயம் இந்திய சமூகத்தில் காணப்படும் தீமைகளை, எடுத்துக்காட்டி அவைகளைக் களையவும் முற்பட்டனர்.

            இவ்வாறு இந்திய சமூகத்தின் மறுமலர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சமூகக்கலாச்சார, மத அடிப்படையில் சில நிறுவனங்கள் தோன்றின. இவை பிரம்மசமாஜம், ஆரியசமாஜம், தியசாபிகல் நிறுவனம், இராமகிருஷ்ண மடம் முதலியவை ஆகும் இவை இந்திய சமூகத்தின் தீமைகளைப் போக்க முற்படும்பொழுது அச்சமூகம் பெண்களுக்கு இழைக்கும் தீமைகளைப் போக்குவதும் அவற்றின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாயிற்று. இவ்வாறு பெண்களின் முன்னேற்றமென்பது இந்திய சமூகத்தின் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக விளங்கியது.


            இந்நிறுவனங்களின் அடிப்படைக் கொள்கை சமூக மறுமலர்ச்சியாகும்: இவற்றின் ஆணிவேர் இந்து மதத்தின் கருத்தாக்கங்களாகும். அதன்படி. கடவுள் ஒருவர் என்னும் கருத்து வலியுறுத்தப்பட்டது. கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் அக்கடவுளின் பகுதியினர். அதனால் அவர்கள் அனைவரும் சமம் என்ற சமதர்மக் கருத்து பெறப்படுகின்றது. மனிதர்கள் அனைவரும் சமம் எனும்பொழுது, மனிதர்களுக்குள் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் மத அடிப்படையிலான சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானவை என்பது தெளிவாகின்றது.

            அதனால் மனிதர்களாக ஏற்படுத்திக் கொண்ட ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் நீக்கப்படுதல் வேண்டும்; மனிதர்களின் ஒரு பகுதியினர் மற்றொரு பகுதியினரைக் கேவலப்படுத்துவது கொடுமைப்படுத்துவது என்பன போன்ற தீங்குகள் களைந்தெறியப்படுதல் வேண்டும் என்ற கருத்துக்கள் வலிமை கடைப்பிடிக்கப்பட்டு பெறுகின்றன.

            இந்நிலையில் இந்திய சமூகத்தில் கடை வந்த பல்வேறு தீமைகள் இவர்களின் கவனத்திற்கு வந்தன அவற்றில் முக்கியமானது பெண்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற தீமைகள் ஆகும் மேலும், இந்நிறுவனங்கள் அனைத்தும் வேதகாலத்து இந்திய சமூகம் தற்காலத்தில் நடைமுறையில் இருக்கும் கொடுமைகளான சாதிவேறுபாடு, பெண்ணினத்தைக் கொடுமைப்படுத்துதல் போன்ற கொடுமைகள் எதுவும் இன்றி, சமதர்ம அடிப்படையில் அமைந்திருந்தது என்ற கருத்தை உடையன இத்தீமைகள் அனைத்தும் இடைக்காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களால் சமூகத்தில் புகுந்தன என்பது இவர்கள் கருத்து இதனால் இந்திய சமூகத்தின் பழமையான கலாசாரப் பண்புகளையும், மதிப்புகளையும், புத்துருவாக்குவதன்மூலம் இந்திய சமூகம் மறுமலர்ச்சியடையும் என்பது இவர்களுடைய கோட்பாடாகும். இந்நிலையில் இந்தியக் கலாச்சாரத்தின் மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாக பெண்களுக்கு இழைக்கப்படும் தீமைகளைக் களைவது இவ்வியக்கங்களின் பணியாயிற்று.

பிரம்ம சமாஜம்

            இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு கடவுளர்களை வணங்கிப் பிளவுண்டு கிடப்பது தவறு என்பதைச் சுட்டிக்காட்டி கடவுள் ஒருவரே என எடுத்துக்கூறி, அவரை இந்து மதத்தினர் அனைவரும் ஒன்றுபட்டு வழிபட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் பிரம்மசமாஜம் 1828-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நிறுவப்பட்டது. இதை நிறுவியவர் இராஜாராம் மோகன்ராய் ஆவார்.

            சமூக மறுமலர்ச்சித் திட்டங்களுள் ஒன்றான பிரம்ம சமாஜம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பல்வேறு கொடுமைகளை எதிர்த்துப் போரிட்டது. இராஜாராம் மோஹன்ராயின் முயற்சியாலும், ஆங்கில அரசாங்கத்தின் உதவியாலும் 1829-ஆம் ஆண்டு பெண்கள் உடன்கட்டை ஏறுதலை ஒழிக்கச் சட்டம் கொண்டு வரப்பட்டது 1827- இல் கொண்டுவந்த பிரம்மசமாஜச் சட்டம், குழந்தைகள் மணத்தைத் தடைசெய்தது. மேலும், இந்நிறுவனம் விதவைகள் மறுமணம் புரிந்துகொள்ள சமூகம் அனுமதியளிக்க வேண்டுமெனக் கோரியது. இது இளவயதுத் திருமணங்களை எதிர்த்தது. பலதார மணம் தடை செய்யப்பட வேண்டுமெனக் கோரியது பெண்களை வீட்டில் அடைத்துப் பூட்டிவைக்கும் பழக்கம் மாறி, அவர்கள் வெளி உலக வாழ்க்கையிலும் பங்குபெற வேண்டுமென வற்புறுத்தியது.

            இக்கருத்துக்களைப் பரப்பிப் பல்வேறு இடங்களில் கூட்டங்களைக் கூட்டி, மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முற்பட்டது இக்கூட்டங்களில் அதிக அளவில் பங்குபெற பெண்கள் வேண்டுமெனத் தூண்டியது இது சுதந்திரம், சமுத்துவம் என்ற கொள்கைகளைக் குடும்பம், சமூகம் ஆகிய எல்லா நிலைகளிலும் கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தியது.

ஆரிய சமாஜம்

            ஆரியசமாஜம் சுவாமி தயானந்த சரசுவதியால் 1875-ஆம் ஆண்டு பம்பாயில் தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் வேதத்தின் மேன்மையை நிலைநிறுத்தவும், இடைக்காலத்தில் ஏற்பட்ட அந்தணர்களால் புகுத்தப்பட்ட தேவையற்ற சடங்குகளையும், மூடநம்பிக்கைகளையும், உருவ வழிபாட்டையும், அந்தணர்களின் ஆதிக்கத்தையும் எதிர்க்கவும் பாடுபட்டது இதன் முக்கிய கோட்பாடுகளுள் ஒன்று ஆண் பெண்  இருபாலர்களுக்குமிடையே சமத்துவத்தை நிலைநிறுத்துவதாகும்.

            இந்நிறுவனம் வேதகால வாழ்வின் மறுமலர்ச்சிக்காக நிறுவப்பட்டதால் வேதகாலத்தில் இருந்ததைப் போன்று ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் குருகுல முறையில் கல்விப் பயிற்சி அளிக்கக் கல்விக் கூடங்களை நிறுவியது. இங்கு வேதமுறைப்படி கல்வியளிக்கப்பட்டது மேலும், அக்கால வாழ்விற்கேற்றவாறு இவ்வியக்கம் எதிர்த்தது. இவ்வியக்கம் சக்தி வழிபாட்டை உயர்வாக ஆங்கிலக் கல்வியையும் அளித்தது. இளவயதுத் திருமணங்களை மதித்தது அதனால் சமூகத்திலும் பெண்களின் உயர்வைப் போற்றியது. திருமணச் சடங்குகள் எளிய முறையில் அமைய வேண்டுமென வலியுறுத்தியது. விதவையர் மறுவாழ்விற்காகப் விதமான பயிற்சிகளை அளித்து, அவர்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற வழிகளை வகுத்தது.

            பெண்களைத் தனிமைப்படுத்தும் பல பெண்களுக்கு பழக்கத்திற்கு எதிராகவும் செயற்பட்டது. இந்நிறுவனம் மதத்தொடர்பான காரியங்களிலும் பயிற்சி அளித்து, அவர்களை ஆண்களுக்கிணையாக மதக் காரியங்களிலும், நிர்வாகப் பொறுப்புக்களிலும் ஈடுபட வைத்தது. இவ்வாறாக இது பல வழிகளில் ஆண் பெண் சமத்துவத்தை நிலைநாட்டப் பாடுபட்டது.

தியசாபிகல் நிறுவனம்

            தியசாபிகல் நிறுவனம் ப்ளவட்ஸ்கி அம்மையாராலும் , கர்னல் ஒல்காட்  என்பவராலும் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் 1875-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1879-இல் சென்னை அடையாற்றில் அதன் கிளை நிறுவப்பட்டது. இதன் அடிப்படைக் கொள்கை உலகில் உள்ள மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதாகும். உலகிலுள்ள அனைத்து மதங்கள், தத்துவங்கள், விஞ்ஞானம் இவைகளை அலசி ஆராய்வது இதன் நோக்கமாகும்.

            இதன் மூலம் இயற்கையின் உள்ளடங்கிய விதிகளையும், மனிதனிடம் அடங்கிக் கிடக்கும் சக்திகளையும் கண்டுகொள்ள முடியுமென்பது இதன் நம்பிக்கை, இவ்வியக்கத்தின் முக்கிய தலைவியாகிய அன்னிபெசண்ட் அம்மையார். பின்பு உலகத்து மதங்கள் அனைத்தையும்விடச் சிறந்த மதம் இந்து மதமே எனப் பறைசாற்றினார். இந்து மதத்தின் அடிப்படை நியதிகளான பக்தி, பிறருக்காகத் தன்னைத் தியாகம் செய்யும் மனப்பான்மை, தாய்மை உணர்வு இவை சிறப்பான கூறுகள் எனப் பாராட்டிக் கூறினார்.

            அன்னிபெசண்ட் அம்மையாரும், ஆண் பெண் இருபாலருக்கிடையே சமத்துவ உறவு நிகழ வேண்டுமெனச் செயற்பட்டார். இவர் பெண் கல்வியை ஆதரித்தார். இளவயதுத் இழைக்கப்படும் கொடுமைகள் இவைகளை நீக்கப் பாடுபட்டார். திருமணம், பெண்களைத் தனிமைப்படுத்துதல், விதவைகளுக்கு இந்நிறுவனம் ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தியது மேலும், பெண்களின் கல்விக்காகப் பள்ளிகளை நிறுவிற்று அன்னிபெசண்ட் அம்மையார் வயதான விதவைகள் மறுமணம் புரிந்து கொள்வதை ஆதரிக்கவில்லை. ஆயின், இளம் வயது விதவைகள் மறுமணம்
புரிவதை ஆதரித்தார்.

இராமகிருஷ்ண மடம்

            இராமகிருஷ்ண மடம் இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராகிய சுவாமி விவேகானந்தரால் 1897-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது வேதாந்தத்திலுள்ள எல்லாவற்றிற்கும் பொதுவான தத்துவங்களைப் பரப்புவதற்காக நிறுவப்பட்டது விவேகானந்தர் அமெரிக்காவில் நிகழ்த்திய சொற்பொழிவின் மூலம் இந்தியாவையும் அதன் பெருமையையும் உலகிற்கு உணர்த்தினார் இந்நிறுவனம் ஏழ்மை, கல்வி, அறிவின்மை இவற்றை நீக்கப் பாடுபட்டது. அதிக அளவில் மருத்துவமனைகளைத் திறந்து மருத்துவ வசதி செய்துகொடுத்தது. இராமகிருஷ்ணர் பெண்களிடம் சக்தியின் அம்சத்தைக் கண்டார். பெண்மையின் அம்சங்கள் அவருக்கு உயர்வாகத் தெரிந்தன. இந்நிறுவனம் பெண்களின் கல்விக்காகக் கல்விக் கூடங்களை நிறுவிற்று.


நன்றி

இக்கட்டுரையானது பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், ச.முத்துச்சிதம்பரம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

இதழியல் விளக்கமும் இலக்கணமும்

இதழியல் விளக்கமும் இலக்கணமும்

இதழியல் விளக்கமும் இலக்கணமும்

இதழியல் விளக்கம்

            வியக்கத்தக்க வகையில் இதழியல் விரைந்து வளர்ந்து வருகின்றது. அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக இதழ்கள் செய்தித்தாட்கள் – அளவாலும், இயல்பாலும், பரப்பாலும், வகைகளாலும் நமது அரசியல், பொருளாதார சமுதாய வாழ்க்கையில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றன.


            “காலையில் எழுந்தவுடன் செய்தித்தாள்” என்பது இன்று பலரின் பழக்கமாகிவிட்டது. இதழ்களின் தாக்கத்திற்குட்படாத, எந்தத் துறையும் இல்லை. பத்திரிகைகளின் செல்வாக்கு எழுத்தில் அடங்காது. ‘ஆக்கல், அழித்தல்’ என்று ‘ எல்லாம் வல்லதாக’ இதழியல் செல்வாக்கும் சொல்வாக்கும் பெற்றிருப்பதால் அதனைப் பற்றி அறிந்து கொள்ளுதல் இக்காலத் தேவையாகி விட்டது.

            ‘பத்திரிகை’ யின் பேராற்றலை மக்கள் உணரும் வகையில் பைந்தமிழ்ப் பாவேந்தர் பாரதிதாசன்,


” காரிருள் அகத்தில் நல்ல

கதிரொளி நீதான்! இந்தப்

பாரிடைத் துயில்வோர் கண்ணிற்

பாய்ந்திடும் எழுச்சி நீதான்

ஊரினை நாட்டை இந்த

உலகினை ஒன்று சேர்க்கப்

பேரறி வாளர் நெஞ்சில்

பிறந்த பத்திரிகைப் பெண்ணே” என்று வாழ்த்தி வரவேற்கின்றார்.

இதழியல் விளக்கமும் இலக்கணமும்


சொல் விளக்கம்

‘ ஜெர்னலிசம்’ (Journalism) 67607 ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் ‘ இதழியல்’ . இந்தச் சொல்லின் மூலம் டையர்னல் (Diurna1) என்ற பழைய இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பிறந்தது. ‘சர்னல்’ டையர்னல்’ என்றால், ‘ அன்று’ (அன்றாடம்) என்று பொருள். ‘சர்னல்’ என்றால், ‘ அன்றாடம் நடந்ததை எழுதி-வைக்கும் ஏடு’ என்று பொருள்படும். வாசு கோடகாமாவின் பயண நூல் ‘ எ சர்னல் ஆப் தி பஸ்டு வாயேஜ் ஆப் வாஸ்கோடகாமா’, என்று பெயர் பெற்றது. ஆனால் இப்பொழுது ‘சர்னல்’ ‘ இதழ்’ களையே என்பது குறிக்கிறது’ என்று எழுத்தாளர் அ.மா.சாமி விளக்குகின்றார்.

            இதழ் என்பதை ‘பத்திரிகை’, செய்தித்தாள்’ ‘தாளிகை’ என்றும்  குறிப்பிடுகின்றனர்.

இலக்கணம்

            மனிதன் அறிவு வளர்ச்சி பெற்ற காலத்திலிருந்து மற்றவர்களைப் பற்றியும், அவர்களது செயல்களைப் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆர்வம் உடையவனாக இருந்திருக்கின்றான். முதலில் செய்கையின் மூலமாகவும், மொழி வளர்ந்தபின் பேச்சின் துணையோடும் செய்திகளை அறிந்தும் பரப்பியும் வந்திருக்கின்றான். எழுதக் கற்றுக் கொண்டவன், அச்சுப்பொறியைக் கண்டுபிடித்ததும், செய்திகளின் பரப்பளவு மிகுந்தது. போக்குவரத்து வளர்ச்சி, அறிவியல், தொழில் நுட்ப முன்னேற்றம் இவற்றின் விளைவாக மின்னணுக் கருவிகளின் துணையோடு இலக்கண வரம்புக்குள்ளடங்காத அளவிற்கு இதழியல் வளர்ச்சி பெற்றுள்ளது. மக்கள் தொடர்பும் (Mass communication) இதழியலின் உட்பிரிவாகுமளவிற்கு இத்துறை விரிவடைந்துள்ளது.


            இதழ்களுக்கும், குறிப்பாக செய்தித்தாட்களுக்கும் தொழிலைத்தான் முதன்முதலில் இதழியல் என்ற சொல் குறித்தது. எழுதும் இப்பொழுது அதனுடைய பொருளும், பரப்பும் விரிவடைந்து, செய்திகளையும், கருத்துக்களையும் பரப்புகின்ற மக்கள் நிறுவனமாகமாறியும், சமுதாய விழிப்புணர்ச்சியின் ஒர் உறுப்பாக அதுவே தொடர்பு உருவெடுத்தும், அதனுடைய நடவடிக்கைகளுக்கு அற அடிப்படையிலும் சட்ட நோக்கிலும் பொறுப்பேற்கும் அமைப்பாகவும் இதழியல் திகழ்கின்றது” என்று ஆர். இராமச்சந்திர ஐயர் விளக்குகின்றார்.

            வெப்ஸ்டரின் மூன்றாவது பன்னாட்டு அகராதியில் (Webster’s Third International Dictionary), “வெளியிடுவதற்காகவோ, ஒலிபரப்புவதற்காகவோ பதிப்பிப்பதற்காகவோ. நடைமுறை ஈடுபாடுள்ள விவரங்களைத் தொகுப்பதும், எழுதுவதும், செப்பனிடுவதும் இதழியல்” என்று விளக்கம் உள்ளது.

            சேம்பரின் இருபதாம் நூற்றாண்டு அகராதி (chamber’s Twentieth Century Dictionary) “பொது இதழ்களுக்கு எழுதுதல், அவற்றை நடத்துதல் ஆகிய தொழிலே இதழியல் எனப்படும்,” என்று கூறுகின்றது.

            ஹரால்டு பெஞ்சமின் (Harold Benjamin) என்ற ஒரு புகழ் பெற்ற அமெரிக்க இதழியல் பேராசிரியர், “பொது நோக்குடைய இதழியல் துறை ஓர் ஆற்றல் மிக்க கருவியாகும். அதன் மூலம்தான்’ இன்றைய சமுதாயம் அதனுடைய வழிகளை வகுத்துக் கொண்டும் மாற்றிக் கொண்டும் தெளிவாக வரையறுக்கப் பெற்ற வளரும் மனித நலன் என்னும் இலட்சியத்தை நோக்கி நடைபயில்கின்றது.” என்று குறிப்பிடுகின்றார்.

            ஜி.எப்.மோட் (G.F. Mott) என்பவர் விரிவான விளக்கமாக, “இதழியல் என்பது, பொதுமக்கள் தொடர்புக்குரிய புதிய சாதனங்களைப் பயன்படுத்தி பொதுச் செய்திகளையும், பொதுக் கருத்துக்களையும் பொது பொழுது போக்குகளையும் முறையாக, நம்பிக்கைக்குரிய வகையில் பரப்புவதாகும்.” என்று இயம்புகின்றார்.

            லார்டு கிரே (Lord Gray), “பத்திரிகை தான் நாட்டுச் சுதந்திரத்தின் மிகப்பெரிய காவலாளி“, என்று கருதுகின்றார்.

            மேத்யூ அர்னால்டு (Mathew Arnold)இதழியல் அவசரத்தில் பிறக்கும் இலக்கியம்” என்று புகழ்கின்றார்.


            இதழியலின் சிறப்பினை அறிவுறுத்தும் வகையில், “பெரும்பாலும் ஒரு நாளிதழ் அறிவிப்பதும் கருதுவதும் தான் வரலாற்றுக்கு மூலப்பொருளாகவும், வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் மதிப்புடையதாகவும் அமைகின்றது,” என்று பிராங் மோரஸ் (Frank Moraes) கூறுகின்றார்.

            தாமஸ் ஜெபர்சனிடம் (Thomas Jefferson) ஒருமுறை, “நீங்கள் செய்தித்தாட்களே இல்லாத அரசை விரும்புவீர்களா? அல்லது அரசே இல்லாத செய்தித்தாட்களை விரும்புவீர்களா?” என்று கேட்டதற்கு, அவர், “அரசே இல்லாத செய்தித்தாட்களையே விரும்புவேன்,” என்று பதிலளித்தார். இதிலிருந்து இதழ்களுக்கு அவர் தந்த சிறப்பிடத்தைப் புரிந்து
கொள்ளலாம்.

            இதழியல் பொதுமக்களின் கருத்துக்களை உருவாக்கவோ, அழிக்கவோ வல்லதாக இருக்கின்றது. இதழ்கள் வாய்மை வழியில் சென்று, பொறுப்புணர்ச்சியோடு செயல்படாவிட்டால் அதனால் ஏற்படும் கேடுகள் அளவிட முடியாதனவாக இருக்கும். ஆதலால்தான் தோரோ (Thoreau), “செய்தித்தாட்களை எப்பொழுதுமே படிக்காதவர்கள் பாக்கியவான்கள். ஏனென்றால் அவர்கள் இயற்கையையும் அதன் மூலம் இறைவனையும் காண்பார்கள்,” என்று கூறுகின்றார். இதழியலாளர்கள் மிகுந்த அற உணர்வோடும், சமுதாயப் பொறுப்போடும் செயல்பட வேண்டும் என்பதையே இது உணர்த்துகின்றது.

இதழியல் – அறிவியல்; கலையியல்

            இதழியல்-ஓர் அறிவியல்: தொடக்க காலத்தில் இதழியலில் யார் வேண்டுமானாலும் எப்படியும் ஈடுபடலாம் என்ற நிலை இருந்தது. இப்பொழுது தக்க பயிற்சி இன்றி இதழியலில் ஈடுபட இயலாதென்ற அளவிற்கு இதழியல் ஒர் அறிவியலாக (Science) வளர்ந்துள்ளது.

            அறிவியல் என்னும் சொல் காரண காரியம் ஆகியவற்றிற்குரிய தொடர்பைப் பற்றிய ஒழுங்கு படுத்தப் பெற்ற அறிவின் தொகுதியைக் குறிக்கின்றது. உண்மைகளை மொத்தமாகத் தொகுப்பது மட்டும் அறிவியலாகாது. அவற்றை முறைப்படி தொகுத்து, வகைப்படுத்தி, பகுத்தாய்ந்து கூறுவதே அறிவியலாகும். இந்த விளக்கத்தின்படி இதழியலும் ஒர் அறிவியலே.

            ஓர் இதழ் உருவாகும் நிலையைத் தொடக்கம் முதல் இறுதி வரை அறிவியல் நோக்கில் முறைப்படுத்தியுள்ளனர். செய்திகளைச் சேகரிப்பது, எழுதுவது, செப்பனிடுவது, அச்சிடுவது, வெளியிடுவது ஆகிய அனைத்தும் ஆய்வு முறையிலேயே அமைகின்றது. ஆதலால் தான் இன்று இதழியல் சமுதாய அறிவியல்களில் (Social Sciences) ஒன்றாகச் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றது.


இதழியல் – ஒரு கலையியல்

            அறிவியலாக விளங்கும் இதழியல் ஓர் அற்புதக் கலையியலாகவும் (Art) திகழ்கின்றது. கலையியல் என்பது உள்ளத்து உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்துவதாகவும், மகிழ்ச்சியை வழங்குவதாகவும், ஓர் உயரிய குறிக்கோளை நோக்கி அழைத்துச் செல்வதாகவும் இருக்க வேண்டும். இதழியலில் இத்தகைய இயல்புகள் அனைத்தும் ஒளிர்கின்றன.

சிறந்த இதழ் காண்பவர் கண்ணைக் கவர்ந்திழுந்து, படிக்கத்தூண்டி, படிக்கும் பொழுது கூறுகின்ற கருத்துக்களாலும் முறையாலும் வாசகரை ஈர்த்து, அவரிடம் தெளிவை ஏற்படுத்தி உள்ளம் கொண்டவர்களால் செயல்படத் தூண்டுகின்றது. நல்ல கலை தான் கலை மணம் பரப்பும் இதழ்களை உருவாக்க முடியும்.

இதழியலின் சிறப்பிடம்

            இதழ்கள் படிப்படியாக வளர்ந்து, இப்பொழுது எல்லாத் துறைகளையும் ஊடுருவி, மிகவும் ஆற்றலுடைய சமுதாய  சக்தியாக உருவெடுத்திருக்கின்றன. பத்திரிகைகளைப் புறக்கணித்து விட்டு இன்றுயாரும் அமைதியாக வாழமுடியாது.

            எத்தகைய ஆட்சி அமைப்பாக இருந்தாலும் மக்களோடு தொடர்பு கொள்வதும், மக்களுக்குக் கருத்துக்களையும் கொள்கைகளையும் கூறுவதும், அவர்கள் எண்ணப் போக்கினைப் புரிந்துகொள்வதும் இன்றியமையாத் தேவையாகின்றது. இதற்குச் செய்தித்தாட்கள்தான் துணை செய்கின்றன.

            அரசியலில் இதழியலுக்குரிய சிறப்பான பங்கினைச்செ நூற்றாண்டிலேயே அறிஞர்கள் சுட்டிக் காட்டினர். 1828 இல் ‘அரசியல் நிர்ணய வரலாறு’ (constitutional History) பற்றி ஒரு கட்டுரை எழுதிய புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் மெக்காலே (Macaulay) முதன் முதலில் இதழியலாளர்களை “அரசின் நான்காம் தூண் (Fourth Estate) என்று வர்ணித்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கு விளக்கமாக எட்மண்ட் பர்க் (Edmund Burke), “நாடாளுமன்றத்தில் அரச குடும்பம் (Royalty), பிரபுக்கள்சபை (சமயத் தலைவர்கள், செல்வந்தர்கள் கொண்ட சபை) (House of Lords) பொதுமக்கள் சபை (House of Commons) ஆகிய மூன்று தூண்கள் உள்ளன. ஆனால் அங்கே செய்தியாளர்கள் (Reporters) அமருமிடத்தில் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமான நான்காவது தூண் உள்ளது,” என்று குறிப்பிட்டார்.

            நமது நாட்டிலும் நாடாளுமன்றம் (Parliament), நிர்வாகத் துறை (Executive), நீதித்துறை (Judiciary) ஆகிய மூன்று அரசின் துறைகளோடு, பத்திரிகைத் துறையை (Press) நான்காவது பிரிவாகக் கருதலாம். இந்த நான்காம் துறை சுதந்திரமாக, நேர்மையாக, பொறுப்போடு செயல்படுகின்றவரை மக்களின் நலம் பாதுகாக்கப்படுமென்று கருதலாம்.


குறிப்பு

கட்டுரையானது டாக்டர் மா.பா.குருசாமி அவர்களின் இதழியல் கலை என்னும்  நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

பெண் கல்வி

பெண் கல்வி

பெண் கல்வி


            19-ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை இந்தியப் பெண்களின் முன்னேற்றத்திற்காக இடைவிடாது எடுக்கப்பட்ட முயற்சி பெண்கல்விக்கே ஆகும் இம் முயற்சியில் கிருத்துவப் பாதிரிமார்களும் ஆங்கிலேய அரசாங்கமும், சமூகச் சீர்திருத்தவாதிகளும் முழு முயற்சியுடன் ஈடுபட்டனர்.

            1813-ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனிச் கல்வி சட்டம் இந்தியர்களுக்குக் கல்வியளிக்க வேண்டுமென வற்புறுத்தினாலும், பெண்கல்வியை வற்புறுத்தவில்லை. இந்தியச் சமூகத்தில் பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்லவும், சமூக வாழ்வில் ஆண்களுடன் பழகவும் தடை இருந்ததாலும், அவர்களுக்கு இளவயதிலேயே திருமணங்கள் நடைபெற்றதாலும், கல்வி கற்பது இயலாததாயிற்று அதனால் பெண்கள் கல்வி பயிலப் பெண்களுக்கெனத் தனியான பள்ளிகளும், அவற்றில் கற்பிக்க ஆசிரியைகளும் தேவைப்பட்டனர் கிருத்துவ மதத்தினர் 1818-ஆம் ஆண்டிலிருந்து பெண் கல்விக்காகப் பாடுபட்டனர்.

            ஆனால் அது வெற்றியடையவில்லை 1818-ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்திலிருந்து ஆசிரியைகள் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டுப் பெண்களுக்கெனத் தனிப்பட்ட பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1824 வரை பெண் கல்விக்கு முக்கியமாகப் பாடுபட்டவர்கள் இவர்களேயாவர் பெண்கள் மூடிய வண்டிகளில் பள்ளிகளுக்கு அழைத்து வரப்பட்டுத் திரும்பவும் தத்தம் வீடுகளில் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டனர். இத்தகைய பள்ளிகளில் ஐந்து வகுப்புகளிலும் 400 பெண்களே கல்வி பயின்று கொண்டிருந்தனர். ஆயினும், இவ்வாறு பெண்களுக்குத் தனியான பள்ளிகள் ஆரம்பிக்கப்படும் முன்னரே சமூகத்தின் மேல் நிலையிலுள்ள பெண்கள் தங்கள் வீடுகளிலேயே கல்விப் பயிற்சி பெற்று வந்தனர் என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியதாகும்.

            பெரும்பாலான பள்ளிகள் கிருத்துவப்பாதிரிமார்களாலும் ஆங்கிலேயர்களாலும் நடத்தப்பட்டதால், அக்கல்வி இந்திய வாழ்க்கை முறைக்கு ஏற்றதாக அமையவில்லை. மேலும், கிருத்துவப்பள்ளிகளில் சேர்ந்த இளைஞர்களை அவர்கள் கிருத்துவமதத்திற்கு மாற்ற முயன்றனர். அதனால் இந்திய வாழ்க்கை முறைக்கு ஏற்ற கல்வியை அளிக்க இந்திய சமூக சீர்திருத்தவாதிகள் முனைந்தனர். பிரம்ம சமாஜம் பெண் கல்வியை வற்புறுத்தியது. பிற்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆரிய சமாஜம் குருகுல முறையைக் கடைப்பிடித்துக் கல்வி புகட்டியது.

            ஈஸ்வர சந்திர வித்யாசாகர், புதேன் மதத்தினரின் ஆதரவுடன் 1849-இல் பெண்களுக்காக கொல்கொத்தாவில் ஒரு பள்ளியை ஆரம்பித்தார். பெண் கல்விக்கு வங்காளத்தில் தயானந்த சரஸ்வதி முயற்சி எடுத்தார். மஹாராஷ்டிராவில் ரானடே முயற்சிகள் எடுத்தார்.

            1850-இல் டல்ஹௌஸி பிரபு சமூக மாற்றத்திற்குப் பெண் கல்வி மிகவும் அவசியமென்று வலியுறுத்தினார். அவரது கருத்துக்களை 1854-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட சார்லஸ் உட் என்பவரின் அறிக்கை (Charles Wooode’s Despatch) விளக்கியது. அது ஆண்களுக்கு அளிக்கப்படும் கல்வியைவிடப் பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வி வாழ்க்கைக்குத் தேவையாகும் எனக் கூறியது. இவரது அறிக்கை பெண்கல்வி வளர்ச்சியில் முக்கியமான மைல் கல்லாகும். கல்வியை, முக்கியமாகப் பெண் கல்வியை ஆதரிப்பது அரசின் கடமை என அது வலியுறுத்தியது.

            இவரது அறிக்கையே, 19- ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்ட கல்வித் திட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்தது 1854-ஆம் ஆண்டு உட்ஸ் அறிக்கையின்படி, பெண் பள்ளிகளும், கல்வி கற்கும் பெண்களும் மிகக் குறைவு. 1870-இல் நகராட்சியும், அதன் நிதிக் குழுவும் அமைக்கப்பட்ட பிறகு, பெண்கல்வி முன்னேற்றமடைந்தது. அவை பெண்களுக்குப் பயிற்சிப்பள்ளிகள் ஆரம்பித்தன. 1882-இல் கல்விக்குழு (Education Commission) தனது அறிக்கையில் சிறு பெண்கள் மட்டுமின்றி 12 வயதுக்குக் குறைந்த பெண்களுக்கும் கல்வி புகட்டப் பரிந்துரைகள் அளித்தது.

            அதற்குப் பள்ளிகளில் ஆசிரியைகளையும், பெண் பார்வையாளர்களையும் (inspectress) நியமிக்கப் பரிந்துரைத்தது விதவைப் பெண்கள் கல்வி கற்க பணஉதவி அளிக்க வேண்டுமென வற்புறுத்தியது.

            பெண்களுக்கும், ஆண்களுக்கும் அவரவர் வாழ்க்கைக்கேற்றவாறு வெவ்வேறு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு பயிற்சியளிக்க வேண்டுமெனப் பரிந்துரைத்தது. இதன் பரிந்துரைகள் 1913-இல் செயல்படுத்தப்பட்டன. ஆயினும், 1818-ல் 133 பெண் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருந்தனர் மிகவும் ஆண்குழந்தைகளுக்கு 6 பெண் குழந்தைகள் என்ற விகிதத்திலேயே முன்னேறிய மாகாணங்களில்கூட 98 சதவிகிதப் பெண் குழந்தைகள்
பள்ளிக்குச் செல்லவில்லை.

            1857-இல் கொல்கத்தா, சென்னை, பம்பாய் ஆகிய நகரங்களிலும், 1882-இல் பஞ்சாபிலும், 1889 இல் அலகாபாத்திலும் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன கிருத்துவப் பாதிரிகளாலும் பெண்களுக்காக இரண்டு கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அவற்றில் ஒன்று பாளையங்கோட்டையில் உள்ள சாராடக்கர் கல்லூரி; மற்றொன்று லக்னோ கல்லூரி டொன்டோ கேசப் கார்வே 1908-இல் பெண்களுக்காக ஒரு பள்ளியை ஆரம்பித்தார். பின்பு ஸ்ரீமதி நாதிபாய் தாமோதர் தாக்ரே இந்தியப் பெண்கள் பல்கலைக்கழகத்தை 1910-இல் ஆரம்பித்தார்.


இவை தவிர, மன்னராட்சி நடைபெற்ற மாநிலங்களில் தனிப்பட்ட மன்னர்களாலும் கொள்ளப்பட்டன. கேரள மன்னராலும், மைசூர் மன்னராலும் முயற்சிகள் எடுத்துக் பெண்களுக்காகக் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ரமாபாய் ரானடே விதவைகளுக்காகவும், அனாதை விதவைகளுக்காகவும் இன மக்கள் பெண்கல்விக்கு முக்கிய
பள்ளிகள் தொடங்கினார். பார்சி தொண்டாற்றினர்.


            அக்கால கட்டத்தில் பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயின்றுவந்த பெண்களின் எண்ணிக்கை கீழ்வருமாறு:


ஆண்டு                                            பள்ளிகளில் படித்த பெண்கள்

1854                                                                 25000
1881                                                                 117000
1892                                                                 127000
1902                                                                 256000



தொழிற்கல்விக் கல்லூரிகளிலும் பயின்று வந்தனர். 1902 ஆம் ஆண்டு 169 பெண்கள், கல்லூரிகளிலும், 87 பேர் ஆசிரியைகளாகவும், செவிலித்தாயார்களாகவும், மருத்துவர்களாகவும் பணிபுரிந்தனர். சிலர்மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியா சுதந்திரமடையும் வரை கல்வியறிவு பெற்ற பெண்களின் சதவிகிதம் கீழ்க்கண்டவாறு இருந்தது.


ஆண்டு                                கல்வியறிவு பெற்ற பெண்களின் விகிதம்

1891                                                                             0.5

1901                                                                             0.7

1911                                                                             1.1

1921                                                                             1.9

1931                                                                             2.4

1941                                                                             6.9


            இந்தியா சுதந்திரமடையுமுன்பு இந்தியக் கல்வியின் முன்னேற்றத்தை ஆராய்ந்த குழு, ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே விதமான கல்வி அளிக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்தது.

            இந்தியப் பெண்களின் கல்வி வெவ்வேறு காரணங்களுக்காக வலியுறுத்தப்பட்டது. ஆரம்ப காலங்களில் பெண்களின் திருமண வயதை உயர்ந்த அது முக்கியமான வழியாகக் கருதப்பட்டது இக்கருத்தை ஈஸ்வரச் சந்திர வித்யாசாகர் வலியுறுத்தினார். விதவைகளுக்கு மனவலிமையையும், பொருளாதார சுதந்திரத்தையும் அளிக்கக் கல்வி தேவை எனவும் கருதினார். சமூகத்தில் உயர் நிலையில் இருந்தவர்கள் தங்களது குடும்பப் பெண்கள் ஆங்கிலேயர்களின் பழக்க வழக்கங்களை அறிந்து கொண்டு, அவர்களுடன் பழகக் கல்வி அவசியம் என வற்புறுத்தினர். பெண்களின் கல்வி, அவர்கள் ஆரியமதக் கோட்பாடுகளையும், கிரியைகளையும் புரிந்துகொண்டு, அவற்றைச் சரியான முறையில் இந்தியக் கலாச்சாரத்தின் கடைப்பிடிக்க உதவும் என மறுமலர்ச்சியில் ஈடுபட்டவர்கள் கருதினர். மாறிவரும் சமூக, அரசியல் சூழ்நிலைகளை உணர்ந்து கொண்டு, அவற்றிற்கேற்பக் முன்னேற்றத்தில் ஈடுபட்டவர்கள் பெண்கல்லியை வலியுறுத்தினர்.

            ஆயின், இக்காலகட்டத்தில் அனைவரும் ஆண் பெண் இருபாலரில் பங்குகளும் வேறுபட்டவை என்றும், அவர்கள் தங்கள் கடமைகளைச் சரியான முறையில் நிறைவேற்றக் கல்வி அவசியம் எனவும் கருதினர்.

            இந்தியப் பெண்களின் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட்ட பழக்க வழக்கங்களின் காரணமாகப் பெண் கல்வியில் ஏற்பட்ட முக்கியமான முன்னேற்றம் பெண்களின் மருத்துவக் கல்வியாகும் ஆரம்பகாலத்தில் ஆங்கிலேயப் படைவீரர்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக இந்தியாவில் மருத்துவர்களை உருவாக்க ஆங்கிலேயர்கள் 1826-இல் பம்பாயிலும், 1827-இல் சென்னையிலும் மருத்துவப் பயிற்சிப்பள்ளிகளை ஆரம்பித்தனர். அதன்பிறகு, சென்னை, கொல்கத்தா, பம்பாய் முதலிய நகரங்களில் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கினர்.

            இந்தியாவில் பெண்களுக்கு ஆரம்பக் கல்வியை வலியுறுத்திய நாட்களிலிருந்தே, இந்தியப் பெண்கள் மருத்துவத்துறையிலும் பயின்று பட்டம் பெற வேண்டிய அவசியம் இருந்தது. அதற்குச் சில காரணங்கள் உண்டு. அக்காலத்தில் குழந்தைப் பேற்றின்போது இறந்த பெண்களும், குழந்தைகளும் மிக அதிகம். பெண்கள் உடல் உணவிற்கும் இளவயதிலேயே மணமாகி, அவர்கள் உடல் முழு வளர்ச்சியடையுமுன்னரே  தாயாகிக், குழந்தைப் பேற்றை அடையும் நிலைக்கு உள்ளாயினர். குடும்பத்தில் பெண்களின் நலத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும், சத்தான முக்கியத்துவம் அளிக்கப்படாமையால், பெரும்பாலான பெண்கள் இரத்தச் சோகைக்கு உள்ளாகியிருந்தனர். பிள்ளைப்பேறு அறிவியல் பயிற்சியற்ற தாதிகளின் மேற்பார்வையில், சுகாதாரமற்ற சூழ்நிலையில் நிகழ்ந்தது அதனால் குழந்தைப் பேற்றின்பொழுது நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி பெரும்பாலான பெண்களும், அவர்களுடைய குழந்தைகளும் மரணமடைந்தனர்.

            அக்காலத்தில் ஆண் மருத்துவர்கள் இருப்பினும், பெண்களை அவர்கள் அணுக முடியாத காரணத்தினால் அம்மருத்துவர்கள் பெண்களை இந்நிலையிலிருந்து காப்பாற்ற இயலவில்லை. இப்பரிதாபகரமான நிலையிலிருந்து பெண்களைக் காப்பாற்றப் பெண் மருத்துவர்கள்
தேவைப்பட்டனர்.

            ஆரம்பகாலங்களில் கிருத்துவப் பாதிரிப் பெண்களும், இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பெண்களும் மருத்துவப்பயிற்சி பெற்று, இந்தியப் பெண்களுக்கு உதவ ஆரம்பித்தனர். இதில் ஐடா ஸ்டர் (lda Scuder) என்ற கிருத்துவப் பாதிரிப் பெண்ணின் முயற்சி குறிப்பிடத்தக்கது. அவர் வேலூரில் 1900-ஆம் ஆண்டு ஆரம்பித்த சிறிய மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை, இன்று மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கின்றது. இந்தியப் பெண்களை மருத்துவக் கல்லூரியில் சேர்த்து பயிற்சி பெற்ற மருத்துவர்களாக உருவாக்குவதற்காகச் சமூகச் சீர்திருத்தவாதிகளும், கிருத்துவப் பாதிரிமார்களும், ஆங்கிலேய அரசாங்கமும் பெரு முயற்சி எடுத்துக் கொண்டன. பெண்கள் மருத்துவக் கல்லூரியில் கற்பதற்காகத் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டன.

             கல்விக் கட்டணத்தில் அவர்களுக்குச் சலுகை அளிக்கப்பட்டது. 1880-களில் வங்காளம், பம்பாய், சென்னை முதலிய ஊர்களில் பெண்கள் மருத்துவக் கல்லூரிகளில் பயின்று பட்டம் பெற்றனர். ஆண்களுடன் சேர்ந்து படிப்பது அக்காலச் சமூகச் சூழலில் மிகவும் கடினமாக இருந்ததால், பெண்களுக்கெனத் தனியான மருத்துவக் கல்லூரிகள் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் லூதியானா, டில்லி, ஆக்ரா, வேலூர், சென்னை முதலிய இடங்களில் ஆரம்பிக்கப்பட்டன. இதைத் தவிர, டாப்ரின்ஸ் நிதி (Dafferin’s fund) என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அது பெண் மருத்துவர்களை உருவாக்கப் பெண் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவும், பெண்களுக்கான மருத்துவமனைகள் கட்டவும் நிதியுதவி அளித்தது. இவ்வாறாக, இந்தியாவில் பெண் மருத்துவர்களை உருவாக்கப் பல்வேறு விதங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆரம்ப காலத்தில் இத்துறையில் பெண்கள் பயின்று, பட்டம் பெற்று, மருத்துவராவதற்குச் சமூகத்தில் பெரிய அளவில் எதிர்ப்புக்கள் இருந்தன. பெண்களை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிய குடும்பங்களை அவர்களது உறவினர்களும், சாதியினரும் விலக்கி வைத்தனர் ஆனால், பெண் மருத்துவர்களின் சேவை பல இந்தியப் பெண்களின் உயிரைக் காக்கக் காரணமாக இருந்தது. காலம் செல்லச் செல்ல, மருத்துவத் தொழிலில் பெண்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.

             அவர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் பெற்றனர். மருத்துவத் தொழில் பெண்களுக்கு உகந்த தொழிலாகவும் கருதப்பட்டது. இவ்வாறாக, இந்தியாவில் எழுத்தறிவு பெற்ற பெண்களின் சதவிகிதம் மிகக்குறைவான முன்னேற்றத்தைக் கண்டு கொண்டிருந்த நாட்களிலேயே, ஆண்களுக்கிணையாகப் பெண்கள் மேம்பட்ட கல்வியாகக் கருதப்படும் மருத்துவக் கல்வியில் பயிற்சி பெற்று தங்களுக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கினர்.

நன்றி

இக்கட்டுரையானது பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், ச.முத்துச்சிதம்பரம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

சண்டேசுர நாயனார் புராணம்

சண்டேசுர நாயனார்

சண்டேசுர நாயனார்


            சோழநாட்டிலுள்ள திருச்சேய்ஞலூரில் வேதியர் குலத்தில் எச்சதத்தர் என்பவரின் மகனாகப் பிறந்தவர் விசாரசருமர் ஆவார். இவர் தனது பால்ய பருவத்திலேயே முற்பிறவியின் தொடர்ச்சியாய் வேதங்கள் அனைத்தும் அறிந்திருந்தார். அதைக் கண்ட அவ்வூர் மக்கள் அனைவரும் அவரைப் போற்றினர்.

            எச்சதத்தர், தனது புதல்வர் விசாரசருமரை வேதபாட சாலைக்கு அனுப்பினார். ஆனால், விசாரசருமர் ஒருநாள் பாடசாலை செல்லும் வழியில் மேய்ந்து கொண்டிருக்கும் பசுக்களைக் கண்டார். தன் பஞ்ச கவ்யங்களாலும் இறைவனின் பூசைக்கு உதவும் பசுக்களின் பெருமையை நினைத்தார். தான் வேதங்களைப் படிப்பதைவிட பசுக்களை மேய்ப்பதையே அருந்தவம் என்று கருதினார்.

            உடனே அவர், அப்பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த இடையனிடம் சென்று, இனி பசுக்களைத் தானே மேய்ப்பதாகக் கூறினார். இடையனும், ஏற்கனவே விசாரசரு மரை அறிந்திருந்ததால் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. பிறகு, ஏனைய மக்களிடமும், அந்தணர்களிடமும் அனுமதி பெற்று விசாரசருமர் அப்பசுக்களை மண்ணியாற்றங்கரையில் மேய்த்து வந்தார்.

            விசாரசருமர் மேய்க்கத் தொடங்கிய பிறகு பசுக்கள் அதிகப் பாலை சுரந்தன. அவை அவ்வப்போது பாலை மண்ணில் சொரிந்தன. இதைக்கண்ட விசாரசருமர், இப்பாலை சிவபெருமானுக்கு அபிடேகம் செய்யலாமே! என்று கருதினார். அவர் பசுக்கள் சொரியும் பாலை, குடங்களில் ஏந்தினார். மண்ணியாற்றங்கரையில் மண்ணினால் சிவலிங்கம் வடித்தார். ஆலயமும் எழுப்பினார். குடத்தில் நிரப்பிய பாலை அம்மண் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வணங்கி னார். நாள்தோறும் இவ்வாறு செய்வது விசாரசருமரின் வழக்கமாயிற்று.

ஒருநாள் இதை அவ்வூரிலுள்ள ஒருவன் கண்டான். அவன், ‘விசாரசருமர் பாலை மண்ணில் வீணாக்குகிறார்!’ என்று நினைத்து, பசுக்களின் உரிமையாளர்களிடமும் அவ்வூர் அந்தணர்களிடம் சென்று தெரிவித்தான். அவர்களும் எச்சதத்தரிடம் வந்து, அவரது புதல்வர், பாலை வீணாக்கு வதாகக் கூறினர்.

எச்சதத்தர், அவர்களிடம் இனி இவ்வாறு நடக்காது என்றும் தான் விசாரசருமரைக் கண்டிப்பதாகவும் கூறி அனுப்பினார். அவ்வூர் மக்கள் தன் புதல்வரைப் பற்றி குற்றம் சாட்டுவது உண்மையா? என்பதை அறிய விரும்பிய எச்ச தத்தர், மறுநாள் விசாரசருமருக்குத் தெரியாமல் அவர் பின்னே சென்று, ஒரு மரத்தின் மேலே ஏறி மறைந்திருந்தார்.

வழக்கம்போலவே விசாரசருமர் பசுக்களின் பாலை குடத்தில் ஏந்தினார். மண்ணால் லிங்கம் வடித்தார். அபிஷேகம் செய்யத் தொடங்கினார். அதைக்கண்ட எச்சதத்தார் கோபம் கொண்டார். மரத்தை விட்டுக் கீழே இறங்கினார். ஒரு கம்பை எடுத்து விசாரசருமரின் முதுகில் அடித்தார். தகாத வார்த்தைகளால் திட்டினார். அங்கிருந்த பால்குடங்களைக் காலால் எட்டி உதைத்தார்.

எச்சதத்தரின் செயலைக் கண்ட விசாரசருமருக்கும் கடுங்கோபம் வந்தது. “பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வைத்திருந்த பாலை வீணாக்கியவர் என் தந்தையானாலும் நான் மன்னிக்க மாட்டேன்!” என்றபடி ஒரு கோடரி எடுத்து எச்சதத்தரின் இரு கால்களையும் வெட்டி எறிந்தார்.

அக்கணமே சிவபெருமான் உமையன்னையுடன் விடை வாகனத்தில் அங்கே எழுந்தருளினார். ”அன்பனே! எம் மீது கொண்ட பக்தியால் தந்தை யென்றும் பாராமல் அவரது கால்களை வெட்டினாய்! இனி யாமே உனக்குத் தந்தை! உன்னைத் திருத்தொண்டர்களின் தலைவராக்கினேன். நான் உண்பது, உடுப்பது எல்லாம் உனக்கே சேரும்படி சண்டேசுர பதவி தந்தோம்!” என்று கூறியபடி, தன் திருமுடியிலுள்ள கொன்றை மலரை எடுத்து விசாரசருமருக்குச் சூடினார். விசாரசருமரும் சண்டேசுர பதவி அடைந்தார். விசாரசருமரால் கால்கள் வெட்டப்பட்டதால் எச்சதத்தரும் தூய்மை அடைந்து, சிவபதம் சேர்ந்தார்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

14.ஆனாய நாயனார் வரலாறு

15.மூர்த்தி நாயனார் புராணம்

16.முருக நாயனார் புராணம்

17.திருநாளைப்போவார் புராணம்

18.திருக்குறிப்புத் தொண்டர்

19.திருநாவுக்கரசு சுவாமிகள்

திருநாவுக்கரசு சுவாமிகள் | அப்பர்

திருநாவுக்கரசர் நாயனார்

திருநாவுக்கரசு சுவாமிகள்


            திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருவாரூரில், வேளாளர் மரபில் பிறந்தவர் மருள்நீக்கியார். பின்னாளில் திருநாவுக்கரசராக உயர்ந்தவர் இவரே ஆவார். இவரது தந்தையார் புகழனார். தாய் மாதினியார். தமக்கையின் பெயர் திலகவதியார். திலகவதியாரை, கலிப்பகை நாயனார் என்ற சேனாதி பதிக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் கருதினர். ஆனால் திருமணம் நிகழவிருந்த காலத்தில் கலிப்பகையார் போருக்குச் சென்று இறந்தார்.

இந்நிலையில் புகழனாரும், மாதினியாரும் அடுத்தடுத்து உயிர் நீத்தார்கள். அதனால் மனம் உடைந்த திலகவதியார் தானும் உயிர் துறக்க எண்ணினார். ஆனால் தம்பி மருள்நீக்கியாரைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத காரணத்தால், தன் முடிவை மாற்றிக் கொண்டார் திலகவதியார். இல்லறத்தில் ஈடுபட்டுக் கொண்டே அறவாழ்வு வாழ்ந்து வந்தார். மருள்நீக்கியாரும் தமக்கையைப் போலவே சமுதாயப் பணிகளைச் செய்து வந்தார்.

இந்நாளில் வடநாட்டிலுள்ள பாடலிபுத்திரம் சென்ற மருள்நீக்கியாரை, சமணர்கள் சமண மதத்தில் இணைத்தனர். தருமசேனர் என்ற பெயரையும் சூட்டினர். தன் தம்பி சமண மதத்தைச் சார்ந்துவிட்டதை அறிந்து, சிறந்த சிவபக்தையாக விளங்கிய திலகவதியார், தம் தம்பியாரை சைவ மதத்திற்கு மாற்றும்படி சிவபெருமானை வேண்டினார். அவ்வாறே செய்வதாக இறைவரும் வாக்கருளினார்.

சிவபெருமானது திருவுள்ளத்தால் தருமசேனரின் வயிற்றில் சூலை நோய் வந்தது. அந்நோயைத் தீர்க்க, சமணர்கள் அரும்பாடு பட்டும் அச்சூலை நோய் குணமாகவில்லை. எனவே அவர்கள் அம்முயற்சியைக் கைவிட்டனர்.

தருமசேனருக்கு, தம் தமக்கையின் நினைவு வந்தது. தமக்கைக்குச் செய்தி அனுப்பினார். ஆனால் திலகவதி யாரோ, தான் சமண மடத்திற்கு வரமுடியாது என்று கூறிவிட்டார். எனவே, தருமசேனர் தென்னகம் புறப்பட்டார். திலகவதியாரின் திருவதிகை மடத்தை வந்தடைந்தார்.

திலகவதியார் தம்பி தருமசேனருக்குத் தீட்சை அளித்தார். இருவரும் வீரட்டானேசுவரர் ஆலயம் சென்று தொழுதனர். அங்கு தருமசேனர், ‘கூற்றாயினவாறு விலக்ககிலீர்’ என்ற திருப்பதிகத்தைப் பாட, அவரது சூலை நோய் விலகியது.

எம்பெயரில் தீம் பதிகம் பாடியதால் இனி, ‘நாவுக்கரசு’ என்று அழைக்கப் பெறுவாய் என்ற அசரீரியும் எழுந்தது. சிவபெருமான் கருணையை எண்ணி மெய்சிலிர்த்தார் நாவுக்கரசர். பிறகு, இராவணனுக்கு அருள்புரிந்த திருவட்டிறத்தை துதிக்கத் தொடங்கினார். மனம், வாக்கு, காயம் மூன்றாலும் பெருமானைத் தொழுதார். ஆலயங்களில் புதர்களை நீக்கி உழவாரப் பணி செய்தார். தன்னை இறைவனின் அடிமையாகவேக் கருதினார் நாவுக்கரசர்.

அவ்வேளையில், சமண மதத்தை விட்டுவிட்டு, சைவ மதத்திற்கு மாறிவிட்ட நாவுக்கரசர் மீது சமணக் குருக்கள் கோபம் கொண்டனர். சமணத்தைப் பின்பற்றிக் கொண்டிருந்த மன்னனிடம், பலவாறு பொய் கூறினர். மன்னன், நாவுக்கரசரை இழுத்து வரும்படிக் கூறினான். நாவுக்கரசரும், ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்ற பதிகத்தைப் பாடி வந்தார்.

வஞ்சகம் கொண்ட சமணர்கள் மன்னனிடம், நாவுக்கரசை சுண்ணாம்பு சுடும் நீற்றறையில் அடைக்க வேண்டும் என்று கூறினர். மன்னனும் அவ்வாறே கட்டளையிட்டான். நீற்றறைக்குள் தள்ளப்பட்ட நாவுக்கரசர், ‘மாசில் வீணையும்’ என்ற திருக்குறுந்தொகையைப் பாடினார். ஏழு நாட்கள் கழித்துப் பார்க்கையில், எவ்விதத் துன்பமுமின்றி அமர்ந்திருந்த நாவுக்கரசரைக் கண்ட சமணர்கள் திகைத்தனர்.

மன்னரிடம் கூறி நாவுக்கரசருக்கு நஞ்சை ஊட்டச் செய்தனர். நஞ்சும் பலனற்றுப் போனது. பிறகு யானையை விட்டு மிதிக்கக் கூறினர். நாவுக்கரசரோ, ‘யான் வீரட்டநாதன் அடியவன்; அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை’ என்று பாடினார். யானை அவரை வலம் வந்து வணங்கிப் போயிற்று.

மனம் கொதித்த சமண வஞ்சகர்கள், மன்னரிடம் கூறி நாவுக்கரசரின் உடலோடு கல்லைக் கட்டி, கடலில் எறியும்படிச் செய்தனர். ‘கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே’ என்று பாடினார் நாவரசர். கல் கடல் மீது மிதந்தது. மெதுவாய் நகர்ந்து திருப்பாதிரிப் புலியூரை அடைந்தது. நாவரசர் அங்குள்ள பெருமானையும் அன்னையையும் பாடி, சிலகாலம் களித்திருந்தார்.

            பிறகு, திருவதிகைக்குத் திரும்பினார். பல திருப்பதிகங்களைப் பாடிப் பரவசம் அடைந்தார். இந்நிலையில் பல்லவ மன்னனும் நாவரசரின் பெருமையை உணர்ந்தான். திருவதிகை வந்து அவரை வணங்கினான். அடியவரானான். மன்னன் திருவதிகையிலே குணபர வீச்சரம் என்னும் சிவாலயம் கட்டினான்.

            நாவுக்கரசர் பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டார். திருப்பெண்ணாகடத்திலுள்ள திருத்தூங்கானை மாடம் சென்று அங்குள்ள இறைவரிடம், “அடியேன் உடல் சமணத் தொடர்புடையது. இவ்வுடலோடு நான் உயிர் வாழ மாட்டேன். என் உடலில் சூலம் மற்றும் இடப முத்திரை பொறித்து அருள வேண்டும்!” என்று வேண்டி பதிகம் ஒன்றைப் பாடினார். சிவனருளால் சிவகணம் ஒன்று தோன்றி, நாவரசரின் தோளில் சிவ முத்திரைகளைப் பொறித்தது.

            சுவாமிகள் சிவனருளை எண்ணி உருகி நின்றார். பின், தில்லை முதலிய பல திருத்தலங்களுக்குச் சென்று வணங்கினார். தில்லை வீதியில் படுத்து உருண்டபடியே தில்லையைக் கடந்தார். பின் சீர்காழியைச் சென்றடைந்தார்.

சீர்காழியில் உமையன்னையிடம் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்த மூர்த்தி பெருமானைப் பற்றி கேட்டறிந்து, அவரை வழிபட நினைத்தார். சம்பந்தப் பெருமானைச் சந்தித்தார். அவரது திருவடியில் விழுந்து வணங்கினார். அது கண்டு பதறிய சம்பந்தப் பெருமான், ‘அப்பரே!’ என்றழைக்க, ‘அடியேன்’ என்றார் நாவரசர். அந்நாளிலிருந்து நாவுக் கரசரை அப்பர் என்றும் மக்கள் அழைக்கலாயினர்.

நாவரசரும், சம்பந்தப் பெருமானும் திருமடத்தில் பலநாள் தங்கியிருந்து சிவபிரானைப் பாடிக் களித்தனர். இருவரும் பல திருத்தலங்களுக்குச் சென்று இறைவனைப் பாடினர். சம்பந்தர் சீர்காழிக்குத் திரும்ப, நாவரசர் பல திருத்தலங்களுக்குச் சென்று இறைவனை வணங்கி, பின் திங்களூரைச் சென்றடைந்தார். திங்களூரில் தன் பெயரில் அன்னசாலை, தண்ணீர்ப் பந்தல் போன்றவைகள் நடத்தி அரும்பணி செய்துவந்த அப்பூதி அடிகளைப் பற்றி அறிந்து மெய்யுருகினார்.

அப்பூதி அடிகளின் வீட்டில் அமுதுண்ணச் சென்றார். அந்நேரத்தில், பாம்பு தீண்டி இறந்து போன அப்பூதி அடிகளாரின் மூத்தப் புதல்வனது உடலை, சிவாலயத்தின் முன் கொண்டு வைத்து திருப்பதிகம் பாடினார். அவனும் உயிர் பெற்று எழுந்தான்.

பின்னர் திருவாரூர் முதலிய தலங்களுக்குச் சென்று திருப்புகலூர் வந்தடைந்தார். அங்கு முருக நாயனார், சிறுத்தொண்ட நாயனார், நீலநக்க நாயனார், சம்பந்தப் பெருமான் போன்ற அடியார்களைச் சந்தித்து பரவசம் எய்தினார்.

அதன் பிறகு அப்பரும் சம்பந்தரும் திருவீழிமிழலை சென்று அங்குள்ள இறைவரை வழிபட்டனர். அக்காலத்தில் நாட்டில் மழையின்றி பஞ்சம் உண்டாகியிருந்தது. எனவே இறைவர் இருவருக்கும் தினமும் ஆளுக்கொரு படிக்காசு தந்தான். அதைக்கொண்டு இருவரும் பல அடியவர்களுக்கு அமுது படைத்து உதவினர்.

அவ்விருவரும் திருமறைக்காடு என்னும் வேதாரணி யம் சென்றனர். அங்குள்ள திருக்கோயிலின் திருக்கதவு, வேதங்களால் பூசிக்கப்பட்டு அடைக்கப்பட்டுக் கிடந்தது. யாராலும் திறக்க இயலவில்லை. ஆதலால் அதன் அருகில் வேறொரு சிறிய வாசல் அமைத்து, அடியவர்கள் அதன் வழியே சென்று இறைவனை வணங்கி வந்தனர்.

அதைப்பற்றி அறிந்த நாவரசரும், சம்பந்தரும் அத்திருக் கதவை திறந்து மூட எண்ணினர். அப்பர், “பண்ணினேர்… கண்ணினால் உமைக்காண கதவைத் திண்ணமாகத் திறந்தருள் செய்மினே” என்று பாடினார். நெடுங்காலமாகப் பூட்டிக் கிடந்த அக்கதவு திறந்தது. அதன்பிறகு சம்பந்தர் திருப்பதிகம் ஒன்றைப் பாடத் தொடங்கியதுமே, கதவு மீண்டும் மூடிக் கொண்டது. நாள்தோறும் திருக்கதவு திறந்து, மூடவேண்டும் என்பதற்காகவே அவ்விருவரும் அவ்வாறு செய்தனர்.

அன்றிரவு நாவுக்கரசருக்கு மனதில் ஒரு ஏக்கம் பிறந்தது. தான் நெடுநேரம் பதிகம் பாடிய பின்பே இறைவன் கதவைத் திறந்தார். ஆனால் சம்பந்தர் பாடத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கதவை அடைத்துவிட்டாரே! என்பதே அந்த ஏக்கம். அதை நினைத்துக் கொண்டே நாவுக்கரசர் உறங்கினார்.

அப்போது இறைவன் அடியவர் கோலத்தில் வந்து, நாவுக்கரசரை எழுப்பி, ‘திருவாய்மூரில் பதிகத்தைத் தொடர வா!’ என்று கூறிவிட்டு நடந்தார். நாவரசரும் எழுந்து அவர் பின்னால் சென்றார். அவர், அவ்வடியவரை நெருங்க நினைத்தும் அது இயலவில்லை. அவ்வடியவர் இறைவனே என்று உணர்ந்தார் நாவரசர். அவ்வடியவர் நேராகக் கோயில் ஒன்றைக் காட்டி அதனுள் நுழைந்தார். கதவு அடைத்துக் கொண்டது. அந்நேரத்தில் விழித்த சம்பந்தரும் அப்பர் சென்றதை அறிந்து அவர் பின்னால் வந்தார்.

            உடனே நாவுக்கரசர், “இறைவனே! உன் திருவுள்ளத்தை அறியாமல் கதவைத் திறந்த எனக்கு காட்சி அளிக்க மறுக்கலாம். ஆனால் சிறிதுநேரம் பாடியே கதவை அடைத்த சம்பந்தப் பெருமானுக்கு காட்சிதர மறுக்கலாமோ?” என்று வேண்டினார். சிவபெருமான் இருவருக்கும் காட்சி அளித்தார்.

            ஒருமுறை, பாண்டிய மன்னர் நெடுமாறன் சமணர்களின் பிடியில் சிக்கிக் கொண்டு சைவத்தை விலகி நின்றான். அவரைச் சைவத்திற்கு மாற்றும்படி அரசியார் மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் சம்பந்தப் பெருமானிடம் வேண்டிக் கொண்டனர்.

சம்பந்தப் பெருமானும் புறப்பட ஆயத்தமானார். அப்போது நாவுக்கரசர் சம்பந்தரிடம், “சமணர்கள் கொடியவர்கள். எனக்குப் முன்பு பல கொடுமைகள் புரிந்துள்ளனர். எனவே நீர் அவர்களிடம் செல்ல வேண்டாம். இன்று நாள்வேறு நன்றாய் இல்லை” என்றார்.

            அதற்கு சம்பந்தர், “நாளும் கோளும் அடியவர்க்கு இல்லை” என்று கூறிவிட்டு, மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். சமணர்களை வென்று மன்னரை சைவம் தழுவச் செய்தார். ஒருமுறை திருப்பழையாறையிலுள்ள வடதளி என்னும் சிவாலயத்திற்குச் சென்றார் நாவுக்கரசர். அங்கு சமணர்கள் சிவலிங்கத்தை மூடி மறைத்து, அதை சமண விமானமாக மாற்றியிருந்தனர். அதைக் கண்ட நாவரசர், ‘இறைவனைத் தொழாமல் திரும்ப மாட்டேன்’ என்று சபதம் செய்தார். இறைவன் மன்னனின் கனவில் தோன்றி, சமணர்கள் சிவலிங்கத்தை மூடி மறைத்ததைக் கூறினார்.

            உண்மையறிந்த மன்னன் நாவுக்கரசரிடம் வந்து வணங்கினான். திருக்கோயிலைத் திறந்தான். அங்கிருந்த ஆயிரம் கொடிய சமணர்களை யானையால் மிதிக்கச் செய்து கொன்றான். திருப்பழையாறையிலிருந்து
நாவுக்கரசர் பல சிவத்தலங்கள் சென்று வணங்கினார். பதிகங்கள் பாடினார். பின் திருப்பைஞ்ஞீலியை நோக்கிப் புறப்பட்டார். வழியில் பசியாலும் தாகத்தாலும் தவித்தார். அப்போது வழியில் குளம் ஒன்று தென்பட்டது. தாகம் தணித்த சுவாமிகளுக்குப் பசி அடங்கவில்லை.

            அப்போது ஒரு திருநீறணிந்த அந்தணர், நாவரசருக்குத் தன் கையிலிருந்த சோற்றுப் பொதி அளிக்க,நாவுக்கரசர் பசியாறினார். அந்த அந்தணர், தானும் பைஞ்ஞீலிக்குப் போவதாகக் கூறினார். இருவரும் நடந்தார்கள். அவ்வூர் திருக்கோயிலின் அருகில் வந்தவுடன் அவ்வந்தணர் மறைந்தார். இறைவனே அந்தணர் உருவில் வந்துள்ளார் என்று உணர்ந்த அப்பர்சுவாமிகள் மெய்சிலிர்த்தார்.

            பின் தொண்டை நாட்டிலுள்ள பல சிவாலயங்களைத் தரிசித்தவர், திருக்காளத்தி சென்று காளத்திநாதனையும், கண்ணப்பரையும் தொழுதார். தென்கயிலையான திருக்காளத்தியைத் தரிசித்த சுவாமிகள், வடகயிலை நோக்கிப் புறப்பட்டார். வழியில் ஸ்ரீசைலம், மாளவம் போன்ற தலங்களைத் தரிசித்து காசி சென்றடைந்து அங்கும் வணங்கினார்.

            நாவுக்கரசருக்கு வயது முதிர்ந்திருந்ததாலும், நெடும் பயணம் மேற்கொண்டதாலும் அதற்கு மேல் நடக்க இயலாதவராய் விழுந்தார். அப்போது இறைவன் ஒரு பொய்கையை அங்கே உருவாக்கினார். ஒரு முனிவரின் தோற்றம் கொண்டு அப்பரின் முன் வந்து நின்றார்.

அவர் நாவரசரிடம், “இக்கொடிய காட்டிற்கு எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டார். அதற்கு சுவாமிகளும், “திருக் கயிலையைத் தரிசிக்கவே வந்தேன்” என்று பதில் கூறினார்.

            உடனே அம்முனிவர், “கயிலையைத் தரிசிப்பது தேவர்க் கும் கடினமானது. அதனால் நீர் திரும்பிச் செல்லலாம்” என்று கூறினார்.

ஆனால் சுவாமிகளோ, “கயிலையைக் காணாமல் திரும்ப மாட்டேன்!” என்று உறுதியாய்ப் பதிலளித்தார். உடனே முனிவராக வந்த சிவபெருமான், “அடியவரே! இப்பொய்கையில் மூழ்கி எழுந்திருங்கள். நாம் கயிலைக் கோலத்தை திருவையாற்றில் காட்டுவோம்” என்று கூறி மறைந்தார்.

            முனிவராக வந்தவர் இறைவனே என்று உணர்ந்த அப்பர் சுவாமிகள், மெய்ச்சிலிர்த்து கைகூப்பினார். பொய்கையில் மூழ்கினார். திருவையாற்றில் எழுந்தார். அங்குள்ள திருக்கோயிலை திருக்கயிலையாகக் கண்டார். இறைவனின் திருவருளை நினைத்து பல திருத்தாண்ட கங்களைப் பாடினார். அவ்விடத்தில் பலநாட்கள் தங்கியிருந்து சிவப்பணி செய்தார்.

பின் திருப்பூந்துருத்தி வந்த சுவாமிகள், அங்கு வந்த சம்பந்தப் பெருமானைப் பற்றிக் கேட்டறிந்தார். அடியவர் கூட்டத்தைச் சேர்ந்து, அடியவரில் ஒருவராகி சம்பந்தரது பல்லக்கைத் தூக்கிச் சுமந்தார். “அப்பர் எங்கே?” என்று தேடிய சம்பந்தர், சுமை தூக்கியாக இருந்த அப்பரைக் கண்டு வணங்கினார். பின், தான் மதுரையில் சமணர்களை வென்றதையும், மன்னரை சைவத்திற்கு மீட்டதையும் கூறினார்.

            பாண்டி நாட்டின் பெருமையை சம்பந்தர் வாயிலாகக் கேட்டறிந்த அப்பர், பாண்டி நாட்டிற்குச் சென்றார். அரசியாரும், கூன் நிமிர்ந்த மன்னரும், அமைச்சர் குலச்சிறையாரும் சுவாமிகளிடம் வந்து அவரைப் பணிந்தனர். பிறகு தென்னாட்டிலுள்ள சிவத்தலங்களைத் தரிசித்த அப்பர் சுவாமிகள், திருப்புகலூர் வந்து சேர்ந்தார்.

            திருப்புகலூரில் உறைந்தருளும் பெருமானைத் தொழுது, பல தாண்டகங்களையும், விருத்தங்களையும் பாடி அருளினார். பிறகு இறைவனை நினைத்தே சித்தநிலை கொண்டார். அவர் சித்தத்தைக் கலைக்க இறைவர் செய்த சோதனைகளிலும் சுவாமிகள் வென்றார். காணும் பொருளெல்லாம் சிவமென்று இருந்த அப்பர் சுவாமிகள், ஒரு சித்திரை மாதம் சதய நட்சத்திர நாளில் சிவனடி சேர்ந்தார்.


கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

14.ஆனாய நாயனார் வரலாறு

15.மூர்த்தி நாயனார் புராணம்

16.முருக நாயனார் புராணம்

17.திருநாளைப்போவார் புராணம்

18.திருக்குறிப்புத் தொண்டர்

திருக்குறிப்புத் தொண்டர் நாயனார்

திருக்குறிப்புத் தொண்டர்

திருக்குறிப்புத் தொண்டர்


            காஞ்சிபுரத்தில் வண்ணார் குலத்தில் பிறந்தவர் இவர். சிவனடியார்கள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அடியவர்கள் ஏதும் கூறாமலேயே, அவர்கள் உடுத்திய ஆடையைப் பெற்று, அதைத் துவைத்துத் தந்தார். இவ்வாறு அடியவர்களின் திருக்குறிப்பை அறிந்து, திருத்தொண்டு புரிந்த இவரை மக்கள் திருக்குறிப்புத் தொண்டர் என்று அழைக்கலாயினர்.

            இவரது பெருமையை உலகிற்கு உணர்த்த திருவுள்ளம் கொண்டார் சிவபிரான். தானே ஒரு அடியவர் வேடத்தில், அழுக்கேறிய காவி உடுத்தி, நாயனாரின் முன் வந்தார். அது குளிர்காலம். நாயனாரும் வழக்கம்போல் அடியவரிடம் வந்தார். ஆடையைத் தரும்படியும், தான் துவைத்துத் தருவதாகவும் வேண்டினார்.

            அடியவரோ, தன்னிடம் இந்த ஒரு ஆடையே இருப்பதாகவும், மாலைக்குள் துவைத்துத் தருவதாக இருந்தால் மட்டுமே ஆடையைத் தருவேன் என்றும் கூறினார். இரவில் குளிரும் என்பதால் அதற்குள் ஆடையைத் தரவேண்டும் என்றும் கூறினார்.

            நாயனாரும் சம்மதித்தார். உடனே அடியவர் கோவணத்தை மட்டும் வைத்துக் கொண்டு, தன் ஆடையை அவிழ்த்து நாயனாரிடம் தந்துவிட்டுச் சென்றுவிட்டார். நாயனாரும் மிக்க மகிழ்ச்சியோடு அடியவரின் துணியைத் துவைக்கச் சென்றார்.

நாயனாரைச் சோதிக்க விரும்பிய சிவபிரான் கருமேகங்களை உண்டாக்கினார். கடும் அவ்விடத்திலே மழையைப் பெய்வித்தார். ஆடையைத் துவைத்த நாயனார் அதை உலர வைக்க இயலாது தவித்தார். மாலைக்குள் அடியவருக்கு ஆடையைத் தரவேண்டுமே என்று பதைத்தார். ஆனால் மழை நின்றபாடில்லை. அடியவர் சொன்ன மாலை நேரமும் வந்தது.

திருக்குறிப்புத் தொண்டர், ‘அடியவர் வேண்டியபடி என்னால் துணியைத் துவைத்துத் தர இயலவில்லை. பாவம், அடியவர் என்னால், குளிர் தாங்காது துன்பம் அடைவாரே!’ என்ற எண்ணம் கொண்டு துடித்தார். துணி துவைக்கும் கல்லில் தன் தலையை மோதி உயிர்விடத் துணிந்தார். சிவபெருமான் தன் கையால், நாயனாரின் தலையைத் தடுத்துப் பிடித்தார்.

மறுகணமே சிவபெருமான், உமையன்னையுடன் இடப வாகனத்தில் தோன்றினார். திருக்குறிப்புத் தொண்டரிடம், “அடியவரே!  உமது பெருமையை உலகிற்கு அறிவிக்க நாம் செய்த சோதனையே இது!” என்று வாக்கருளினார். திருக்குறிப்புத் தொண்டரை சிவபதம் சேர்த்தார்.


கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

14.ஆனாய நாயனார் வரலாறு

15.மூர்த்தி நாயனார் புராணம்

16.முருக நாயனார் புராணம்

17.திருநாளைப்போவார் புராணம்

நெஞ்சு பொறுக்குதிலையே | சிறுகதை |முனைவர் க.லெனின்

நெஞ்சு-பொறுக்குதில்லையே

“நெஞ்சு பொறுக்குதிலையே!”

         தெருவில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அச்சிறுவர்கள் போடும் சத்தம் அத்தெருமுழுக்க கேட்டது. தெருவின் வடமேற்குப் பகுதியில் வேப்பம்மரம் ஒன்று இருந்தது. அந்த வேப்பமரத்தைச் சுற்றிலும் பத்துப்பேர் கொண்ட கும்பல் ஏதோ ஒரு மொழியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசுவது யாருக்கும் புரியவும் இல்லை. அவர்களை அங்கிருக்கும் மற்ற மக்களும் கண்டுகொள்வதாகவும் இல்லை. அந்தக் கும்பலில் ஒரு பையனும் பொண்ணும் அருகருகே அமர்ந்திருந்தார்கள். பையனுக்கு இருபது வயசு இருக்கலாம். பொண்ணுக்குப் பதினாலு வயது இருக்கலாம்.

     “டே… வாங்கடா… இங்க கல்யாணம் ஒன்னு நடக்குது” என்று அங்கிருந்த சிறுவன் ஒருவன் கத்தினான். அடுத்தவினாடி அத்தனை சிறுவர்களும் வேப்பமரத்தடியில் இருந்தார்கள். மாப்பிள்ளை வெறும் மஞ்சள் கயிற்றை எடுத்து அப்பெண்ணின் கழுத்தில் கட்டினான். கூடியிருந்தவர்கள் வெறுங்கையைத் தட்டினார்கள். சிலர் சாப்பாட்டுத் தகரத்தட்டை குச்சியால் தட்டி சத்தத்தை எழுப்பினார்கள். சிறுவர்கள் அனைவரும் ஓ.. வென்று கத்தினார்கள். அவர்களின் கல்யாணம் அவ்வளவே.  சிறுவர்களும் அவரவர் வீடுகளுக்கு ஓடிப்போனார்கள்.

காலம் கடந்து இன்றைக்கு,

       சித்திரை மாசமன்னாலே போதும் இவர்கள் எங்கிருந்துதான் வருவார்களோ தெரியாது. கூட்டங்கூட்டமாய் வந்து விடுவார்கள். தண்ணீர் எங்கு இருக்கிறதோ அங்கேயே தங்கி விடுவார்கள். இவர்களுக்கென்று ஊர் கிடையாது. நிரந்தர இடம் கிடையாது. தனக்கென சொந்தபந்தமும் கிடையாது. பொதுவா மக்கள் இவங்களை நாடோடிகள்ன்னு கூப்பிடுவாங்க. ஒருசிலபேர் பிச்சை எடுத்துச் சாப்பிடுறதால பிச்சைக்காரங்கன்னும் சொல்லுவாங்க.

       உடம்புல முடி அதிகமா இருக்கும். குளிக்க மாட்டாங்க. ஆம்பிளைங்க சட்டை போட மாட்டாங்க. பொம்பளைங்க மேல ஒரு உடுப்பு. கீழ ஒரு உடுப்பு அவ்வளவுதான். வாய் கொடுத்தம்மன்னா மீள முடியாது. கிட்டக்க போனா குப்புன்னு வாடை அடிக்கும்.

      அந்த ஊருக்குப் பிச்சைக்கார கூட்டங்களோடு பாஞ்சாலையும் தன் மகனோடு வந்திருந்தாள். பாஞ்சாலைக்கு என்ன தெரியும். கூட இருக்கிறவங்க எங்க போனாலும் அவளும் பின்னாலே போயிடுவா.. வேற என்ன பன்றது. ஆலமரத்தடியில் அவரவர்களும் ஒவ்வொரு இடமாய் பிடித்தார்கள். பாஞ்சாலையும் தனக்கென ஒர் இடத்தைப் பிடித்துக்கொண்டாள். தன்னுடைய மூட்டைக்குள் வைத்திருந்த பெரிய  துணிக்கற்றை எடுத்தாள். நான்கு மூலைகளிலும் கால்கள் ஊன்றி மூங்கிலை வளைத்து அதன்மேல் துணியைப்போட்டு மூடினாள். துணிவீடு ஒன்றை உருவாக்கிவிட்டிருந்தாள் பாஞ்சாலை. அதற்குள்  மற்றவர்களும் ஆளுக்கொரு துணி வீட்டினைக் கட்டிக்கொண்டார்கள். எப்பொழுதும் அதற்கான பொருட்களை அவர்கள் தங்களுடனே எடுத்துச் செல்வார்கள். வந்த நேரம் சாயங்காலம் ஆனதால் தற்போது இருட்டியிருந்தது. மகனை அழைத்துக்கொண்டு துணிக்கூண்டுக்குள் போய்ப்படுத்துக்கொண்டாள்.  நிலவு நடு வானத்தைத் தொட்டிருந்தது. அங்கு காற்று குளிர்ந்து மென்மையாய் வீசியது. எந்தச்சத்தமும் இல்லாமல் அந்த இரவு அமைதியாயிருந்தது.

      “அம்மா பசிக்கு… அம்மா பசிக்கு…” என்று மகன் அமுதன் அழுதது பாஞ்சாலைக்குக் கேட்டது. தூக்கத்தில் இருந்தவாறே தன்னுடைய ஜாக்கெட்டை அவிழ்த்து ஒருபக்க மார்பினை அமுதனின் வாயில் வைத்தாள். அமுதனும் மார்பு காம்பை சுவைத்தபடியே தூங்கிப்போனான்.

        “எத்தனை நாளுக்குத்தான் இப்படி அமுதனை ஏமாற்ற முடியும். குழந்தையில பசிக்கிதுன்னு அழுதபோது பால் கொடுத்தேன். பாலு வத்திப்போச்சு. சோறு ஒழுங்கா சாப்பிட்டாதானே பாலும் சுரக்கும். சோத்துக்கு எங்க போறது. வேலை செஞ்சு பொழைக்கலாம்முன்னு வேலை கேட்டு போனா.. என்னைய மேலும்கீழும் பார்த்துச், “சோப்பு வாங்கி தரன். குளிச்சிட்டு பிரஷா வான்னு” கூப்பிடுறான். அப்படி வாழ்றதுக்கு நான் பிச்சையே எடுக்கலாம்ன்னு மனசு சொல்லிச்சு. அப்புறம் எப்படி? குழந்தை பசின்னு கேட்டா உடனே மார்போடு அணைச்சிக்குவேன். என் இரத்தத்தைதான் உணவா கொடுக்கிறன். உடம்புல இருக்கிற உப்ப சப்பிகிட்டே அவனும் தூங்கிடுவான். ஏன்னா என் பொறப்பு அப்படி?” அமுதனுக்குப் பால் கொடுத்துக்கொண்டே விட்டத்தை அண்ணாந்து பார்த்தாள். மீண்டும் மனதால் யோசிக்க ஆரம்பித்தாள்.

          நான் எப்படி பொறந்தன். எப்படி வளந்தன்னே எனக்கு ஞாபகம் இல்லை. ஏதோ எப்படியோ வளந்தேன். ஒருநாள் வேப்பமரத்தடியில எனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆச்சி. அது கல்யாணமின்னு கூட எனக்கு தெரியாது. ஆனா ஏதோ எனக்குன்னு ஒருதுணை இருக்கிறதா அவரை நினைச்சிக்கிட்டேன். பிச்சை எடுத்து வாழற பொழப்ப விட்டுட்டு அவருகூட வேலைக்கு போயி சம்பாரிச்சு நல்லா வாழனுமுன்னு நினைச்சேன். இத அவருகிட்ட எத்தனையோ தரவா சொல்லியும் இருக்கேன். அவரும் நேரம் வரட்டும் பாத்துக்கலாம் என்பார். நான் அப்ப ஆறு மாசம். ஒருநாள் காலையில அவரோட துணியை மட்டும் எடுத்து வைச்சிட்டுருந்தார்.

“என்னங்க… ஏதாவது வேலையா” என்றேன்

“ஆமாம் பாஞ்சாலை! வேலதான். போயிட்டு இருட்டருதுக்குள்ள வந்துடுறேன்”

       பாஞ்சாலையின் நெற்றியிலும் வயிற்றிலும் முத்தம் கொடுத்துக் கிளம்பியவன்தான் இன்று அமுதனுக்கு ஆறுவயசு ஆகுது. இன்னும் வரவே இல்லை. போனவன் போனவன்தான். நான் ஒரு கிறுக்கிமவ.  இருட்டருதுக்குள்ள வந்திடுவேன்னு சொன்னா… அப்புறம் எதுக்கு வேட்டின்னு கேட்க தோணல. பாஞ்சாலையின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து தலையணையை நனைத்தது. தூக்கம் வராமல் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள்.

       அமுதனுக்கு விவரம் தெரிஞ்சா நான் என்ன பன்றது. என் மகன இந்த நாற வாழ்க்கையை வாழ வைக்ககூடாது என்று நினைத்தாள். பாஞ்சாலை எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை.

       அந்த ஊறு பாஞ்சாலைக்குப் புதுசு. இதற்குமுன் அங்கு வந்ததாக நினைவில்லை அவளுக்கு. மற்ற பெண்களோடு குளத்திற்குத் தண்ணீர் எடுக்க அவளும் சென்றிருந்தாள். வெயில் காலமாக இருந்தாலும் பச்சை பசேல் வயலும். தண்ணீரும் இருந்தது. அவுங்க ஆளுங்களுக்கு எப்படி தெரியுமோ தெரியாது. எப்படியாவது தண்ணீர் இருக்கக்கூடிய இடத்தைக் கண்டுபிடித்து வந்து விடுவார்கள். ஊரும் வளமாகவே காணப்பட்டது.

       ஆலமரநிழலில் ஒருபக்கம். அங்கே ஒருத்தர் சிறுவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அவருபேரு பிச்சை. அந்தக்கூட்டத்தில் வயசானவர். விவரமானவரும் கூட. காலையிலேயே அவருக்கு முன்னால் ஐந்தாறு சிறுவர்கள். அச்சிறுவர்களில் அமுதனும் ஒருவன். பிச்சை எப்படி எடுக்க வேண்டும் என்று வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார்.

              “பசங்களா… நான் சொலறத கவனமா கேளுங்க?”

              “சரிங்க தாத்தா.. சொல்லுங்க” என்றார்கள் அனைத்துச் சிறுவர்களும்.

       பிச்சை எடுக்க போகும்போது நேரம் அறிஞ்சு போகனும். அப்பதான் சோறு போடுவாங்க. காலையிலகாட்டியும் வீட்டு முன்னால போயி நின்னாக்க… வீட்டுக்காரங்க திட்டுவாங்க.. நம்மள பாத்தவுடனையே வெரட்டுவாங்க. அதனால காலையில வீட்டுல இருக்கிறவங்க எல்லாம் சாப்பிட்டு முடிச்சதும், அவுங்க மீதியை கீழ கொட்டிடலாமுன்னு நினைப்பாங்கள்ள அந்தச்சமயத்துல போயி பிச்சை எடுக்கனும். கண்டிப்பா அப்ப நமக்கு சோறு போடுவாங்க.. மதியானம் போகக்கூடாது. ஏன்னா? அந்த நேரத்துலதான் அவுங்க தூங்கிட்டு இருப்பாங்க. நாம தொந்தரவு பண்ணக்கூடாது. அப்படி பண்ணா அடுத்தவாட்டி போகும்போது திட்டி அனுப்பிடுவாங்க.

       இரவு நேரத்திலையும் ஒன்பது மணிக்கு மேல பிச்சை எடுக்க போகனும். அப்பத்தான் அவுங்கயெல்லாம் சாப்பிட்டு பாத்திரத்த கழுவும்போது நாம போனா பிச்சை போடுவாங்க.

              “அது எப்படி தாத்தா சரியா போறது?” என்றான் ஒரு சிறுவன்

       அது முடியாதுதான். ஆனா ஒரு வீட்டுல இல்லாட்டியும் இன்னொரு வீட்டுல கண்டிப்பா நான் சொன்ன மாதிரிதான் நடக்கும். ஆனா ஒன்னா சேர்ந்து போககூடாது. தனித்தனியே போனாதான் பாவமா பாத்துச் சோறு போடுவாங்க. சரி… இங்க நாலு தெருதான் இருக்கு. பிரிஞ்சு போயி சோறு வாங்கியாங்க என்றார் பிச்சை.

              “தாத்தா நாங்க கேட்டா சோறு போடுவாங்களா” என்றான் மற்றொரு சிறுவன். “அப்படின்னா வயித்துக் காஞ்சி செத்துப்போங்கடா” கோபமானார் பிச்சை.

       ஆளுக்கொரு தட்டை எடுத்துக்கொண்டு சிறுவர்கள் பிச்சை எடுக்கப்போனார்கள். அமுதனும் அவர்கள் கூடவே ஒட்டிக்கொண்டான். நான்கு தெருக்களிலும் பிரிந்து கொண்டார்கள். வாகை மரத்து வாசல் வீட்டின் முன் அமுதனும் கூடவே இன்னொரு பையனும் நின்றார்கள். இச்சிறுவர்களை அந்த வீட்டு சிறுவன் மாணிக்கம் வச்சக்கண்ணு வாங்காமலே பார்த்துக் கொண்டிருந்தான். அந்நேரம் வீட்டிலிருந்து மாணிக்கத்தின் அம்மா வெளியே வந்தார்கள்.

              மேல் சட்டையில்லாத கிழிந்த டவுசரும் கருத்த உருவமாய் நின்றிருந்தார்கள். பக்கத்தில் இருந்தவன் அமைதியாய் பாவமாய் நின்றிருக்க அமுதன் மட்டும் “பிச்சை தாத்தா சோறு வாங்கியாற சொன்னாங்க. எனக்கு பசிக்கு” என்றான்.

       மாணிக்கத்தின் அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை. “யாருப்பா பிச்சை தாத்தா” ன்னு கேட்டாங்க.

       “அவரு பிச்சை தாத்தா.. பிச்சை தாத்தா..” என்றான் அமுதன். மாணிக்கத்தின் அம்மா என்ன நினைத்தாலோ என்னவோ மனதிலே சிரித்துக்கொண்டு உள்ளே போய் சாப்பாட்டுடன் வெளியே வந்தாள். இரண்டு தட்டுகளிலும் கொஞ்சம் சாப்பாடும் குழம்பும் ஊற்றினாள். வாகை மரத்து அடியிலே நின்று அந்த உணவை அள்ளி அள்ளி இருவரும் சாப்பிட்டார்கள். அமுதனின் உதடு, கன்னம், சட்டையில்லாத வயிறு எல்லாம் சோறாயிருந்தது. அதை அருவருப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் மாணிக்கம்.

       காலை வெயில் ஏறிக்கொண்டிருந்தது. தண்ணீர் இறக்கி வைத்துவிட்டு கூண்டிற்குள் வந்தாள் பாஞ்சாலை. தூங்கிகொண்டிருந்த மகனை காணவில்லை. வெளியே வந்து,

“மங்கா அக்கா… என் மகன பாத்தியா…”

“அவன் பிச்சையோட நின்னுட்டு இருந்தாண்டி” என்றாள் அவள்.

       பாஞ்சாலைக்குக் கோபம் தலைக்கேறியது. இந்தக் கிழட்டுமூதி சின்ன பசங்கள அனுப்பி பிச்சயெடுத்துச் சாப்பிடறது. அதுக்கு ஞா மகன்ந்தா கிடைச்சானா.. கறுவிக்கொண்டே ஆலமரத்து அடுத்த மூலைக்குச் சென்றாள். பிச்சையின் முன்னாடி முன்னைப் போலவே அனைத்துச் சிறுவர்களும் நின்றிருந்தார்கள்.

              “பிச்சை தாத்தா… அமுதன் இன்னிக்கு என்னாமா பிச்சை எடுக்குறா தெரியுமா? நானே அசந்திட்டன். அனைவரும் வாய்விட்டு சிரித்துக்கொண்டனர்.

              “அமுதா… இங்க வாடா… ” பாஞ்சாலையின் குரல் வேகமாய் ஒலித்தது. அமுதனும் அம்மாவைப் பார்த்தவுடன் வேகமாய் ஓடிச்சென்று கால்களைக் கட்டிக்கொண்டான். தலையைத் தாழ்த்தி மகனைப் பார்த்தாள். வயிறு கொஞ்சமாய் மேடாயிருந்தது. பாஞ்சாலைக்கு அப்பாடா என்றிருந்தது.

              “யோ பிச்சை.. ஞா புள்ளைய கெடுக்கிறதே நீதான்யா.. நாந்தான் ஞா புள்ள கூட பேசாத பேசாதன்னு சொல்றன். அவன பிச்சையெடுக்க அனுப்பாத.. பழக்காதன்னு சொல்றன்ல்ல! அப்புறம் ஏ? சும்மா பேசிப்பேசி பிச்சையெடுக்க வைக்கிற. ஏற்கனவே ஒருத்தன ஞா தலையில கட்டி வைச்ச. அவனும் என்னை நட்டாத்துல விட்டுட்டு போயிட்டான்” பாஞ்சாலையின் கோபம் வெடித்தது. பிச்சை எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்தார். அமுதன் பிச்சை எடுப்பது பாஞ்சாலைக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. நிலைகெட்ட இவர்களைப் நினைந்து நெஞ்சு பொறுக்கமுடியாமல் தவித்தாள். தான்தான் மானம் கெட்டுப்போய் பிச்சை எடுக்கிறோமே. தன்மகனும் எடுக்கனுமா என்பாள். இந்தக் கூட்டத்திலிருந்து எப்படியாவது மகனை பிரித்து வெளியேறிவிட வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்ளுவாள். தன்மகனை தோளில் தூக்கிப்போட்டுக் கொண்டு கூண்டிற்குள் சென்றாள்.

       மகனை மார்போடு அணைத்துக்கொண்டாள். மகனின் வயிறு ஓரளவிற்கு நிரம்பியிருந்தை நினைத்து சந்தோசப்பட்டாள். பாஞ்சாலையின் வயிறு இன்னும் காய்ந்துபோய்தான் இருந்தது.  கருத்த உடம்புதான் அமுதனுக்கு. அவனிடம் சட்டை இல்லை. கால்டவுசர் மட்டுந்தான் அணிந்திருந்தான். அதுவும் பின்பக்கத்தில் சின்னதா ஓட்டை வேறு. பாஞ்சலை டவுசரில் எவ்வளவு தைத்துப்பார்த்தும் ஓட்டை மட்டும் மூடியதாகத் தெரியவில்லை. இனிமேலும் தைக்கவும் முடியாது. அந்த அளவிற்கு துணி நைஞ்சு போயிருந்தது. இதைவிட்டால் இன்னொரு துணி இருக்கு. அதுவும் இப்படித்தான் இருக்கு. பாஞ்சாலை ரொம்பவும் வருத்தப்பட்டாள்.

       சிலநேரங்களில் அமுதன் நடந்து செல்லும்போது அவனுடைய பின்பக்கத்தில், “டே தபால்பெட்டி டா..” என்று பேப்பரைக் கிழித்துப் போடுவார்கள். தபால் வந்திருக்கிறதா என்று கையை உள்ளேவிட்டுப் பார்ப்பார்கள். அமுதன் அழுவான். அம்மாவிடம் வந்து திக்கிதிக்கி சொல்லுவான். பாஞ்சாலை ரொம்பவும் நொந்து கொள்ளுவாள். அமுதனுக்கு வாடாமல்லி கலர்ல பாக்கெட் வச்ச சட்டை போட்டுப் பாக்கனுமுன்னு பாஞ்சாலைக்கு ரொம்ப நாள் ஆசை.

       பாஞ்சாலை எப்போதும் பகலில் பிச்சை எடுக்க செல்ல மாட்டாள். இரவு நேரத்தில்தான் பிச்சை எடுக்கச் செல்வாள். அமுதன் குழந்தையாக இருக்கும்போது அவனையும் தூக்கிக் கொண்டுதான் செல்வாள். ஆனால் இப்போதெல்லாம் அமுதனை கூண்டிற்குள்ளே படுக்க வைத்துவிட்டுத்தான் பிச்சையெடுக்கவே வருகிறாள். பிச்சை எடுத்த உணவை இரவும் அடுத்தநாள் காலையும் வைத்துக்கொள்ளுவாள்.  வாகை மரத்து வீட்டில் பிச்சைக்காக ஏங்கி நிற்கிறாள் பாஞ்சாலை. வீட்டின் முன் சின்னசின்ன விளையாட்டு சாமான்கள் சிதறிக்கிடக்கின்றன. சிறிதுநேரத்தில் மாணிக்கத்தின் அம்மா உணவைப் போட்ட விட்டு திரும்புகிறாள்.

              “அம்மா… எனக்கு ஆறு வயசுல ஒரு பையன் இருக்கிறான். அவனுக்கு தகுந்த மாதிரி பழைய கிழிஞ்ச சட்டை ஏதாவது இருந்தா கொடுங்கம்மா” என்றாள்.

              பாஞ்சாலையையே பார்த்துக்கொண்டிருந்த அப்பெண், வீட்டினுள்ளே சென்று மாணிக்கத்தின் பழைய சட்டையும் பேண்டையும் எடுத்து வந்து கொடுத்தாள். “இது என்னோட பையனோடது. இப்ப பத்தல. சும்மாதான் வீட்டுல இருக்கு. எங்கையாவது கீழ போடலாமுன்னு வைச்சிருந்தேன். நீ உன் புள்ளைக்குப் போட்டு விடு” என்றாள் மாணிக்கத்தின் அம்மா.

       பாஞ்சாலையின் மனதில் நினைத்த மாதிரியே வாடாமல்லி கலர்ல சட்டை இருந்தது. மனம் சந்தோசப்பட்டாள். மகனுக்குப் உடனே போட்டுப்பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டாள். அன்றைய இரவு நன்றாகச் சாப்பிட்டாள். நிம்மதியாக உறங்கினாள்.

       சித்திரை வெயில் ரொம்பவும் வெக்கையாக இருந்தது. அக்னி நட்சத்திரம் வேறு. ஆலமரத்தடியில் இருக்கின்றபோது வெயில்கூட அந்தளவிற்கு தெரிவதில்லை. அந்த ஊர்க்காரர்கள் இதுபோன்ற நாட்களில் இங்குதான் உட்காந்து கொண்டு பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் இப்போது இங்கு யாரும் வரமுடியாது. இது அவர்களுக்குள் பெரும் நெருப்பாய் எரிந்து கொண்டிருந்தது. பிச்சைக்காரர்கள் கூட்டம் தொந்தரவு தாங்க முடியல. அந்தப்பக்கமே போக முடியல. ஒரே நாத்தம்.  ஆலமரத்துத் திடலயே நாசப்படுத்தி வச்சிருக்காங்க.  அப்பப்ப அந்த ஊரில் இந்தப் பேச்சுத்தான் அதிகமாயிருந்தது.

       ஒருநாள் சாயங்காலம். பாஞ்சாலை ஒரு ஓரமாய் துணி அலசிக்கொண்டிருந்தாள். திடிரென்று அலறல் சத்தம். ஓடிவந்து எட்டிப்பார்த்தாள். பிச்சைக்காரக்கூட்டத்தில் இரண்டொருவர் சாரயம் குடித்துவிட்டு பெரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இந்த வீட்டுப்பெண்களுடன் அந்த வீட்டுப் பெண்களும் சேர்ந்து அடித்துக்கொண்டார்கள். கற்கள் மேலே பறந்தன. யார்யார் மேலேயும் போய் விழுந்தன. பாஞ்சாலையின் கூண்டில் கூட ஒருகல் வந்து விழுந்தது. “ஐயோ.. பிள்ளையாச்சே” என்று பதறி ஓடினாள். பிச்சை எவ்வளவு தடுத்துப்பார்த்தும் அவர்கள் கேட்பதாகயில்லை. கைக்கால்கள் ஆட்டம் ஆடின. கெட்ட வார்த்தைகள் படையெடுத்து வந்தன. கிராம மக்கள் எல்லாம் கடும் கோபத்தில் இருந்தார்கள்.

       ஊர்ப்பெரியவர் வந்தார். சண்டையிட்ட இருவருக்கும் கன்னத்தில் பளார் என்று ஆளுக்கொரு அறை விட்டார். கன்னத்தில் கை வைத்தபடியே அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கொஞ்சநேரத்தில் அந்த இடமே காலியானது. அடித்து விரட்டப்பட்டார்கள். ஆளுக்கொரு திசையாய் ஓட்டம் பிடித்தார்கள். பாஞ்சாலையும் மகனைத் தூக்கிக்கொண்டு கண்ணுமுண்ணு தெரியாமல் ஓடினாள்.

       இரண்டு நாளைக்கு அப்புறம் அந்தக்கிராமத்தில் பிச்சைக்காரர்கள் யாருமே இல்லை. ஏரி கருவேல காட்டுக்கு நடுவே பாஞ்சாலையும் மகனும் மட்டுமே தனித்து இருந்தார்கள். இனி பிச்சக்காரக் கும்பலுடன் போகக்கூடாது. மகனுக்காக இந்த ஊரிலே வாழனும்முன்னு முடிவு பண்ணா. முதல்ல தன்னோட தோற்றத்த மாத்தனுமுன்னு நினைச்சா. ஏரி மதகுல நல்லா மூழ்கி குளிச்சி. தன்னோட அடையாளத்த அழிச்சா. சாதாரண பொம்பளைங்க மாதிரி தன்னை மாத்திகிட்டா.

       ஏரி ஓரமாவே துணி கூண்ட அமைச்சிகிட்டா பாஞ்சாலை. மகனுக்கு வாடாமல்லி சட்டையைப் போட்டு அழகு பார்த்தா. பிச்சை எடுக்க கூடாது. வேலைக்கு போகனுமுன்னு முடிவு பண்ணா. அங்க இருக்கிற பண்ணைகிட்ட வேல கேட்டுப் போனா பாஞ்சாலை.

       அமுதன் ஆலமரத்துக்கு அடியில வந்து நின்னான். அந்த இடமே மாறியிருந்தது. ஊர்மக்கள் சிலர் அங்க உங்காந்திட்டு பேசிட்டு இருந்தாங்க. ஒரு மூலையில சின்னப்பசங்க விளையாடிட்டு இருந்தாங்க. அங்க போயி நின்னான். அந்தப் பசங்க எல்லாம் அமுதனைப் பார்த்தாங்க.

“உன் பேரு என்னடா” என்றான் ஒரு சிறுவன்.   “அமுதன்” என்றான்.

       என்னா அமுதாவா… ஆம்பிளை பேரு வைக்கச்சொன்னா பொம்பள பேரு வச்சிருக்காங்க… கிண்டலாய் சிரித்தார்கள் அனைவரும். அக்கூட்டத்தில் மாணிக்கமும் ஒருவன்.

“டே.. மாணிக்கத்தோட சட்டையைப் போட்டிருக்காண்டா…” ஒரு சிறுவன்

“டே… மாணிக்கம் இந்தப் பிச்சைக்கார பையன் உனக்கு உறவாடா?” இன்னொருவன்

        “மாணிக்கமும் இந்த அமுதாவும் அண்ணன் தங்கச்சிடா” கேலியும் கிண்டல்களும் அதிகமாகவே இருந்தன. அமுதனுக்கு பாதி புரிந்து புரியாமலும் இருந்தது. மாணிக்கம் கொஞ்சம் பெரிய பையன் ஆதலால் கோபம் தலைக்கேறியது. கோபத்தின் எல்லைக்கே சென்றான். ஓடி வந்து எகிறி அமுதனின் நெஞ்சியிலே ஒர் ஒதை விட்டான். பதைபதைத்துக் கீழே விழுந்தான் அமுதன்.

“பிச்சைக்கார பயலே… கழுட்டுடா என் சட்டையை.. யார்ற உனக்கு கொடுத்தது. திருடிகிட்டு வந்தியாடா… பிச்சைக்கார பயலே..”

கீழே விழுந்த அமுதனின்மேல் மாணிக்கம் உட்காந்திருந்தான். அமுதனின் சட்டையையும் பேண்டையையும் கழட்டி நிர்வாணப்படுத்தியிருந்தான்.

“இவன் ஆம்புள பையன்தான்டா… மீண்டும் நக்கல்.

       அங்கே உட்காந்திருந்தவர்கள் சிறுவர்களின் சண்டையைப் பார்த்து ஓடிவருகிறார்கள். அதற்குள் அமுதன் வீட்டிற்கு நிர்வாணமாகவே ஓடுகிறான். மகன் அழுது கொண்டே நிர்வாணமாக ஓடி வருவதைக் கண்ட பாஞ்சாலைக்கு ஒரு நிமிடம் வயிற்றில் புளியைக் கரைத்தது. ஓடி வந்தவன் அம்மாவை இறுகக்கட்டிக்கொண்டான். தேம்பி தேம்பி அழுதான். “அடிச்சு… அடிச்சு.. ஒதச்சி.. ஒதச்சி.. தள்ளி.. கீழ.. பிச்சைக்கார பயலே” தேம்பலில் வார்த்தைகள் வரவில்லை. என்ன நடத்திருக்கும் என்று பாஞ்சாலை ஊகித்துக் கொண்டாள். மகனை மார்போடு அணைத்துக்கொண்டாள். அவனின் அழுகையை நிறுத்த அவளுக்கு வேறு ஆயுதமும் இல்லை. இந்த உலகத்தில் போராடித்தான் வெற்றியைத் தொடமுடியும் என்று நினைத்துக்கொண்டாள்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

எழுத்தாளர்

பாரதிதாசனும் பாரதியாரும் – ஒரு பார்வை

பாரதியாரும் பாரதிதாசனும் -ஒரு பார்வை

முன்னுரை

சாதி ஒழித்திடல் ஒன்று – நல்ல

தமிழ் வளர்த்தல் மற்றொன்று

பாதியை நாடு மறந்தால் – மற்றப்

பாதி துலங்குவ தில்லை

சாதி களைந்திட்ட ஏரி – நல்ல

தண்டமிழ் வாளினைத் தூக்கும்!

என்றுரைப் பார் என்னி டத்தில் – அந்த

இன்ப உரைகளென் காதில்

இன்றும் மறைந்திட வில்லை – நான்

இன்றும் இருப்ப தனாலே


            எனப் பாரதிதாசன் பாரதியாரின் பெரிய உள்ளத்தைப் புலப்படுத்தினார். கனித்தமிழ் மொழியைக் களை நீக்கி வடித்த கவிஞன் பாரதி; களை நீக்கிய கழனியில் கனிக்காடு கண்டவர் பாரதிதாசன். விடுதலைத் தீ கொழுந்து விட்டெரிந்த காலத்தில் பிறந்தவர்கள் இருவரும். ஆயினும் நாட்டு விடுதலையை மையப் பொருளாகக் கொண்டு சோதி மிக்க நவ கவிதை’ படைத்தவர் முன்னவர். ‘எளிய நடையில் புதிய நூல்கள்’ இயற்றியவர் பின்னவர். தமிழ்க் கவிதை உலகம் புதிய பாதையில் செல்ல வழிகோலியவர் பாரதி என்றால் தனக்குப் பின்னால் ஒரு பாட்டுப் பட்டாளம் தொடர அகன்ற வழித்தடம் அமைத்தவர் பாரதிதாசன் எனலாம்.

            பாரதியார் வழியைப் பின்பற்றியவர் பாவேந்தர். ஆயினும் பாரதியாரின் கருத்துக்களுக்கு அரண்பட்டும், முரண்பட்டும் பாடியுள்ள நிலையையும் காண்கிறோம். பாரதியாரைக் ‘கவிஞர்’ எனக் கொள்ளாத புலவர் கூட்டத்தில் அவர் ‘உலக மகாகவி ‘உயர் கவி’ என அவர் பாடல் வரிகளாலேயே நிறுவியவர் பாரதிதாசன். இவ்விருவரிடையே இருந்த தொடர்பில் பாரதிதாசனின் இலக்கிய ஆளுமையை இக்கட்டுரை விளக்குகிறது.


முதல் சந்திப்பு


            பாரதியார் பாரதிதாசன் முதல் சந்திப்பு இப்படித் தொடர்கிறது. 1908 செப்டம்பர் வாக்கில் பாரதியார் புதுவை செல்கிறார். அவரால் ‘வல்லூறு நாயக்கர்’ எனக் குறிப்பிடப்படும் வேணு நாயக்கர் திருமணப் பந்தலில் பாட்டுக் கச்சேரி பாடகரில் சனக சுப்புரத்தினமும் ஒருவர். கணீர்க் குரலில், ‘வீர சுதந்திரம் வேண்டி நின்றார். பின்னர் வேறொன்று கொள்வாரோ? என்னும் பாரதியார் பாடலைப் பாடினார் சுப்புரத்தினம் வேணு நாயக்கர், ‘இன்னும் பாடு சுப்பு’ என்றார். \தொன்று நிகழ்ந்த தனைத்தும்- எனத் தொடங்கும் பாடலையும் பாடினார். கூட்டத்தில் இருந்தவர்களில் கனக சுப்புரத்தினத்தால் ‘ரவி வர்மாப் படப் பரமசிவம்’ குறிப்பிடப்படுபவரும் ஒருவர். வேணு நாயக்கர் சுப்புரத்தினத்திடம், “அவங்க ஆர் தெரியுமில்ல’ என்று கேட்கிறார். தெரியாது என்பதற்குள் ரவிவர்மப் படப் பரமசிவம், ‘நீங்க தமிழ் வாசிச்சிருக்கீங்களோ? என வினவினார். `சுப்புரத்தினம், ‘கொஞ்சம்’ என்றார் ரவிவர்மாப் படம் `உணர்ந்து பாடுகிறீர்கள்’ என்றார். வேணு நாயக்கர், ‘அவங்க தானே’ ‘அந்தப் பாட்டெல்லாம் போட்டது. சுப்பிரமணிய பாரதி என்று சொல்றாங்கல்ல! என்று கனக சுப்புரத்தினத்துக்குப் பாரதியாரை அறிமுகப்படுத்துகிறார். பாரதியார் வேணுவிடம், ‘ஏன் இவரை நம் வீட்டுக்கு நீ அழைத்து வரலே? என வினவுகிறார்’ இந்தத் தொடர்பு ‘நாளும் வளர்’ நட்பாக மலர்ந்து பாரதியாரின் இறுதிக் காலம் வரை தொடர்ந்தது.


பாரதியார் தொடர்புக்கு முன்


            பாரதியாரைச் சந்திக்கும் முன்பே திருப்புளிசாமி ஐயாவிடமும். பங்காருப் பத்தரிடமும், புலவர் புஅ பெரியசாமிப் பிள்ளையிடமும் தமிழ் கற்று வண்ணப் பாடல்கள் பாடும் அளவிற்குத் தமிழ் இலக்கிய, இலக்கணப் புலமையுடன் திகழ்ந்தார், சுப்புரத்தினம் ஏராளமான பக்திப் பாடல்களை இயற்றினார் அப்படிப் பாடியவை தாம். மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு, ஸ்ரீ சிவ சண்முகன் கடவுள் பஞ்சரத்தினம், ஸ்ரீ மயிலம் சுப்பிரமணியர் துதியமுது என்பவை அப்போதிருந்த சுப்புரத்தினத்தின் நிலையை அவரே கூறுகிறார்.


‘விபூதி நாமங்களைப் போட்டுக் கொண்டு பஜனை மடங்களில் பாடியும். ஆடியும் கேவலமாகக் காலம்போக்கிக் கொண்டிருந்த என்னை இன்றுள்ள நிலைக்குக் கொண்டு வந்தவர் பாரதியார் தான்? இதனால், பட்டை நாமப் பாகவதராக விளங்கிய சுப்புரத்தினத்தை எளிய நடையில் கவிபாடும் மக்கள் கவிஞராக மட்டுமல்லாமல் மதிப்புடைய மனிதராகவும் ஆக்கிய பெருமை பாரதியாரையே சாரும்.

            அக்காலத்தில் சுப்புரத்தினம் பாடிய பக்திப் பாடல்களும், மக்களுக்குக் கடவுளைச் சுட்டிக் காட்டும் விதத்திலும் கடவுள் அருளைப் பெற மக்களைத் தூண்டி ஆயத்தப்படுத்தும் விதத்திலும் அமைந்திருந்தன.


பாரதியார் தொடர்புக்குப்பின்

            பாரதியார் இல்லத்தில் ஒருநாள், வ.வே.சு. அய்யரும் மற்றும் பல நண்பர்களும் குழுமியிருந்தனர். அப்பொழுது ‘சுப்புரத்தினம் ஒரு கவி. அவனுக்குக் கவி பாட வரும்’ என்று பாரதிதாசனை அறிமுகப்படுத்தினார் பாரதியார். வ.வே.சு அய்யரும், சிலரும் ஏளனத்தோடு `சுப்பு ஒரு கவியா? என்று ஐயுற்றுச் சோதிக்கும் முறையில், ‘அப்படியானால் ஒரு பாட்டுப் பாடட்டுமே’ என்று கேட்டுக் கொண்டனர். பாரதியாரும் ‘சுப்பு! நீ பாடு எனக் கம்பீரமான குரலில் கட்டளையிட்டார். அப்போது பாடிய பாடலே,


எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி

ஏழு கடல் அவள் வண்ணமடா – அங்குத்

 தங்கும் வெளியினிற் கோடியண்டம் – அந்தத்

தாயின் கைப்பந்தென ஓடுதடா.


எனத் தொடங்குவது எல்லோரும் வியந்தனர். பாரதியார் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது’ என்னும் குறிப்போடு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார்’ அதில் வெளிவந்தது. பாரதியார் தனது ‘தராசு’ கதைக் கட்டுரையிலும் இப்பாடலுக்கு ஒரு பின்னணியைக் காட்டி வெளியிட்டுள்ளார்.


            பாரதியார் புதுவையில் தங்கி இருந்த காலம் பத்தாண்டுகள். ஆசிரியர் பணி முடித்து வீடு திரும்பும்போது பல நாள்களில் மாலையிலும் பணியில்லா நாள்களில் காலையிலும் பாரதியார் இல்லம் செல்வது சுப்புரத்தினம் வழக்கம். பாரதியார் கவிதைகளைச் சுவைப்பதிலும், அவரோடு கலந்துரையாடுவதிலும் மகிழ்வுடன் கலந்து கொள்வார். பாரதியார் மீது அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார். தனக்குப் புதிய வழிகாட்டிய குருவாகவே மதித்தார். பாரதியார் தொடர்பால் தான் பெற்ற பயனை,

முப்பது ஆண்டு முடியும் வரைக்கும் நான்

எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்

கடவுள் இதோ என்று மக்கட்குக் காட்டிச்

சுடச்சுட அவனருள் துய்ப்பீர் என்னும்

ஆயினும் கடவுள் உருவம் அனைத்தையும்

தடவிக் கொண்டுதான் இருந்ததென் நெஞ்சம்

பாடலிற் பழமுறை பழநடை என்பதோர்

காடு முழுவதும் கண்டபின் கடைசியாய்ச்

சுப்பிரமணிய பாரதி தோன்றியென்

பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார்.

எனக் காட்டியுள்ளார்.

பாரதிதாசன் ஆனது

சுப்பிரமணியனாயிருந்தவர் பாரதி பட்டம் பெற்றுச் சுப்பிரமணியப் பாரதி என்றான பின்னர் அன்றைய அரசியல் சூழலில் சக்திதாசன், காளிதாசன், ஷெல்லிதாசன் என்னும் புனைபெயர்களில் கவிதை கட்டுரை எழுதி வந்தார். ஆயினும் பாரதியார் என்பது நிலைத்தது. சுப்புரத்தினமும் கே.எஸ். பாரதிதாசன் என்ற புனை பெயரில் தேசசேவகன், தேசபக்தன், ஆனந்த போதினி, புதுவைமுரசு, கலைமகள், சுதேசமித்திரன், சுதந்திரன், திருச்சியிலிருந்து வந்த `நகரதூதன்’ முதலிய ஏடுகளுக்குக் கவிதை கட்டுரைகளை எழுதி வந்தார். கிண்டற்காரன். கிறுக்கன் என்ற பெயர்களிலும் எழுதியுள்ளார். பாரதியார் தாசத் தன்மையோடு பெயர் வைத்துக்கொண்டது போலவே சுப்புரத்தினமும் பாரதிதாசன் எனப் புனைப்பெயர் கொண்டார். இதனை, ‘நான் பாரதிதாசன் என்ற புனைபெயர் வைத்துக் கொண்டுள்ளேன். அதற்குள்ள காரணம் அப்போது அவர் என்னுள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான்.

சாதிக்கொள்கையை நன்றாக உண்மையாக எதிர்த்தவர் பாரதியார் தாம்.. சென்ற காலத்தில் அவருக்கு முன் இவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்தவரை நான் கண்டதில்லை. பாரதி, எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது எனத் தம் புனைபெயர்க்கான காரணத்தைப் புலப்படுத்தினார். ஆயினும் அடிமை மனப்பான்மையைக் குறிக்கும் ‘தாசன்’ என்னும் சொல்லையும் பார்ப்பனச் சாதியினராகிய ‘பாரதியின். பெயரையும் இணைத்துப் பாரதிதாசன்’ எனக் கொண்டிருந்தது பலரது எதிர்ப்பையும் கிளப்பிற்று. பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா? என மறுப்பெழுதும் அளவுக்கு வளர்ந்தது. ‘எவருக்கும் தாசனாக இருக்க விரும்பாத நீங்கள் பாரதிக்கு மட்டும் ஏன் ஆனீர்கள்’ எனப் பொதுவுடைமை இயக்கத்தவர் வினவியதற்கு ‘அடிமைப் புத்தியை விரும்பாத நானே ஒருவருக்குத் தாசன் என்று சொல்லிக் கொள்வேன் என்றால் அவர் எவ்வளவு உயர்ந்தவராக இருப்பார் என்பதை எண்ணிப் பார்த்து அறிந்து கொள்க என விடையிறுத்தார். 

அய்யருக்கு அடிமையா? என்று வினவியவருக்கு ‘ஆமாண்டா நான்  பாரதிக்கு அடிமை தாண்டா’ நான் என்றென்றும் உளமாரப் போற்றி வழிபடுகின்ற தெய்வம் இந்த அய்யர். அன்பும் பண்பும் தமிழுணர்வும் ஒருங்கு சேர்ந்த பொன்னுருவம் அவர். பாரதியாருக்கு நான் தாசனாக இருப்பதில் உங்களுக்கு என்ன ஆட்சபேனை? இந்த வினாவிளை யார் விடுத்தாலும் எனக்குக் கோபம் வரும்’ என்று மறுப்புரைத்துப் பிறர் வாயடைத்துள்ளார். அதன் பின் இவ்வெதிர்ப்பு எழாது அடங்கியே போயிற்று.


பாரதியார் பற்றிப் பாரதிதாசன்

பாரதியார் கவிதைகளைச் சுவைத்துச் சுவைத்து மகிழ்ந்த பாவேந்தர், பாரதி பாட்டின் சொற்களில் படித்த பாவேந்தர் கவிதைகள் தோன்றிய சூழல், அவர் கொள்கை, பாடுபொருள், படைப்பின் மேன்மை, தனக்கு வழிகாட்டிய பான்மை, பாரதியார் பிற பெரியார்களோடு கொண்டிருந்த தொடர்பு, உலக மகாகவி, புதுயுகக் கவி ஆகிய பொருண்மை நிலைகளில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடிக் குவித்த குயில் ஆவார்.

‘உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்’ பாரதியைப் பற்றித் ‘திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத்தல் போல் சிற்சில கூறத் தொடங்கிய பாவேந்தர்.

தமிழின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்

இமைதிற வாமல் இருந்த நிலையில்

தமிழகம் தமிழுக்குத் தகும் உயர் வளிக்கும்

தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில்

இலகு பாரதிப் புலவன் தோன்றினான்

பைந் தமிழ்த் தேர்ப் பாகன் அவனொரு

செந்தமிழ்த் தேனீ சிந்துக்குத் தந்தை

குவிக்கும் கவிதைக் குயில் இந்நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு

நீடுதுயில் நீக்கப் பாடி வந்தநிலா

காடு கமழும் கற்பூரச் சொற்கோ

கற்பனை ஊற்றாம் கதையின் தையல்

திறம்பாட வந்த மறவன் புதிய

அறம்பாட வந்த அறிஞன் நாட்டிற்

படரும் சாதிப் படைம ருந்து,

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன். என்னென்று சொல்வேன்

 என்னென்று சொல்வேன்

தமிழால் பாரதி தகுதி பெற்றதும்

தமிழ்பா ரதியால் தகுதி பெற்றதும்

என்று பாரதியின் மேன்மையை எடுத்துரைத்தார். பாரதியாரின் முழு அளுமையும் இப்பகுதியில் பாடப்பட்டுள்ளதைக் காணலாம்.  ‘பாரதியார் சொல்லிய சொல்லையே’ வைத்துப் பாடல்களில் பாடி அவரது கவிதைத் திறத்தைச் சுட்டிக் காட்டிப் ‘பாரதியார் உலககவி என நிலை நாட்டினார். சில சான்றுகள்.


பழைய நடை பழங்கவிதை பழந்த மிழ்நூல்

பார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தா ரில்லை

ஞான ரதம் போலொரு நூல் எழுதுதற்கு

நானிலத்தில் ஆளில்லை. கண்ணன் பாட்டுப்

போல்நவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே?

மனிதர் யாரும் ஒருநிகர்

சமானமாக வாழ்வமே என்றறைந்தார் அன்றோ

பன்னீராயிரம் பாடிய கம்பனும்

இப்பொது மக்கள்பால் இன்தமிழ் உணர்வை

எழுப்பிய துண்டோ? இல்லவே இல்லை!

முனைமுகத்து நில்லேல் முதியவள் சொல்லிது

முனையிலே முகத்துநில் பாரதி முழக்கிது

பொன்னிகர் தமிழுக்குப் புதுமெரு கேற்றித்

தமிழரைத் தமிழில் பற்று மிகும்படி


            செய்த பாரதியாரின் பிறந்த நாள், நினைவு நாள் இரண்டு நாள் விழாவையும் எப்படிக் கொண்டாட வேண்டும் தெரியுமா? பாவேந்தர் கூறுவதைக் கேளுங்கள்.


இறந்தநாள் பிறந்தநாள் என்பன மட்டுமா?

பாரதி நாட்டுப் பிரிவினை எதிர்ப்புநாள்

பாரதி இந்தி எதிர்ப்புநாள் பாரதி

ஆங்கில எதிர்ப்புநாள் பாரதி அறிவுநாள்

பாரதி தமிழிலக் கியநாள் பாரதி

பச்சைத் திருநாள் பலவும் பாரதி

விழாவே ஆகும் விடாது நடத்தலாம்.


            தமிழை இகழ்ந்தவனைத் தாய்தடுத்தாலும் விடேன்’ என்றார் பாவேந்தர். ஆனால் பாரதியார் என்ன கூறினாராம்? பாவேந்தர் பாடுகிறார்.


தமிழை இகழ்ந்தவன் தமிழன் அல்லன்

மனிதனும் அல்லன் என்று வண்டமிழ்

இலக்கியம் இனிக்க இனிக்கக் குவித்தவர்

பாரதி அல்லால் பாரினில் வேறெவர்?

            பாரதியார் தமிழ்மொழிக்குச் செய்தவை என்ற வகையில் கருப்பொருள், தமிழ்ச்சிறப்பு, தமிழிசை என்பன. கவிதை நடை ரிக்ஷாக்காரநான்கினைக் கணக்கிட்டுள்ளார் பாவேந்தர். அவை : நடை. னுக்கும் புரிகின்ற வகையில் எளிமையாய் எழுத வேண்டும். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வீழ்ந்த தமிழகம், பாவேந்தர் பாரதி யாரின் பாட்டுக்கு வரும்வரை எழுந்திருக்கவே இல்லை. கடவுளைப் பற்றிப் பாடும் நெறிமாறி இயற்கையைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் பாடுவதாய் அமைந்தது.

சப்பானியக் கவிதை ஈடுபாடு

            பாரதியார் 1916இல் ‘ஜப்பானிய கவிதை என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அது, சப்பானியப் புலவர் உயோநோகுச்சி கல்கத்தா இதழ் ஒன்றில் எழுதிய கட்டுரைக் கருத்துக்களை முதன்மைப்படுத்தியது. அதில் :

            ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் ஜப்பானியக் கவிதையின் விசேஷத் தன்மையென்று நோகுச்சிப் புவலர் சொல்வதுடன் ஆங்கிலேயரின் கவிதை இதற்கு நேர்மாறாக நிற்கிறது’ என்றும் சொல்லுகிறார். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது. கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள், கிழக்குத் திசையின் கவிதையிலேயே இவ்விதமான ரஸம் அதிகந்தான். தமிழ்நாட்டில் முற்காலத்திலே இது மிகவும் மதிப்பெய்தி நின்றது.

 
            இதனால் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் போக்கு முற்காலத்தில். தமிழ்நாட்டில் மதிப்பெய்தியிருந்தது என அறிய வாய்க்கிறது. பாரதியார் அயர்லாந்துக் கவிஞர் வெர்ஹேரனின் ஒரு ஹொக்குப் (ஹைகூ) பாட்டின் ஆங்கில வடிவத்தை அறுசீர் விருத்த யாப்பில்,

மயங்கினேன் முயங்கிலள் பரீசு

வாய்ந்தது எழில் மறந்திலேன் காவின். . .


            என மொழி பெயர்த்து அமைந்திருந்தார். இப்பாடலைப் பாரதிதாசன் கேட்டதும் புறநானூற்றை எடுத்து வந்து பாரதியாரின் எதிரில் வைத்து ‘இந்நூலிற் காணப்படும் பாடல்கள் அனைத்தும் ஹொக்குப் பாடல்களே’ என்றார். இதனால் பாரதியார்க்கு ‘ஹொக்குப்’ பாட்டின் மீது ஈடுபாடு இருந்தது என்பதை அறிகிறோம்.


பாரதிதாசன் பற்றிப் பாரதியார்


            பாரதியைப் பற்றிப் பாவேந்தர் பாடிய பாடல்கள் பேச்சிலும் கட்டுரையிலும் எழுதியவை ஏராளம். அந்நாளில் புகழ்பெற்ற பாகவதர் பலாப்புத்தூர் சீனிவாச ஐயங்கார் பாரதியாரை அணுகி இராமன் கதையைப் பொதுமேடையில் பாடுவதற்கேற்ப இசைப்பாடலாகச் செய்து தருமாறு கேட்டார். பாரதி அருகிலிருந்த பாவேந்தரைச் சுட்டி, இவர் இந்த காரியத்தை நன்கு செய்வார் என்றார். பாகவதர் ஐயுற, அவர் சிறந்த கவிஞர், சந்தேகப்படாதீர்கள்’ என்று தெளிவூட்டினார். பாவேந்தரும், பாகவதர் கேட்டவாறே இசைப்பாக்கள் ஆக்கித் தந்தார்.

பாரதியாரின் பழந்தமிழ் அறிவு

            பாரதியார் காலத்தில், தொல்காப்பியமோ சங்க இலக்கியமோ நாடெங்கும் பரவவில்லை. அப்போது தான் வெளிவரத் தொடங்கின. பிறர் எழுத்தையும், பேச்சையும் கண்டும், கேட்டும் தமிழின் பெருமையை வியந்து போற்றியுள்ளார் பாரதியார்.


            1920இல் மதுரைத் தமிழ்ச்சங்க ஏடான ‘செந்தமிழில்’ ‘சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரையைப் பாரதியார் படித்து விட்டுச் சிலப்பதிகாரச் சுவையில் மனம் பறிகொடுத்தார். அதனால், நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என்றும், ‘சேரன் தம்பி சிலம்பு இசைத்ததும்’ என்றும் பொதுப்படக் கூறினார்.

புதுவையில் திரு.வி.க ஆற்றிய சொற்பொழிவில் சிலப்பதிகாரச் சுவையையும், திரு.வி.க.வின் நடையழகையும் புகழ்ந்து போற்றினார் பாரதியார்.

பொதுவினர்க்குச் சிலப்பதிகாரச் சுவையை

நடையழகைப் புகலும் போதில்

இதுவையா பேச்சென்பேன்: பாரதியார்

கை கொட்டி எழுவார். வீழ்வார்.

            என்றார் பாவேந்தர். பாரதியார் திரு.வி.க. பேச்சினைக் கேட்டுக் கைத்தட்டி மகிழ்ந்தது போல் வேறெவர் பேச்சுக்கும் கைதட்டியதில்லை என்றார் பாவேந்தர்.

            புதுவையில் (1935இல்) நிகழ்ந்த பாரதி விழாவிற்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமை ஏற்றார். பாவேந்தர் தம்முரையில் ‘பாரதிக்கு இலக்கணம் தெரியாதென்று சிலர் சொல்லுகின்றனர். அவர்களுடைய கருத்து தவறானது; பாரதிக்கு இலக்கணப் புலமை உண்டு என்றார். முடிவுரையில் நாவலர் சோமசுந்தர பாரதியார் எனக்கு என்னென்ன தெரியுமோ அத்தனையும் பாரதிக்கும் தெரியும். இதன் மேலும் பாரதிக்குத் தனித்தன்மை அவரிடம் சிறந்த கவிதை வளமிருக்கும். சும்பப் பயல்கள்தான் பாரதிக்கு அது தெரியாது இது தெரியாது இலக்கணம் தெரியாது என்று வெறுமனே சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்றார்.

            நாவலர்பாரதியார் தமிழ் நன்கு கைவரப் பெற்றவர் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் அறிந்தவை பாரதியாரும் அறிந்தவைதான் என்பது தெளிவாகிறது. பிற்கால இலக்கியங்களில் தமிழகத்தைப் பார்த்தது கிடையாது. நான் தமிழர் நாகரிகம், தமிழரின் இலக்கியங்கள் முதலியவற்றை ஆராய வாய்ப்பிருந்ததில்லை. ‘பண்டைத் தமிழகத்தைப் பார்க்க வேண்டுமானால் நான் சங்க நூல்களில்தான் காணவேண்டும். ஆனால் போன ஆண்டு (1920) வரைக்கும் எனக்குப் பழந்தமிழ் நூல்களில் தொல்காப்பியம், அகம், புறம் பற்றிய நூல்கள் பற்றி ஒன்றும் தெரியாது. உண்மை அறிந்து கொண்ட பிறகே தமிழகத்தை எங்கள் தந்தையர் நாடு என்று சொன்னேன்” என்று பாரதியார் தனக்கு இருந்த சங்க இலக்கிய அறிவை வெளிப்படுத்தியுள்ளார்.


பாடற் கருத்துகளில்

            பாடு பொருளிலும், பாடு முறையிலும் பா நடையிலும் பாரதியார் வழியைப் பின்பற்றிய பாவேந்தர், பாரதியார் கருத்துக்களை மேலும் விளக்கம் செய்து பல பாடல்கள் பாடியுள்ளார். பல கருத்துக்களில் வேறுபட்டும், முரண்பட்டும் பாடியுள்ளவற்றையும் காண்கிறோம். இவ்வேறுபாடுகளும், தமிழை முன்னெடுத்த பாரதியைப் போலத் தமிழரை முன்னெடுத்த பெரியாரின் தன்மான இயக்கத் தினாலும் சிந்தனை மாற்றத்தாலும் மனப்பான்மை வளர்ச்சியாலும் ஏற்பட்டனவாகும்.

            குறிக்கோள், மக்களைப் பாடுதல், பாட்டுலகப் புதுமை, பெண் விடுதலை, கைம்மைக் கொடுமை, குழந்தை மணம், சாதியொழிப்பு, இசைத்தமிழ் வளர்ச்சி, பார்ப்பனிய எதிர்ப்பு, புராண நம்பிக்கையொழிப்பு, வாழ்ந்து காட்டுந்திறன் ஆகிய கூறுகளில் பாவேந்தர் பாரதியாரைப் பின்பற்றிச் செல்கிறார்.

நாடு, வடமொழி நூல்கள், தெய்வச் சார்பு, பொதுவுடைமை போற்றல், தமிழின் தோற்றம், குறிக்கோள் வெளிப்பாடு ஆகிய கூறுகளில் பாரதிதாசன், பாரதியாருடன் வேறுபட்டு விளங்குகிறார்.


நாடு


            இந்தியா ஒரு நாடு, பாரதநாடு இதுவே நம் நாடு என்ற கொள்கை இருவரும் பாரத நாட்டைப் பாடிய போதிலும் பாரதியார்
உடையவர்.


பாரத நாடு பார்க்கெலாம் திலகம்

நீரதன் புதல்வர் இந்நினை வகற்றாதீர்

என்றார். பாரதிதாசன்

தமிழ் நாடுதான் மேலான நாடு

தமிழர்க் கெல்லாம் மற்றவை காடு

என்றார்.

நான் திராவிடன் என்று நவில்கையில்

தேன்தான் நாவெலாம் வான்தான் என் புகழ்

            எனப் பாவேந்தர் பாடினார். ஆனால் பாரதியாருக்கோ திராவிடம், திராவிடர் என்ற சொற்களைக் கேட்டாலே பிடிக்காது. ‘பொய்யும் புலையுமாகத் திராவிடர் என்றும் ஆரியர் என்றும் உள்ள பழைய
சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு வீண்சண்டைகள் வளர்ப்பதனால் ஹிந்து சமூகத்துக்கே கெடுதி விளையக் கூடும். எந்த வகுப்புக்கும் அனுகூலம் ஏற்படாது’ என்றார்.


உலகநோக்கு


            பாரதியார் தம் காலத்தில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளையும் அவற்றால் நாம் கொள்ள வேண்டிய படிப்பினைகளையும் பாட்டாலும் உரையாலும் உரைத்துள்ளார். சோவியத்து இரசியாவில் ஜார் மன்னன் வீழ்ந்த பின் எழுந்த யுகப் புரட்சியை ‘ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி எனப் பாராட்டினார். பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்துப் பாடினார். பிஜித் தீவிலே கரும்புத் தோட்டத்தில் தமிழ்ப் பெண்கள் படுந்துயரத்தை நெஞ்சுருக வடித்தார். எனவே, உலக மக்களிடையே இருந்த சிக்கல்களை ஆராய்ந்தறியும் உலக நோக்கு கொண்டவராகப் பாரதியார் விளங்கினார் எனலாம். பாவேந்தர் உலகநோக்கில் பாரதியாரையும் விஞ்சி நின்றார். இருவரையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தவர்களில் சிலர் பாரதிதாசன் பரந்த நோக்கம் இல்லாதவர் என முடிவு செய்தனர். அக்கருத்தினை மாற்றிப் பாரதிதாசன் உலகநோக்கு மிக்கவர் என்பதைச் சான்றுகளோடு ‘பாவேந்தரின் உலகநோக்கு’ என்னும் நூல் நிறுவியுள்ளது.


சீன எதிர்ப்பு

சீனனால் வருந் தொல்லை தில்லிக் காரத்

தீயருக்கு மட்டுமன்று நமக்குந்தானே

என்றும்.

இலங்கைத் தமிழர் உரிமை

சிங்களர்க் குள்ள இலங்கையின் உரிமை

செந்தமி ழர்க்கும் உண்டு

என்றும்

சீனாகுமாய்த் தீவு மேற் குண்டு வீசியதை

குமாய்த்தீவு மேற்சீனர் குண்டுமேல் குண்டு

 டமார் டமார் என்று போட்டார்கள்

என்றும்,

அமெரிக்கா சப்பான் மீது குண்டு வீசியதன் விளைவை

இன்னும் ஓர் நூறாண்டுக்கு

இரண்டூரின் சுற்றுப்பக்கம்

ஒன்றுமே முளையா தாமே

வாழ்தலும் ஒண்ணாதாமே


            என்றும் பாடி உலக நிலைமைக்குக் கவலை கொள்கிறார்.!

சாதியொழிப்பு


            சாதிகளை நிலை நாட்டிப் போற்றும் பார்ப்பனர் இனத்தில் பிறந்தபோதும், பார்ப்பனத்தன்மை எள்ளளவும் இல்லா தவர் பாரதியார். பெரியார் சாதியொழிப்பு இயக்கத்திற்கு வித்திடும் முன்னரே, ‘சாதி வேரைப் பொசுக்குங்கள்’ என்றவர். அதனால் அவர் வாழ்வில் பட்ட இன்னல்கள் எண்ணில் அடங்கா.


சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

சாதிக் கொடுமைகள் வேண்டாம் – அன்பு

தன்னில் செழித்திடும் வையம்


            எனச் சாதிக் கொடுமைகளை ஒழிக்க வழிகாட்டினார். தன் வாழ்விலும் கடைப்பிடித்தார். பூணூலை அறுத்தெறிந்தார். சாதி வேறுபாடுகளைச் சாய்க்க ‘ஆறில் ஒரு பங்கு’ நூலை எழுதி உழவுத் தொழிலை மேற்கொள்ளும் பள்ளர், பறையர் முதலானவர்க்குச் சமர்ப்பணம் செய்துள்ளார்.? பாரதியார் கடைப்பிடித்த சாதியொழிப்பை,

மேலவர் கீழவர் இல்லை – இதை

மேலுக்குச் சொல்லிட வில்லை

நாலு தெருக்களின் கூட்டில் மக்கள்

நாலாயிரத்தவர் காணத்

தோலினில் தாழ்ந்தவரென்று – சொல்லும்

 தோழர் சமைத்ததை உண்பார்


எனப் பாவேந்தர் பாடிப் பெருமை கொள்வார்.  `தன் மகள் தாழ்ந்த சாதிப் பையனை விரும்பி மணம் செய்து கொள்வதைக் கண்டு ஆனந்தப்பட வேண்டும்’ எனத் தம்மிடம் தெரிவித்ததாகப் பாவேந்தர் கூறியுள்ளார்.

பெண் விடுதலை, பெண்ணடிமை ஒழிப்பு

பெண் ஒரு கண்மற் றாண் ஒரு கண் என

உணரப் பாடிய உயர்கவி பாரதி


எனப் பாரதி பெண்ணையும் ஆணையும் சமமாகப் பாவித்ததைப் பாவேந்தர் பாடியுள்ளார்.

மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையைக் கொளுத்துவோம்

எட்டும் அறிவினில் ஆணுக் கிங்கேபெண்

இளைப்பில்லை காணென்று கும்மியடி


எனப் பாரதியார் பெண்ணடிமை ஒழியவும், பெண் விடுதலை பெறவும் பாடியதற்கும் மேலாகப்,


பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என் கின்றீரோ?

மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு

மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே

ஊமை என்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்

ஆமை நிலமைதான் ஆடவர்க்கும் உண்டு.


            எனப் பாடிப் பெண்ணடிமை ஒழிப்புக்கு முத்திரை பதித்தவர் பாவேந்தர்.

தமிழின் தோற்றம்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்

எனத் தமிழ்மொழி உயர்வைப் பாடிய பாரதி தமிழின் தோற்றத்தைத்  தமிழ்த்தாயே கூறுவதாக அமைத்துக் கூறியது எண்ணத்தக்கது.


ஆதிசிவன் பெற்றுவிட்டான் என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்

மூன்று குலத் தமிழ்மன்னர் என்னை

மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்

ஆன்ற மொழிகளி னுள்ளே –உயர்

ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்.


            தமிழைச் சிவன் உருவாக்கினான்; அகத்தியன் இலக்கணம் செய்தான் வடமொழிக்கு நிகராக வாழ்ந்தேன் என்று தமிழின் தோற்றத்தைக் கூறியிருப்பதையும், வடமொழிக்கு உயர்வு தந்திருப்பதையும் அறியலாம்.

ஆனால் பாவேந்தரோ

சும்மாதான் சொன்னார் உன்னை

ஒருவன்பால் துளிர்த்தாய் என்றே

..தமிழர் தங்கள்

தலைமுறை தலைமு றைவந்து

அடுக்கின்ற தமிழே பின்னர்

அகத்தியர் காப்பியர்கள்

கெடுப்பினும் கெடாமல் நெஞ்சக் கிளைதொத்தும் கிளியே வாழி


            என அழகின் சிரிப்பில் கிளி வண்ணனையில் தமிழை ஒருவர் தோற்றுவிக்கவில்லை; தமிழர் காலந்தோறும் அடுக்கியதால் தோன்றி வளர்ந்தது. அகத்தியர் தமிழைக் கெடுத்தார் என உண்மையைக் கூறியுள்ளார்.


தமிழின் உயர்வு


            ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’ என்றும், ‘வானம் அறிந்ததனைத்தும் அறிந்து வளர்தமிழ்’ என்றும் ‘தெள்ளுற்ற தமிழமுது’ என்றும் தமிழின் இனிமை, உயர்வு ஆகியவற்றைப் பாடிய பாரதியார் காலத்திற்கேற்பத் தமிழ் பெற வேண்டிய வளர்ச்சிகளையும் பட்டியலிடுகிறார்.


பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்

இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்

            என்றார். பாவேந்தரும் தமிழுக்குச் செய்ய வேண்டிய பணிகளை வணிகர், தமிழ்ப் புலவோர், மாணாக்கர் முதலியோர்க்குக் கூறுவனவாய்த் ‘தமிழியக்கமே’ படைத்தார். ‘தமிழை என்னுயிர் என்பேன்’ ‘தமிழும் நானும் மெய்யாய் உடலுயிர் கண்டீர் ‘தமிழ் என் அறிவினில் உறைதல் ‘வெள்ளம்போல் தமிழர் கூட்டம்’ எனத் தமிழர் பற்றியும், ‘தமிழ்நாடு கண்டீர், ‘உயிரை, உணர்வை வளர்ப்பது தமிழே’ எனத் தமிழ் பற்றியும், தான் மேலான நாடு தமிழர்க்கெல்லாம் மற்றவை காடு’ எனத் தமிழ்நாடு பற்றியும் பாடியவர் பாவேந்தர்.

தனித்தமிழ் நூல்

பாரதியார் காசிக்குச் சென்றிருந்தபோது (1898, 1902) ஈசுவரலால் என்பவர் அறிமுகம் கிட்டியது. ‘பாரதி தமிழ்க் கவிஞர்’ என்றறிந்த  ஈசுவரலால் வியந்தார். சமஸ்கிருதம் மட்டும்தான் தனிமொழி, தமிழ் என்று ஒரு மொழியும் உண்டோ? ‘சமஸ்கிருதம் பெற்ற பிள்ளைதானே தமிழ்’ எனவே தமிழைச் சமஸ்கிருதம்’ என்ற கருத்துத் தெரிவித்தது பாரதியாருக்குப் பிடிக்கவில்லை. அப்போது நடந்த உரையாடலின் ஒரு பகுதி


ஈசு                  :  தமிழில் நூல்கள் உள்ளனவா?

பாரதி            : உள்ளன,

ஈசு                  :  தமிழிலா?

பாரதி            : ஆம், தமிழில் தான்,

ஈசு                  : இன்னும் ஒரு கேள்வி தனித்தமிழிலா?

பாரதி            :  ஆம். தனித்தமிழில்தான்

`இன்றைய தமிழ் நூல்களில் சில தமிழ்ச் சொற்களே காணப்படுவதால் ஒரு தனித்தமிழ்ப் பாட்டினை இயற்றித் தருமாறு பாரதிக்குக் கோரிக்கை விடுத்தார். அதனையேற்றுத் தம் தமிழாற்றல் விளங்க,


காற்றென்று சொல்வதோ ராற்றல் மற்றுக்

கனலென்று சொல்வதோ ராற்றல்

மாற்ற மிலாததோர் விண்ணும் இம்

மண்ணும் புனலுமோ ராற்றல்


            எனத் தொடங்கும் பாடலைப் பாடி தனித்தமிழில் பாட்டியற்ற முடியும் என்பதைப் பாரதியார் நிறுவினார். பாவேந்தரின் தொடக்க கால நூல்களில் வடமொழிச் சொற்கள் விரவியிருப்பினும், ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழியக்கம்’ முதலிய நூல்கள் தனித்தமிழில் இயற்றப்பட்டுள்ளமை அறிந்து இன்புறத்தக்கது.


இசைத்தமிழ் மறுமலர்ச்சி

            தமிழ்நாட்டில் தெலுங்கு, இந்துஸ்தானி முதலிய மொழிகளில் பாடியதால் தமிழரின் செவியைத் துளைத்தது என்றும், றுமையாகக் கேட்ட தமிழரின் செவி தோற்காது அன்று ‘இரும்புக் காதே என்றும் சாடிய பாரதி, தமிழிசை இயக்கத்தின் பணியை இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கினார். ‘எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தங்களையும் பொதுஜனங்கள் விரும்பும் மெட்டுகளையும்’ வலியுறுத்திய பாரதியார்.

மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்

ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்

ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்கும்

கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்

பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்


            நெஞ்சைப் பறிகொடுத்த பாரதியார்.மக்களிடம் இருந்த கும்மிப்பாட்டு, அம்மானைப் பாட்டு முதலிய பாடல்களின் இசையைத் தம் பாடல்களில் பாடி முழங்கினார். ‘தியாகர் வேண்டாம் பாரதியாரே வேண்டும்’, எனக் குறிப்பிட்ட பாவேந்தர் ‘தமிழிசை இயக்கத்தின் தந்தை’ என்றே பாரதியாரைக் குறிப்பிட்டார். இசையில் பாடுவதற்குரிய இசைக்குறிப்புகளைத் தம் பாடல்களில் குறிப்பிட்டதோடு தாமும் பாரதியார் போலவே பாடுவதில் வல்லவர் ஆனார். இதற்கு ‘இசையமுது’ நூலே சான்றாகும். ஏற்றப்பாட்டு, தாலாட்டு, தொழிலாளர்கள் பாட்டு முதலியவற்றைப் பாடி இசைத் தமிழை
வளர்த்தார்.


தோயுந்தேன் நிகர் தமிழாற்

பாடாமே தெலுங்கிசையைச்

சொல்லிப் பிச்சை

ஈயுங்கள் என்பீரோ.

செந்தமிழ் இசைப்பாடல்

இல்லையெனச் செப்புகின்றீர் மானமின்றிப்

பைந்தமிழில் இசையின்றேல்

பாழ்ங்கிணற்றில் வீழ்ந்துயிரை மாய்த்த லன்றி

எந்தமிழில் இசையில்லை

எந்தாய்க்கே உடையில்லை என்ப துண்டோ?


எனத் தமிழில் பாடுவதைப் பாவேந்தர் வற்புறுத்துகிறார். ‘கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க’ என ஆணையிட்டார் பாவேந்தர்.


முடிவுரை


            இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களாகிய பாரதியாரும் பாவேந்தரும் ஒரே காலத்தில் வாழ்ந்தனர், உணர்வால் ஒன்றினர். பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைத் தம்வழிப்படுத்தி பாவேந்தருக்கோ ஒரு பாட்டுப் பட்டாளமே தொடர்ந்தது. மக்களைப் உய்யும் வழிகாட்டினர். பாரதியாருக்கு ஒரு பாவேந்தர் கிட்டினார். பாடி மக்களிடம் செல்லாக் கவிதைகள், செல்லாக் கவிதைகளே எனத் தெளிந்தனர்.

            பாவேந்தர் பல துறைகளில் தம் இலக்கிய ஆளுமையைப் பதித்தவர் ; தமிழுக்குச் செய்ய வேண்டிய செயல்பாடுகளைத் ‘தமிழியக்கத்தில்’ காட்டியவர்; ‘நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்’ எனக் குடும்ப விளக்கில் ஒளியேற்றியவர்; பாரதியாரின் பாடல் அடிகளை வைத்தே பாடல் இயற்றிப் பாரதியாரின் பெருமையை உலகறியச் செய்து அவர் ‘ஓர் உலககவி’ ஒப்பற்ற கவி என நாட்டியவர். தமிழ் உள்ளவரை இருவரும் தமிழர் நெஞ்சில் நிற்பர். தமிழ் இலக்கியத்தின் எல்லா வடிவங்களையும் சமுதாய மாற்றத்திற்கான வெடி மருந்து களாய்ப் பயன்படுத்திய தனித்தன்மையும் பாரதிதாசனுக்கே உரியது.

தமிழனுக்கே வீழ்ச்சியில்லை; தமிழன் சீர்த்தி

தாழ்வதில்லை! தமிழ்நாடு தமிழ் மக்கள்

தமிழன் என்னும் பேருணர்ச்சி இந்நாள் போலே

தமிழ்நாட்டில் எந்நாளும் இருந்ததில்லை!

தமிழர்க்குத் தொண்டு செய்யும் தமிழனுக்குத்

தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய்ப் போகும்

தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை

தமிழ்த் தொண்டன் பாரதிதாசன் செத்த துண்டோ?


சான்றெண் விளக்கம்


1.இரா.இளவரசு – இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன், ப. 13-14,

2. ச.சு.இளங்கோ – பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.55,

3. ச.சு. இளங்கோ – பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.30

4.ச.சு. இளங்கோ –  பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.48,-31,

5. இரா.இளவரசு – நிறைந்த அன்புடன் . அணிந்துரைகள் ப.119-120,

6. ச.சு. இளங்கோ – பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.103,

7. ச.சு. இளங்கோ – பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.57,

8. இரா. இளவரசு – பாவேந்தரின் உலகநோக்கு ப. 4, 50, 82, 62,

9. ச.சு. இளங்கோ – பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.149,

10.ச.சு. இளங்கோ-பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.105

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர்.பி.தமிழகன்

இலக்கியங்களில் மயில்

இலக்கியங்களில் மயில்

    சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், நம்முடைய இந்திய தேசத்தில் மட்டுமே மயில் காணப்பட்டது. உலகில் வேறு எங்கும் இப்பறவை இல்லை என்றே கூறலாம். மயிலின் அழகினைச் கண்டு அலெக்சாண்டர் சுமார் 200 மயில்களைக் கிரேக்க நாட்டுக்கு எடுத்துச் சென்றார். அதன் பிறகே, மயிலினம் ஆப்பிரிக்கா ஐரோப்பா, கிழக்காசியா போன்ற நாடுகளிலும் பெருகி வளர்ந்தது. உலகத்துக்கே மயிலினத்தைக் கொடுத்த பெருமை இந்தியாவைச் சாரும். 1963-ம் ஆண்டு மார் மாதம் முதல் மயில் இந்தியாவின் தேசியப்பறவை என்ற அந்தஸ்தைப் பெற்றது. நம் நாட்டில் பறவைகளைப் பற்றிப் பேச்சு எழும்போதெல்லாம் மயிலின் பெயரே முதலில் இருக்கலாயிற்று மயிலைப் பிடிப்பதும் கொல்வதும் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது.

மயிலின் சிறப்பு

    மழை பெய்யும் காலங்களில் மயில், தோகை விரித்து ஆடும். மழையை வரவேற்கும் வகையில் மகிழ்ந்து நடனமாடும். மேலும், மயிலின் நடனம் மழை வருவதை அறிவிக்கும் அறிகுறியாகும். பறவை இனங்களுக்கு ஒரு காவலாளி போலப் பணியாற்றுகிறது. காட்டிற்கு பறவைகளை தொலைவில் வரும்போதே அறியும் திறன் மயிலுக்கு உண்டு. மயிலின் அகவலைக் கேட்டதும், வேட்டையாட யாரேனும் வந்தாலும் அல்லது வேட்டை மிருகங்கள் வந்தாலும் அதனை வெகு மற்ற சிறு விலங்குகளும் பறவைகளும் எச்சரிக்கையடைந்து, மறைவிடங்களில் பதுங்கிக் கொள்ளும். இவ்வாறு மயில் பாதுகாப்புப் பணியைச் செய்கிறது.

     மயிலின் இறகைக்கொண்டு விசிறி செய்யலாம். அந்தக் காலத்தில் அரசர்களின் இருபுறமும் இரண்டு பேர், மயிலிறகினால் செய்த பெரிய விசிறியைக் கொண்டு வீசுவார்கள். நன்றாகக் காற்று வரும். கிருஷ்ணர் தலையில் மயிலிறகு வைத்து அலங்கரித்திருப்பார். அதற்கு ‘பீலி’ என்று பெயர். பூசைப்பொருட்களுடன் மயிலிறகை வைப்பதும் வழக்கத்தில் இருந்தது.

மயிலும் தெய்வமும்

        மயில், சரஸ்வதி தேவியின் வாகனம். சரஸ்வதி தேவி கல்வியை அருள்பவள். அவளுடைய வாகனமாகிய மயிலின் இறகைப் புத்தகத்தில் வைத்தால் கல்வி வளரும் என்ற வழக்கம் மக்களிடையே நம்பிக்கையாக இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சரஸ்வதி தேவிக்கு மட்டுமில்லாமல், முருகனுக்கும் மயில்தான் வாகனம். அதனால்தான் முருகனை மயில்வாகனன் என்று போற்றுகிறார்கள். இதைத்தவிர மயிலுக்கு வேறு பல சிறப்புகளும் உண்டு.

    மிகப் பழைமையான காலத்திலிருந்தே மயிலைப் பல விதங்களில் சிறப்பித்திருக்கிறார்கள். சிலருடைய கொடிகளில் மயில் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தது. அதாவது ‘ஸ்கந்தகுப்தன்’ என்ற அரசன் போர்க்களத்தில் வெற்றியடைந்த வீரர்களுக்கு மயிலின் உருவம் பொறிக்கப்பட்ட தங்கப் பதக்கங்களை அறிவித்ததை அறியமுடிகிறது. ஷாஜஹான் என்ற அரசன் தங்க மயிலாசனத்தில் அமர்ந்திருந்தான். தங்க மயிலாசனத்தில் வைரங்களும் ரத்தினங்களும் இன்னும் பல விலை உயர்ந்த கற்களும் பதிக்கப்பெற்றிருந்தன. அவை அழகான மயில் உருவில் இருப்பதைக் காணலாம். இந்த மயிலாசனம் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது.

    மயில் அழகான பறவை மட்டுமில்லாமல் கலை நயமும் கொண்டது. ‘மயில் நடனம்’ என்றொரு நடனமே இதற்கு புகழ். மயில் பலவிதத்திலும் நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. சிறு பூச்சிகள். புழுக்களைத் தின்கிறது. பாம்புகளைக் கொன்றுவிடும் தன்மை மயிலுக்கு உண்டு. அதனால்தான் மயில் இருக்கும் இடங்களில் பாம்பு வருவதில்லை. மயில் இருக்கும் இடங்கள் பசுமையான வளமான பூமியாக இருக்கும். ஏறத்தாழ மூவாயிரம் வகையான பறவைகள் நம் தேசத்தில் இருக்கின்றன. ஆனால் மயிலைப் போன்ற அழகான பறவை எங்கும் காண இயலாது. மயிலாப்பூர், மயிலாடுதுறை என்ற ஊர்களும் மயிலின் சிறப்பை உணர்த்துகிறது.

அகராதியில் மயிலின் சிறப்பு

    ‘மெய்யப்பன் தமிழ் அகராதி’ மயிலுக்கு, பறவை வகை, செடி வகை, சிறுமர வகை, இருக்கை வகை என்று விளக்கம் தருகிறது. ‘வரலாற்றுமுறை தமிழ் இலக்கியப் பேரகராதியில் மயில் குறிஞ்சி நிலக்கருப்பொருளான பறவை என்கிறது. ‘திவாகர நிகண்டு குமரன் ஊர்தி மயிலும் யானையும் என்று கூறுகிறது.

அபிதான சிந்தாமணி

        ஒரு மயில் ஒரு அழகான பறவை. இது உஷ்ணமான நாடுகளின் காடுகளில் உள்ளது. இது பசுமை கொண்டையுண்டு. இதன் அழகு கோழியின் அழகு போலிருக்கும். கழுத்து நீண்டும் இறக்கைகள் மஞ்சள், நீலம் பொன்னிறங் கலந்த சிறகுகளையுடையது. இதன் தலை சிறியது. உச்சியில் குறுகியுமிருக்கும். இதற்கு நான்கு விரல்கள் பெற்ற நீண்ட கால்கள் உண்டு. வால் பல கண்கள் போன்ற புள்ளிகளைப் பெற்று மிக நீண்டிருக்கும். இது குளிர்ந்த மேகத்தைக் கண்டும், தன் பெட்டையைக் கண்டுகளித்த காலத்தும், சிறகை வட்டமாக விரித்துக் களிப்புடன் ஆடுதலைப் பார்க்க அழகாக இருக்கும். பெண் பறவைகளுக்கு நீண்ட வாலும் கொண்டையுமில்லை. இது புழு, பூச்சிகளைத் தின்னும், பாம்பையும் கொத்திக் கொல்லும் இவ்வினத்தில் வெள்ளை மயிலும் உண்டு.

    இந்து தேசத்து நடிக்கும் பறவை இது. உயர்ந்த கோழி போன்ற உருவுடையது. கழுத்து நீளமானது. ஆணுக்கு உச்சியில் கொண்டையும், தோகை மிக நீண்டும் பசுமை கலந்து பொன்னிறமாய் கண்கள் பெற்றிருக்கும், இதன் முதுகு வெண்மை, கருமை, செம்மை கலந்தது. இதன் பேடுகளுக்குத் தோகைகளில்லை. இது இரு சந்திகளிலும் தோகை விரித்தாடும். மயில் விருதுசேனன் கொடியாகவும் இருந்துள்ளது என்பதை அபிதான சிந்தாமணி குறிப்பிடுகின்றது.

இலக்கியத்தில் மயில்

    மயிலைக் கேகயம், கேதாரம், மஞ்ஞை, கலாபம், மயூரம் போன்ற பல்வேறு பெயர்களில் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் இவற்றுள் பெரும்பான்மையாகப் பயன்படுத்துவது ‘மயில்’ மட்டுமே. மற்ற பெயர்களெல்லாம் இலக்கிய வடிவில் மட்டுமே தன் தடத்தை ஆங்காங்கே பதிவுசெய்துள்ளன.

எட்டுத்தொகையில் மயில்

        சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூல்களில் மயில் பற்றிய தகவல்கள் சாலக்கிடைக்கின்றன. பெரும்பாலும் இயற்கை வர்ணனைகளில், பெண்களின் அழகுக்கு மட்டுமே மயிலைப் பயன்படுத்தியிருப்பதைக் கீழ்க்காணும் பாடல்களின் மூலம் தெளிவாகக் காணலாம்.

நற்றிணை

வேங்கை வீஉகும் ஓங்குமலைக்காட்சி

மயில் அறிபு அறியா மன்னோ  (நற்.13-8)

என்ற பாடல் அடிகள் உயர்ந்த மலையில் உள்ள கூட்டில் இருக்கும் மயில்கள் அறியாது என்று கருதி கிளிகள் தினைக்கதிர்களைக் கவர்ந்து செல்லும் நிகழ்வைக் குறிப்பிடுகின்றன. மேலும்,

மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி (நற். 11.5)

என்ற வரியில் மயிலின் அடி போன்ற இலையையும் கடுமையான கதிராக அமைந்த பூங்கொத்துக்களையும் உடைய நொச்சி என்று மயிலை நொச்சி மரத்துக்கு ஒப்பிட்டுள்ளனர்.

விசும்பு ஆடுமயில் கடுப்ப (நற். 222-4)

என்ற அடியில் ஆகாயத்தில் பறக்கும் மயிலைத் தலைவிக்கு ஒப்புமைப்படுத்திக் கூறியுள்ளனர்.

இமையில் மடக்கணம் போல (நற்.248-8)

என்ற பாடலடி மேகக்கூட்டம் இடிமுழக்கத்துடன் மழை பொழிவதைப் பார்த்து மயில் ஆரவாரிப்பதைக் கூறுகிறது.

ஆடுமயிற் பீலியின் வாடையொடு துயல் வர (நற்.262-2)

என்ற வரி நிலத்தில் கருங்காக்கணத்தின் கண் போன்று மலரும் கரிய மலர் வாடைக்காற்று வீசுவதால் ஆடுகின்ற மயிலின் தோகை அசைவது போலத்தோன்றுவதைக் குறிப்பிடுகின்றது.

கலிமயில் கலாவத்து அன்ன, இவள்

ஒலிமென் கூந்தல் நம்வயினானே (நற்.265-8)

என்ற பாடல் வரிகள் மயிலின் தோகையைப் போல மெல்லிய கூந்தலை உடையவள் தலைவி என்று மயில் தோகையானது தலைவியின் கூந்தலுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. மேலும்,

மயில் ஓரன்ன சாயல் (நற்.301-4)

எனும் அடி, தலைவி மயிலைப் போன்ற சாயலை உடையவள் என்று கூறுகிறது.

மயில் அடி அன்ன மாக்குரல் நொச்சியும் (நற். 305-2)

என்பதற்கு மயிலின் அடியை ஒத்தது நொச்சி மரம் என்று பொருள் தரப்படுகின்றது. மேற்சுட்டிய நற்றிணைப்பாடல்களின் மூலம் தலைவியின் அழகு நொச்சி மரம், தலைவியின் கூந்தல் போன்றவற்றிற்கு மயிலை உவமையாகப் புலவர்கள் கூறியுள்ளது புலப்படுகிறது.

குறுந்தொகையில் மயில்

காமம் செப்பாது கண்டது மொழிமோ

யிலியது கெழீஇய நட்பின் மயில் இயல் (குறுந். 2-3)

என்ற வரிகளில் தலைவன் தலைவியின் அழகை மயிலோடு ஒப்புமைப்படுத்திக் கூறுவதைக் காணலாம்.

மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி (குறுந்.138.3)

‘மயிலின் கால் விரல் போன்ற பிரிவுள்ள இலைகளை உடைய
நீல மணிபோன்ற பூங்கொத்துக்கள் உள்ள நொச்சி மரம்’ என்னும் கருத்தை மேற்கண்ட பாடல் அடி தருகின்றது. மேலும்,

மென்மயில் எருத்தின் தோன்றும்

புன்புல வைப்பிற் கானத்தானே (குறுந். 183-6)

            எனும் வரிகளில் காயாமரத்தை மயிலின் கழுத்தோடு ஒப்பிட்டுள்ளார் புலவர்.

கலிமயில் கலாவத்தன்ன இவள்

ஒலிமென் கூந்தல் உரியவால் நினக்கே (குறுந். 225-6)

            என்ற பாடல் அடிகளில் தோகையை விரித்தாடும் மயில் போன்ற சாயலை உடைய தலைவியின் கூந்தல் தலைவனுக்கு மட்டுமே உரிமையானது என்று கூறப்படுகின்றது.

ஆடுமயில் அகவும் நாடன் நம்மொடு

நயந்தனன் கொண்ட கேண்மை (குறுந். 264-3)

            எனும் அடிகளில், ‘தோகை அசையும்படி நடந்து ஆடுகின்ற மயில்கள் அகவும் மலைநாடனுடன் நாம் கொண்ட நட்பு பசலை படர்ந்தாலும் அப்பசலை நீண்ட நேரம் இருக்காது என்பதை உணர்த்துகிறது’ எனும் கருத்து குறிஞ்சி நிலத்தின் மயில் ஆடிக்கொண்டிருக்கும் காட்சியைப் புலப்படுகின்றது.

ஐங்குறுநூறு காட்டும் மயில்

அலங்குசினை மாஅத்து அணிமயில் இருக்கும்

பூக்கஞல் ஊரன் சூள்இவண் (ஐங்.8.3-4)

            என்ற பாடல் வரிகள் பூக்கள் நிரம்பிய மாமரத்தின் மீது அழகான மயில்கள் வாழும் ஊரினை உடைய தலைவனின் சூளுரை மெய்யாகட்டும். அதாவது மாஞ்சோலைக்கு மயில் அணி செய்தது போல தலைவன் இல்லறத்திற்கு தலைவி அணியாகட்டும்.

மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் (ஐங்.291-1)

மயில்கள் ஆலப் பெருந்தேன் (ஐங்.292-1)

        இவற்றுள் மயில்கள் இருக்கும் மலைநாட்டுத் தலைவனின் சிறப்பு கூறப்படுகிறது. மேலும் ஐங்குறுநூற்றில் மயில்கள் பற்றிய செய்தி அதிகம் இடம்பெறுவதால் மஞ்ஞைப்பத்து என்ற பெயரிலே இப்பதிகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பதிற்றுப்பத்துச் சுட்டும் மயில்

பழனக்காவிற் பசுமயிலாலும் (பதி. 8-9)

 எனும் அடி, பெண்கள் மருத மரத்தில் ஏறிநின்று நெற்கதிர்களைக் கொய்ய வரும் பறவைகளை ஓட்டுவதற்காக விளிக்குரலெடுத்து இசைப்பார்கள். அதைக்கேட்டுப் பொழில்களில் இருக்கும் பசுமை நிறமுடைய மயில்கள் ஆடுவதைச் சுட்டுகின்றது.

பரிபாடலில் மயில்

திகழ்பொறிப் பீலி அணிமயில் கொடுத்தோன் (பரி.5-60)

என்னும் பாடல் வரியில் இந்திரன் அழகுடைய மயிலை சேவலாக்கி முருகனுக்குக் கொடுத்த செய்தியைக் காண முடிகின்றது.

மலைய இனங்கலங்க மலைய மயிலகவ (பரி. 6-4)

        என்ற வரி மழைபெய்வதால் மயில்கள் ஆடுவதைச் சுட்டுகிறது.

விறல் வெய்யோ னூர்மயில் வேனிழனோக்கி (பரி. 8-67)

மணியும் கயிறு மயிலுங் குடாரியும்  (பரி. 8-100)

என்ற பாடல் வரிகள் வெற்றியையே விரும்பும் முருகப்பெருமானின் ஊர்ந்து செல்லும் வாகனமாகிய மயிலையும் முருகப்பெருமானை வழிபடுவோர் மணி, கயிறு, மயில், கோடரி, யானை ஊர்தி போன்றவற்றைக் கொண்டு சென்று வழிபடுவதையும் குறிப்பிடுகின்றன.

மண்சீர் மயிலிய லவர்  (பரி. 9-56)

ஒருவர் மயிலொருவர் ஒண்மயிலோடால (பரி. 9-41)

இவ்வரிகள் மயில் போர் செய்வதையும், வள்ளியை மயிலோடு ஒப்பிடுவதையும் உணர்த்துகின்றன.

சிகை மயிலாய்த் தோகை விரித்தாடுநரும் (பரி. 9-64)

எனும் இவ்வரி மகளிர் மயில்களாக மாறித் தோகை விரித்து ஆடுவதைக் கூறுகிறது.

மாமயிலன்னார் மறையிற் புணர்மைந்தர் (பரி. 11-41)

என்ற பாடல் வரி சிறந்த மயில் போன்ற மகளிர் என்று குறிப்பிடுகிறது. மேலும்,

மணி மருணன்னீர்ச்சினை மடமயில் அகவ (பரி. 15-40)

என்னும் பாடல் வரியில் மயில் அகவுவது தாளவொலி, முழவொலி போல் இருப்பதைக் காணலாம்.

வெண்சுடர் வேல்வேள் விரைமயின் மேல் ஞாயிறுநின் (பரி. 18-26)

இவ்வரி முருகன் வேகமாகச் செல்லக்கூடிய மயிலின் மேல் ஏறி வருவதைச் சுட்டுகிறது. இதனால் மயில் வேகமாகச் செல்லக்கூடிய பறவை என்பதும் தெளிவாகிறது. மேலும்,

மாறுகொள் வதுபோலு மயிற்கொடி வதுவை (பரி. 19-7)

மடமயிலோரும் அனைவரோடு நின் (பரி. 19-21)

எனும் வரிகள், ஆடுகின்ற அழகிய மயில்போன்று இருக்கின்ற வள்ளியை முருகன் மணம் செய்து கொள்வதைச் சுட்டுகின்றன. மேலும், பாண்டியன் மடமயில் மனையவரோடும் மடப்பமுடை மயில் போன்ற சாயலையுடைய தன் மனைமாரோடும் வலம் வருவதையும் சுட்டுகின்றன.

மந்துற்றாய் வெஞ்சொன் மடமயிற் சாயலை (பரி. 20-69)

என்ற பாடல் வரி பரத்தை தான் செய்த பாவம் தீர்தல் பொருட்டு மடப்பமுடைய மயில் போன்ற மென்மையையுடைய தலைவியை வணங்க வேண்டும் என எண்ணியதைக் குறிப்பிடுகிறது.

அகநானூறு காட்டும் மயில்

எம்வெங் காமம் இயைவது ஆயின்

மெய்ம்மலி பெரும்பூண், செம்மற் கோசர்

கொம்மைஅம் பசுங்காய்க் குடுமி விளைந்த

பாகல் ஆர்கைப் பறைக்கண் பீலித்

தோகைக் காவின் துளுநாடன்ன (அகம். 15)

        என்ற பாடல், தலைவியானவள், தோழிகளும் நானும் வருந்த நன்னனின் பாழி என்றும் கட்டுக்காவல் மிக்க இடத்தைக் கடந்து தந்தையையும் மறந்து பெரிய மனையையும் துறந்து தலைவனுடன் புறப்பட்டுச் சென்றாள். அவள் சென்ற காட்டுவழியானது, இருப்பைப் பூவை தின்ற வாயுடன் நிலம் புழுதி பறக்க விரைந்து சென்று கொன்றைப் பழத்தைக் கோதும் வலிமையான கைகளையுடைய கரடிக் கூட்டம் திரியும்வழி. அச்சம் பொருந்திய வழியில் செல்லு என் மகளுக்கு உண்மையே பேசும் கோசர் வாழும், பாகற்காயைத் தின்னும் தோகை மயில்கள் நிரம்ப உள்ள, பொருளின்றி வாழ்வோரைப் பாதுகாக்கும் பண்புடைய துளுநாட்டு மக்களை போல அங்கு உள்ள ஊர்களின் மக்கள் அறிந்தவர்களாக இருக்கட்டும் எனும் கருத்தைத் தருகின்றது. மேலும்,

மடமயில் அன்ன என் நடைமெலி பேதை

தோள்துணை யாகத் துயிற்றத் துஞ்சாள்

வேட்டக்கள்வர் விசியுறு கடுங்கண்

சேக்கோள் அறையும் தண்ணுமை

கேட்குநள் கொல் எனக் கலுழும் என் நெஞ்சே  (அகம். 63-15)

என்ற பாடல் அச்சம் தரும் காட்டினைக் கடந்து சென்றவள் கன்றுகளைக் காணாமல் இரு பசுக்களை வீடுகளுக்குக் கொண்டு வந்து சேர்க்க விரைந்த நடையை உடைய வெட்சி வீரர் ஆரவாரிக்கும் சிற்றூரில் இரவில் முதுமைப் பெண்டிர் வாழும் குடிசையில் தங்கிய மயில் போன்ற அடிக்கப்பெறும் பறையின் ஒலியைக் கேட்டுத் தூங்காது அழுவாளோ என்று நினைத்து ஏங்கும் என்மகள் அவன் தோளில் அணைந்து வேட்டையாடுவோர் காளைகளைக் காப்பாற்றும் போது என் நெஞ்சினை எண்ணி வருந்துகிறேன் என்பதில் மயிலின் மென்மைத் தன்மையைப் பெண்ணுக்கு உவமைப்படுத்தியது புலனாகிறது.

பீலிசூட்டிய பிறங்குநிலை நடுகல்

வேல் ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்

மொழிபெயர் தேஎம் தருமார் மன்னர்

கழிப்பிணிக் கறைத்தோல் நிரைகண் டன்ன

உவல்இடு பதுக்கை ஆள்உகு பறந்தலை (அகம். 67-10)

என்னும் பாடல் தோழி! தலைவன் பொருள் தேடச் சென்ற வழியின் கொடுமை எத்தகையது என்பதைக் கேள். வானம்பாடிப் பறவை பாடியும் மேகம் மழை பெய்யாது போனதால் மரங்கள் இலைகள் உதிர்ந்து பொலிவிழந்தன. கற்குவியல்களும் நெல்லி மரங்களும் உடைய இடங்களில் வெட்சியார் கொண்டு சென்ற ஆநிரைகளை மீட்டுச் சென்று நடத்திய போரில் இறந்த கரந்தை இரவுப் பொழுதில் கையில் வில்லும் அம்புமாய் இடுக்கிய பார்வையுடன், கரந்தை வீரர்கள் வீரர்களுக்கு அவர்களின் பெயர்கள் எழுதி நடப்பெற்ற நடுகற்களுக்கு மயில்தோகை சுட்டியிருப்பதை
அறியலாம்.

மந்தி நல்அவை மருள்வன நோக்க

கழைவளர் அடுக்கத்து இயலி ஆடும் மயில் (அகம். 32-8,9)

பூத்த பூக்களில் உள்ள தேனை உண்ணும் வண்டுகளின் இனிமையான ஓசை யாழ்போல்
கேட்டது.இவ்வாறு பல இசைகளைக் கேட்ட குரங்குகள் பார்வையாளர்களை வியப்புடன் பார்த்தன. காட்டில் மயில்கள் அவைக்களத்தில் ஆடும் மகளிரைப்போன்று ஆடிய செய்தி இங்கும் பதிவாகியுள்ளது.

நல்நாள் பூத்த நாகுஇள வேங்கை

நறுவீ ஆடிய பொறிவரி மஞ்ஞை

நனைப்பசுங் குருந்தின் நாறுசினை இருந்து

துணைப்பயிர்ந்து அகவும் துணைதரு தண்கார்

வருதும், யாம் எனத் தோற்றிய (அகம். 25-10-14)

கார்ப்பருவம் வந்துவிட்டது. மலைச்சாரலில் ஈன்ற பெண் யானையின் பசியைப் போக்க ஆண் யானை மூங்கிலின் முளையைக் கொண்டு வந்து உண்ணச் செய்யும் திறையன் என்பவனது வேங்கட மலையில் அன்று பூத்த வேங்கை மரப் பூக்களின் பூந்தாது படிந்த புல்லிகளுடன் கூடிய மயில் குருந்தமரக் கிளையில் இருந்து குளிர்ச்சி பொருந்திய கார்காலம் வந்து விட்டதால் தலைவர் உறுதியாக வருவார். இங்கு மயில் காலத்தை அறிந்து வெளிப்படுத்தக்கூடிய பறவையாக சங்ககாலத்தில் இருந்ததை அறியமுடிகின்றது.

அருஞ்சுரம் இறந்தனள் என்ப – பெருஞ்சீர்

அன்னி குறுக்கைப் பறத்தலை திதியன்

தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணிய

நன்னர் மெல்இணர்ப் புன்னை போலக்

கடுநவைப் படீஇயர் மாதோ களிமயில்

குஞ்சரக் குரல குருகோடு ஆலும் (அகம். 145-10-15)

என்ற பாடல் வரிகளில் மயிலை வீட்டில் வளர்த்த செய்தி புலப்படுத்துகிறது.

களிமயிற் கலாவத் தன்ன தோளே (அகம். 152-14)

எனும் வரி தித்தன் வெளியன் என்பவனது நண்பன் நன்னன் ஏழில் என்னும் மலையின் பக்கமலையாகிய பாழி என்ற இடத்திலுள்ள மயிலின் தோகையைப் போன்றது தலைவியின் வளைந்த சுருண்ட கூந்தல் என்று இப்பாடல் சுட்டுகிறது.

வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி (அகம். 158-5)

இவ்வரி, ஒரு பெண் மலையிலிருந்து இறங்கும் மயில்போலத் தளர்ந்து நடந்து பரணில் இருந்து இறங்கி வரக்கண்டேன் என்று தோழி செவிலியிடம் கூறுவதாய் இப்பாடல் அமைந்துள்ளது.

கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை

அயிரியாற்று அடைகரை வயிரின் நரலும்

காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்

வல்லே வருவர் போலும் வென்வேல்

இலைநிறம் பெயர ஓச்சி மாற்றோர் (அகம். 177-10-4)

        என்ற பாடல், மலைச்சாரலில் சுரபுன்னைமரங்கள் வளர்ந்துள்ளன. அவற்றின் கிளைகள் வாட கிடந்ததால் பாறைகள் சுடும். அங்கு நிறைந்த கர்ப்பத்தோடு உள்ள பெண் மயில் நீர் கிடைக்காமல் இக்கோடைக்காலத்தில் வெயில் தணிந்துவிட்ட மாலை நேரத்திலும் பகல் முழுவதும் வெயிலில் அயிரி என்னும் ஆற்றங்கரையில் ஊதப்படும் ஊது கொம்பு போலக் கூவுவதைக் காட்டுகின்றது.

ஒல்குஇயல் மடமயில் ஒழித்த பீலி (அகம்.281-4)

எனும் அடி, தலைவி தோழியிடம் தலைவன் பிரிந்ததைக் கூறும்பொழுது மோரிய மரபினர் வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்கு வரும்போது வடுகரைத் துணையாகக் கொண்டனர். அந்த வடுகர் வளைந்து நடக்கும் நடையை உடைய மயில், தன் சிறகினின்று உதிர்த்த தோகையைத் தம் வில்லில் சுற்றியிருப்பர். அதனால் அது பல கண்களைத் திறந்து பார்ப்பதுபோல் தோன்றி வெற்றி இலக்கை அடையும். வடுகர் மயிலிறகினை வில்லில் பொருத்தியிருந்த செய்தியை இங்குக் காணமுடிகிறது.

மயிலினம் பயிலும் கானம் (அகம். 3474-6)

தலைவன் தலைவியின் பசலையைப் போக்க நீ உதவுக என்று பாகனிடம் கூறுகிறான். அதாவது கூர்மையான பற்களையும் ஒளிபொருந்திய நெற்றியினையும் உடைய மகளிரது ஒழுங்குபட்ட தோளி என்னும் விளையாட்டைப் போன்று மயிலினங்கள் கூடி ஆடி இயங்கும் மரங்கள் அடர்ந்த காட்டு வழியில் நீ விரைந்து செல்க என்று இப்பாடல் உணர்த்துகிறது.

இனமயில் அகவும் கார்கொள் வியன் புனத்து (அகம். 334-1)

            கார்காலத்தில் மயில் கூட்டங்கள் அகவிக் கொண்டிருக்கும் தன்மையை இப்பாடல் குறிப்பிடுகிறது.

ஆடுமயில் முன்னது ஆக, கோடியர்

விழவுகொள் மூதூர் விறலி (அகம். 352-4)

        பெரிய பலாப்பழத்தினை ஆண் குரங்கு கையில் வைத்திருக்கும். அருவிகள் ஒலிக்கும் கற்பாறையில் ஆடும் மயில் தன் முன்னே நிற்க, கூத்தர் விழாக் கொண்டாடும் முதுமை வாய்ந்த ஊரில் விறலியின் பின் நின்று முழவை இயக்குபவன் என்று இப்பாடல் மூலம் மயிலின் சிறப்பை அறியலாம்.

காமர் பீலி ஆய்மயில் தோகை (அகம். 358-2)

        நீல மணிபோன்ற நிறம் கொண்ட கழுத்தினையும் பீலிகள் நிறைந்த தோகையினையும் உடைய மயில்கள் இனிய குரல் கொண்டு தாளத்திற்கேற்ப ஆடும் தன்மை கொண்டவை.

மடமயிற் குடுமியின் தோன்றும் நாடன் (அகம். 368-7)

        குன்றின் பக்கத்தில் நீண்ட அடியை உடைய மரங்களில் இளைய மயிலின் உச்சியின் மேல் உள்ள குடுமி போல் தோன்றும் மலைநாட்டை உடைய தலைவன். இங்கு, மயிலின் குடுமியை மலைக்கு ஒப்பிட்டுக் கூறுவதை அறியமுடிகிறது.

கிள்ளையும் தீம்பால் உண்ணா மயில் இயல் (அகம். 369-4)

காமர் பீலி ஆய்மயில் தோகை (அகம். 378-5)

எனும் வரிகள், மலைவாழ் ஆடுகளின் கொம்புடைய இளைய கடாக்களின் ஒலியை கேட்டு மயில்கள் அஞ்சி ஓடும் என்றும், ஆடும் களத்தில் ஒலிக்கும் கொம்பு போன்று அம்மயில்கள் ஒலித்து அருகிலுள்ள மூங்கிலின் பகுதியில் தங்கியிருக்கும் என்றும் மயில் பற்றிய செய்திகளைச் சுட்டுகின்றன. மேலும்,

தன் ஓான்ன ஆயமும், மயில் இயல்

என் ஓரன்ன தாயரும் (அகம். 385-1)

ஆடுமயில் பீலியின் பொங்க (அகம். 385-14)

இதில், மயில் போன்ற சாயலை உடைய என் மகள் மயிற்சாந்து பூசி எல்லாச் சிறப்புகளையும் செய்து திருமணம் நடக்கச் செல்லாதவளாய் தலைவனுடன் சென்றாள் என்கிறாள் செவிலி.

நனவுறு கட்சியின் நல்மயில் ஆல் (அகம். 392-17)

        தினைப்பயிரை மேய்ந்த யானைக்கூட்டம் நிலைகெட்டு ஓடும்படி பரணில் இருந்து கானவ வீசிய கவண் கல்லின் கடுமையான ஓசை எங்கும் ஒலித்தது. அதைக் கேட்டு அழகிய மயிலும் இடியோசை என எண்ணியது. இவ்வாறாகச் சங்க இலக்கியங்கள் காட்டும் மயில் தலைவியி அழகு, நொச்சிமரம், முல்லைக்கொடி போன்ற வர்ணனைகளாகவும் உவமைகளாகவும் பெரும்
பாலான இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

        ஒரு சில பாடல்கள் மட்டும் மயில்கள் போர் செய்வதற்கும் அதன் தோகையைப் போ செல்லும் வில்லில் பொருந்தியதையும் சுட்டுகிறது. அழகுகளில் ராணியாகப் போற்றப்படும். அழகோடு மயிலானது பெண்களின் ஒப்பிடப்பட்டுள்ளமையும் போர்க் கருவியா இருந்துள்ளமையும் தெளிவாகிறது.

புறநானூறு காட்டும் மயில்

மணிமயில் உயரிய மாறா வென்றிப்

பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என (புறம். 56:7-8)

        இப்பாடலில் பிணி என்பது மயிலை குறிக்கின்ற சொல்லாகும். மன்னனைப் புகழ்ந்து பாடும் இடத்து கடவுளும் நீயே காவலனும் நீயே என்று கூறி அழகிய மயிலைக் கொடியாக உடைய குன்றாத வெற்றி வேலேந்திய மயிலேறும் முருகவேளும் என்று கூறப்படுகிறது.

பயில்பூஞ் சோலை மயிலெழுந்து ஆலவும் (புறம். 116:10)

        பாரி இறந்த துயர் பொறுக்காது பூமலர் விரிந்த புதுமலர்ச் சோலையில் மயில் எழுந்து ஆடியது என்பதைப் புலவர் மேற்கண்ட வரியில் கூறுகிறார். மேலும்,

மென்மயில் புனிற்றுப்பெடை கடுப்ப நீடி (புறம். 120: 6)

எனும் வரியால் மெல்லிய மயிலினது ஈன்றணிய பெட்டை போல ஒங்கி, பாரி என்ற செய்தி பெறப்படுகின்றது.

மடத்தகை மாமயில் பனிக்கும் என்றருளி (புறம். 142: 1)

        மேலணிந்திருந்த போர்வையை எடுத்து, அந்த மயிலுக்குப் போர்த்தி அருளிய பேகனின் சிறப்பு எனும் அடியில், மென்மைச் சாயலுடைய மயில் குளிரால் வருந்தும் என்று எண்ணித் தன் சுட்டப்படுகின்றது.

கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன (புறம். 146: 8)

        எனும் அடியில், அணிமணி புனைந்த பேகனின் மனையாள், தோகை மயில் விரித்தது போன்று கூந்தல் வாசப் புகை மணம் பெறவும், குளிர்ந்த மணம் தரும் மாலை சூடி மகிழவும், உனது தேர் உன் மனைவியை விரைந்து சென்று காணுமாக என்று பேகனிடம் அரிசில்கிழார் உரைக்கிறார்.

இல்வழங்கு மடமயில் பிணிக்கும் (புறம். 252: 4)

எனும் அடி, ஒரு காலத்தில் வீட்டில் இருக்கும் அழகு மயில் போன்ற இளம் பெண்களைக் கவர்பவன் என்பது குறித்துக் கூறுகின்றது. இங்கு மயில் என்பது பெண்களைக் குறிக்கின்றது. மேலும்,

அணிமயில் பீலி சூட்டிப் பெயர்பொறித்து (புறம். 264:3)

அழகிய மயில் தோகையும் அணிவித்துப் பெயரும் எழுதி கல்லும் நட்டுவிட்டனரே! போரில் மன்னன் இறந்ததை அறியாமல் பாணர் கூட்டம் பரிசில் பெற வருவதற்கு இனிமேல் வழியுண்டோ என்று உரைக்கிறார்.

மயில் அம்சாயல் மாஅயோளொடு (புறம். 318: 23)

உணவாக்கப் பறித்து வந்த கீரை வாடி வதங்க, காட்டிலிருந்து வெட்டி வரப்பட்ட விறகுக் கட்டைகள் பற்ற வைக்கப்படாமல் உலர, மயில் போன்ற சாயலுடைய அழகிய மனைவியோடு கூடிவாழும், பெருந்தகையாளன் ஊர் அவன் போரில் துன்பத்துக்காளானானென்றால் பசியால் வாடி வருந்தும் எனும் செய்தி மேற்கண்ட பாடலடியின் தொடர்ச்சியாக வருவதை அறியமுடிகிறது.

கலித்தொகையில் மயில்

கல்மிசை மயில் ஆல, கறங்கி ஊர் அலர் தூற்ற

தொல்நலம் நனிசாய நம்மையோ மறந்தைக்க (பாலை. 27)

        என்ற பாடல் அதோ! மயில் பார்! அழகிய தோகை விரித்தாடும் மயில் ஆடுகிறது. அது என்னைப் பார்த்து உன் மேனி வண்ணம் எங்கே? வனப்பு எங்கே? என்று கேட்டு இகழ்வது போலிருக்கிறது என்று தலைவன் பிரிவால் வாடும் தலைவி தோழியிடம் புலம்புவதாக அமைந்துள்ளது.

நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி

உருவது போலும் என் நெஞ்சு எள்ளித்

தொகுபு உடன் ஆடுவ போலும், மயில் கையில் (பாலை. 33)

        என்ற பாடல் வரி மயில் தோகை விரித்து ஆடுவதைக் குறிப்பிடுகிறது.

நெடுமிசைச்சூழும் மயில் ஆலும் சீர (பாலை. 36)

        எனும் பாடல் வரியில் இளவேனில் காலத்தில் வெண் கடம்ப மரத்தில் ஒரு மயில் அமர்ந்திருக்கிறது. அது தன் அழகிய தோகையை விரித்து ஆடுகிறது. ஆடும் மயிலைக் காண்கிறாள் ஒரு பெண். அவளுக்கு மயில் ஆடுவது மகளிர் ஆடுவது போல் தோற்றமளிப்பதை உணர்த்துகிறது.

மெல்ல இயலும் மயிலும் அன்று

சொல்லத் தளரும், கிளியும் அன்று (குறி. 55)

என்ற பாடல்வரியில் மகளிரின் நடைக்கு மயிலை ஒப்பிட்டுக் கூறியுள்ளதை அறியமுடிகிறது.

ஆய்தூவி அனம் என, அணிமயிற் பெடை என

தூது உண் அம்புறவு என துதைந்த நின் எழில் நலம் (குறி. 56)


            அன்ன நடை மயில் போன்ற சாயல் என்று பெண்ணுக்கு மயில் அழகை ஒப்பிட்ட
கூறியுள்ளனர்.

மாவென்ற மடநோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி (குறி. 57)

இந்தப் பாடல்வரியும் மயில் அழகோடு தலைவியை ஒப்புமைப்படுத்திக் கூறியுள்ளது.

மயில் எருத்து உறழ் அணிமணி நிலத்துப் பிறழ

பயில் இதழ் மலர் உண்கண் (முல். 108)

வலை உறு மயிலின் வருந்தினை, பெரிது என

தலையுற முன் அடிப் பணிவான் போலவும் (நெய்.128)

எழில் அஞ்சு மயிலின் நடுங்கி, சேக்கையின்

அழல் ஆகின்று அவர் நக்கதன் பயனே (நெய்.137)

            மேற்கண்ட பாடல்களின் வாயிலாக மயில் பெண்களின் அழகை வர்ணிக்கவும், அ உணர்த்துவதைக் காணலாம். கலித்தொகைப் பாடல்கள் பெண்களின் அழகோடு மட்டு இழந்த நிலையில் தோகை உதிர்ந்த மயில் போல என் அழகும் இழந்துவிட்டது என்பதை ஒப்புமைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளதை அறியலாம். கோலக் கலாபம் விரித்தாடும் நீல மயிலின் தோற்றத்தை நடமாடும் விறலியர்க்கு உவமைய கூறுவர் பண்டைப் புலவர்கள்.

பத்துப்பாட்டில் மயிலின் சிறப்பு

திருமுருகாற்றுப்படை

மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு

செய்யன் சிவந்த ஆடையன், செவ்வரைச்

செயலைத்தண்கதளிர் துயல்வரும் காதினள் (திருமுருகாற்றுப்படை, 205)

        முருகப் பெருமானானவன் மயிலை ஊர்தியாகக் கொண்டவன், நெடிய உருவம் படைத்தவன், சிவந்த ஆடையை உடையவன், தொடி என்னும் அணியைத் தோளில் அணிந்தவன் இப்படிப் மகளிருக்கு முதற்கை கொடுத்து, மலைகள் தோறும் சென்று விளையாடுதல் முருகக் கடவுளின் நிலைத்த குணமாகும்.

பொருநராற்றுப்படை

பெடைமயில் உருவின், பொருந்தகு பாடினி (பொருந. 47)

        உச்சி வேளையில் நடத்தலைத் தவிர்த்தலால் பெடைமயில் அருகு நின்ற மயில் போலும் சாயலையுடைய கல்விப் பெருமைமிக்க பாடினி.

மடக்கண்ண மயில் ஆல (பொருந. 190)

குறிஞ்சி நிலப் பறவையாகிய மயில் மருத நிலத்துக் காஞ்சி மரத்திலும், மருத மரத்திலும் இருந்தது என்பார்கள்.

சிறுபாணாற்றுப்படை

மயில், மயிற் குளிக்கும் சாயல், சாஅய் (சிறு. 16)

அழகு மிக்க விறலியருடன் இளைப்பாறும் இரவலன் விறலியரை வர்ணிக்கும் பொழுது அவளின் கருங்கூந்தலைக் கண்டு மழைமேகம் என நினைத்துக் களி கொண்ட மயில்கள் பலவும் கூடி நீலமணி போலுங் கண்ணினையுடைய தோகைகளை விரித்து ஆடுவதைப் போன்று ‘இவர் மென்சாயற்கு ஒவ்வேம்’ என்று நாணி மறைதற்குக் காரணமாகிய கட்புலனாகிய மென்மை உடையவள் விறலியாவாள்.

கருநனைக் கணமயில் அவிழவும் (சிறு.165)

            விறலியும் இரவலனும் முல்லை நிலத்தைச் சார்ந்த வேலூரினை அடைவர். அங்கே அவர்களைப் பவழம் கோத்தாற் போன்று பூத்திருக்கும் கருநிறக் காயாவின் அரும்பு, மயிலின் கழுத்துப் போன்று மலர்ந்திருப்பதைக் கண்டார்கள்.

மணிமயில் கலாபம் மஞ்சுஇடைப் பரப்பி (சிறு.265)

நல்லியக்கோடனது மலையின் புகழினை விளக்கும் முகமாக மென்தோளும் துகில் அணிந்த அல்குலும், ஆடிய சாயலும் உடைய மகளிர் அகிற்புகை ஊட்டுதற்பொருட்டு விரித்த கூந்தலைப் போன்று, மயில் தன் தோகையை விரித்து ஆடுதற்குக் காரணமான கருமேகங்கள் வெண்மேகமாகிய
மஞ்சின் இடையே தவிழ்கின்ற மலை.

மதுரைக்காஞ்சி

மயிலகவு மலிபொங்கர் (மது.கா.333)

மயில்கள் ஆரவாரிக்கும் பொழில் பகுதியாகும்.

மயிலிய லோரும் மடமொழி யோரும் (மது. கா. 418)

மயிலின் தன்மையை உடையோரும் மடப்பத்தையுடைய மொழியினை உடையோர்.

நன்மா மயிலின் மென்மெல இயலிக் (மது. கா. 608)

நன்றாகிய பெருமையையுடைய மயில்போல மெத்தென மெத்தென நடந்து சென்ற முதற்சூல் கொண்ட பெண்கள்.

அன்னங் கரைய அணிமயில் அகவப் (மது. கா. 675)

வண்டாழங் குருகினுடைய சேவல்களின் விருப்பத்தையுடைய அன்னச் சேவல்களும் தமக்குரியா பேடைகளை அழைப்ப அதேபோல் அழகிய மயில்கள் பேடைகளை அழைப்ப.

மயிலோ ரன்ன சாயல் மாவின் (மது. கா. 706)

        மயிலோடு ஒரு தன்மைத்தாகிய மென்மையினையுடைய பெண் என்று இப்பாடல் குறிப்பிடுகிறது.

நெடுநல்வாடை

கலிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை (நெடு. 99)

        அரண்மனையின் தோற்றத்தை விளக்கும் பொருட்டு அங்கே அயலிடத்தனவாகிய தழைத்த நெடிய பீலி ஒதுங்க மெல்லிய இயல்பினையுடைய செருக்கின மயில் ஆரவாரிக்கும்.

பட்டினப்பாலை

மயிலியல் மானோக்கிற் (பட்டினப்பாலை, 149)

        பட்டினப்பாலை தெருக்களில் மயிலின் இயலினையும் மான் போன்ற பார்வையினையும் உடைய மகளிர் இருந்தனர் என்பதாகும்.

கடையெழு வள்ளல்களுள் பேகன்

        மயில் உடுத்துமா? போர்த்துமா என்று அறியாமல் அது மழைமேகங்கண்டு ஆடுவதைப் பார்த்து குளிருக்கு நடுங்குவதாகக் கருதி மனம் நடுங்கினான் மன்னன் பேகன். தான் நடுங்கிக் கொண்டே மயில் நடுக்கம் தீர்ப்பதற்குத் தன் போர்வையை வழங்கினான். பேகனுக்குத் தமிழ் இலக்கியத்தில் அழியா வாழ்வளித்துத் தந்தது மயில்.

மயில் ஆட்டத்தில் மனம் பறிகொடுத்த பாவலர் பலர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் குறிஞ்சிக் கபிலர். களித்தாடும் மயிலைக் கண்டார் தம் எண்ணத்திரையில் வண்ண ஓவியமாகத் தீட்டினார். அதனைச் சொல் ஓவியமாக்கித் தமிழ் உலகுக்குத் தந்தார். அகம் 82-வது பாடலில் மயில் பற்றிய சிறப்பை இவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அற இலக்கியத்தில் மயில்

பழமொழி நானூறு

முன்னை உடையது காவாது இகழ்ந்து இருந்து பி

ன்னை அஃது ஆராய்ந்து கொள்குறுதல் இன்இயற்கைப்

பைத்து அகன்ற அல்குலாய் – அஃதால் அவ்வெண்ணெய்மேல்

வைத்து, மயில் கொள்ளுமாறு (பழ. நா.325)

        இனிய இயல்பையும் அகன்ற அல்குலையும் உடைய பெண்ணே! செல்வம் திரண்டு இருந்தபோது அதனைக் காப்பாற்றாமல் அழிய விட்டுவிட்டுப் பின்னர் மீண்டும் செல்வம் சேர்க்க முயலுவது மயிலின் தலைமேல் வெண்ணெயை வைத்து அது வெயிலில் உருகி மயிலின் கண்களை மறைத்துவிடும்போது மயிலைப் பிடித்து விடலாம் என்று நினைப்பதற்கு ஒப்பாகும்.

துயிலும் பொழுதே தொடு ஊன் மேற்கொண்டு

வெயிலில் வரிபோழ்தின் வெளிப்பட்டார் ஆகி

அயில் போலும் கண்ணாய்! – அடைந்தாள் போல் காட்டி

மயில் போலும் கள்வர் உடைத்து (பழ. நா.353)

வேல் போன்ற கூரிய கண்ணை உடையவளே, மக்கள் அனைவரும் உறங்கும் நள்ளிரவில் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே உள்ளவற்றைத் திருடிச் சென்றுவிடும் கள்வர், சற்றே ஓய்வு கொண்டு பகலில் நல்லவர் போல் வெளிப்படுவர், நான்கு பேருடன் கூடிப் பழகுவர். பாம்பைப் பற்றி விழுங்கி நல்லவர்போல் நடிக்கும் மயில் போன்ற கள்வர் இத்தகையோரை உடையது இந்நாடு. மயில் போன்ற கள்வர் என்ற அழகிய உவமைத் தொடர் அக்கால நிலைமையைக் காட்டுகிறது.

திருக்குறள்

“பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்” (குறள். 475)

        மயில்பீலி இலேசாக இருக்கும் என்று கருதி மிகுதியாக ஒரு வண்டியில் ஏற்றிச் சென்றால் அவ்வண்டியின் அச்சாணி முறிந்துவிடும். அதேபோன்று தன் வலிமையினை உணராது பெரிய செயல்களைச் செய்ய நினைப்பவனும் வெற்றிபெறாது வீழ்ந்துவிடுவான் என்பது இக்குறளின் பொருள். அதாவது ஒருவனுடைய வன்மையை வெற்றிபெறச் செய்வதற்கு மயிலின் தோகை இங்கு உவமிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. மேலும் மயிலின் தோகை பஞ்சுபோல இலேசாக இருப்பதும் இவற்றினூடாகக் காணலாம்.

பக்தி இலக்கியம் சுட்டும் மயில்


பக்தி இலக்கியத்தில் திருஞானசம்பந்தர் பதிகத்தில் பாண்டியனின் வெப்புநோயைத் தீர்க்க சமணர்கள் அவன் உடலை மயிற்பீலியால் தடவிய செய்தி புலப்படுகிறது. இதன் வாயிலாக மயில் தோகை குளிர்ச்சி பொருந்தி நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்பட்டிருப்பதை இங்குக் காண முடிகிறது.

காப்பியத்தில் மயில்

கயிலை நன் மலையிறை மகனை நின் மதிநுதல்

மயிலியல் மடவரல் மலையர்தம் மகளிர் (சிலம்பு: குன். குரவை. 15: 6-7)

என்ற பாடல் வரியில் மயில் பற்றிய செய்தி பெண்களோடு ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளதைக் முடிகிறது.

இராமாயணம்

மயிலின் குஞ்சுகளுள் தலைக்குஞ்சே தனிப் பேரழகினது என்றும், தலைமைக்குரியது என்றும். கூறுவர். ஆதலால் மூத்தவர்க்கு அரசுரிமையுடைய முடிமன்னர் குலம் மயின்முறைக்குலம் ‘மயின்முறைக்குலத்துரிமையை மாற்றாதே’ என்று தயரதன் அவளிடம் மண்டியிட்டுக் கிடந்தது. எனப்பெற்றது. அக்குலத்து வந்தவன் கேகயன் ஆனான். அவன் மகள் கைகேயி ஆனா இராமகாதைச் செய்தி குறிப்பிடுவதிலிருந்து மயிலின் சிறப்பு புலப்படுகிறது.

சிற்றிலக்கியத்தில் மயில்

திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய திருக்குற்றாலக் குறவஞ்சியில்

காடை வருகுது கம்புள் வருகுது காக்கை வருகுது கொண்டைக்

குலாத்தியும் மாடப் புறாவும் மயிலும் வருகுது மற்றொரு சாரியாய்

என்ற பாடல் வரிகளில் பலவகையான பறவையின் வருகையுடன் மயிலின் சிறப்பையும் குறிப்பிட்டிருப்பது சிங்கன் கூற்று வழிக் காணமுடிகிறது.


இக்கால இலக்கியத்தில் மயில்

பாரதியார் கவிதையில் மயில்

பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்

பாரத நாடு

நன்மையி லேயுடல் வன்மையிலே – செல்வப்

பன்மையிலேமறத் தன்மையிலே

பொன்மயி லொத்திரு மாதர்தங் கற்பின்

புகழினி லேயுயர் நாடு – இந்தப்

பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள் பாரத நாடு


பாரதியார், பாரதநாடு என்ற கவிதையில் பொன்மயிலை மாதர்களின் கற்பிற்கு இணையாக வைத்துப் பேசுகிறார் என்பதை அறியமுடிகிறது.

பாரதிதாசன் கவிதையில் மயில்

அழகிய மயிலே! அழகிய மயிலே!

அஞ்சுகம் கொஞ்ச, அமுத கீதம்

கருங்குயிலிருந்து விருந்து செய்யக்

கடிமலர் வண்டுகள் நெடிது பாடத்

தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்

அடியெடுத் தூன்றி அங்கம் புளகித்

தாடுகின்றாய் அழகிய மயிலே!

உனது தோகை புனையாச் சித்திரம்

ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்!

உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை

உச்சியில் கொண்டையாய் உயர்ந்ததோ என்னவோ!

ஆடுகின்றாய், அலகின் நுனியில்

வைத்த உன் பார்வை மறுபுறம் சிமிழ்ப்பாய்!

சாயல் உன் தனிச் சொத்து! எஸபாஷ் கரகோஷ்ம்!

ஆயிரம் ஆயிரம் அம் பொற்காசுகள் ஆயிரம் ஆயிரம்

அம்பிறை நிலவுகள் மரகத உருக்கின் வண்ணத் தடாகம்

ஆன உன் மெல்லுடல் ‘ஆடல்’உன் உயிர் இ

வைகள் என்னை எடுத்துப் போயின!

இப்போது ‘என் நினைவு’ என்னும் உலகில்

மீண்டேன் உனக்கோர் விசயம் சொல்வேன்

நீயும் பெண்களும் ‘நிகர்’ என்கின்றார்.


            பாரதிதாசன் தன்னுடைய கவிதைத் தொகுப்பில் மயிலின் தன்மை பற்றி விரிவாக விவரித்துக் கூறியுள்ளார். மயிலின் தோற்றம், நடை, பார்வை, மெல்லுடல், ஆடல், சாயல், தோகை முதலியவற்றை எல்லாம் வர்ணித்து அதனை அவரின் நினைவில் வைத்து இறுதியாக மயிலானது பெண்களுக்கு நிகர் என்று எடுத்துக் கூறியுள்ளார். மேலும்,

‘பதுக்க முடியாப்

பவுன் முத்திரை நீ

ஒதுக்க முடியா

ஓவியத் திரை நீ

நட்டுவம் இன்றி

நடத்தும் கலை நீ

கொட்டு முழக்கின்றிக்

குதிக்கும் சிலை நீ!

அழகு நடன

அரும்பத வுரை நீ

மெழுகுப் பச்சையின்

மின் அனல் நுரை நீ

உயிராய்க் கிடைத்த

ஒளிப்புதை யல் நீ!

அயராது மகிழ்வேன்

ஆடுக மயில் நீ!

என்ற இப்பாடலில் மயில் கவிஞரின் பார்வைக்கும் பாட்டுக்கும் விருந்தாய்ச் சிறந்தது. அழகிய அதன் தோகையைக் கண்டு வியந்து மகிழ்கிறார். அழகிய சொல் வீச்சில் வியத்தகு மயில் காட்சி பியைப் படம் பிடித்துள்ளார் கவிஞர். மயிலின் காட்சி பதுக்கமுடியாத பவுன்முத்திரையாகவும், ஒதுக்க முடியாத ஓவியத் திரையாகவும், நட்டுவம் இன்றி நடத்தும் கலையாகவும், கொட்டு முழக்கின்றிக் குதிக்கும் சிலையாகவும், நீலத்தோகையின் நேர் துறைமுகமாகவும், அழகுநடன அரும்பத உரையாகவும், மழைக்காலத்தின் மருமகப்பிள்ளையாகவும், உயிராய்க் கிடைத்த ஒளிப் புதையலாகவும் காட்சியளித்து மகிழ்ச்சியைத் தருகிறது.

இக்காலக்கட்டங்களில் மயில்


ஆஸ்திரேலியாவின் மயில்’ எனப்படும் யாழ்ப் பறவையின் அன்பு வாழ்க்கையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இனப்பெருக்கக் காலத்தில் ஆண்பறவை ஒவ்வொன்றும் தனக்கென்று ஒரு எல்லையை அமைத்துக்கொண்டு அதை வரையறுத்துக் கொள்கிறது. ஒரு பறவை மற்றொரு நீளமான அழகிய தோகையையும், இனிய குரலையும் பெற்றிருக்கும். ஆண் மயில் முறையாகக் பறவையின் எல்லைக்குள் ஊடுருவிச் செல்லாது என்பதையும் இங்கு பதிவு செய்யலாம். ஆண்பறவை மண்ணைத் தோண்டி எடுத்து இலைகளையும் கொண்டு உயரமாக மேடை ஒன்று அமைத்து அதில் காலையிலும் மாலையிலும் இனிய குரல் எழுப்பிப்பாடும். தனது கூரிய நீண்ட நகங்களால் ஏறிநின்று கொண்டு அழகுத் தோகையை விரித்து பெண்ணைக் கவர்வதற்காக ஒயிலாக ஆடும் தன்மை, மயிலின் அன்பு வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றது.

உளவியலில் மயில்

        ‘யெங்’எனும் விலங்கியல் அறிஞர் ஆண் மயிலில் காணப்படும் நீண்ட அழகிய இறகுகள் பாலினப் பண்பாக அமைந்து பெண்ணைக் கவருவதற்காகவே அமைந்துள்ளது என்கிறார். மயிலின் ஆட்டம் கவர்ச்சிமிக்கது. அவ்வாட்டமே கூத்துக்கலைக்கு வித்து ஆகியது. மயில் அழகாக ஆடி மகிழ்ந்த இடம் அதன் பெயரால் வழங்கப்படுவதாயிற்று. மயிலாடுதுறை, மயிலாடும்பாறை, மயிலம், மயிலாப்பூர் என்பவையே அவை.

        மயிலின் ஆட்டக் கவர்ச்சி மக்களை அன்றி மற்ற உயிரினங்களையும் ஆடச்செய்தது. ‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ ஆடுவதை ஔவையாரும், ‘மந்தி குதித்தாடும் மயிலாடு துறையை` ஞானசம்பந்தரும், ‘மயிலாடும் அரங்கில் மந்தி நோக்குவதைச் சாத்தனாரும் பதிவு செய்துள்ளனர். மயிலின் அழகில் அதனை தெய்வத் திருவூர்தியாக்கி முருகனை மயிலேறும் மாணிக்கமாக்கிக் கோடி கோடி அடியார்களைத் தேடித் தேடி வணங்க வைத்தது. ‘வேலும் மயிலும்
துணை’ என்ற அடைக்கலமாகவும் மாறியது.

மயிலும் உவமைக்காட்சியும்

        தமது பண்டைய இலக்கியங்கள், புராணங்கள் போன்றவற்றில் மரபுவழி தொட்டு காட்சிப்படுத்தப்பட்ட இலக்கணக் குறிப்புகள், கவிதைகள், உவமைகள் காணப்படுகிறது. இவற்றில் இயற்கையில் காணப்படும் விலங்கினங்கள், பறவைகள் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாகப் பறவைகளின் குணாதிசயங்களை ஒப்பிட்டும், உவமைப்படுத்தியும் பல படைக்கப்பட்டன. பறவைகளின் வரிசையில் மிகவும் குறிப்பிடும்படி
இலக்கியங்கள் உவமையாக இருப்பது மயிலாகும். மயிலின் குணாதிசியங்கள் மற்றும் பண்புகளைக்கொண்டு பெண்களின் பண்பு நலனுடன் வமைப்படுத்தித் தமிழ் மரபுவழி இலக்கணங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மயிலானது பண்டைய வரலாற்று நூல்களில் ஒரு உவமைப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. எடுத்துக்காட்டாக பன்னிரு குறிப்புகளில்

“மயிலார் சாயல் மாது”

“மயிலினோர் இயல்”

என்று உருவுவமை காட்டி மகளிரை மயிலின் சாயலுக்கு ஒப்பாகவும் மற்றும் நடையை மயிலின் நடையுடன் உவமைப்படுத்தப்பட்டதற்கு சான்றாகும். மேலும், இயங்குயிர்கள் தொகுப்பில்

“நிகரில் மயிலாரிவர்”

“மயில் சாயநல்லாள்”

            என்று பெண்களை ஒப்புமைப்படுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் இலக்கணக் குறிப்புகளில் உவமை உருவகம், அணிகள் பகுதியில் மயிலின் இயல்புகளை எடுத்துக்கொண்டு உதாரண வார்த்தைகள் உருவாக்கப்பட்டுள்ளது.


“இரவலர்க்கீத்தலையானினும் ஈயர்” (திருமந்திரம், 2765 – 1139)

        இந்த வரியின் பொருளானது பெண்களின் பாதம் மயிலின் இறகுகள் போன்று மென்மையாகக் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் வாகனமாகத் திகழும் மயில் வாகனத்தை “மயிற்பரி” என்றும் உச்சிக்குடுமி உடைய ஆண் மயிலை “சிகண்டி” என்றும் ஆன்றோர் கூறுவர்;

இதில் “தோகைவாம்பரி உகைத்தவன் (முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், சிறுதேர் : 4:4) நூலில் ஸ்ரீ குமரகுருபர அடிகளாகும்,

தோகைமயிற்பரியானே” (திருக்குன்றக்குடிப்பதிகம்) என்று பாம்பன் சுவாமிகளும் குறிப்பர். இம்மயில் ஓங்காரத்தின் குறியீடு என்பார் அருணகிரியார்.

“ஆனதனிமந்த்ரரூபநிலைகொண்டது
ஆடுமயில் என்பது அறியேனே”

முருகனின் தலமான குன்றக்குடி திருமலையை மயிலுக்கு ஒப்பாக உயர்வுபடுத்தி, மலை ஏறும் திருப்படிகள் மயிலின் தோகையாக திருக்கோயிலின் தளம் முதுகாக பெருமானும் பெருமாட்டியரும் எழுந்தருளியுள்ள கருவறை திருக்கோபுரம் கொண்ட குடுமியாகக் கண்டு மகிழலாம். எனவே, இம்மலையானது மயில் மலை இமயூரகிரி, சிகிமலை, சிகண்டிமலை என்று பெயரிட்டு இலக்கியங்கள் மயிலை சிறப்பு செய்கின்றன.

முடிவுரை


            பாரத நாட்டின் தேசியப்பறவை மயில். மிக அழகான பறவை. தோகை விரித்தாடும் இயல்பானது தோகையில் நீலக் கண்களும் தலையில் குஞ்சம் போன்ற பட்டுக் கொண்டையும் இதன் சிறப்புகளாகும். மயில் தேசியப்பறவையாதலால் அவற்றை வீட்டில் வளர்ப்பதற்கோ, கொல்லுவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறிச் செய்தால் அவர்களுக்குத் தக்க தண்டனையும் கொடுக்கப்படுகிறது என்பதிலிருந்து மயிலுக்கான முக்கியத்துவம் புலப்படுகிறது. ஆறுமுகப்பெருமான் பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்து வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. மயில் தேசியப்பறவையாகவும், முருகன் ஊர்தியாகவும், சரஸ்வதி விராலிமலை முருகன் கோயிலில் காணப்படுவதை மாலை மலர் இதழ் வெளியிட்டுள்ளதையும் வாகனமாகவும், விருதுசேனன் கொடியாகவும் இருந்துள்ளமை இலக்கியங்களில் பதிவாகியுள்ளதைக் ‘ காணமுடிகிறது. மேலும் ஸ்கந்த குப்தன், ஷாஜகான் போன்றவர்களால் மயிலின் சிறப்பு மிளிர்கிறது.

பிற சிறு விலங்குகளுக்குக் காவலனாகவும் பாம்பைக் கொல்லும் திறனும் மயிலுக்கு உண்டு என்பது புலனாகிறது. சங்க இலக்கியங்கள் மயிலை நொச்சி, முல்லைக்கொடி, பெண்கள், நடனமாடும் விறலியர் போன்றவற்றின் அழகுக்கு ஒப்புமைப்படுத்தியுள்ளன. தெய்வமான வள்ளியின் அழகை உவமிப்பதிலிருந்து மயிலின் சிறப்பு வெளிப்படுகின்றது. அழகை உவமைப்படுத்திக் கூறுவதற்கு மட்டுமே மயிலைப் பயன்படுத்திய சங்க இலக்கியங்கள் ஒரு சில இடங்களில் மயிற் போர் செய்வதற்கும், போர்க்கருவியான வில்லில் மயில் தோகையைப் பயன்படுத்தியிருப்பதையும் பதிவு செய்துள்ளன. மேற்கூறியவற்றினை நோக்கும்போது மயில் அனைத்துச் செயல்களிலும் திறன் வாய்ந்திருப்பதை அறியலாம். மேலும் எல்லாக் காடுகளிலும் பறவைகளுக்கும், விலங்கினங்களுக்கும் பாதுகாப்புச் செய்வதோடு அவை உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையான நீர்த் தொட்டிகளும், பயிரினங்களும் விளைவிக்கப்படுகின்றன. இவற்றுள் மயிலிற்கு மிளகாய் மிகவும் பிடித்தமான உணவு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

பேரா. முதுமுனைவர் கி.முத்துச்செழியன்

Ph.D., D.Sc., FNABS., FZSI., FPBS., FIEF (Canada).,

மேனாள் துணைவேந்தர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.

ஆலோசகர், அதியமான் கல்வி நிறுவனங்கள், ஓசூர் – 635 130.

நூல் :தேசியம் கண்ட தெசியப்பறவை

பதிப்பகம் : NCBH

செய்தியின் இயல்புகள் | Nature of the News

செய்தியின் இயல்புகள் | Nature of the News

செய்தியின் இயல்புகள்

            ஒன்று செய்தியா இல்லையா வென்பதை முதலில் செய்தியாளர் தீர்மானித்து செய்திகளைச் சேகரிக்கின்றனர். அவர் திரட்டுகின்ற எல்லாம் செய்திகளாக வெளிவருவதில்லை. ஆசிரியர் குழு செய்திகள் எனக் கருதுவதே செய்தித்தாளில் அச்சாகின்றன. செய்தித்தாளில் அச்சாகும் எல்லாவற்றையும் வாசகர்கள் செய்திகளாக எண்ணுவதில்லை. சிலவற்றை தேவையற்றவை என்று படிக்காமல் ஒதுக்குகின்றனர். ஆனால் பொதுவாக ஒன்றைச் செய்தி மதிப்புடையதாகக் கருத அதில் என்னென்ன தன்மைகள் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுக் கூறலாம்.


1. கால அண்மை (Timeliness) :

            செய்திகள் ‘சுடச்சுட’ இருக்க வேண்டும். புதுமலர்களைப் பெண்கள் விரும்புவது போல புதிய செய்திகளையே மக்கள் படிக்க விரும்புகின்றனர். ‘காலம்’ என்பது செய்திக்கு உயிர் மூச்சு; காலம் கடந்த செய்தி உயிரற்ற உடல் போன்றது. அதற்கு மதிப்பு இல்லை.


2. இட அண்மை (Proximity) :

            தங்களுக்கு அருகில், தங்களைச் சுற்றி நடப்பதில் இயல்பாக மக்களுக்கு ஆர்வம் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒருவர் தில்லியில் நடைபெற்ற ஒன்றைவிட சென்னையில் நடைபெற்ற ஒன்றைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டுகின்றார். பக்கத்து மாநிலத்தில் ஆட்சி மாறுவதைப் பற்றிச் சாதாரண மக்கள் கவலைப்படுவதில்லை. தங்களது மாநிலத்தில் அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டால் அதுவே பொதுப் பேச்சாகின்றது.


3.உடனடியானவை (Immediacy) :

            செய்திகளை உடனுக்குடன் தர வேண்டும். முதலில் வரும் செய்திக்கு மதிப்பு அதிகம். ஆதலால் தான் செய்தித்தாட்கள் செய்திகளை முதலில் பெற்று (Scoop) வெளியிடப் போட்டியிடுகின்றன. செய்திகளை முந்தித் தரும் இதழ்கள் மக்களிடம் செல்வாக்குப் பெறுகின்றன.

4. முதன்மையானவை (Prominence) :

            எவை நாட்டில் முதன்மையான இடத்தையும், புகழையும் பெறுகின்றனவோ அவை செய்திகளாகப் போற்றப்படுகின்றன. முதன்மை பெறும் மனிதர்கள்,இடங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை செய்தித்தாளில் இடம் பெறுகின்றன.

5. அளவு (Size) :

            செய்தியின் கருப்பொருள் மட்டுமல்ல, அது தொடர்புடைய மக்களின் பரப்பளவை ஒட்டியும் செய்தியாகின்றது. புகழ்பெற்ற எழுத்தாளரின் இறுதி ஊர்வலத்தில் பத்துப்பேர் மட்டுமே கலந்து கொண்டால் செய்தி ஓர் அமைச்சரை வரவேற்க இருவர் மட்டுமே வந்திருந்தால் செய்தியாகின்றது. முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் யாருடைய இறுதி இறுதி ஊர்வலத்தில், இதுவரை சென்னையில் ஊர்வலத்திலும் கூடாத அளவிற்கு மக்கள் சேர்ந்ததும் குறிப்பிடத்தக்க செய்தியாகின்றது.


6. நிகழ்விடத்திலேயே கிடைப்பவை (Spot News) :

            ஒரு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து நேரடியாக பங்கு பெற்றவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் தரும் செய்தி சிறப்பிடம் பெறுகின்றது. விபத்து நடந்த இரயிலில் பயணம் செய்து, உயிர்த்தப்பியவர், விபத்தைக் கண்ணால் கண்டபடி விவரிப்பது சிறப்புச் செய்தியாகும்.


7. விளைவுகளை உடையவை (Consequences) :

பின் விளைவுகளை ஏற்படுத்தும் எந்த நிகழ்ச்சியும் நடவடிக்கையும் மக்களின் ஆர்வத்தை தூண்டும் செய்திகளாகின்றன. நாட்டுடைமையாக்கினால் பல பொருளாதார வங்கிகளை விளைவுகளை ஒருவரை அந்தச் எதிர்பார்க்கலாம். ஒரு கட்சியில் புகழ்பெற்ற கட்சியிலிருந்து விலக்கினால் அரசியல் விளைவுகள் ஏற்படும்.

8. வியப்புக்குரியவை (Oddity):

செய்தியில் புதுமையானதாக, வியப்பிற்குரியதாக ஏதாவது இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அதனை அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஒருவன் தனது குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரையும் அழித்துவிட்டால் அது நடைமுறை இயல்புக்கு மாறுபட்ட செய்தியாகின்றது.


9. மோதுபவை (Conflict):

முரண்படுபவையும் மோதுபவையும் செய்தியின் தன்மையைப் பெறுகின்றன. மனமொத்து வாழ்கின்ற கணவனும் மனைவியும் செய்தியாவதில்லை. ஆனால் விவாக விலக்கு செய்தியாகின்றது.


10. ஐயப்பாட்டிற்குரியவை (Suspense) :

ஏன், எதனால் நடைபெற்றதென்று வெளிப்படையாகத் தெரியாதவற்றில் செய்திகள் உள்ளன. குற்றங்களைப் பற்றிய செய்திகள் இப்படிப்பட்டவைகளாகும்.


11. உணர்வு பூர்வமானவை (Emotional Appeal):

மக்களின் உணர்வுகளைத் தூண்டக் கூடிய நிகழ்ச்சிகளை உடனடியாக செய்தித்தாட்கள் வெளியிட வேண்டும். இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் சுடப்பட்டதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

குறிப்பு

கட்டுரையானது டாக்டர் மா.பா.குருசாமி அவர்களின் இதழியல் கலை என்னும்  நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

மேலும் பார்க்க…

1.செய்திகள் என்றால் என்ன? What is NEWS?



நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள் | தன்னம்பிக்கை கட்டுரை

நம்பிக்கையுடன்-நடந்து-கொள்ளுங்கள்

நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்

          உலகில் வெற்றி பெறுவது சாதனை படைப்பது போன்றவை தனி ஒரு மனிதரால் செய்ய இயலாது. உதாரணமாக “ஒரு மாணவன் பனிரெண்டாம் வகுப்பில் மாநிலத்தில் முதலிடம். டிவி சேனல்கள் மிக கம்பீரமாகச் செய்திகளைப் பரப்பும். இந்தச் சாதனைக்குக் காரணம் அந்த மாணவன் மட்டுமே அல்ல. அவன் படித்த பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், பாட ஆசிரியர்கள், அவன் பிறந்த ஊர் சூழல், அவனது பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் என்று ஒரு கூட்டமே உள்ளது. எனவே வெற்றி என்பது என் உழைப்பால் மட்டுமே கிடைத்தது என்று ஒருவர் கூறினால் அது உண்மையாகாது. வெற்றி பெற நினைப்பவர் தன்னை சுற்றி இருப்பவர்களின் நேசத்தையும் பாசத்தையும் பெற வேண்டும். அதற்காக அவர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும். மற்றவர்களின் ஆதரவை பெற்றால் மட்டுமே சாதனை படைக்க முடியும்.

நேசத்திற்கு நடிப்பு வேண்டாம்

        மனமானது  ஆணவம், அதிகாரம், பொறாமை, வஞ்சம் போன்ற  தீயவழியில் இழுத்துச் செல்கின்ற இவ்வகை குணங்களை விடுத்து நேர்மை, உண்மை, நட்பு, நன்மை, நேசம், அன்பு, பாசம், பெருந்தன்மை போன்ற நற்குணங்களை மட்டுமே பெற்றிருக்க வேண்டும். நேர்மையான குணங்களைப் பெறுவது எளிதல்ல. வாழ்வில் பல துன்பங்களைச் சந்தித்திருந்தால் மட்டுமே அது சாத்தியம். அவ்வாறு நற்குணங்களைப் பெற்றுள்ள நீங்கள் மற்றவரிடம் நேசமுடன் நடந்துகொள்ள வேண்டும். இனிமையாகப் பேச வேண்டும். சிலர் மற்றவருடன் இனிமையாகப் பேசுவார்கள், ஆனால் வேற்று மனிதரிடம் அவர்களைப் பழித்துப் பேசுவார்கள். தெளிவாகக் கூறவேண்டுமென்றால் மற்றவரிடம் நேசம் கொள்வதைப்போல நடிப்பார்கள். ஒன்றை கவனியுங்கள். நடிப்பு என்பது சினிமாவிற்கு ஒத்து வருமே தவிர வாழ்கைக்கு அது ஆகாது. நடிப்பும் நீண்ட நாட்களுக்கு நிகழ்த்த முடியாது. உண்மை வெளிப்படும்போது மதிப்பே போய்விடும். மற்றவரின் மனம் நோகாமல் பேச வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஒரு வழியைக் கையாளுங்கள். மற்றவர்களால் உங்களுக்கு கோபம் வருகிறது. அவர்களைத் திட்டவேண்டும் போல இருக்கிறது என்றால் நீங்கள் அவரை பேச நினைக்கும் சொற்களை மற்றவர்கள் உங்கள் மீது பிரயோகித்தால் உங்கள் மனம் எவ்வாறெல்லாம் துன்பமடையும் என்று நினைத்து பாருங்கள். அப்போது மற்றவர்களைக் கடுமையாக பேச தோன்றாது. இதை எப்போதும் கைக்கொண்டால் பிறகு நீங்கள் கடுமையாகப் பேசமாட்டீர்கள் என்றால் இனிமையாக மட்டுமே பேசுவீர்கள்.

      மற்றவருடன் எந்தவித நடிப்பும் இல்லாமல் நேசமுடன் பேச தேர்ந்து விட்டால் நீங்கள் தான் வெற்றியாளர்.

நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்

         இங்கு பேச்சின் மூலம் பலர் சாதனை புரிந்துள்ளனர். மற்றவரின் ஒத்துழைப்பை பெறுங்கள். சிலரிடம் நேசமுடன் பேசும்போது அவர்கள் உங்கள் மீது சில நம்பிக்கைகளை வைத்துவிடுவார்கள் அதற்கு துரோகம் செய்யாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கேட்கும் சிலவற்றையாவது செய்துதர வேண்டும். உங்களுடன் பழகும் சிலர் மனதில் இருப்பதை வெளிப்படையாகக் கூறாமல் நீங்களே புரிந்து கொண்டு செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் அவ்வாறான நபர்களிடம் சிறிது கவனமாக இருக்க வேண்டும். ஒன்று அவர்களுக்கு என்ன தேவை என்பதை குறிப்பாகவோ, மற்றவர் மூலமாக அறிந்து கொண்டு செய்துவிட வேண்டும். இல்லையென்றால் நீங்கள் அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக மனதில் நினைத்துக் கொண்டு கோபத்தை சேர்த்து வெறுப்பை உருவாக்கி உங்கள் மீது உங்களை சூழ்ந்துள்ள மற்றவர்களை பகைகொள்ளுமாறு செய்து உங்களுக்கு எதிராகச் செயல்களை செய்வதற்குத் திட்டங்கள் பலவற்றைத் தீட்டிக்கொள்வர். அதனால் கவனமாக இருக்க வேண்டும். மற்றவருடன் பேசும் போது அவர்களின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். கடுமையான சொற்களைத் தவிர்த்துவிட்டு, உயர்வான சொற்களைப் பயன்படுத்துங்கள்.

துன்பத்தை  மாற்றும் சொற்கள்

        சொற்களைப் பயன்படுத்துவது ஓரு கலை. சிற்பியானவன் உளியைக் கொண்டு சிலையைச் செதுக்குவது போன்றது. சொற்களைக் கையாலும்விதம் உன்னதமானது. படித்த வரலாற்று செய்தி ஒன்று. ஒருமுறை மைசூரை ஆண்ட அரசர் தன்னைவிட சிறிய நாடுகள் மீது போர்தொடுத்துக் கைப்பற்றினார். போர் செய்ய இயலாத குறுநில மன்னர்கள் கப்பம் செலுத்தினர். அவருக்கு வரி செலுத்தாமல் ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டை பெண் அரசியார் ஒருவர் ஆட்சி செய்தார். அரசர் கப்பம் கட்டவேண்டும் இல்லையென்றால் என்னுடன் போர்தொடுக்க வேண்டுமென்று எழுதி அந்த நாட்டின்மீது போர் தொடுப்பதாக ஓலை ஒன்றை அனுப்பி வைத்தார். அதற்கு அந்த அரசியார் பதில் ஒன்று எழுதுகிறாள். “அரசே பணிவான வணக்கங்கள். நீங்கள் விடுத்த ஓலையை பார்த்தேன். அரசே! நீங்கள் பெரிய போர்ப்படை வைத்திருப்பவர். ஆனால் என்னுடையது சிறிய நிலப்பரப்பு. எனவே தங்களுக்குக் கப்பம் கட்ட இயலாது. நான் இவ்வாறு கூறுவதால் நீங்கள் கோபம் கொண்டு படையெடுத்து வாருங்கள். அதைப்பற்றி எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. உங்களுக்கே அவமானம் வந்து சேரும். ஏனென்றால் தாங்கள் என்மீது போர்செய்து வெற்றிபெற்று விட்டீர்கள் என்றால் உலகில் உள்ள அரசர்கள், சிற்றரசர்கள், மக்கள் என்று அனைவரும் இவர் ஒரு பெண்ணுடன் போர்செய்து வெற்றி பெற்றுள்ளார். இது ஒரு வெற்றியா? என்று கேலியாகப் பேசுவார்கள். அவ்வாறில்லாமல் தாங்கள் என்னிடம் மோதி தோல்வியை அடைந்துவிட்டால் போயும்போயும் ஒரு பெண்ணுடன் தோற்றுவிட்டானே இந்த அரசன் என்று தங்களை மிகவும் இழிவாகப் பேசுவார்கள். ஆகவே நீங்கள் என்மீது போர் தொடுத்து வந்தால் ஒரு மாமன்னருடன் மோதுகிறேன் என்ற பெருமை என்னை வந்து சேரும். நான் வெற்றி தோல்வி எதைப்பெற்றாலும் பெருமையே ஆகும். ஆனால் தாங்கள் என்னுடன் மோதி வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் சிறுமை தங்களுக்கே என்பதை நான் தெரிவிக்கின்றேன். இந்த உண்மையை உணர்ந்து கொண்ட பின்னராவது என்மீது போர் தொடுப்பதைத் தவிர்த்து விடுவீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் போரை தவிர்த்து விடுவீர்கள். ஏனென்றால் தாங்கள் எதையும் சிந்தித்தே செய்வீர்கள் என்பதை நான் முன்னரே அறிந்துள்ளேன். மாமன்னர்க்கு வணக்கம்” என்று எழுதி முடித்துவிட்டு ஓலையை தூதுவன் மூலம் அனுப்பி வைத்தாள். அந்த அரசியாருக்கு போர் தவிர்க்கப்பட்டது. கப்பமும் கட்டவில்லை.

       இவ்விடம் அந்தச் சொற்களை எத்தனை சீராக, தந்திரமாகப் அப்பெண் கையாண்டுள்ளார் என்பதை கவனியுங்கள். போரை தவிர்த்தால் மட்டுமே நீங்கள் சிந்தித்து செயலாற்றுபவர் என்று எழுதி அரசரை வேறு வழியில்லாமல் போரைத் தவிர்ப்பதே முடிவு என்ற நிர்ப்பந்தத்திற்கு கொண்டு வந்துவிட்டாள். இதுதான் சொற்களைக் கையாளும் விதம் ஆகும்.

ஆபத்தை உண்டாக்கும் சில சொற்கள்

        வெறுமனே ஒருவருடன் உரையாடாமல் சொற்களைக் கவனமாக கையாளுங்கள். சிலப்பதிகாரம் காப்பியத்தைக் கேள்விப்பட்டு இருக்கலாம். கண்ணகியின் கால்சிலம்பு கோவலன் கையில் பார்த்தவுடனே கள்ளத்தனம் செய்த கொல்லன் கோவலனை கள்வன் என்று கூறுகின்றான். உண்மை அறியாத பாண்டிய மன்னன் “கள்வனைக் கொன்று அச்சிலம்பு கொணர்க” என்று கூறிவிடுகிறான். அதாவது “சிலம்பு கொண்டு அக்கள்வனைக் கொணர்க” என்று கூறப்போய் “கள்வனைக் கொன்று” என்று பாண்டிய மன்னன் விசாரணை செய்யாமலேயே தீர்ப்பை வழங்கிவிடுகிறான். கோவலன் கொல்லப்பட்ட செய்தி கண்ணகியை எட்டுகிறது. அவள் தன் கால்சிலம்பை எடுத்துக்கொண்டு பாண்டியனுடன் வழக்காட வருகிறாள். கண்ணகியைக் கண்ட மன்னன் “யாரையோ! நீ மடக்கொடியோய்?” என்று வினவ” தேரா மன்னா செப்புவது உடையேன்” என்று தொடங்குகிறாள். அதாவது தெளிவில்லாத சரியாகத் தீர்ப்பு வழங்காத மன்னா என்று பொருள். இவ்வாறு சொற்களைக் கையாளுவது என்பது ஒரு கலை. அது வெற்றி அடையும் உங்களுக்கு மிகவும் அவசியம்.

ஆறடி மனிதனையும் பெட்டிப்பாம்பாய் அடங்கச் செய்வது நாக்குதான். அந்த நாவை அடக்கி சொற்களைச் சரியாகக் கையாண்டால் நீங்கள்தான் மிகவும் சிறப்பானவர்.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்.
 

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

9.அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

10.செயல்பாடு உங்கள் மதிப்பை  உயர்த்தும்

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »