நல்லவை கெட்டவைகளைத் தாங்கி
நாட்களும் நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றன!
நல்லோருக்கு வாழ்க்கையில் – சில
நலிவான நிகழ்வுகள்
நடனமாடி செல்கின்றன..!
மாதங்களும்
மாலையில் மலரும்
மல்லிகையாய் மலர்ந்து
மாத ஊதியம் ஒன்றைக் கொடுத்து
மறைந்து விடுகின்றன…!
ஆலின் இலையாய்
ஆண்டுகளும் துளிர்த்து
முதிர்ந்து பழுத்து உதிர்ந்து
சருகாய் சரசரத்துக்
காற்றில் கலந்து கரைகின்றன…!
எங்கே சென்றன
இந்தக் காலங்களெல்லாம்…?
மனித உடலுக்கு
வயதென்னும் பேரில்
சேமிப்பாய் சேர்த்து
அதுவும் செத்து விடுகிறது…!
காணும் காட்சியும்
காலமும் கனவாய் மறைய…
வாழ்ந்த நினைவுகள் மட்டும்
நீண்டு கொண்டே செல்கின்றன
நீல வண்ண கடலாக…
அலைந்த வண்ணம்…!
– கவிஞர் ச. குமரேசன்,
தமிழ் உதவிப் பேராசிரியர்,
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
இராசிபுரம், நாமக்கல்.
கவிஞர் பேரா. ச. குமரேசனின் படைப்புகளைக் காண்க..
Like this:
Like Loading...
Related