Monday, August 31, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home கவிதைகள் வாழ்க்கை அவளிடம் மன்னிப்புக் கேட்கும்|கவிதை|வெ. ஸ்ருதி மால்யா

வாழ்க்கை அவளிடம் மன்னிப்புக் கேட்கும்|கவிதை|வெ. ஸ்ருதி மால்யா

வாழ்க்கை அவளிடம் மன்னிப்புக் கேட்கும்

🧚‍♀️பிறந்த நாளிலிருந்தே
அவளுக்கென்று
அதிர்ஷ்டம் காத்திருக்கவில்லை.

🧚‍♀️அவள் விரும்பியவை
அவளை விட்டு விலகின;
அவள் நம்பியவர்கள்
அவளை விட்டு விலகிச் சென்றார்கள்.

🧚‍♀️திறக்க நினைத்த கதவுகள்
மூடியே கிடந்தன;
ஓட நினைத்த பாதைகள்
முட்களாகவே இருந்தன.

🧚‍♀️மற்றவர்கள்
வெற்றியைப் பரிசாகப் பெற்றபோது,
அவள் மட்டும்
தோல்விகளைச் சுமந்து வளர்ந்தாள்.

🧚‍♀️சில இரவுகளில்
அவள் அழுதாள்!
யாருக்கும் தெரியாமல்.

🧚‍♀️சில காலைகளில்
அவள் சிரித்தாள்!
தனக்கே தெரியாமல்.

🧚‍♀️ “ஏன் எனக்கு மட்டும்?”
என்று கேட்கத் தோன்றிய
ஒவ்வொரு முறையும்,

🧚‍♀️ “இன்னும் முடிந்துவிடவில்லை…”
எனத் தன்னைத் தானே

 தேற்றிக்கொண்டாள்.

🧚‍♀️அவளிடம்
அதிர்ஷ்டம் இல்லை.
ஆனால்,
அவளிடம்
முயற்சி இருந்தது.

🧚‍♀️அவளிடம்
நம்பிக்கை இருந்தது.
அதனால்தான்
ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும்
அவள் மீண்டும் எழுந்தாள்.

🧚‍♀️ஒரு நாள்…
தான் கடந்த பாதையைத்
திரும்பிப் பார்த்து,

🧚‍♀️ “இத்தனை வலிகளுக்கும்
இந்த ஒரு நாள்தானா
விலை?” என்று
கண்ணீரோடு சிரிப்பாள்.

🧚‍♀️அன்று
அவள் வாழ்க்கை
அதிர்ஷ்டத்தால் மாறியிருக்காது—

🧚‍♀️அவள் விடாமல் முயன்றதற்காக
வாழ்க்கையே
அவளிடம் மன்னிப்புக் கேட்கும்.

🧚‍♀️அந்த நாளுக்காகத்தான்
இன்றும்
அவள் விழுந்தாலும் எழுகிறாள்.

🧚‍♀️ஏனெனில்,

அவளின் சிறந்த நாள்..!

கவிதையின் ஆசிரியர்

வெ. ஸ்ருதி மால்யா

அணைப்பாளையம், முதல் வீதி,

கொங்கு மஹால் அருகில்,

திருப்பூர் 641603

வாழ்க்கை அவளிடம் மன்னிப்புக் கேட்கும் PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »