🧚🏻♀️நான் காத்திருக்கிறேன்
யாருக்காகவும் அல்ல!
என்னுள் இன்னும் பிறக்காத
எனக்காக.
என்னை உடைத்த காலங்களை..!
🧚🏻♀️நான் வெறுக்கவில்லை
அவைதான் என் வேர்களை
ஆழமாக்கின.
சில நேரங்களில்..!
🧚🏻♀️நானே வற்றிய நதியாகி
நின்றிருக்கிறேன்.
ஆனாலும் என் ஓட்டத்தை
நான் மறந்ததில்லை..!
🧚🏻♀️எத்தனை பாறைகள் குறுக்கிட்டாலும்,
என் பாதையை
நானே செதுக்குவேன்..!
🧚🏻♀️நதி ஒருபோதும்
கடலைத் தேடி
அழுவதில்லை
அது ஓடிக்கொண்டே இருக்கும்..!
🧚🏻♀️இருள்
இன்னும் அடரட்டும்
என் நட்சத்திரம்
அதன் பின்னால்தான்
பிறக்கிறது..!
🧚🏻♀️என் சிறகுகள்




