Wednesday, June 3, 2026
Home Blog Page 7

Naalaayira Thivviyap Pirapanthamum Vainava Uraiyasiriyarkalum|T.Elumalai

Abstract
        The writers who have emerged as the fountains of knowledge that have led to the change and rise of the Tamil language are the ones who have enriched themselves with their powerful and captivating texts, capturing the subtle ideas in the texts in a way that makes the readers understand them. At the same time, it can be said that ‘those who have preserved the language by capturing and interpreting the Tamil texts and their greatness in a way that makes others understand them’1. We know that such writers have displayed their profound knowledge of grammar and literature in their texts. In this regard, the purpose of this research article is to examine the news about those who have seen texts in the world of Vaishnava literature.


“நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும் வைணவ உரையாசிரியர்களும்”

ஆய்வுச் சுருக்கம்        
      தமிழ் மொழியின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் ஊற்றெடுக்கும் அறிவு திறல்களாக வளம் வந்தவர்கள் உரையாசிரியர்கள். நூல்களில் உள்ள நுட்பமான கருத்துக்களை படிப்பவர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் எடுத்து இயம்பக் கூடிய ஆற்றல் உடைய உரைவீச்சுகளால் உள்ளம் கவர்ந்தவர்கள்.அதே நேரத்தில் ‘தமிழ் நூல்களையும் அதன் அருமை பெருமைகளையும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் எடுத்து உரைத்து மொழி காத்தவர்கள் எனக் கூறலாம். அத்தகைய உரையாசிரியர்கள் இலக்கணத்திற்கும் இலக்கியத்திற்கும் ஏற்றவாறு தம் நுன்மான் புலமையை வெளிப்படுத்தியுள்ளமையை     அவரவர்  உரைகளே சான்றாக இருக்க அறிகிறோம். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில்  வைணவ உரையாசிரியர்களின் பங்களிப்பு குறித்து  ஆராய்வது இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

திறவுச்சொற்கள்
      
                 பெரியவாச்சான் பிள்ளை  – வைணவம் – வைணவ உரை – ஆழ்வார்கள் – நாலாயிர திவ்விய பிரபந்தம் – உரை ஆசிரியர்கள்- திவ்யம் – நன்மை.

முன்னுரை
                 
           திருமாலிய வழிபாட்டை முன்னிறுத்திப் பாடப்பட்டப் பாசுரங்களைக் கொண்டது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். ‘பிரபந்தம்’ என்பது நன்றாகக் கட்டப்பட்டது எனப்பொருள்படும்.  ‘திவ்வியம்’ என்பது ‘நன்மை, தெய்வத்தன்மை’ எனவும் பொருள்படும். எனவே இறைத்தன்மை பொருந்திய பாசுரங்களின் தொகுப்பே ‘திவ்வியப்பிரபந்தங்கள்’ ஆகும்2. ‘நாலாயிரம்’ என்பது பாசுரங்களின் எண்ணிக்கையாகும் திருமாலின் இயல்புகளையும் அவரது அருட்தன்மைகளையும் அடியார்கள் கொண்டிருக்கும் அளப்பறிய பக்தியினால் தமக்குடனான ஈடுபாட்டையும் எடுத்துரைக்கும் பெட்டகமாக விளங்குகிறது.
       இதனை திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளி எழுச்சி,அமலணாதிபிரான்,கண்ணிநுண் சிறுத்தாம்பு, பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திரு நெடுந்தாண்டகம், முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி,மூன்றாம் திருவந்தாதி, நான்காம் திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் ,திருவாய்மொழி என முறைப்படுத்தப்பட்டு தொகுத்தவர் நாதமுனிகள் என்றாலும் அவற்றை நன்கு படித்து பிறர் அறியும் வண்ணம் உரை வகுத்துக் கொடுத்தவர்கள் வைணவ உரையாசிரியர்கள் எனலாம். அவர்கள் வைணவ மரபுகளை பின்பற்றி வாழ்ந்து  வழிபாட்டு முறைமைகளை நன்கு உணர்ந்தவர்களாக இருந்துள்ளனர். மேலும் தமிழ் மற்றும் வடமொழி புலமை மிக்கவர்களாகவும் இருந்தமையால் மணிப்பிரவாள நடையில், உரை நூல்களைத் தந்துள்ளனர். பாசுரங்களுக்குரிய வகையில் சொற் பொருள் விளக்கம், பொருள் நயம், வினா-விடை போக்கு, உவமை நயங்கூறுதல், பிற நூல்களை ஏற்ற  இடங்களில் மேற்கோள் காட்டி விளக்குதல் ஆகியவற்றில் தலை சிறந்தவர்களாக இருந்திருக்கின்றனர்.  அத்தகைய வைணவ உரையாசிரியர்கள் பற்றிய பதிவுகளாக இக்கட்டுரை அமைகிறது.

வைணவ உரை முன்னோடிகள்
  
       ஆழ்வார் பெருமக்களால் அருளிச் செய்யப்பட்ட பாசுரங்களை தமது அனுபவத்தால் உணர்ந்து அறிவால் ஆராய்ந்து நுட்பமாகவும் திப்பமாகவும் தெள்ளத் தெளிவாக தமக்கே உரிய வகையில் எடுத்து வாய் வழியாக உரை விளக்கம் தந்தவர்களான  குரு பாரம்பரிய வழி நின்ற ஆச்சாரியர்களான நாதமுனிகள், ஆளவந்தார், இராமானுஜர், எம்பார், கூரத்தாழ்வார், திருவரங்கத்தமுதனார், அனந்தாழ்வான் முதலி ஆண்டான் அம்மங்கி அம்மாள் பிள்ளை திருநறையூரரையர் ஆகியோர் உரை முன்னோடிகளாக கருதப்படுகின்றார்கள்.

வைணவ உரையாசிரியர்கள் 
           
       வைணவ கொள்கைகள் தத்துவார்த்த விளக்கங்கள் சமய மரபுகள் போன்றவற்றை உள்ளடக்கி ஆழங்கால் பட்டநிலையில் அடுத்து வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ளளவும் தெரிந்து அதன் வழி நடக்கவும் பாசுரங்களில் உட்பொதிந்துள்ள கருத்துகளைக் கொண்டு சேர்பதற்குரிய  தேவை ஏற்பட்ட காரணத்தால்,  எழுத்துருவில் உரை விளக்கம் தர வேண்டியது ஆயிற்று. அவ்வாறு நூல் வடிவில் உரை விளக்கம் தந்தவர்களாக  ‘திருக்குருகைப்பிரான் பிள்ளை, பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை,வாரிகேசரி அழகிய மணவாளசீயர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், மணவாள மாமுனிகள் போன்றோரை வைணவ உரையாசிரியர்களாகப் போற்றப்படுகிறார்கள்’3. இவர்கள் யாவரும்  ‘விசிட்டாஅத்வைதம்’ என்று சொல்லப்படுகின்ற வைணவ தத்துவார்த்தங்களை மிகச் சிறப்பாக தத்தமக்குரிய அனுபவ இயல்புகளை யதார்த்தமாக எடுத்து கூறி, படிப்பவர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் உரைவீச்சுகளுக்கு உரியவர்களாக இருக்க அறிகிறோம்.

உரைகளின் சிறப்பு      
          பாசுரங்களுக்கு  உரை இயற்றிய வைணவப் பெரியோர்கள் தாம் கற்ற கலைகள் அனைத்தையும் தம் உரைகளில் வழங்கிச் சென்றுள்ளனர். அப்பெரியவர்களின் இதய ஒலிகள் பலப்பல வகையாய் உரைகளின் வாயிலாக வெளிப்படுகின்றன. பாடல்களின் ஆழ்ந்த பொருள்களை மிக்க நயம்படப் புலப்படுத்தி எழுதியுள்ளனர். மிக அரிய செய்திகளும் விளக்கங்களும், நுண்கலைச் சொற்களும் உரைகளில் பொதிந்து கிடக்கின்றன. இவ்வுரைகள் தனி இலக்கியமாகவும், வைண சமய தத்துவ விளக்கமாகவும் போற்றப்படுகின்றன. பிற்காலத்தில் வைணவர்கள் ஆழ்வார்களின் பாடல்களைவிட, உரைவிளக்கங்களையே சிறந்தவையாகக் கருதிப் பின்பற்றினர். விளக்கம் கூறிச் சமயக் கருத்துக்களைப் பரப்ப உரைகளையே ஏற்று சான்றுகளாகக் கொண்டனர் என்பதற்க்கு சான்றாகும். திவ்வியப் பிரபந்த உரையாசிரியர்களின் சிறப்பை டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர், “அவர்களுடைய உரையில் ஒரு பாடலுக்கு உரை கேட்டு விட்டால் மனம் வேறு ஒன்றில் செல்லாது”4 என்று கூறிப் புலப்படுத்துகின்றார். (சங்கத் தமிழும் பிங்காலத் தமிழும், ப.162) என்பது கூறத்தக்கது.

நடையும் மொழியும்
      
          வியாக்கியானங்கள் பேச்சு நடையில் அமைந்துள்ளன. கொச்சை மொழிகள் விரவியுள்ளன. இவற்றிலும் ஒருவகை அழகும் ஆற்றலும் வெளிப்படுகின்றன. கணக்கற்ற பழமொழிகள் வகைவகையான மரபுத் தொடர்கள், நல்ல நல்ல நாட்டுப்புறக் கதைகள், சுவையான பழக்க வழக்கங்கள், வியப்பூட்டும் நிகழ்ச்சிகள் ஆகியவை வியாக்கியானங்களில் நிரம்பியுள்ளன என அறிகிறோம்.

மணிப்பிரவாள நடை      
          ‘வெண்ணிற முத்துமணிகளையும் செம்பவளங்களையும் கலந்து முத்தும் பவளமும் ஒன்றன்பின் ஒன்று வருமாறு அமைத்து மாலை கட்டுவதுபோல, வடமொழிச் சொற்களைத் தமிழ்மொழியுடன் இடையிடையே கலந்து எழுதும் இலக்கிய நடை மணிப்பிரவாள நடை என்று பெயர் பெற்றது’5. இருவேறு தனி இயல்புகளை உடைய இரு மொழிகளை ஒன்று சேர்க்கும் முயற்சியில் பிறந்ததே இந்நடையாகும். மணிப்பிரவாளம் என்ற தொடரில் உள்ள மணி முத்தையும். பிரவாளம் பவளத்தையும் குறிக்கும். தமிழ், வடமொழி இரண்டனுள் எது முத்து. எது பவளம் என்ற வினாவை எழுப்பி விடை காண்பது வீண் வேலையாகும். முத்து, பவளம் இரண்டும் விலையுயர்ந்த பொருள்களே வடமொழி, தமிழ் இரண்டையும் சிறப்பாகக் கருதியவர்களே மணிப்பிரவாள நடையைத் தோற்றுவித்தனர் என அனுமானிக்க இடம் அளிக்கிறது.
   மணிப்பிரவாள நடையில், வட சொற்களும் தொடர் மொழிகளும் தமிழுடன் விரவிவரும். தமிழில் உள்ள இடைச்சொற்களும் வினைமுற்று எச்சங்களும் வந்து கலக்கும் வடமொழி வினைச் சொற்களும் வந்து சேரும், வடமொழிப் பெயர்ச்சொற்கள் வடமொழி வேற்றுமை உருபேற்று வழங்கும் பிராகிருதமொழிச் சொற்களும் இடம்பெற பார்க்கமுடிகிறது.

நாதமுனியின் வழித்தோன்றல்
       
        வீர நாராயணபுரத்தில் வாழ்ந்த நாதமுனியின் மைந்தர் ஈசுவரமுனி, ஈசுவர முனியின் மைந்தர் ஆளவந்தார். ஆளவந்தாருக்கு யமுனைத் துறைவர் என்ற பெயரும் உண்டு. ஆளவந்தார் வைணவ ஆசாரியர்களில் சிறப்புடன் விளங்கினார். இவருக்குச் சீடர் பலர் தோன்றினர் என்றும் கூற அறிகிறோம்.

ஆறாயிரம் படி
     
            நாதமுனிகள் காலம் முதல் இராமானுசர் காலம் வரை, திருவாய் மொழிக்கு வாய்மொழி வாயிலாகவே உரைகள் கூறப்பட்டு வந்தன. ஆறாயிரப்படியே முதன் முதலில் எழுத்து வடிவில் தோன்றிய திருவாய்மொழி வியாக்கியானம். இதுவே பிற்கால வைணவ உரைகளுக்குத் தோற்றுவாய். இதனை இயற்றியவர், ஆளவந்தாரின் சீடராகிய பெரிய திருமலை நம்பியின் புதல்வாரன பிள்ளான் என்பவர். பிள்ளான் 1062 இல் தோன்றினார். இவர் இராமானுசரின் உள்ளங்கவர்ந்த நன் மாணாக்கர், ஆசானின் குறிப்பறிந்து நடந்து கொண்ட சீடர் என்று தெரிந்துக் கொள்ளமுடிகிறது. மேலும்,
       இராமானுசரின் கட்டளையை மேற்கொண்டு இவர். 6000 படி என்ற வியக்கியானம் இயற்றினார். இவரது வியாக்கியானத்தைக் கண்டு மகிழ்ந்து இராமானுசர் இவருக்கு (நம்மாழ்வார் நினைவாக) ‘திருக்குருகைப் பிரான்’ என்று பெயரிட்டார்’6. 6000 படியின் பெருமையையறிந்து, “யாம் செய்த ஹ பாஷ்யத்தைப் போலவே, இதுவும் காலட்சேபத்தில் வைக்கப்படுவதாக” என்று பணித்தார் இராமானுசர்.

பராசரபட்டர்
        
         கூரத்தாழ்வாரின் மைந்தர். கி.பி.1123 -ல் பிறந்தவர். இராமானுசரின் சீடர் ஆன பின், இவருடைய கீர்த்தி விளங்கி வரும் காலத்தில் வடநாட்டிலிருந்து மாதவசூரி என்னும் வேதாந்தி, அனைவரையும் தர்க்கத்தில் வென்று மிக்க சிறப்போடு திருவரங்கம் வந்தார். அவரைப் பட்டர் சென்று பார்த்து வெற்றி கொண்ட செய்தியை நஞ்சீயர் வரலாற்றால் அறியலாம். தோற்ற அந்த வேதாந்தியே இவருடைய மாணாக்கராகி, நஞ்சீயர் என்று பெயர் பெற்றார் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பட்டர் திருநெடுந்தாண்டக வியாக்கியானத்தில் மிகவும் வல்லவர். அதிலும் சிறப்பாக 21 ஆவது பாடலாகிய,
“மைவண்ண நறுங்குஞ்சிக் குழல்பின்தாழ”7
என்ற பாடலுக்கு மிகவும் விரிவாகப் பிரசங்கம் செய்த்தான செய்தியும் அறியலாகிறது.

மணவாள மாமுனி
         
       இராமானுசருக்குப்பின், ஆசாரியார் பரம்பரையில் சிறப்புடன் விளங்கியவர் மணிவாள மாமுனிகள். ஐவர் ஆழ்வார் திருநகரியில் 1370 இல் (சாதாரண ஆண்டு, ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் தோன்றினார். பெரியாழ்வார் திருமொழிக்கும், இராமானுச நூற்றந்தாதிக்கும் விளக்கம் எழுதிப் புகழ் பெற்றவராகக் காணப்படுகிறார்.

ஆழ்வார் பாடல்களும் ஆசாரியார்கள் விளக்கமும்
        
      திருவாய்மொழிக்கு வியாக்கியானங்கள் L160 தோன்றியது போல, திருவிருத்தத்திற்கும் ஐந்து உரைகள் தோன்றியுள்ளன. “நம்பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை அழகிய மணவாள சீயர் அப்பிள்ளை பெரிய பரகால சுவாமி ஐவரும் விளக்கவுரை கண்டுள்ளனர். இவற்றுள் இப்போது பெரியவாச்சான் பிள்ளை விளக்கம் ஒன்றே கிடைக்கின்றது. அப்பிள்ளையுரை, முதல் பதினைந்து பாடல்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது”8. ஏனையவை மறைந்து விட்டன. (பூவராகம் பிள்ளை, கரந்தைக் கட்டுரைகள், ப.274). நம்பிள்ளை திருவாய்மொழிக்கு ஒன்பதாயிரப்படி (நஞ்சீயர் கூறிய விளக்கவுரை) எழுதி அருளியதோடு நம்மாழ்வாரின் பெரிய திருமொழி, திருவிருத்தம் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளி எழுச்சி ஆகியவற்றிற்கு விளக்கம் எழுதியுள்ளார் என்பது தெரியலாகிறது.
நஞ்சீயர் மதுரகவியாழ்வாரின் கண்ணிநுண் சிறுதாம்புக்கு இயற்றியுள்ளார். மேலும், ஆண்டாளின் திருப்பாவைக்கு ஈராயிரப்படி, திருப்பல்லாண்டு வியாக்கியானம் ஆகியவற்றை அருளி இருக்கின்றார். அதுபோல, அழகிய மணவாள சீயர் திருவிருத்த வியாக்கியானம் இயற்றியுள்ளார். மேலும், அவர் தீபப் பிரகாசிகை, கீதா சாரம் முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார். இப்பெரியார் சோழவள நாட்டில், திருவெள்ளியங்குடி என்கிற திவ்விய தேசத்திற்கு ஒரு கல் தொலைவில் உள்ள, சேங்கநல்லூர் எனும் ஸ்தலத்தில் கலி 4329 சர்வஜித்து ஆவணி மாதம் ரோஹிணி நட்சத்திரத்தில் (க்ருஷ்ணபகவான் திருவவதரித்த அத்தத்தின் பத்தாநாளில்) அவதரித்தார். இவர் கி.பி.1228 ல் பிறந்தார் என்பது வரலாறு. பெரியவாச்சான் பிள்ளை, நாலாயிர திவ்வியப் பிரபந்தம் முழுமைக்கும் வியாக்கியானம் எழுதி வியாக்கியான சக்ரவர்த்தி என்னும் புகழைப் பெற்றார். இவரைக் குருபரம்பரா பிரபாவம், ‘அநந்தரங்கம் பிள்ளை பெரியாழ்வார் திருமொழி முதலான ஆழ்வார்கள் அருளிச் செயல்களுக்கு எல்லாம் வியாக்கியானம் செய்தருளி லோகத்தை வாழ்வித்தருளினார்”9 என்று புகழ்ந்து கூறுகின்றது.
        
     இவர்களேயன்றி இவர்கள் காலத்திற்குப் பின்னும் பல சான்றோர்கள் தோன்றி, ஆழ்வார்கள் பாடலுக்கு உரை எழுதியதோடு வைணவ தத்துவப் பொருளை விளக்கிக் கூறும் நூல்களை இயற்றினர். அவர்களில் பிள்ளை லோகாச்சாரியார், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகர், அழகிய மணவாளப் பெருமான் நாயனார் போன்றோர்களையும் உன்டாக்குவர்.

செய்யுள் வடிவ உரை
         
        நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பொருளைச் சுருக்கமாய் மதுரகவியாழ்வார் “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்ற பகுதியில் பாடித்தந்துள்ளார். கம்பர் இயற்றிய ‘சடகோபர் அந்தாதி’ நம்மாழ்வாரைப் போற்றிப் பாடுகின்றது. திருவாய்மொழிப் பதிகம் ஒவ்வொன்றின் கருத்தையும் சுருக்கி வெண்பா ஒன்றில் அமைத்துப்பாடும் நூல், திருவாய்மொழி நூற்றந்தாதி இருப்பதாக அறியலாகிறது.

தனியன் உரை
        
        திவ்வியப் பிரபந்தத்தில், ஒவ்வொரு நூலின் முன்னும் பின்னும் சிறப்புப் பாயிரப்பாடல் ஒன்றோ பலவோ உள்ளன. இவை நூலின் கருத்தைச் சிறப்பிக்கின்றன.நூலியற்றிய ஆழ்வார்களைச் சிறப்பிக்கின்றன. இவற்றைத் ‘தனியன்’ என்று கூறுவது வழக்கம், நூலுள் சேராமல், தனித்து நிற்றலின் தனியன் என்ற காரணப் பெயரால் வழங்குகின்றது. தனியன்கள் எல்லாவற்றிற்கும் பிள்ளை லோகாசார்ய ஜீயர் சிறந்த உரை இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குரு பரம்பரா ப்ரபாவம்
       
   மணிப்பிரவாள நடையில் வைணவச் சான்றோர்கள் ஆழ்வார்களின் பாடல்களுக்கு எழுதிய வியாக்கியானங்களோடு, ஆழ்வார்களின் வரலாற்றையும் வைணவத்தை வளர்த்த ஆசிரியர்களின் தொண்டையும் வியாக்கியானம் எழுதிய உரையாசிரியர்களின் அருட்செயல்களையும் விளக்கிக்கூறும் குருபரம் பரா ப்ரபாவம்’ என்னும் உரை நடை நூல்களையும் இயற்றியுள்ளனர். குருபரம்பரையைக் கூறும் நூல்கள் வைணவச் சான்றோர்களின் வாழ்க்கையை, வரலாற்றுப் பின்னணியுடன் வாய்மொழிக் கதைகளை இணைத்துத் தெய்வீக நிகழ்ச்சிகளோடு தொடர்புபடுத்திக் கூறுகின்றன. கற்பவர் உள்ளத்தில் வைணவச் சான்றோரிடம் பெருமதிப்பும் பக்தியும் ஏற்படுத்தும் வகையில் அவை அமைந்துள்ளன. அது நூல்களில் இலக்கியச் சுவையும் நயமும் உண்டு.
        குருபரம்பரையைக் கூறும் நூல்கள் பல உள்ளன. பின் பழகிய பெருமாள் சீயர் இயற்றிய (6000 படி) குருபரம்பரையே காலத்தால் முற்பட்டது. பலவகை நயங்களால் சிறந்து விளங்குவது அந்நூல் வைணவச் சான்றோர்களாலும் தமிழ் அறிஞர்களாலும் பெரிதும் போற்றப்படுகின்றது. நம்மாழ்வார் பாடியுள்ள திருவாய் மொழிக்குப் பலர் உரை வகுத்துள்ளனர். அவ்வாறு உரை வகுத்து அதனைக் காத்தருளிய உரைகாரர்தம் பெருமையினைப் பின்வரும் வெண்பா ஒன்று வெளிப்படுத்துகின்றது.

“பிள்ளான்நஞ் சியர் பெரியவாச் சான்பிள்ளை
தெள்ளார் வடக்குத் திருவீதிப் பிள்ளை
மணவாள யோகிதிரு வாய்மொழியைக் காத்த
குணவாளர் என்றுநெங்சே கூறு.”
    பிள்ளான் ஆறாயிரப்படியையும், நஞ்சீயர் ஒன்பதினாயிரப் படியையும். வாதிகேசரி அழகியமணவாளச்சியர் பன்னீராயிரப் படியையும், பெரியவாச்சான் பிள்ளை இருபத்துநாலாயிரப் படியையும், வடக்குத் திருவீதிப் பிள்ளை முப்பத்தாறாயிரப் படியையும் இயற்றினர். முப்பத்தாறாயிரப்படியினை ‘ஈடு’ என்று கூறிச் சிறப்பிக்கும் வைணவ உலகம். இவை இவ்வாறு இருக்க, ஆழ்வார்கள் பாடியருளிய பாடல்கள் எல்லாவற்றிற்கும் உரையெழுதியவர் பெரியவாச்சான்பிள்ளை ஒருவரே. ஆண்டாள் பாடியுள்ள திருப்பாவைக்கு அவர் வகுத்துள்ள வியாக்கியானம் மூவாபிரப்படி என்று குறிப்பிடப்பெறும்.

முடிவுரை  
       வைணவ உரையாசிரியர்களால் இயற்றப் பெற்ற பேருரைகளாகிய வியாக்யானங்கள்’ அவர்கள் தென்சொற் கடந்து வடசொற்கலைக்கு எல்லை தேர்ந்த அருளாளர்களாக விளங்கியதால் வடசொற்களும் தமிழ்ச் சொற்களும் விரவிக் கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதினார்கள். உளவியல் சார் மாற்றங்களை மையப்படுத்தி, நடைமுறை சார்ந்த கருத்துக்களோடு தத்துவார்த்தங்களை தகுந்த இடத்தில் புகட்டி கூறும் போக்கு இவர்களின் உரைகளில் வெளிப்படுவதைக் காண முடிகிறது, இக்கட்டுரையினை  தொடர்ந்து  இன்னும் பல கோணங்களில் ஆராய  முடியும்.

சான்றெண் விளக்கம்
1.தெ.ஞானசுந்தரம், வைணவ உரைவளம் ப.29

2.பி.ஆர்.நரசிம்மன், வைணவ மரபும் மெய்ப்பொருளியலும், ப.107

3.மா.பெ.சீனிவாசன், திவ்விய பிரபந்த இலக்கிய வகைகள், ப.130

4.சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், ப.162

5.மு.வரதராசனார், மொழிவரலாறு, ப.134

6.கிருஷ்ணசாமி ஐயங்கார், திருவாய்மொழி வியாக்கானம், ப.318

7.திருநெடுந்தாண்டகம் வியாக்கானம், ப.221

8.பூவராகம் பிள்ளை, கரந்தைக் கட்டுரை, ப.274

9.அநந்தரங்கம் பிள்ளை, பெரியாழ்வார் திருமொழி, ப.53
                                                                          
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
தீ.எழுமலை

முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர்

தமிழாய்வுத்துறை

கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி
 
திருவண்ணாமலை.

Iniyavaikatral peer reviewedநெறியாளர்
முனைவர் ந. குப்புசாமி
இணைப்பேராசிரியர்  & நெறியாளர்

தமிழாய்வுத்துறை

கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி

திருவண்ணாமலை.

இணை நெறியாளர்
முனைவர் மு.கலைமாமணி
இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
தமிழ்த்துறை

கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி

திருவண்ணாமலை.

Prabanchan Puthinagalil Panmuga Nokku|N.Ekambal Latha

Abstract
        
        Literature not only regulates life but also carries our culture, culture, civilization and arts from one generation to the next. From Sangam period literature to contemporary literature, this work is done by Shiva. In that way the creator Panchanan has also used literary elements in his works. The purpose of this review is to examine how the author has created his thoughts and ideas with literary characteristics. In his novels, he has created literary taste stories and storytellers. His stories are full of great commentary, similes and series of ideas, all of which bring out his creativity and have a literary character.


“பிரபஞ்சன் நாவல்களில் இலக்கியக்கூறுகள்”

ஆய்வுச் சுருக்கம்
         
     இலக்கியங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்துவதோடு அல்லாமல் ஒரு தலைமுறையினரிடமிருந்து அடுத்த தலைமுறைக்கும் நம் பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம், கலைகள் அனைத்தையும் கொண்டு சேர்க்கின்றன. சங்க கால இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை இப்பணியைச் செவ்வனே செய்கிறன. அந்த வகையில் படைப்பாளர் பிரபஞ்சன் அவர்களும் தம் படைப்புகளில் இலக்கியக் கூறுகளைக் கையாண்டுள்ளார். ஆசிரியர் தன் எண்ணங்களைக் கருத்தோட்டங்களை எவ்வாறு இலக்கியம் பண்புகளோடு படைத்துள்ளார் என்பதனை ஆய்வு செய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம் ஆகும். தம் நாவல்களில் இலக்கியச் சுவைபட கதைகளையும் கதைமாந்தார்களையும் படைத்துள்ளார். இவரின் கதைகளில் இடம் பெரும் வருணனைகள் உவமைகள் மற்றும் சீரிய கருத்துக்கள் அனைத்தும் இவரின் படைப்பாற்றல்  திறனை வெளிக்கொணர்வதோடு இலக்கியம் பாங்கினையும் கொண்டுள்ளன.

திறவுச்சொல்          
பண்புக்கூறுகள் – இயற்கை வருணனைகள் – தலைவன் தலைவி – குடும்ப வாழ்க்கை – நட்பு – விருந்தோம்பல்.

முன்னுரை
         
       எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுத்துலகில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர் என்பதில் ஐயமில்லை. தன் நாவல்களில் தன் சிந்த்தனையை வெளிப்படுத்துவதோடு இலக்கியச் சிந்தனையையும் பதித்துள்ளார். இலக்கிய இலக்கண மரபுகளையும் மறவாமல் தான் கருத்துக்களோடு பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்கள் கூறும் வாழ்வியல் கூறுகளையும் தான் நாவல்கள் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். இவரின் நாவல்கள் ஒவ்வொன்றிலும் இலக்கியப் பண்புகளும் வரலாற்றுக் கதைகளும் இடம் பெற்றுள்ளன. அப்பண்பு நலன்கள் பற்றி இக்கட்டுரையின் மூலம் அறியலாம்.

நாவலின் பண்புக் கூறுகள்
         
       சங்க இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் கூறுகள் மற்றும் அறக்கருத்துக்கள் அனைத்தையும் ஆசிரியர் தம் நாவலில் உள்ளடக்கியுள்ளார். நாவலின் தொடக்கம் என்பது ஓர் இயற்கை அழகுமிக்க வருணனை பொழுதாக வடித்துள்ளார். பொழுது புலர்வதை தான் கற்பனையில் ஏற்றிக் குறிப்பிடுவது மிகவும் சிறப்பு. காதல் பற்றிய செய்திகளை ஆசிரியர் குறிப்பிடும் போது கதைமாந்தர்களின் மாண்பு பெரிதும் மதிக்கப்படுவதாகவும் போற்றப்படுவதாகவும் உள்ளன. காதல் என்பது தலைவன் தலைவியின் உணர்ச்சியின் ஊடுருவல் மட்டும் அல்ல. அது இருமனங்கள், இருவரின் தனித்தன்மையைப் போற்றப்படுவது என்ற கருத்தினை மையப்படுத்தியுள்ளார்.

நாவலில் இயற்கை வருணனைகள்       
      நாவலில் இயற்கை வருணனைகள் பற்றிய செய்திகளைக் குறிப்பிடும் போது மிகவும் கலைநுணுக்கத்தோடு வெளிப்படுத்தியுள்ளார். காதல் மற்றும் வீரம் சார்ந்த பாடல்களில் இயற்கையானது ஒரு முக்கியப் பின்னணியாக விளங்குகிறது. இயற்கையை ஆசிரியர் கையாளும் முறையானது இயற்கையின் கூறுகள் உவமைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இயற்கை என்பது இயல்பானது. மனித சக்தியில்லாமல் தானே தோன்றியப் பொருள்கள் அனைத்தும் இயற்கை எனப்படும். இதனைத் தொல்காப்பியத்தில் காணமுடிகிறது.

“நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்”1 
         
‘பிறந்த இடம் நோக்கி’ என்ற குருநாவலில் அதிகாலைப் பொழுது புலர்வதை,

“வெள்ளை வேட்டியில் நீலம் தோய்த்து மாதிரி இருள் கொஞ்சம் கொஞ்சமாக
விலகி வெளிச்சம் பரவிக் கொண்டிருந்த அதிகாலைப் பொழுது”2
என்று நாவலின் தொடக்கமாக உருவாக்கியுள்ளதை, இவரின் கற்பனைத் திறனை வெளிக்காட்டுகிறது.

தலைவன் – லைவி பற்றியச் செய்திகள்       
        சங்க இலக்கியங்கள் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டதாகும். தன்னுடைய நாவலில் தலைவன் தலைவியின் அன்பு கலந்து அகவாழ்க்கை பற்றிக் கூறும் போது தலைவியின் அழகு மற்றும் பண்புநலங்கள் பெரிதும் போற்றப்படுவதாக உருவாக்கியுள்ளார்.  தலைவன் பற்றிய காதல் செய்திகளைக் குறிப்பிடும் போதும் தலைவனின் நேர்மை மற்றும் உயர்ந்த நற்குணங்களை மதிக்கப்படுவதாகப் படைத்துள்ளார்.
          “காதலெனும் ஏணியிலே” என்ற நாவலில் தலைவியின் பண்பு நலன்கள் மிகவும் மதிக்கத்தக்கதாகச் சித்தரித்துள்ளார். தன் தோழனின் இன்பம், துன்பம் அவரின் விருப்பத்தினை ஏற்று வாழ்வில் உயர்த்துவது தான் என்ற கருத்தினையும் பதித்துள்ளார். இது காதலின் உயர்ந்தப் பண்பினையும் மாண்பினையும் காட்டுகின்றன. இக்கருத்தினைக் குறுந்தொகையில் தலைவியின் உண்மைக்காதல் உள்ளத்தே நிறைந்துருந்தமைப் பற்றி,

“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே”3 
         
  என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன. ஆசிரியர் பிரபஞ்சன் அவர்களும் ஒரு பெண்ணின் உண்மைக்காதல் பற்றித் தம் கதையில் சித்தரித்துள்ளார்.

சங்ககால குடும்ப வாழ்க்கை 
         
        கணவன்-மனைவிக்கு இடையேயான அன்பு, அறம் மற்றும் அருங்குணங்கள் இல்வாழ்க்கையின் பயன் என சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இக்கருத்தினை ஆசிரியர் தன் நாவலில் குறிப்பிட்டுள்ளார்.
          ‘எனக்குள் இருப்பவள்’ என்ற நாவலில் பெண்மையைப் போற்றியும் பெண்மைக்கே உண்டான அன்பு, அறிவு, பொறுமை போன்ற குணநலன்களைக் கதாப்பாத்திரங்களின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். கணவன் மனைவி ஆகியோரைச் சுற்றியுள்ள உறவினர்களின் பங்களிப்புப் பற்றியும் நாவலில் அழகாக எடுத்தாண்டுள்ளார். திருமணம் பற்றியும் ஒரு பெண்ணின் பெருமை திருமணப் பந்தத்தில் தான் உள்ளது என்பதனைத் தன் கதையின் வாயிலகச் சமூகத்திற்கு உணர்த்தியுள்ளார்.

“கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளர்க்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குறி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”4
         
      கற்பு வாழ்க்கை என்பது ஊரார் அறிய பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு தலைவனும் தலைவியும் வாழும் அன்பு வாழ்க்கை என்று தொல்காப்பியம் உணர்த்துகிறது. இக்கருத்தையே ஆசிரியரும் ‘பிறந்த இடம் நோக்கி’ என்ற நாவலில் எடுத்துக் கூறுகிறார்.

நடப்புப் பற்றியச் செய்திகள்         
      சங்க இலக்கியங்களில் நட்பு பற்றிய செய்திகள் மிகவும் அழகாக எடுத்தாளப்பட்டுள்ளன. புறநானூற்றில் நட்பு என்பது கோபேருஞ்சோழன் பிசிராந்தையாரின் ஆழமான உறுதியான நட்பு பற்றிப் பேசப்படுகிறது.
நட்பின் இலக்கணமாகத் திருவள்ளுவர், தம்முடைய குறளில்

“உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு”5 
         
      என்று குறிப்பிட்டுள்ளார். இருவர் நட்புக்கொள்ளும் போது வெறும்பகட்டினைக் கொண்டு நட்புக் கொள்ளாமல் ஒருவரிடம் வெளிப்படும் பண்புகளை வைத்து அவரிடம் நட்பு கொள்கிற போது அது நல்வழிப்பட்டதாகும் என ஔவையார் பாடல்வழி அறியலாம்.

“இணக்கம் அறிந்து இணங்குக”6
         
      ஆசிரியர் பிரபஞ்சன் அவர்கள் ‘காதலெனும் ஏணியிலே’ என்ற நாவலில் கதைமாந்தார்களான சேதுராமன் ரேகா இவர்களின் நட்பினைப் பற்றி அழகாகவும், ஆழமாகவும் குறிப்பிட்டுள்ளார்.  சேதுராமனின் வளர்ச்சிக்கு ரேகாவின் ஆழமான நட்பும் அன்பும் காரணமாக இருந்தது என்பதனை வெளிக்காட்டியுள்ளார். ஔவையார் அதியமான் நட்பு சுயநலமற்ற நட்புக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். அதே போல சேதுராமன் ரேகா நட்பும் சிறப்பானதாக எடுத்துக் காட்டியுள்ளார் ஆசிரியர்.

தமிழரின் விருந்தோம்பல் பண்பு 
         
       நம் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு என்பது மிகவும் பாராட்டத்தக்க பண்புகளில் ஒன்றாகும். சங்க இலக்கியங்கள் விருந்தோம்பலை ஒரு முக்கிய அறமாகக் கருதுகின்றன. மற்றவர்களுடன் உணவைப் பகிர்ந்துண்ணும் பண்பைச் சிறப்பித்துப் புலவர்கள் ‘பசிப்பிணி மருத்துவர்’ என்று அழைத்தனர். விருந்தினரை நண்பனைப் போல உறவுக்கொண்டு இனிய சொற்களைக் கூறி எலும்பே குளிரும்படியான அன்பால் நெகிழச் செய்ய வேண்டும் எனப் பொருநாரற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கேளிர் போல கேள் கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறி
கண்ணில் காண நண்ணுவழி இரீஈ
பாரூக்கு அண்ணா அருகா நோக்கமோடு”7
         
       என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன. இக்கருத்தை ஆசிரியர் பிரபஞ்சன் அவர்கள் “மகாநதி” என்ற நாவலில் கோவிந்தன் என்பவர் வீட்டிற்கு நாடுசாமம் உதவிக்கேட்டு வரும் பெரியவருக்கும் அவர் மகளுக்கும் முதலில் பருகத் தண்ணீர் கொடுக்கிறார். பின்னர் உணவு வீட்டில் இல்லாத வேளையிலும் தன் மனைவியை உப்புமா சமைத்துப் பரிமாறிப் பசியாற்றியப் பண்பு, நம் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பினை வெளிக்கொணர்கின்றது.

முடிவுரை 
         
       தம் நாவல்களில் சித்தரிக்கப்பட்டுள்ள கதைமாந்தர்களின் பண்புகள் நம் தமிழர்களின் பண்பாட்டையும் வாழ்வியல் கூறுகளையும் சிறப்பித்துக் காட்டுவதாக ஆசிரியர் படைத்துள்ளார். மேலும், நாவல்களில் இலக்கியங்கள் உணர்த்தும் அறக்கருத்துக்களையும் பண்பாடுப் பற்றிய செய்திகளையும் அழகாக எடுத்து இயம்புகின்றார். மனிதன் வாழ்வில் உயர்ந்தவனாகக் காட்டுவது இலக்கியங்கள் குறிப்பிடும் நற்கருத்துக்களை ஏற்று வாழ்வில் கடைபிடிப்பதே ஆகும். இக்கருத்தினைத் தம்  கதைகளின் மூலம் உணர்த்திப் படிப்போரையும் சமுதாயத்தையும் பண்பட செய்வது ஆசிரியரின் சிறப்பாகும்.

சான்றெண் விளக்கம்
1. ஆசான் ம. செந்தமிழ்           – தொல்காப்பியம் மரபியல் ப.91

2. பிரபஞ்சன்                           – பிறந்த இடம் நோக்கி ப.3

3. இரா. அறவேந்தன்               – குறுந்தொகை ப.116

4. க. வெள்ளைவாரணன்        – தொல்காப்பியம் கற்பு ப.140

5. எம். சிவசுப்ரமணியன்          – திருக்குறள் – குறளும் விளக்கவுரையும். 788  
   ப.171

6. நாராயணசாமிபிள்ளை         – ஆத்திச்சூடி ப.20

7. ஞா.மாணிக்கவாசகன்          – பொருநராற்றுப்படை மூலமும் விளக்கமும் ப.60

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ந. ஏகாம்பாள் லதா
Iniyavaikatral peer reviewedபகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை,
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி,
ஆத்தூர் சேலம் மாவட்டம்-636121
நெறியாளர்
முனைவர் அ. சின்னதுரை
இணைப்பேராசிரியர்/நெறியாளர்

தமிழ்த்துறை,

அறிஞர் அண்ணா  அரசு கலைக் கல்லூரி,

ஆத்தூர், சேலம் மாவட்டம்-636121.

 

The Dravidian Movement and Tamil Literature|Dr. A. Sedhupathi

திராவிட இயக்கமும் இலக்கியப் பணியும்
Abstract       
         The writers of the Dravidian movement showed great interest in literary works until they came to power. Social reform and rationality were both included in their works. They looked at the form, content, and reality that are talked about a lot today in a superficial way. Therefore, the reality of the context of the story and the character development did not receive any emphasis. This is the reason why, despite their creativity, the writers of the Dravidian movement were generally not talked about much by literary scholars.


“திராவிட இயக்கமும் இலக்கியப் பணியும்”

முன்னுரை
         
        திராவிட இயக்கப் படைப்பாளிகள் ஆட்சிக்கு வரும்வரை இலக்கியப் படைப்புகளில் மிக ஆர்வம் காட்டினர். சமூக சீர்திருத்தம், பகுத்தறிவு இவை இரண்டும் அவர்களின் படைப்புகளில் உள்ளடக்கமாகியது. இன்று அதிகமாகப் பேசப்படும் உருவம், உள்ளடக்கம், எதார்த்தம் போன்றவற்றை அவர்கள் மேலோட்டமாகப் பார்த்தார்கள். அதனால் கதையின் சூழல், பாத்திரப்படைப்பு ஆகியவற்றின் எதார்த்தம் அழுத்தம் பெறவில்லை. படைப்புத்திறன் இருந்தும் திராவிட இயக்கப் படைப்பாளிகள் பொதுவாக இலக்கியவாதிகளால் அதிகம் பேசப்படாமல் போனதற்கு இதுவே காரணம்.

இலக்கியங்கள் – ஒரு பார்வை
         
         “எண்ண எழிலுக்கு எழில் ஊட்ட எழுத்தாளன் இலக்கிய கலைத்திறன்களை எவ்வண்ணம் புனைந்துள்ளான் என தெரிவு செய்வது மரபு வழிப்பட்ட தெனினும் அம் மரபின் வளர்ச்சியாகவே இன்று படைப்பு முழுவதும் அவன் தனது எண்ணங்களை எவ்வண்ணம் கவினுறுத்தி தந்துள்ளான் என தெரிவு செய்வது நடை ஆய்வின் கோட்பாடு ஆகும்.” ஒரு படைப்பினை முழுமையாக நோக்க நடையியலாளர் பல்வேறு களங்களை சுட்டிக்காட்டி உள்ளார். இலக்கிய வடிவிற்கும் உணர்த்தும் கருத்திற்கும் உள்ள தொடர்பு படைப்பின் தொடக்கம் எவ்வாறு அமைகிறது? முடிவு எங்ஙனம் இருக்கிறது உள் அமைப்பு கூறுகள் யாவை என சில களங்களை படைப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் அண்ணா. ஆகவே அறிஞர் அண்ணாவின் படைப்புகளை ஆழ்ந்து பார்க்கும் போது படைப்பின் வடிவமைப்பு, கூற்று நெறி, கருத்து, கருத்துக்கும் வடிவுக்கும் உள்ள உறவு எனும் களங்கள் பொருத்தமாகிறது.

புதினங்களின் தொடக்கங்கள்         
       அறிஞர் அண்ணாவின் முதல் புதினம் வீங்கிய உதடு வாடிப்போன மல்லிகை பூவினை வீசி எறிந்து விட்டு வேறு மலரை பூக்காரன் தொடுக்கிறான். வீசப்பட்ட மலர்கள் தெருவில் விளையாடும் சிறுவர்கள் விளையாட்டுக்குப் பயன்படுகிறது. எனும் உவமையில் கதையை தொடங்குகிறார். விலை மகளாக்கப்பட்ட சமுதாயக் கொலையை உவமையாக அண்ணா படைத்தது புதுமையான தொடக்கமாகும்.
         
      கோடையில் தாகம் கொண்டவன் இளநீர் பருகியதும் இன்பம் பெறுவது போன்று தேவருக்கு அவர் மனைவி சூடாவின் புன்சிரிப்பு அமைந்தது. எனும் உவமையில் ‘தசாவதாரம்’ எனும் புதினம் தொடங்கி கள்வனெனக் கடுஞ்சிறையில் தள்ளப்பட்ட தேவர் மனைவி சூடாவின் முயற்சியால் கள்வன் அல்ல என்று மெய்பிக்கப்பட்டு விடுதலைப்பெற்று அவர்கள் இன்புற்றிட முடியும் என்ற கதையினையே குறிப்பாக புலப்படுத்துகிறது உவமை.
         
      கலிங்க ராணி, ரங்கோன் ராதா எனும் புதினங்கள் கதை மாந்தர் உரையாடல்களில் தொடங்கிக் கதைக் கருக்களை அறிமுகப்படுத்துகின்றன. ‘இன்ப ஒலி’ எனும் புதினம் பெற்றோம் விடுதலை என்று மகிழ்ச்சியொலி எங்கும் ஒலிக்க தொடங்குவது அண்ணா தமிழக முதல்வராக பொறுப்பேற்ற போது எழுந்த வெற்றி பெருமித ஒலியை நினைவூட்டுகிறது.

குறும் புதினங்கள்
         
       அறிஞர் அண்ணாவின் முதல் குறும் புதினம் ‘கோமளத்தின் கோபம்’ ஆரியத்தின் சூழ்ச்சியினால் சிறைக்கு சென்றவன் விடுதலை பெறும் காட்சியாக தொடங்குகிறது. “1939 தொடக்கத்தில் தமிழ் மொழி காக்க முதன்முறையாக ராஜகோபால ஆச்சாரியரால் அறிஞர் அண்ணா சிறைக்கனுப்பப்பட்டு விடுதலை பெற்ற காட்சியை இப்புதினத்தில் தொடக்கமாக சேர்த்திருப்பார்.” 18 குறும் புதினங்களில் கபோதிபுரக்காதல், மக்கள் தீர்ப்பு, பவளபஸ்பம், சந்திரோதயம், கடைசிக்களவு, அப்போதே சொன்னேன், சிங்களசீமாட்டி என்பன உரையாடல் தொடக்கமாகி கதை கருவை குறிப்பால் உணர்த்துகின்றது.

சிறுகதைகள்
         
        அண்ணாவின் முதல் சிறுகதை ‘கொக்கரக்கோ’ ஒருநாள் மாலை நான் கடற்கரை முன்பு கண்மூடி மௌனமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன் கண்களை மூடுவதும் மௌனமாவதும் கனவு காண்பதும் சகஜம் தானே என சங்கர் கதை கூறும் நெறியில் கதை தொடங்குகிறது சங்கரின் நண்பர் சுந்தரம் இதழ் ஒன்றை நடத்தி தோல்வி கண்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மன நலமற்று திரியும் கதை முடிவை சுந்தரின் மணக்கண் குருடாகி கனவு பிதற்றலுமாக அமைந்ததை குறிப்பால் தெரிவிக்கிறது. 42 சிறுகதைகளின் தொடக்கங்கள் விறுவிறுப்பான தொடக்கங்களாகவும் கதை மாந்தர்களையும் அவர்தம் பண்புகளையும் அறிமுகம் செய்கின்றன. “வழக்குரை காட்சிகளில் ஆறு சிறுகதைகளும் உருவகம் உவமைகளில் 12 சிறுகதைகளும் உவகை, அவலம், சினம், வியப்பு ஆகிய உணர்ச்சி வீச்சில் 25 சிறுகதைகளும் தலைப்புத் தொடரை விளக்கி நான்கு சிறுகதைகளும் அமைந்துள்ளது.”
வாழ்த்துரையிலும், மடலிலும், இதழ்ச்செய்தியிலும், விளம்பரத்திலும் அறிவிப்பிலும் வரவு செலவு பட்டியலிலும் தொலைபேசி உரையாடலிலும் முன்னுரையிலும் நாடக காட்சியிலும் என பல நிலைகளில் பல்சுவை திறனில் விரைந்து படிக்கத் தூண்டும் வேட்கையுறச் செய்யும் வகையில், பிற கதைகளின் தொடக்கங்கள் அமைந்துள்ளன. அண்ணாவின் புனைவுகள் மக்களுக்கு ஆர்வமூட்டும் வகையிலும் விரும்பி படித்து சுவைக்கவும் ஏற்ற சூழலுடன் மொழித் திறனுடன் தொடங்கப் பெறும் திட்ட பாங்கு பெற்று இயல்வது தெளிவாகிறது. புனைவுகளின் தொடக்கங்கள் கலைத் திறனுடனும் கருத்துச்செறிவுடனும் திட்டமிட்டு தொடங்கப் பெற்றிருக்கையில் அவை திட்டமிட்டன அல்ல என்று குறிப்பிடுகிறார்.

மடல்கள்
         
       1937 ஆம் ஆண்டு முதல் விடுதலை பத்திரிக்கையிலும் 1942 ஆம் ஆண்டு முதல் 1955 ஏப்ரல் வரை ‘திராவிட நாடு’ கிழமை இதழிலும் அறிஞர் அண்ணா தீட்டிய மடல்கள் பரதன், சமதர்மன், நீலன் எனும் புனைப்பெயர்களில் எழுதப்பட்ட திறந்த மடல்கள் ஆடி அடங்கினீரே, அலகாபாத் பண்டிதரே, தமிழ் பண்டிதர்கட்கு, நன்னிலம் நண்பர்கட்கு, வாலாஜா திமுக தோழர்கட்கு, மக்கு மகாலிங்கத்திற்கு திருநாள் கொண்டாடும் தோழர்கள் அன்புள்ள அண்ணா மேயரே என விழி தொடக்கங்கள் பல்நெறிப்பட்டு இயல்கின்றன. மே 8, 1955 முதற்கொண்டு தம்பி என்னும் விளியேற்று அண்ணன் எழுதும் மடல்கள் அழைப்பு, அழைப்பிதழ், கற்பனை சூழல், கவிதை, மடல், கதை, மேற்கோள், நூல் அறிமுகம், மடல் தலைப்பு, விளக்கம், இதழியல் திறன்கள், தமது வாழ்க்கை நிகழ்ச்சி உவமை கூறியன நினைவூட்டல், சுவை, மெய்ப்பாடு, தொடர்கதைத் திறன், மடல் எழுதாமைக்கு வருத்தம் தெரிவித்தல், அரசியல் பணி வசவாளர் தூற்றல் கற்பனை நிகழ்ச்சி முதலான தொடக்கத் திறன்கள் பெற்றுத் திகழ்கின்றன.

கட்டுரைகள்
         
        கருத்துகளுக்கு முழு முன்னுரிமை தந்து அவற்றைத் தொடர்புபடுத்திப் பகுத்து ஒப்பிட்டும் மறுத்தும் சான்றளித்தும் தொகுத்தும் எழுதும் மடல்கள் கட்டுரை வடிவேற்கின்றன. கண்ணீர் எனும் மடல், தசாவதாரம் எனும் புதினம், இரக்கம் பற்றிய விளக்கம், இன்ப ஒளி புதினத்தில் நாட்டுப்பற்று பற்றிய விளக்கம், கலிங்க ராணி, ஆரியனின் பண்பு எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் எனும் மடலிடையே குடியாட்சி முடியாட்சி விளக்கம் யாவும் கட்டுரை நடை பயில்கின்றன.
         
         கருத்துப் புலப்பாட்டு நெறியில் அண்ணா மேற்கொள்ளும் விளக்க நடையும் ஆய்வுக்குரிய களமாகிறது. கருத்தை விளக்கும் முறையில் அறிஞர் அண்ணா அவர்கள் தனித்தமிழ் நடையினையே பெரிதும் கையாள்கிறார். தன்னலத்தை துளியும் கருதாதவன் என்றோ தன்னல நோக்கமே எழாத நிலையினன் என்றோ ஒருவரைப் பற்றிக் கூறி பெருமைப் படுத்துவதைக் காட்டிலும் உண்மையான பெருமை என்னவென்றால் தன் நலத்தை வென்றவன் தன்னல உணர்ச்சியால் தாக்கப்பட்டும் தாழ்ந்து விட மறுத்தவன் தன்னல உணர்ச்சியுடன் போரிட்டு வெற்றி கண்டவன் என்பதில் தான் பெருமை இருக்கிறது. குடும்ப பாசம் என்னும் மடலில் நான் நாம் எனும் சொற்களையும் பொருள் பொருத்தம் நாநலம் எனும் மடல்களில் அச்சொற்களையும் விளக்கும் நெறி தனித்தன்மை பெறுகிறது.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
         
       ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்பதே தந்தை பெரியாரின் முழு முதல் நோக்கு; அவரது இறுதி நோக்கமும் அதுதான் பெரியாரின் எழுத்துக்களை, பேச்சுக்களை செயல்பாடுகளில் விடுபடுதல் இல்லாமல் உற்று நோக்குபவர்களால் மட்டுமே உணர முடியும். அங்கொன்றும் இங்கொன்றுமாய் நுனிப்புல் மேய்பவர்கள் பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைத்தால் அவர்கள் ஏமாந்து போவார்கள். அவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
          தமிழ்நாட்டில் தமிழுக்கென்று தனியாய் எத்தனை பள்ளிக்கூடம் இருக்கிறது என்று குடிஅரசு 07-03- 1926 இல் கேட்டது முதல் தொடர்ச்சியாகத் தமிழை அதற்குரிய இடத்தில் வைக்கவே பெரியார் செயல்பட்டார். இறுதிக் காலத்தில் எழுதிய தலையங்கத்திலும் இதனை வலியுறுத்தி இருக்கிறார்.
         
      தந்தை பெரியாரின் தமிழ் என்பது மதக்கலப்பு இல்லாதது ஆகும் தமிழில் எழுதப்பட்டு இருப்பதால் அவை அனைத்தும் புனிதம் என்று நினைக்க மாட்டார். இந்தத் தமிழ்ச் சமுதாயம், தமிழ் மக்கள் எப்படியாவது முன்னேறிச் சென்று விட வேண்டும் என்ற அக்கறையும் துடிப்பும் மட்டுமே அவரை ஆங்கிலம் படியுங்கள் என்று சொல்லச் சொன்னது. தமிழ் தமிழ் என்று சொல்லித் தமிழன் அத்தோடு நின்று விடக்கூடாது; சாதித் தமிழனாய் கிராமங்களுக்குள் முடங்கி விடக்கூடாது என்று அவர் நினைத்தார்.
         
         தமிழ் படித்தால் மட்டுமே போதுமானது என்று இருந்து விடக்கூடாது என்றார் அவர். தமிழை யாருக்கும் கற்றுத் தர வேண்டியது இல்லை அது குருதியோடு இருக்கிறது. ஆங்கிலம் கசடற கற்றுத் தர வேண்டும் என்று உறுதியாகச் சொன்னார்.  “நாம் மிகப் பெரிய சமுதாயம். நாம் எவ்வளவு முன்னுக்கு வர வேண்டியவர்கள்? நாதியற்றுப்போய் காட்டுமிராண்டியாக அல்லவா இருக்கிறோம். சொல்லுங்கள் வெளிநாட்டுக்காரனைப் பாருங்கள், நீ வேட்டி கட்டிக்கிட்டு இருந்தபோது அவர்கள் ஆண் பிள்ளையையும் பெண் பிள்ளையையும் ஒன்று போல் வளர்த்தனர். இன்றைய காலகட்டத்தில் அவர்கள் ஆகாயத்தில்லவா பறக்கின்றனர் என்று நம் மக்களின் நிலை பற்றி அவருடைய ஏக்கம் இருந்தது. 19.12.1973 அன்று தனது இறுதிச் சொற்பொழிவில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.” ஆங்கிலம் படித்து உலகம் முழுக்கச் செல். எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்பது அவரது எண்ணமாக இருந்தது. அதே நேரத்தில் தமிழகத்தில் தமிழாட்சி இருக்க வேண்டும் என்பதே அவரது முழக்கம்.

எப்போதும் தமிழுக்காக         
       தமிழைப் பெருமைக்குரியதாகவோ சுவை மிகுந்ததாகவோ இன்னும் சொல்லப்போனால் பழம்பெருமைக்காகவோ இன்னும் சொல்லப்போனால் நாமெல்லாம் தமிழர் என்பதற்காகவோ அல்லாமல் தமிழைப் பயன்பாட்டு மொழியாக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராய் பெரியார் திகழ்ந்தார். அத்தகைய தகுதி படைத்த தமிழ் மொழியை உலகில் அனைவராலும் பயன்படுத்தப்படும் மொழியாக மாற்ற வேண்டும் எனப் பாடுபட்டவர். மேற்கண்ட தகுதிகள் தமிழுக்கு இல்லையா என்று மொண்ணையாகச் சிந்திப்பவர்கள் தங்களை 60, 70 ஆண்டுகளுக்குப் பின்னே அழைத்து சென்று சிந்திக்க வேண்டும் பெரியார் அவர்கள் இறந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டுகள் ஆகப்போகிறது. அவர் இறப்பதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தமிழுக்காகப் பேசியும் எழுதியும் போராடியும் வந்தார். எனவே அவரது சொற்களை அவர் வாழ்ந்த காலகட்ட சூழலுடன் பொருத்திப் பார்த்துச் சிந்திக்க வேண்டும்.
         
       “பெரியாரின் போராட்ட குணத்தை அதிகம் ஆக்கியது இந்தி எதிர்ப்பு போராட்டம் தான். 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்ட வடிவம் கொண்டாலும் தந்தை பெரியார் தனது இந்தி எதிர்ப்பை 1929 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டார். குடியரசு இதழில் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.”17 இதன் தலைப்பே பெரியாரை அடையாளப்படுத்தும். தமிழிற்குத் துரோகமும் ஹிந்தி பாஷையின் ரகசியமும் என்பது தான் சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் அவர் எழுதிய கட்டுரைக்கு இட்ட தலைப்பாகும்.
         
        மதம் கலவாத தமிழைப் பெற தந்தை பெரியார் விரும்பினார். மதம் கலவாத தமிழ்ப் புலவர்கள் மிகுதியார் வர வேண்டும் என்றார். 1932 ஆம் ஆண்டில் துறையூரில் தமிழ்ப் புலவர்கள் மாநாடு, தமிழ் மாணவர் மகாநாடு நடந்தது. இதில் சீர்திருத்த நோக்கம் கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைப் பெரியார் ஆதரித்தார். அம்மாநாட்டில் சமயம் சார்ந்த பாடல்கள் பாடப்பட்டதைக் கண்டித்தார். சுயமரியாதை இயக்கத்தவர் சிலர் அம்மாநாட்டில் கலந்து கொண்டது சில புலவர்களும், சில சைவர்களுக்கும் பிடிக்கவில்லை. மாநாட்டில் இது சலசலப்பையும் உருவாக்கியது. இதையொட்டி எழுதப்பட்ட தலையங்கத்தில் பெரியாரின் முழு முதல் நோக்கம் விளக்கமாக வெளிப்பட்டது,
         
          சுயமரியாதைத் தோழர்கள் தமிழ்மொழி வளர்ச்சி விஷயத்தில் எந்த வகையிலும் மற்ற பண்டிதர்களுக்கும் தமிழ் அபிமானிகளுக்கும் பிற்பட்டவர் அல்லர் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு சுயமரியாதைத் தோழர்கள் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டதும், தமிழ் வளர்ச்சிக்கான தீர்மானங்களில் முக்கியப் பங்கு எடுத்துக் கொண்டதுமே உதாரணமாகும். உண்மையில் ஹிந்தி மொழியைக் கண்டிப்பதாக மாநாட்டில் மெஜாரிட்டியினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சுயமரியாதைத் தோழர்கள் இல்லாவிட்டால் தோற்றே போயிருக்கும். ஹிந்தி கண்டனத் தீர்மானத்தை சிலர் எதிர்த்த பொழுது, அவ்வெதிர்ப்புக்குச் சரியான பதில் கூறினார். மற்ற பண்டிதர்கள் விரும்புவது போல புராணங்களை எழுதுவதும், அவர்களைப் பற்றிப் பேசுவதும், தேவார திருவாசகங்களைப் பாடுவதும் தான் தமிழ் வளர்ச்சி என்று சுயமரியாதைத் தோழர்கள் கருதுவதில்லை. மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியதும், அறிவையும், திறமையையும், தைரியத்தையும், உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த கலைகளை எல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதன் மூலம் மக்களுடைய அறிவையும் தமிழ்மொழியையும் செம்மை செய்வதே தமிழ் வளர்ச்சி என்று கருதுபவர்கள் என்று கூறுகின்றோம். இதுதான் உண்மையான தமிழ் வளர்ச்சிக்கான வழியுமாகும்.
         
         எது உண்மையான தமிழ் வளர்ச்சி என்று பெரியாரின் சிந்தனை இந்த ஒரு கட்டுரையின் மூலம் புரிய வேண்டும். வெறும் தமிழ்ப்பாட்டு, தமிழ்ச்சுவை தமிழை வளர்க்காது என்பதில் உறுதியாக இருந்;தார். “நம் பண்டைத் திராவிட மக்களிடையே இரண்டு பெரியோர்களைக் குறிப்பிட வேண்டுமானால் ஆண்களில் வள்ளுவரையும், பெண்களில் அவ்வையாரையும் நாம் சிறந்;த அறிவாளிகளாகக் குறிப்பிட வேண்டும்.” தமிழைச் சமயம், சுவை என்ற இரண்டு சிமிலுக்குள் அடைத்த சைவர்களை தமிழ் மொழியின் முட்டுக்கட்டை என்று விமர்சித்தார்;. இதுதான் அவரின் எழுத்துச் சீர்திருத்தத்துக்கும் அடித்தளமாய் இருந்தது. தமிழையும் மதத்தையம் பிரித்து, தமிழை அறிவு மற்றும் அறிவியல் மொழியாக்க வேண்டுமென்று விரும்பினார். அந்த அடிப்படையில் அனைத்து இடங்களிலும் தமிழ்மொழி ஆட்சி செய்ய வேண்டும் என்றார்.
         
          தந்தை பெரியார் அவர்கள் எப்படி ஆனாலும் தமிழ் மொழி உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றியமையாதது அதன் மூலம் தமிழ் மக்கள் ஒன்று சேர வசதி உண்டு. தலைவர் திரு. வி. க. அவர்களும் அமைச்சர் கா. நமசிவாய முதலியார் அவர்களும் இத்திருநாளை இல்லாமல் தமிழ் மக்களுக்கு ஒரு புது எழுச்சியையும் ஊக்கத்தையும் உண்டாக்கும் திருநாளாக செய்ய வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ஊரிலும் தலைமை திருநாள் நடைபெற செய்ய வேண்டும். தீபாவளி போன்ற மூடநம்பிக்கையும் சுயமரியாதை அற்றதும் ஆபாசமானதுமான பண்டிகைகள் கொண்டாடுவதை விட இப்படி திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் அனுகூலமாக திருநாள் விழாவை பரப்ப வேண்டும். நமது பெண்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் இருந்தாலும் ஒரு நாள் வேண்டி இருப்பதால் தீபாவளியையும் மாரியம்மன் பண்டிகைகளையும் கொண்டாட ஆசைப்படுகின்றனர் என்று குறிப்பிடுகிறார் தந்தை பெரியார்.

முடிவுரை         
       படைப்புகள் மூலம் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றியும், மேலும், இலக்கியப் படைப்புகள், கருத்துக் குவியல், புதினங்களின் தொடக்கங்கள், குறும் புதினங்கள், மடல்கள், கட்டுரைகள், தமிழ் மொழியின் மீட்சி, தமிழ் மொழி காக்க வந்த கலைஞர், காலங்காலமாகத் தமிழின் நிலை, வழக்குச் சொல், தமிழின் பெருமை, மொழி என்பது போர்க்கருவி, திராவிட இயக்கத்தவர்களின் இலக்கியப் பணிகள் போன்ற உட்தலைப்புகளில் கருத்துக்கள் அனைத்தும் முழுமையாக இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளது.

துணைநூற்பட்டியல்
1. முனைவர் இராமசுவாமி மு, ‘திராவிட இயக்கமும், கலைத்துறையும்’, எண். 120, என்.டி.ஆர் தெரு எண். 120, என்.டி.ஆர் தெரு ரங்கராஜபுரம், கோடம்பாக்கம் சென்னை – 600 001

2. உதயகுமார், ‘திராவிட இயக்கத்தின் தாக்கம்’, திராவிடப் பள்ளி வெளியீடு, என்.டி.ஆர் தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம் சென்னை – 600 001

3. முனைவர் சுலோச்சனா நா, ‘திராவிட வேரும் விழுதுகளும்’, நாம் தமிழர் பதிப்பகம்,
  சென்னை – 600 015 ஆண்டு – 2013    

4. முத்துக்குமார் ஆர், ‘திராவிட இயக்க வரலாறு பாகம் 1’, கிழக்கு பதிப்பகம்,
  இராயப்பேட்டை, சென்னை – 600 016 ஆண்டு – 2010

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் அ.சேதுபதி
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,

ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி,

பெருந்துறை, ஈரோடு – 638 057

In the short story “Isaikkada Isaithattu” – Nadu Nadu Vaazhvival|C.Prabu

In the short story Isaikkada Isaithattu - Nadu Nadu Vaazhvival
Abstract       
             Nadu Nadu is a land between the Chola Kingdom and the Thondai Kingdom, and it got its name because it is in the middle. It was a region formed during the medieval Chola rule in the tenth century. The present-day Kadalur district, located north of the Thenpennai River and south of the Vada Vella River, is called Nadu Nadu. This article describes the life of the people of Nadu Nadu as featured in the short story “Isaikkada Isaithattu” by the writer Thangar Bachchan, who has made his mark in various fields of Tamil literature.

”இசைக்காத இசைத்தட்டு சிறுகதையில் – நடுநாட்டுவாழ்வியல்”

முன்னுரை 
    நடுநாடு என்பது சோழநாட்டுக்கும் தொண்டை நாட்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலப்பகுதியாகும், இது நடுவில் இருப்பதால் இந்தப் பெயர் பெற்றது. இது பத்தாம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர் ஆட்சியின்போது உருவான ஒரு பகுதியாகும். தென்பெண்ணையாற்றின் வடக்கேயும் வடவெள்ளாற்றின் தெற்கேயும் அமைந்துள்ள இன்றைய கடலூர் மாவட்ட பகுதியை நடுநாடு என்கின்றனர். தமிழ் இலக்கியத்தில் பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்து வருபவர் எழுத்தாளர் தங்கர்பச்சான் அவர்களின் “இசைக்காத இசைத்தட்டு” எனும் சிறுகதையில் இடம்பெறும் நடுநாட்டு மக்களின் வாழ்வியலை இக்கட்டுரைவிவரிக்கிறது.
கதைச்சுருக்கம்
       முன்னொரு காலத்தில் வசதியுடன் வாழ்ந்து தற்போது நொடித்துப் போய் துயர வாழ்க்கை வாழ்ந்து வருபவன் கண்ட்ரோல், நினைத்தால் போதும், குழந்தைகளை இடுப்பில் ஒன்றும் கையில் ஒன்றுமாகப் பிடித்துக்கொண்டு ஏரிமேட்டினைக் கடந்து மலைக்குள் இறங்கி, ஓடைக்குள் நடந்து, சுடுகாட்டு வழியாக அம்மா வீட்டுக்கு அரை மணி நேரத்தில் வந்து விடும் கொடிபவுணு வீட்டுக்குள் மழைத் தண்ணீர் ஒழுகிய இடத்தில் எல்லாம் பாத்திரங்களை அடுக்கி வைக்கும் கன்ட் ரோலின் அம்மா, காலமாற்றத்தில் கொடிபவுனு வுக்குப் பிடிக்காமல் போகும் கன்ட்ரோல், ஒரு கட்டத்தில் மகிழ்ச்சி, துக்கம், எல்லாமும் பொய் மகிழ்ச்சி அவனிடமிருந்து மறைந்து போனது. வாழ நினைத்த அறையிலேயே தூக்கில் தொங்கியவனை வெளியில் கொண்டு வந்து போட்டார்கள். அவன் மகிழ்ச்சியாக இருந்ததற்கும், இறந்ததற்குமான காரணம் யாருக்கும் புரியவில்லை. கொடிபவுனு அவனுடைய நினைவு வரும்போதெல்லாம், இசைக்காத அந்த இசைத்தட்டை எடுத்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். அதனை இசைத்துப் பார்க்கக்கூடிய தைரியம் அவளிடம் இல்லை! இதுவே இக்கதையின் மையக்கரு.
மருத்துவம்
       எது எதற்கெல்லாமோ மருத்துவம் வந்துவிட்டது. இன்னும் குடலேற்றத்துக்கு மட்டும் மருத்துவம் வந்ததாகத் தெரியவில்லை. குடலேற்றம் வந்துவிட்டால் ஊரில் யாராக இருந்தாலும் தைலம்மையிடம்தான் வந்தாக வேண்டும். ஐந்து நிமிடத்தில் மருத்துவம் முடிந்துவிடும். நான்கு நாட்கள் வரைக்கும் வயிற்றுவலியால் அவதிப் பட்டு, வயிற்றுப்போக்கில் கிடந்தவர்கள்கூட அடுத்த வேளையே சாப்பிடத் தொடங்கி விடுவார்கள். குழந்தைக்கு ஏதோ விளையாட்டின்போது குடலேற்றம் நிகழ்ந்துவிட்டது. சிறிய பித்தளைச் சருவத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து வைத்துவிட்டு, குழந்தையின் இரண்டு கைகளையும் அசையாமல் பிடித்துக்கொண்டாள் கொடிபவுனு. தண்ணீரைத் தன் வலது கை விரலால் தொட்டுத்தொட்டு குழந்தையின் அடிவயிற்றின் குடல் பகுதியில் ஒரே சீராக மேலிருந்து கீழாக தைலம்மை தட்டிக்கொண்டே இருந்தாள். குழந்தை வலியால் துடித்தது. பிறகு உடனே சரியாகிவிட்ட்து.
ஒரு தலை உள்ளுதல்
      கொடிபவுனுக்கு பந்தலுக்கு வந்து மனையில் அமரவே பிடிக்கவில்லை. ‘‘என்னைவிட்டால் யாருமில்லை, கண்மணியே உன் கையணைக்க, உன்னைவிட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க…’ இந்த பாடலையேதான் திரும்பத் திரும்ப ஒலிக்கச் செய்தான். அந்தப் படம் வெளியாகியிருந்த நேரம் அது. பாடலை முழுமையாக ஒலிபரப்பி னாலும் பரவாயில்லை. அந்த இரண்டு வரிகளை மட்டுமே திரும்பத் திரும்ப, நிறுத்தி நிறுத்தி ஒலிக்கச் செய்துகொண்டு இருந்தான். யாருக்கும் போய்க் கேட்கிற துணிவில்லை. கேட்டால் அவன் பிடித்துக் கொள்வான். அவனைச் சமாதானப்படுத்த முடியாது என்பது தெரியும். இவனும் எவனாவது வந்து கேட்க வேண்டும் என்றே எதிர் பார்த்தான்.
பயமும் பதட்டமும்
           சுடுகாட்டைக் கடந்து வரும் போது அவள் மனதுக்குள் அழிக்க முடியாத பயம் இருக்கும். இப்போது அதற்குப் பதில் ஒவ்வொரு முறையும் அவளது கால்கள் தடுமாறுகின்றன. இருந்தாலும் இந்த வழியை அவளால் மாற்றிக்கொள்ள முடியவில்லை அம்மா வீட்டுக்கு கொடிபவுனு வந்து சேர்ந்தபோது இரவாகிவிட்டதால். இரவு முழுக்க இடைவிடாத மழை என்பதால், கால்வைக்கிற இடமெல்லாம் தண்ணீராக இருந்தது. கோழிகள் இரை கிடைக்காமல், நனைந்த இறக்கைகளை விரிக்க இயலாமல் ஒடுங்கி நின்றிருந்தன. அம்மாவும் மகளும் குடைக்குப் பதிலாக ஆளுக்கொரு முறத்தைத் தலையில் பிடித்துக்கொண்டு நடந்து போய்ச் சேர்ந்தார்கள்.
      வீட்டுக்குள் மழைத் தண்ணீர் ஒழுகிய இடத்தில் எல்லாம் கன்ட் ரோலின் அம்மா பாத்திரங்களை அடுக்கி வைத்திருந்தாள். பாத்திரத்துக்குள் ஒழுகிய மழைத் தண்ணீர் ஏற்படுத்தும் ஒவ்வொரு சொட்டின் ஒலியும் அவளுக்குத் தன் மகனையே நினைவுபடுத்தின. தண்ணீர் நிரம்பி வழிந்தோடும் பாத்திரங்களை எடுத்து அப்புறப்படுத்தாமல், தூண் ஓரமாக தரையில் ஒடுங்கிப் படுத்திருந்தாள். கொடிபவுனின் வரவு அவளை எழுந்து உட்காரவைத்தது. நெடுநாட்களுக்குப் பின் முதல் முறையாக வந்திருக்கும் தம்பி மகளைப் பார்த்ததும், மனதுக்கு ஆறுதலாக இருந்தது. கொடிபவுனு அந்த வீட்டினுள் கால் வைத்தபோது, அவளால் தன் மாமன் கன்ட்ரோலை மறந்து நிற்க முடியவில்லை. வீட்டினுள் சூழ்ந்திருந்த இறுக்கம் அவளின் மனதுக்குள்ளும் பரவியது. அத்தை தைலம்மை, கொடிபவுனைத் தடவிக் கொடுத்தாள். எது எதற்கெல்லாமோ மருத்துவம் வந்துவிட்டது. இன்னும் குடலேற்றத்துக்கு மட்டும் மருத்துவம் வந்ததாகத் தெரியவில்லை. குடலேற்றம் வந்துவிட்டால் ஊரில் யாராக இருந்தாலும் தைலம்மையிடம்தான் வந்தாக வேண்டும். ஐந்து நிமிடத்தில் மருத்துவம் முடிந்துவிடும். நான்கு நாட்கள் வரைக்கும் வயிற்றுவலியால் அவதிப் பட்டு, வயிற்றுப்போக்கில் கிடந்தவர்கள்கூட அடுத்த வேளையே சாப்பிடத் தொடங்கி விடுவார்கள்.
கடந்தகால நினைவுகள்
       மழை ஒரே சீராகப் பெய்துகொண்டு இருந்தது. கூரையின் ஓடுகளின் வழியே தண்ணீர் கீழே வழியாதபடிக்கு அந்தக் காலத்துப் பழைய இசைத்தட்டுக்கள் ஓடுகளின் இடுக்கில் சொருகிவைக்கப்பட்டிருந்தன. ஒரு காலத்தில் ஓயாமல் இசைத்த அந்த இசைத்தட்டுகளெல்லாம் இப்போது மழையிலும் வெயிலிலும் காய்ந்துகிடப்பதை கொடிபவுனு பார்த்தாள். பல இசைத்தட்டுகள் பாதியாக உடைக்கப்பட்டு சொருகப் பட்டிருந்தன. அதனைப் பார்க்கப் பார்க்க, கன்ட்ரோலை அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. சிறு வயதிலேயே தந்தையை இழந்த அரங்கநாதன் என்கிற ஒரே மகனை மனம் கோணாமல் செல்லமாக வளர்த்தாள் தைலம்மை. ஒன்றாம் வகுப்பில் பள்ளியில் சேர்க்கும்போதே இரண்டு ஜோடி மேளதாளத்தோடுதான் பள்ளிக்குள் நுழைந்தான். நாகஸ் வரத்தையும் தவிலையும் போட்டி போட்டு வாசிக்கச் சொல்லி கன்ட்ரோலின் தாய்மாமன் ராச மாணிக்கம் அவ்வப்போது பரிசுத் தொகை ரூபாய்களை அவர்களின் சட்டைப் பைகளில் திணித்தார்.
பள்ளிப்பருவமும் பிள்ளைகள் மனநிலையும்
      சின்னப் பள்ளிக்கூடத்தின் எதிரிலிருந்த பெரிய பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்புக்குப் போகும்போதும் மேளதாளம் இல்லாமல் போக மாட்டேன் என அடம்பிடித்தான். அப்போதும் அவனது ஆசையை நிறைவேற்ற ராசமாணிக்கம் தவற வில்லை. தனது மகள் கொடிபவுனு வையும் அவனோடு மேளதாளத்துடன் பெரிய பள்ளிக்கூடத்துக்கு அழைத்துப் போனார். ஐந்தாம் வகுப்புக்குள்ளேயே இரண்டு ஆண்டுகள் தேர்ச்சி பெறாமல் இருந்ததால், தன்னைவிட இரண்டு வயது குறைந்த கொடிபவுனுவின் வகுப்பிலேயே கன்ட்ரோலும் படிக்கும்படி ஆகிவிட்டது. ஐந்தாம் வகுப்பில் புகைப்படம் எடுக் கும்போது அவளின் பக்கத்தில்தான் நிற்பேன் என இறுதிவரைக்கும் அடம்பிடித்து, அதேபோல் நின்றான்.
விளையாட்டுகள்
        பொன்வண்டு தீப்பெட்டிக்குள் முட்டை யிட்டாலும், பனைமட்டை யில் காற்றாடி செய்தாலும், ஓடையில் மீன் பிடித்தாலும், மண்பானைக்குள் வேப்பிலை போட்டுப் பழுக்கவைத்த மாம்பழமோ, சீதாப் பழமோ எதுவானாலும் முதலாவதாக கொடிபவுனுவிடம்தான் கொடுத்தான். போதாக்குறைக்கு ராசமாணிக்கம் அடிக்கடி அவனை ‘மாப்ள, மாப்ள’ என அழைத்ததாலும் கொடிபவுனு தனக்குத்தான் சொந்தம் என்கிற உணர்வு அவனது மனதில் குடி கொண்டுவிட்டது. பள்ளியில் யாருடனும் அவளை அவன் விளையாட அனுமதிப்பதில்லை. கொடிபவுனு அவனுக்குப் பேரழகியாகத் தெரிந்தாள்.
கற்பனையும் மகிழ்ச்சியும்
          ஏழாம் வகுப்புப் படிக்கிறபோது, அறிவியல் ஆசிரியர் வகுப்பில் உள்ளவர்களை அணி அணியாகப் பிரித்தபோது, கன்ட்ரோலும், கொடிபவுனும் ஒரே அணியில் இருந்தார்கள். அவள் தனது அணியில் சேர்ந்துவிட்டது குறித்து அவனுக்குள் ஏற்பட்ட கற்பனையும் மகிழ்ச்சியும் அவனுக்குப் பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டும் என்கிற ஆர்வத்தை மிகுதிப்படுத்தியது. இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பதினோராம் வகுப்பு வரை ஒரு செடி நட்டு அதனை மரமாக வளர்க்கப் போகிறோம் எனும்போதே, அரை மணி நேரத்தில் வெட்ட வேண்டிய குழியை ஐந்து நிமிடத்தில் தோண்டி முடித்துவிட்டான். அடுத்த அணியான அரங்கநாதனுக்கும், கொடிபவுனுக்கும் ‘பதியின் கன்று’ எனச் சொல்லி பூவரசு கன்றினை ஆசிரியர் அறிவித்துக் கொடுத்தபோது, இருவரும் ஒன்றாக சேர்ந்து வாங்கி னார்கள்.
இயலாமை
    காலமாற்றத்தில் கொடிபவுனு வுக்குப் பிடிக்காமல் போனது போலவே, கன்ட்ரோலை அவளது அப்பா ராசமாணிக்கத்துக்கும் பிடிக் காமல் போனது. எட்டாம் வகுப் போடு படிப்பை மூட்டை கட்டி விட்டவனை மாப்பிள்ளை எனக் கூப்பிட அவருக்கு விருப்பமில்லை. ராசமாணிக்கம் தனக்குப் பெண்தான் முக்கியம் என நினைத்தார். அவனிடம் தனது மகளை இனி பார்க்கக் கூடாது என எச்சரித்தார். தனக்குச் சொந்தமானவள் தன்னை விட்டு விலகிப் போவது, அவனது பெரும் பிரச்னையாக இருந்தது. அம்மாவிடம் அது பற்றி சொல்லிச் சொல்லி அழுதான்.
இசைத்த இசைத்தட்டு
        அவள் வயதுக்கு வந்து விமரிசையாக மஞ்சள் நீர் சடங்கு விழா நடத்திய போதுகூட, தாய்மாமனான கன்ட் ரோலுக்கு அழைப்பு இல்லை. மரியாதை இல்லாத இடத்துக்கு நாம் போகக் கூடாது எனத் தைலம்மை எவ்வளவோ சொல்லி யும், அவன் கேட்க வில்லை. போட்டிக்கு அவன் ஒலிபெருக்கி ஒன்றை விலைக்கே வாங்கி வந்து, அவனே பந்தல் கம்பத்தில் கட்டினான். எவ்வளவு சத்தம் கூட்டிவைக்க முடியுமோ அப்படி அலறவிட்டான். ராசமாணிக்கம் அமர்த்திய ஒலிபெருக்கிக்காரனுக்கும் இவனுக்கும் போட்டி மூண்டது. இரண்டின் இரைச்சலிலும் காரியத்தைக் கவனிக்க முடியவில்லை. போட்டியைச் சமாளிக்க முடியாமல் இறுதியாக ராசமாணிக்கத்தின் ஆள் பணமே வேண்டாம் எனச் சொல்லி ஓடிவிட்டான். கொடிபவுனுக்கு பந்தலுக்கு வந்து மணையில் அமரவே பிடிக்கவில்லை. ‘‘என்னைவிட்டால் யாருமில்லை, கண்மணியே உன் கையணைக்க, உன்னைவிட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க…’ இந்த பாடலையேதான் திரும்பத் திரும்ப ஒலிக்கச் செய்தான்.
சடங்குகள்
      மனையில் வந்து அமர்ந்த கொடி பவுனு நிமிர்ந்து அவன் இருக்கிற திசையைப் பார்க்கவே இல்லை. அவன் அவளை முறைத்துக் கொண்டே இருந்தான். திரும்பத் திரும்ப அவன் ஒலிபரப்பிய பாடலின் அந்த இரண்டு வரிகளையும் தானே பாடுவது போலவே அவன் நினைத்துக் கொண்டான். தனது காதில் அவன் வந்து கத்துவது போலவே அவளுக்குப் பட்டது. எவ்வளவு நேரந்தான் அவனாலும் தொடர்ந்து இந்த வேலையைச் செய்ய முடியும்? சோர்ந்துபோனான். சடங்கு களெல்லாம் முடிந்து கொடிபவுனு உள்ளே சென்றிருந்தபோது, சிறுநீர் கழிக்கச் சிறிது நேரம் நிறுத்திவிட்டுப் போனான். அவன் திரும்பி வந்து அதே பாடலை ஒலிபரப்பலாம் என முற்பட்டபோது, அந்த இசைத்தட்டு அங்கில்லை. தேடித் தேடிப் பார்த்து அலுத்துப் போனான். கோபத்தை யாரிடம் காண் பிப்பது எனத் தெரியவில்லை. அவ்வளவு நேரம் வீராப் போடு இருந்தவன், வழி யிலிருந்தவர்களை எல்லாம் தள்ளிக்கொண்டு நேராக வீட்டுக்குள் நுழைந்து கொடிபவுனு இருக்கும் அறையைத் தேடினான். கன்ட்ரோலின் இந்தச் செய்கை வாசலில் வட்டமாக அமர்ந்து, வந்து போகிறவர்களுக்குத் தாம்பூலம் கொடுத்துக்கொண்டு இருந்த அனைவருக்குமே சிரிப்பாக இருந்தது. அதனை வெளிக்காட்டிக் கொண்டால் என்ன நடக்கும் என்பது தெரிந்ததால் அவர்களுக்குள் ளேயே சிரித்துக்கொண்டார்கள்.
படிப்பும் தடுமாற்றமும்
          அவனது முகத்தைப் பார்க்க அவளுக்குப் பிடிக்கவில்லை. அவனது செய்கை அவளுக்கு அவமானமாக இருந்தது. மிக நெருங்கி நின்றிருந்த கன்ட்ரோலுக்கு அவள் மிக அழகாக இருப்பதாகத் தெரிந்தது. முதல் முறையாக அவள் புடவையில் இருந்தது, அவனுக்கு இன்னும் அவளிடம் பேச வேண்டும் போலிருந்தது. அனைத்தையும் பின் வாசலில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த ராசமாணிக்கத் தால் அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை. கொடிபவுனுவின் அம்மா ஓடி வந்து மறித்தாலும், அவர் விடுவதாக இல்லை. நேருக்கு நேராக ராசமாணிக் கத்தைப் பார்த்ததும் அவனது கோபம் கெஞ்சலாக மாறியது. ‘‘ஏன் மாமா எங்கள காரியத்துக்குக் கூப்புடல? ஒனக்குமா என்னப் புடிக்கல? ஒனக்காகத்தான் நான் இப்ப சும்மா உட்டுட்டுப் போறேன்’’ அதன்பின், கன்ட்ரோல் ஒரு வழியாக சமாதானம் ஆனான். பதினோராம் வகுப்பு முடிவதற்காக கன்ட்ரோல் காத்திருந்தான். கொடி பவுனுதான் அந்த ஆண்டு பள்ளிக் கூடத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தாள்.
வீண் பிடிவாதம்
          கொடிபவுனுவுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிற செய்தி கன்ட்ரோலுக்குத் தெரிந்தது. மேற்கொண்டு யாரிடமும் கெஞ்ச விருப்பமில்லை. அவனின் அம்மா, ‘‘உன்னைப் பிடிக்காத பெண் தேவையில்லை. அவளைவிட அழகான பெண்ணைப் பார்த்து உடனே திருமணம் செய்துவைக்கிறேன்’’ என எவ்வளவோ சொன்னாள். ஆனால், தான் விரும்பிய கொடிபவுனுதான் மனைவியாக வர வேண்டும் என அவன் முடிவு செய்துவிட்டான். அவனாகவே அச்சகத்துக்குச் சென்றான். அவனுக்குத் தெரிந்ததைச் சொன்னான். திருமணப் பத்திரிகை யோடு வீட்டுக்கு வந்தான். மகனின் பிடிவாதத்தைக் கண்டு தைலம்மை வாயடைத்துப் போனாள். பத்திரிகையில் அவனது பெயரையும், அவளது பெயரையும் பார்க்கப் பார்க்க கன்ட்ரோலுக்கு அளவற்ற மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. அவளோடு வாழ்வதாகக் கனவில் மிதந்தான்.
திகைப்பும் தவிப்பும்
      அன்று விடுமுறை நாள். கொடிபவுனு ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தாள். கொல்லையில் ஏர் உழுதுகொண்டு இருந்த அப்பாவுக்காக சாப்பாடு எடுத்துப் போனாள். குருவிகளின் இரைச்சல் தாங்க முடியவில்லை. விளைந்து தயாராக இருந்த கம்பங் கொல்லையில் நொடிக்கொரு கதிராக அமர்ந்து கொத்திக் கொத்திப் பறந்துகொண்டு இருந்தன. இருபுறமும் ஆளுயரத்துக்கு வளர்ந்திருந்த கம்பங் கொல்லைகளுக்கு நடுவேயிருந்த வரப்பில், சினிமாப் பாடலைப் பாடிக்கொண்டு நடந்து வந்துகொண்டு இருந்த கொடிபவுனு, வரப்பின் வளைவில் திரும்பியபோது திடுக்கிட்டு பிரமை பிடித்தவள் போல நின்றுவிட்டாள். ஒரு நொடி அவளால் பார்வையைத் திருப்ப முடியவில்லை. எப்போதும் போல், யாரும் வர மாட்டார்கள் என நினைத்து வரப்பின் ஓரமாக வயலில் அமர்ந்து மலம் கழித்துக்கொண்டு இருந்த கன்ட்ரோலுக் கும் என்ன செய்வதெனப் புரியாமல் அப்படியே உட்கார்ந்து இருந்தான். திரும்பிப் போகப் பிடிக்காத கொடி பவுனு வேறு வழியில்லாமல் முகத்தை எதிர்ப்பக்கம் திருப்பிக்கொண்டு அவனைக் கடந்தாள். என்ன செய்வ தெனப் புரியாமல் திகைத்துப்போன கண்ட்ரோல், கால் சட்டையை ஒரு கையால் பிடித்தபடியே எழுந்து நின்றான். கொடிபவுனுவின் ஆழ்மனதில் பதிந்துபோன அந்த நிகழ்வு அவன்மீது அருவருப்பையும் அவனைப் பிடிக்காத மாதிரியும் செய்துவிட்டது.
நம்பிக்கைகள்
          ஜாதகம் பார்த்து முடிவு தெரியும் வரை ஒரு சொட்டுத் தண்ணீர்கூட தொண்டைக்குள் இறங்காது என கன்ட்ரோல் சொல்லிவிட்டான். ஊரார் முன்னிலையில் அவன் வீட்டு வாசலிலேயே ஜாதகக்காரனை வரவழைத்துப் பார்த்தார்கள். கொடிபவுனுக்குத் தாலி கட்டினால் அவன் உயிர் இருக்காது என்று ஜாதகக்காரன் அடித்துச் சொன்னான். கன்ட்ரோலின் அம்மா, தன் தம்பி யிடம் கெஞ்சி, உடனே இன்னொரு ஜாதகக்காரனை அழைத்து வரச் சொன்னாள். கன்ட்ரோல் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தனக்குச் சாதகமாக அவன் சொல்ல மாட்டான் என அவனே புறப்பட்டு வடலூர் போய், வேறு ஜாதகக்காரனை அழைத்து வந்தான். அவனும் முன்பு சொன்னவன் போலவேதான் சொன்னான்.
ஊதாரித்தனம்
             கன்ட்ரோலிடம் பழைய நடவடிக் கைகள் இல்லை. ஊர் மக்களைப் பார்ப் பதையே தவிர்த்தான். வயல் வேலைக்கும் செல்வதில்லை. கடலூருக்கும், பண்ருட்டிக்கும் சினிமா பார்க்கப் போவதுகூட நின்றுபோனது. வீட்டிலேயே முடங்கிக்கிடந்தான்.
உறவுநிலைகள்
           அன்று இரவு, ராசமாணிக்கம் மனைவியுடன் திருமணத் தாம்பூலத் தோடு வந்தார். அக்காவிடம் தாம்பூலத் தட்டை கொடுத்துவிட்டு அவரால் அழத்தான் முடிந்தது. அவர்களை கடைசி வரை கன்ட்ரோல் பார்க்கவே இல்லை. தலை குனிந்தபடியே தரையைப் பார்த்துக்கொண்டு இருந்தான். ராசமாணிக்கத்தால் கன்ட் ரோலுக்கு சமாதானம் சொல்ல முடியவில்லை. இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் காத்திருந்தால் தனது இளைய மகளைத் தருகிறேன் என்று சொன்னார்.
பூச்சிமருந்து குடித்தல்
        பெண் அழைப்புக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து கார் வந்துவிட்டது. பெண்ணை அனுப்பிவைக்க தைலம்மை யையும் வந்து கூப்பிட்டார்கள். ஒவ்வொரு நிகழ்வும் கன்ட்ரோலை நிலை தடுமாறச் செய்தது. கிடுகிடுவென பரணையில் ஏறியவன், சாக்குப்பையில் கட்டி வைத்திருந்த முந்திரி மரத்துக்குத் தெளிக்கவைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்தான். குடித்துவிட்டுத்தான் இறங்கினான். இறுதியாக ஊரை விட்டுப் போகும் போது கோயிலில் சாமி கும்பிட்டு விட்டுத்தானே கொடிபவுனு போவாள் என்பதற்காக, கோயிலில் போய்ப் படுத்துக்கொண்டான். அதற்குள் கை, கால் இழுக்க ஆரம்பித்துவிட்டது. கொடிபவுனு… கொடிபவுனு என சத்தம் போட்டுக் கத்தினான். இறுதிவரைக்கும் வரவே மாட்டேன் என அடம்பிடித்தவனைத் தூக்கிக் கொண்டு நடுவீரப்பட்டு மருத்துவ மனைக்கு ஓடினார்கள்.
அவல நிலை
        தன் மீது உயிரை வைத்திருக்கும் மாமனை நினைத்து அழுதாள். திருமணத்துக்கு மாப்பிள்ளை வீட்டுக்குப் போகும் வழிதான் என்பதால், மருத்துவமனைக்குச் சென்று மாமனைப் பார்க்க ஆசைப்பட்டாள். உறவினர்கள் பார்க்க அனுமதிக்கவில்லை. அந்த இடம் வந்தபோது சத்தம் போட்டுக் கத்தி, காரை நிறுத்தச் சொன்னாள். யார் தடுத்தும் கேட்காமல் மருத்துவ மனைக்குள் மணக் கோலத்துடன் ஓடினாள் கொடிபவுனு. கன்ட்ரோலைக் காப்பாற்றும் முயற்சியில் நிர்வாணமாகக் கிடத்தப்பட்டிருந்தான்.
உணவுமுறைகள்
 மாலை நாலரை மணிக்கு, இரவு சாப்பாட்டுக் காக அம்மா சுட்டுக்கொடுக்கும் கேழ்வரகு தோசையை எடுத்துக்கொண்டு போவான்;
திருவிழா
         மாலை ஐந்தரை மணியிலிருந்து இரவு எட்டு மணி வரைக்கும் பக்திப் பாடல்களை ஒலிபரப்பிவிட்டு, கோயிலிலேயே படுத்துக்கிடந்து, மீண்டும் காலை நாலரை மணிக்கு எழுந்து எட்டு மணி வரைக்கும் பாடலை ஒலிபரப்புவான். பின், சைக்கிளில் வீட்டுக்கு வந்து பகல் முழுக்கத் தூங்குவான். அந்த ஊரில்தான் கொடிபவுனு வாழ்க்கைப் பட்டிருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியும். முப்பது நாட்களும் காலையும் மாலையும் ஒலிபரப்பும் அனைத்துப் பாடல்களையும் கொடிபவுனு கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். கோயிலில் படுத்துக்கிடப் பவனை வீட்டில் படுத்துக்கொள்ளச் சொல்லலாம். சொன்னால் கேட்க மாட்டான் என்பதால், அவளும் அழைக்கவில்லை.
நம்பிக்கைகள்
     எந்த ஒரு நோயாக இருந்தலும் கொவிலுக்குச் சென்றால் அது தீர்ந்துவிடும் என்கிற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது என்பதற்கு உதாரணமாக, அன்று வெள்ளிக்கிழமை என்பதால் குழந்தைகளோடு கோயிலுக்கு வந்திருந்தாள். அடையாளம் தெரியாதபடி உருமாறியிருந்த கன்ட்ரோலைப் பார்க்கப் பார்க்க கொடிபவுனுக்கு வேதனையாக இருந்தது. சுவரையே பார்த்தபடி தலையில் முக்காடோடு கை கட்டி உட்கார்ந் திருந்தான்.
பேரன்பு
எப்படி யாவது அவனிடம் பேசிவிட வேண்டும் என நினைத்தவளால் பேச முடியவில்லை. மஞ்சள் நீர் சடங்கில் கன்ட்ரோல் தொலைத்துவிட்டுத் தேடிய இசைத்தட்டு இப்போது கொடிபவுனு கையில் இருந்தது. யாரும் பார்க்காதபடி அவனின் பக்கமாக விசிப் பலகையில் வைத்துவிட்டு வந்துவிட்டாள். இவ்வளவு காலம் தன்னைத் தொந்தரவு செய்துகொண்டு இருந்த இசைத்தட்டு தன்னிடம் இல்லாமல் போனது கொடிபவுனுக்கு அதை விடவும் தொந்தரவாக இருந்தது.
உறவின் மேன்மை
    இன்னும் மழை நிற்கவில்லை. தண்ணீரில் ஓடுகளுக் கிடையில் சிறைபட்டுக் கிடந்த இசைக்காத இசைத் தட்டுக்களையே கொடி பவுனு பார்த்துக்கொண்டு இருந்தாள். தான் வாழ்ந்திருக்க வேண்டிய வீடு. அவளால் தைலம்மையிடமிருந்து பிரிய முடியவில்லை. போகும்போது இளைய மகளிடமிருந்து ஐம்பது பைசா நாணயத்தை வாங்கி அத்தையிடம் நீட்டினாள். தனது சிகிச்சைக்காக தைலம்மை சம்பிரதாயத்துக்குப் பெறும் கூலி அது. தனது பேத்திக்குத் தானே செய்தேன் என வாங்க மறுத்துவிட்டாள்.
இசைக்காத இசைத்தட்டு
        தன்னிடமிருந்து களவுபோன இசைத்தட்டு திரும்பக் கிடைத்ததும், அது கிடைத்த இடமும் கன்ட் ரோலுக்குள் அப்போது பல கேள்வி களை எழுப்பின. பின், அவனுக்கு விடையும் கிடைத்தது. அப்போது அவனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அடையும்படியான மனநிலையைக் கொடுத்தது. தனக்கு வாழத் தகுதி இருப்பதாக நினைத்துக்கொண்டான். மறுநாள் காலையே சவரம் செய்து மாப்பிள்ளை போல் ஆனான். அதற்கான காரணம் யாருக்கும் புரியவில்லை. தைலம்மை மகனின் மாற்றத்தைப் பார்த்து பூரித்துப் போனாள். அவள் அவனைச் சாப்பிட அழைத்தும்கூட வரவில்லை. அறையை மூடிக்கொண்டு அதே பாடலையே திரும்பத் திரும்ப இசைக்கச் செய்து கேட்டான்.
நிலையாமை
      ஒரு கட்டத்தில் மகிழ்ச்சி, துக்கம், எல்லாமும் பொய் என்பதாக அவன் உணர்ந்தான். மகிழ்ச்சி அவனிடமிருந்து மறைந்து போனது. வாழ நினைத்த அறையிலேயே தூக்கில் தொங்கியவனை வெளியில் கொண்டு வந்து போட்டார்கள். அவன் மகிழ்ச்சியாக இருந்ததற்கும், இறந்ததற்குமான காரணம் யாருக்கும் புரியவில்லை. அவனின் அறையில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துப் பிழையுடன் இருந்த அந்தக் கடிதத்தில், தனது சொத்துக்களை முழுக்க கொடிபவுனுவின் குழந்தை களுக்கு எழுதி வைத்துவிடும்படியும், அந்த இசைத்தட்டை கொடிபவுனுவிடம் கொடுத்துவிடும்படியும் எழுதியிருந்தான்.
முடிவுரை
   கொடிபவுனு அவனுடைய நினைவு வரும்போதெல்லாம், இசைக்காத அந்த இசைத்தட்டை எடுத்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். அதனை இசைத்துப் பார்க்கக்கூடிய தைரியம் அவளிடம் இல்லை! என்கிற ஒரு குறிப்பிட்ட  பாடலையும், அந்தப் பாடலோடு தொடர்புடைய கதை மாந்தர்ளுக்கு வாழ்வில் ஏற்படும் மகிழ்ச்சி, துக்கம்,  காதல், ஏமாற்றம்,  வீரம், ஈரம், கோபம், அன்பு, ஏக்கம், இரக்கம், வலி  என  நடு நாட்டு மக்களின் வாழ்வியலை  தங்கர் பச்சானின் இசைக்காத இசைத்தட்டு சிறுகதையின்  மூலம் அறியலாம்.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

செ.பிரபு

முனைவர் பட்ட ஆய்வாளர்

கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி,

திருவண்ணாமலை.

 

 

 

Tamil literature and Sigmund Freud|Dr.V.Bhuvaneswari

தமிழ் இலக்கியமும் சிக்மண்ட் பிராய்டும்
Abstract
        
        Mind is a collection of cognitive and emotional aspects manifested in thought, perception, emotion, conviction, imagination etc. The mind of man thinks better than animals. Stops the imagination from thinking. Mind is the cause of the word man. It is the mind that acts by itself with the power to think. The mind is the body and soul working together. To the extent that we elevate the mind, to the extent that we keep it pure, to the extent that we strengthen it, to the extent that man’s life will rise and become successful. The mind is related to the brain. What is perceived by the senses is thought by the brain and manifests as actions of the mind. This is reported by modern neuroscientists in their studies.


தமிழ் இலக்கியமும் சிக்மண்ட் பிராய்டும்”

        மனம் என்பது சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மனஉறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பாகும். பிராணிகளை விட மனிதனின் மனமே சிந்தனை செய்கிறது. நினைக்கும் கற்பனைக் காட்சிகளைக் கண்முன்னே நிறுத்துகிறது. மனிதன் என்கிற சொல்லாடல் வருவதற்கு மனமே காரணமாகும். மனம்தான் சிந்திக்கும் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டுச் செயல்கிறது. உடலும்,  உயிரும் இணைந்து செயல்படுவதே மனம் ஆகும். மனதை எந்த அளவிற்கு உயர்த்திக் கொள்கிறோமோ,  எந்த அளவிற்கு தூய்மையாக வைத்திருக்கிறோமோ, எந்த அளவிற்கு வலுப்படுத்திக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு மனிதனின் வாழ்வு உயர்வு, வெற்றி அடையும். மனம் மூளையுடன் தொடர்பு உடையது. புலன்களால் உணரப்படுவதை மூளை சிந்தித்து மனதின் செயல்களாக வெளிக்கொண்டு வருகிறது. இதனைத் தற்கால நரம்பியல் வல்லுநர்கள் தம் ஆய்வுகளில்  தெரிவிக்கின்றனர்.

     மனம் என்பது பொதுவாக அனுபவங்கள் மற்றும் சமூக செயல்கள் மூலமாக வடிவமைக்கப்படுகிறது. சந்தேகம் எழும்போது மனதிற்கு மனம் என்கிற பெயரும் பார்த்தவை, கேட்டவை, உணர்ந்தவை என வாழ்வில் பெறப்பட்ட அனுபவங்கள் அனைத்தையும் சேமிக்கும் இடமாக செயல்படுவதால் சித்தம் என்றும் ஒருவர் அல்லது ஒரு பொருளைப் பற்றி அறிந்திருக்கும் தருணத்தில் நான் என்ற உணர்வாக தோன்றும் போது அகங்காரம் எனப்படும். மனம், மனிதன் நடத்தையுடன் தொடர்புடைய ஒன்றாக சிக்மண்ட் பிராய்டு உளப்பகுப்பாய்வுக் கொள்கைகளின் மூலம் விளக்குகிறார். நனவுநிலை, துணை நனவுநிலை அல்லது இடை மனநிலை, நிலையான அடிமன நனவிலி நிலை மூன்று நிலைகளிலும் மனத்தின் இயல்பினை அடையாளம் காணப் பொதுவாக ஆழ்மனம், வெளிமனம் என்னும் இரு சொல்லாடல்களும் பயன்படுத்தப்படுகிறது.

சிக்மண்ட் பிராய்டின் ஆழ்மனத்தின் செயல்பாடுகள்
       நம்முடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு ஆழ்மனதிலேயே உள்ளது. உறங்கச் செல்லும் முன் உங்கள் ஆழ்மனதிடம் நான் காலை ஆறு மணிக்கு எழ வேண்டும் என்று சொல்லிவிட்டு படுக்கச் சென்றால், அது சரியான நேரத்தில் எழுப்பிவிடும். உடல் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் ஆழ்மனத்தால் நம்மை குணப்படுத்த முடியும். ஒவ்வொரு இரவும் பரிபூரண ஆரோக்கியம் என்கிற கருத்தை மனதில் கொண்டு படுக்கச் செல்லுங்கள் உங்கள் நம்பிக்கை கூறிய பணியாளனான ஆழ்மனம் உங்களுக்கு  கட்டுப்பட்டு நிற்கும்.

      நாம் செய்ய விரும்பும் செயலை ஆழ்மனத்திடம் அன்பாகவும், உணர்வுபூர்வமாகவும் தெரிவித்தால் ஆழ்மனம் நம்முடைய கட்டளைப்படி நடக்கும். எதிர்மறையான வாக்கியங்களை ஆழ்மனத்திடம் கூறக்கூடாது. நம் மனத்தில் தோன்றுகின்ற எண்ணமே ஆழ்மன வெளிப்பாடு எண்ணங்களை மாற்றினால் தலைவிதியே மாறும். நினைவிலி மனத்தின் அமுக்கப்பட்ட இச்சை உணர்வுகளை பிராய்டு பகுத்தாய்வு செய்கிற பொழுது அதனை பாலுணர்வுக் கோட்பாடு எனப் பெயரிட்டு அழைக்கிறார். நனவிலி மனத்தில் இருந்து வெளிவருகின்ற இச்சை உணர்ச்சிகள் வாழ்விச்சை, சாவிச்சை ஆகிய நிலைகளில் பிரிக்கின்றன.

‘கானக நாடன் கலந்தான் இவன் என்ற 
மேனி சிதையும் பசந்து’ (கைந்நிலை பா.எண்01)
    எனும் குறிஞ்சிப் பாடலில் தலைவி தன்னுடைய நிறைவேறாத ஆசையினால் தன்னுடைய மேனி சிதைந்து போவதாக எண்ணுகிற எண்ணம் சாவிச்சை உணர்ச்சியின் வெளிப்பாடாக உள்ளது. பாலைப் பாடலில் தலைவனின் பிரிவைப் பிறர் சொல்லைக் கேட்டதும், அதனைத் தாங்க முடியாமல் தலைவியின் கண்கள் குளமாயின எனும் தோழியின் கூற்று சாவிச்சை உணர்ச்சியின் வெளிப்பாடாகும்.

‘நெடுவுடை அத்தம் செலவு உரைப்பக் கேட்டே
வடுவிடை மெல்கின கண்’  (கைந்நிலை பா.எண் 13)
     குறிஞ்சிப் பாடலில் தலைவன் வருவான் எனும் தலைவியின் நம்பிக்கையானது தன்னைத்தானே ஆற்றுப்படுத்திக் கொள்ளும் தன்மையைக் காட்டுகிறது. இது சாவிச்சை உணர்ச்சியிலிருந்து ஒருவர் வாழ்விச்சை உணர்ச்சிக்கு மாறுவதற்கான எடுத்துக்காட்டாக உள்ளது.  இச்செய்தியைப் பின்வரும் கைந்நிலை பாடலானது உணர்த்தும்,

‘முடியுங்கொல் என்ற முனிவான் ஒருவன்
வடிவேல் கைஏந்தி வரும்’ (கைந்நிலை பா.எண் 12)
     நெய்தல் நிலப் பாடலிலும் தலைவன் வருகின்றான் என்ற தலைவியைத் தோழி தேற்றுகிற கூற்றில் வாழ்விச்சை உணர்ச்சி வெளிப்பட்டுள்ளது. பாடலில் பின்வருமாறு

‘ஒருபுறம் கண்ட ஒன்தாரான் தேர்இதோ
கூடல் அணைய வரவு’ (கைந்நிலை பா.எண்60)
    இவ்வாறாக ஐவகை நிலப்பாடல்களிலும் தலைவியின் அமுக்கப்பட்ட நிறைவேறாத ஆசைகள் முதலில் சாவிச்சை உணர்ச்சியாக வெளிப்பட்டிருக்கிறது. அவை தோழி போன்ற புறசக்திகளால் தூண்டப்பட்டு வாழ்விச்சை உணர்ச்சியாக மாறுகிறது. இன்றைய வளர் இனம் பருவ மாணவ, மாணவியர்களுக்கு மனம், மனத்தின் போக்கு வாழ்வியல் நிலைகள் பற்றிய புரிதலை இலக்கியங்களின் வாயிலாக உணர்த்துவதும் மனதைப் பற்றிய புரிதலை கல்விச்சூழலில் புகட்டுவதும் இன்றியமையாத தேவையாகும்.
         புற,அகச்சூழல்களால் தனிமனிதனுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் அவனுடைய நனவிலி மனத்தில் ஆழமாகப் பதிவாகுகின்றன என்பது பிராய்டினுடைய இம்மன அமுக்கக் கோட்பாடாகும். இவ்வாறாக பதிவாகின்ற பதிவுகள் ஆழ்மனதில் அமுக்கப்பெற்று அவை கனவாகவும், படைப்பாகவும் வெளிவருகின்றன. பிராய்டினுடைய இம்மன அமுக்கக் கோட்பாட்டின் நிலையினைக் கைந்நிலையின் குறிஞ்சி முல்லை மருதம் பாலை நெய்தல் ஆகிய ஐந்து நிலப்பாடல்களிலும் காண முடிகிறது.

‘வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாகச் 
சந்தனம் ஏந்தி அருவி கொணர்ந்திடூஉம் 
வஞ்ச மலைநாடன் வாரான் கொல்? தோழ_! என் 
நெஞ்சம் நடுங்கி விடும்’; (கைந்நிலை பா.எண் 2)
      இன்பம் துய்க்கத் தலைவன் வருவான் என்கிற ஐயப்பாடு தலைவியின் மன அழுத்தத்திற்குக் காரணமாகிறது. நிறைவேறாத ஆசையினால் தலைவிக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தினை ‘நெஞ்சம் நடுங்கிடும’; என்னும் தொடரால் வெளிப்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

‘பண்பில் அஞ்சுரம் என்பவரால் ஆய்தொடி
நண்பிலார் சென்ற நெறி’ (கைந்நிலை பா.எண் 24)
     பாலைத்திணைப் பாடலும் இம்மன அமுக்கக் கோட்பாட்டினைக் காண முடிகிறது. தன்னை மறந்து சென்ற தலைவனை நட்பு இல்லாமல் சென்றாகக் கூறிய தலைவியின் கூற்றில் இன்பம் துய்க்க முடியாமல் துடிக்கின்றத் தன்மையை அறிய முடிகிறது.

‘வருவார் நம் காதலர் வாள் தடங் கண்ணாய்
பருவரல் பைதல் நோய் கொண்டு’ (கைந்நிலை பா.எண் 25)
     எனும் முல்லை நிலப்பாடலிலும், வருவார் நம் காதலர் என்று தோழி தலைவியை  ஆற்றுப்படுத்துதலால் தலைவி தன்னுடைய நிறைவேறாத ஆசையினால் மன அழுத்தத்தோடு இருந்ததை அறிய முடிகிறது.

‘பாந்துஇல் பயமொழி பண்பு பல கூறி
நீத்தல் அறிந்திலேம் இன்று’ (கைந்நிலை பா.எண் 45)
       எனும் மருதநிலப் பாடலிலும் தலைவன் பிரிவான் என்பதை நாங்கள் முன்னமே அறிந்திலோம் என்ற தலைவி கூறுவதால் அவளுடைய நிறைவேறாத ஆசையும் மன அழுத்தத்தின் புலப்பாடு புரிகிறது.

‘புலவுமீன் குப்பை கவரும் துறைவன்
கலவான்கொல் தோழி நமக்கு’ (கைந்நிலை பா.எண் 53)
       எனும் நெய்தல் நிலப்பாடலிலும் தலைவன் இன்பம் துய்க்க இனி வருவானோ எனத் தலைவி தோழியிடம் கேட்பதை ‘கலவான் கொல்தோழி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. மேற்கண்ட பாடல்களனைத்தும் தலைவியினுடைய நனவிலி மனத்தில் உள்ள நிறைவேறாத ஆசைகள் பண்பாட்டுச் சூழலில் பெற்று வெளிவந்திருப்பதைக் காண முடிகிறது. மனிதனின் நிறைவேறாத எண்ணங்கள் அவனது நனவிலி மனத்தில் ஆழமாகப் புதைந்து காணப்பெறும். அவையே கனவுகளாகத் தோன்றும். கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்னும் இசைத்தட்டுச் சொற்பொழிவில் ‘கனவுகள் ஆழ்ந்த உறக்கத்திலேயே தோன்றுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளமை நினைவு கூறத்தக்கது.

வெளிமனம் மற்றும் ஆழ்மனம்
       இலக்கியத்தில் உளவியல் அணுகுமுறை பெரிதும் பயன்பாடு உடையதாகும். அது மனித மனத்தைத் தெளிவாக அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் உதவுகிறது. இதன் மூலம் வெளிமனம், ஆழ்மனம் நினைக்கின்ற எண்ணங்களை ஒவ்வொரு தனிமனிதனும் எளிதில் பகுத்தாராய முடிகிறது. இதையே கண்ணதாசன்,

‘உன்னையறிந்தால் நீ உன்னை யறிந்தால் 
உலகத்தில் போராடலாம்
 
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை 
வணங்காமல் நீ வாழலாம்’ (கண்ணதாசன் திரையிசைப்பாடல்)
      எனக் குறிப்பிட்டார். தன்னை மட்டுமல்லாது ஒருவன் பிறர் உள்ளத்தையும் அறிவதால் மனதையும் எவ்விதக் குழப்பமும், கலக்கமும் இல்லாமல் தெளிவான சிந்தனையோடு வாழலாம். மனித மனம் மிகவும் விசித்திரமான போக்கினைக் கொண்டது. அதனால்தான் மனிதன், விலங்குகளிலிருந்து மாறுபட்டுப் பகுத்தறிவுச் சிந்தனையோடு செயலாற்றுகின்றான். மனம் என்பதை சிலர் மூளையே மனம் என்கின்றனர். சிலர் ஆன்மாவையே மனம் என்கின்றனர்.


முடிவுரை

      ‘ஆன்மாக்களுக்கு மறுபிறப்பு உண்டென்ற கருத்து வேதங்களில் வெளிப்படையாகக் காணப்படவில்லை. உடல் அழியும் ஆன்மா அழியாது. ஒருவன் இறந்தாலும் அவனுடைய ஆன்மா அவன் செய்த நல்வினை தீவினைகளுக்கேற்ப மோட்சத்திற்கோ நரகத்திற்கோ செல்லும் என்ற கருத்துக்கள்’ ஆன்மாவைப் பற்றி நிலவுகின்றன. ஆழ்மனத்தில் நினைக்கும் எண்ணங்களும், அதனால் எழும் விளைவுகளுமே காரணியாகத் திகழும் ஆழ்மனமானது வெளிமனத்தின் எண்ணங்களால் செயல்படுகிறது. ஆழ்மனதில் காணப்படும் அறிவும் ஞானமும் வெளிமனத்தின் எண்ணங்களால் இயங்குகின்றது. ஆழ்மனமானது எண்ணங்களின் தன்மைக்கு ஏற்றவாறு செயலாற்றும். வெளிமனத்தில் கவலை, கலக்கம் ஆகியவை நிரம்பியிருக்கும்போது ஆழ்மனதில் இது தொடர்பான எதிர்மறை உணர்ச்சிகள் உருவாகும். ஆழ்மனம் வெளிமனத்தைச் சார்ந்தது. எனவே அதனை கீழ்மனம் என்றும் அழைப்பர். நாம் செய்ய விரும்பும் செயலை ஆழ்மனத்திடம் அன்பாகவும், உணர்வுபூர்வமாகவும் தெரிவித்தால் ஆழ்மனம் நம்முடைய கட்டளைப்படி நடக்கும்.
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் வி.புவனேஸ்வரி,

தமிழ்த்துறை,

உதவிப் பேராசிரியர்,

ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி,

ஈரோடு.

 

 

பாட்டி இன்டளிஜன்ஸ்|ரா.ஷர்மிளா

பாட்டி இன்டளிஜன்ஸ் - ரா.ஷர்மிளா
        சுவாதி அப்பாவிடம் செல்லமாக சினுங்கினாள். என்னப்பா நீ மாயவரம் போயி தீபாவளி கொண்டாடனும்ன்னு சொல்றே? பாட்டி, தாத்தா இங்க வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.
  சேகர் ஒரு அரசாங்க அதிகாரி. நேர்மையானவர். பெரிய குடும்பத்தில் பிறந்தவர். அவர் தந்தை ரங்கனுக்கு நாலு குழந்தைகள். மூன்று மகன் ஒரே ஒரு மகள். மகள் சிவகாமி ஸ்ரீ ரங்கத்தில் உள்ளாள். இரண்டு மகனும் அவரோடு இருக்கிறார்கள். ஒரு மகன் இன்சூரன்ஸ் ஏஜென்சி எடுத்து தனி ஆபீஸ் வைத்து பிசினஸ் செய்யறான். ஒரு மகன் கல்லூரியில் முனைவராக உள்ளார். மூன்றாம் மகன் சேகர் சென்னையில் அரசாங்க வேலை பார்கிறார்.
சேகருக்கு ஒரு மகள் ஒரு மகன். இந்த முறை ரங்கு தாத்தா வத்சலா பாட்டியுடன் தீபாவளின்னு சொன்னது தான் சுவாதிக்கு கோவம்.

சேகர்: ஒருமுறை கிராமத்துல பண்டிகை கொண்டாடினால் தான் உனக்கு தெரியும். அவங்கல்லாம் சுறுசுறுப்பா இருப்பாங்கன்னு.

சுவாதி: ஆனா, நாம தான் முன்னேற்றத்தோட இருக்கோம் தெரிஞ்சுக்கோங்க. அங்க இன்டர்நெட் வருமா?

சேகர்: எல்லாம் வரும். வந்து பாரேன். இந்த தீபாவளி மறக்கமுடியாததா மாறும்ன்னு யாரும் நினைக்கலை. சேகர், பிரியா, சுவாதி, ஆதித்யா கிளம்பினார்கள். அனைவரையும் குஷிபடுத்த சுவாதி தம் சராத் விளையாடலாம்ன்னு ஐடியா சொன்னா.

சேகர்: ஆயிரம் ஆனாலும் மாயவரம்ன்னு சொல்லுவாங்க. நீங்க அசந்துபோயிடுவீங்க பாருங்க. முதல்லலாம் லீவு வீட்டா பாட்டி வீடும் சித்தி வீடும் தான். இப்போ உங்களுக்கு இன்டர்நெட் மோகம் அதிகம் ஆகிடுச்சு.

பிரியா: குழந்தைங்க பெரியவங்க ஆயிட்டாங்க. நாம தான் புரிஞ்சிக்கணும். ரெண்டு பெரும் பெரிய கிளாஸ் படிக்கறாங்க. ஸ்வாதி பனிரெண்டாம் வகுப்பு. ஆதித்யா பத்தாம் வகுப்பு. அவங்க உலகம் இப்போ வேற இல்லையா?

சேகர்: எவ்வளவு பெரியவங்க அனாலும் நம்ம ஊரு நம்ம மனுஷங்களை மறக்க கூடாது.
பிரியா மீண்டும் மாயவரம் வீட்டு கற்பனையில் மிதந்தாள்.
பிரியா: பெரிய விரகு அடுப்புல சுடுதண்ணீர் இருக்கும். பார்த்து எடுக்கனும். தோட்டத்துல எல்லா ஜீவனும் இருக்கும். துணை இல்லாம இரண்டுபேரும் வெளியில சுத்த கூடாது.

ஆதித்யா : நான் வீடியோ எடுத்து யூ டியூப்ல போடறேன். டிஸ்கவரி சேனல் மாதிரி.நல்லா இருக்கும்.

சுவாதி: சமையல் வீடியோ எடுக்கலாம். அதுதான் பிரம்மாண்டமா இருக்கும்.

பிரியா: சுவாதி உன்னோட பிரி ஹான்ட் ரங்கோலி போட்டு காமி.

சுவாதி: பெரியம்மா ரொம்ப அழகா கோலம் போடுவாங்க. பாட்டி தொன்னை, மண் பொம்மை லாம் அழகா பன்னுவாங்க.
         
       உறவுகள் தொடர்கதைதான். தாய், தந்தை ரசித்ததை குழந்தைகள் ரசிக்கிறார்கள். ஆனால் நேரம் இருப்பது இல்லை. டிராவல்ஸ் வண்டியில கற்பனை கதைகள் அவுத்துவிட்ட குதிரை போல அலைந்தன. சேகருக்கு தன் சொந்த ஊரை நினைத்து பெருமை. பாட்டு போட்டி, கோலம் போட்டி, சமையல் போட்டி, அழகு போட்டின்னு கற்பனை குதிரை பறந்தது. ரங்கன் அரசாங்கத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். அவர் மனைவி வத்சலா டீச்சராக வேலை செய்தவள். பெரிய குடும்பம் என்பதால் பெரிய வீட்டில் வசித்தார்கள். பெரிய கொள்ளை புறம், தோட்டம்ன்னு இயற்க்கையா இருக்கும். வீட்டின் பின்புறம் கிணறு, துணி துவைக்கும் கல், குளிக்கும் கல் இருக்கும்.

சுவாதி: வெட்ட வெளியில ஆகாசத்தை பார்த்து குளிக்கறது தனி சுகம். நாம சின்ன வயசுல விளையாடுவோமே. ஞாபகம் இருக்கா ஆதித்யா.
ஆதித்யா : வடிவேலு ஒரு சினிமா படத்துல சொல்லுவாரே இந்த விட்டத்த பார்கறதுல எவ்வளவு சுகம்ன்னு. அந்த சமயத்துல சரியா யாரோ அவர் மேல இடிச்சுடுவாங்க. சொல்லிவிட்டு சிரித்தான் ஆதித்யா.

சுவாதி: சும்மா சிரிக்காத ஆதித்ய. சிரிக்கும் பொழுது யோசிச்சுட்டு சிரி. இப்போ வர்ற ஜோக்ல ஒரு அர்த்தமே இருக்க மாட்டேங்குது. கிராமத்துல தண்ணீ நிறைய இருக்கு. சென்னைல எங்க இருக்கு?
         
      அக்கா என்றால் இன்னொரு தாய்ன்னு சொல்வார்களே அது சரி தான்.
பேசிக்கொண்டே இருந்ததில் ஊர் வந்துவிட்டது. பெரியப்பா, பெரியம்மா, தாத்தா, பாட்டி, சுதா, கீதா எல்லாரும் இவங்க வருகைகாக வெயிட்டிங். வெடி வெடிச்சு இவங்கள வரவேற்றார்கள். முதல் மகன் அருணுக்கு ஒரு மகள். அவள் பெயர் சீதா. இரண்டாவது மகன் பாலாஜியின் மகள் தான் கீதா.
தீபாவளிக்கு முன்னாடி நாளே வந்துடீங்க. ரொம்ப சந்தோசம் என்றான் பாலாஜி பைகளை எடுத்து வைத்தபடி. சுவாதி, ஆதித்யா, சீதா, கீதா எல்லாரும் சேர்ந்து விளையாடினார்கள்.
         
          வத்சலா பாட்டி இந்த பண்டிகையை ஸ்பேஷலா மாத்தனும்ன்னு நினைச்சாங்க. குழந்தைகளுக்கு நடுவுல ஒரு புரிதல் இருக்கனும்ன்னு நினைச்சாங்க. எல்லாரையும் கூப்பிட்டு தாழ்வாரத்தில் உட்கார சொன்னாள். இந்த வருஷம் நாம எல்லாரும் ஒரு புதுவிளையாட்டு விளையாட போறோம். அதாவது இந்த விளையாட்டுக்கு பெயர் வரவும் செலவும். உங்க அம்மா அப்பா மாசாமாசம் வரவுசெலவு கணக்கு பார்ப்பாங்க இல்லையா? சொந்தகாரங்க வந்தா சமையல் வேலை ஜாஸ்தி ஆகுது பணம் செலவு ஆகுதுன்னு சிலபேர் உறவை விட்டு விலகி பொயிடறாங்க. பணம் மட்டும்தான் வரவுசெலவா. இல்லையே சின்ன சின்ன அனுபவங்களும் வரவு தானே. நீங்க இந்த தீபாவளில எதை குடுத்தீங்க எதை வாங்குநீங்கன்னு சொன்னாதான் இரண்டுமே அழகுன்னு உங்களுக்கு புரியும்.
         
        யாரு அதிகமா செலவு பன்றாங்களோ அவங்களுக்கு நான் பரிசு குடுப்பேன். வரவுசெலவை பொருளாக பணமாக சொல்லாமல் அனுபவமாக சொல்லனும். யாரு அனுபவசாலின்னு நான் பார்த்து பரிசு குடுப்பேன். இது குழந்தைங்க பெரியவங்க ரெண்டு பேருக்கும் உரிய போட்டி. சரி விளையாடலாமா?
இது என்ன புதுசா இருக்கே? என்றால் பிரியா.
அம்மா எது சொன்னாலும் அது நல்லதுக்குதான் என்று வழிமொழிந்தான் சேகர்.
தீபாவளி காலையில் எண்ணெய் தேய்த்து குளித்தார்கள். சாமி கும்பிட்டுவிட்டு, தீபாவளி லேக்கியமும், புது துணியும் பெரியவர்களிடமிருந்து வாங்கினார்கள். 
         
        வத்சலா பாட்டி காலை சீக்கிரம் எழுந்தாள். கோலம் போடணும். வேலைக்காரிகிட்ட சொல்லி ஒழுங்கா துடைக்க சொல்லணும். தோரணம் கட்டணும். சூடு தண்ணிர்க்கு அடுப்பு முட்டனும். சாமி அறையில் புது துணி வைக்கணும் இப்படி ஏதாவது ஒரு வேலை யை எல்லாருக்கும் பிரித்து குடுத்து கொண்டே இருந்தாள். இது தான் கிராமத்து மக்களின் சாமர்த்தியம். வேலை யிலும் பேச்சிலும் வேகமா இருப்பாங்க.
         
          பாட்டி இட்லியும் சட்னியும் அனைவருக்கும் கொடுத்தார். மதியம் ஸ்வீட்டு, ஸ்நக்ஸ், பாயசம், பச்சடி, அவியல், கூட்டு, சாம்பார்ன்னு நிறைய சாப்பாடு. வெடி வெடித்தார்கள். அரட்டை அடித்தார்கள்.
 மாலையில் காவேரி கரை சென்று விளையாடி விட்டு நிலா சோறு சாப்பிடலாம் என்று முடிவு செய்தார்கள். ஆடி பேருக்கு அப்போ அந்த காவேரி கரை அவ்வளவு அழகா இருக்கும். தீபாவளி அப்போ தான் நாம எல்லாரும் ஒண்ணா இருக்கோம். இந்த பொழுதை அந்த இடத்தில் கழித்தால் நல்லா இருக்கும்ன்னு வத்சலா பாட்டி நினைச்சாங்க.
         
           ஒரு வட்டம் போல உட்கார சொன்னாள் பாட்டி. அனைவரும் சேர்ந்து கும்மி டான்ஸ் ஆடுங்க நாள் பாட்டு பாடறேன் என்றாள் வத்சலா பாட்டி.
  கிராமத்து பாட்டுல இருந்த வேகம் சுவாதிக்கு பிடித்தது. கேலாட்டம் ஆடுவது தனி உற்சாகமாக இருந்தது. ஒன்று, இரண்டு, மூனு, நாலுன்னு செல்லிட்டே ஆடுவாங்க. ஒன்று, இரண்டுன்னு வேகமா சொல்லறதுக்கு ஏத்தமாதிரி பாட்டி கிராமத்து பாட்டை பாடுவாங்க. ரொம்ப நல்லா இருக்கும்.
பாட்டு, டான்ஸ் முடிஞ்ச அப்புறம் நிலா சோறு. குடும்பம் சேர்ந்து சாப்பிடுவதில் ரங்கு தாத்தாவுக்கு வத்சலா பாட்டிக்கு தனி மகிழ்ச்சி. கிராமத்தில் கிடைக்கும் காய்கறிகள் தான் எத்தனை சுவை. இந்த தண்ணிர் இந்த காய்கறிகள் உணவின் சுவையை கூட்டுது. இரவு சப்பாத்தி உருளை மசாலா, நிறைய காய்கறிகள் போட்ட குருமா, மங்கா சாதம், காலையில் செய்த சமையல் எல்லாம் சூடாக வந்தது.
         
          ஒருமுறை பிரியா தீபாவளி லேக்கியம் முயற்ச்சி செய்து பார்த்தாள். அவளுக்கு கல்லு மாதிரி ஆயிடுச்சு. சுவாதியும் ஆதித்யாவும் பந்து மாதிரி விளையாடிவிட்டு தூக்கி போட்டார்கள். பாட்டி செய்யற தீபாவளி லேக்கியம் ருசியாவும் இருக்கும், மிருதுவாகவும் இருக்கும். உடம்புக்கு ரொம்ப நல்லது.
பாட்டி கிருஷ்ண ஜயந்திக்கு மண் பொம்மை செய்வாங்க. அவ்வளவு அழகா இருக்கும். பெரியம்மா போடோ எடுத்து மோபைலில் அனுப்புவாங்க. பாட்டி நவராத்திரில மரப்பாச்சி பொம்மைக்கு அழகா அலங்காரம் பண்ணி வைப்பாங்க. பாட்டி ஒவ்வொரு பண்டிகையையும் அழகா மாத்தறாங்க என்று ஸ்வாதி மனதில் நெகிழ்ந்தாள்.
         
           மறுநாள் மாலை சேகர் சென்னை கிளம்பனும். காலைல அதிகம் சாப்பிட வேண்டாம்ன்னு மோர் குடித்தான். பாட்டி எல்லாரையும் கூடத்துக்கு அழைத்து நான் வரவும்செலவும் விளையாட்டு விளையாட போறேன். எல்லாரும் உங்க அனுபவத்தை சொல்லுங்க என்றாள். முதலில் பெரியவங்க பேசினாங்க சமையல், பெரியவங்களுக்கு குடுக்கற மரியாதை, வீட்டு நிர்வாகம் மத்தவங்ககிட்டேந்து கத்துக்கிட்டோம்ன்னு சொன்னாங்க. சுவாதி பேசியது பாட்டிக்கு நெகிழ்வை குடுத்தது.
சுவாதி: நான் சென்னைலேந்து கிளம்பறச்ச இன்டர்நெட் அங்க வருமான்னு அப்பாகிட்ட கேட்டேன். அப்பாவும் வரும்ன்னு சொன்னாரு ஆனால் பாட்டி மாதிரி ஒரு இன்டலிஜன்ட் வுமன் இருக்கும் பொழுது எதுக்கு ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ். பாட்டி பாடற பாட்டு எந்த ஏ.ஐ ஆப்பிலும் கிடைக்காது. பாட்டி தீபாவளி லேக்கியம் ஸோமேட்டோல கிடைக்காது. பாட்டி செய்யற மண் பொம்மை, மரபாச்சி பொம்மைக்கு செய்யும் அலங்காரம் ஒரு தனி திறமை. பாட்டியோட ஒவ்வொரு செயலிலும் அவங்க ஆர்வம் பாசம் தெரியுது.
         
          பாட்டி இன்டலிஜன்ஸ் முன்னாடி ஏ.ஐ இன்டலிஜன்ஸ் பெருசு இல்ல. சொல்லிவிட்டு பாட்டியை முத்தமிட்டாள் சுவாதி. நெகிழ்ந்து போன பாட்டி தன் பேத்தியின் அன்பை நினைத்து கண் கலங்கினாள். அவளுக்கு பரிசாக தன் கல்யாண பட்டுப் புடவையைக் குடுத்தாள். இது வெறும் பரிசு இல்ல ஸ்வாதி’மா. என் உயிர் என்றாள். இந்த புடவை நீ கட்டும் பொழுது நான் உன் கூடவே இருப்பேன். உன்னை ஆசிர்வதித்து கொண்டே இருப்பேன் என்றாள். ஊருக்கு போகும் பொழுது சேகர் நினைத்தான் உண்மை தான் பாட்டி இன்டலிஜென்ஸ் முன்னாடி எந்த டெக்னாலஜியும் நிக்க முடியாது. அன்பின் மொழி என்றும் புதிது தான்.

சிறுகதையின் ஆசிரியர்
ரா.ஷர்மிளா,
ஆதம்பாக்கம்.

 

பொறுமையின் வெற்றி|சிறுகதை|கவிஞர் மா.நந்தினி

பொறுமையின் வெற்றி - கவிஞர் மா.நந்தினி
            ஒரு ஊரில் விவசாயி இருந்தார். அவர் பெயர் முத்து ஐந்நூறு ஏக்கர் காடுகளை பராமரித்து வருகிறார். நூறு ஏக்கர் நிலத்தில்  முந்நூறு தென்னை  மரங்கள் இருக்கின்றன. இரு நூறு ஏக்கர் நிலத்தில்  எலுமிச்சை மரம் இருக்கிறது எலுமிச்சை அறுவடை செய்கிறார். நூறு ஏக்கர் நிலத்தில் கத்திரிக்காய் செடி வைத்துள்ளார். முத்து அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து விவசாய நிலத்தில் காலையில் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி நடைபாதையில்  வீரநடைபாதையில் வீர நடை போடுவார். “அதிகாலையில் எழுந்து நடப்பது உடலுக்கும், மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும்”. முத்து வீட்டிற்கு வருவார் வந்தவுடன் முத்துவின் மனைவி உங்களுக்கு காபி போடவா கேட்கிறாள். சரி போடு முத்து வெளியில் வீட்டு திண்ணையில் நாளிதழ் படிக்க தொடங்கி விடுகிறார்.
         
       கனகா காபி போட்டு கொண்டு வந்து எடுத்துக்கோங்க  என்றாள். அருமையாக காபி போடுறியே கனகாவை புகழ்ந்து பாராட்டினார் முத்து கனகாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது. முத்து வீட்டு தோட்டத்தில் எல்லா காய்கறிகளையும் நிற பழங்களையும் கண்ணைக் கவரும் மலர்களையும் வளர்த்து வருகிறார்.
         
      வீட்டு தோட்டத்தை பராமரிப்பது கனகாவின் வேலையாகும் முத்து பொறுமையாகவும், நிதானமாகவும், சுறுசுறுப்பாகவும்,வேலை பார்த்து வருகிறார். காலையில் முத்து எட்டு மணிக்கு சாப்பிட்டு விட்டு விவசாயத்தோட்டத்திற்கு சென்று விடுவார். நிலத்தில் விதைகளை விதைத்து பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது அவருடைய வேலையாகும்.   காய்கறி, பழங்களை அறுவடை செய்து சந்தைக்கு வாரம் இருமுறை சென்று கனகாவும் முத்து செல்கின்றனர்.
         
       காலையில் சந்தைக்கு  இருவரும் நேரமாக வியாபாரத்தை தொடங்க கிளம்பி விடுவார்கள். மாலை சூரியன் மறையும் நேரம் வீட்டிற்கு இருவரும் வந்து விடுவார்கள். குறைந்த விலையில் நிறைய காய்கறிகள்  பழங்கள் தரமானதாக இருக்கும். பணத்திற்கு நல்ல காய்கறி பழங்களை விற்றுக் கொண்டு வருகின்றனார். பல தொழில்கள் இருந்தாலும் விவசாயி தொழில் போல் எந்த தொழிலும் இருக்க  முடியாது.
”விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை மறந்து விடாதே”. சந்தை முடித்துக்கொண்டு இருவரும் வீட்டிற்கு வந்தனர்.  முன்னை விட பணத்தில் சற்று லாபம்  அதிகம்.  இரண்டு நாட்களில் கனத்த மழை பெய்கிறது.   நிலங்கள் மழை நீர் நிரம்பி விட்டன. வருத்தத்தில் கனகாவும் முத்துவும் வீட்டில் மழை பெய்து கொண்டிருப்பது வருத்தத்தில் கனகாவும் முத்துவும் வீட்டில் மழை எப்ப நிற்கும் என்று காத்துக்  கொண்டிருக்கிறாரர்.
         
         மழை வரும் போது என்னால் காக்க முடியவில்லை நான் தோட்டத்திற்கு சென்று வரப்பெடுத்து வருகிறேன் என்று முத்து கிளம்புகிறார். கனகா போகாதீங்க மழையுடன் இடியும் பலமாக அதிக மழை பெய்து கொண்டிருக்கிறது. அப்ப மழை நின்றுவிட்டது. முத்துவும் கனகாவும் மகிழ்ச்சியாக  இருக்கிறார்கள்.
         
       வெயில் காலம் வந்து விட்டது வெயில் காலம் வந்தவுடன் இரு மடங்கு காய்கறிகள், பழங்கள் தோட்டத்தில் இருவரும் அறுவடை செய்கிறார்கள். “பொறுமை தான் வாழ்க்கையின் மிகப்பெரிய பலம்” பொறுமையாக இருந்தால் தான் வெற்றி நம்மை தேடி வரும்” பொறுமையுடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள் வாழ்க்கை அழகாகும்.

சிறுகதையின் ஆசிரியர்
கவிஞர் மா.நந்தினி,
சேலம்.

 

மெய்க்கீர்த்தி|சிறுகதை|முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்

மெய்க்கீர்த்தி - சிறுகதை- முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்
        ரொம்பவும் ஆச்சரியமாகவும் நம்பமுடியாததாகவும் இருந்தது சுந்தரிக்கு கொழுந்தனார் கீர்த்தி அளித்த பதில். இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு ஆண்மகனா? மனைவியின் இடத்தில் இருந்து இப்படியெல்லாம் சிந்திக்க இயலுமா தன் சித்தப்பாவின் மறைவுக்குச் சென்னையில் இருந்து வந்து அஞ்சலி செலுத்திவிட்டு மறுதினமே சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்த சுந்தரிக்குப் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் நடந்தவைகள் நினைவலைகளில் வந்து சென்றன. அப்பாவின் ஒரே தம்பியான சண்முகம் சித்தப்பாவின் மறைவு செய்தி கேட்டதுவும், வடக்குவீட்டு வாசலில் இருந்து காலையில் பணிக்குப்புறப்படும்போது ஜவ்வாது வாசனையுடன், செந்தூரப்பொட்டும், பெரிய மீசைக்கிடையே மின்னும் சித்தப்பாவின் புன்னகையும் வந்து மறைந்தன.
         
      இன்று வெள்ளிக்கிழமை, சனி ஒருநாள் மட்டும் விடுமுறை எடுத்தால் போதும், ஞாயிறு கிளம்பி திங்கள் வேலைக்கு வந்து விடலாம், என்ற கணக்குப் போட்டு, எப்படியாவது ஊருக்குச்சென்று சித்தப்பாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டிருந்தாள் சுந்தரி.
 புறப்படும்பொழுதே சென்னையில் வசிக்கும் பெரிய தாத்தாவின் மகன்வழி பேத்தியான தங்கை செல்வி வருகிறாளா என்று கேட்டு அவளுடன் இணைந்து சென்றுவிடலாமா? என்று எண்ணினாள்.
         
      ஆனால் தன் முதல் குழந்தைப்பேறு முடிந்து, சென்ற வாரம்தான் பிறந்தகத்தில் இருந்து சென்னை வந்திருக்கும் அவளால் எப்படி உடனே ஊருக்குத் திரும்பி வரமுடியும்? என்ற கேள்வி தனக்குள் எழும்ப, அவ்வெண்ணத்தைக் கைவிட்டுவிட்டுத் தனியாகப் பேருந்தில் ஏறி புறப்பட்டிருந்தாள் சுந்தரி.
         
      தங்களுக்குள் வேறுபாடின்றி வளர்ந்த மூன்று தாத்தா வீட்டுப் பேரப்பிள்ளைகளிலே கடைக்குட்டிதான் தங்கை செல்வி. ‘பாப்பா, பாப்பா’ என்று அக்காமார் மற்றும் அண்ணன்மார்களால் பிறந்ததிலிருந்து இன்றுவரை அழைக்கப்பட்டு அனைவருக்கும் பணிவிடை செய்பவள்.  ‘சித்தி சித்தி’ என்று அக்காமார் பிள்ளைகள் அனைவரின் சிந்தையெல்லாம் நிறைந்து, எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவள்தான் செல்வி. ‘அத்தை, அத்தை’ என்று அன்பு உருக அழைக்கும் அண்ணர்மார்குழந்தைகளுக்கு மற்றொரு செவிலித்தாயானவள் தான் செல்வி. விடுமுறை, கோவில் திருவிழா, குடும்ப விழாக்கள் என ஊருக்கு வரும் அனைத்து சொந்தங்களையும் அன்புடன் உபசரிப்பவள். உறவுகளின் பிறந்தநாள், திருமணநாள்களில் அவர்களுக்கான படச்சுருளை உருவாக்கி, உறவுகளுக்கான புலனக்குழுவில் முதன்முதலில் பதிவிடுபளும் அவள்தான்.
         
       குறிப்பாக இறந்திருக்கும் சித்தப்பா மீது அவளுக்கும், அவள்மீது சித்தப்பாவிற்கும் ஒரு பாசப் பிணைப்பு உண்டு. செல்வி சித்தப்பாவை ‘அப்பா’ என்றுதான் அழைப்பாள். சித்தப்பா, பெரியப்பா உறவுகளை அவ்வுறவு முறை சொல்லி அழைக்காமல், அவர்கள் பெயருடன் ‘அப்பா’ என்பதை இணைத்து அழைப்பதே குடும்ப வழக்கமாக இருந்தது. சண்முகம் சித்தப்பாவைக்கூட அவரின் பெயருடன் இணைத்து ‘சண்முகப்பா’ என்று தான் அனைவரும் அழைப்பர். பணி ஓய்விற்குப்பின் கடையத்தில் தன் சின்ன மகளுடன் வசித்துவந்த சித்தப்பா, என்றாவது ஊருக்கு வருகிறார் என்றால், முன்னமே வீட்டை சுத்தம் செய்ய, தண்ணீர் நிரப்பி வைக்க, உணவு செய்துவைக்க என அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து அவர்களைக் கவனித்து அனுப்புவாள் செல்வி. இரண்டு வருடங்களுக்குமுன் திருமணம் ஆகி,   இஞ்சினியர் ஆன கணவர் சென்னையில் பணிபுரிய அவளும் சென்னை வாசியாகிவிட்டாள்.
         
       சுந்தரிக்குச் சித்தப்பாவுடன் நேரடி நெருக்கம் அதிகமாக இல்லாவிட்டாலும், சித்தப்பா அவளின் திறமைகளைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதை அவள் செல்வியின் மூலம் அறிந்திருந்தாள். ஒருமுறை செல்வி போனில் பேசியபோது, “அக்கா, சண்முகப்பா உன்னோட எழுத்துத் திறமையைப் பத்தி என்கிட்ட அடிக்கடி சொல்லுவாக. நீ எழுதிய புத்தகங்களைப் படித்துவிட்டு  ‘சுந்தரி பெரிய எழுத்தாளரா வருவா, அவள் சிறுவயதிலேயே தைரியமா பேசுவா, பள்ளியில் படிக்கிறபோதே நிறைய எழுதுவா. இன்னும் அவள் சாதிப்பா’ன்னு ரொம்ப பெருமைப்படுவாக.” என்று கூறியிருந்தாள். அந்தப் பாராட்டு சுந்தரியின் மனத்தில் ஒருவித அமைதியையும், மகிழ்வையும் கொடுத்திருந்தது. அவருக்கிடையேயான இடைவெளியைக் குறைத்து, அவர் மீது சுந்தரிக்கு ஒரு மெல்லிய பாச இழையைப் பதித்திருந்தது.
அதற்காகவே சென்ற வருடம் ஊருக்குச் செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தபோது, சித்தப்பாவைச்  சந்திக்க கடையம் சென்றிருந்தாள். அப்போது அவர் சுந்தரியிடம் நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசியிருந்தார். அப்போது, சுந்தரியின் உடல்நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவரது அக்கறையான பேச்சு, மறைந்த அவளது தந்தையின் பாசத்தை நினைவூட்டியது. இதுதான் ‘இரத்தபாசமோ’ என்று வியந்துபோனாள். செல்வியைப் பற்றிப் பேச்சு எழும்போது, “பெரியவா வள்ளியூரில் இருக்கா. சின்னவா இங்க இருக்கிறா. சின்னவனும் பணி நிமித்தம் பெங்களூரில் இருக்கிறான். நான் ஊரில் இருந்த காலத்தில் பிள்ளைகளுக்கும் மேலா என்னைக் கவனித்தவள் செல்வி” என அவளின் பாசத்தையும் கவனிப்பையும் நினைவுகூர்ந்து சுந்தரியிடம் நெகிழ்ந்தவர் அவர். பாவம் அவர் இறப்பிற்கு, கைக்குழந்தையை வைத்துக்கொண்டு வரமுடியாத சூழலில் செல்வி இருப்பாளே என்று எண்ணியவாறே பயணித்தாள்.
           
      மறுநாள் அதிகாலையில் ஊருக்கு வந்த சுந்தரி, தெருமுழுவதும் அடைத்துப் போடப்பட்டிருந்த பந்தலில் வரிசையாகப் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்த தம்பிமார்கள் எழுந்து அவள் கைபிடித்து துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள, அக்கா தங்கைகளின் கணவன்மார்கள் எழுந்து வணங்க, அவர்களை வணங்கியவாறு கடந்தபோது, அவர்களுள் ஒருவராக தங்கை செல்வியின் கணவர் கீர்த்தியும் நிற்பதைக் கவனித்தாள். ‘இவர் மட்டும் வந்திருப்பார்போல’ என்று மனதிற்குள் எண்ணியவாறே வீட்டிற்குள் நுழைந்தாள் சுந்தரி.
         
      நடுவீட்டில் குளிரூட்டப்பட்ட பெட்டியில் கிடத்தியிருக்கும் தன் சித்தப்பாவின் அருகில் கனத்த இதயத்துடன் சில நிமிடங்கள் நின்று அஞ்சலி செலுத்திவிட்டு, கால்மாட்டில் அமர்ந்திருந்த தங்கைகளின் அருகில் அமர்ந்து துக்கம் விசாரித்தாள். சின்ன அத்தை களஞ்சியம், பெரிய அத்தை துரைச்சி, சின்ன தாத்தா வீட்டு அத்தை கனி, பெரிய தாத்தா வீட்டு அத்தை பாக்கியம் என மூன்று வீட்டுத் தாத்தாக்களின் பெண் வாரிசுகள்,  மருமக்கள்மார், பேத்திமார் என மொத்த உறவுகளும் நடுஅறையை நிறைத்திருக்க, ஒவ்வொருவர் அருகிலும் சென்று விசாரித்துவிட்டு அவர்களோடு அமர்ந்தாள் சுந்தரி.
குழந்தை வளர்ப்பு, பெரியோர் கவனிப்பு, பணியிடத்தில் விடுமுறை இன்மை எனப் பல காரணங்களால் முக்கிய நிகழ்வுகளில்கூட கலந்துகொள்ளாது, புலனக்குழுவில் மட்டுமே உறவுகளின் நல்லது கெட்டதுகளை விசாரத்து வந்தவள்தான் அவள். ஆதலால் சுந்தரியின் வருகையை அன்று எதிர்பாராத உறவுகளும், இரண்டு வருடங்களுக்குமுன் மறைந்த அவளது தந்தையின் மறைவிற்குத் துக்கம் விசாரிக்க இயலாத தூரத்து உறவுகளும் அவளைக் கண்ட மகிழ்வில் அன்புடன் விசாரித்தனர்.  துக்க விசாரிப்புகள் முடிந்து இயல்பு நிலைக்கு வந்தபோது,
”எப்படி அக்கா வந்த, தனியாகவா வந்த? என்று தங்கை கலா கேட்க,
”ஆமா கலா. நேற்று இரவு கிளம்பி பஸ்ல நான்மட்டும்தான் வந்தேன்'” என்றாள் சுந்தரி.
”பாப்பாகூட அவ வீட்டுக்காரருடன் நேற்று இரவு பஸ்ல கிளம்பி காலையில்தான் வந்து சேர்ந்தாள். நீ வருவது தெரிந்திருந்தால் சேர்ந்து வந்திருக்கலாம்ல” என்றாள் செல்வியின் அக்காவான தங்கை வடிவு.
”ஓ.. அப்படியா.. செல்வியும் வந்துவிட்டாளா? வெளியில் அவள் மாப்பிள்ளையைப் பார்த்தேன்.” என்றவாறே, தான் தப்புக்கணக்குப்போட்டுவிட்டதை உணர்ந்து மனதிற்குள் வருந்தினாள் சுந்தரி. பாவம் அவள் என்ன செய்வாள்? அவள் தன் மூத்த மகனைப் பிறந்தகத்திலிருந்து சென்னைக்கு அழைத்துச்சென்ற இரண்டாவது வாரத்திலேயே அம்மாவைப் பெற்ற பாட்டி ஊரில் இறந்துவிட, இப்போதுதானே வந்தோம், கைக்குழந்தையுடன் எங்கே மீண்டும் ஊருக்குச் செல்வது என்று பாட்டியின் இறுதிச்சடங்கு நிகழ்வைத் தவிர்த்தவள்தானே அவள்.
”ஆமா அக்கா. பாப்பா வந்திருக்கா. அவளுக்குப் பிரியமான அப்பாவாச்சே, வராம இருக்கமுடியுமா? இவ்வளவு நேரம் இங்கதான் இருந்தாள். இப்போதான் ‘குழந்தை அழுகிறானு’ நந்து சொன்னதும் பார்க்கப் போயிருக்கா என்றாள் வடிவு.
         
       ஒரு கட்டத்தில் பதினெட்டுப் பட்டியில் இருந்துவந்த உறவுகளும், சம்பந்தவழி உறவுகளும் மேளதாளத்துடன் வாக்கரிசி சுமந்துவந்து துக்கம் விசாரிக்க வந்திருக்க, நடுஅறையில் கூட்டம் அலைமோத செல்வியையும் குழந்தையும் பார்த்துவிட்டு வரலாம் என்ற எண்ணத்துடன் சற்றே வெளியேறினாள் சுந்தரி.
பந்தலின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியில், தங்களுக்கு அன்பளிப்பு வழங்கும் நபர்களின் பெயர்களைக்கூறி, அவர்கள் சார்பாக சித்தப்பாவின் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், கூலிக்கு மாரடித்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர் அதற்காக அழைக்கப்பட்ட குழுவினர். அவர்களைக் கவனித்தவாறே அடுத்து இருந்த செல்வியின் அம்மா வீட்டிற்குள் நுழைந்தாள் சுந்தரி.
         
      குழந்தைக்குப் பால் ஆற்றிக்கொண்டிருந்த செல்வி, சுந்தரியைப் பார்த்ததும், “என்ன அக்கா நீயும் வந்திட்டியா? நேற்று சென்னையில் இருந்து கிளம்பும்போதே உன் கொழுந்தன், ‘உங்க அக்கா வருகிறார்களா எனக் கேள். வருவதாக இருந்தால் நம்முடன் அழைத்துச் சென்றுவிடலாம்’ என்று சொன்னாக, நான்தான் அவளுக்கு என்ன சூழலோ, நாம கேட்டு வரமுடியலனா கஷ்டப்படுவா என்று சொல்லி விட்டுவிட்டேன்’ என்று சுந்தரி மீதான தன் அன்பை வெளிப்படுத்தினாள் செல்வி.
         
       செல்வியின் கணவர் கீர்த்தி. அவருக்குத்தான் என்ன அக்கறை. அவர்கள் திருமணத்திற்குகூட சுந்தரி வரவில்லை. இருவரும் சென்னைக்கு வந்துவிடபோது, சுந்தரியைப் பார்க்க வேண்டும் என்று செல்வி விரும்ப,  தொடர்பணிகளுக்கிடையே சுந்தரி அவர்களை வீட்டிற்கு அழைக்கமுடியாத சூழலில்,  சற்றுநேரம் ஹோட்டலில் சந்திக்க ஏற்பாடு செய்துதந்த நல்லவர் அவர் என்று எண்ணியவாறே, வெளியில் எட்டிப்பார்க்க, இறுதிச்சடங்கிற்கான பணிகள் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.
         
      சித்தப்பாவின் ஒரே மகன் தம்பி கணேஷ் பெரியதாத்தா வீட்டுச் சார்பாக தம்பி தர்மன், சின்னதாத்தா வீட்டுச் சார்பாக தம்பி குமரன், தங்கை தனலட்சுமியின் கணவர் ராமர், ரேகாவின் கணவர் செல்வம், பெரிய அத்தை மகன் துரை அத்தான், சின்ன அத்தை மகன் ரவி ஆகிய எழுவரும் நீர்மாலை எடுத்துவர, சித்தப்பாவின் உடல் தெரு வாசலில் தென்ன ஓலையில் செய்த தட்டியில் வைக்கப்பட்டிருக்க, எடுத்துவரப்பட்ட நீரை ஒவ்வொருவராய் சுற்றி வந்து சித்தப்பாவின் கால்களில் ஊற்றினர். தங்கைகள் தனலட்சுமியும், ரேகாவும் கொல்லிப்பானை சுமந்து மூன்றுமுறை சுற்றிவந்தனர்.
         
      “கடைசியாக அப்பானு சத்தமா கூப்பிட்டு உடப்பிறந்தானைக் கட்டிப்பிடித்து அழுங்க” என்று தங்கை இருவரையும் தம்பி கணேஷைக் கட்டிப்பிடித்து அழும்படி குரல்கொடுத்தார் கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஒருவர். தந்தையை இழந்த துயரத்துடன் அங்குள்ளோரின் கட்டளைப்படியெல்லாம் சடங்குகளை செய்துமுடித்தனர், தம்பியும் தங்கைகளும்.
          பேத்திமார்கள் மாவிலக்குகளுடன் சுற்றிவர, மருமகள் மீனாவும், மகள் மருமகள் முறையார் அனைவரும் சித்தப்பாவின் கையில் பணத்தை வைத்து வைத்து ‘சீதேவி பணம்’ என்று தன் முந்தானைகளில் வாங்கிக்கொண்டனர். உறவுகள் இறுதியாக வாய்க்கரிசி போட அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் பேரன்மார்கள் தீப்பந்தம் பிடித்து, முறுக்கு, பழம் செலவளித்தவாறு இடுகாடுக்கு எடுத்துச்சென்றனர்.
         
      தெருமுனையிலேயே திரும்பிய பெண்கள் வீட்டு வாசலைத் தண்ணீர்விட்டு சுத்தம்செய்து, குளித்துமுடிக்க, இடுகாடு சென்ற ஆண்களும் குளித்து திரும்ப சித்தப்பாவின் சம்பந்தார் முருகேசன் மாமா ஏற்பாடு செய்திருந்த உணவை அனைவரும் உண்டு, சற்றுநேரம் பேசியிருந்துவிட்டு, இரண்டு நாட்களுக்குரிய சோர்வால் வீடுகளில் முடங்கலாயினர். சுந்தரியும் தங்கை தனலட்சுமியிடமும் தம்பி கணேஷின் மனைவி மீனாவுடனும் சித்தப்பாவின் இறுதிநாட்கள் சிகிச்சை குறித்து நீண்டநேரம் பேசிவிட்டு உறங்கிப்போனாள்.
         
  மறுநாள் சுந்தரி எழுந்து தயாரானபோது, செல்வி வீட்டு வரவேற்பு அறையில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்க, குழந்தை மலரைக் கைகளில் வைத்தவாறு அவர்களுடன் நின்றுகொண்டிருந்தார், செல்வியின் கணவர் கீர்த்தி. மரியாதை நிமித்தமாக அவருடன் சுந்தரி பேசத்தொடங்க, அவர்களின் உரையாடல் நகர – கிராம வாழ்க்கைக்கான வேறுபாடு, இன்றைய கல்வி நிலை, அரசியல், பெண்ணுரிமை எனப் பல தளங்களுக்குச் சென்று வந்தது.
         
      அவற்றின் ஊடே, நேற்றிலிருந்தே உள்ளத்தில் எழுந்ததான, செல்வியால் எப்படி உடனே வரமுடிந்தது? என்ற கேள்வியைக் கீர்த்தியின் முன் வைத்தாள். “திருமணத்திற்கு முன் வரை உங்க குடும்பம் எவ்வளவு பெரியதென்று தெரியாது. திருமணத்தின் போதுதான் எவ்வளவு உறவுகளுக்குள் அவள் வாழ்ந்து வருகிறாள் என்பதை அறிந்து கொண்டேன். அப்படிப்பட்ட அவளை இங்குள்ள உறவுகளில் இருந்து பிரித்து என் ஒருவனுக்காக சென்னைக்கு அழைத்து வந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு எனக்குள் அடிக்கடி எழுவதுண்டு. பெரிய படிப்புப் படித்திருந்தாலும், அவளும் எனக்காக அவள் உறவுகளை விட்டுவிட்டு வந்து என்னைக் கவனித்து அன்பு செலுத்தினாள். இப்போது கைக்குழந்தையோடு தனியாக இருந்து என்னைக் கவனிக்கிறாள். அவளுக்கு கைமாறாக வேறு என்ன செய்ய இயலும்? இது மாதிரியான சந்தர்ப்பங்களில் அவளை அவள் சொந்தங்களுடன் உறவாட வாய்ப்பளிப்பதுதானே நியாயமாக இருக்கமுடியும்? என்று தெளிவான உள்ளத்தோடு நிதானமாகப் பதிலளித்தார் கீர்த்தி.
         
         கீர்த்தியின் தெளிவான பதிலைக் கேட்ட சுந்தரிக்கு, அவர் மீதான மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. இந்தக் காலத்திலும் இப்படி ஒரு வாழ்க்கைத்துணை இருக்கிறாரா? மனைவியின் சந்தோஷத்தையும், அவளின் உறவுகளையும் தன் சந்தோஷமாகக் கருதும் ஒரு மனசு! சுந்தரிக்கு மனம் நெகிழ்ந்தது. அவள் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது. கீர்த்தி போன்றோரின் அன்பு, குடும்ப உறவுகளின் மேன்மை, மனிதநேயம் ஆகியவை என்றும் நிலைத்திருக்கும் என்பதை அந்தத் தருணம் அவளுக்கு உணர்த்தியது. எந்தச் சூழ்நிலையிலும் உறவுகளுக்கிடையேயான பிணைப்பைத் தளரவிடக்கூடாது எனக் கண்களில் நீர்ப்பணிக்க மனதில் உறுதிபூண்டாள் சுந்தரி. மனம் நிறைந்த அமைதியுடன் சென்னை திரும்பும் பேருந்தில் உறங்க முற்பட்ட சுந்தரி அதற்குமுன் அலைபேசியை எடுத்து  உறவினருக்கான புலனக்குழுவில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்: “நம்ம கீர்த்தி, பெயருக்கு ஏற்றார் போல் ஒரு நிஜமான ‘மெய்க்கீர்த்தி’!”

சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய், 
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை
ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரி,
குரோம்பேட்டை, சென்னை 44.

 

உணர்ச்சிகளின் சில வரிகள்|ச. கார்த்திக்

உணர்ச்சிகளின் சில வரிகள்
🎯அம்மாவைப் பற்றி எழுதவே

நினைத்தேன்,

கண்ணீர் தான் வருகிறது.

🎯எழுத்து கூட்டியாவது

படித்துக் கொண்டு இருக்கும்

தாயை பார்க்கிறான்

மகள்(ன்).

🎯அம்மாவின் கண்ணீர்

துளிகள் எல்லாம்,

மகன்(ள்) மகிழ்ச்சியைக் காண.

🎯வெயிலைப் பார்த்து

தாய் நிழலை தேடுகிறது,

கன்று..

🎯அவளை அறியாமால்

துப்பட்டாவை சரி
செய்துக்கொண்டே இருக்கிறது

காற்று…

🎯இருந்ததாலோ  என்னமோ

வெளி உலகம் தெரியாமலே
போனது
வயதான பாட்டிக்கு.

🎯அம்மாவை எதிர்ப்பார்த்துக் கொண்டே

சமையல் அறையில்

நடுங்கிக் கொண்டிருக்கிறது
பூனை..

🎯காற்றெல்லாம்

சண்டை போடுகிறது

அவள் கூந்தலிடம்

சரி செய்துக் கொண்டிருக்கிறது கை.

🎯திசையெங்கும்

அழுகுரல் கேட்கிறது,

மகள்(ன்) உயிர் பிரிந்தப் பிறகு.

🎯சத்தம் போட்டு அழும் குழந்தைகள்

வளர்ந்த பிறகு,

சத்தம் போடாமல்
அழ
கற்றுக்கொள்கிறது.

🎯கதவு தட்டியே செல்கிறது

காற்று,

திறந்து பார்க்கும்

குழந்தைகள்,

ஏமாற்றத்துடன் செல்கிறது

மீண்டும் மீண்டும்..

🎯கோவிலுக்குச் சென்ற குழந்தைகள்

இன்றும் ஏமாற்றத்துடன்
 
வீட்டிற்கு திரும்புகிறார்கள்.

🎯குழந்தையை அழ
வைத்துப்
பார்க்கிறது

பொம்மைகள்.

🎯 குழந்தையின் சிரிப்பு

புல்லாங்குழலின் வேதனையில்.

🎯புத்தகம் எல்லாம்

கரையான் படிக்கிறது.

🎯புத்தகம் வாங்குவதற்கு

சென்றேன்,

விலை பார்த்துவிட்டே வந்தேன்.

🎯என்னை எப்போதும்

சோதித்து பார்த்துக் கொண்டே

இருக்கிறது புத்தகம்.

🎯கூட்டிற்கு விடுதலை தருகிறது

ஏதோ ஒரு
பறவை தான்.

🎯பறவைகள் வீடு

எல்லாம்

வாடகைக்கு விடுவதில்லை.

🎯ஒரு பறவையின் நிழலை

கண்டு பயப்படுகிறது

மீன்கள்.

🎯ஏதோ ஒரு மரத்தின் மீது

கூடு கட்டி வாழ்கிறது
பறவை.

🎯வாழை என்ற பெயரோ

இந்த ஏழைதான் வைத்தான்.

🎯பொய் என்று தெரிந்தும்

நீ – ரசிக்கிறாய்.

🎯வாசம் இல்லாத பூ விடம்!

ஏதோ ஒரு பட்டாம்பூச்சி

சுற்றிக் கொண்டே தான் வருகிறது.

🎯நீ எந்தப் பக்கம்

சென்றாலும்

நான் உன்

நிழலாய் தொடருவேன்.

🎯நிலவைப் போல் விலகியிருந்தாலும்

நட்சத்திரம் போல்

உன்னை நினைத்துக்கொண்டே

இருப்பேன்.

🎯அவள் பார்வையில்

நான் எப்போதும்

தோற்கிறேன்

போர் புரிவதன் மூலம்.

🎯நட்பாய் பழகி

காதலாக முடிகிறது,

நீயும் நானும் சாட்சி

அந்த வெற்று காகிதத்திற்கு..

காதலுக்கு தெரிந்தயொன்று சாதியின்

வலி போராட்டம்…

இந்த மண்ணுலகில்

யாரோ ஒருவர் மட்டும்(மே)

வாழ்கிறோம்

அடுத்த தலைமுறைக்கு

கடத்திச் செல்கிறோம்

சாதியின் பெயரில் தான்.

🎯ஊரைக் காக்கும்

கடவுளைக் காக்க

பூட்டு எதற்கு..

🎯சீடன் குருவிடம் கேட்கிறான்

மழை வருவதற்கு இறைவன்
தான் காரணமா?

இல்லை!

நம் வேண்டுதலை நிறைவேற்றுவாரா ?

தெரியவில்லை

அவர் வேலை என்ன

டவுளாக இருப்பதே ஒரு வேலை.

🎯ஊருக்கு போவோம் என்று சொன்னால்

எனக்கு நினைவுக்கு வருவது(தே)

ஆலமரத்தடியில் பேசிக்கொண்டு இருக்கும்

தாத்தாவின் கதையாடலும்,

என் பாட்டி(யின்) மௌனத்தின் வெளிப்பாடுகள்,

நண்பர்களும்,

அது மட்டும் இல்லாமல்

அவளைப் பார்ப்போம் என்று

நினைத்துக்கொண்டே வருவேன்,

அப்போது,

அம்மாவின் குரல் மட்டும் கேட்கும்

விடிந்து விட்டது எழு தம்பி என்று கூறுவார்

அவளைப் பார்க்காமல் எழுகிறேன்.

இந்த கனவில் தான்.

கவிதையின் ஆசிரியர்
ச. கார்த்திக்
முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
திருப்பத்தூர்.

 

Bharathi’s Journalistic Work|Dr.V.Kalaiyarasi

பாரதியின் இதழியல் பணி
Abstract
         Bharathiar created social awareness among Tamilans ​​through magazines since 1904. Bharathi made a big change in the 20th century. He raised his voice for women through the magazine. Bharathi worked in various magazines. Bharathi was the one who eliminated the system of heading in English. This article explains the impact Bharathiar made on journalism.


“பாரதியின் இதழியல் பணி”

ஆய்வுச்சுருக்கம்           
      பாரதியார் தமிழர்களிடையே 1904 ஆம் ஆண்டு முதல் சமுதாய விழிப்புணர்வை இதழ்கள் மூலமாக ஏற்படுத்தினார். 20 ஆம் நூற்றாண்டில் பாரதி பெரும் மாற்றத்தை நிகழ்த்தியுள்ளார். பெண்களுக்காக இதழின் வழியே உரிமைக்குரல் எழுப்பினார். பாரதி பல்வேறு இதழ்களில் பணியாற்றினார். ஆங்கிலத்தில் தலைப்பிடும் முறையை நீக்கியவர் பாரதி. இவ்வாறு பாரதியார் இதழியலில் ஏற்படுத்திய தாக்கங்களை இக்கட்டுரை விளக்குகிறது.

முன்னுரை
      தொன்மையும், வரலாற்றுப் பெருமையும், பண்பாட்டுச் செழுமையும் கொண்டு உலகில் இன்று வாழும் மக்கள் இனங்களில் தமிழினத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. தமிழ் இலக்கிய உலகின் சூரியனாகச் சுப்ரமணிய பாரதியார் தோன்றினார் இந்து பத்திரிகை ஆசிரியர் சுப்பிரமணிய அய்யரின் அழைப்பின் காரணமாக பத்திரிகை உலகில் அடியெடுத்து வைத்தார். பாரதியின் இதழியல் பணி பற்றி கட்டுரையில் காண்போம்.

      மதுரை சேதுபதிப்பள்ளியில் தமிழாசிரியராகத் தமது பணியைத் தொடங்கிய பாரதி பின்னர் இந்து பத்திரிகையில் நுழைந்தார். இதன் மூலம் அரசியல் நோக்கும் இலக்கிய நோக்கும் விரிவடைந்தன என்று கூறலாம். மக்களைக்கவரும் வகையில் சிந்து தெம்மாங்கு முதலிய யாப்பு வகைகளை கையாண்டு பாடல்களைப் பாடினார்.

     1904இல் கல்விச்சக்கரவர்த்தி பாரதியார் சுதேசமித்திரன் நாளிதழில் ஆசிரியராக பொறுப்பேற்றார். இதன் மூலம் தூக்கத்தில் இருந்த தமிழர்களைத் தட்டி எழுப்ப நாளிதழை பயன்படுத்தினார். இதழ்களின் மூலம் சமுதாய விழிப்புணர்வும் அரசியல் விழிப்புணர்வையும் எழச்செய்தார். தமிழில் முதல் அரசியல் இதழ் என்ற பெருமைப்பெற்றது. சுதேசமித்திரன் இதழ் முதலி 1889 இல் வார இதழாக தொடங்கப்பட்டு பின்னர் 1889 இல் நாளிதழாக மாற்றப்பட்டது. தினசரிப் பத்திரிக்கைகளில் முக்கியமான வேலை ஆங்கிலத்தில் வரும் செய்திகளை தமிழில் வேகமாக மொழிபெயர்ப்பது. கடினமான செய்தி, நீளமான பிரசங்கம் போன்றவற்றை தமிழில் எளிய நடையில் பாரதியார் மொழிபெயர்த்தார். 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இலக்கியப் போக்கு திருப்புமுனையை உருவாக்கினார் பாரதி.

      தேசப்பற்று பாடல்களைப் பாடி வந்த அவர் 1907ல் மூன்று பாடல்கள் அடங்கிய நான்கு பக்க கவிதை நூலை கதேச கீதங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டார். 1908ல் துவக்கத்தில் சுதேச கீதங்கள் முதற்பாகமும், புதிய கட்சியின் கொள்கைகள் காங்கிரஸ் யாத்திரை ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டார்.

பெண் முன்னேற்ற பத்திரிக்கை
     சக்கரவர்த்தினி என்ற இதழில் 1905 ஆகஸ்ட் மாதம் யார் ஆசிரியராக பொறுப்பேற்று நடத்தினார். இந்த இதழ் முழுக்க பெண்கள் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட இதழ் ஆகும். மாதர்களுக்கு என தனியாக மாதப் பத்திரிகை தொடங்கப்பட்டது.
தன் அதிபதி வைத்தியநாதையர் ஆவார். இது மாதர் பத்திரிகை என்பதால் பாரதியார் மாதர் சுதந்திரங்கள், மாதர்களின் நிலையான பாரத குமாரிகள் முதலிய தலைப்புகளில் மாதர் முன்னேற்றத்துக்கான கட்டுரைகளை எழுதினார். சக்கரவர்த்தினி 13 மாதங்கள் ஆசிரியராக பணியாற்றிய பாரதி. இவ்வித சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை வரதட்சணை, கைம்பெண் கொடுமை இளமை மணம் ஆகியவற்றை எதிர்த்துப் பெண்கல்வி. பெண்ணுரிமை பற்றிய கட்டுரைகளை வெளியிட்டார்.

இந்தியா இதழில் பாரதியின் பங்கு
        நாட்டு விடுதலைக்காக தம்மால் முடிந்தவரை வீரச்சுவை மிக்க பாடல்கள், கட்டுரைகள், கேலிச்சித்திரங்கள், தலையங்கங்கள் மூலமாக “இந்தியா” என்ற பத்திரிகையில் பாரதியார் தம்முடைய சுதந்திர வேட்கையை துணிவுடன் மக்கள் மத்தியில் பரப்பினார். இதன் காரணமாக பாரதி மீது வாரண்ட் இருப்பதாக நண்பர்கள் சொல்ல அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாரதியார் புதுவைக்கு சென்றார். அங்கேயும் போலீஸ் கெடுபிடி இருந்தது. இருப்பினும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் புதுவையில் இருந்த படி இந்திய இதழை தொடர்ந்து துணிவுடன் நடத்தினார்.
1906 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ் வார இதழாக ஆரம்பமாகிய இவ்விதழ் 1908ல் பெரிய அளவில் 8 பக்கங்களுடன் வந்தது. தென்னாட்டில் இதழ்தோறும் கார்டன் வெளியிட்ட முதல் பத்திரிகையாக இந்தியா விளங்கியது. அரசியல் கட்சி கட்டுரைகள் தவிர பாரதியின் பாடல்களும் கதைகளும் இதழில் வெளிவந்தன “ஞானரதம்” இந்தியாவில் தொடர்கதை போல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது

பாரதி பணியாற்றிய இதழ்கள்
      அரவிந்தர் கல்கத்தாவில் நடத்திவந்த தர்மா என்ற இதழை அடியொட்டி புதுவையில் பாரதி தர்மம் என்ற இதழை நடத்தினார். வ.வே.சு.ஐயர், பாரதி, நீலகண்ட பிரம்மச்சாரி ஆகிய மூவரும் சேர்ந்து தர்மம் என்ற இதழை வ.வே.சு.ஐயர் வீட்டு முகவரியில் நடத்தி உள்ளனர். இவ்விதழ் ஆர்.கிருஷ்ணசாமி அய்யர் என்பவரால் வெளியிடப்பட்டது. இவ்விதழின் வாயிலாக பாரதியார் சுதேசியம் சம்பந்தப்பட்ட படைப்புகளை மக்களுக்காக வெளியிட்டு வந்தார்.

       சென்னையில் புகழ்பெற்ற டாக்டராக விளங்கிய டாக்டர் நஞ்சுண்டராவ் பாரதிக்கா நடத்திய இதழ் தான் பால பாரதா அல்லது யங் இந்தியா என்ற பத்திரிக்கை. தத்துவம். தேசியம், மக்கள் வாழ்வியல் புனரமைப்பு, வேதாந்தம் குறித்த செய்திகள் இம்மாத பத்திரிகையில் வெளிவந்தன. இதன் முழு பெயர் பாலபாரதம் பாலபாரதி என்று குறிப்பிடுகின்றனர். இப்பத்திரிகையில் பாரதி சுவாமி விவேகானந்தரின் எழுச்சி உரைகளையும் தேசபக்தி என்னைப் பற்றி எழுதிய கட்டுரைகளை இதில் வெளியிட்டிருந்தார். இவ்விதழின் முகப்பு அட்டையில் பால பாரதா அர் இங் இண்டியா என்பதை விவேகானந்தரின் குறிக்கோளை அடையும் வரை நில்லமின் என்னும் கருத்து மொழி ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்தது.

      பாரதி சொந்தமாக தாமே நடத்திய பத்திரிக்கை கர்மயோகி இப்பத்திரிகை 1907 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்ட இதில் ஆரிய தர்மம், பாரத நாட்டு பாரம்பரியமிக்க கலைகள், தொழில்கள், காவியங்கள், சாஸ்திரங்கள், அரசியல் விஷயங்கள் போன்ற பல செய்திகளை விவரிக்கும் வகையில் இப்பத்திரிகை இருந்தது இது ஒரு மாதப் பத்திரிகை ஆகும்.

புனைப்பெயர்
        ஞான பாது இதழில் பாரதியார் தம்முடைய படைப்பான கவிதைகளை எழுதினார். 1913 முதல் 1915 வரை நடந்த இவ்விதழில் சொந்தப் பெயரிலும் புனை பெயரிலும் எழுதியுள்ளார். அன்றைய காலகட்டத்தில் பாரதியின் எழுத்துக்களை வெளியிட இதழ்கள் அஞ்சிய போது துணிந்து வெளியிட்டவர் சுப்பிரமணிய சிவா. இவர் பாரதி எழுதிய “ஒளியும் இருளும்” மது கண்ணன் என் தாய் யோகசித்தி, இரவாமை, பாப்பா பாட்டு இவை போன்ற பிற கவிதைகள் ஞானபாது இதழில் வெளிவந்தன.
1909ஆம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதியில் இருந்து வெளியான விஜயா இதழ் 1910ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாம் வாரம் வரை வெளிவந்தது. இவ்விதழ் சென்னையில் திருவல்லிக்கேணி ஹைரோட்டில் இருந்து வெளிவந்தது. திருமலாச்சாரிய ராவ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இவ்விதழ் தினசரி பத்திரிகையாக வெளிவந்தது. பாரதி தன்னுடைய படைப்புகளை இதில் வெளியிட்டார். 
கருத்து படமும் கேள்வி படங்களும்
      ஹிந்தியில் வெளிவந்த பஞ்ச் என்ற இதழ் பாரதிக்கு தூண்டுகோலாக இருந்ததால் அவர் சித்திரவல்லி என்ற இதழில் சித்திரங்களும் கருத்து படங்களையும் கேள்விப்படுகிற நிறைந்ததாக இருந்தது. படிக்காத பாமர மக்களுக்குப் புரியும் வகையில் படித்தவர்களும் சிறுவர்களும் இன்புறும் வகையில் இவ்விதழின் படைப்புகள் இருந்தன. பாரதியின் கருத்து படங்கள் புதுமையை மட்டுமல்லாது தேசிய எழுச்சியை இந்திய மக்களிடையே தட்டி எழுப்பக் கூடிய வகையில் இருந்தன.
அன்றைய காலகட்டத்தில் செய்திகளுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு எழுதி கீழே தமிழில் தலைப்பு இடுவது அக்கால இதழ்களில் வழக்கம். இவ்வாறு ஆங்கிலத்தில் தலைப்பிடும் முறையை நீக்கியவர் பாரதியார். அதுமட்டுமன்றி தமிழ் ஆண்டு மாதம் நாள் ஆகியவற்றையும் பாரதியார் பயன்படுத்தியுள்ளார்.

முடிவுரை
      இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு உரமிட்டு நீர் பாய்ச்சிய பெருமை தமிழில் வெளிவந்த இதழ்கள் ஆகும். அதில் பாரதியாரின் இதழியல் பணி மிகவும் குறிப்பிடத்தக்கது. தம்முடைய விடுதலை வேட்கையை கவிதைகள், கட்டுரைகள் மூலம் மக்களிடையே ஒரு புரட்சியை விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்றால் மிகையாகாது. இன்றைய செய்தி நாளைய வரலாறு. எனவே செய்தித்தாள்கள் தரம் வாய்ந்ததாக இருந்தால் அது சரியான வரலாற்றை தரமுடியும் என்பதை தமிழர்கள் மூலம் நிரூபித்து காட்டியவர் பாரதியார்.

பார்வை நூல்கள்
1.பாரதி இந்தியா – சிலம்பு நா.செல்வராசு.

2.பாரதியார் இதழியல் புதுமையாளர் – தமிழ் இந்து, 2021.

3.பாரதி பயிலகம், இந்தியா இதழ், எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர் குறிப்பு.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் வ. கலையரசி, 
உதவிப் பேராசிரியர்,
பதிப்புத் துறை, 
திராவிடப் பல்கலைக்கழகம்,
குப்பம், ஆந்திரா -517426.

 

 

Recolutionary Lady Dhaaniyamaali in Kamaba Ramayana|Dr.G.Mangaiyarkkarasi

கம்பராமாயணத்தில் புரட்சிப் பெண் தானியமாலி - முனைவர் க.மங்கையர்க்கரசி
Abstract               
        In the Ancient era, womenfolk were living in such a bitter position that they cannot even ask as an information about the blenders or mistakes committed by their respective life partners. This kind of state of affairs were not only confined to the normal women force of the society but  was also  very much prevalent even with the Queens of the Great Kings of several empires. Though King Ravana’s second wife Dhaaniyanmaali and the mother of Adhikayan who has not even had the sight of others cry  was aware that there were a few other wives and women in thousands were havng rights over Lanka’s King, she was not questioning and was serious about those issues. Because of the death of his beloved son Adhikaya, who fought with Rama and Lakshmana and defeated Indra, the leader of the gods,  with unutterable grief and anger, she though Ravana as the cause of her Son’s death. She direcly accused that Ravana’s lust for Goddess Sita for the loss of her Son .With more anger and fury she asks him. Where did your courage has gone?  Don’t you understand what I mean? Won’t you listen to me ? You never listen to your younger brothers Kumbakarna and Vebeeedanan. You, being the root cause  for the loss of everyone including Akkumaran and Adhikayan, still  ruling the Empire ! Now, only Mandothari’s son, Indrajit, is alive. Will you go for Successive Wars  again with him? In this way she started raising series of questions to Ravana without fear. Though Dhaaniyamaali was very well aware that her own husband Lanka’s King Ravana is the wrong doer she was firm in her statement that Blender is still a Blender and she also says “ Already you have incurred more loss of Brave personalities of your Empire and because of your lust towards Devi Sita, you may have to incur further more bravery from your side.”   Here Poet Kambar through his exemplary expressions, has depicted Dhaaniyamaali as a Revolutionary lady through her above explicit and  fiery  contentions in this Epic.

Keywords: Dhaaniyamaali ,Ravan, Raman, Sita, Lakshmanan, Caution, Anger, Rage.


“கம்பராமாயணத்தில் புரட்சிப் பெண் தானியமாலி”

ஆய்வுச் சுருக்கம்
           முற்காலத்தில் கணவன் என்ன தவறுதான் செய்தாலும்  அதனை தகவலாகக் கேட்க கூட முடியாத நிலையில் தான் பெண்கள் இருந்தனர். சாதாரண பெண்களுக்கு மட்டுமல்ல, மன்னனின் தேவியாக இருந்தாலும் இதேநிலைதான். இராவணனின் இரண்டாவது மனைவி தானியமாலி. பிறர் அழுததைக் கூட பார்த்தறியாதவள். அதிகாயனின் அம்மா. இலங்கை வேந்தனுக்கு சில மனைவியரும், பல்லாயிரம் உரிமை மகளிரும் இருந்ததை அறிந்த போதிலும், எதையும் கேட்கவும் எண்ணாதவளாய் இருந்தாள். இராமலட்சுமணரோடு போரிட்டு தேவர்களின் தலைவனான இந்திரனையும் வென்ற தன் அருமை மகன் அதிகாயன் இறந்ததால், சொல்ல முடியாத துயரத்தில் வந்த கோபத்தோடும், ஆத்திரத்தோடும் அவன் இறப்புக்கு காரணம் இராவணன் தான். அவன் லோகநாயகி சீதை மேல் கொண்ட காமமே என்பதை நேரடியாகவே இராவணனிடம் கேட்டாள். மகனின் இழப்பினால் வந்த சோகத்தால் வந்த கோபமே. உன்னுடைய வீரம் எங்கே போனது? நான் சொல்வதைக் கேட்டு பொருள் உணரவில்லையா? நான் சொல்வதைக் கேட்க மாட்டாயா?  உன் தம்பி கும்பகர்ணன், வீடணன் பேச்சை நீ கேட்கவில்லை முன்பு அக்ககுமரன் உள்ளிட்ட அதிகாயன் வரை அனைவரின் இழப்பிற்கும் காரணமான நீ, இன்னும் அரசு செய்கிறாயா? இப்போது மண்டோதரியின் மகன் இந்திரஜித் மட்டுமே உயிருடன் இருக்கிறான். அவனை வைத்துக் கொண்டு இன்னொரு முறை திக்கு விஜயம் செய்வாயோ? என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விக் கணைகளைத் தொடுக்கிறாள். தவறு செய்தது இலங்கை வேந்தனான தன் கணவனே ஆனாலும் தவறு தவறுதான் என்றும், இதுவரை பல இழப்புகளைச் சந்தித்த நீ, இன்னும் சீதை மேல் கொண்ட காமத்தால் நீ அடைய இருக்கும் இழப்புகள் நிறையவே என்றும், கணவனை எச்சரிக்கும் ஒரு புரட்சிப் பெண்ணாகக் கம்பர் தன் காப்பியத்தில் தானியமாலியைப் படைத்துள்ளார்.

திறவுச்சொற்கள் : தானியமாலி, இராவணன், இராமன், சீதை,  இலட்சுமணன், எச்சரிப்பு,  கோபம்,ஆத்திரம்.

முன்னுரை
     கம்பராமாயணத்தில் எத்தனையோ பெண்பாத்திரங்கள் வருகின்றன. இராவணனின் இரண்டாவது மனைவி தானியமாலி.அவளை ஒரு புரட்சிப் பெண்ணாகக் கம்பர் படைத்திருக்கிறார். இராவணன் காமத்தினால் எத்தனையோப் பெண்களைக் கவர்ந்தும் வந்திருக்கிறான். அவனுக்கு உரிமை மகளிர் பலர் இருப்பதையும் அறிந்தவள்.அதை எதிர்க்க எண்ணவும் இல்லை. அதிகாயன் இறந்தபோது அவளுக்கு ஏற்பட்ட ஆற்றொணாத் துயத்தில் வந்த கோபத்தாலும், ஆத்திரத்தாலும், ஆதங்கத்தாலும் தன் அருமை மகனின் இழப்பிற்குக் காரணம் கணவன் இராவணனே, அவன் சீதைமேல் கொண்ட தவறான காதலாலே, காமத்தாலே என்பதால் அதுவரை எதுவுமே பேசாத அவள் இராவணனிடமே அவனுடைய தவறுகளை அடுக்கடுக்காகக் கேள்விகளைத் தொடுக்கிறாள்.தவறு செய்தது தன் கணவனேயானாலும் அரக்கர் குல அரசனேயானாலும் தவறு தவறுதான் என்று எண்ணியேக் கொந்தளித்து அடுக்கடுக்காகக் கேள்விக்கணைகளைத் தொடுத்தாள் என்பதை கம்பராமாயணத்தின் மூலம்  இக்கட்டுரையின் வழி ஆராய்வோம்.

அதிகாயனின் அன்னை தானியமாலி
       தசகிரீவன் இராவணனின் இரண்டாவது மனைவி தானியமாலி. தேவேந்திரனையேத் தோற்கடித்த அதிகாயனின் தாய்.பிறர் அழுததைக்கூட பார்த்தறியாதவள். பல பெண்களை உரிமைமகளிராக வைத்திருக்கிறான் என்பதை தெரிந்திருந்தாலும் கணவனிடம் இத்தன்மையைக் கேட்காதவள்.

அடித்து அழுது கொண்டு ஓடி வந்தாள் 
        இராம, இலட்சுமணர்களோடு போரிட்டு அதிகாயன் இறந்துவிட்டான் என்ற செய்தியை அறிந்து அலறி அடித்துக் கொண்டும் மார்பில் அடித்துக் கொண்டும் இராவணன் முன் வந்தாள். கதறியபடி வந்த தானியமாலி மலை உச்சியில் இடி தாக்கியதைப் போல, தன் கை வளையல்களும், கழுத்தில் அணிந்துள்ள மாலைகளும் ஒலி எழுப்ப, தன் முலைகளின் உச்சியில் அடித்துக்கொண்டு அழுதாள். புத்திரசோகத்தினால் குகை திறந்ததைப் போன்ற வாயைக் கொண்டவளாய் அரற்றிக் கொண்டும், கதறிக்கொண்டும் செம்பட்டை மயிற்குழல்கள் குழைந்து எங்கும் விரிந்து பரவ, ரத்த கண்ணீரைச் சொரிந்தபடியே அரற்றி அழுதாள்.

“மலைக் குவட்டு இடி வீழ்ந்தென்ன வளைகளோடு ஆரம் ஏங்க
முலைக் குவட்டு ஏற்றும் கையால் முழை திறந்தென்ன வாயாள்
தலைக் குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன குழல்கள் தத்தி
உலைக் குவட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள்”     (அதிகாயன் வதைப் படலம் 1934)
மலைப்பாம்பு போலப் புரண்டாள்
 
        இதுவரை பிறர் அழுவதையேப் பார்த்து அறியாத அவள், தன் தோள்கள் மண்ணைப் பொருந்த இராவணனின் பாதத்தில் விழுந்தாள். துயரம் மிகுதியால் புலம்பி உடைந்து அழுதாள். பெரிய பாம்பைப் போலப் புரண்டாள். இராவணனிடம் எனக்குக் கொடுமை செய்துவிட்டாய் என்று கூறிப் புலம்பத் தொடங்கினாள்.

என்னுடைய கண்மணியைக் காட்டமாட்டாயோ?
     இப்போது வல்லவர்களாக திகழும் பகைவர்களான இராம லட்சுமணர்களின் வலிமையைப் போக்க மாட்டாயோ? உன் வீரத்தை வெளியே செல்ல விடாமல் உள்ளுக்குள்ளேயேத் தடுத்து நிறுத்தி விட்டாயோ? தோள் வலிமை தளரப்பெற்றாயோ? நான் சொல்வதைக் கேட்டு அதன் பொருளை அறிந்து கொள்ளவில்லையோ? அல்லது நான் சொல்வதைக் காது கொடுத்து கேட்க மாட்டாயோ? என் கண்மணியாகிய அதிகாயனை என் கண்முன் காட்ட மாட்டாயோ என்று கூறி அழுதாள்.
 
“மாட்டாயோ இக்காயம் வல்லோர் வலி தீர்க்க
மீட்டாயோ வீரம் மெலிந்தாயோ தோள் ஆற்றல்
கேட்டாய் உணர்ந்திலையோ என் உரையும் கேளாயோ
காட்டாயோ என்னுடைய கண்மணியைக் காட்டாயோ”   (அதிகாயன் வதைப்படலம் 1936)
அதிகாயனின் சிறப்புகள்
        அதிகாயனின் சிறப்புகளாக வீடணன் கூறுகிறான். அறம் இல்லாதவற்றை அன்றி மற்றொன்றை அறியாதவன். வீரம் என்னும் அணிகலனைத் தவிர, வேறான பல அணிகலன்களை அணியாதவன். வலிமை அற்றிருக்கின்ற எந்த உயிரையும் அழிக்காதவன். பெரும் புகழைப் பெறுவதே சிறந்தது என்பதை அறிந்தவன். (அதிகாயன் வதைப் படலம் 1732) போர்க்களத்தில் உடலில் உள்ள உயிரை விட நேரும் போதும், மாயச் செயலில் வல்லவர்கள் கூடிப் போரிட்டாலும், தேசத்தில் உள்ள அனைவரும் தந்திர செயல்கள் செய்தாலும், அவற்றுக்கு எதிராக மாயத் தொழிலைச் செய்ய நினைக்க மாட்டான் என்று கூறினார்.

“காயத்து உயிரே விடு காலையினும்
மாயத்தவர் கூடி மலைந்திடினும்
தேயத்தவர் செய்குதல் செய்திடினும்
மாயத் தொழில் செய்ய மதித்திலனால்”      (அதிகாயன் வதைப்படலம் 1733)
தேவர்களின் தலைவனையே வென்றவன்
        இந்திரனுக்கும் தோற்காத சிறந்த புதல்வனை இவள் பெற்றெடுத்தாள் என்று வானத்தில் வாழும் தேவர்களும் போற்றும் போற்றுதலுக்குப் பாத்திரமான எளியேன் நான். என்னுடைய மந்திர மலையைப் போன்ற தோளைப் பெற்ற மகனை, அவனுக்குச் சமமாக மாட்டாத மனிதன் ஒருவனது வில் விட்ட அம்புக்கு இரையாகக் கொடுத்து விட்டேனே என்று கதறினாள்.

“இந்திரற்கும் தோலாத நன்மகனை ஈன்றால் என்று
அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன்
மந்தரத்தோள் என் மகனை மாட்டா மனிதன் தன்
உந்து சிலைப் பகழிக்கு உண்ணக்கொடுத்தேனே”    (அதிகாயன் வதைப்படலம் 1937)
திசை தோறும் சென்று வெற்றி பெறுவாயோ
        இதற்கு முன்பே அக்ககுமரன் இறந்துவிட்டான். அதிகாயன் இப்போது இறந்து போனான். மிக்க வலிமை பெற்ற அனைவரும் அழிந்தனர். இப்போது உன் புதல்வர்களில் உயிரோடு இருப்பவன் மண்டோதரியின் மகன் இந்திரஜித் மட்டுமே. இனிமேல் திசை தோறும் சென்று வெற்றி பெறுவாயோ என்று வினவினாள்.       

“அக்கன் உலந்தான் அதிகாயன் தான் பட்டான்
மிக்க திறந்து உள்ளார்கள் எல்லோரும் வீடினார்
மக்கள் இனி நின்று உள்ளான் மண்டோதரி மகனே
திக்கு விஜயம் இனி ஒரு கால் செய்யாயோ?”    (அதிகாயன் வதைப் படலம் 1938)
இன்னும் வர இருப்பவை சிலவோ
             ஐயனே நீ எதனை எண்ணிக் கொண்டிருக்கிறாய்? வெற்றி மாலை சூடிய வேலாயுதம் ஏந்திய எண்ணற்றவரான இறந்து போன அரக்கரை உயிர்ப் பிழைத்து வருமாறு கூப்பிட மாட்டாயோ? அறிவற்றவராய்க் காமத்தால்  பிணிக்கப் பட்டவர் தப்பி பிழைப்பாரோ? சீதையால் இதுவரை வந்த துன்பங்கள் போக, இன்னும் வர விருப்பவை சிலவோ. அவை மிகப் பலவாகும் என்று கூறினாள்.(சீதை மேல் நீ கொண்ட காமத்தால் முதலில் கிங்கரர், சம்புமாலி ,பஞ்சசேனாபதியர், அக்ககுமரன், கும்பகர்ணன் ஆகியோர் இறந்தனர். இப்போது அதிகாயன் இறந்தான்.. இனி இந்திரசித் , நீ, மண்டோதரி இறக்கப்போகிறீர்கள் என்பதைக் குறிப்பாகக் கூறினாள்))

“ஏது ஐயா சிந்தித்திருக்கின்றாய் எண் இறந்த
கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரைக் கூவாயோ
பேதை ஆய் காமம் பிடித்தார் பிழைப்பாரோ
சீதையால் இன்னும் வருவ சிலவேயோ”  (அதிகாயன் வதைப் படலம் 1939)
நீ  இன்னும் அரசாட்சி செய்கின்றாய்
     அறிவு நிறைந்த உன் தம்பியான கும்பகர்ணன் உரைத்த நல்லுரையை நீ ஏற்றுக்கொள்ளவில்லை. குலத்துக்கு உரிமை உள்ள மற்றொரு தம்பியான வீடணன் கூறிய சொற்களில் பொருந்திய தன்மையை நீ உணர்ந்து கொள்ளவில்லை. கும்பகர்ணனை முதலில் கொலை செய்துவிட்டு, இப்போது என் மகனான இளவரசன் அதிகாயனையும் அம்புக்குப் பலியாக்கி, நீ இன்னும் அரசாட்சி செய்கின்றாய் என்று கோபத்துடன் கேட்டாள்.
 
“உம்பி உணர்வுடையான் சொன்ன உரை கேளாய்
நம்பி குலக் கிழவன் கூறும் நலம் ஓராய்
கும்பகர்ணனையும் கொல்வித்து என் கோமகனை
அம்புக்கு இரையாக்கி ஆண்டாய் அரசு ஐயா      (அதிகாயன் வதைப் படலம் 1940)
        இவ்வாறாகப்  பற்பலவற்றைத் தொடர்ந்து கூறி குரல் உயர்த்தி, கூவி தன் கன்று இறந்து போகத், தான் மட்டும் உயிர்ப் பிழைத்திருக்க நேர்ந்த தாய் பசுவைப் போலக் கவலை கொண்ட தானியமாலியை அருகே நின்ற ஊர்வசியும், மேனகையும் நெருங்கிச் சென்று எடுத்து மலையை ஒத்த உயர்ந்த அரண்மனைக்குள்ளே சேர்த்தனர்.
 முதன்மை இடத்தைப் பெற்ற அந்த இலங்கை நகரத்து அரக்கர்கள் ஒன்று கூடி தத்தம் மகனை இழந்தவர் போல, அதிகாயன் முதலியோர்களின் அழிவுக்காக வருந்தி அழுதனர். அந்நகரில் இருந்த எண்ணற்றவரான வான மகளிரும் மிக இரங்கியத் தன் வாயைத் திறந்து கதறி அழுதனர் என்று சொன்னால் அரக்க மகளிர் நிலை எத்தகையதாக இருக்கும்.

முடிவுரை
        பல உரிமை மகளிரைக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் அனுபவித்து தான் விரும்பினால் அந்தப் பெண்களை எப்படியாவது தன் வயப்படுத்தும் திறம்படைத்த இலங்கை வேந்தன் இராவணனால், அவன் சீதைமேல் கொண்ட காமத்தால் தன் மகன் அதிகாயன் இறந்ததால் , அதிகாயனின் அம்மா தானியமாலி அடங்காத சோகம் மற்றும் கோபத்துடன் கணவனைத் திட்டிக் கேட்டாள். தட்டிக்கேட்டாள். கணவன் செய்தது தவறாகவே இருந்தாலும், அது குறித்து மனைவி  எதுவும்  கேட்டமாட்டாள் என்பதே அக்காலத்தில் இருந்த நடைமுறையாகும். தகவலாகக்கூட கேட்க இயலாத அன்றைய சூழ்நிலையில், அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்கும், நீ செய்தது தவறே,உன்னால்தான் என் மகன் இறந்தான் என்றும்,அவனைக் கொன்றது நீ தான் என்றும், உன் தம்பிகளைக் கொன்றாய் என்று அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளைத் தொடுக்கும் புரட்சிப் பெண்ணாகக் கம்பர் தம் இராமாயணத்தில் கூறியுள்ளார் என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

துணைநூற்பட்டியல்
1.சுப்பிரமணியம்.வ.த.இராம.தண்டியலங்காரம்,முல்லைநிலையம்,சென்னை,  
   2019.

2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம்,    
   புதுக்கோட்டை, 2012.

3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம்,   
   சென்னை,2016.

4.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.

5.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு,
சென்னை, 2011.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.மங்கையர்க்கரசி,

உதவிப்பேராசிரியர்,

அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II),

மீனம்பாக்கம், சென்னை 600061.

 

Medical thoughts Inspired by Sirupanchamoolam|M.Gohila

சிறுபஞ்சமூலம் உணர்த்தும் மருத்துவ சிந்தனைகள்
Abstract
      
      Sirupanchamoolam consists of five roots which cure the diseases of the human body and similarly this book is a miracle medicine for curing the diseases of the human body. In today’s time, there are many diseases related to the heart. This book plays a big role in reducing them. This article will be useful for everyone.
                        

 “சிறுபஞ்சமூலம் உணர்த்தும் மருத்துவ சிந்தனைகள்”
 

முன்னுரை
          
      சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து வகையான வேர்களைக் கொண்டுள்ள ஒரு மருத்துவ நூலாகும் இதன் ஆசிரியர் காரியாசன் ஆவார் என்னுள் தமிழர்களின் மருத்துவ சிந்தனைகளையும் இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும் ஒத்திருக்கிறது  இவற்றில் உள்ள ஐந்து வேர்களும் உடலுக்கு நன்மை பயக்கும் மருத்துவ குணங்களாகும்.

பஞ்ச மூலத்தில் உள்ள ஐந்து வேர்கள்
1.சிறுவழுதுணை

2. நெருஞ்சி

3. சிறு மல்லி வேர்

4. பெருமல்லி வேர்

5. கண்டங்கத்திரி வேர்
        
       இந்த ஐந்து வேர்களும் பல்வேறு நோய்களை குணப்படுத்தவும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது தமிழர் மருத்துவத்தில் முக்கிய நூலாக கருதப்படுகிறது இதன் மூலம் இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவமும் பண்டைய தமிழரின் மருத்துவ அறிவும் வெளிப்படுகிறது.

நோய் பற்றிய சொற்குறிப்புகள்
        
         நோயின் குணத்தை கண்களால் காண , கருத்தினால் மட்டுமே அறிய முடியும்.
  
“நோயும் வேட்கையும்  
நுகர்வும் என்று அங்கு  
ஆவியின் வருவோம் கிளவி எல்லாம்  
நாட்டிய மரபின்   
நெஞ்சு  கொனின் அல்லது   
காட்ட லாகப் பொருள் என்பர்”   (பொருளியல்53)
         
மேலும், வயா என்பது கருவுற்றிருக்கும் வேளையில் வரும் நோயைக் குறிக்கிறது.
 
“வயா என் கிளவி வேட்கை பெருக்கம்” (சொல் உயிர்854)
                
அதாவது இந்நோய் விலங்கு, தாவரம், பெண் ஆகியோருக்கு ஏற்படும் நோயாகும்.

மருத்துவர்         
        நோய்க்கு மருந்து கொடுப்பவரை அறிஞர் என்றும் மருத்துவர் என்றும் குறிப்பிடுவர்.
 வாயுறை என்பது வாய் வழியே 
 அருந்துகின்ற மருந்து என்னும் 
பொருள் தரும்.
 உறை என்பது மருந்தை குறிக்கும்.

“உற நோய் தீர்க்கும் மருந்துஉறை என்ப”  (நிகண்டு.2788) 
மருத்துவ முறைகள் மூன்று
  
1.ஒப்புறை
 
2.எதிர் உறை
 
3.களப்புறை
           
ஆகிய மூன்றும் தமிழ் மருத்துவத்தில் மருத்துவ முறைகளாகும்.
 
திருக்குறள் கூறும் மருத்துவம்
          
     நல்ல மருத்துவம் என்பது நோயை நீக்குவது அன்று நோயே வராமல் தடுப்பது என்ற கருத்தாக்கமே வள்ளுவனின் சிந்தனையாகும்.உணவு செரித்த பின் அடுத்த வேலை உணவு உண்பவனுக்கு மருந்தே வேண்டாம் என்பது, புது சிந்தனையாகும்.              

“மருந்தென வேண்டாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி   யுனின்” குறள்
            
     அளவு அறிந்து உண்பவன் நெடுநாள் உயிர் வாழ்வான் அனைத்து நோய்களின் பிறப்பிடம் முறையற்ற உணவு முறை என்று வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளான்.

உணவே நோய்            
        பெரும்பாலான நோய்களுக்கு மூல காரணமாக உணவு அமைகிறது உணவு காரணமாக நோய் கிருமிகள் பரவி உடலின் நோயை ஏற்படுத்துகின்றன. நாம் உண்ணும் உணவு தூய்மையானதாக இருப்பின், அவற்றினை உடலுக்கு ஏற்றவாறு உண்ண வேண்டும். சுவையுடன் இருப்பதற்காக, அதிக அளவில் உணவு உண்டால் நோயை உண்டாக்கும். செரிமானம் ஆனப்பின்பு  உண்பதே சிறந்த முறையாகும்.

சங்ககாலத்தில் மருத்துவ முறை 
            
        மருத்துவ அறிவோடு பலர் நல்ல இலக்கியத்தில் அறிஞர்களாகவும் திகழ்ந்துள்ளனர். என்பதற்கு மருத்துவன் தாமோதரனார் என்றும் சான்றாவார். புலவராக திகழ்ந்தமையால் இன்று அவர் பெயர் மட்டும் அறியப்படுகிறது. அன்று எண்ணற்ற மருத்துவர்கள் இருந்திருக்கிறார்கள் “ நீர் வேட்கையும் உணவு பசியும்” கூட பிணி என்கின்றனர்.

“வருந்திய செல்லல் தீர்த்த திறனறி ஒருவன்
மருத்துவக்  கோடலின் கொடிதே”( கலி)
               
       என்ற கலித்தொகை பாடல் அடிகள் இதற்கு சான்றாகும் நோயாளி கேட்டதை கொடுக்காது அவனுக்கு எது நல்லது என்பதை ஆராய்ந்து  மருந்து அளிக்கவேண்டும் என்பார். தமிழர்கள் மருத்துவத்திற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர் என்பது எட்டுத்தொகை வழி அறிய முடிகிறது.
சிறுபஞ்சமூலம் மருத்துவ பயன்பாடு
         
      சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து  மூலிகை கொண்ட ஓர் இயற்கை மருந்து.அதுபோல் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகளை தொகுத்து கூறப்பட்டுள்ளது. அதாவது ஐந்து ஒழுக்க நெறிகள் இடம் பெற்றுள்ளன.

ஐந்து ஒழுக்க நெறி 
 
1.கொலை செய்யாமை
 
2.பொய் கூறாமை
 
3.புலால் உண்ணாமை
 
4.களவு செய்யாமை
 
5. நல்லொழுக்கம்
           
       ஆகிய ஐந்தும் ஒரு மனிதனின் நல் வாழ்விற்கு இன்றியமையாதவை  என்று கூறுகிறது. இவற்றினை கடைபிடித்தால் மனிதன் வாழ்வில் சிறந்த வழியை அடைய முடியும் என்று சிறுபஞ்சமூலம் கூறுகிறது. மனிதன் வாழ்நாளில் உணவு என்பது முக்கியமான அங்கம் அவற்றோடு மட்டுமல்லாமல் எண்ணமும் தூய்மையாக இருக்க வேண்டும் நல் ஒழுக்கங்களையும் பின்பற்ற வேண்டும் என்னும் அறச்  சிந்தனையை வலியுறுத்துகிறது. தரத்தின் வழி வாழ்ந்தால் நற்பயனை அடைய முடியும்.

கொன்றான் கொலைஐய் உடன்பட்டான், கோடாது
கொன்றதனை கொண்டான், கொழிக்கும் கால்
கொன்றதனை அட்டனிவுண்டா அனைவரின்னும்
ஆகுமாயெனகட்டதெரிந்த பாவம் கருது    (சிறுபஞ்சமூலம் 70)
       
       புலால் உணவு தீங்கானது அது பல தீமைகளுக்கு அடிப்படையான தாகும் ஊன் உண்டவன் நல்  மனதினைத் தளர்த்தி உடலை வளர்த்து கூட ஒழுக்கத்திற்கும் புகுத்திவிடும். என்று குறிக்கப்படுகிறது உயிர்கொலைக்கு உடன்படுவதும் ,கொன்ற ஊனை விலைக்கு வாங்குவது ,சமைப்பதும் பரிமாறுவதும் ஆகிய எல்லா நிலையிலும் ஊன் வருவதாக உள்ளது. இந்த வரிகள் உயிர்கொலை செய்வதிலும் கொலைக்கு உடன்படுவதிலும் கொல்லப்பட்ட உயிரின் ஊனை உண்பதிலும் உள்ள பாவத்தை சுட்டுகிறது. கொலைத் தொழிலைசெய்யாமல் இருப்பது நல்லது என்பதையே இந்தப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

முடிவுரை
          
      இத்தலைப்பானது மனிதனின் மனநிலையானது இன்றய காலகட்டத்தில் ஒருநிலையாக இல்லை. மனிதனின் மனநிலையையும் சிந்தனையும் நன்னெறிப்படுத்துவதாக இவை அமைகிறது. மருத்துவம் சார்ந்ததோடு மட்டும்மின்றி மனிதனின் மனதையும் ஒருநினைப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.

துணை நின்ற நூல்கள்
1.தொல்காப்பியம் சொல்லதிகாரம்-திருஞானசம்பந்தம், கதிர் பதிப்பகம் திருவையாறு.

2.தொல்காப்பியம் பொருள்- திருஞானசம்பந்தம், கதிர் பதிப்பகம் திருவையாறு.

3.  தமிழ் நிகண்டுகள் வரலாற்றுப்பார்வை -டாகடர் பி.மாதையன் ,தஞ்சை தமிழ் பதிப்பகம் தஞ்சாவூர்.

4 திருக்குறள் – தேவிரா உரை -ஸ்ரீ நந்தினி பதிப்பகம் 38/16முதல் தெரு  அண்ணா நகர்மேற்கு விரிவாக்கம் சென்னை .

5. சிறுபஞ்சமூலம்- மூலமும் உறையும் கௌர பதிப்பகம்.  

6. இலக்கியவரலாறு- பேரா டாக்டர் பாக்கியமேரி ,பாரிநிலையம் சென்னை.  

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்  

Iniyavaikatral peer reviewedம.கோகிலா
முனைவர் பட்ட  ஆய்வு மாணவர் (பகுதி நேரம்)

(பதிவு எண் BDU2120632778825)

தேசியக் கல்லூரி (தன்னாட்சி),
(பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவுப் பெற்றது),
திருச்சி.

ஆய்வு நெறியாளர்

முனைவர் நா. மாணிக்கம்

 இணைப் பேராசிரியர், தமிழ் ஆய்வுத்துறை, 

 தேசியக் கல்லூரி (தன்னாட்சி), 

(பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவுப் பெற்றது),

திருச்சி.

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »