Wednesday, October 14, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home கவிதைகள் உழைப்பு

உழைப்பு

 

சுறுசுறுப்பாய் ஓடு

சோம்பலை நீக்கு

விடியற்காலையே விழித்திடு!

 

விண்ணை தொட்டிட

எழுவாய் தோழா!

 

எறும்புகளைப் பார்

தனக்கு வேண்டிய – உணவைத்

தானே சுமந்து செல்லும்…

 

காக்கை குருவிகள் தங்கிட

களம் ஒன்று அமைத்திடுமே…

 

உழைக்கும் மனிதனே

உயிராய் நினைப்பான் நாட்டை!

 

ஏறு பிடித்து சேற்றில் உழுதாதான்

சோற்றிலே கைவைத்து உண்ண முடியும்!

 

உழைப்புதான் ஆடவர்க்கு உயிர்

உழைப்புதான் புருஷ லட்சனம் – பழமொழியே!

 

சுறுசுறுப்பாய் இரு

சோம்பலை நீக்கி

உழைத்து முன்னேறுவாய்…

வாழ்வில் வெற்றி பெறுவாய்…

கவிஞர் முனைவர் க.லெனின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »