Saturday, October 3, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home கவிதைகள் தெவிட்டாதவள்|கவிதை|முனைவர் சாரதா சுப்பிரமணி

தெவிட்டாதவள்|கவிதை|முனைவர் சாரதா சுப்பிரமணி

தெவிட்டாதவள்-கவிதை - முனைவர் சாரதா சுப்பிரமணி

🧚🏻‍♀️ உனக்கென பிறந்தவள்

உனக்கென வாழ்பவள்

உனக்காகவே வாழ

தலைப்படுபவள் அவள்..!

 🧚🏻‍♀️சீரும் சிறப்பும்

பேறும் உடையவளை

சிக்கெனப் பிடித்துக்கொண்டு

சில்லென நடப்பவள்..!

🧚🏻‍♀️சொல்லும் போதே,

மார்பில் உரத்தவள்!

வீறுகொள்ள வைப்பவள்

தன்மானமிக்கவள்!

தன்னலமற்றவள்..!

🧚🏻‍♀️பூவையர்களின் பூவானவள்!

பாவையர்களின் பாவானவள்!

கண்ணானவள் !

மணியானவள்!

கண்ணின் ஒளியானவள்..!

🧚🏻‍♀️என்னவள் எங்கும்

நீக்கமற நிறைந்தவள்

பெண்ணவள்

அணங்கவள்

அன்பானவள்

பண்பானவள்

கற்கண்டானவள்

பாகானவன்

தேனானவள்

கனிச்சாரானவள்

எல்லாம் ஆனவள் – அவளே

என்தெவிட்டாத தெள்ளுதமிழளே..!

கவிதையின் ஆசிரியர்

முனைவர் சாரதா சுப்பிரமணி,

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

எஸ். எஸ். எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

பெருங்களத்தூர்,

சென்னை-63.

தெவிட்டாதவள் PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »