இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்
பாரம்பரியமிக்க தமிழ் மக்களின் வாழ்வியலை உலகறியச் செய்வதே இத்தளத்தின் நோக்கம். நம் மக்கள் மறந்து போன ஒவ்வொன்றும் மீண்டும் நினைவு கூர்ந்து வெளிப்படுத்தப்படும். நம் தளத்தைத் தேடி வருகின்ற வாசகர்கள் அனைவருக்கும் இங்கே தனக்கு வேண்டிய தகவல் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உறுதி செய்யப்படும். மேலும் தமிழ்மொழி மீதான ஆய்வுகள் தொடர்ந்து செய்ய வேண்டியும் அதற்குண்டான அவசியத்தையும் இனியவை கற்றல் மூலம் எடுத்துரைக்கப்படும். சிறுகதைகள், கவிதைகள் இத்தளத்தில் வெளியிட்டு எழுத்தாளர்களை ஊக்குவிக்கப்படும். ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், மீட்டுருவாக்கச் செய்திகள் என அனைத்தும் வாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. வெளியிடப்பட்ட ஒவ்வொரு படைப்பின் இறுதியிலும் படைப்பு மற்றும் சான்றிதழின் பி.டி.எப் கோப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. படைப்பாளிகள் அவற்றினை தரவிறக்கம் செய்து கொள்ளவும். படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : iniyavaikatral@gmail.com

சங்ககால மக்களின் உறவுகளான தந்தையின் குடிச்சிறப்பு, நற்றாயின் குடும்ப பாங்கு, தலைவியின் காதல், தோழியின் நல்லுறவு, செவிலித்தாயின் அன்புள்ளம், தலைவனின் பண்புநலன், பரத்தையரின் ஒழுக்கம், ஊடலும் - கூடலும் ஆகிய உறவுமுறைகளும் மக்களின் பயன்பாடும் பழக்கவழக்கமும் சகுனங்கள், பழமொழிகள், விடுகதைகள், சூளுரைத்தல், சீழ்க்கை, தீக்கடைக்கொல், கடகப்பெட்டி, ஊஞ்சல், வட்டுச்சாடி, நாளவை வட்டில், தம்புறாத்தூணி, ஓடக்கோல், உலக்கை, ஆம்பல், அந்தியம் போன்றவையும் சொல்லப்பட்டுள்ளன. விலை ரூபாய்.70.00 தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும். iniyavaikatral@gmail.com