Neerin Thuimai Nithiya Vazhvin Thaimai|Dr.N.Dharmaraj

நீரின் தூய்மை நித்திய வாழ்வின் தாய்மை

“நீரின் தூய்மை நித்திய வாழ்வின் தாய்மை”

Abstract
               

      It is defined as the main ingredient of the most important requirements for man to survive, which is why air water land is the main components of the environment and the resources that can last life. In 2005, in 2005, the International Freshwater Year was recommended in 2005, but it is an undeniable fact that the people of our Indian people are less than the Western people, but in this article we will look at the troubles facing the human race.


முன்னுரை
               

  நீரின் முக்கியத்துவம் கருதி 2005ஆம் ஆண்டு சர்வதேச நன்னீர் வருடமாக பரிந்துரைக்கப்பட்டது ஆயினும் நீரின் முக்கியத்துவத்தின் விழிப்புணர்வு மேலைநாட்டு மக்களிடம் இருப்பதைவிட நம் இந்திய மக்களிடம் குறைவு என்பது மறுக்க முடியாத உண்மையாகும் இந்த அலட்சிய போக்கால் மனித இனம் எதிர்கொள்ள வேண்டிய இன்னல்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.


நீரின் முக்கியத்துவம்
               

     நாகரீக வளர்ச்சி அடைய நீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது பெரும்பாலான நாடுகள் என்னை மற்றும் கனிம வளத்தின் இருப்பினை அறிந்து வைத்திருக்கின்ற அளவுக்கு நீரின் இருப்பினை தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை எந்த ஒரு நாட்டில் நீர்வளம் மிகுதியாக காணப்படுகின்றதோ அங்கெல்லாம் மக்கள் நீரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பதில்லை நீர் ஆதார மற்றும் அதன் இருப்பு போன்றவற்றை மதிப்பீடு செய்வதின் வாயிலாக ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கான சீரிய திட்டங்களை தீட்ட முடியும் என்பது திண்ணம்.இருப்பினும் மக்கள் தொகை உயர்வு காரணமாக நன்னீருகான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது இவற்றுடன் தொழிற்சாலை விவசாய வீட்டு தேவைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது பூமியின் பரப்பை மேம்படுத்துதல் தட்பவெட்பம் மற்றும்  மாசை குறைத்தலில் நீர் முக்கிய பங்கு வகுக்கின்றது. தாவரங்களில் ஆற்றல் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது புவிபரப்பில் சுமார் 71% பரவியுள்ள நீர்நிலைகளின் தொகுப்பே நீர்க்கோலம் என்று அழைக்கப்படுகிறது இதில் மிகப் பரந்த அளவில் பெருங்கடல்களும் குறைந்த பகுதிகளாக குளங்கள் ஆறுகள் மற்றும் அணைக்கட்டுகளிலும் பரவி உள்ளன. புவியின் இரு துருவங்களிலும் பரவியுள்ள பணிப் படிவுகளும் இவற்றுள் அடங்கும். நீர் கோலமானது மனித இனத்திற்கு பல்வேறு வகைகளிலும் முக்கிய பங்காற்றுகின்றது என்பதை உணர்ந்து செயல்படுவது மானுட பொறுப்பாகும்.


நீர் வளத்தின் பண்பாடு
               

    வேறுபட்ட காலநிலை கூறுகள். மாறுபாடுகள் நிறைந்த புவி அமைப்பு போன்ற காரணங்களினால். நம் நாட்டின் மழை பொழிவானது ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையிலான தென்மேற்கு வடகிழக்கு பருவக்காற்றுகளின் மூலமே கிடைக்கின்றது.
                கோடை காலத்தில் அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக திறந்த நீர் நிலைகளில் குறிப்பாக குளம் ஏரி ஆறுகள் மற்றும் நீர் தேக்கங்களில் உள்ள நீரானது நீராவிப் போக்கு மூலம் மிகுதியாக ஆவியாகி விடுகின்றது. மேலும் அதிக மக்கள் தொகை. தொழிற்சாலை வளர்ச்சி. விவசாய வளர்ச்சி மற்றும் வாழ்க்கை தர உயர்வினாலும் நீரின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதை கருத்தில் கொண்டு நமது நாட்டு நீர்வள வல்லுனர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் ஒன்று சேர்ந்து நீரின் வளத்தை மதிப்பிட்டு வீணாக ஓடுகின்ற மழை நீரை அணைக்கட்டுகள் மூலம் சேமித்து நீர் பற்றாக்குறையை ஓரளவு போக்கி வருகின்றனர்.


மேற்பரப்பு நீர் வளம்               

       இந்தியாவின் மேற்பரப்பு நீர்வளத்தை மூன்று வகையாக பிரித்துள்ளனர் அவை மிகப்பெரும் ஆற்று படுகைகள் இடைநிலை ஆற்று படுகைகள் சிறிய ஆற்றுப்படுகைகள் ஆகும் ஆற்றுப்படுகைகளின் தன்மைக்கேற்ப நீர் வளத்தின் இருப்பு பயன்பாடும் மாறுபடுகின்றன நீர் வளத்தை அதிகமாக பயன்படுத்தும் ஆற்றுப்படுகைகளில் முதன்மையானது காவேரி ஆற்று வடிகால் ஆகும் இந்த ஆற்றுப்படுகையில் 96 சதவீத நீரானது பயன்படுத்தப்படுகின்றது இதற்கு அடுத்தபடியாக பயன்படுத்தப்படும் ஆறுகளில் குறிப்பிடத்தக்கவை கிருஷ்ணா பொன்னாரு சிந்து நதி முதலியன ஆகும்.


நிலத்தடி நீர்வளம்               

        இந்தியாவில் கடின பாறை வகைகள் பறந்து காணப்படுகின்றன இதன் மேற்பரப்பு நிலத்தடி நீர் வளம் மேற்பரப்பு நீர் வளத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்து காணப்படுகின்றது மொத்த நிலத்தடி நீர் இருப்பு தோராயமாக 198 மில்லியன் கன மீட்டர் ஆகும் இதில் நாம் வெறும் 41% நீரை பயன்பாட்டுக்கு உபயோகிக்கிறோம் இதற்கு முக்கிய காரணங்கள் மாறுபட்ட நிலமைப்பும் கடின நீர் தன்மையும் ஆகும் ஒவ்வொரு வருடமும் நிலத்தடி நீர் வளத்துக்கு 670 கன கிலோமீட்டர் மழை நீர் கிடைக்கின்றது இதே அளவு நிலத்தடி நீரை நம் தேவைக்கு எடுத்துக் கொள்ளலாம் மேலே குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக எடுத்தால் வரும் காலங்களில் நிலத்தடி நீர் வளம் குறைந்து அல்லது வற்றி போய்விடும் என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசியமாகும்.


தமிழ்நாட்டின் நீர் வளம்
               

        தமிழ்நாட்டில் மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் வளம் மிகக் குறைவாக காணப்படுகின்றது ஆனால் விவசாய மற்றும் அதைச் சார்ந்து தொழில்களுக்கு நீர் மிகுதியாக தேவைப்படுகின்றது இதன் காரணமாக நமது மாநிலத்தில் நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு அடுத்தபடியாக நீரை பாசனத்திற்கு அதிகமாக பயன்படுத்துகின்றது அதாவது தோராயமாக 92 சதவீத மேற்பரப்பு நீர் மற்றும் 60% நிலத்தடி நீர் பல்வேறு உபயோகங்களுக்காக தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.


மனிதனின் நீர் தேவைகளும் பயன்பாடுகளும்               

    மனிதனின் அன்றாட தேவைகளுள் நீர் இன்றியமையாத ஒன்றாகும். நீர் மனிதனுக்கு பல்வேறு வகைகளில் பயன்படுகின்றது. தற்போதைய நிலவரப்படி ஒவ்வொரு வருடமும் சுமார் 350 கன கிலோ மீட்டர் நீரானது மனிதனுடைய அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இதில் சுமார் 75% நீரானது மனிதனின் உணவு உற்பத்திக்கு தேவைப்படுகின்றது.
               

      விவசாயத்திற்கு அடுத்தபடியாக மின் உற்பத்திக்கு 6.2% தொழிற்சாலைகளுக்கு 5.7% நீரும் பயன்படுத்தப்படுகின்றது மனிதனின் அன்றாட தேவைகளுக்காகவும் கால்நடை பராமரிப்புக்காகவும் 4.3 சதவீத நீர் செலவிடப்படுகிறது மீதமுள்ள 1.3% நீரானது நீர் போக்குவரத்து நீர் மின் உற்பத்தி மீன் வளர்ப்பு சுற்றுலா போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது இவ்வாறெல்லாம் முக்கியத்துவம் வாய்ந்த நீரை மாசுபடுத்துவதால் ஏற்படும் விளைவுகளை காண்போம்.


நீரின் மதிப்பு           

      நீ இயற்கை வளங்களில் ஒன்றாகும். இது இயற்கை தந்த கொடையாக கருதப்படுகிறது. மனிதனின் அனைத்து செயல்பாட்டிற்கும் தேவைப்படும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நீரின் மதிப்பு என்பது அதில் இருக்கும் வளங்களை பொறுத்தது அல்ல ஆனால் நீரை திறம்பட பயன்படுத்துதல் மற்றும் மேலாண்மையை பொறுத்து அமைகிறது இப்படிப்பட்ட நீரின் மதிப்பை உணராமல் பயன்படுத்துவதால் மாசடைகிறது நீரின் மாசு நேரிடையாக வாழும் உயிரினங்களை பாதிக்கின்றது.


நீர் மாசுபடுதலை தடுக்கும் சட்டம்
               

     கிபி 1974 ஆம் ஆண்டு நீர் சட்டம் இயற்றப்பட்டது. நீரின் தன்மையை நிலை நிறுத்தவும் மற்றும் மாசு  அடையாது தடுக்கவும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் நிபந்தனைகளான வெளி அமைப்புகள் மாசுபடுதல் சாக்கடை கழிவுகள் ஓட்டை வணிக கழிவுகள் போன்றவை பற்றியும் இச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன இந்த  நிபந்தனைகளுக்கு உட்படாமலும் மனசாட்சிக்கு பயப்படாமலும் செய்யும் செயல்களால் தான் நீர் மாசடைகிறது.


நீரும் மனித நலனும்
               

     மக்களின் உடல்நலம் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கையைச் சார்ந்திருக்கவில்லை. ஆனால் சுற்றுப்புறத்தின் தூய்மை பொருத்தே அமையும். தூய்மையான இந்நிலை பாதுகாக்கப்பட வேண்டும். சூழ்நிலை மாற்றங்கள் பல நோய்கள் மனித நலனின் நேரடி பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன மனித சுற்றுச்சூழலில் ஏற்படும் சில குறிப்பிட்ட மாற்றங்கள் பல நோய்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றன.
 

              இந்த வகையான மாற்றங்களில் சமூகப் பொருளாதார மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் மனித உடல் நலனின் பலவகையான தாக்கத்தை ஏற்படுத்தும் குறிப்பாக. நகர்மயமாதல் மற்றும் தொழில்மயமாதல் மனிதச் சூழலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி பல்வேறு தொற்று நோய்களின் நோய் பரப்புகளுக்கு சொர்க்கமாக மாறுகிறது. அத்தகைய அதிரடி மாற்றம் நமது சூழலாகிய காற்று நீர் உணவு ஆகியவற்றை மாசுபடுத்தி உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கிறது.


நீரை பற்றிய விழிப்புணர்வு
               

     நீரை பயன்படுத்தும் விதம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றால் நோய் உண்டாகும் அபாயம் உருவாகும். பொதுவாக வளரும் நாடுகளில் 80 சதவீத நோய்கள் நீரினால் தோன்றி பரவக்கூடியவை. மனிதக் கழிவினால் ஆறுகள் 90% மாசடைகிறது.
                நமது நாட்டிலேயே கேரளாவின் இறப்பு சதவீதமானது தேசிய சராசரிக்கு கீழ் உள்ளது. இதற்கு காரணம் பெண்களிடம் காணப்படும் கல்வி அறிவும் சுற்றுச்சூழ்நிலை சுகாதாரமும் ஆகும்.
 

நீரால் பரவும் நோய்கள்
               

      மலேரியா யானைக்கால் மூளைக்காய்ச்சல் காலரா போன்ற எண்ணில் அடங்கா நோய்கள் பரவும் நிலை உயர்ந்துள்ளன. பின் நோய்கள் பரவுவதற்கு பூச்சிக்கொல்லிக்கும் நீர் பாசன நீருக்கும் இடையே சில ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளன. இவை நவீன விவசாயத்தின் எதிர்மறை விளைவுகளாகும். நோயை உண்டாக்கும் காரணிகளுக்கிடையேயான எதிர்ப்பு ஆற்றல் தண்ணீர் தேக்கம் மற்றும்  ஒப்பு அடர்த்தியாகியென உயர்ந்துள்ளன இவை நீரினால் பரவும் நோய்களுக்கு ஏதுவாக இருக்கின்றன
.

நீரை மாசுபடுத்தும் காரணிகள்
               

      இந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது ஆகும். அதன் உயிரியல் வேதியல் மற்றும் இயற்பியல் தன்மைகள் மாசுபடுவதையே நீர் மாசுபடுதல் என கூறுகிறோம். இந்த வகையில் மாசுபடுத்தும் காரணிகள் என்று எடுத்துக் கொண்டால் வீட்டு சாக்கடைகள். தொழிற்சாலை கழிவுநீர் விவசாயக் கழிவுகள் மிதவை உயிரிகளின் வளர்ச்சி டிடர்ஜெண்டுகள் கன உலோகங்கள் வெப்பம் கதிரியக்க தனிமங்கள் என்னை போன்றவைகள் ஆகும் .


மனித நலனில் நீரின் பங்கு
               

       குடிநீர் மற்றும் அன்றாட பயன்படுத்தும் நீரானது தரக்கட்டுப்பாட்டுடன் நோயைப் பரப்பும் நுண்ணுயிரிகள் மற்றும் மனித நலத்திற்கு ஊறுவிளைவிக்கும் வேதிப்பொருட்கள் இன்றி இருக்க வேண்டும். பூமியின் நிலத்தடியில் கிடைக்கும் நீர் நகரத்தில் குடியேறிய மக்களுக்கு வழங்கப்படுகிறது. நிலத்தடி ஆதாரங்களில் இருந்து கிடைக்கும்  குடிநீரானது சாக்கடை வீட்டு கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் அடிக்கடி மாசுபடுகிறது. தொழிற்சாலை கழிவுகள் வேறுபட்ட நச்சு கரிம கனிம மாசுகளை கொண்டிருப்பதால் இவை எளிதில் சிதைவதில்லை.
               

       குடிநீர் மலங்கலால் மாசுபடுவதே சில முக்கிய நோய்களுக்கு காரணமாக அமைகின்றது. உதாரணமாக டைபாய்டு காலரா பாக்டீரியா வயிற்றுப்போக்கு உட்காய்ச்சல் இரைப்பை குடல் சார்ந்த ஒவ்வாமை நோய்கள் சல்மோநெல்லா சேப்டிசீமியா போன்றவை மலக் கழிவுகளால் பரப்பப்படுகின்றன என்பதை உணர வேண்டும்
.

முடிவுரை
               

     நீரின் முக்கியத்துவம் அவற்றின் பயன்பாடு மற்றும் நீர் ஆதாரங்களில் ஏற்படும் மாசுக்களால் உண்டாகும் விளைவுகள் என்ன என்பதை இக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் மனித இனத்தின் விழிப்புணர்வு அற்ற தன்மைகளாலும் தொழிற்சாலையின் வளர்ச்சியினாலும் நீர் மாசடையும் விதம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இருப்பினும் விவரிக்கப்பட்டவைகளின் நன்மை தீமைகளை சீர்தூக்கி பார்த்து எதையும் முன்னெச்சரிக்கையோடும் அளவோடும் பயன்படுத்தினால் மனித குலத்திற்கு நன்மை உண்டாகும்.


சான்றாதார நூல்கள்

1.சுற்றுச்சூழல் அறிவியல் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிப்பு.


2.சுற்றுச்சூழல் கல்வி தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பதிப்பு.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ந.தர்மராஜ்


இணைப் பேராசிரியர்,

செயின்ட் ஜோசப் கல்லூரி(கலை மற்றும் அறிவியல்)
,

கோவூர், சென்னை.

 

Leave a Reply