இன்றைய வளரும் தலைமுறையினருக்குப் பிளாஸ்டிக், இரப்பர், தோல் ஆகியவற்றின் மூலமாகக் கிடைக்கக் கூடிய கூடைகள் மிகஎளிதாக கிடைப்பதால் மூங்கில் கூடையை மறந்தே போயுளளனர் எனலாம். மூங்கில் கூடையைப் பயன்படுத்துவதால் ஏராளமான பயன்கள் உள்ளன.
- காற்று இடைவெளி இருப்பதால் கூடையில் வைத்திருக்கும் பொருட்கள் காற்றோட்டமான சூழல் ஏற்படும்.
- இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்டது என்பதால் நீண்ட நாட்கள் தாங்கும்.
- நோய்க்கிருமிகளின் ஊடுறுவல் அதிகம் இருக்காது.
- பார்வைக்கும் அழகாக இருக்கும்.
- கூடையின் மேல்பகுதியில் வளைவு இருப்பதால் எளிதில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம்.
- ஒருவேளை மக்கினாலும் மண்ணுக்கு உரமாக மாறிவிடும்.
மூங்கிலை வெட்டியும் சீவியும் கூடை பின்னுகின்ற தொழிலாளிகள் இன்றைய தலைமுறையில் கொஞ்சகொஞ்சமாகக் குறைந்து வருகிறார்கள். மக்கள் யாரும் மூங்கில் கூடையை விரும்பாததால் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காகக் குலத்தொழிலை விட்டுவிட்டு பிறதொழில்கள் செய்ய முற்படுகின்றனர்.
இனியவைக் கற்றலின் தமிழ்ப் பாரம்பரியத்தைக் காப்போம்
கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க.லெனின்
உதவிப்பேராசிரியர்,
எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.