Tuesday, July 28, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் E-Books on Smartphones: An Overview|Dr. E. Esakkiammal

E-Books on Smartphones: An Overview|Dr. E. Esakkiammal

திறன் பேசியில் மின்புத்தகம் - ஒரு பார்வை
Abstract
          E-books are digital versions of printed books that can be read on smartphones. They allow users to carry thousands of books in a single device. E-books can be downloaded from online libraries, bookstores, or educational platforms. Smartphone apps provide features such as adjustable font size, brightness, and night mode for comfortable reading. Readers can highlight text, make notes, and bookmark important pages easily. E-books are portable, making it convenient to read anytime and anywhere. They reduce the need for printed books, helping to save paper and protect the environment. Many e-books include interactive features such as images, audio, videos, and hyperlinks. Students and professionals use e-books for learning, research, and quick access to information. Overall, e-books on smartphones provide a convenient, affordable, and eco-friendly way to read and learn.

“திறன் பேசியில் மின்புத்தகம் – ஒரு பார்வை

ஆய்வுச் சுருக்கம்
           மின்புத்தகங்கள் என்பது அச்சிடப்பட்ட புத்தகங்களின் மின்னணு வடிவமாகும்; அவற்றை திறன்பேசிகளில் எளிதாக வாசிக்கலாம்.  ஒரே திறன்பேசியில் ஆயிரக்கணக்கான புத்தகங்களை சேமித்து எடுத்துச் செல்ல பயனர்களுக்கு இது உதவுகிறது. மின்புத்தகங்களை இணைய நூலகங்கள், இணையப் புத்தகக் கடைகள் அல்லது கல்வித் தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். திறன்பேசி செயலிகள் எழுத்துரு அளவை மாற்றுதல், திரை ஒளிர்வு (Brightness) கட்டுப்படுத்துதல் மற்றும் இரவு முறை  போன்ற வசதிகளை வழங்குவதால், வாசிப்பு மிகவும் வசதியாகிறது.  வாசகர்கள் முக்கியமான பகுதிகளை முன்னிலைப்படுத்துதல் குறிப்புகள் எழுதுதல் மற்றும் முக்கியப் பக்கங்களை புக்மார்க் செய்தல் போன்றவற்றை எளிதாகச் செய்யலாம்.
  மின்புத்தகங்கள் எளிதில் எடுத்துச் செல்லக்கூடியவை என்பதால், எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்தும் வாசிக்கலாம். இவை அச்சுப் புத்தகங்களின் தேவையைக் குறைத்து, காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவுகின்றன. பல மின்புத்தகங்களில் படங்கள், ஒலிப்பதிவுகள், காணொளிகள் மற்றும் இணைய இணைப்புகள் (Hyperlinks) போன்ற ஊடாடும்) அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களும் தொழில்முறை நிபுணர்களும் கற்றல், ஆராய்ச்சி மற்றும் தகவல்களை விரைவாகப் பெறுவதற்காக மின்புத்தகங்களைப் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். மொத்தத்தில், திறன்பேசிகளில் உள்ள மின்புத்தகங்கள் வசதியான, செலவுக் குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாசிப்பு மற்றும் கற்றல் முறையை வழங்குகின்றன.
முன்னுரை
             திறன்பேசியில் மின்புத்தகம் நாம் அன்றாடமாக பயன்படுத்தி கொண்டு இருந்த கையடக்க பேசிகளில் மின்புத்தகத்தை எவ்வாறு உருவாக்குதல், அதனை எவ்வாறு வாசிப்பது எவ்வாறு பதிவிறக்கம் செய்து கொள்வது என்று நாம் முதலில் அறிவதற்கு முன்பே கைபேசிகள் பற்றி தெரிந்து இருக்க வேண்டும் முதலில் கைபேசிகளை பயன்படுத்த தெரியாமல் இருந்திருக்கலாம். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு கைபேசிகள் வளர்ந்து வருகின்றன முதலில் நாம் பயன்படுத்திய கைபேசிகளில் in comining,out going தகவல் தெடர்ப்பு பரிமாற்றம் sms போன்றவை உபயோகித்து இருந்தோம் பிறகு version அமைப்புகள் மாறுபட்டு Fm radio வசதிகள் கொண்டு வரப்பட்டன மீண்டும் mp3 ஓலி mp4 ஒளியும் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் இருந்து மாறுபட்டு java மொழியை கொண்டு கைபேசிகள் உருவக்கபட்டன, இதில் மாறுபட்டு கணிணியை போல் வன்பொருளாகவும், மென்பொருள் பயன்படுத்தும் வகையில் அமைத்து உள்ளன.அதனை தான் smart phone என்கிறோம். விசை பலகை கொண்டு இருந்த கைபேசிகள் இப்போது தொடுதிரையாக மாறுபட்டு இருக்கின்றன. இதில் மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் முறையை இக் கட்டுரையில் காண்போம்.
திறன் பேசி
          திறன் பேசி என்பது இணையவசதி பரவலாக்கப்பட்ட பிறகு செல்பேசி, கைபேசி, திறன்பேசி, என்று அழைக்கப்படும் கருவிகளில் நாம் உரையாடல் மட்டுமே பயன்படுத்தி கொண்ட மக்கள் அதில் இருந்து sms தகவல் பரிமாற்றத்திற்கு மாற்றம் அடைந்தனர் அதற்கு பிறகு Fm, Mp3, Mp4 போன்ற பரிமாண வளர்ச்சியில் இருந்து மாறுபட்டு வந்தனர். துணைக்கோள், சேர்ந்து உரையாடல், இணையப் பயன்பாடு என்று உள்ளங்கையளவு கணிணி ஆகிவிட்டது. அதற்கு ஒரு பெயர் சூட்ட வேண்டும் என்று ஆராய்ந்தனர். அதற்கு பிறகு தான் திறன் பேசி (smart phone) என்று பெயர் வைத்தார்.
          அறிவு கிடைப்பது குறைவு அவற்றிற்கான நிறுவப்பட்டுள்ளன. பெரும்பாலும் I phone இன்றைய காலகட்டத்தில் அனைவரும் திறன்பேசி பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றோம். நம்மில் பல பேருக்கு அவை பற்றிய முழுமையாக திறன் பேசியில் Andriod என்ற Os Operating System கூடுதலாக Apple தவிர தற்போது திறன்பேசியில் Andriod Os கொண்டு உருவாக்கப்படுகின்றன. இதை தான் நாம் திறன்பேசி என்கிறோம்.
திறன் பேசியின் வகைகள்
              திறன் பேசிகள் பல வகைகயாக வளர்ந்து கொண்டு வருகின்றன. அதில் சில வகைகள், Samsung, Galaxy, Micromax, Lenovo, Htc, Nokia, Lava, Lg, Sony, உள்ளன. திறன் பேசியை, நுண்ணறி பேசி என்றும் குறிப்பிடுவது உண்டு. இவ்வகையில் உள்ள திறன் பேசியில், மின்னஞ்சல், இணையம், ஒளிப்படக்கருவி, தொலைபேசி ஒலி இசைப்பெட்டி குறிப்பு, நாள்காட்டி, தொடர்புகள் எனப் பலதரப்பட்ட செயலிகளை இது கொண்டிருக்கும். இதைதவிர ஐ GUTS Apple Black Beare போன்றவை நுண்ணறி பேசிகள் என்கின்றோம். இவ்வகை கையடக்க பேசிகளிலும் திறன் பேசிகளிலும், மின் புத்தங்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்றும் அதனை நாம் கையடக்க கருவிகளில் எப்படி வாசிப்பதும், என்றும், அதன் நன்மைகள் பற்றியும், பயன்கள் பற்றியும் திறன் பேசிகளில் மின்புத்தகம் என்று குறிப்பிடுகிறோம்.
 மின்னூல்
           மின்னூலானது பொதுவாக பதிவாளர் மின்னணுவியல், எண்முறை ஊடங்களை மூலம் தமது புத்தகங்களை மின்னூல் என்பது ஒன்றினுடைய மின்னணுவியல் அல்லது எண்முறை பதிப்பாகும் Digital Libarary விநியோகிப்பதற்காக உருவாக்கப்படுகிறது. நாம் ஒரு புத்தகத்தை உருவாக்குவதற்கு முன்பாகவே தட்டச்சு செய்து அதனை அச்சகத்திற்கு கொடுத்து நமக்கு தேவையான முறையில் புத்தகமாக்க முடியும். இதில் சில சிக்கல்கள் ஏற்படும் அவ்வகை சிக்கல்கள், பொதுவாக ஏற்படக்கூடிய சிறு சிறு சிக்கலே ஆகும். மின்னல் என்பது அவ்வாறு அல்ல நாம் கணிணியில் தட்டச்சு செய்து தமக்கு விருப்பம் போல் புகைப்படங்கள்.எழுத்துக்கள், வடிவம் போன்ற முறைகளை மாற்றி மின்னூலாக மாற்றுவது மின்னூல் என்கின்றனர். e-book பழங்காலத்தில் புத்தகங்கள் மூட்டை சுமப்பது போல் சுமந்து இருப்பதும் கட்டிடங்கள் கட்டி அதற்கென அறைகள் ஒதுக்கி புத்தகங்களைச் சேமித்து வைத்து இருந்தனர். புத்தகங்களை ஒன்றன் மேல் ஒன்றாகஅழுத்தி வைத்தனர். குறிப்பிட்ட காலங்களுக்குப் பிறகு புத்தக சுமையை குறைப்பதற்கு மின்னூல் உருவாக்க வேண்டும் என்ற  எண்ணம் எழுந்தது.
மின்னூல் அமைப்பும் வடிவமைப்பு
           மின்னூல்கள் பல்வேறு அமைப்பில் வெளியிடப் படுகின்றன. அவற்றில் முக்கியமானவை Pdf, Html, e-pub  பீ.டி.எப் அமைப்பு, இணையத்தில் வெளியிடப்படும் அமைப்பு, புதிய அனைத்துலக தரமான முறை என்ற அமைப்பு முறைகள் உள்ளன. மின்னூல் சமுதாயமானது அதிகமான மின்னூல் வடிவத்தெரிவுகளை கொண்டுள்ளது. எந்த வடிவம் சிறந்த வடிவம் என்று, குறைபாடுகள், நிறைகள், பற்றியெல்லாம் அதிகமான விவாதங்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்பதே முதன்மையான தேவையாகும்.
          ஆரம்ப மின் புத்தகங்கள் பொதுவாக சிறிய வட்டெழுத்துக்கள் மூலம் படிக்க வேண்டும். சிறப்பு பகுதிகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்கள் எழுதப்பட்ட இந்த மின் புத்தகங்களின் நோக்கம் மென்பொருள் ஆகும் உற்பத்தி நுட்பங்கள் மற்றும் பிற பாடங்களில் தொழில் நுட்ப கையெடுகள் சேர்க்பப்பட்டுள்ளது. இணைய மின் புத்தகங்கள் உட்பட்ட மிகவும் எளிதாக மின்னூல் கோப்புகளை மாற்றம் செய்யப்பட்டது. எனவே மின்னூல் வடிவங்கள் Dynatext, Html, ஹைபர் மீடியா, மியுரை குறியீட்டு மொழி  என    வடிவங்களையும்,அமைப்புகளையும் கொண்டு உள்ளன.
மின்னூலின் பயன்பாடு
          மின்னூல் என்பது மின்னணுவியல் என்னும் எண்முறை பதிப்பு என்னும் குறிப்பிடுவார். நாம் தட்டச்சு செய்து ஒரு நூலை உருவாக்கி அதனை அச்சகத்தில் கொடுத்து நகல் எடுத்து அதனை பதிப்பகத்திற்கு அனுப்பி சரி பார்த்த பிறகு கட்டுமானம் Binding செய்து தயாரிக்கப்பட்டு வருகின்றனர். இதனை பற்றி படிக்கும் குழந்தைகள் மூட்டை சுமைப் போல் சுமந்து செல்கின்றதனை குறைக்க மின்புத்தகம் பயன்படுகின்றன. கணிணி வழி தட்டச்சு செய்து இணைய வழி வெளியிடுவதை மின் புத்தகம் என்று e-book குறிப்பிடுகின்றனர். அதனை திறன் பேசி வழியில் வெளியிடுகின்றனர்.
       நூல் நிலையம் சென்று நல்ல புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று அலைந்து திரிந்து களைத்துப் போய்விடாமல் வீட்டில் இருந்து கணிணி சுட்டியை அழுத்தி விரும்பிய புத்தகங்களை தெரிவு செய்து படிக்கும் முறை உள்ளன. திறன் பேசியில் Google play Store என்ற செயலியை பயன்படுத்தி நமக்கு தேவையான புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நமக்குத் தேவையான புத்தகங்களை எல்லாம் பதிவிறக்கம் Download செய்து Memory sd card குறுந்தகட்டில் சேமித்து வைத்துக்கொள்ளலாம் அதுவே மின்னூலின் பயன்பாடு ஆகும்.
முடிவுரை
            திறன் பேசி, நுண்ணறி பேசி என்று சொல்லக் கூடிய கையடக்கம் கருவி என்றும் குறிப்பிடுவது உண்டு. இதில் இயக்கும் செயலில் மின்னஞ்சல், இணையம், ஒளிப்படக்கருவி, தொலைபேசி  ஒலி, இசைப்பெட்டி, நாள்காட்டி, பலதரப்பட்ட செயலிகள் கொண்டு இயங்கும் இக்கருவிகள், திறன் பேசியில் நாம் Play store என்ற செயலிலை பயன்படுத்தி புத்தகத்தை பதிவிறக்கம் செய்து வாசிக்கிறோம். அப் புத்தகமானது என்ன வடிவில் உள்ளது என்று நாம் அறிந்து கொண்டு பயன்படுத்தி வருகிறோம். புத்தகத்தில் படிப்பதை விட இதில் படிப்பதற்கு நேரங்கள் தேவையில்லை, எப்பொழுது வேண்டுமனால் எங்கு வேண்டுமானல் படிக்க பயன்படுத்துவது திறன்பேசி ஆகும். அதன் வளர்ச்சி மாற்றம் மாறுபட e-book வளர்ச்சியும் மாறுபடலாம்.
References  Book
  • Electronic Books in Libraries. Haworth Information Press, 2003.
  • E-Reading: Getting the Most Out of Your Kindle or Other E-Book Reader. Jeff Blum. 2023.
  • Digital Disruption and Electronic Resource Management in Libraries. Chandos Publishing, 2017. (Chapter on Electronic Books).
Online References
மேற்கோள் நூல்கள்
  • தமிழ் இணையக் கல்விக்கழகம். மின்னூலகம் மற்றும் மின்னூல்கள். சென்னை: தமிழ் இணையக் கல்விக்கழகம்.
  • தமிழ்நாடு பொது நூலக இயக்ககம். மின் புத்தகங்கள் (E-Books). சென்னை: பள்ளிக்கல்வித் துறை, தமிழ்நாடு அரசு.
  • செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT). பாவேந்தர் நூலகம் மின்னூல்கள் மற்றும் மின்னணு வளங்கள். சென்னை
இணைய மேற்கோள்கள்
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ஈ.இசக்கியம்மாள்,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருவேற்காடு, சென்னை.

 

திறன் பேசியில் மின்புத்தகம் – ஒரு பார்வை PDF

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »