Wednesday, October 14, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home கவிதைகள் பெண்மை|கவிதை|ச.சு.பி.தர்ஷனா

பெண்மை|கவிதை|ச.சு.பி.தர்ஷனா

Empowered Woman_ Tradition, Dreams, Strength
🧚🏻‍♀️தென்னாட்டின் பொன்னேடாம்
திருக்குறள்..!
வள்ளுவனின் பொய்யாமொழியில்
பெண்மையைப் பற்றிக் கூறியதற்கு
அவரே பெருமைப்படுவார்.
அத்தகைய பெண்மையைப் படைத்த 
பிரம்மனே ஆசைப்படுவார் 
பெண்ணாகப் பிறக்க..!
🧚🏻‍♀️அவளது அறியாத பருவத்தில் 
கள்ளம் கபடம் இல்லாமல்
சிரித்து விளையாடிய அவள்,
அவளின் ஆசைகளையும் 
கனவுகளையும் மறைத்துக் கொள்கிறாள்!
தன் வறுமையை நினைத்து 
மகளாக..!
🧚🏻‍♀️தான் மணந்து கொள்ளும் 
கணவன் புரிந்து கொள்ளவில்லை
என்றாலும் அவள் ஏங்கவில்லை,
அனைத்தையும் அனுசரித்துச்
செல்கிறாள் மனைவியாக.!
🧚🏻‍♀️ஒத்த உசுருக்குள்
ஓராயிரம் ஆசைகள்,
அனைத்தும் மறந்து
அன்பாக அரவணைத்து 
அவள் மனம் உதிர்ந்தாலும் 
முக மலர்ச்சியுடன் 
முத்தமிட்டு வழியனுப்பி
வைக்கிறாள் தாயாக.!
🧚🏻‍♀️அவளின் கனவுகள் 
வெற்றி பெறும் போது                                  
வாழ்கையை அழகாக்கும் – அவள் 
கனவுகள் தோற்கும் போது 
கவிதையை அழகாக்குகிறாள்..!
🧚🏻‍♀️அவள் பெண்தானே என்று 
தாழ்வாக நினைக்காதே – அவள் 
அங்கீகரிக்காவிட்டால் 
உன்னை ஆண்மகன் என்று 
இவ்வுலகம் ஒரு போதும் நம்பாது..!
🧚🏻‍♀️கண்ணீர் விடுவதும் அவள்,
கண்ணீர் துடைப்பதும் அவள்,
கண் இமைபோல் காப்பதும் அவள்,
கண்மணியே என்று கொஞ்சுவதும் அவள்,
பாசமாய் அரவணைப்பதும் அவள்,
பத்திரமாய் பாதுகாப்பதும் அவள்..!
🧚🏻‍♀️மங்கையராய் பிறப்பதற்கே – நல்ல
மாதவம் செய்திட வேண்டும்
என்று சொல்லி மகிழ்ந்த 
காலம் போய்,
இப்போதைய பெண்குழந்தைகளே
எங்களைக் கள்ளிப்பால் 
கொடுத்துக் கொன்றுவிடுங்கள்
எனக் கதரும் நிலை ஏற்பட்டுவிட்டது..!
🧚🏻‍♀️நாங்கள் ஒழிந்துகொள்ளும் 
பெண்கள் அல்ல
ஒளி வீசும் விண்மீன்கள்.!!
ச.சு.பி.தர்ஷனா
மூன்றாம் ஆண்டு,
இளங்கலை சமூகவியல், 
விஇடி கலை  மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி, 
திண்டல், ஈரோடு-12.

பெண்மை pdf

Previous articleRegulating Desires|R.Sarojini
இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்
Iniyavaikatral International Tamil Studies E- Journal - தமிழியல் ஆய்வுக்கட்டுரைகள், திறனாய்வுக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள், சுய வரலாறு கட்டுரைகள் (உங்களைப் பற்றிய சுயசரிதம்), கவிதைகள் (புதுக்கவிதைகள் | மரபுக்கவிதைகள்), சிறுகதைகள், தொடர்கதைகள், புதினம், தமிழர்கள் பயன்படுத்திய புழங்கு பொருட்கள் பற்றிய தகவல்கள், மறந்துபோன - மறைந்துபோன - மறைந்து கொண்டிருக்கின்ற அனைத்தும் மீட்டுருவாக்க உதவியோடு புதுப்பித்தல், இன்றைய தேவைகள் - நாளைய தேடல்கள் பற்றிய சிந்தனைகள் எனத் தமிழியல் சார்ந்த படைப்புகள் வெளியிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »