தூரத்தில் நீ..! துடிப்பில் நான்..!!|கவிதை|கவிஞர் க.கலைவாணன்

தூரத்தில் நீ..! துடிப்பில் நான்..!! - கவிஞர் க.கலைவாணன்
🌹இந்தப் புவியில்
இன்னொடி மலர்கின்ற
எண்ணற்ற காதல்
ஒன்றிணைந்தால் ! – அவை
உன் இரு கண்களுக்குள்ளே
அடங்கிவிடும்..!
🌹இந்த உலகில்
வானளவு நிலைநின்ற
மொத்த தியாகங்கள்
உன் நெஞ்சில் நுழைந்தால்
உன் நிலையக் கண்டு நொறுங்கிவிடும்..!
🌹உன் பார்வையில் பட்டதால்…
உன் சிந்தனையில் சிறை கொண்டேன்..!
🌹உன் இதய துடிப்பில் இணைந்ததால்
உன் சுவாசம் பெற்று உயிர் பிழைத்தேன்..!
🌹ஏனடி வானம் தொடும்
காதல் கொள்கிறாய்..!
வீணடி உன்னோடு
நான் சேராமல் நேர்ந்தால்..!
🌹ஈருயிர் வென்று கொள்ளும்
காதல் இன்பம் தரும்..!

 

🌹ஈர் இதயம் வலியோடு
கொள்ளும் காதல் போதைதரும்..!
🌹என்னைக் காண முடியாமல்
உடல் மெலிந்து
சுவாசம் வற்றி
தேகம் சுருங்கி
கண்கள் பிதுங்கி நிற்கிறாய்..!
🌹உன்னைக் கண்டால் 
போதும் என
மலை உச்சி ஊர்ந்து வந்தேன்..!
🌹ஒரே ஒரு நொடி மட்டும்
என்னைக் காண
அந்த இறைவன் தந்தான்..!
🌹 இந்த உலகமே 
உனதாகியது போல்
 பேரதிர்ச்சி உனக்கு..!
🌹 நீ கொண்ட
வலி மிகுந்த கண்ணீர் !
நான் ஏழு கடலை வற்றினாலும்
தேம்பி அழும் கண்ணீரால் நிரம்பும்
துயரத்தில் தள்ளியது..!
🌹 நீ விடும் கண்ணீர்
எனக்காக மட்டுமே..!
நீ சுவாசிக்கும் மூச்சு
என் பெயர் இல்லையேல்
அது விஷம் உனக்கு..!
🌹இந்த உலகில்
உன்னைவிட
இந்தக் காதலின் அர்த்தத்தை
எனக்கு உணர்த்திருக்க இயலாது.!
🌹உன்னுள்
நீ கொள்ளும் நரக வேதனை
என்னுள்
வேண்டுமென வரம் கொண்டேன்..!
🌹இந்த வலியும்
ஒரு சுகம் தான் !
அளவுகடந்த காதல்
அருகில் இருந்தும் தூரம்..!
🌹ஆக மொத்தம் நீ காதல் தீ..!!
கவிதையின் ஆசிரியர்
 கவிஞர் க.கலைவாணன்,
ஓசூர் – 635 109.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here