Monday, October 19, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home கவிதைகள் காடெனும் காதல் தேசம்; அங்கு பல உயிர்களின் சுவாசம்|கவிதை|ரிணி

காடெனும் காதல் தேசம்; அங்கு பல உயிர்களின் சுவாசம்|கவிதை|ரிணி

Forest Symphony at Sunrise
🌳காடெனும் காதல் தேசம்
அங்கு பல உயிர்களின் சுவாசம்!
அங்கொரு மான் இருக்க – அது,
மென்மை கண்களும்,
மௌன இதயமும்,
சிறு சத்தம் கேட்பினும்,
பெரு வெட்கம் கொள்ளும்.
ஆனால், அதை
நேசித்த குரலறியும்போது மட்டும்
அது பயப்படவில்லை..!

 

“நானும் அப்படித்தான்“
 
🌳உன்னிடம் வரும்போது
என் இதயத்தைப் பாதுகாக்கவில்லை,
இவன் காயப்படுத்துவானா என்றறியவில்லை,
கை விடுவானா என்றறியவில்லை,
நம்பிவிட்டேன்,
அதுவே என் முதல் தவறு.
அக்காதல் தேசத்தில் ஒரு
தேனீ இருந்தது
மலர்மலராய் சென்று,
வாசம் சுமந்து,
அமிர்தத்தால் தன் கூட்டை நிரப்பியது.
நிரம்பியது ஒரு மலராலல்ல,
நூறு மலர்கள்,
ஆயிரம் மலர்கள்,
ஏன்?
லட்சம் மலர்களினால்!
என் வாழ்வையே உன்
காலடியில் கொடுத்தேன்
நீ கேட்டதற்காக மட்டுமல்ல,
நீ இனிமையாக வாழ வேண்டும்
என்பதற்காக!
ஆனால், ஒரு நாள்,
என் காதலைத் தவிர என்னிடம்
வேறொன்றுமில்லை;
ஆனால், உன் மனமெனும்
தேன்கூடோ நிறைந்திருந்தது,
அதை நிறைத்த தேனீயோ
ஏதுமின்றி வாடியது..!
🌳அதே தேசத்தில் ஓர்
பறவை இருந்தது
அது பல நிறங்களில் பறந்தது.
அந்நிறங்களினால் ஒரு கூடு கட்டியது.
வண்ண நிறமே இன்பமென வாழ்ந்தது,
உண்மை நிறத்தை மறந்து..!
“நானும் அப்படித்தான்“
 
🌳உனக்காக ஒரு மணக்கோட்டைக் கட்டினேன்.
அதில், உனக்கென்று ஒரு மூலை,
உனக்கென்று ஒரு நேரம்.
நீ வந்தபோது அக்கோட்டை
உயிர்பெற்றது; நீ சென்றபோது,
கோட்டையோடு சேர்ந்து
என் கனவும் களைந்தது..!
🌳அக்காதல் தேசத்தில் ஒரு
யானை இருந்தது
அது மறப்பதில்லை
மரங்களின் வாசத்தையும்,
பாதைகளின் தடத்தையும்,
கடந்த காலத்தின் சுவடுகளையும்,
தன்னுள் வைத்துக்கொள்ளும்..!
“நானும் அப்படித்தான்“
 
🌳நீ சொன்ன சிறுவார்த்தை நினைவினில்
நீ செய்த சிறு உதவி நினைவினில்,
நீ சிரித்த அந்நாளும் நினைவினில்,
நீ என்னை அழவைத்த அந்நாளும்
நினைவினில் இருந்தது.
ஆனால், நீ மறந்துவிட்டாய்.
நான் மறக்கவில்லை.
உனக்கது ஒரு கணம்
எனக்கது ஓர் ஜென்மம்..!
🌳அக்காதல் தேசத்தின் ஓரத்தில்
ஒரு நாய் இருந்தது
அதன் அன்பிற்குக் கணக்கில்லை,
காத்திருப்பிற்குக் காலக்கெடுவில்லை,
வாசலைப் பார்த்தது,
காலடி ஓசையைக் கேட்டது,
ஒவ்வொரு நிழலிலும்,
அவன் வந்துவிட்டானா
என்று பார்த்தது..!
“நானும் காத்திருந்தேன்“
 
🌳தென்றல் திரும்பி வருமென்று
ஒருநாள்,
இன்னொரு நாள்,
இன்னும் ஒரு நாள்,
ஆனால் நீ வரவில்லை,
நீ சென்றாய் வேறு ஒருவரின்
காதல் தேசத்திற்குள்..!
அப்போது தான் புரிந்தது.
🌳நான் உனக்கு ஒரு மலர்
நீ என் இனிமையை எடுத்தாய்,
நான் உனக்கொரு கூடு
நீ என் பாதுகாப்பில் இருந்தாய்,
நான் உனக்கொரு நிழல்
நீ என் கீழ் ஓய்ந்தாய்,
நான் உனக்கொரு வாசல்
நீ வந்தாய், தங்கினாய்,
தேவையானதை எடுத்தாய்,
பின் வேறு கதவை தேடி சென்றாய்.
அப்போது புரிந்தது, சிலர்
மலரை நேசிப்பதில்லை
அதன், மணத்தை நேசிப்பார்கள்.
சிலர் கூட்டை நேசிப்பதில்லை,
அதன் வெப்பத்தைதான் நேசிப்பார்கள்.
சிலர் நிழலை நேசிப்பதில்லை
அதன் குளிர்ச்சியைத்தான் நேசிப்பார்கள்.
சிலர் நம்மை நேசிப்பதில்லை,
நம் அன்பைத்தான் நேசிப்பார்கள்..!

 

கவிதையின் ஆசிரியர்
Reini
Pasir Ris St 52,
Singapore 510518

 

காடெனும் காதல் தேசம்; அங்கு பல உயிர்களின் சுவாசம் PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »