ஆனாய நாயனார்
♣ மழநாடு என்னும் நடுநாட்டில் திருமங்கலம் என்னும் ஊரில், ஆயர் குலத்தில் பிறந்தவர் ஆனாய நாயனார் ஆவார்.
♣ இவர் சிவபெருமான் மீது அரும்பக்தி கொண்டிருந்தார்.
♣ இடையர்களின் தலைவரான அவர், பசுக்கூட்டங்களை மேய்த்து வந்தார்.
♣ கூடவே குழல் எடுத்து இசைத்தும் வந்தார்.
♣ ஒருநாள் ஆயனார் பசுக்களை மேய்க்க காட்டிற்குச் சென்றார். அங்கு மரங்களில் கொன்றைப் பூக்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்திருந்தன. அவற்றைப் பார்த்ததும் ஆயனாருக்கு மனதில் பேரானந்தம் உண்டானது.
♣ கொன்றைப் பூக்களுடன் நிற்கும் மரங்கள் சிவபெருமானது திருமுடியாகவே தெரிந்தது அவருக்கு.
♣ அப்பேரானந்தத்தில் திளைத்த ஆயனார், தன் குழலை மடுத்தார்.
♣ ஐந்தெழுத்து மந்திரத்தை குழலில் இசைக்க ஆரம்பித்தார்.
♣ பொழுது போவதை மறந்து இசைத்தார்.
♣ அவரது குழலிசையில் மரங்கள், நதிகள், பறவைகள் இன்னபிற உயிரினங்கள் எல்லாம் அசைவற்று நின்றன.
தேவர்களும், தேவ மங்கைகளும் நிலைதடுமாறினர்.
♣ அவரது குழல் இசை பிரம்மலோகம், வைகுந்தம் இவைகளைத் தாண்டி கையிலாயம் வரை எட்டியது.
♣ ஆனாயரது இசைக்கு மெச்சிய சிவபெருமான் ஆனாயர் முன்தோன்றினார்.
♣ ‘இனிய இந்த இசையோடு என்னோடு வந்து கலப்பாய்’ என்று வாக்கருளினார்.
♣ ஆனாய நாயனார் சிவஜோதியில் கலந்தார்.
கீழ்க்கண்ட நூலிலிருந்து,
அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு
ஆசிரியர் – கீர்த்தி
சங்கர் பதிப்பகம், சென்னை.
படங்கள்
அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு
நன்றி
மேலும் அறிய,
2.திருநீலகண்ட நாயனார் புராணம்
11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்