📞 அலைபேசியின் வாக்குமூலம்
📞கண்களால் பார்த்து! ரசித்து,
கைகளால் தொட்டு! வருடி!
மார்போடு அனைத்து!
உன் மூச்சுக்காற்று
என் மீது பட
உன் இரு கைளால்
என்னை அணைத்தபடி
எப்போதும் உன்னுடன் இருக்கிறேன்..!
📞 நீ கேட்கும் ஒவ்வொன்றும்
என்னிலிருந்து நான் தருகிறேன்!
அது நன்மையாக இருக்கலாம்!
தீமையாக இருக்கலாம்!
📞 ஏனென்றால்!
கேட்பது நீயல்லவா!
நான் உன் கையில்
தவழும் போது
இந்த உலகமே நான்தான்..!
📞 என்னுடன் பல விளையாட்டுகளை
விளையாடுகிறாய் – அவற்றில்
தோற்றும் போகிறாய் !
ஆனாலும் மீண்டும் மீண்டும்
தோற்றுப் போக ஆசைப்படுகிறாய்!
ஏன்! ஏனென்றால்
என்னில் உன்னை
மூழ்கடித்து விட்டதால்,
📞 இப்படி மூழ்கடித்து விட்டதால்
எத்தனையோ,
உயிர்களை குடித்திருக்கிறேன்.
📞 ஆனாலும்! உன் கைகளால்
இறுக்கிப் பிடித்து
என்னை இறக்கி விட
முயற்சி செய்வதே இல்லை,.!
📞 உன் தேவைக்கு ஏற்ப
என்னைப் பயன்படுத்தினால்
நான் உனக்கு சொர்க்கம்!
உன் ஆசைக்கு
என்னை பயன்படுத்தினால்
நானே உனக்கு நரகம்!
கவிதையின் ஆசிரியர்
சி. தெய்வானை சிவகுமார்
உதவி பேராசிரியர்
தமிழ்த்துறை
ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
பர்கூர்
கிருஷ்ணகிரி