பதம் என்பதற்கு சொல் என்று பொருள். பதம் இருவகைப்படும்.
1.பகாப்பதம்
2.பகுபதம்
1.பகாப்பதம்
“பகுப்பாற் பயனற்று இடுகுறியாகி
முன்னே ஒன்றாய் முடிந்தியல் கின்ற
பெயர்வினை இடையுரி நான்கும் பகாப்பதம்” (நன்னூல்.131)
பகாப்பதம் நான்கு வகைப்படும்
1.பெயர்ப் பகாப்பதம் : (எ.கா) தமிழ், அன்னை, நீர்
2. வினைப் பகாப்பதம் : (எ.கா) வாழ், வளர், படி, எழுது
3. இடைப் பகாப்பதம் : (எ-கா) போல, மற்று, ஆல்
4. உரிப் பகாப்பதம் : (எ.கா) நனி, தவ, சால
குறிப்பு: இடைச் சொல்லும் உரிச்சொல்லும் எப்போதும் பகாப்பதங்களாகவே இருக்கும்.
2.பகுபதம்
பிரிக்கக் கூடியதும் பிரித்தால் பொருள் தருவதுமான பதம் பகுபதம் எனப்படும்.
(எ.கா) தலைவர் = தலை + வ்+ அர்
செய்தாள் = செய் +த் + ஆள்
பகுபதம் இருவகைப்படும்.
1.பெயர்ப்பகுபதம்
2 வினைப்பகுபதம்
1.பெயர்ப்பகுபதம்
♣ பகுபதம் பெயர்ச்சொல்லாக இருப்பின் அது பெயர்ப்பகுபதம் எனப்படும்.
♣ பெயர்ப்பகுபதம் ஆறு வகைப்படும்.
1. பொருட்பெயர்ப் பகுபதம் : (எ.கா) பொன்னன், செல்வன்
2. இடப்பெயர்ப் பகுபதம் : (எ.கா) ஊரன், மதுரையான்
3 காலப்பெயர்ப் பகுபதம் : (எ.கா) கார்த்திகையான்
4. சினைப்பெயர்ப் பகுபதம் : (எ.கா) கண்ணன், தலையன்
5. பண்புப்பெயர்ப் பகுபதம் : (எ.கா) கரியன், இனியன்
6. தொழிற்பெயர்ப் பகுபதம் : (எ.கா) இயக்குநர், ஒட்டுநர்
2.வினைப்பகுபதம்
பகுபதம் வினைசிசொல்லாக இருப்பின் அது வினைப் பகுபதம் எனப்படும். வினைப்பருபதம் இரண்டு வகைப்படும்.
1 தெரிநிலை வினைப்பகுபதம் : (எ.கா) படித்தான். ஓடிவான்
2. குறிப்பு விளைப்பகுபதம் : (எ.கா) நல்லன்.
பகுபத உறுப்புகள்
“பகுதி விகுதி இடைநிலை சாரியை
சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை
முன்னிப் புணர்ப்ப முடியும்எப் பதங்களும்” (நன்னூல்.133)
பகுபத உறுப்புகள் ஆறு வகையாகப் பிரிக்கலாம்.
1.பகுதி
2 விகுதி
3.இடைநிலை
4.சாரியை
5 சந்தி
6 விகாரம்
ஒரு பகுபதத்தில் ஆறு உறுப்புகளும் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் பகுதி, விகுதி என்னும் இரண்டும் கட்டாயம் இருத்தல் வேண்டும்.
1.பகுதி
“தத்தம் பகாப்பதங்களே பகுதியாகும்” (நன்னூல்.134 )
♣ ஒரு பகுபதத்தில் முதலில் நிற்கும் உறுப்பு பகுதி ஆகும்.
♣பகுதி கட்டளைச் சொல்லாக இருக்கும்.
♣ பகுதி பகாப்பதமாக இருக்கும்.
♣வினைப் பகுபதத்தில் உள்ள பகுதி தொழிலை உணர்த்தும்.
♣பகுதி, ‘முதனிலை’ என்ற பெயராலும் அறியப்படும்.
♣ பெயர்ப் பகுபசுத்தில் உள்ள பகுதி பெயரை உணர்த்தும்.
(எ.கா)
கண்ணன் – இதன் பகுதி – கண்
நாடன்- இதன் பகுதி – நாடு
வினைப் பகுபதத்தில் உள்ள பகுதி, முன்னிலையில் உள்ள ஒருவனை நோக்கி ஏவுதற்குரிய சொல்லின் வடிவில் அமைந்திருக்கும்.
2.விகுதி
அன் ஆன் அள் ஆள் அர் ஆர் பம்மார்
அ ஆ குடுதுறு என் ஏன் அல் அன்
அம் ஆம் எம் ஏம் ஓமொடு உம் ஊர்
கடதற ஐ ஆய் இம்மின் இர்ஈர்
ஈயர் கயவும் என்பவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினும் சிலவே (நன்னூல்.140)
♣ ஒரு பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு விகுதி எனப்படும்.
♣ விகுதிக்கு வேறு பெயர் ‘இறுதிநிலை’ என்பதாகும்.
♣வினைமுற்றுப் பகுபதத்தில் வரும் விகுதி, திணை, பால், எண், இடம், எச்சம், முற்று, வியங்கோள் ஆகியவற்றை உணர்த்தும்.
♣ விகுதிகளாக வரும் சிலவற்றைக் கீழ்க்காணலாம்.
