Tuesday, October 27, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் Seasonal Affective Disorder in Tamil Modern Poetry|Dr. V.Boominathan

Seasonal Affective Disorder in Tamil Modern Poetry|Dr. V.Boominathan

Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :

Abstract
          This study aims to examine how seasonal affective disorder, a component of mood disorders, influences Tamil modern poetry. The human mind is naturally in tune with nature. So the human mind undergoes various changes due to arrangement in nature and climatic changes. Such judgments are often counterproductive to human behavior. Seasonal changes are exhausting. This article aims to examine how such fatigue is manifested in Tamil new poems.
Keywords:  Psychology, mood disorders, Tamil Literature, Mind, seasonal affective disorder.

“தமிழ் புதுக்கவிதைகளில் பருவகால மனச்சோர்வுக் கோளாறு”

முன்னுரை
          மனித மனமானது இயல்பாகவே இயற்கையோடு இயந்து இயங்கும் தன்மை கொண்டது. எனவே இயற்கையில் ஏற்பாடும் காலநிலை மாற்றங்களால் மனித மனமானது பல்வேறு மாறுதல்களை அடைகின்றன. அம்மாறுதல்கள் பல நேரங்களில் மனித நடத்தைக்கு எதிர்மறையாக அமைகிறது. பருவகால மாற்றங்கள் மனதினைச் சோர்வடையச் செய்கிறது. அவ்வாறு ஏற்படும் சோர்வு தமிழ் புதுக்கவிதைகளில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை ஆராயும் பொருட்டு இக்கட்டுரை அமைகிறது.
பருவகால மனச்சோர்வுக் கோளாறு (SAD)
          இயற்கையில் ஏற்படும் பருவகாலத்தினால் மனிதர்களின் மனம் பாதிக்கப்படுகிறது. பலர் சோகமாக அல்லது தங்களின் இயல்பான நிலையில் இல்லா நிலையினை எளிதாக கடந்து செல்கின்றனர்.  இந்த மனநிலை மாற்றங்கள் பருவங்கள் மாறும்போது தொடங்கி முடிவடைகின்றன. இலையுதிர் மற்றும் குளிர்காலங்களில் பகல் பொழுது குறையும்போது பலர் “மனச்சோர்வு” அல்லது “குளிர்கால மனச்சோர்வை” உணர்கிறார்கள், மேலும் வசந்த காலத்தில் நீண்ட பகல் நேரங்கள் திரும்பும்போது தங்கள் இயல்பான நிலையினை உணர்கிறார்கள். சில நேரங்களில், இந்த மனநிலை மாற்றங்கள் மிகவும் தீவிரமானவையாக இருந்து, ஒரு நபர் எப்படி உணர்கிறார், சிந்திக்கிறார் மற்றும் நடந்துகொள்கிறார் என்பதைப் பாதிக்கக்கூடும். பருவங்கள் மாறும்போது மனநிலையிலும் நடத்தையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நிகழ்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பருவகால மனச்சோர்வு அறிகுறிகள் இலையுதிர்காலத்தின் பிற்பகுதியிலோ அல்லது குளிர்காலத்தின் தொடக்கத்திலோ தொடங்கி, வசந்த மற்றும் கோடை காலங்களில் மறைந்துவிடும். இது குளிர்கால-வகை  மனச்சோர்வு அல்லது குளிர்கால மனச்சோர்வு என்று அழைக்கப்படுகிறது. வசந்த மற்றும் கோடை மாதங்களில் மனச்சோர்வு அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள். இது கோடைகால-வகை மனச்சோர்வு அல்லது கோடைகால மனச்சோர்வு என்று அழைக்கப்படுகிறது.
பருவகால மனச்சோர்வு (SAD) எவ்வாறு கண்டறியப்படுகிறது?
          SAD இருப்பது கண்டறியப்படுவதற்கு, ஒரு நபர் பின்வரும் தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
😩 அவர்களுக்கு மனச்சோர்வின் அறிகுறிகள் அல்லது மேலே பட்டியலிடப்பட்டுள்ள குளிர்கால அல்லது கோடைக்கால SAD-இன் குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்க வேண்டும்.
😩 அவர்களின் மனச்சோர்வு அத்தியாயங்கள், குறைந்தது தொடர்ச்சியாக 2 ஆண்டுகளுக்கு, குறிப்பிட்ட பருவங்களில் (குளிர்காலம் அல்லது கோடைக்காலம்) ஏற்பட வேண்டும்.
இருப்பினும், SAD உள்ள அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் அறிகுறிகளை அனுபவிப்பதில்லை.
😩 குறிப்பிட்ட பருவத்தில் ஏற்படும் அவர்களின் மனச்சோர்வு அத்தியாயங்கள், ஆண்டின் மற்ற நேரங்களில் ஏற்படும் மனச்சோர்வு அத்தியாயங்களை விட அடிக்கடி நிகழ வேண்டும்.”1
என்ற முறையில் பருவகால மனச்சோர்வினை  கண்டறிய முடியும்.
அறிகுறிகள்
          இந்த நிலை குளிர்காலமா அல்லது கோடைக்காலமா என்பதைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும்:
குளிர்கால-நிலையான பருவகால மனச்சோர்வு (SAD)
🌻 சோகம்
🌻 மனம் சோர்ந்த நிலை
🌻 நம்பிக்கையற்ற, பயனற்ற மற்றும் எரிச்சலான உணர்வு
🌻 முன்பு நீங்கள் ரசித்துச் செய்த செயல்களில் ஆர்வம் அல்லது மகிழ்ச்சியின்மை
🌻 குறைந்த ஆற்றல்
🌻 தூங்குவதில் சிரமம் அல்லது அதிக நேரம் தூங்குதல்
🌻 மாவுச்சத்து உணவுகளின் மீதான அதீத ஆசை மற்றும் உடல் எடை அதிகரிப்பு
🌻 மரணம் அல்லது தற்கொலை எண்ணங்கள்
🌻 சமூகத்திலிருந்து விலகுதல் (“குளிர்கால உறக்கம்” போன்ற உணர்வு) மற்றும்    
           செயல்களில் ஆர்வமின்மை (அன்ஹெடோனியா)
கோடைக்கால-நிலையான பருவகால மனச்சோர்வு (SAD)
🎯 தூக்கமின்மை அல்லது தூங்குவதில் சிரமம்
🎯 பசியின்மை, இது உடல் எடை இழப்புக்கு வழிவகுக்கும்
🎯 அமைதியின்மை, கிளர்ச்சி மற்றும் பதட்டம்
🎯 வன்முறை அல்லது ஆக்ரோஷமான நடத்தை நிகழ்வுகள்
🎯இரண்டுக்கும் பொதுவானவை:
        கவனம் செலுத்துவதில் சிரமம், பயனற்ற உணர்வுகள் மற்றும் தன்னைத்தானே      காயப்படுத்திக் கொள்ளும் அல்லது தற்கொலை எண்ணங்கள். அமெரிக்காவில் உள்ள பெரியவர்களில் சுமார் 5% பேர் SAD-ஆல் பாதிக்கப்படுகின்றனர். இது பொதுவாக இளம் வயதில் (18 முதல் 30 வயதுக்கு இடையில்) தொடங்குகிறது.
பருவகால மனச்சோர்வுக் கோளாறு காரணங்கள்
          பருவகால மனச்சோர்வுக் கோளாறுக்கானசரியான காரணம் சிக்கலானது என்றாலும், பல முதன்மை உயிரியல் தூண்டுதல்களை ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது:
📌 சீர்குலைந்த சர்க்காடியன் தாளங்கள்: குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவது உங்கள் உள் உயிரியல் கடிகாரத்தைச் சீர்குலைத்து, மனச்சோர்வு உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.
📌 வைட்டமின் டி குறைபாடு: குறைவான சூரிய ஒளி படுவதால் வைட்டமின் டி அளவு   குறையலாம், இது செரோடோனின் செயல்பாடு மற்றும் மனநிலையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
📌 மெலடோனின் மற்றும் செரோடோனின் சமநிலையின்மை: குறுகிய பகல் பொழுதுகள், தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோனான மெலடோனின் அதிக உற்பத்திக்கும், மனநிலையை ஒழுங்குபடுத்தும் நரம்பியக்கடத்தியான செரோடோனின் குறைவதற்கும் காரணமாகலாம்.
மெலடோனின் (Melatonin) மற்றும் செரோடோனின் (Serotonin) இரண்டும் நம் உடலிலும் மூளையிலும் உள்ள முக்கியமான இரசாயனப் பொருட்கள் (Neurotransmitters and Hormones) ஆகும். இவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகள் மற்றும் உறவு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
செரோடோனின் (Serotonin)
          இது பெரும்பாலும் “மகிழ்ச்சி ஹார்மோன்” அல்லது மனநிலையை சீராக்கும் நரம்புக்கடத்தி (Neurotransmitter) என அழைக்கப்படுகிறது.இது மனநிலையை (Mood) நன்றாக வைத்திருக்கிறது, பதற்றத்தைக் குறைக்கிறது. பகல் நேரத்தில் விழிப்புடன் இருக்க உதவுகிறது. செரிமானம் மற்றும் பசியைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பகல் வேளையில், குறிப்பாக கண்களில் சூரிய ஒளி படும்போது இதன் உற்பத்தி அதிகமாகிறது.
மெலடோனின் (Melatonin)
         Melatonin “தூக்க ஹார்மோன்” (Sleep Hormone) என்று அழைக்கப்படுகிறது. இது உடலின் இயற்கையான தூக்கம்-விழிப்பு சுழற்சியைக் (Circadian Rhythm / Internal Clock) கட்டுப்படுத்துகிறது.மேலும் மூளையில் உள்ள பினியல் சுரப்பியில் (Pineal gland) தயாரிக்கப்படுகிறது. இருள் பரவும்போது இதன் உற்பத்தி அதிகரித்து, இரவு நேரங்களில் உச்சத்தை அடைந்து (சுமார் அதிகாலை 2 முதல் 4 மணி வரை) தூக்கத்தைத் தூண்டுகிறது. பகல் நேரத்தில் சூரிய ஒளியால் செரோடோனின் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மாலை மற்றும் இரவு வேளைகளில் இருட்டத் தொடங்கும்போது, நம் மூளை அந்த செரோடோனினை மெலடோனின் ஹார்மோனாக மாற்றுகிறது. எனவே, பகலில் போதுமான அளவு செரோடோனின் இருந்தால் மட்டுமே, இரவில் சரியான அளவில் மெலடோனின் உற்பத்தி ஆகி தூக்கம் நன்றாக வரும்.
தமிழ் புதுக்கவிதைகளில் பருவகால மனச்சோர்வுக் கோளாறு
          பருவங்களால் ஏற்படும் மனச்சோர்வானது படைப்பாளர்களின் படைப்புகளிலும் அதன் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. தமிழ் புதுக்கவிதைகளை வாசிக்கும் பொழுது பல்வேறு கவிஞர்களின் படைப்புகளில் பருவகால மனச்சோர்வின் தாக்கம் உள்ளதை கண்டறிய முடிகிறது. தேவதச்சனின் மணல்வீடு என்ற கவிதையில்,
                   ”எனது
                மணல் வீடு
                சரிந்து சரிந்து
                விழுகிறது
                எழுந்து
                விடைபெறுகிறேன்.
                இனி
                மணல்தான்
                என்
                சுவடுகள் போலும்”2
     மணல் வீடு என்பதில் மணல் பாலையான வேனிற்காலத்தினை குறிக்கிறது. வேனிற்காலத்தில் உளர்ந்த மணலில் கட்டப்பட்ட வீடு சரிகிறது. ஆகையால் தனது வாழ்வின் சுவடுகளும் இனி சரியும் என்ற ஓர் தளர்வு மனநிலையை வேனிற்காலமான வெப்பம் ஏற்படுத்துகிறது. மேலும் தேவதச்சனின் சிலுசிலு கவிதையில் குளிர் காலம்  எவ்வாறு எவ்வாறு மனதினை மென்மையாக்கிறது என்பைதை உணர முடிகிறது,
” என்
விட்டு
காம்பவுண்டு சுவரில்
செம்மாந்து
நிற்கும்
கொக்கின்
வெண்ரோமங்கள்
சிலுசிலு
வென்று
காற்றில் அசைகின்றன
நினைவின் வலிகள்
சிலுசிலு
வென்று
காற்றில் அசைகின்றன
நினைவின் வலிகள்
சிலுசிலுவென அசையும் நான்
ஸ்தம்பித்து நிற்கிறேன்.
சின்னஞ் சிறுவயதில்,
பதில் சொல்ல முடியாத
கேள்விகளாய் கேட்கும்
என்மகள், துணைவனோடு
விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.
ரொம்ப நாளாய் போன்கூட இல்லை.
இதோ
மெல்ல எழுந்து பறக்கத்
தொடங்குகிறது
வெண்மெளனம்,
எவ்வித ஓசையுமற்று அது
மறைகையில்
மறையாதிருக்கிறது வீடெங்கும்
சிலுசிலு நிசப்தம்”3
      தேவதச்சனின்  இக்கவிதையில் குளிர் காற்றினை உணர்ந்து சிலிர்க்கும் நாரையினை காணும் பொழுதே, மனமானது நெகிழ்வடைந்து மனதில் தேங்கியிருந்து சோகமானது மறைய முற்படுகிறது என்பதை அறிய முடிகிறது. மேலும் அந்நிகழ்வானது மறைந்த பின்னரும் மனநெகிழ்வு என்பது மறையாது தொடர்ந்து அதே நிலையில் நீடிப்பதையும் அறிய முடிகிறது. மனுஷ்ய புத்திரனின் கவிதையில்,
”அதிகாலை நான்கு மணிக்கு
இந்தக் குளிரில்
இவ்வளவு பேர் ஏன்
தூக்கமில்லாமல்
ஆன் லைனில் விழித்திருக்கிறார்கள்?
 
நான் ஒருவன் மட்டும்தான்
நெஞ்சில் எரியும் நினைப்பால்
பிரிவுழல்கிறேன் என
நினைத்துக்கொண்டிருந்தேன்”4
     பிரிவின் தழல் என்ற மனுஷ்ய புத்திரனின் இக்கவிதையில் பிரிவின் துயர் பனிப்பொழியும் குளிர் நேரத்தில் அதிகமாக சுடும் என்பதை உணர்த்துகிறது. மேலும் பலர் விழிப்பாக இருப்பதால் அவர்களும் அவ்வாறே பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் இக்கவிதை சுடுகிறது. கவிஞர் வெய்யில் தனது குற்றத்தின் நறுமணம் என்ற கவிதையில்,
” மனநல மருத்துவர்
இப்பொதெல்லாம் கைப்பேசியை எடுப்பதேயில்லை
அல்லது அவர் காணாமல் போய்விட்டார்
அல்லது இறந்திருக்கலாம்.
சூரியனும் நிலவும் – காலமும் வெளியும்….
அய்யோ.. இந்த விளையாட்டு மொத்தமாய்ச் சலித்துவிட்டது
ப்ரியமே…”5
       மேற்கண்ட கவிஞர் வெய்யிலின் கவிதையில் சூரியனும் நிலவும் காலமும் வெளியும் ஆடும் ஆட்டம் மிக மோசமானது, அவற்றை எதிர்கொள்ளவது சராசரி மனிதனுக்கு மிகவும் சவாலானது, அதனால் மனம் பதற்றம் அடைந்து மனநல மருத்துவரை அடிக்கடி தொடர்பு கொள்ளவதால் அவர் தன் அழைப்பினை எடுக்கவில்லை என்ற பதிவினை இக்கவிதை நிறுவுகிறது. பருவநிலை மனிதர்களின் மனமாற்றத்திற்கு ஒரு கருவியாக அமைகிறது என்பதை மேற்கண்ட படைப்பாளின் கவிதைகளைகொண்டு அறிய முடிகிறது. மேலும் பல கவிஞர்களின் படைப்புகளில் இத்தாக்கம் இருப்பதையும் வாசிப்பின் மூலம் அறிய முடிகிறது.
முடிவுரை
      பிறழ்வுநிலை உளவியலின் ஓர் அங்கமான பருவநிலை மனச்சோர்வு கோளாறு என்பது தமிழ் புதுக்கவிதைகளில் பல கவிஞர்களின் படைப்புகளில் வெளிப்படுகிறது என்பதை ஆராய்நது அறிய முடிகிறது. மேலும் பருவநிலை மட்டும் இல்லாமால் புறத்தில் இருக்கும் மணம், நிறம், காட்சிகள், இயற்கை அறண்கள் போன்றவையையும் மனிதர்களின் மனத்தினை மாற்ற வல்லது என்பதையும் அறிய முடிகிறது. இதன் தாக்கம் படைப்பாளர்ளின் மனதிலும் தோன்றி அவை படைப்பிலும் வெளிப்படுகின்றன என்பதையும் அறிய முடிகிறது.
அடிக்குறிப்பு
1.NIH Publication No. 23-MH-8138 Revised 2023
2.மர்ம நபர், தேவதச்சன், உயிர்மை பதிப்பகம், பக்கம் -61
3.மேலது – பக்கம் -92
4.மழைக்காதலும் குளிர்காலக் காமமும், மனுஷ்ய புத்திரன்,  உயிர்மை பதிப்பகம்,  பக்கம் -36
5.பெருந்திணைப்பூ தின்னும் இசக்கி, வெய்யில், சால்ட் பதிப்பகம், பக்கம் -102
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் வீ.பூமிநாதன்
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை (சுழற்சி -2)
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் -635601.

 

தமிழ் புதுக்கவிதைகளில் பருவகால மனச்சோர்வுக் கோளாறு PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »