Friday, September 4, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home கவிதைகள் நிழலோடு நீ|கவிதை|ச. கார்த்திக்

நிழலோடு நீ|கவிதை|ச. கார்த்திக்

நிழலோடு நீ - ச. கார்த்திக்

🍁சிரிக்காதவர்களைக் கூட

சிரிக்க வைக்கிறது

கேமரா..

🍁காலத்தைக் கடந்தும்

படைப்பாளியை உயிரோடு

வைத்திருப்பவை

அவரது படைப்புகளே..

🍁வானவில்லை

தன் முதுகில் சுமந்தபடி

பறந்துச் செல்கிறது

பட்டாம் பூச்சி..

🍁மை தீர்ந்த பேனாவிலும்

எழுதிக் கொண்டே இருக்கிறது

அவள் நினைவு..

🍁கடவுளை வாங்கினான்

மனிதன்..

வறுமையில்

கும்பிட்டுக்கொண்டு இருக்கிறான்

🍁நீல வானில்

தனக்கான வழியை

வரைகிறது

பறவை..

🍁பாய்லர் அடுப்பு

எரிந்துகொண்டே இருக்கிறது

அனைய மறுக்கிறது

ஏழையின் வாழ்க்கையைப் போல்..

🍁அம்மா இல்லாபோதுதான்

புரிகிறது

அவள் சுமந்தது

வேலைகளை அல்ல

ஒரு வீட்டையே…

🍁நிலவோடு

பேசிக்கொண்டிருக்கிறது

குழந்தை,

யார் யாருக்கு

கதை சொல்கிறார்கள் என்று

நிலவும் நானும்

கேட்டுக்கொண்டிருக்கிறோம்..

🍁நதியில்

முகம் பார்க்கிறது வானம்

சுற்றி நிற்கின்றன

மரக் கண்ணாடிகள்..

🍁மலை உச்சியில்

மனிதர்கள் எறும்புகளாய்த்

தெரிந்தனர்

வானத்தில் பறக்கும் பறவைக்கு

நானும் அப்படித்தானே

தெரிந்திருப்பேன்.

🍁முன்புபோல்

உன் புகைப்படம்

பேசவில்லை

மாறியது

அதுவல்ல

நான் தான்..

🍁இருள் நிறைந்த அறையில்

ஒரு மின்மினிப் பூச்சியின்

வெளிச்சம்..

🍁வானத்தில் இருக்கும்

நட்சத்திரங்களை

எதற்கு எண்ண வேண்டும்

எண்ண முடியாததை

ரசிக்கத்தான் வேண்டும்.

🍁மேகங்களோடு

நிலலோடு

விளையாடுகின்றன

சிறுவன்.

🍁எல்வோரும்

உறங்கிய பிறகு

மரத்துடன்

விழித்திருக்கிறது

நிலவு…

🍁நான்

தண்ணீர்  வைத்தாலும்

நிலவையே,

குடித்துக்கொண்டிருக்கிறது

குளம்..

🍁பேன்சில் சீவும் பொதெல்லாம்

ஒரு மரம்

கொஞ்சம் கொஞ்சமாக

விழுகிறது.

🍁அவள் மட்டும் அல்ல

அவள் நிழல்கூட

பேரழகு…

🍁எவ்வளவு உயரம்

பட்டம்

பறந்தாலும்

மறப்பதில்லை

நூலின் துணையை !

🍁எவ்வளவு பெரிய

நடிகனாக இருந்தாலும்

வீட்டில்

வென்றுவிடுகிறான்

மௌனம்.

🍁பாதை இல்லாத இடத்திலும்

பாதை உருவாக்குகிறது

நதி…

🍁இன்று

நீதி மன்றத்தில்

நீதியின் தராசு தொங்குகிறது

சமநீதி மட்டும்

காணவில்லை..

🍁பழைய புத்தகத்தை

திறக்கும் போதெல்லாம்

விழுவது

சில்லறைக் காசு அல்ல!

அப்பாவின் நினைவுகள்…

🍁செடி வாடுவதை

மழை அறியும்

அவள் வருந்துவதை

நான் அறிவேன்.

கவிதையின் ஆசிரியர்
ச. கார்த்திக்
கிருஷ்ணகிரி மாவட்டம்.

நிழலோடு நீ PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »