Friday, September 4, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home சிறுகதைகள் குடும்பச்சிறுகதைகள் குறையொன்றும் இல்லை|சிறுகதை|முனைவர் ந.தர்மராஜ்

குறையொன்றும் இல்லை|சிறுகதை|முனைவர் ந.தர்மராஜ்

குறையொன்றும் இல்லை - முனைவர் ந.தர்மராஜ்
     என்னங்க கலக்கத்துடன் கணவனை அழைத்தாள் கீதா….ஏறக்குறைய அதே நிலையில் இருந்த குமார் மனைவியின் அழைப்பால் திரும்பினான்.
எனக்கு ரொம்ப பயமா இருக்கு நம்ம ரிப்போட் ரிசல்ட் எப்படி இருக்குமோ.
பயப்படாதே, நம்பிக்கையோட இருப்போம் நல்லதே நடக்கும்.
இந்த ஆஸ்பிடல் நல்ல தரமானது தானே ?
          பல பேரிடம் விசாரிச்சு தான் உன்னை இங்கே கூட்டிட்டு வந்தேன். 15.,20 வருடமா குழந்தை இல்லாதவங்க கூட இந்த ஆஸ்பிடல் வந்து சக்சஸ் ஆயிருக்காங்க தைரியமா இரு பேசிக்கொண்டிருக்கும் போதே இவன் சட்டைப்பையிலிருந்த செல்பேசி அழைத்தது. எடுத்து யார் எனப் பார்த்தான்.
யாருங்க?
என் மேனேஜர் தான்.
சரி போய் பேசிட்டு வாங்க
டாக்டர் இப்ப உள்ள கூப்பிடுவாரே.
அதுக்குள்ள நீங்க பேசிட்டு வந்திடுங்க, டாக்டர் கூப்பிட்டா நான் பார்த்துக்கிறேன்.
தலையசைத்துவிட்டு செல்போனை காதில் பொருத்திச் சென்றான்.
          அவன் நகர்ந்த அடுத்த நொடியே நர்ஸ் எதிர்பட்டாள். மேடம் உங்கள டாக்டர் உள்ள வர சொன்னார். கீதா எழுந்தாள். குமார் வருகிறானா என பார்த்தாள். அவன் கண்களுக்கு தென்படவில்லை. வரவழைத்துக் கொண்ட தைரியத்துடன் பாக்டரின் அறைக்குள் நுழைந்தாள்.
  உட்காருங்க மா டாக்டர் எதிரே இருந்த இருக்கையை காட்டினார். பதைபதைத்த மனத்துடன் மௌனமாக அமர்ந்தாள் கீதா.
உங்க ரிப்போர்ட் ரெடியாயிடுச்சி. உங்க ஹஸ்பெண்ட் எங்க?
      அவர் இப்ப வந்திடுவார் டாக்டர் எங்கிட்டயே சொல்லுங்க. எடுத்த ரிசல்ட் படி எந்த குறையும் இல்லை 100% நீங்க தாயாகலாம். ஆனா உங்க கணவர்சிட்ட தான் குறையிருக்கு. அதுவும் எளிதில் சரிபடுத்த முடியாத குறையா இருப்பது தான் வருத்தமா இருக்கு. டாக்டர் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாவிள் கீதா. கடவுளே இது என்ன சோதனை என் அன்பான குமாருக்கா இந்த நிலை.கல்யாணமான இந்த 5 ஆண்டில் என்னை எப்படி எல்லாம் தாங்கினார். ஒரு சின்ன சொல் கூட என்னிடம் அதிர்ந்து பேசியது இல்லையே. குழந்தை என்றால் கொள்ளை ஆசை கொண்ட அவரிடம் எப்படி இதைச் சொல்வேன். மனதிற்குள் பலவாராக அரற்றியவள் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்தவளாக முகத்தை அழுந்தத்துடைத்தாள். டாக்டரை நோக்கினாள்.
          சார் நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும். என்னம்மா…?அவளை பரிவுடன் கேட்டார். குறை என் கணவருக்குன்னு தெரிஞ்சா அவர் இதை சத்தியமா தாங்கிக்க மாட்டார். அப்படியே உடைஞ்சிடுவார். அதனால் குறை என்கிட்டதான்னு அவர்கிட்ட சொல்லிடுங்க சார் ப்ளீஸ்…
          கெஞ்சும் அவளை பரிதாபமாக பார்த்த டாக்டர். இது உனக்கு பிரச்சனை ஆயிடுச்சுன்னா… அதே நேரத்தில இதுல எங்க ஆஸ்பிடல் இமேஜீம் அடங்கியிருக்கேம்மா.
      உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கிறேன். ப்ளீஸ் சார். ப்ளீஸ்…. கைகூப்பி அழும் அவளை வேதனை பொங்க பார்த்த டாக்டர் அழாதேம்மா. நீ சொன்னபடியே செய்றேன், சற்று நேரம் அங்கு மௌனம் நிலவியது. குமரனின் குரல் கேட்டு இருவரும் கலைந்தார்கள். மனைவியையும் டாக்டரையும் ஒரு சேர பார்த்தவாறு இருக்கையில் வந்து அமர்ந்தான் குமார்.
          சொல்லுங்க என்பது போல டாக்டரை பார்த்தான். டாக்டர் குரலை செருமியபடி ஆரம்பித்தார்.
         குமார் உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை உங்க மனைவிக்கு தான் தாயாகும் சக்தி இல்ல.
     இந்த நொடியில் வாழ்ந்தால் இனிமை இக்கணமே குமார் கண்களை அழுத்தமாக மூடியிருந்தான். சற்று நேரம் மீண்டும் அங்கு அமைதி நிலவியது. இரு தினங்களாக வீடு வீடாக இல்லை. என்ன சமைத்தார்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பதை அவர்களே உணர முடியாத எந்திரம் ஆகிவிட்டார்கள்.அமுத கண்களும் வீங்கிய முகமுமாய் கீதாவும் இறுகிய முகத்துடன் குமாரும் எங்கும் செல்லாமல் வீட்டினுள்ளேயே முடங்கினார். மூன்றாம் நாள் காலை கீதாவை அழைத்தான் குமார்.
          கீதா இங்க வரியா கொஞ்சம் பேச வேண்டியிருக்கு.
        கீதா அவன் முன்பு வந்து அமர்ந்தாள். அவன் முகத்தை பார்க்கவே ரொம்ப வேதனையாக இருந்தது கீதாவிற்கு. பரிவுடன் அவன் கைகளை பிடித்துக் கொண்டாள். நானே உங்க கிட்ட பேசனும்னு தான் நினைச்சேன்.ஆஸ்பிடலில் இருந்து வந்த ரெண்டு நாளா நாம சரியா பேசவேயில்ல. நீங்க எதபத்தியும் கவலை படாதீங்க. இத நாம சேர்ந்து சமாளிக்கலாம். நானிருக்கேன் உங்க கூட, நீங்க பழையபடி இருந்தா அதுவே  எனக்கு போதும். நான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்து விட்டதே. குமார் மனம் உடைய கூடாதுன்னு நினைத்து எனக்கு குறை என்று சொன்னேனே. என்மேல் உள்ள அன்பினால் அவர் அதை பெரிது படுத்தாமல் உனக்கு நான் குழந்தை எனக்கு நீ குழந்தை என ஆறுதல் படுத்துவார் என்றல்ல நினைத்தேன். ஆனால் அவரோ என்னைத் துறந்து வேறு மணம் செய்ய நினைத்துவிட்டாரே? அவரை பிரிந்து இனி எப்படி இருக்கப்போகிறேன். அந்த நிலையிலும் கணவன் மேல் கோபம் வராமல் அவன் பிரிவை நினைத்து வருந்தும் தன் மேல் சுய பரிதாபம் கொண்டாள். பலவற்றையும் எண்ணிப்பார்த்து அப்படியே கிடந்தாள். கடிகாரம் மணி 3 ஆனதை ஓசையின் மூலம் தெரிவித்தது. சட்டென்று நினைவிலிருந்து மீண்ட கீதா சமநிலைக்கு வந்தாள் அடுத்து என்ன செய்வது?
          இப்போது உள்ள குமார் நிச்சயமாக என் கணவர் இல்லை இது வேறு முகமுடி அணிந்த சுயநலக்காரன் இனி நான் முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்னோட பொய்யால இன்னொரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கக்கூடாது. டாக்டரிடம் சென்று ரிப்போர்ட் வாங்கி மாமியாரிடம் பக்குவமாக எடுத்து சொல்லி முகமறியாப் பெண்ணின் வாழ்க்கையை காப்பது தான் தன் வேலை தீர்மானித்துக்கொண்டவளாய் ஆஸ்பிடல் கிளம்ப ஆயத்தமானாள் கீதா.
ஆஸ்பிடல்
டாக்டரின் அறையில் அவருக்கு முன்பாக அமர்ந்திருந்தான் குமார். சொல்லுங்க குமார் என்கிட்ட ஏதோ பேசனும்னு சொன்னீங்க ஆனா வந்ததிலேந்து அமைதியா இருக்கீங்க ? எப்படி ஆரம்பிக்கர்துன்னு தயக்கம் தான் சார். வேறு ஒன்றுமில்ல. நான் நேரடியா விஷயத்துக்கு வர்றேன். அன்றைக்கு நீங்களும் என் மனைவி கீதாவும் பேசியதை நான் முழுசா கேட்டுட்டேன்.
          டாக்டர் திடுக்கிட்டதை பொருட்படுத்தாமல் குமார் மேலே தொடர்ந்தான் என் கீதா தங்கம்னு எனக்கு தெரியும். ஆனா பத்திரமாத்து தங்கம்னு அன்னிக்கு தான் முழுசா தெரிஞ்சுகிட்டேன். தன் கிட்ட இருக்கிற குறையை கூட மறைக்கிற காலத்தில இந்த மாதிரி பெண்ணை பார்க்கிரதே ரொம்ப அபூர்வம். என் மனம் கஷ்டப்பட கூடாதுன்னு அவ நினைக்குறா. ஆனா என் கூட சேர்ந்து அவ கஷ்டப்பட கூடாதுன்னு நான் நினைக்கிறேன்.
          டாக்டர் இடையில் குறுக்கிட்டார். அதற்கு என்ன பண்ண போறீங்க. முடவன் கொம்புத் தேனீக்கு ஆசைப்படலாமா. இப்ப என் நிலையும் அதுதான் . சூன்யமான என் வாழ்க்கையிலிருந்து அவளை விளக்கி ஒரு நல்ல வாழ்க்கைத்துணை அமைய நான் வழி விடுவது தான் இதற்கு ஒரே தீர்வு. இதற்கு கீதா சம்மதிப்பாங்கன்னு நினைக்கிறீங்களா குமார்.
          நிச்சயம் அவ சம்மதிக்க மாட்டான்னு தெரியும் .அதனால தான் காலையிலேயே நான் ஒரு டிராமா போட்டுட்டு வந்திருக்கேன். இந்நேரம் அவளுக்கு வெறுப்பு வந்திருக்கும். இன்னும் சில நாள் கழித்து கீதாவுக்கு தெரியாமல் அவளோட அண்ணனைப் பார்த்து இந்த உண்மையை சொல்லி அவர் மூலமா கீதாவோட மறு மணத்திற்கு ஏற்ப்பாடு பண்ணனும். இது தான் என்னோட திட்டம்
          உங்க இருவரையும் பார்க்கும் போது எனக்கு மான் கதை தான் நினைவிற்கு வருது .இருக்குற கொஞ்சம் தண்ணிய ஆண் மான் குடிக்கட்டும்னு பெண்மானும், பெண் மான் குடிக்கட்டும்னு. ஆண்மானும் ஒன்னுக்கொன்னு விட்டுக்குடுத்துகிச்சாம். அந்த கதையா இருக்கு உங்களுடையதும். எங்க வாழ்க்கையும் இப்ப கதை மாதிரி ஆய்டிச்சு டாக்டர், இப்ப நான் உங்கள பார்க்க வந்ததே என்னோட மெடிக்கல் ரிப்போர்ட் வாங்கிட்டு போலாம்னு தான்.
அத வச்சு என்ன பண்ணபோறீங்க.
          என் கீதாவ பிரிஞ்சு என்னால இருக்க முடியாது ரொம்ப கஷ்டம் . அவளோட ஞாபகம் வரும்போது இந்த ரிப்போட்டை பார்த்தால் எல்லாவற்றையும் மறந்திடுவேன். சொல்லிக் கொண்டே சென்றவன் துக்கம் தாளாமல் அழத்தொடங்கினான்.
அவனைப் பார்த்த டாக்டரின் கண்ணோரங்களிலும் நீர் கசிந்தது.
          இது அத்தனையையும் வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்த கீதாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மகிழ்ச்சியாய் கரைபுரண்டோடியது திரைச்சேலையை விலக்கி உள்ளே ஓடிய கீதா டாக்டர் இருப்பதையும் மறந்து குமாரின் மடியில் பொத்தென அமர்ந்து தன் இரு கைகளையும் அவன் கழுத்தில் மாலையாக்கினாள்.
       எங்கிருந்தோ காற்றில் கரைந்து வந்த குறையொன்றும் இல்லை என்ற பாடல் அந்த சூழலுக்கு பொருத்தமாய் ஒலித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் ந.தர்மராஜ்
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ரெமோ சர்வதேசக் கல்லூரி,
ஆலந்தூர், சென்னை – 600 018.

குறையொன்றும் இல்லை PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »