Social Ethics Taught By Sirupanchamulam|M.Janani

Abstract
         Sirupanchamoolam literally means “five small roots.” It is one of the works belonging to the Pathinen Keezhkanakku (Eighteen Minor Works) of Tamil literature and was composed by Kariyasan. This text is based on a medicinal preparation made from the roots of five specific herbs and uses them as a framework to explain five important moral principles. The five roots that constitute Sirupanchamoolam are Kandankathiri root, Siru Vazhu Thunai root, Siru Malli root, Peru Malli root, and Nerunji root. Just as medicine is prepared from these five roots, the work emphasizes five ethical values: truthfulness (not telling lies), non-stealing, abstaining from meat consumption, non-violence (not killing), and moral conduct. The moral principles expressed in this text guide society towards righteous living and possess the power to heal the mental afflictions of people. Each venpa (quatrain) instructs society by urging individuals to avoid five harmful practices and thereby instills ethical discipline. Overall, this work is structured in a way that strongly conveys social consciousness and moral awareness.


“சிறுபஞ்சமூலம் உணர்த்தும் சமுதாயநெறிகள்”

ஆய்வுசுருக்கம்
           
       சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் எனப் பொருள்படும். இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும். இதை காரியாசன் இயற்றியுள்ளார். இந்த நூல் ஐந்து குறிப்பிட்ட மூலிகைகளின் வேர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மருந்து பொருள் தழுவி, ஐந்து முக்கிய நீதி கருத்துகளை விளக்குகிறது. கண்டங்கத்திரி வேர், சிறு வழு துணை வேர், சிறு மல்லி வேர், பெரு மல்லி வேர், நெருஞ்சி வேர் ஆகிய ஐந்து வேர்களின் கூட்டு மருந்து சிறுபஞ்ச மூலம் ஆகும். மருத்துவத்தில் ஐந்து வேர்களை குறிப்பது போல பொய் கூறாமை,களவு செய்யாமை ,புலால் உண்ணாமை, கொலை செய்யாமை, மற்றும் ஒழுக்கம் போன்றவை உள்ளடக்கி காணப்படும். இவற்றில் கூறப்படும் சமுதாய நெறிகளை பின்பற்றும் விதமாகவும், மக்களது மன நோயை தீர்க்கும் வல்லமை பெற்றது. ஒவ்வொரு வெண்பாவும், உயிருக்கு உறுதிப் பயக்கும் ஐந்து பொருள்களை விலக்கி நமக்கு சமுதாய நெறியை  புகட்டுகின்றது.இந்த நூலில் சமூக உணர்வை உணர்த்தும் வகையில் அமைகிறது.

முன்னுரை                             
               
       இக்கட்டுரை வழியாக சிறுபஞ்ச மூலத்தில் காணப்படும் சமுதாய நெறிகளை காணலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இது நீதி நூலாக ஆசிரியர் காரியாசன் ஆவார். அறம்,அகம், புறம் சார்ந்த செய்தியை எல்லாம் உடையது ஆகும். ஐந்து மருந்து வேர்களை உடைய நூலாகவும் இவை கருதப்பட்டு வருகின்றது. இவற்றில் ஒழுக்கம், ஈகை, மானம், தீவினை அச்சம், கல்லாமை, கொல்லாமை, நட்பு, அடக்கம் உடைமை, அறிவுடையோர், இளமையில் கல் மற்றும் நற்குணம் உடையோர் ஆகியவை எல்லாம் சமுதாயத்தின் நன் நெறிகளை தொடர்புடையதாக அமைகின்றது. அடக்கம் உடையவன், நாளம் இல்லாதவன் அமைதி, நல்ல நடையில் இல்லாதவன் நோன்பும் பயனை அளிக்காது இதனைப் போன்ற செய்திகளை எல்லாம் பின்பற்றுவதன் மூலமாக தான் ஒரு மனிதனுக்கு அடக்கம் என்பது காணப்படும்.இதனைப் போலவே சில தகவல்களை பின்வரும் தலைப்புகளின் அடிப்படையில் காணலாம்.

ஒழுக்கம்
“பொருளுடையான்  கண்ணதே போகம்அறனும்
அருளுடையான்கண்ணதேஆகும்– அருளுடையான்
செய்யான்பழிபாவம்சேரான்புறமொழியும்
உய்யான்பிறர்செவிக்குஉய்த்து.” சிறு-மூலம்-(3)
         
       உலக இன்பமானது, செல்வப் பொருள் உடையவன் இடத்தில் உண்டாகும். நல்ல ஒழுக்கம், இரக்கம் உள்ளவனிடத்தில் உண்டாகும். அத்தகைய அருள் உடையவன், பலிக்கப்படும் தீய செயல்களை செய்யான், தீவினையை செய்ய மனதிலும் நினையான். புறம் கூற்று சொற்களையும் மற்றவர் காதுகளில் செலுத்தி பிழைக்க மாட்டான்.

“ஒழுக்கம்விழுப்பம்தரலான்ஒழுக்கம்
உயிரினும்ஓம்பப்படும்.”  குறள்:131         
     ஒழுக்கமே ஒருவருக்கு வாழ்வில் உயர்வைத்  தருவதால் அதனை, உயிரை விட மேலானதாய்க் கருதப் பட வேண்டும்.

ஈகை 
“ உடம்பொழியவேண்டின்உயர்தவம்ஆற்றீண்டு
இடம்பொழியவேண்டுமேல்ஈகை– மடம்பொழிய
வேண்டின்அறிமடம்வேண்டேல்பிறர்மனை
யீண்டின்இயையுந்திரு.” சிறு-மூலம்-(6)
        
     உடல் உன்னை விட்டு நீங்க வேண்டுமாயின் உயர்ந்த தவத்தை செய்வாயாக: இவ்வுலகத்தில் நீ இருக்கும் இடமானது புகழ் மேன்மை அடைய வேண்டுமானால் இரப்பவருக்கு வேண்டியவற்றை கொடுத்தலைச்  செய்வாயாக மெல்லிய ஈரம் தனக்குள்ளே நிறைய வேண்டுமாயின் அவற்றின் கண் அடங்கி ஒழுகுக, பிறர் மனைவியை விரும்பா தொழிக.சிறிதாயினும் வருவாய் நாடோறும் பொருந்துமாயின் செல்வம் வந்து தானே நிறையும்.

“வறியார்க்கொன்றுஈவதேஈகைமற்றொல்லாம்
குதியெதிர்ப்பைநீரதுடைத்து.”  குறள்:221
         
     வறுமையில் இருப்போருக்கு கொடுப்பதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் தனக்கு வரும் பயனை எதிர்பார்க்கும் செயலே ஆகும்.

கொல்லாமை 
“கொன்றுன்பான் நாச்சாம் கொடுங்கரி போவானாச்சாம்
நன்றுணர்வார் முன்கல்லான் நாவுஞ்சாம்– ஒன்றானுங்
கண்டுழி நாச்சாம்  கடவான்  குடிப்பிறந் தான்
உண்டுழிநாச்சாம்உணர்ந்து.”( சிறு-மூலம்-(10)
         
    ஓர் உயிரைக் கொன்று அதன் தசையை தின்பவனுடைய நாக்கானது அற்று விழும். பொய் சான்று கூற போகின்றவன் உடைய நாக்கானது அற்று விழும். நன்றாக கற்றறிந்தவர்களுக்கு எதிரில் கற்றுணராதவன் உடைய நாக்கானது அடங்கும். தான் சொல்லிய சொல்லின் நெறியிடை போன ஒருவனை பார்த்த விடத்து. நாவெழாது, உயர் குடியிற் பிறந்தவன் தான் யாதானு  மொருவனிடத்து ஒரு நன்மையைப் பெற்று பின் அவன் குற்றஞ்செய்ததாக அறிந்த பொழுது அதனை உணர்ந்து நாவால் அதனைப் பிறர்க்குச் சொல்லான்.

“அறவினையாதெனின்கொல்லாமைகோறல்
பிறவினைஎல்லாந்தரும்.” குறள்:321
        
      பிற உயிர்களை கொள்ளாமல் வாழ்வதே அறம் ஆகும். கொலை செய்தால், பிற தீய வினைகளின் பலன்களும் வந்து சேரும்.

அடக்கமுடைமை
“நாணிலான்சால்பும்நடையிலான்நன்னோன்பும்
ஊணிலான்  செய்யும்உதாரதையும்- ஏணிலான்
சேவகமும்செந்தமிழ்தேற்றான்கவிசெயலும்
நாவகமேநாடின்நகை.”  சிறு-மூலம்-(12)
             
      நாணில்லாதன் அமைதியும்,சீலங்கைச் செய்யாதான் கொள்ளும் நல்ல நோன்பும், தனக்கு ஒரு பொருள் இல்லா தான் செய்யும் வண்மையும், வலியில்லாதான் சொல்லும் வீரமும், செந்தமிழ் அறியாதவன் கவிதை பாடுதல் இவை ஐந்தும் பயனை  தராதாம்.

“அடக்கம்அமரருள்உய்க்கும்அடங்காமை
ஆரிருள்உய்த்துவிடும்” குறள்:121
        
        அடக்கம், தேவர்களுக்கு உரிய இடத்தில் ஒருவனை கொண்டு செல்லும். அடங்காமை இருள் போன்ற துன்பம் தரும் நகரத்தில் தள்ளிவிடும்.

தீவினையச்சம் 
“இடரின்னாநட்டார்கணீயாமைஇன்னா
தொடர்பின்னாநள்ளார்க்கண்தூயார்ப்- படர்பின்னா
கண்டலவிர்பூங்கதுப்பினாய்இன்னாதே
கொண்டவிரதங்குறைவு.” சிறு-மூலம்-(14)         
      நட்டார் மாட்டு கண்ட இடரின்னா அவர் மாட்டு இயாமையின்னா, பஞ்சனை உடையார் மாட்டு நடக்கும் நட்பின்னா, மன தூயாராய் நீங்குதலின்னா, கண்டல் விலங்கு குழாய்! தான் கொன்ற விரதங்கள் நிரம்ப முடியாததே குறையாக ஒழுகுதல் இன்னா.

“நட்பிற்குவீற்றிருக்கையாதெனின்கொட்பின்றி
ஒல்லும்வாய்ஊன்றும்நிலை.” குறள்:789
          
      நல்ல நட்பின் கருத்து வேறுபாடு இன்றி, நண்பரின் மனதோடு சிறிதும் கருத்து வேறுபாடு இன்றி, இயன்ற வலிகளில் எல்லாம் துணை நின்று தாங்குவதே ஆகும்.
நட்பு

“நட்டாரையாக்கிப்பகைபணிந்துவையெயிற்றுப்
பட்டாரகலல்குலார்படித்து- ஒட்டித்
தொடங்கினார்இல்லகத்  தன்பில்துறவா
உடம்பினால்ஆயபயன்” சிறு-மூலம்-(16)
              
       தம்மோடு நட்புக் கொண்டவரை செல்வத்தின் கண்ணேயாக்கி, பகையை குறைத்து, கூறிய ஏயிற்று பட்டாரகலல்குலாரைச் சேர்ந்து முயக்கி பொருந்தி, அச்சுற்றமாய்த் தொடர்பு பட்டு முறையினார் மாட்டும் தான் பிறந்த குடியர் பிறந்தார் மாட்டும் அன்பினால் நீங்காத இப்பெற்றிப் பட்ட ஐந்தும் உடம்பு பெற்றதனால் ஆய பயன்.

“அழிவினவைநீக்கிஆறுய்த்துஅழிவின்கண்
அல்லல்உழப்பதாம் நட்பு.” குறள்:787
         
       துன்பத்திலிருந்து தடுத்து, நல்ல வழியில் நடக்க செய்து, ஒருவேளை துன்பம் வந்தாலும் அத்த துன்பத்தை பகிர்ந்து கொள்ளுவது உண்மையான நட்பாகும்.

அறிவுடையோர் 
“ தேவரோகற்றவர்கல்லாதார்தேருங்கால்
பூதரேமுன்பொருள்செய்யாதார்- ஆதரே
துன்பமிலோபண்டுயாமேவனப்புடையேம்
என்பார்இருகால்எருது.” சிறு-மூலம்-(20)
         
     நூல்களை கற்றோர் தேவரோ, கல்லாதார் ஆராயும் கார் பூத பிசாசுகளோடொப்பர்,
தமக்கு மூப்பு வருவதற்கு முன்பே பொருளைத் தேடி தமக்கு வைப்பாக வையாதார் ஒன்று மாறியாது ஒரு பற்றின்றி திரியும் அந்த
ரோபொப்பர். பண்டு செல்வ முடையோ மாதலால் ஒரு துன்பமும் இல்லை மென்பாரும், பண்டு யாமே அழகியே என் வாரும் இரு கால் உடைய எழுதுக ஒப்பாவார்.
 
“ அவையறித்துஆராய்ந்துசொல்லுகசொல்லின்
தொகையறிந்ததூய்மையவர்”. குறள்:(71)
          
      சொற்களின் தன்மையை உணர்ந்து அறிவுடையோர், சபையோரின் தன்மையை ஆராய்ந்து உணர்ந்து அதற்கேற்ற முறைமையிலேயே பேசுவார்கள்.

இளமையில் கல்

“பொன்பெறுங்கற்றான்பொருள்பெறுநற்கவி
யென்பெறும்வாதிஇசைபெறும்- முன்பெறக்
கல்லார்கற்றாரினத்தரல்லார்பெறுபவே
நல்லாரினத்துநகை.” சிறு-மூலம்-(20)
          
        கற்று வல்லவன் பொன்னை பெரும் நற்கவி செய்ய வல்லவன் அரசனாலே எல்லாம் பொருளும் பெறும்: வாதம் பண்ணி வெல்ல வல்லவன் யாது பெருமேனின் வென்றார் என்னும் புகழைப் பெறும்: முன்னே இளமை காலத்திலே கல்லாதரும்: கற்று வல்லவரிடத்த அல்லாதவரும் நல்லறினத்தவரோடு இகழ்ச்சி பெறுவர்.

“கற்றறிந்தார்கூறும்கருமப்பொருள்இனிதே:
பற்றமையவேந்தன்கீழ்வாழாமைமுன்இனிதே:
தெற்றெனஇன்றித்தெளிந்தாரைத்தீங்கூக்காப்
பத்திமையிற்பாங்கினியஇல்”. இனி. நா.பா.(32)
             
       கற்று அறிந்தவர் சொல்லுகின்ற சொல்லின் பயனும், குடிமக்களிடத்து அன்பில்லாத அரசனின் கீழ் வாழாமையும், ஆராயாது நட்பில்லாதவருக்கு தீமை புரியாத அன்புடைமையும் இனிமையை கொடுக்கும். சொல்லும்போது இனிமையாக சொல்லா விடினும் அதன் பயன் இனிமையை கொடுக்கும் என்பர். பொருள் இனிதே’ என்றார். அரசருக்கு குடிமக்களிடத்து அன்பு இல்லாவிடில், குறை நீக்கலும் முறை செய்தாலும் இல்லாமல் போதும். ஒருவனின் பிறப்பு, குணம், அறிவு என்பவற்றையும், செயலையும் காட்சி, கருத்து, ஆகமம் என்னும் அளவைகளால் ஆராயாது அவனிடத்தில் ஒரு செயலை ஒப்படைத் தால், அவன் அன்புடையவன் இன்றேல், தீயன செய்தல் எளிதாகும்.

கள்ளாமை 
“கள்ளான்சூதென்றும்கழுமான்கரியாரை
நள்ளான்உயிரிரங்கநாவாடான்- நள்ளாளாய்
ஊன்மறுத்துக்கொள்ளானேல்ஊனுடம்பெஞ்ஞான்றுந்
தான்மறுத்துக்கொள்ளான்தளர்ந்து.” சிறு-மூலம்-(21)
           
      பிறர் பொருளை களவு காணாது சூதினை பற்றி காதலியாது. கீழ் மக்களுடன் நட்பு கொள்ளாது, பிறர் துன்புறுத்தும் படி வன்சோர் சொல்லாது கடைபிடிப்பவனுடையவனாய் உண்ணுணர்வை மறுத்து  விரும்பானாயின் எஞ்ஞான்று : மொழுக்கத்தில் தளர்ந்து மாறிப் பிறந்து ஊனுடம் பினைக் கொள்ளான்.

“கல்லாதவரும்நனிநல்லர்கற்றார்முன்
சொல்லாதிருக்கப்பெறின்.”   குறள்:403
            
     கற்றறிந்தவர் அவையில் கல்வி அறிவு இல்லாதவன் எதையும் பேசாமல் இருந்தால் கல்லாதவனும் நல்லவன் ஆவான்.

நற்குணம்உடையோர்
 
“பெருங்குணத்தார்ச்சேர்மின்பிறன்பொருள்வெள வன்மின்
கருங்குணத்தார்கேண்மைகழிமின்- ஒருங்குணர்ந்து
தீச்சொல்லேகாமின்வருங்காலன்திண்ணிதே
வாய்ச்சொல்லேயன்றுவழங்கு.” சிறு-மூலம்-(26)
            
         பெருங்குணந்தாரை சென்றரை மின், பிறன் பொருளை கொல்லான் மின், தீன் குணந்தாரோடு நட்பை விடும் மின், எல்லாம் உணர்ந்து பிறரை சொல்லும் தீ சொல்லை சொல்லாது காமின், காலன் வருகை உணர்ந்தே, அஞ்சு சொல்கின்ற எம்முடைய சொல் மாத்திரையே என்றும், உலகின் கண் வழங்கி வருகின்ற வழக்கமாக கொள்க.

” பொறுத்தல்இறப்பினைஎன்றும்அதனை
மறுத்தல்அதனினும்நன்று”. குறள்:152
         
     வஞ்சகம் செய்தவரிடம் பொறுமை காட்டுவது சிறந்தது. அதை மறுத்து விடுவது அதன் இடமும் சிறந்தது.

புலால்உண்ணாமை
“கோறலும்நஞ்சூனைத்துய்த்தல்கொடுநஞ்சு
வேறலும்நஞ்சுமாறல்லானைத்– தேறினான்
நீடாங்குசெய்தலும்நஞ்சாம்இளங்கிளையை
நாடாதேதீதுரையுநஞ்சு.” சிறு-மூலம்-(13)
          
     ஓருயிரை அருள் இன்றி கோரலும் தனக்கு நஞ்சு போலும், பிறி தொன்றியடைய பூனை தின்றாலும் தனக்கு கொடிய நஞ்சு போலும், தனக்கு எதிராக ஆவாரை அடர்ந்து வெல்லுதலும் தனக்கு நஞ்சு போலும், ஒருவனை ஒரு காமத்துக்கு ஆமென்றாராய்ந்து தோன்றினாள் அக்கருமத்தில் விடாதே நீடித்து கொண்டு செலுத்தலும் தனக்கு நஞ்சு போலும், தன்நிலைய சுற்றத்தாரை ஆராயாதே. தீதுடைத்தலும் தனக்கு நஞ்சு போலும்.

“ கள்ளுண்பான்கூறுங்கருமப் பொருளின்னா 
முள்ளுடைக்காட்டினடந்தனனியின்னா 
வெள்ளம்படுமாக்கொலையின்னாஆங்கின்னா 
கள்ளமனத்தார்தொடர்பு.”  இன்னா.நா.பா.33
       
     கல் குடிப்பவன் சொல்கின்ற காரியத்தின் பயன் துன்பமாம். முற்களை உடைய காட்டில் நடந்தால் மிகவும் துன்பமாம். வெள்ளத்தில் அகப்பட்ட விலங்கு கொலையுண்டல் துன்பமாம். அவ்வாறே வஞ்ச மனதினை உடையது தொடர்பு மிகவும் துன்பமாம்.

மானம் 
“ நல்லவெளிப்படுத்துதீயமறத்தொழில்
ஒல்லைஉயிர்கூற்றங்கோலாகி- ஒல்லுமெனின்
மாயம்பிறர்பொருட்கண்மாற்றுகமானத்தான்
ஆயினழிதலறிவு.“  சிறு-மூலம்-(57)
                   
       பிறர் செய்த நன்மைகளை வெளிப்பட எண்ணி, பிறர் செய்த தீமைகளை நினையாது மரத் தொழிந்து,பிறவுயிர்கட் கிடையூறு வந்தால் அவ் உயிர் கட்டு விரைந்து ஊற்றற்ற கோலாகி, துணைக்கு எங்கும் ஆயின் பிறர் பொருட்கள் வஞ்சனையை தவிர்ந்து, பெரிய மானங்காத்தர் பொருட்டாக தான் சாதல் தனக்கு அறிவாவது ஆராயின். தன்மானம் கெட்ட பிறகு உயிர் வாழாது இருத்தலும், தனது இருப்பிடம் சிறையாதபடி தான் அடங்கி வாழ்தலும், பூனம் இன்றி சிறந்த பொருள் உடையவராக இருந்தாலும் மக்கள் அனைவருக்கும் இனிமையை கொடுக்கும்.

முடிவுரை
         
        இக்கட்டுரையின் வழியாகச் சிறுபஞ்சமூலம் உணர்த்தும் சமுதாய நெறிகளை பற்றி காணப்படும். ஒரு மனிதனுக்கு தேவையான இரக்கம், ஈகை, மானம், நட்பு, புலால் உண்ணாமை போன்ற அதனை சராசரி மனிதனுடைய வாழ்வில் ஒப்பிட்டும் சமுதாயத்தின் பார்வையாகவும் இதன் வழி எடுத்துரைத்து காட்டப்படுகின்றது உடல் நோயை தீர்ப்பது கண்டங்கத்திரி வேர், சிறு வழு துணை வேர், சிறு மல்லி வேர், பெருமல்லி வேர் ,நெடுஞ்சில் வேர் இந்த ஐந்து மருந்து வேர்களைப் போல இந்த நூலில் கூறப்பட்டுள்ள ஐந்து நெறிகளும் மக்களது மனநோயை தீர்க்க வல்லது என்றும் சொல்லப்படுகிறது.

துணைநூல்பட்டியல்
1) சிறுபஞ்ச மூலம்-காரியாசன், சாரதா பதிப்பகம் சென்னை, 14,7 ஆம் பதிப்பு – 2016.

2) திருக்குறள் -பரிமேழகர் உரை, சாரதா பதிப்பகம் எண்,3, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை சென்னை-600 014.

3) இனியவை நாற்பது-புலவர் ம.அய்யாசாமி எம்.ஏ.எட். திலகம் பதிப்பகம் 17, கே. கே. பொன்னுரங்கம் சாலை, வளசரவாக்கம் சென்னை-600 087.

4) இன்னார் நாற்பது- புலவர்.ம.அய்யாசாமி எம்.ஏ.எட். திலகம் பதிப்பகம் 17,கே.கே. பொண்ணுரங்கம் சாலை, வளசரவாக்கம், சென்னை-600 08                    

ஆய்வாளர்
Iniyavaikatral_Article_Publishedம.ஜனனி
முதுகலைத்தமிழ் இரண்டாமாண்டு

தமிழ்த்துறை
இராபியம்மாள்  அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி.
திருவாரூர்

ஆய்வுநெறியாளர்
த.காளீஸ்வரி

உதவிப்பேராசிரியர்

தமிழ்த்துறை
இராபியம்மாள்  அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி.
திருவாரூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here