மௌனம் சில இடங்களிலாவது!|முனைவர் சாரதா சுப்பிரமணி

மௌனம் சில இடங்களிலாவது! முனைவர் சாரதா சுப்பிரமணி
📜உன்னைத் தொட்டவர்கள்
உயரம் தொடுவர்
புத்தகம்

📜ஆகாயம் கீழே

பூமி மேலே
குடிமகன்களுக்கு

📜குக்கூ எனக் குயிலின் ஓசை

📜கா கா எனக் காகத்தின் ஓசை

📜பக் பக் எனும் வாத்தின் ஓசை

📜பேக் என மயில் அகவும் ஓசை

📜கடிகார முட்களின் அன்பின் இணைப்பு

📜இயற்கையின் சங்கம ஒலிகள்

📜இனிமையுடன் ஒலிக்கிறது

அவரவர் படுக்கையறைத்

தொடுதிரையில்

📜மலருக்கு மலர் தாவி

தேனை உண்ணும் வண்டு

📜பணத்துக்குப் பணம் தாவும்

பொருட்பெண்டிர்

📜கிளைக்குக் கிளை தாவும் குரங்கு

📜இதெல்லாம் ஐந்தறிவு – ஆனால்

ஆறறிவு மனிதனை

மனிதனாகக் கூட மதிக்காமல்

பதவிக்கும் பவுசுக்கும்

தாவிதலைமேல் கொண்டாடும்

அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கும்

சில செல்வச் சீமான்கள் போல்

நேற்றைய மழையில்

முளைத்த காளான்கள்

 
📜மௌனமும் ஒரு வித மொழிதான்

பேசி புரியவைக்க இயலாத சூழல்

பேசினாலும் புரியாத மனிதமற்ற மனிதர்

பேசியும் பேசினாலும் பயன் இல்லாதபோது

அங்கே மௌனம் கொள்வதே புரிதலை

தன் தவறை அவர்கள் மனதில்

ஆழ உழும் மனம் பேசும்

மனம் பேசும் பேச்சிற்கு மனிதன்

பேசும் பேச்சு எம்மாத்திரம் காற்றைவிட

வேகமாக பேசும் மௌனம் பேச்சு

பேசுவோம் மௌனம் சில இடங்களிலாவது..

கவிதையின் ஆசிரியர்
முனைவர் சாரதா சுப்பிரமணி

சென்னை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here