பூக்காரியின் முகம்|கவிதை|ச. கார்த்திக்

பூக்காரியின் முகம்- கவிதை- ச. கார்த்திக்.
🌹வெட்டியானுக்கு
வேலை தருகிறது
ஏதோவொரு பிணம்.
🌹பழைய நினைவுகள்
புதிய புத்தகமாகி
மீண்டும் பேசுகின்றன
🌹கையில் கட்டிய
பலூனுக்கு
விடுதலை கொடுக்கும்
குழந்தை
🌹குழந்தைப் பருவத்தில்
திருணம் செய்து
குழந்தையாகவே இருக்க வேண்டிய
நாட்கள்
அவளுக்கு தெரியாமல் போனது
🌹பூமியை
மறைமுகமாக
ரசித்துக்கொண்டே
தொலைவில்
இருக்கிறது
சூரியன்
🌹வானில் மழை பொழிகிறது
மழை இல்லை
குண்டு மழையாக பொழிகிறது
உயிர்கள்
ஒன்றொன்றாக அழிகின்றன.
🌹அறுவடை வருவதற்கு முன்பே
வெட்கம் கொள்கிறது
நெல்.
🌹குடிசை வீட்டின்
வண்ணச் சுவர்கள்
அமைதியாக நிற்கும்
கட்சி கொடிகள்.
🌹ஓவியன் கையில்
கூடையைக் சுமந்து
வருகிறாள் தாய்.
🌹சரக்கு ரயில்
சுமையை மட்டும் அல்ல பல
கதைகளையும்
சுமந்து செல்கிறது.
🌹கடலில்
முடிவில்லா உயிர்கள்
கரையைத் தொடும் தருணத்தில்
கருவாடாய் மாறி கரை சேர்கிறது.
🌹மலையின் நடுவே
வெள்ளைத் தடியாய்
விழுகிறது அருவி.
🌹உண்டியலில்
நிறைந்து கிடக்கும் பணம்
எத்தனை இருந்தாலும்
தனக்காக
ஒரு நாணயமும்
செலவிட முடியாதவன்
கடவுள்..
🌹மனிதன் பார்வை மாறினாலும்
கல்லும்
கடவுள் தான்.
🌹திறக்கப்படாத வீட்டை
எட்டி பார்த்துச் செல்கிறது
சூரியன்.
🌹காற்றின் சண்டை
அவள் கூந்தலுடன்
சமாதானம் கை.
🌹பழைய நினைவுகள்
புதிய புத்தகமாகி
மீண்டும் பேசுகின்றன.
🌹களைகட்டுகிறது
திருமண ஏற்பாடு
அடகுகடையில் அப்பா.
🌹தன் நிழலில்
சாய்ந்து கிடக்கும்
மரம்.
🌹அம்மா
வேலை செய்யாமல்
ஓய்வு எடுக்கிறார்
புகைப்படத்தில்.
🌹அறிமுகமில்லா முகத்தை
பார்த்தவுடன்
ஏனோ என் புன்னகை
தொலைந்தது.
🌹பூக்கள் வாடவில்லை
பூக்காரியின் முகம் தான்
வாடுகிறது
வறுமையில்.
🌹தன் சடலத்தின் மேல்
பூக்களை உதிர்க்கின்றன
மரங்கள்.
🌹எழுதிய கதையை விட
எழுதாத கதையே
அவள்
ரகசியம்.
🌹அடுக்கு மாடி வீட்டில்
தங்கிப் பார்க்கிறது
சிட்டுக்குருவி.
கவிதையின் ஆசிரியர்
கவிஞர் ச. கார்த்திக்
திருப்பத்தூர்

 

பூக்காரியின் முகம் PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here