Friday, September 25, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home கவிதைகள் களவாணி | கவிதை | ச.குமரேசன்

களவாணி | கவிதை | ச.குமரேசன்

களவாணி- குமரேசன்

களவாணி

♣ கதிரொளி வீசும்

 கதிரவன் அழகு..!

 குளிரொளி கொடுக்கும்

திங்களும் அழகு..!

 

♣ வெம்மையின் கதகதப்பு

இதமான உணர்வோடு..!

குளிரின் தன்மை

குதூகல உணர்வோடு..!

அழகையும் ரசிக்கிறேன் – அவற்றின்

தன்மையையும் உணர்ந்து

அனுபவிக்கிறேன்..!

 

♣ அவற்றோடு – நான்

தனிமையில் உரையாடுகிறேன் !

அவை  தொட முடியாத 

தொலைவில் அல்லவா உள்ளன !

அதனால் பல வண்ணங்களிட்டு

தூரிகைகளால் உயிரோவியம் தீட்டுகிறேன் !

அவற்றை தீண்டி பார்க்கத்தான்..!

 

♣ இங்கும் ஒருத்தி – அப்படித்தான்

பார்வையாலே சுட்டெரிப்பாள் !

 

♣ சிலசமயங்களில்

குதூகல குளிர்ச்சியாய்

வெட்கப் புன்னகை பூப்பாள் !

 

♣ இவள் தொட முடியா

தூரம் ஒன்றும் இல்லை

அருகேதான் இருப்பாள்

அழகாய் அகத்தை

ஊடுருவி  – என்

உள்ளேயும் இருப்பாள் !

 

♣ இவளோடு உரையாட

முடிவதில்லை..!

தனிமையின் தவிப்பிலும்,

தள்ளி நிற்கும் வேலையிலும்..!

 

♣ இணைப்பு கம்பிகளால்

இணைத்தது போல 

அவளோடு இருக்கும் என் மனம்..!

 

♣ எதிரே நின்றால்

யாரோ யாருடனோ

பேசுவதாய் நடிக்கும் அது தினம்..!

 

♣ யாரவள் திங்களா? தினகரனா?

கற்பனையிலும், கனவிலும் மட்டுமே

என்னோடு சிலாகிக்கும்

களவாணி..!

 

கவிஞர் பேரா.ச.குமரேசன்

முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி தன்னாட்சி இராசிபுரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »