அவள்!|சஹானா க ச

🧚🏻‍♀️ஆவதும் பெண்ணாளே!


அழிவதும் பெண்ணாளே!!


இந்த மனிதப் பிறவி


பெண்ணில் அடங்கும் என்பவன்


யாதும் அவளால் ஆன பிறகும்


யாதுமானவளுக்கான


இடம் இங்கு ஏன் இல்லை?


🧚🏻‍♀️பேதைசஹானா க ச

பெரும் பேதையவளின்


கள்ளமறியாத சிரிப்பிலே


பயம் விதைக்கின்ற சமூகம்…


🧚🏻‍♀️பெதும்பை

முளைப்பருவப் பிஞ்சு மனதில்


காயம் பொறிக்கின்ற பார்வைகள்…


🧚🏻‍♀️மங்கை

மலர்வதற்குள் நெறிக்கின்ற


கட்டுப்பாடுகளின் சங்கிலி…


🧚🏻‍♀️மடந்தை 

வாழத் தொடங்கும் வேளையிலே


விருப்பம் கேட்காத வழக்கம்…


🧚🏻‍♀️அரிவை 

அறிவோடு நின்றால்


அடக்க நினைக்கும் சமூகம்…


🧚🏻‍♀️தெரிவை 

தெரிந்து சொன்ன சொற்களையும்


தவறெனத் திரிக்கும் வார்த்தைகள்…


🧚🏻‍♀️பேரிளம்பெண் 

பொறுப்பு சுமந்த தோள்களில்


கனவுகள் சுருங்கும் நிலை…


🧚🏻‍♀️முதுமங்கை 

மூப்பு வந்த பின்னரும்


மூடிய குரலாய்


முப்பொழுதும் நிற்கும் அவள்..!


கவிதையின் ஆசிரியர்

சஹானா க ச

இரண்டாம் ஆண்டு சமூகவியல்

விஇடி கலை  மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி, 

திண்டல், ஈரோடு-12.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here