‘பெண்ணினத்தின் உயர்வில்தான் ஒரு நாட்டின் உயர்வு அடங்கி இருக்கிறது’ என்று உணர்ந்து பெண்ணினத்தின் உரிமைக்காகவும் உயர்வுக்காகவும் பாடுபட முன்வந்த பெருமக்களுள் அன்னை முத்துலட்சுமி, பெருமைக்குரிய இடத்தைப் பெற்றவர் ஆவார்.
சேற்றில் முளைத்த செந்தாமரை
இத்தகு பெருமை வாய்ந்த அன்னை முத்துலட்சுமி அம்மையார் 1886 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் நாள் புதுக்கோட்டையில், இழித்தும் பழித்தும் பேசப்பட்ட பெண்ணினத்திலே சேற்றில் முளைத்த செந்தாமரை’ எனத் தோன்றினார். புதுக்கோட்டை அரசர் கல்லூரித் தலைவராகவும். கல்வித் துறை இயக்குநராகவும், அரசருக்கு ஆய்வுரை கூறுநராகவும் இருந்த நாராயணசாமி ஐயரே இவர் தந்தை. இளமையும் எழிலும் நல்லொழுக்கமும் வாய்ந்த சந்திரம்மா இவர் தாய். கலப்பு மணம் செய்துகொண்ட இவர்கட்குத் தோன்றிய நான்கு மக்களுள் மூத்த மகளே அன்னை முத்துலட்சுமி என்பார்.
திண்ணைப் பள்ளியில் கல்வி
தந்தை நாராயணசாமி தம் மகள் நான்காம் அகவையில் ஆடவர் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். முத்துலட்சுமியை நடத்தும் திண்ணைப் செல்வி முத்துலட்சுமியைப் பள்ளியில் சேர்த்தபோது அவர் தந்தை ஆசிரியரிடம் ‘பால் கணக்கு சலவைக் கணக்கு எழுதும் அளவிற்குக் கற்பித்தால் போதும்’ என்று கேட்டுக் கொண்டார். படித்தார். முத்துலட்சுமியோ ஊக்கத்தோடு ஆனரல் தந்தைக்கு தெரியாமலேயே ஆங்கில அரிச்சுவடியைப் படித்து முடித்தார். அவர் ஆங்கில அறிவு மேம்பட்டு வருவதைக் கண்டு ஆசிரிய பாராட்டி அன்பு செலுத்தினார். மகள் ஆறாம் வகுப்புப் படித்துத் தேர்ச்சி பெற்றுவிட்ட செய்தி தந்தைக்குப் பெரு வியப்பாயிருந்தது. எனினும் மேற்படிப்பிற்குச் செல்லாதவாறு தடுத்துவிட்டார். மேற்கொண்டு உயர்கல்வி பெற இயலாமல் குழம்பினார் முத்துலட்சுமி.
பாடங்கற்பித்த ஆசிரியர் பாலையா, முத்துலட்சுமியின் தாயாரிடம் சென்று முத்துலட்சுமியின் மதிநுட்பத்தையும் நினைவாற்றலையும் எடுத்துரைத்துக் கல்விச் செலவைத் தாம் ஏற்றுக் கொள்வதாகவும், படிப்பை நிறுத்த வேண்டாவெனவும் கேட்டுக் கொண்டார். முத்துலட்சுமியின் அறிவின் கதவு திறக்கப்பட்டுவிட்டது; பெற்றோரின் இசைவால் படிப்புத் தொடர்ந்தது. எட்டாம் வகுப்பு முடிப்பதற்கும், 13 ஆம் அகவையில் பருவமடைவதற்கும் சரியாயிருந்தது. அக்காலத்திலே பருவமடைந்த பெண்களைப் பள்ளிக்கு அனுப்புவது மரபில்லை ஆதலின், அவர் பள்ளி செல்ல மீண்டும் தடை போடப்பட்டது.
திவானுக்கும் தமக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாகத் தந்தை பணியிலிருந்து கட்டாய ஓய்வு பெற்றார். முத்துலட்சுமி தம் தந்தையிடமே பாடம் கேட்டார். கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் சரவணப் பிள்ளையும் பேராசிரியர் இராதாகிருஷ்ணரும் தமிழும் அறிவியலும் கற்றுக் கொடுத்து, இடைநிலைத் தேர்வில் சிறப்பான வெற்றிபெற அவருக்கு உதவினர்.
புதுக்கோட்டையிலிருந்து தேர்வுக்குச் சென்ற நூற்றுவருள் பதின்மரே தேர்ச்சி பெற்றனர். முத்துலட்சுமியும் ஒருவர். முந்துலட்சுமியின் வெற்றிச் அவர்களுள் ஏனையோர் சிறப்பிடம் பெற்றது. பெற்றோரும் உற்றாரும் பெருமகிழ்ச்சி எய்தினர். செல்லி செய்தி, செய்தி ஏடுகளில் ஆசிரியர் ஆடவர் அன்னை முத்துலட்சுமியோ பாலையாவுக்கு உள்ளத்தில் கோயிலெழுப்பி உயர் வணக்கம் செலுத்தினார்.
கல்லூரி வாழ்க்கை
ஒருநாள் தந்தை நாராயணசாமி செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தபோது, அதில் திருமதி கமலா சத்தியநாதன், அவர் தங்கை கிருஷ்ணம்மா ஆகியோர் படங்கள் பட்டதாரி உடையிலிருந்ததைக் கண்டு, முத்துலட்சுமி தாமும் படித்துப் பட்டம் பெற்று அத்தகைய உடையணிய வேண்டுமென ஆவல் கொண்டார்; தந்தையை வேண்டினார். கல்லூரிக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டது. முத்துலட்சுமியின் விண்ணப்பத்தைக் கண்டு கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் மலைத்துப் போயினர். நாராயணசாமி, கல்லூரித் தலைவரை அணுகினார். ஆடவர் கல்லூரியில் பெண்களைச் சேர்க்கக் கூடாதென்ற விதி இருந்ததால் வேண்டுகோள் மறுக்கப்பட்டது.
இந்நிலையில் தந்தை நாராயணசாமி மன்னரை அணுகினார். மன்னர் ஆஸ்திரேலிய பெண்ணை மன்னரை மணந்தவர். ஆதலின் முற்போக்குச் சிந்தனை உடையவராக இருந்தார். எனவே இருவரும் கலந்து பேசி முத்துலட்சுமியைக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ள இசைவளித்ததோடு ஒரு கட்டுப்பாட்டையும் விதித்தனர். முத்துலட்சுமியை மாணவர்கள் காணாத வகையிலும் ஆசிரியர் மட்டும் காணும் வகையிலும் இடையில் ஒரு திரையிடப்படும் என்பதுதான் அக்கட்டுப்பாடு முத்துலட்சுமி திரைக்குப் பின்னாலமர்ந்து படித்தார். அவர் வகுப்பறையை விட்டுச் சென்ற பின்னரே வகுப்பு நேரம் முடிந்ததாகக் கருதப்படும். பின்னரே ஆண் பிள்ளைகள் வெளியே போசுலாம். அவ்வாண்டு நடந்த தேர்வில் முத்துலட்சுமி பல்கலைக் கழகத்திலேயே முதலாவதாகத் தேறினார் என்ற செய்தியைக் கேட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் ஒருபுறம் நாணமும், மறுபுறம் வியப்பும் அடைந்தனர். ஆண்களோடு சமமாக அமர்ந்து படிக்கிறாள் என்ற கேலிப் பேச்சும் மொட்டைக் கடிதங்களின் மூச்சும் பயனற்றுப் போயின.
மகள் முத்துலட்சுமிக்கு மணமுடிக்கவில்லையே என்ற மனக்கவலை, தாயார் சந்திரம்மாளை நோய்வாயில் தள்ளிப் படுக்கையில் கிடத்திவிட்டது. சமுதாயச் சழக்குகளிலேயும் பழமைப் பிடிப்பிலேயும் மூழ்கிக் கிடந்த அந்தக் காலத்திலே சந்திரம்மாள் கவலைப்பட்டதில் வியப்பில்லை. அதிலும், கலப்புமணம் செய்து கொண்ட சந்திரம்மாளின் கூடுதலாகவே இருந்ததில் நியாயம் இருந்தது. மருத்துவர் தந்த மருந்து பயனளிக்காமல் தாயார் உடல் மெலிந்தார். உயிருக்கு மன்றாடினார். தலைமகளோ உளம் மெலிந்தார்; இரவு பகல் ஊணுறக்கமின்றி அன்னையின் அருகிலேயே இருந்து இருந்து பணிவிடைகள் செய்தார். தாம் மருத்துவம் படித்திருந்தால் தாயாருக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்று எண்ணினார் ஆயுர்வேத, ஆங்கில மருத்துவரெல்லாம் பார்த்துக் கைவிரித்து விட்டனர். இறுதியாக ‘வான் ஆலன்’ என்ற அமெரிக்க மருத்துவர் கொடுத்த மருந்தால் தாய் உயிர் பிழைத்தார்.
மருத்துவக் கல்லூரி
தாயார் சந்திரம்மாளுக்குத் தம் மகளின் திருமணம் பற்றிய எண்ணம் தலைதூக்கியது. தலைமகள் முத்துலட்சுமிக்கோ தாம் ஒரு மருத்துவராக வேண்டுமென்னும் எண்ணம் தலைதூக்கியது. அதன் பயனாகச் செல்வி முத்துலட்சுமி 1907 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். இவ்வகையில் சென்னை மருத்துவக் கல்லூரி வரலாற்றிலேயே எம்.பி. & சி.எம். வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்ட முதல் தமிழ்ப் பெண்மணியும், ஒவ்வோராண்டும் தகுதியிலேயே தேர்ச்சி பெற்றுவந்த முதல் பெண்மணியும் முதல் முத்துலட்சுமியே ஆவார். பல்கலைக் கழகத்திலேயே முதல பட்டதாரியாகவும் இந்தியாவிலேயே முதல் மருத்துவப் பெண் பட்டதாரியாகவும் இவர் தேர்ச்சி பெற்றார்.
நெஞ்சை உலுக்கிய துயர நிகழ்ச்சி
மருத்துவக் கல்லூரியில் சேருவதற்காக 1907ஆம் ஆண்டு தந்தையோடு புறப்பட்டார். புறப்படும்போது பெற்றோரையும் கணவரையும் இழந்து, நிறைமாதக் கருவோடு தமது இல்லத்திலே இருந்தது செல்வி முத்துலட்சுமி சென்னைக்குப் சிற்றப்பா மகள் வீரலட்சுமி தம்மிடத்தில் மிகவும் அன்போடிருந்த முத்துலட்சுமியைப் பிரிய இயலாமல் கோவெனக் கதறினார். தம்மையும் அழைத்துச் சென்று சென்னையைச் நிறைவயிற்றுப் சுற்றிக் காட்டுமாறு கெஞ்சினார். அந்த பெண்ணிற்குக் கலங்கிய கண்களோடு முத்துலட்சுமி ஆறுதல் கூறி விடை பெற்றார். சென்னைப் புரசைவாக்கத்தில் குடியமர்ந்து தந்தையும் மகளும் நூல்கள் வாங்குவதற்காகக் கடைத்தெரு சென்று திரும்பிய போது அவர்கட்காகக் காத்திருந்த தந்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தனர். வீரலட்சுமி ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு உயிரிழந்தாள் என்று அறிந்து முத்துலட்சுமி ஆற்றொணாத் துயரமடைந்தார்; சில நாள் ஊணுறக்கமின்றித் துயருழந்தார். பின்னர்ச் சில நாள்களில் தம் தாயார், வீரலட்சுமியில் குழந்தையோடும் ஏனையோரோடும் சென்னை வந்து சேர்ந்தார். தம்பி இராமையாவைக் கிறித்தவக் கல்லூரியிலும், சுந்தரம்மாள், நல்லமுத்து ஆகிய தங்கையரை எழும்பூர் மாநிலப் பெண்கள் பயிற்சிக் கல்லூரியிலும் சேர்த்தனர். மருத்துவக் கல்விக்காகப் புதுக்கோட்டை அரசு அனுப்பி வந்த உதவித் தொகை ரூ.180/- இவர்கள் குடும்பத்திற்கு உதவியாய் இருந்தது.
நாட்டுப்பற்று
முத்துலட்சுமியின் நாட்டுப்பற்று டாக்டர் நஞ்சுண்டராவின் தொடர்பால் கிளர்ந்தெழுந்தது. அவர் வழியாகவே அக்காலத்தில் வாழ்ந்த பெருமக்கள் பலரோடு கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. 1912 ஏப்பிரல் திங்களில் பட்டம் பெற்றவுடன் எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் பணிபுரியும் வாய்ப்புப் பெற்றார். பின்னர், 1917-ல் எழும்பூரில் தனியாகத் தொழில் நடத்தத் தொடங்கினார்.
மணவாழ்க்கையும் மக்கட்பேறும்
ஆடவர்களால் கொடுமைப் படுத்தப்பட்ட பெண்களின் நிலைமையை நேரில் அறிந்திருந்த முத்துலட்சுமி இளமைக் காலத்தில் திருமணத்தின் மீதே வெறுப்புற்றிருந்தார். பின் மனம் மாறித் தம்மைப்போலவே மருத்துவப் பணி புரிந்து வந்த சுந்தரம் என்பாரைத் தம் வாழ்க்கைத் துணைவராக ஏற்றும் கொண்டார். இராம்மோகன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய நன்மக்களை ஈன்று புறந்தந்தனர்.
புற்றுநோய்க்குத் தீர்வு
முத்துலட்சுமியின் தங்கை சுந்தரம்மாள் ஒருநாள் திடீரென நோய்வாய்ப்பட்டாள். அன்னை முத்துலட்சுமி 1922 ஆட்பட்டுவிட்டன் தங்கையின் உடல் நிலையை முதன்முறையாக ஆராய்ந்த போது . தம் அன்புத் தங்கை புற்றுநோய்க்கு என்பதறிந்து அதிர்ச்சி அடைந்தார். அதையறிந்த சுந்தரம்மாகும் அமைதியிழந்து பெரிதும் துயருழந்தார். 1922 முதல் 1923 வரை முத்துலட்சுமி தம் தங்கையின் படுக்கை அருகிலேயே இரவு பகல் உடனிருந்து பணிவிடை செய்தும் பயனேற்படவில்லை சுந்தரம்மாள் இறந்தாள். தம் அன்புத் தங்கையை என்ன எண்ணிக் கண்ணீருகுத்தார் முத்துலட்சுமி. உற்றார்க்கு விடிவே இல்லையா?” எனப் ”புற்றுநோய் புலம்பினர் புற்றுநோயை எதிர்த்துப் போராட்டம் தொடங்கினார். அதல் விளைவுதான் இன்றுள்ள அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை.
வெளிநாட்டுப் பயணம்
முத்துலட்சுமி அரசினரின் உதவியால் தம் கணவருடன் வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றார். இலண்டன் மாநகர் சென்று அங்குத் தம் மருத்துவப் பயிற்சியைத் தொடங்கினார். குழந்தைகளுக்கு வரும் நோய் பற்றி அவர் நடத்திய ஆராய்ச்சியைக் கண்டு மேதைகள் வியப்படைந்தனர். குழந்தை மருத்துவத்தில் பெரும் திறன் பெற்றார். ஒருமுறை மேல்நாட்டு மருத்துவ மருத்துவமனையைப் பார்வையிட்டுப் புற்றுநோய் அறுவை இராயல் மருத்துவம் பற்றிப் பல நுட்பங்களைத் தெரிந்து கொண்டர்.
பாரீஸ் பெருநகரில் நடந்த அனைத்து உலகப் பெண்கள் மாநாட்டில், கலந்து கொண்டு அன்னை முத்துலட்சுமி அரியகொரு சொற்பெருக்காற்றினார். இந்தியப் பெண்கள் பெற்றிருக்கின்ற பெறவேண்டிய உரிமைகள் பற்றி விரிவாகப் பேசினார். கீழைதாட்டுப் பெண்களும் மேலைநாட்டுப் பெண்களைப்போல் சிறந்து வாழத் தாம் தொண்டு செய்யப் போவதாக உறுதி கூறினார்.
தாயகம் திரும்புதல்
அன்னை முத்துலட்சுமி 1926 ஆம் ஆண்டு தாயகம் திரும்பினார். நண்பர்களும் பொதுமக்களும் அவருக்குச் சிறப்பான வரவேற்பளித்தனர். இந்தியப் பெண்கள் கழகத்தின் சார்பில் நடந்த விழாவில் அன்னை முத்துலட்சுமி தம் பயணப் பட்டறிவு பற்றி எடுத்துரைத்தார்.
இந்தியப் பெண்கள் கழகத்தின் ஏற்றமிகு தோற்றம்
அன்னை முத்துலட்சுமி அவர்கள் பரந்த சமய நோக்குடைய (Theosophist) திருமதி மார்கரெட் இ. சுசின்ஸ். திருமதி ஜினாாதாதாசா என்ற ஐரோப்பிய மாதருக்கு உறுதுணையாக இருந்து 8-5-1917-இல் அடையாற்றில் இந்தியப் பெண்கள் கழகத்தைத் (Women’s Indian Association) தோற்றுவித்தார். தொடக்கக்கால முதல் அதன் முதல் இந்திய உறுப்பினராகவும், பல்லாண்டுகள் அதன் செயலாளராகவும், பின்னர் வாழ்நாள் தலைவராகவும், அது நடத்திய ‘ஸ்திரீ தர்மா’ (மாதர் அறம்) என்னும் இதழாசிரியராகவும் இருந்து தொண்டாற்றினார்.
சட்டமேலவையில் அன்னை
அன்னை முத்துலட்சுமி சென்னை திரும்பியதும் ‘இந்தியப் பெண்கள் கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க மாநில ஆளுநரால் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப் பெற்றார்; 1927-இல் மேலவைத் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பெற்றார். உலகத்திலேயே இவ்வாறு தேர்ந்தெடுக்கப் பெற்ற முதல் பெண்மணி அன்னை முத்துலட்சுமியே ஆவார்.
சட்ட மேலவையில் அன்னை முத்துலட்சுமி 27-1-1927-இல் அவைத் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க முதன்முறையாகத் தலைமையேற்றுப் பேசினார் ஒருமுகமாக, முழுமனத்தோடு எனக்களித்த பெருமையைத் தனிப்பட்ட பெருமையாகக் கருதாமல் இந்தியா முழுவதிலுமுள்ள பெண்களனைவர்க்கும் அளித்த பெருமையாகவே கருதுகிறேன்.
‘இந்த மாநிலம், பெண்ணினத்தைப் பொறுத்தவரை இணையற்ற பல பெருமைகளை ஈட்டியிருக்கிறது. முதன் முதல் பெண்ணினத்திற்கு வாக்குரிமை அளித்த பெருமையும். பெண்மணி ஒருத்தி உறுப்பினராய் அமர இடமளித்த பெருமையும், விழிப்புணர்ச்சியை வெளிக்காட்டும் வகையில் யாரும் கேளாமலும் வேண்டாமலும் இருக்கும்போது ஒப்பிட்டுச் சொல்ல இயலாத வகையில் மேலவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுத்த பெருமையும் ஆகிய இணையற்ற பெருமைகளை நம் மாநில அரசு பெற்றுத் திகழ்கிறது. இது, பல் சீர்திருத்தங்களில் பெண்கள் முன்னேற்றத்தில் வழிகாட்டியாக விளங்கும் என நம்புகிறேன். எப்போதும் உங்கள் ஒத்துழைப்புக் கிடைக்குமெனவும் நம்புகிறேன்’ என்று பேசினார்.
அன்னை முத்துலட்சுமியின் மருத்துவமனைகளில் டையறா முயற்சியால் முதன் முதலில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. குழந்தைகட்குத் தனி மருத்துவமனையும் மகப்பேறு மருத்துவமனையும் ஏற்படுத்தப்பட்டன. ஏழைச் சிறுமியர்க்கு இலவசக் கல்வியும், இளங்கைம்பெண்களுக்குக் கல்விச் சலுகையும், பள்ளிகளில் மருத்துவக் கண்காணிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டன. மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். குழந்தை மணத் தடுப்பும், கோயில்களில் தேவரடியார் அமைப்புமுறை ஒழிப்பும் கொணரப்பட்டன.
அன்னை முத்துலட்சுமி சட்ட மேலவையில் 1927 ஆண்டு நவம்பர்த் திங்களில், ‘தேவரடியார் அமைப்புமுறை ஆம் ஒழிப்புத் தீர்மானத்தை முன்மொழிந்து நீண்டதொரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் பேச்சைக்கேட்டு மேலவையே அசைந்தது; பழமை விரும்பிகளின் பல்வேறு எதிர்ப்புக்கிடையிலும் சட்டம் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அன்னை முத்துலட்சுமியால் இளமையணத் தடுப்புத் தீர்மானமும் கொணரப்பட்டு வெற்றி பெற்றது.
காந்தியடிகளைக் காணல்
அண்ணல் காந்தியடிகள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது தேசியக் காங்கிரசு தலைவர் திரு. எஸ். சீனிவாச ஐயங்கார் இல்லத்தில்தான் அன்னை முத்துலட்சுமி, அண்ணல் காந்தியடிகளை அன்னை கஸ்தூரிபாவுடன் முதன் முறையாகக் கண்டு பூரிப்பும் பெருமகிழ்வும் எய்தினார். முத்துலட்சுமி அறிமுகப்படுத்தப்பட்டதும் அண்ணல் காந்தியடிகள் அவரை நோக்கி, ‘மேலவையில் பொறுப்பேற்றிருப்பதறிந்து மகிழ்கிறேன். நீர் பெண்ணினத்திற்கு எவ்வாறு தொண்டாற்றப் போகிறீர்’ என்று கேட்டார். உடனே பெண்கள் முன்னேற்றம் தொடர்பாகத் தீட்டி வைத்திருந்த திட்டங்களையும் தீர்மானங்களையும் அண்ணல் காந்தியடிகளிடம் தந்து ஒத்துழைப்புத் தரக் கேட்டுக் கொண்டார்.
பதவியைத் துறத்தல்
அண்ணல் காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் உறங்கிக் கொண்டிருந்த மக்களைத் தட்டியெழுப்பியது. காந்தியடிகள் தண்டியிலே உப்பெடுத்துச் சிறையில் அடைக்கப்பட்ட செய்தி காட்டுத் தீயைப்போல் பரவியது. உதகையிலிருந்த அன்னை முத்துலட்சுமி செய்தி அறிந்த அரை மணி நேரத்தில் சட்ட மேலவைத் துணைத்தலைவர் பதவியைத் துறந்தார். உதகையில் தங்கியிருந்த ஆங்கில ஆளுநருக்குப் பதவி விலகல் கடிதம் எழுதித் தம் கணவர் வழியாக அனுப்பினார்.
அவ்வாறு அன்று பதவியைத் துறந்த நாட்டுப்பற்றையும் செய்தி ஏடுகளும் தேசியத் தலைவர்களும் அவ்வாறு முதல் முத்துலட்சுமியின் துணிவையும் வியந்து பாராட்டினர்.
அண்ணல் காந்திக்கு அரிய வரவேற்பு
தாழ்த்தப்பட்டோர்க்கு இழைக்கப்படும் கொடுமையை கண்டித்து அண்ணல் காந்தி எரவாடாச் சிறையில் உண்ண நோன்பு இருந்து உடலிளைத்தார். அவர் உடல் நலம்பெ தடைவிதித்தாலும் கோரி வழிபாடு நடத்தச் சென்னை நகர மாதர் கூட்டத்திற் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு அரசு அன்னை முத்துலட்சுமி தடையை மீற முடிவு செய்தார். நோய் வாய்ப்பட்டுச் சிறிது மயக்கமுற்ற நிலையிலும் தம் கணவருடன் பி வந்தார். அன்னை முத்துலட்சுமி.
கூட்டம் கூட வேண்டிய திடலுக்குச் செல்ல முடியாதாவறு காவலர்களால் ஸ்பர்டாங் தடுக்கப்பட்ட சாலையில் மக்கள் அலைகடலெனக் ஆயிரக்கணக்கி கூடியிருந்தனர். அன்னை முத்துலட்சுமி தடையை மீறி நேரே திடலுக்கு நுழைந்து சென்று வழிபாட்டுப் பாடலைப் பாடாலானர்.
அண்ணல் காந்தியடிகள் தீண்டாமை ஒழிப்புக்காகத் தென்னகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது சென்னையில் மாதர் கழகத்தின் சார்பில் வரவேற்பளித்துப் பண முடிப்பும் வழங்கினார் அன்னை.
அன்னை முத்துலட்சுமி ‘ஸ்திரீ தர்மம்’ (மகளிர் அறம்) என்னும் பெயரில் இதழ் தொடங்கிப் பெண்கல்லி நாட்டுரிமை. தீண்டாமை ஒழிப்பு, இளமை மணத்தில் கொடுமை பற்றியெல்லாம் கனல் தெறிக்கும் கட்டுரைகச எழுதினார்.
குழந்தைகளின் அன்புத்தாய்
அன்னை முத்துலட்சுமி குழந்தைகளிடத்தில் அளவது, அன்புடையவர். தாம் பிறந்து வளர்ந்த புதுக்கோட்டையில் 5 இல்லத்திற்கு அருகிலிருந்த ஆயர்குடிக் குழந்தைகளை நீர் குளிப்பாட்டிச் விளையாடிய தொடர்ந்தது. சீவி முடித்து இளமைக்காலப் பழக்கம் இறுதிவரை தொடர்ந்தது. தம் பிள்ளைகளின் பிறந்தநாள் வரும்போதெல்லாம் குழந்தை இல்லங்களுக்குச் சென்று இனிப்புப் பண்டங்கள் வழங்கி மகிழ்வது அவரது வழக்கமான பணி. எழும்பூர் மகப்பேறு மருத்துவ மனையில் ஒரே பெண் மருத்துவ அலுவலராகப் பணியேற்றபோதும் அவர் விரும்பி ஏற்றுக்கொண்டது குழந்தைப் பகுதியே.
பாரீஸில் கண்ட குழந்தைகள் பாதுகாப்பில்லத்தைப் பொல, குற்றமிழைத்த சிறுவர்கள் திருந்து நடக்கவும் அன்புப் பிணைப்போடு வளரவும் குழந்தைகள் பாதுகாப்பில்லம்’ ஒன்றை நிறுவியதோடு அதைச் சீர்திருத்தப் பள்ளியாகவும் மலரச் செய்தமை அவர் அருள் உள்ளத்திற்கோர் எடுத்துக் எட்டாகும். அதேபோன்று பெண்களுக்காகக் கீழ்ப்பாக்கத்தில் திக்கற்ற இளம்பெண்கள் இல்லம்’ அமைந்ததும் மறக்க முடியாத தொண்டாகும்.
அவ்வை இல்லம்
சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட இளம்பெண்கள் அன்னை முத்துலட்சுமியிடம் அடைக்கலம் வேண்டியபோது அவர் தம் தங்கை நல்லமுத்தோடும் கணவரோடும் கலந்து பேசினார். அன்று இரவே அவ்வை இல்லம் தோற்றமெடுத்தது. திருமதி நல்லமுத்து அதன் முதல் காப்பாளராகப் பொறுப்பேற்றார்.
நேர்மையும் நடுநிலைமையும் அற்ற தன்னலம் மிகுந்த – சமுதாயத்திற்கெதிராகச் சூழ்நிலையின் நெருக்குதலாலும், மன எழுச்சியாலும் 1930-இல் தோற்றுவிக்கப் பெற்ற இவ் அவ்வை இல்லம் நானூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும். இளம் பெண்களுக்கும், முதிய மகளிர்க்கும் புகலிடம் தந்து, ஒரு தொழிற்பள்ளி, ஒரு தொடக்கப்பள்ளி, அடிப்படை ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, ஓர் உயர்நிலைப் பள்ளி எனப் படிப்படியாக வளர்ந்து வலிவோடும் பொலிவோடும் விளங்குகின்றது. புறக்கணிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர் செவிலித் தாயர்களாகவும் மருத்துவர்களாகவும் ஊரகப் பெண் தொண்டராகவும் பயிற்சி பெற்று அவ்வை இல்லத்திலிருந்து ஆண்டுதோறும் வெளிவருகின்றனர்.
பிற பணிகள்
அவ்வை இல்லத்தைத் தொடர்ந்து அன்னை முத்துலட்சுமி சென்னையில் ‘ஒழுக்கந் தவறிய பெண்கள் கண்காணிப் கழகம்’ (Vigilance Association) ஒன்றமைத்து முதன் முறையா அத்தகைய பெண்களுக்குத் தற்காப்பில்லம் ஒன்றும் ஏற்படுத்தினார். குற்றமிழைத்த சிறுவர்களுக்கான நிறுவனம் (Children Aid Society) ஒன்றை நிறுவி அதன் செயலாளராகப் பணிபுரிந்தார்.
அம்மா
அவ்வை இல்லத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆதரவிழந்த இளம்பெண்களும் பிறரும் அன்னை முத்துலட்சுமியை ‘அம்மா’ என்றே அழைத்தனர். அவர் தோழி பெற்ற பிள்ளைகளுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் ‘அம்மா’வாகத் திகழ்ந்ததோடு பெண்கள் சீர்திருத்தத்திலே ‘பெரிய அம்மா’வாகவும் (The Great Mother) அவ்வையாகவும் நிகழ்ந்தார் எனலாம்.
புற்றுநோயை எதிர்த்துப் போராட்டம்
புற்று நோய் தொன்றுதொட்டு, வேதகாலம் முதல் இருந்த வரும் கொடிய நோயாகும். இதைப் பணக்கார நோய் என்று தீவினை நாய் என்றும் கூறுவதுண்டு. இதன் கடுை நோயுற்றார்க்கும். அருகிலிருந்து காண்பவருக்குமே நன்று. தெரியும். தம் அன்புத் தங்கை சுந்தரம்மாளைத் துடிக்க துடிக்கத் துன்பத்தில் ஆழ்த்தி அவர் உயிருக்கே உலைவைத்து புற்றுநோயின் கடுமையை அருகிலிருந்து கண்ட அன்மை முத்துலட்சுமி புற்றுநோயை அடியோடு ஒழிக்க வழி முயற்சி மேற்கொண்டார்.
அடையாற்றில் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம்
இங்கிலாந்து சென்று திரும்பிய அன்னை முத்துலட்சுப் துணைத் தலைவரானதும் சென்னை மேலவைத் மேலவையில் சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை ஒன்று ஏற்படுத்த வேண்டும் எனப் பேசினார். பெண்களின் கருத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆங்கில மரபின்படி அன்போடு கேட்டனர். ஆனால் ஒரு பயனும் ஏற்படவில்லை.
1935-இல் நடந்த சென்னை மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் இந்தியப் பெண்கள் கழகத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றினர். தீர்மானத்தை ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் நினைவுக் கொடைக் குழுவிடம் அளித்தனர். அதேபோன்ற தீர்மானத்தை மேலும் பல பெண்கள் அமைப்புகள் தந்தன. நாடு விடுதலை பெற்றபின் அன்றைய ஆளுநரின் மனைவியும் பவநகர் பேரரசியுமான மாண்புமிகு சாகியா தலைமையில் இந்தியப் பெண்கள் கழகத்தின் சார்பில் புற்றுநோய் நீக்கச் சேமிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
1951-இல் இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு இராசேந்திர பிரசாத் புற்றுநோய் ஒழிப்பு நாளைத் தொடங்கி வைத்தார். அடையாறு காந்தி நகரில் அரசு வழங்கிய நிலத்தில் 1952-இல் நேரு பெருமகனார் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
பெற்றோர் – கணவர் பிரிவு
தம்மைப் பெற்ற அன்பு அன்னை 1919 ஆம் ஆண்டிலும், நம் வளர்ச்சிக்கும் வாழ்விற்கும் காரணமான தந்தை 1930 ஆம் ஆண்டிலும், தம் அன்புக் கணவரும் அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவருமான மருத்துவர் சுந்தர ரெட்டியார் 1943-லும் இயற்கை எய்தினர்.
புத்துலகப் பெண்துறவி புகழுடம்பெடுத்தார்
அன்னை முத்துலட்சுமி அம்மையார் எண்பதாம் அகவையில் ஒரு கோயிலெனக் காட்சி தந்தார். அவரை நினைத்தால் கவுந்தியடிகளும் அவ்வைப் பெருமாட்டியும் நம் கண்முன் தோன்றுவர். அவரைக் காண்பதும் அவரோடு பேசுவதும் அவர்தம் உறுதிவாய்ந்த தெளிவான குரலைக் கேட்பதும் யாருக்கும் எழுச்சியூட்டுவனவாகவே இருந்தன.
அத்தகு கீர்த்தி வாய்ந்த சமுதாயச் சீர்திருத்தச் செல்வி அன்னை முத்துலட்சுமி தமது எண்பத்து இரண்டாம் அகவையில் 22.7.1968-இல் பொன்னுடல் நீத்துப் புகழுடம்பு எய்தினார். அவ்வை இல்லமும் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையமும் அன்னை முத்துலட்சுமியின் அழியாப் புகழை நிலைநாட்டும் நிறுவனங்களாகக் காட்சி தருகின்றன.
“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்“
பழையப் பாடப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது
அன்னை முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவாக உதவித்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
1.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்