ஒரு ஊரில் விவசாயி இருந்தார். அவர் பெயர் முத்து ஐந்நூறு ஏக்கர் காடுகளை பராமரித்து வருகிறார். நூறு ஏக்கர் நிலத்தில் முந்நூறு தென்னை மரங்கள் இருக்கின்றன. இரு நூறு ஏக்கர் நிலத்தில் எலுமிச்சை மரம் இருக்கிறது எலுமிச்சை அறுவடை செய்கிறார். நூறு ஏக்கர் நிலத்தில் கத்திரிக்காய் செடி வைத்துள்ளார். முத்து அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து விவசாய நிலத்தில் காலையில் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி நடைபாதையில் வீரநடைபாதையில் வீர நடை போடுவார். “அதிகாலையில் எழுந்து நடப்பது உடலுக்கும், மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும்”. முத்து வீட்டிற்கு வருவார் வந்தவுடன் முத்துவின் மனைவி உங்களுக்கு காபி போடவா கேட்கிறாள். சரி போடு முத்து வெளியில் வீட்டு திண்ணையில் நாளிதழ் படிக்க தொடங்கி விடுகிறார்.
கனகா காபி போட்டு கொண்டு வந்து எடுத்துக்கோங்க என்றாள். அருமையாக காபி போடுறியே கனகாவை புகழ்ந்து பாராட்டினார் முத்து கனகாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது. முத்து வீட்டு தோட்டத்தில் எல்லா காய்கறிகளையும் நிற பழங்களையும் கண்ணைக் கவரும் மலர்களையும் வளர்த்து வருகிறார்.
வீட்டு தோட்டத்தை பராமரிப்பது கனகாவின் வேலையாகும் முத்து பொறுமையாகவும், நிதானமாகவும், சுறுசுறுப்பாகவும்,வேலை பார்த்து வருகிறார். காலையில் முத்து எட்டு மணிக்கு சாப்பிட்டு விட்டு விவசாயத்தோட்டத்திற்கு சென்று விடுவார். நிலத்தில் விதைகளை விதைத்து பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது அவருடைய வேலையாகும். காய்கறி, பழங்களை அறுவடை செய்து சந்தைக்கு வாரம் இருமுறை சென்று கனகாவும் முத்து செல்கின்றனர்.
காலையில் சந்தைக்கு இருவரும் நேரமாக வியாபாரத்தை தொடங்க கிளம்பி விடுவார்கள். மாலை சூரியன் மறையும் நேரம் வீட்டிற்கு இருவரும் வந்து விடுவார்கள். குறைந்த விலையில் நிறைய காய்கறிகள் பழங்கள் தரமானதாக இருக்கும். பணத்திற்கு நல்ல காய்கறி பழங்களை விற்றுக் கொண்டு வருகின்றனார். பல தொழில்கள் இருந்தாலும் விவசாயி தொழில் போல் எந்த தொழிலும் இருக்க முடியாது. ”விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை மறந்து விடாதே”. சந்தை முடித்துக்கொண்டு இருவரும் வீட்டிற்கு வந்தனர். முன்னை விட பணத்தில் சற்று லாபம் அதிகம். இரண்டு நாட்களில் கனத்த மழை பெய்கிறது. நிலங்கள் மழை நீர் நிரம்பி விட்டன. வருத்தத்தில் கனகாவும் முத்துவும் வீட்டில் மழை பெய்து கொண்டிருப்பது வருத்தத்தில் கனகாவும் முத்துவும் வீட்டில் மழை எப்ப நிற்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறாரர்.
மழை வரும் போது என்னால் காக்க முடியவில்லை நான் தோட்டத்திற்கு சென்று வரப்பெடுத்து வருகிறேன் என்று முத்து கிளம்புகிறார். கனகா போகாதீங்க மழையுடன் இடியும் பலமாக அதிக மழை பெய்து கொண்டிருக்கிறது. அப்ப மழை நின்றுவிட்டது. முத்துவும் கனகாவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
வெயில் காலம் வந்து விட்டது வெயில் காலம் வந்தவுடன் இரு மடங்கு காய்கறிகள், பழங்கள் தோட்டத்தில் இருவரும் அறுவடை செய்கிறார்கள். “பொறுமை தான் வாழ்க்கையின் மிகப்பெரிய பலம்” பொறுமையாக இருந்தால் தான் வெற்றி நம்மை தேடி வரும்” பொறுமையுடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள் வாழ்க்கை அழகாகும்.
சிறுகதையின் ஆசிரியர்
கவிஞர் மா.நந்தினி,
சேலம்.






