♣ முகம் சுழிக்காமல்
முகம் காட்டுகிறது
முகமூடி இல்லாத கண்ணாடி!
♣ எந்த பறவையும்
அழிவு பற்றி யோசிக்கவில்லை
பறந்து(தே) செல்கிறது!
♣ வானில் நிலவை தேடுபவனுக்கு
பக்கத்தில் இருக்கும்
நிலா கண்ணுக்கு தெரியவில்லை!
♣ கடல் அலைகள் எல்லாம்
கரைகளிடம் மட்டும் உறவாடுகிறது!
அது நமக்கு தெரியவில்லை..
♣ அலங்காரத்துடன் நிற்கும்
ஆட்டுக்குட்டி! தெரியாத ஒன்று
தன்னை பலியிடுவார்கள் என்று..
♣ இந்தக் கிறுக்களின்
உன் பெயரை
எங்கையோ நான் மறைந்து வைக்கிறேன்!
♣ புல் கண்ணீர் சிந்துவதை
இந்த அருவாள் மட்டும் அறியும்!