என் சுவாச மரமே !
பஞ்ச பூதங்களின்
பணியாளனே !
வண்ண பறவைகளின்
வசந்த கால ஊஞ்சலே !
கற்கால மனிதனின்
மாட மாளிகையே !
தற்கால மனிதனின்
தன்னலமற்ற சேவகனே !
பாருக்கே பசுமை – ஆடை
போற்றிய பேகனே !
இயற்கையின் உயிர்நாடியே !
நான் விடும்
நச்சுக் காற்றை
நீ உறிஞ்சி – உன்
உயிர் காற்றை
என் உயிரில் கலந்து
எனை உயிர்பிக்கிறாயே !
என் மேனி சிலிர்க்க
தன் மேனியாட்டி
தென்றலிசை மீட்டி
பூமகள் குடையாய் நீட்டி
நின்ற மரமே!
வெந்தழல் பாயுது!
தேகத்தில் மனமே!
நின்நிழல் தேடுது
ஞாலத்திலே!
நம்மை காக்க எப்பொழுதும்
நின்றுகொண்டிருக்கும்
மரத்தினை சாய்த்து
நிலம் தேடி அலையும் – மனிதா
நிலத்துக்குள் புதைந்து போவாய்!
மரங்கள் நடுவோம்
வசந்த தென்றலை
வாழ்வினில் சேர்ப்போம்
இயற்கையோடு
வாழ்வினை பிணைப்போம்
இன்பத்தின் விலாசங்களாய்
நாம் இருப்போம்
மரம் வளர்ப்போம்!
வளர்ந்த மரங்களை காப்போம் !
மரம் வளர்ப்போம் !
உயிர் காப்போம்!
அனைவருக்கும்
ஒரு வேண்டுகோள்
ஒரே வேண்டுகோள்..
குறைந்தது ஒரு மரத்தையாவது
நம் வீடுகளில் வளர்போம் !
இடமில்லாதோர்
ஒரு பூந்தொட்டியாவது வைப்போம் !
கவிதையின் ஆசிரியர்
ம.அநிஷா நிலோஃபர்
கண்காணிப்பாளர்
இராணி மேரி கல்லூரி
சென்னை 4.