பத்திரிகைச் சட்டங்கள் |PRESS LAWS

பத்திரிக்கைச் சட்டங்கள்

பத்திரிகைச் சட்டங்கள் | PRESS LAWS

            மக்களாட்சி சரியாகச் செயல்பட வேண்டுமானால் இதழ்கள் வேண்டும். ஆனால் பத்திரிகைகள் செயல்படாவிட்டால், அளவற்ற ஆற்றல் சுதந்திரமாகச் செயல்பட பொறுப்புணர்ச்சியோடு கொண்ட இதழ்களால் சில கேடுகளும் விளையும்.

            பொதுவாக, சாதாரண மக்கள், பத்திரிகைகளில் அச்சிடுவதெல்லாம் உண்மையென்று நம்பிவிடுகின்றனர். இதனால் சிலர் கையில் பத்திரிகைகள் இருக்கின்றபொழுது, அவர்கள் தங்களது விருப்பம்போல் செய்திகளை வெளியிட்டு, மக்களைத் திசை திருப்ப வாய்ப்பு இருக்கின்றது. வாணிப நோக்கோடு செயல்படும் இதழ்கள் ஆதாயம் கருதி, மக்களின் விலங்குணர்ச்சிகளைத் தூண்டவோ, சிலரை அச்சுறுத்தவோ, சிலரைப்பற்றித் தரக்குறைவாக எழுதவோ, பாலுணர்ச்சியைத் தூண்டும் வகையில் படங்களையும் செய்திகளையும் வெளியிட்டு இளம் உள்ளங்களைக் கெடுக்கவோ, மக்களுக்கிடையில் கலகங்களைத் தூண்டி சமுதாய அமைதியைக் கெடுக்கவோ முடிகின்றது. ஆதலால் இதழ்களைத் தேவையான அளவில் கட்டுப்படுத்துவதும் வேண்டியதாகின்றது.

            “பத்திரிகைச் சுதந்திரம் என்பது ஒரு தேவையான தீமையாகும். ஒரு பக்கமிருக்கும் பத்திரிகைச் சுதந்திரத்திற்கும் மறு பக்கமிருக்கும் அது தன்னுடைய சுதந்திரத்தைத் தவறாக பயன் படுத்துவதைத் தடுக்கும் சரியான கட்டுப்பாடுகளுக்குமிடையில் சமன்பாட்டைக் காண வேண்டும்.” என்று ஆர்.சி.எஸ். சர்க்கார் (R.C.S. Sarkar, ‘The Press in India’, S. Chand & Co, 1984 PP. 68-69.) கூறுகின்றார்.

            நமது நாட்டில் அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 19(2) விதியின்படி. அரசு, பத்திரிகையின் சுதந்திரத்தைக் கட்டுபடுத்த சட்டங்கள் கொண்டுவர அதிகாரம் பெற்றிருக்கின்றது. இது தவிர, பத்திரிகைகளை கட்டுப்படுத்த பல்வேறு சட்டங்கள் நடைமுறையிலிருக்கின்றன. அவற்றைப் பற்றி இதழியலாளர்கள் தெரிந்து கொள்வது தேவையாகும். அவற்றில் குறிப்பிடத்தக்க சட்டங்கள் மட்டும் இங்கு விளக்கலாம்.

பத்திரிகைச் சட்டங்கள் | PRESS LAWS

I.அவமதிப்புச் சட்டம் (Law of Defamation)

II. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சட்டம்

III.நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்

IV. அலுவலக இரகசியங்கள் சட்டம்

V. பத்திரிகை, புத்தகங்கள் பதிவுச் சட்டம், 1867

VI. ஆபாச வெளியீட்டுத் தடைச்சட்டம்

VII. பதிப்புரிமை சட்டம் (The Copyright Act)

VIII. இளைஞர்கள் (தீமைபயக்கும் வெளியீடுகள் தடைச்) சட்டம்

IX. அஞ்சல், தந்திச் சட்டங்கள்

X. பணிசெய் இதழியலாளர் சட்டம்

XI . வேறு சில இதழ்களின் சட்டங்கள்

I.அவமதிப்புச் சட்டம் (Law of Defamation)

            இதழியலாளர்களும், செய்தித்தாட்களை வெளியிடுபவர்களும் அவமதிப்புச் சட்டம் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரின் மான இழப்புக்குக் காரணமாகின்றவரின் மீது குற்றவியல் சட்டத்தின்படியும் (Criminal Law) சமுதாயவியல் சட்டத்தின் படியும் (civil Law) நடவடிக்கை எடுக்கலாம்.

            விளக்கம்: ஒருவரை வாய்மொழியாக இழிவுபடுத்துவதை ‘அவதூறு’ (scandal) என்றும், எழுத்தின் மூலம் அவமதிப்பதை * சட்ட வழக்கிற்குட்பட்டது’ (Libe1) என்றும் கூறலாம். இந்தியக் குற்றவியல் சட்டத்தின் (I.P.D. ) 499 ஆம் பிரிவு அவமதிப்பு எதுவென்று விளக்குகின்றது; 500 ஆம் பிரிவு தண்டனையைக் குறிப்பிடுகின்றது.
            ஒருவரைப் பற்றி அவமதிக்கும் வகையில் பேசுவதோ, மற்றவர்கள் படிக்கும் வகையில் எழுதுவதோ, சைகைகள் மூலம் வெளிப்படுத்துவதோ அவமதிப்புக் குற்றத்தின் கீழ் வரவேண்டுமானால் அதில் மூன்று குறிப்பிடத்தக்க உள்ளடக்கங்கள் இருக்க வேண்டும். அவை: யாராவது ஒரு மனிதரைப் பற்றிய அவமதிப்பாக இருக்க வேண்டும். (2) அப்படிப்பட்ட அவமதிப்பு பேசிய அல்லது மற்றவர்கள் படிக்க வேண்டுமென்று எழுதிய சொற்களாலோ, சைகைகளாலோ, தெரியக் கூடிய வெளியீட்டு முறைகளாலோ இருக்க வேண்டும். (3) அத்தகைய அவமதிப்பு, ஒருவரின் புகழைப் பாதிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடோ, அல்லது புகழ் பாதிக்கப்படுமென்று அறிந்தோ செய்திருக்க வேண்டும். அவமதிப்புத் தொடர்பானவற்றை,

(1) மக்களின் வெறுப்பை, கிண்டலை, கேலியைத் தூண்டக் கூடியவை;

(2) மக்கள் வெறுத்தோ, புறக்கணித்தோ, ஒதுக்கக் கூடியவை;

(3) ஒருவரின் பணியையோ, தொழிலையோ பாதிக்கக் கூடியவை;

(4) வாணிபத்தைப் பாதிக்கக் கூடியவை என்று நான்கு வகையாகப் பகுக்கலாம்.

விதி விலக்குகள்: ஒருவரை அவமதிப்புச் சட்டத்தின் கீழ் பத்து குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தண்டிக்க முடியாதென்று 499 ஆம் பிரிவு விதிவிலக்கு அளித்திருக்கின்றது. இதன்படி பொது நலன் கருதி உண்மையை வெளியிடாமலிருத்தல்; பொது நலன் கருதி சிலவற்றை வெளியிடல்; அரசு ஊழியர்களைப் பற்றி நியாயமாகக் கருத்துக் கூறல்; பொது நலனுக்குத் தேவையானவற்றிற்காக வாதிடல்; நல்ல எண்ணத்தோடு நீதிமன்ற நடவடிக்கைகளை வெளியிடல்; நீதிமன்றத் தீர்ப்புப் பற்றியோ சான்று பற்றியோ நல்ல எண்ணத்தோடு கருத்துக் கூறல், பொது நடவடிக்கைகள் பற்றி பொதுநல நோக்கில் விமர்சனம் செய்தல், சட்டப்படி அதிகாரம் உடையவர்கள் சட்ட வரம்புக்குகள் கருத்துக் கூறல், நல்ல எண்ணத்தோடு அதிகாரத்தில் உள்ளவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டல், பொது நலனையோ தனிமனிதர்களையோ காப்பதற்காகத் சிலரைக் குறை கூறுதல், பொது நலன் கருதி ஒருவரை எச்சரித்தல் ஆகியவை அவமதிப்புக் குற்றமாகாது.

வழக்கு: 1973 ஆம் ஆண்டின் குற்றவியல் வழக்குத் தொடர்விதிப்படி 199 (1), யார் அவமதிப்புக்கு உள்ளானார்களோ அவர்கள் தான் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர முடியும். ஆனால் இந்தியக் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், மாநில ஆளுநர், மத்திய மாநில அமைச்சர்கள் ஆகியவர்கள் அவமதிப்புக்கு ஆளானதாகக் கருதினால், அவர்கள் சார்பில் அரசு வழக்குரைஞர் வழக்கைத் தொடரலாம்.

            அவமதிப்பு வழக்கு, அவமதிப்புச் செய்தவர் மேல் மட்டுமல்ல; அதனை வெளியிட்ட நாளிதழின் பதிப்பாளர், அச்சிட்டவர், ஆசிரியர் ஆகியவர் மீதும் தொடரலாம். சட்டப்படி அவமதிப்பு உறுதிசெய்யப்பட்டால், பொறுப்பானவர்கள் அனைவரும் தண்டனைக்குள்ளாவார்கள்.

தண்டனை : அவமதிப்புச் செய்தவர்களுக்கு, இந்தியக் குற்றவியல் சட்டம் 500ஆம் பிரிவின்படி இரண்டாண்டுகள் வரை சிறைத்தண்டனையோ, அபராதமோ இரண்டுமோ கொடுக்கலாம். சட்டக்குழு (The Law Commission) இதோடு கூட, தீர்ப்பினைச் செய்தித்தாட்களில் வெளியிடவேண்டுமென்றும், குற்றம் உறுதி செய்யப்பட்டவர் வெளியீட்டுச் செலவினை ஏற்க வேண்டுமென்றும் பரிந்துரைத்துள்ளது.

            பொதுச் சட்டத்தின்படி மான இழப்பு வழக்குத் தொடர்பவர் இழப்பீடு பெற முடியும். குற்றவியல் சட்டப்படி வழக்குத் தொடர்ந்தால் அவமதித்தவர் தண்டனை பெறுவார்.


II. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சட்டம்

            நாடாளுமன்றத்திலும் பொதுமக்களுக்குத் சட்டமன்றங்களிலும் நடப்பவற்றைப் தெரிவிப்பது மக்களாட்சியில் இதழ்களின்
பொறுப்பாகின்றது. ஆனால் இந்தப் பொறுப்பினை இதழ்கள் கவனமாக நிறைவேற்ற வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற நடவடிக்கைகளை உள்ளது உள்ளபடி நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு வெளியிட வேண்டும். இதில் கவனமாக இல்லையேல், சட்டமன்ற, நாடாளுமன்ற 
உறுப்பினர்களின் உரிமை மீறல் குற்றமோ, சட்டமன்ற நாடாளுமன்றத்தை அவமதித்த குற்றமோ ஏற்பட்டு விடும்.

வரையறைகள்: பொதுவாக சட்டமன்ற, நாடாளுமன்ற
நடவடிக்கைகளை வெளியிடும்பொழுது, உறுப்பினர்களின் மதிப்பைக் குறைக்கும் வகையிலோ, அவர்களுக்கு களங்கம் ஏற்படும் வகையிலோ, கேலி செய்யும் வகையிலோ, நாடாளுமன்றங்களை அவமதிக்கும் முறையிலோ செய்திகளை வெளியிடக் கூடாது.

            இப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டால்தான் உரிமை மீறல் என்று திட்டவட்டமாகக் கூறும் சட்டம் எதுவும் இல்லை.  ஆனால் இதுவரை,

(1) தவறாக சபைகளின் நடவடிக்கைகளை வெளியிட்டதற்காகவும்;

(2) சிதைத்த, முறையற்ற முறையில் நடவடிக்கைகளைப் பற்றி வேண்டுமென்றே எழுதியதற்காகவும்

(3) அவைத்தலைவர்கள் மன்றக் குறிப்பிலிருந்து விலக்கியவற்றை வெளியிட்டதற்காகவும் நமது நாட்டில் உரிமை மீறல் வழக்குகள் இதழ்களின் மீது தொடரப்பட்டுள்ளன. பல நாளிதழ்களின் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டுள்ளன.

            உரிமை மீறியவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் சட்ட மன்றங்களுக்கும் நாடாளுமன்றங்களுக்கும் இருக்கின்றன. 1987இல் ‘ஆனந்த விகடனில் வெளியான ஒரு கேலிச்சித்திரம் சட்டமன்ற உறுப்பினர்களை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டி, அதன் ஆசிரியருக்கு சட்டமன்றம் சிறைத்தண்டனை விதித்ததைச் சுட்டிக்காட்டலாம்.


சட்டப் பாதுகாப்பு: 1956ம் ஆண்டின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் (வெளியீட்டிற்குப் பாதுகாப்புச்) சட்டம் (The Parliamentary Proceedings (Protection’ of Publication Act 1956) நாடாளுமன்ற நடவடிக்கைகளை வெளியிடுவதில் பத்திரிகைகளுக்குப் பாதுகாப்பளிக்கின்றது. பிரோஷா காந்தி (Feroz Gandhi) யின் முயற்சியால் இச்சட்டம் வந்ததால் இதனைப் ‘பிரோஷா காந்திச் சட்டம்’ என்றும் குறிப்பிடுவதுண்டு. இதன்படி, நாடாளுமன்ற நடவடிக்கைகளை தீய நோக்கத்தோடு தவறாக வெளியிட்டதாக உறுதி செய்யப்பட்டால் மட்டும் தான் தண்டனை வழங்கலாம். நாடாளுமன்ற நடவடிக்கைகள் அவதூறுகளாக இருந்தாலும் உண்மைகளாக இருந்தாலும், அவற்றை வெளியிடுவது உரிமை மீறலாகாதென இச்சட்டம் கூறுகின்றது.

            இச்சட்டத்தை நெருக்கடிக் காலத்தில் நீக்கியிருந்தனர். நெருக்கடிக்காலத்திற்குப்பின் இச்சட்டம் மறுபடியும் செயல் முறைக்கு
வந்துவிட்டது.

III.நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்

            செய்திகளின் மூலங்களில் ஒன்றாக நீதிமன்றம் விளங்குகின்றது. நீதிமன்றங்களில் நடைபெறும் சுவையான, சிக்கலான, பொதுநலனோடு தொடர்புடைய வழக்குகளின் நடவடிக்கைகளை அறிந்து கொள்வதில் மக்களும் மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றனர். அவற்றை வெளியிடுவதன் மூலம் இதழ்கள் நீதியை எடுத்துரைக்கும் பணியைச் செய்கின்றன.


            நீதிமன்றங்கள், வழக்கு நடவடிக்கைகள் ஆகியவை பற்றிய செய்திகளை வெளியிடும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் நீதிமன்றத்தை அவமதித்த (contempt of Court) குற்றத்திற்கு ஆளாக நேரிடும்.


குற்றங்கள்: நீதிமன்றத்தையோ சட்டத்தையோ நீதிபதிகளின் இழிவுபடுத்தும் வகையில் அதிகாரத்தையோ வேண்டுமென்றே செய்திகளை குற்றமாகும். வெளியிடுவது தண்டனைக்குரிய எடுத்துக்காட்டாக, நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் ஒரு வழக்குபற்றிய தவறான செய்தியை வெளியிடுவதோ, வழக்கின் தீர்ப்பு இப்படித்தான் இருக்குமென்று இட்டுக்கட்டிக் கூறுவதோ, நீதிபதியைப் எண்ணம் பற்றியோ, சான்றுரைப்பவர்களைப் பற்றியோ தவறான ஏற்படும்படி எழுதுவதோ ‘நீதிமன்ற நிந்தனை’ க் குற்றமாகும்.


            காவல் நிலையங்களில் பதிவு செய்யும் குற்றங்கள் பற்றி அறியும் வாய்ப்பு செய்தியாளர்களுக்கு இருக்கின்றது. அவற்றைப் பற்றி அவர்கள் எழுதும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, திருட்டு வழக்கில் இராமன் என்பவன் கைது செய்யப்பட்டிருக்கலாம். “திருடன் இராமன் செய்யப்பட்டான்’, என்று செய்தி வெளியிடக்கூடாது. ராமனைக் கைது செய்தனர். அவன் மீது திருட்டுக்குற்றம் சாட்டப்படுகின்றது”, என்பது போன்று தான் செய்தியை வெளியிட வேண்டும்.


சட்டம்: 1952ஆம் ஆண்டின் ‘நீதி மன்ற அவமதிப்புச் சட்டம் எண் XXXII (The Contempt of Court Act XXXII) நீதிமன்றங்களை அவமதித்தால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனையோ, ரூ. 2,000 தண்டமோ (அபராதமோ) அல்லது இரண்டுமோ விதிக்கலாமென்று கூறுகின்றது.


            1971ஆம் ஆண்டில் நிறைவேற்றப் பெற்ற நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் நீதிமன்ற நிந்தனைகளை இருவகைகளாகப் பிரிக்கின்றது. முதலாவதாக, நீதிமன்றங்களின் ஆணைகளுக்கோ, தீர்ப்புக்களுக்கோ கட்டுப்பட மறுப்பது சமூகக் (civil) குற்றமாகும். இரண்டாவதாக, பத்திரிகைகளை செய்யும் நிந்தனைகள் குற்றவியல் (criminal) அடிப்படையில் குற்றங்களாகும்.


IV. அலுவலக இரகசியங்கள் சட்டம்

            மக்களாட்சியில் மக்கள் நாட்டில் நடப்புக்களை எல்லாம் தெரிந்து கொள்வது தேவையாகின்றது. அரசு எல்லா விவரங்களையும் சேகரித்து வைக்கின்றது. நிர்வாகத்தினர் பலவற்றை முடிவு செய்து செயல்படுத்துகின்றனர். இவற்றைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து மக்களுக்குத் தெரிவிப்பது இதழ்களின் பணியாகின்றது. ஆனால் நிர்வாகத்தின் திறமை கருதி, நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டின் தொடர்புகள், குற்றப் புலனாய்வுகள், அமைச்சரவை முடிவுகள், சில தனிப்பட்ட மனிதர்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை தொடர்பான சிலவற்றை அரசு ரகசியங்களாகக் கட்டிக் காப்பது தேவையாகின்றது. இப்படிப்பட்ட அலுவலக ரகசியங்களை இதழ்கள் அறிந்து வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும்.


சட்டம்: 1923ஆம் ஆண்டின் ‘அலுவலக இரகசியங்கள் சட்டம்’ (Official Secrets Act) (1) ஒற்றறிதல் (2) இரகசிய விவரங்களை மற்றவர்களுக்குத் தருதல் ஆகிய குற்றங்களைத் தெளிவாக வரையறுத்துக் கூறுகின்றது.


            இந்தச் சட்டத்தின் மூன்றாம் பிரிவு, யாராவது நாட்டின் பாதுகாப்பிற்குப் பாதகமான முறையில் (1) தடை செய்யப்பட்ட பகுதிக்குள் செல்லுதல், அங்குள்ள இரகசிய விவரங்களைச் சேகரித்து மற்றவர்களுக்கு வழங்குதல்; (2) பகைவர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன்படும் வகையில் வரைபடங்கள் தீட்டியோ, திட்டம் வகுத்தோ, மாதிரிகளை உருவாக்கியோ தருதல்; (3) பகைவர்களுக்குப் பயன்படக்கூடிய விவரங்களைப் பெற்றோ, சேகரித்தோ, பதிவு செய்தோ, வெளியிட்டோ வழங்குதல் குற்றங்களாகுமென்று தெளிவு படுத்துகின்றது.


1962ஆம் ஆண்டின் ‘ அணுசக்தி சட்டம்’ (Atomic Energy Act) இருக்கின்ற, அல்லது அமைக்கப் போகின்ற அணு உற்பத்தி நிலையங்கள் பற்றி அதிகாரம் பெற்றவர்கள் தவிர மற்றவர்களுக்குச் செய்திகளைத் தருவதைக் குற்றமாக்குகின்றது. இதைப்போல வேறு சில சட்டங்களும் இருக்கின்றன.


நடைமுறை : ஒன்றை இரகசியமானதா இல்லையாவெனத்
தீர்மானிப்பது சிக்கலானதாகும். சில வேளைகளில் அலுவலர்களும் அரசியல் தலைவர்களும் தங்களது தவறுகள் வெளியில் தெரியாமலிருக்க பலவற்றை இரகசியங்கள் என்று மூடி மறைக்கலாம். மக்களின் நலன் கருதி இதழ்கள் அவற்றை வெளிப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, இந்திய அரசு வெளிநாட்டில் இராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் ஏற்பட்ட முறைகேடுகளை ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ (Indian Express) வெளிப்படுத்திய பொழுது, அரசின் சில ஆவணங்களைப் பதிப்பித்தது. இதனை இச்சட்டத்தின் கீழ் குற்றமென அரசு கருதியது இதனைப் போன்று பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.


V. பத்திரிகை, புத்தகங்கள் பதிவுச் சட்டம், 1867

            நடைமுறையிலிருக்கின்ற மிகப் பழைய பத்திரிகைச் சட்டங்களில் ஒன்று 1867இல் கொண்டுவரப் பெற்ற ‘ பத்திரிகை, புத்தகங்கள் பதிவுச் சட்டம்’ (The Press and Registration of Books Act). இந்தச் சட்டத்தில் 1940, 1956 ஆம் ஆண்டுகளில் சில திருத்தங்கள் சட்டம் பத்திரிகைகளை கொண்டு வந்தனர். இந்தச் முறைப்படுத்துவதற்காகக் கொண்டு வந்ததுதானே தவிர, பத்திரிகைகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது இதன் நோக்கமல்ல.. இந்தியாவில் வெளியாகும் இதழ்களையும் புத்தகங்களையும் பாதுகாக்க இந்தச் சட்டம் துணை செய்கின்றது.


இதழ்கள் : இந்தச் சட்டத்தின்படி தில்லியிலிருக்கும் இந்திய அரசுத் தலைமைப் பதிவாளரிடம் பத்திரிகை தொடர்பான எல்லா விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.


            பத்திரிகைகளை வெளியிடுகின்றவர், உரிமையாளர், ஆசிரியர் ஆகியோர் மாவட்ட நீதிபதியிடமோ, பெருநகர நீதிபதியிடமோ வாக்குறுதி வழங்கி, பெயர் பதிவு செய்தபின் பத்திரிகைகளை வெளியிட வேண்டும். இந்தச் சட்டம் ஒரிதழை எப்படிப் பதிவு செய்து நடத்த வேண்டுமென்ற முறையை விளக்குகின்றது.


            ஒவ்வொரு இதழிலும் அதனை அச்சிட்டவர், வெளியிட்டவர், ஆசிரியர், உரிமையாளர் ஆகியோரின் பெயர்கள், அச்சிட்ட இடம், வெளியிட்ட தேதி ஆகியவை தெளிவாக அச்சிட்டிருக்க வேண்டும். பத்திரிகையை வெளியிடுபவர்கள் செய்தித்தாட்கள் பதிவாளர் (Registrar of Newspapers) கேட்கின்ற எல்லா விவரங்களையும் கொண்ட ஆண்டு அறிக்கைகளை வழங்க வேண்டும்.

            இந்தச் சட்டத்தின்படி, ஆங்கிலம், இந்தி, உருதுமொழிகளில் வெளிவரும் ஒவ்வொரு இதழும் ஒரு படியை புது தில்லியிலுள்ள பத்திரிகைகள் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். மற்றைய மொழி இதழ்கள் குறிப்பிடப்பட்ட வட்டார வெளியீட்டு, செய்தி நிறுவனங்களுக்கு (PIB) ஒரு படியை அனுப்ப வேண்டும்.

VI. ஆபாச வெளியீட்டுத் தடைச்சட்டம்

            பத்திரிகைகளுக்கு  எதனை வேண்டுமானாலும் வெளியிடச்
சுதந்திரம் இருக்கின்றது. ஆனால் அதே நேரத்தில் மக்களின் மனத்தையும், சமுதாயத்தின் ஒழுக்கத்தையும் கெடுக்கக்கூடிய ஆபாசமான, கீழான செய்திகளை, கட்டுரைகளை, படங்களை வெளியிடுவதைத் தடை செய்ய ‘ஆபாச வெளியீட்டுத் தடைச் சட்டம் (obscene Prohibition Act) செயல்படுகின்றது.


விளக்கம்: இந்தியக் குற்றவியல் சட்டத்தின் (I P C) 292,293, 294
பிரிவுகள், எவற்றை ஆபாசமாகக் கருதலாம் என்பதை விளக்குகின்றன. இவற்றின்படி நாகரிகமற்ற செய்திகள், தாழ்ந்த உணர்வுகளைத் தூண்டும் எழுத்துக்கள், புகைப்படங்கள், ஓவியங்கள், திரைப்படங்கள் விளம்பரங்கள் ஆகியவை ஆபாசமானவைகளாகும்.


ஒன்றை ஆபாசமானதாக வெளியிடுபவரின் நோக்கமும் வெளியிடும் முறையும் கருதச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக ஆண்-பெண் உறவு பற்றித் திருமணமானவர்களுக்கு வழிகாட்டும் முறையில் அறிவியல் அடிப்படையில் வெளியிடுவதை ஆபாசமென்று கொள்வதில்லை. ஆனால் வாணிப நோக்கில் இதழ்களின் விற்பனையைக் கூட்ட, பாலுணர்வு பற்றித் தரக்குறைவான முறையில் வெளியிடுவது ஆபாசமாகும்.


தண்டனை : இச்சட்டப்படி ஆபாசமான வெளியீடுகளைப் பறிமுதல் செய்ய அரசுக்கு உரிமை இருக்கின்றது. மேலும் ஆபாசமானவற்றை எழுதியவருக்கும் வெளியிட்டவருக்கும் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கலாம். ஆபாசமான வெளியீடுகளை இறக்குமதி செய்வதை அரசு தடுக்கவும் தனிச்சட்டம் இருக்கின்றது.


VII. பதிப்புரிமை சட்டம் (The Copyright Act)

            ஒருவரின் அறிவுசான்ற படைப்புரிமையைக் கட்டிக்காக்க உருவாக்கப் பெற்றது பதிப்புரிமைச் சட்டம். ஒருவரின் உழைப்பாலோ, அறிவாலோ, திறமையாலோ படைத்த எதுவும் ஒருவரின் சொத்தாகின்றது. அதே போல ஒருவரின் சொந்த இலக்கியம், படைப்பு, நாடகம், இசை, கலை எதுவாக இருந்தாலும் அது ஆக்கியவரின் உடமையாகின்றது. இந்த உரிமையைப் பாதுகாக்கச் சட்டம் துணை செய்கின்றது.


சட்டவிளக்கம்: 1941-இல் முதன் முதலில் பதிப்புரிமைச் சட்டம் செயல்படுத்தப் பெற்றது, இப்பொழுது நடைமுறையிலிருப்பது, திருந்திய 1957இல் நிறைவேற்றிய முறையில் இந்திய நாடாளுமன்றம் பதிப்புரிமைச் சட்டம்’
ஒன்றின் பதிப்புரிமை ஒருவருக்கு இருக்க வேண்டுமானால் அது முழுக்க அவரது சொந்தப்படைப்பாக இருக்க வேண்டும். மற்றொன்றைப் பார்த்துப் படைத்த ஒன்றுக்கு ஒருவர் உரிமை கொண்டாட இயலாது. கருத்துக்களுக்கோ, பாடப் பொருளுக்கோ கருப்பொருளுக்கோ, வரலாற்று நிகழ்ச்சிகளுக்கோ ஒருவரும் உரிமை கொண்டாட இயலாது. ஏனென்றால் அவை எல்லாம் பொதுச் சொத்துக்களாகும். ஒரு குறிப்பிட்ட முறையில் வடிவத்தில் ஒன்றை வெளியிடும் பொழுதுதான் அதற்குப் பதிப்புரிமை கிடைக்கின்றது.


இந்தச் சட்டத்தின் 45ஆம் பிரிவு பதிப்புரிமையைப் பதிவு செய்து கொள்ள வாய்ப்பளிக்கின்றது. ஆனால் பதிவு செய்ய வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.


            இலக்கியப் படைப்புகள், இசை, நாடகம் போன்றவற்றிற்குப் பதிப்புரிமை படைத்தவரின் வாழ்நாள் முழுவதும் அவருக்கே சொந்தமாக இருக்கும். அவர் காலத்திற்குப் பின்பு ஐம்பதாண்டுகளுக்குப் பதிப்புரிமை அவரது சந்ததியினருக்கு உண்டு. புகைப்படங்களுக்குப் பதிப்புரிமை ஐம்பதாண்டுகளுக்கு அவற்றை எடுத்தவருக்கு உண்டு. இந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு யார் வேண்டுமானாலும் அவற்றை எடுத்துப் பயன்படுத்தலாம்.


விதி விலக்குகள் : இச்சட்டத்தின்படி ஒருவரின் படைப்பிலிருந்து ஆய்வுக்காகவோ, தனிப்பட்ட படிப்புக்காகவோ, மதிப்பீட்டிற்காகவோ சில பகுதிகளை எடுத்துப் பயன்படுத்துவது குற்றமாகாது. நியாயமான முறையில் மேற்கோள் காட்டவோ, சரியான முறையில் சுருக்கத்தைக் கூறவோ சட்டம் வாய்ப்பளிக்கின்றது. ஒருவரின் படைப்பிலிருந்து சிலவற்றைப் பயன்படுத்தும் பொழுது மூலத்தைக் குறிப்பிட வேண்டும்.


செய்தித்தாட்களுக்குச் சிறப்பு விதி விலக்குகள் வழங்கப் பெற்றுள்ளன. இதழ்கள் பொது நலன் கருதி, எந்த இலக்கியப் படைப்பையும், நாடகத்தையும் இசையையும் வெளியிடலாம். இது நடப்புச் செய்திகளை வெளியிடும் வகையில் சேரும். ஆனால் ஒரிதழில் வெளியான கட்டுரையை அப்படியே சொல் மாறாமல் வெளியிட வேண்டுமானால் அந்த இதழின் அனுமதி பெற வேண்டும். இதழ்கள் பதிப்புரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் நின்று செயல்படுவது தேவையாகும்.


VIII. இளைஞர்கள் (தீமைபயக்கும் வெளியீடுகள் தடைச்) சட்டம்


            இளைஞர்களின் உள்ளங்களைக் கெடுக்கக் கூடியவற்றை வெளியிடுவதைத் தடை செய்யும் நோக்கத்தில் 1956-இல் ‘இளைஞர்கள் (தீமைபயக்கும் வெளியீடுகள் தடைச்) சட்டத்தை (The Young Persons நிறைவேற்றியது. Harmful Publications Act) அரசு இந்த சட்டத்தின்படி (1) குற்றங்களைச் செய்யத் தூண்டுகின்ற; (2) வன்முறையில், கொடூரமான செயல்களில் ஈடுபடச் செய்கின்ற; (3) அச்சத்தை, பயங்கரத்தைத் தூண்டுகின்ற கதைகளையும், படங்களையும் கொண்ட புத்தகத்தையோ, இதழையோ, கையேட்டையோ, கைப்பிரதியையோ, செய்தித் தாளையோ, இவை போன்றவற்றையோ இளம் உள்ளங்களைக் கெடுக்கும் வகையில் வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இவற்றை வெளியிடுவது மட்டுமின்றி இவற்றை விளம்பரப்படுத்துவதும், விற்பனை செய்வது, விநியோகிப்பதும், வைத்திருப்பதும் சட்டப்படி குற்றமாகும்.


இளைஞர்களைக் கெடுக்கக் கூடியவை என்று நீதிமன்றம் தீர்மானித்தவற்றை முழுக்க அழித்துவிட நீதிமன்றம் கட்டளை இடலாம். இத்தகைய வெளியீடுகளை மாநில அரசுகள் பறிமுதல் செய்யலாம். இப்படிப்பட்ட வெளியீடுகளைக் கைப்பற்றவும் அழிக்கவும் காவல் துறை அதிகாரிகள் அதிகாரம் பெற்றுள்ளனர்.


IX. அஞ்சல், தந்திச் சட்டங்கள்

            1885ஆம் ஆண்டின் ‘ இந்தியத் தந்திச் சட்டம்’ படி (Indian Telegraph Act) அரசோ, அல்லது அதிகாரம் பெற்ற அலுவலரோ தந்திச் செய்தியைத் தடுக்கவோ, காலம்தாழ்த்தவோ, நிறுத்தவோ செய்யலாம். ஆனால் பொது நெருக்கடி நிலையை அரசு அறிவித்திருக்கும் பொழுதோ, நாட்டின் பாதுகாப்பு, பொது நலன் ஆகியவற்றைக் கருதித்தான் அரசு இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.


1898 ஆம் ஆண்டின் ‘இந்திய அஞ்சலகச் சட்டம்’ (Indian Post office Act) நெருக்கடிக் காலத்திலும், நாட்டின் பாதுகாப்பு, அமைதி கருதியும் அரசோ அல்லது அதிகாரம் பெற்ற அலுவலரோ அஞ்சல் வழி அனுப்பப் பெற்றதைச் சோதிக்கவோ, வழங்காமல் நிறுத்து வைக்கவோ நடவடிக்கை எடுக்கவோ அதிகாரம் வழங்குகின்றது.


            இந்தச் சட்டத்தை அரசு தவறாகப் பயன்படுத்தவோ இதன் மூலம் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதிக்கவோ வாய்ப்பு இருக்கின்றது. .ஆனால் கட்டுப்பாடுகள் நாட்டின் பாதுகாப்பு, அமைதி நோக்கில் இத்தகைய கட்டுப்பாடுகள் தேவைப்பெறுகின்றன.


X. பணிசெய் இதழியலாளர் சட்டம்


             1956ஆம் ஆண்டு நிறைவேற்றப் பெற்ற பணி செய்
இதழியலாளர் சட்டம்’ (The working Journalist Act) பத்திரிகைகளில் பணி செய்கின்றவர்கள் தொடர்பான ஊதியம், வைப்பு நிதி, பணிக்காலம், விடுமுறை ஆகியவற்றை வரையறுத்துக் கூறுகின்றது. இதழியலாளர்கள் யார் என்பதையும் விளக்குகின்றது.


குறிப்பிடத்தக்கவை: பணிசெய் இதழியலாளர் சட்டத்திலுள்ளவற்றில் சில குறிப்பிடத்தக்கவற்றைச் சுட்டிக்காட்டலாம். செய்தித் தாட்களில் பணிசெய்கின்ற ஆசிரியர்கள், துணையாசிரியர்கள், செய்தியாளர்கள் ஆகியோர் வாரத்தில் ஆறுநாட்கள் மட்டுமே பணி செய்ய வேண்டும். ஏழாவது நாள் அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும்.


இச்சட்டம் வேலைக்காலத்தை ஒரு நாளைக்கு ஆறு மணி நேரமென்றும், வாரத்திற்கு 36 மணி நேரமென்றும், ஒரு திங்களுக்கு 144 மணி நேரமென்றும் வரையறுத்துக் கூறுகின்றது.


செய்தியாளர்கள் (Reporters) ஒரு நாளில் ஒரு பணி (Assignment) செய்தால் போதும். அவர்கள் ஒரு நாளில் இரு பணிகளை மேற்கொள்ள நேரிட்டால் மறுநாள் அவர்கள் பணி செய்ய வேண்டியதில்லை.


ஊதியக் குழு : இச்சட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் பத்திரிகையாளர்களின் ஊதியங்களை நிர்ணயிப்பதற்காக ‘ ஊதியக் குழு’ நியமிக்க வழிவகுக்கின்றது. இதன்படி, மாறுகின்ற சூழ்நிலைக்கேற்ப இதழியலாளர்கள் உயர்ந்த ஊதியம் பெற வாய்ப்பு உள்ளது.

XI . வேறு சில இதழ்களின் சட்டங்கள்

            மேலே விளக்கிய பத்திரிகைச் சட்டங்கள் தவிர, இதழியலாளர் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான சட்டங்கள் உள்ளன. அவற்றைச் சுட்டிக் காட்டலாம்.


(i) புத்தகங்கள், செய்தித்தாட்கள் அனுப்புதல் சட்டம்:

            1954இல் ‘புத்தகங்கள், செய்தித்தாட்கள் (பொது நூலகங்களுக்கு) அனுப்புதல்  சட்டத்தை (Delivery of Books and Newspapers) (Public Library Act) அரசு நிறைவேற்றியது. இதன்படி, வெளியிடுகின்ற புத்தகங்கள் செய்தித்தாட்களின் படிகளை இலவசமாக கல்கத்தாவிலுள்ள தேசிய நூலகம், (2) சென்னையிலிருக்கும் கன்னிமாரா பொது நூலகம், (3) தில்லியிலிருக்கும் தேசிய மைய நூலகம், (4) பம்பாயிலுள்ள மைய நூலகம் ஆகிய நான்கு தேசிய நூலகங்களுக்கும் அனுப்ப வேண்டும்.



(ii) மருந்துகள், தந்திர நிவாரணங்கள் சட்டம்:

1954 இல் நிவாரணங்கள் அரசு மருந்துகள், தந்திர (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) சட்டத்தை (The Drugs and Magic Remedies) [objectionable Advertisement) Act) கொண்டு வந்தது. மந்திர, தந்திர ஆற்றல்களோடு நிவாரணம் கிடைப்பதாக விளம்பரங்கள் அளித்து, மக்களை ஏமாற்றி மருந்துகள், மந்திர தாயத்துக்கள், மோதிரம் போன்றவற்றை விற்பனை செய்வதைத் தடுப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.


(iii) குற்றவியல் சட்டங்கள்:

            1860இல் நிறைவேற்ற பெற்ற (Indian Penal code) இ பி கோ. சில தடுக்கப்பட வேண்டியவற்றை அச்சிடுவதும், வெளியிடுவதும், புழக்கத்தில் விடுவதும் குற்றமெனக் கூறுகின்றது. 124A பிரிவு நாட்டின் மீது வெறுப்பை வளர்ப்பதைத் தேசத் துரோக (Sedition) குற்றமாக்குகின்றது. 153A பிரிவின் படி மதம், இனம், பிறப்பிடம், வாழுமிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடம் வெறுப்பை வளர்ப்பது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமெனக் கூறுகின்றது. 1973 ஆம் ஆண்டின் குற்றவியல் வழக்குமுறையின் (Criminal Procedure code) 95 ஆம் பிரிவுப்படி குற்றவியல் சட்டப்படி செய்தித்தாளோ, நூலோ தடுக்கப்பட வேண்டிய உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாக மாநில அரசு கருதினால், அவற்றைப் பறிமுதல் செய்ய அதிகாரம் அளிக்கின்றது.


(iv) பரிசுப் போட்டி சட்டம்:

            1955ஆம் ஆண்டின் பரிசுப் போட்டிச் சட்டம் (The Prize competition Act) சட்டத்திற்குப் புறம்பான முறையில் நடைபெறும் பரிசுப் போட்டி பற்றி விளம்பரப் படுத்துவதைத் தடை செய்கின்றது.

நன்றி – இதழியல் கலை, டாக்டர் மா.பா.குருசாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here