நாவல் என்றால் என்ன? நாவலின் வரையறை யாது?

நாவல்-என்றால்-என்ன

நாவல் என்றால் என்ன? நாவலின் வரையறை யாது?


            பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வளரத் தொடங்கி இந்நூற்றாண்டில் மிகப் பரவலான ஓர் இலக்கிய வகையாக வளர்ந்திருப்பது நாவலாகும். முறையாகக் கற்று அறிவு பெற்றோரும் சாதாரண அறிவு நாவலுக்கும் சிறுகதைக்குமே உண்டு. கலைத் துறையில் சிறிது படைத்தோரும் இலட்சக்கணக்கில் எடுத்துப் படிக்கும் சிறப்பானது நேரம் பொழுது போக்க விரும்புவோர்க்குச் சிறுகதையும் நீண்ட நேரம் பொழுதுபோக்க பயன்படுகின்றன. போக்குவரத்துச் சாதனங்கள் அதிகமாகி, வேகமாக இயங்கி வரும் இன்றைய மக்கள், கவிதை வடிவத்தில் அமைந்த காவியத்தைப் படிப்பதற்குரிய நேரமும் பொறுமையும் போன்று செயற்படுவதாய் உரைநடையில் உள்ள நாவலை ஒன்றிப் பார்க்க வல்ல உணர்வும் இல்லாத காரணத்தால், காவியம் விரைந்து எடுத்து விரும்பிப் படித்து முடிக்கின்றனர்; கதை, கதை மாந்தரின் உணர்ச்சிப் போராட்டங்கள், செயல் முறைகள் முதலியன நிறைந்த காவியத்தால் அடையும் பயனை நாவலால் அடைந்துவிடுகின்றனர். நாவல் என்றால் என்ன? நாவலின் வரையறை யாது? 

            ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் செல்லும்போதோ, பேசத் துணைக்கு யாரும் இல்லாத போதோ, வேலையின்றிச் சும்மா இருக்கும் நிலையில் தம் உள்ளத்தைக் கலை உலகில் செலுத்த விரும்பும் போதோ, நாவல் இன்றைய மக்களுக்கு எளிதில் கைகொடுத்து உதவுகின்றது. இன்று பொதுவாக, அதிகமாக விற்பனையாகும் இலக்கிய வகைகளுள் சிறு கதையும் நாவலும் அடங்கும் எனலாம். பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றோரும், நாவல்களைப் படிப்பதிலும் படைப்பதிலும் ஆராய்வதிலும் ஆழமான ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கிலாந்து நாட்டிலும் அமெரிக்க நாட்டிலும் நம் இந்திய  நாட்டிலும் நாவல் துறையானது வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கிலாந்து நாட்டில் நாவல் பொது மக்களிடையே ஆற்றல் மிகுந்த ஒரு கலைக் கருவியாகப் பயன்பட்டுள்ளது. ஆங்கில துறையானது இங்கிலாந்து நாட்டின் சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ப வேகமாக வளர்ந்தது. அந்நாட்டு மக்களும் அதனை விரும்பிப் போற்றினர். நாள்தோறும் இயங்கும் மனித வாழ்வின் பல பகுதிகளையும் சித்திரித்துக் காட்டும் சிறப்பு இதற்கு உண்டு என்று கருதப்பட்டது.

            இன்றைய நம் தமிழகத்திலும் நாவல் துறையானது. நன்கு வளர்ந்து வருகின்றது. மனித வாழ்வின் பலவகைக் கோலங்களையும் சமுதாயத்தின் பல்வகைச் சித்திரங்களையும் உளவியல் முறையில் மனிதனுக்கு ஏற்படும் போராட்டங்களையும் அரசியல் பொருளாதாரச் சிந்தனைகளின் மாற்றத்தையும் பிறவற்றையும் நமக்குக் காட்டும் வண்ணம் இன்றைய தமிழ் நாவல்கள் அமைந்துள்ளன. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் இக்கால கட்டத்தில் நாவலுக்குரிய ஒரு பொற்காலம் தோன்றுவதற்குரிய அடையாளங்கள் தெரிகின்றன. இன்று எழும் தமிழ் நாவல்கள் அனைத்துமே தரம் உடையன என்று ஏற்றுக் கொள்வதற்குத் தடை ஏற்படினும் பெரும்பாலானவை நல்ல நாவல்களாக விளங்குகின்றன எனலாம். இறவாத பேரிலக்கியங்களைக் கற்று மகிழும் ஒரு சாரார் போலவே நாவல்களைப் படித்து மகிழும் ஒரு சாராரும் இன்று ஒரு கட்சி போல வளர்ந்து வருகின்றனர். இதனால் இன்றைய நிலையில் தமிழகத்தே செல்வாக்கு மிக்க ஓர் இலக்கிய வகையாக நாவல் ஆட்சி செய்கின்றது.


நாவல் என்றால் என்ன?

          சிறு கதையிலிருந்து வேறுபட்டு. பல நிகழ்ச்சிகளையும், செயல்களையும் தன்னகத்தே கொண்டு கதை மாந்தரின் பண்புகளுக்கு ஏற்ப ஒரு கதையை வளர்த்துச் சென்று ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் உரைநடை இலக்கிய வகையே நாவலாகும். இவ்வாறு நாவலை ஓரளவு வரையறை செய்ய முடிகின்றதே அன்றி முழுமையாகவும் நாவலின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ள ஒரு வரையறை தருவது கடினம். சிறு கதையிலும், கதையும், கதை மாந்தரும் உண்டு என்றாலும் மாந்தர் பலரின் பண்பையும் தனி மனித சமுதாய வாழ்வின் நிகழ்ச்சிகளையும் நாவலில் அமைத்துக் காட்டுகின்ற அளவுக்குச் சிறு கதையில் அமைத்துக்காட்ட இயலாது. சிறுகதை அளவால் சிறியது. மிகப் பெரிய சிறுகதை உண்டு என்றாலும் நாவலைப் போல ஒரு பெரிய களத்தைக் கொண்டு இயங்குவது சிறு கதைக்கு இயலாதது.

            சிறுகதையானது, நாவலை நோக்க, கதை மாந்தர் மிகச் சிலரையே உடையது; நாவல் பலரை உடையது. சிறுகதை குறுகிய காலத்தில் படித்து முடிக்கத்தக்கது; நாவல் படிப்பதற்குச் சிறுகதையை விட அதிக நேரம் வேண்டும். சிறுகதையில் சிக்கல் குறைவு; நாவலில் சிக்கல் மிகுதி. சிறுகதை நம் கவனத்தைச் சிறிய எல்லையிலேயே நிறுத்திச் சுவை பயந்து முடிவது; நாவலோ நம் கவனத்தை ஒரு பரந்த எல்லைக்குள் வளர்த்துச் சென்று பல்வகை உணர்வுக்கும் இடனாகி முடிவது. சிறுகதை ஒரு கல் என்றால், நாவலை ஒரு மலை என்று சொல்லலாம். சிறுகதை ஒரு வீணையின் ஒரு நரம்பில் எழும் நாதம் போன்றது; நாவல் பண் கலந்த ஓர் இசைப் பாட்டுப் போன்றது. சிறுகதை சிறிய ஓவியம் போன்றது. நாவல் ஒரு பெரிய ஓவியம் போன்றது. சிறுகதை ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு அல்லது இரண்டு மூன்று ஊருக்கு அப்பால் உள்ள ஓர் ஊருக்குப் போவது போன்றது. நாவல் முந்நூறு, நானூறு மைல்கள் பயணம் செய்வது போன்றது. சிறு கதைக்கும் நாவலுக்கும் பொதுவான சில கூறுகள் உண்டு. எனினும் அமைப்பிலும் கதையைப் பின்னிக் கொண்டு செல்லும் முறையிலும் இரண்டுக்குமிடையே வேறுபாடு உண்டு. மா. இராமலிங்கம் என்பார், சிறுகதைக்கும் நாவலுக்குமிடையே யுள்ள வேறுபாட்டைக் குறித்து, சிறுகதையைப் படிப்பது வீட்டுக்குள் அமர்ந்த வண்ணம் ஜன்னல் வழியே வெளியுலகை எட்டிப் பார்ப்பது போன்றது. நாவலைப் படிக்கும் அனுபவம் . வேறானது. ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கு நடக்கும் தேர்த் திருவிழாவைச் சுற்றிக் காண்பது போல, நாவலில் பல்வேறு எனக் குறிப்பிடுவது அனுபவங்களையும் உணர்கிறோம்,” ஈண்டுச் சிந்தித்தற்குரியது.

        நாவலில் பல சிறுகதைகள் இருக்கலாம், இதனால் சிறுகதை பல சேர்ந்தால் நாவலாகும் என எண்ணலாகாது. நாவல் தனக்கென்றே அமைந்த ஒரு பெரிய களம் உடையது. ஒரு பெரிய அனுபவ ஊற்றாக அல்லது வாழ்க்கையின் வெளிப்பாடாகக் கலைஞரால் படைக்கப்படுவது; சுருங்கக் கூறின், நாவல் ஒரு பெரிய கதையையும், கதை மாந்தர் பலரையும் கொண்டது; தனி மனிதன் அல்லது சமுதாய வாழ்க்கையின் பல பகுதிகளையும் சித்திரித்துக் காட்டுவது. இங்ஙனம் சித்திரித்துக் காட்டுவதற்குக் கதையே நாவலுக்குக் களம் ஆகும். ஓவியத்திற்குத் திரை போலவும் நடனக் கலைக்கு அரங்கு போலவும் நாவலுக்குக் களமாக அமைவது கதையேயாகும்.


நாவலுக்குரிய கதையும் கதைக்கோப்பும் (Plot)

        பொதுவாக நோக்கும்போது நாவல் என்பது கதையே. இக்கதை சுவையாகவும் நாவல் படிப்போரின் உணர்வுக்கு வளமான விருந்தாகவும் அமையவேண்டும். கதையின் தொடக்கமும் நடுவும் வாசகரின் ஆர்வத்தைக் கதையின் முடிவு. வரை நீட்டிக்க வல்லதாய் இருத்தல் வேண்டும். நாவலின் கதைப் பகுதி ஒவ்வொன்றும் அடுத்துவரும் கதைப் பகுதியைப் படிப்பதற்குரிய ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். நாவலின் ஒரு நிகழ்ச்சியிலிருந்து மற்றொரு நிகழ்ச்சி வளர்ந்து செல்லும்போது கதைக்குரிய இன்றியமையா இயல்புகள் இவை. இயைந்து செல்வதாகவும் இருத்தல் வேண்டும். நிகழ்ச்சிகளின் போக்கானது கதை என்றால் அந்நிகழ்ச்சிகள் காரண காரியப்படி நிகழ்வதைக் கதைக்கோப்பு (plot) எனலாம்.

        ஈ.எம். ஃபாஸ்ட்டர் என்பார் கதைக்கும் கதைக் கோப்புக்கும் உள்ள வேறுபாட்டைப் பின்வருமாறு விளக்கியுள்ளார். கதை என்பது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அது அது நடந்த கால எல்லைக்கு ஏற்ப விளக்குவதாகும். கதைக்கோப்பு என்பதும் நிகழ்ச்சியைக் குறிப்பதே! ஆயின் காரண காரியப்படி நிகழ்ச்சி அமைவது முக்கியமாகும். ‘அரசன் இறந்தான் பின் அரசியும்  இறந்தாள்-இது ஒரு கதை. “அரசன் இறந்தான். அவ்வேதனை தாங்க முடியாமல் அரசியும் இறந்தாள்.”—இது ஒரு கதைக் கோப்பு. இதிலும் கால எல்லை காட்டப்படுகின்றது. அதே நேரத்தில் காரண காரியம் பற்றிய உணர்வு மேலோங்கி நிற்கிறது ‘ கதையில் குறிப்பிட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியைப் படிக்கும்போதும் அதற்குப் பிறகு என்ன நடந்தது? என்ன நடந்தது? என்ற அறிய ஓர் ஆவல் பிறக்கின்றது. இந்த ஆவலைத் தீர்த்துச் செல்லும் முறையில் அமைவதே கதையாகும். ஆயின் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஏன் நடந்தது?. ஏன் நடந்தது? என்று அறிய விரும்பும் ஆவலை நிறைவேற்றும் வண்ணம் அமைவது கதைக் கோப்பாகும். வேறுவகையில் கூறின், நிகழ்ச்சியின் வளர்ச்சி கதையாகவும், அவ்வளர்ச்சிக்குரிய காரண காரிய முறைமை கதைக் கோப்பாகவும் அமைகின்றது. ஒரு நாவல் ஆசிரியர் கதையை அமைப்பது எளியது. ஆயின் கதைக் கோப்பை வெற்றிகரமாக அமைப்பது அரியது. நாவலாசிரியர் முன்னதை அமைப்பதற்கு ஓரளவு அறிவு பெற்றிருந்தால் போதும். பின்னதை அமைப்பதற்கு நல்ல அறிவுக் கூர்மையும் நினைவாற்றலும் வேண்டும்.


கதைக்குரிய பொருள்

       நாவலுக்குரிய கதைப் பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. நாவலாசிரியர் தம் உள்ளம் விரும்பிய எதை வேண்டுமாயினும் கதைக்குரிய பொருளாக எடுத்துக் கொள்ளலாம். மனித வாழ்க்கையில் நிகழ்ந்த ஏதேனும் ஒரு பெரிய நிகழ்ச்சி, சிக்கல் நிறைந்த ஒருவரின் வாழ்க்கைப் பகுதி, வரலாற்றுத் தொடர்புடைய சில உண்மைகள், ஒரு நாட்டில் நீண்ட காலம் வழங்கி வந்த புராணச் செய்தி, அன்றாடப் பொது வாழ்க்கையில் நிகழும் சில நிகழ்ச்சிகள், நாவலாசிரியரின் சொந்த அனுபவங்கள், உளவியல் தொடர்புடைய சில சிக்கல்கள் முதலியன நாவலுக்குரிய கதைப் பொருளாக அமையலாம். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஓரளவு தகுதி படைத்த பல்வகை இலக்கியங்களின் கருப்பொருள்களை ஆராய்ந்து, ஒரு முடிவுக்கு வந்தார். முப்பத்தாறு வகை கதைக் கோப்பே உண்டு. என்று கண்டுபிடித்தார்.

         டேவிட் டெய்ச்சஸ் என்பவர், நாவலைக் குறித்துப் பேசும்போது ‘இன்றைய நாவலாசிரியருக்கு இரண்டு வகையான முக்கிய சிக்கல்கள் உண்டு’ என்கின்றார். ஒன்று, வாழ்க்கை நடப்பின் போக்கைப் பற்றியது. மற்றொன்று, உளவியல் பற்றியது. முன்னையது அனுபவத்தின் தரத்தோடு தொடர்புடையது; அனுபவத்தில் சிறப்பாக உள்ளதைச் சித்திரித்துக் காட்டுவது. பின்னையதாகிய உளவியல் சிக்கல் மனிதனின் உள்ளப் பாங்கினைப் பற்றியது. காலத்தோடு அதற்குரிய தொடர்புபற்றியது. இன்றைய நாவலாசிரியர் ஒரு குறிப்பிட்ட மனிதரின் மன இயல்பைத் தனித்த நிலையிலேயே வைத்துக் காட்டுவதைவிட அவ்வியல்பினைத் தோற்று வித்தற்குக் காரணமாக அமைந்த பல்வேறு வகையான நிகழ்ச்சிகளையும் சூழ்நிலைகளையும் கதையில் சித்தரித்துக் எவ்வாறாயினும் இன்றைய வாழ்க்கையின் போக்கு, பொருள்களையும் இன்றைய நாவலாசிரியர் தம் கதைப் உளவியல் ஆகிய இரண்டைச் சுற்றியும் அமையும் அத்தனைப் பொருளாகக் கொள்ள முடியும்.

 கதை மாந்தர்கள்

            ஒரு நாவலில் பல நிகழ்ச்சிகளும் பல செயல்களும் நடந்த செயலோடும் தொடர்புடையவர் யார் என்பது முக்கியமாகும். வண்ணம் உள்ளன. ஒவ்வொரு நிகழ்ச்சியோடும், ஒவ்வொரு குறிப்பிட்ட ஒரு செயல் அல்லது, நிகழ்ச்சி வளர்ந்து செல்லுவதற்குக் கதை மாந்தர் எவ்வெவ்வாறு துணை புரிகின்றனர் என்பதும் நாவலில் நன்கு விளங்க வேண்டும். இக்கதை மாந்தர் உண்மை உலகில் நடமாடுவது போலவே நாவலிலும் நடந்து கொள்கின்றனர். உண்மை உலகில் நாவலாசிரியர் தாம் கண்ட மனிதர்களின் இயல்புகளையும் பண்புகளையும் தாம் எழுதப் புகுந்த நாவலின் அமைப்பிற்கும் போக்கிற்கும் ஏற்றபடி ஓரளவு மாற்றியும் வளர்த்தும் படைத்துக் காட்டுகின்றார்; நாவலை எடுத்துப் படிப்போர் உண்மை உலக மனிதரைக் காண்பது போலவே நாவலில வரும் கதைமாந்தரையும் காணச் செய்கின்றார்.

            நாவலுக்குக் கதை மாந்தராக வருவோர் முழுக்க முழுக்க உயர்ந்த ஒரு பண்புக்கு இடமாக அமையலாம்; அல்லது குறைவும், நிறைவுமாக அமைந்த மனித இயல்புகளோடு விளங்கலாம். நாவலாசிரியர், கதையில் எத்தகைய பண்புடைய மனிதரைக் காட்ட வேண்டும் என்று விரும்புகின்றாரோ, அந்தக் குறிப்பிட்ட பண்பு நிலைக்கு ஏற்பக் கதை மாந்தரின் இயல்புகளைச் சித்திரித்துக் காட்டுகின்றார். நாவலாசிரியர் தம் நாவலில் தாம் விரும்பிய . அளவுக்குக் கதை மாந்தரைப் படைத்துக் காட்டலாம். ஆயின் கதை மாந்தர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித்தன்மையோடும் செயற கதை மாந்தரின் புறத்தோற்றங்களை மட்டும் அன்றி அவர்களின் முறையோடும் இயங்குவது இன்றியமையாதது. நாவலாசிரியர் குறிப்பிட்ட கதை மாந்தர் தொடக்கம் முதல் முடிவு வரை கதைக்கோப்பை வளர்த்தலுக்குரிய குறிப்பிட்ட சில பண்புகளோடு, அக இயல்புகளையும் வெளிப்படுத்த முயல்வது சிறப்புடையது இயல்புகளோடு இயங்குவது அவசியம் ஆகும்.

            ஓர் உண்மை உலகில் நடமாடும் மனிதர்களை நாவலில் நடமாட விடும்போது அவர்களின் பண்புச் சித்திரங்களில் தெளிந்த அமைப்பும் மெருகும் இருத்தல் வேண்டும். நாவலில் வரும் கதை மாந்தரின் செயல்கள் அவர்களின் பண்புகளுக்கேற்ற செயல்களே நம்புமாறு செய்வது நாவலாசிரியரின் என்று நாம் முக்கியபணியாகும். சாமர் செட்மாம் என்பவர், நாவலாசிரியர் கதை மாந்தரைப் படைத்துக் காட்டும் முறையைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார். எழுத்தாளர்கள் எப்பொழுதுமே மூலத்தைப் பிரதி செய்வதில்லை. தான் ஒன்றைக் காண்கிறபோது, தன்னுடைய கவனத்தைக் கவர்ந்த சிலவற்றையும், கற்பனையில் மின்னலிட்ட சிலவற்றையும் ஒன்றாகச் சேர்த்தே பாத்திரத்தை உருவாக்குகிறார்கள். தன்னுடைய படைப்பு முழுக்க முழுக்க மூலத்தைப் போலவே இருக்க வேண்டும் என்று அதிகமாகக் கவலைப்படுவதில்லை.’

            நாவலாசிரியர் உண்மை உலகில் தாம் காணும் எவரேனும் ஒருவரின் பண்புகளை மட்டுமே நாவலில் வரும் மனிதர் ஒருவரிடம் அமைக்க வேண்டும் என்பதில்லை. தாம் பார்த்த மனிதர் பலரின் பண்புகள் பலவும் கூட்டிக் கதை மாந்தர் ஒருவரை உருவாக்கலாம். வேறுவகையில் கூறின், குறிப்பிட்ட கதை  மாந்தரின் முன் மாதிரியாக ஒருவர் தான் இருக்க வேண்டும் என்பதில்லை, பலராகக் கூட இருக்கலாம். நாவலாசிரியர் தம் சொந்த வாழ்க்கையின் அனுபவங்களைக் காட்டுவதும் உண்டு. இம்முறையில் அமையும் கதை மாந்தர், கொண்டு அவற்றின் பிரதிபலிப்பாகக் கதை மாந்தரைப் படைத்துக் 6 நாவல் படிப்போரின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுத் திகழ்வர். நாவலாசிரியர் எப்படிப்பட்ட கதைப் பாத்திரத்தைப் கலந்து தானே அதுவாய், அதுவே தானாய் அமைந்து முழு ஈடுபாட்டுடன் படைக்க முயலவேண்டும். நாவலில் வரும் படைத்துக் காட்டினும் அப்பாத்திரத்தின் நிலையோடு இரண்டறக் பாத்திரங்கள் குறித்து, “எனது நாவல்களில் வரும் பாத்திரங்கள் எல்லாம் அவை ஓரிடத்திலே தலை காட்டிவிட்டு மறைவதாயினும் சரி, அல்லது கதையின் அடிமுடிவரையிலும் நடமாடுபவை சரி அவையெல்லாம்—பரிவாரம் என்னுடனேயேயிருக்கும். நான் எங்குச் சென்றாலும் என் கூடவே அவைகளும் வரும்.’ என்று ஒருவர் கூறுவது ஈண்டு நம் சிந்தனைக்குரியது.

            நாவலில் வரும் பல்வேறு பாத்திரங்களும் சில பொதுவான இயல்பினைக் கொண்டிருப்பினும் மொத்தத்தில் ஒவ்வொன்றும் ஏனைய பாத்திரங்களினின்றும் நன்கு வேறுபட்டுத் தனித்து நின்று விளங்கவேண்டும். ஒருவரைப் பற்றிய பண்பு ஓவியம் ஏனைய கதை மாந்தரின் பண்பு ஓவியங்களிலிருந்து ஏதேனும் ஒரு வகையில் நன்கு வேறுபட்டிருத்தல் வேண்டும். இல்லையேல் கதை மாந்தர் படைப்பால் வரும் சுவை கெட்டுவிடும். கதை மாந்தரை இப்படித்தான் படைத்துக் காட்ட வேண்டும் என்று முடிந்த முடிவாக எதுவும் சொல்ல இயலாது. நாவலாசிரியர் பலராக, அவர்களின் மனநிலையும் நோக்கமும் பல படியாக அமைகின்றன. ஆதலின் அன்னோரால் படைக்கப் பெறும் கதை மாந்தரும் பலபடியாக இருக்கலாம். கதை மாந்தர் உண்மை உலகில் காண்பது போலவே இருப்பினும் நாவலுக்குரிய நோக்கத்தையும் போக்கையும் வளர்த்துச் செல்வதற்குரிய பண்பிலே நன்கு ஊன்றி நின்று அப்பண்பு நாவலின் முடிவு வரைக்கும் சிதையாவாறு விளங்கவேண்டும். இதனை நோக்கும்போது நாவலில் வரும் கதை மாந்தர் அன்றாட வாழ்வில் நாம் காணும் மனிதரைப் போல இருப்பினும் அந்நிலைக்கு ஓரளவு அப்பாற்பட்டும் நிற்கின்றனர்
எனலாம்.

இருவகைக் கதை மாந்தர்

            நாவலில் இடம் பெறும் கதை மாந்தரை ஈ.எம். ஃபாஸ்ட்டர் (Round Characters) இருவகைப்படுத்துகின்றார். ஒருவகையினரை முழுநிலை மாந்தர் என்றும் மற்றொரு வகையினரை ஒரு நிலை மாந்தர் (Flat Characters) என்றும் குறிப்பிடுகின்றார்.

            முழு நிலை மாந்தர் என்போர், நாவலின் தொடக்கம் முதல் முடிவுவரை வருபவராகவும், பண்பு வகையில் முழுப்பரிணாம வளர்ச்சியுடையவராகவும், ஆழமான குறிக்கோள் கொண்டவராகவும் அமைவர்; நாவலைப் படித்து முடிக்கும்போது, அக்கதை மாந்தரைப் பற்றிய முழுமையான ஒரு பண்பு ஓவியம் நமக்குக் கிடைக்கின்றது; எந்தச் சில பண்புகள் ஒரு குறிப்பிட்ட கதை மாந்தரிடத்து ஆசிரியரால் அமைக்கப்பட்டிருக்கின்றனவோ, அந்தச் சில பண்புகளுக்கேற்பச் செயற்பட்டு நல்ல குணச்சித்திரங்களாக விளங்குவர். திரு.மா. இராமலிங்கம் முழு நிலை மாந்தர் குறித்துக் கூறுவது ஈண்டு எண்ணத்தக்கது. “முப்பரிமாணக் காட்சி தருவார்கள் இவர்கள். உருவத்தாலும், கருத்தாலும் மெல்ல மெல்ல மாறி வளர்ந்து முழு நிலை மாற்றம் கொள்வர். இவர்களது தோற்றம் மட்டும் அல்லாமல் உள்ளம், உணர்ச்சி, தாபம், கொள்கை, கோட்பாடு எல்லாமே முறையான வளர்ச்சியைப் பெற்று மிளிரும், ‘இதய நாதம் கிருஷ்ண பாகவதர் ‘அகல் விளக்கு’ சந்திரன், ‘சித்திரப் பாவை’ ‘ஜீவகீதம்’ நச்சி, ‘வளைக்கரம்’ சுஜாதை முதலான பாத்திரங்களை ஆனந்தி, ‘பொன் விலங்கு’ பாரதி, ‘செம்பருத்தி, சட்டநாதன்,
உதாரணமாகக் காட்டலாம்.

            முழு நிலை மாந்தர் நாவலில் இடம் பெறும்போது, அவர்களின் மன நிலையில் ஏற்படும் மாற்றங்களையும், மன வளர்ச்சியையும் பண்பு நலன்கள் மேன்மேலும் வளர்ந்து சென்று நிலையை அவர்கள் அடையும்போது, வாசகர், அவ்வுச்ச நிலை ஓர் உச்ச நிலையை அடைவதையும் காணலாம். இவ்வுச்ச மிக இயல்பாக அமைந்த ஒன்று எனவும், குறிப்பிட்ட கதை மாந்தரைப் பொறுத்த அளவில் தவிர்க்க முடியாத ஒன்று எனவும் உணர வைப்பது நாவலாசிரியரின் முக்கிய கடமையாகும். அவ்வாறு உணரவைக்க முடியவில்லை எனில் முழுநிலை மாந்தர் ஒரு நிலை மாந்தராகப் போய்விடுவர். கூற்றுப்படி, ஈ.எம். ஃபாஸ்டர் அடையாளம் முழுநிலை மாந்தர்க்குரிய அம்மாந்தரைப் பற்றிய ஓவியம் அறிவார்ந்த முறையில் படிப்போர்க்கு வியப்பூட்டுவதே ஆகும். வியப்பூட்டவே இல்லையெனில், ஒரு நிலை மாந்தர் என்று அவரைக் கொள்ள வேண்டியதுதான். அறிவார்ந்த முறையில் நம்மைத் தெளிவுறுத்த முடியவில்லையெனில் ஒரு நிலைமாந்தராக இருந்தும் முழுநிலை மாந்தர் போலக் காட்டிக் கொள்வதாக நாம் கொள்ள வேண்டியதுதான். முழுநிலை மாந்தர், நாவலைப் பொறுத்த அளவில் ஒரு முழுமையான வாழ்வை உடையவர் ஆவர்.’

            ஒரு நிலை மாந்தர், மேற்கூறிய முழுமையான மாந்தரினின்றும் வேறுபட்டோர் ஆவர். இவர்கள் நாவலில் ஆழமான பண்பின் பிரதிபலிப்பு ஆகாமல் ஏதேனும் ஒரு வேடிக்கையான இயல்பினைவராய் இடை இடையே
 வந்து போவர். நகைச் சுவையாக ஏதாவது ஒன்றைப் பேசுவது, வேடிக்கையாக ஏதாவது ஒன்றைச் செய்துவிட்டுப் போவது. மனிதரிடத்துப் பரவலாக வேரூன்றியிருக்கும் ஒரு தீய இயல்பின் விபரீதமாக ஏதாவது ஒரு கேட்டைச் செய்துவிட்டு நகருவது வடிவமாக வந்து செயல்படுவது போன்ற தன்மைகளை ஒரு நிலை மாந்தரிடத்துக் காணலாம். சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட பழக்க வழக்கம் கதை மாந்தர் ஒருவரிடத்தே அமைந்து அவர் வரும்போதெல்லாம் அப்பழக்க வழக்கமும் கூடவே வருவதுண்டு. எப்போதோ சில சமயங்களில் இத்தகையோர் நாவலில் தோன்றினும் குறிப்பிட்ட அந்தப் பழக்க வழக்கம் அவருடன் சேர்ந்தே இடம் பெறுவதால் அவரை எண்ணும் போதெல்லாம் எண்ணி அப்பழக்க வழக்கத்தோடு சேர்த்தே நாமும் மகிழுகின்றோம். இவரிடத்தில் அமைந்த சில தனிப்போக்குகள் மட்டும் சுவையாக அமைந்து வாசகரை இன்புறுத்தும். ஈ. எம். ஃபாஸ்ட்டர் என்பார், ஒரு நிலை மாந்தரைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார், “பதினேழாம் நூற்றாண்டில் ஒரு நிலை மாந்தர் வேடிக்கை மனிதர் என அழைக்கப்பட்டனர். அவர்களை ஒரு குறிப்பிட்ட வகையாகக் கொள்ளலாம். அல்லது வேடிக்கை மனிதர் அழைக்கலாம். நாவலாசிரியர் இம் மனிதரைப் படைக்கும்பொழுது ஒரே ஒரு குறிப்பிட்ட கருத்து அல்லது இயல்போடு மட்டுமே படைத்துக்காட்டுகின்றனர். இவரிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தன்மைகள் இருக்கத் தொடங்குமாயின் இவர்கள் முழு நிலை மாந்தர் ஆவதற்குரிய தகுதியைப் பெறத் தொடங்கி விடுவர்.

நாவலாசிரியர் கதை மாந்தரின் பண்புகளையும் செயல்களையும் வெளிப்படுத்துவதற்குப் பின் வரும் முறைகளைக் கையாளலாம்.

1.ஆசிரியர் கதை மாந்தரைச் சார்புடன், அல்லது சார்பின்றிப் பார்க்கின்றவர் என்ற முறையில் கதைப் பாத்திரங்களுக்கு அப்பாற்பட்டுத் தனித்து நின்று கதை மாந்தரைக் குறித்து விரித்து விளக்கிச் சொல்லலாம்.

2.ஆசிரியர் ஒவ்வொரு கதை மாந்தராகவும் தாமே மாறி நின்று, ஆனால் வெளிப்படையாகத் தெரியாமல், உள்ளுரயிருந்து கதை மாந்தரைச் சித்திரிக்கலாம்.

3.கதை மாந்தரில் ஒருவராக ஆசிரியர் தம்மையே
மாற்றிக் கொண்டு, மற்றவர்களின் உள்நோக்கங்களைப் பற்றி ஓர் ஆவல் எழும் வண்ணம் கதை மாந்தரைக் காட்ட முயலலாம்.

 4.இவையல்லாத, ஆயின், இவற்றுக்கு இடைப்பட்ட வேறு சில நிலைகளும் உண்டு.

கதை மாந்தரைப் படைப்பதில் சில பொதுவான முறைகள்

            நாவலாசிரியர் தம் நாவலுக்குரிய கதை மாந்தரைப் படைப்பதில் மிக்க சுய உரிமை கொள்ள முடிகின்றது. பாட்டு வடிவிலுள்ள காவியம், நாடகம் ஆகியவற்றில் கதை மாந்தரைப் படைப்பதற்குரிய அத்துணை அருமைப்பாடு நாவலில் படைக்கும் போது இல்லையெனலாம். ஆசிரியர் தாம் நினைத்தபடி சிலரைத் தம் கற்பனை உலகில் படைக்கலாம்; ஒவ்வொருவருக்கும் தாம் விரும்பியபடி ஒரு பெயரைத் தரலாம்; ஒவ்வொருவரையும் இன்ன இன்ன பால் வகையைச் சார்ந்தவர் என வரையறுக்கலாம்; ஒவ்வொருவருக்கும் சில குறிப்பிட்ட தோற்றங்களையும், நடை உடை பாவனைகளையும் வழங்கலாம்; தக்க குறியீடுகளைப் பயன்படுத்திக் கதை மாந்தரைப் பேச வைக்கலாம்; அவர்களுள் சிலரை நிலையான பண்பு உடையோராக நிறுத்தலாம். கதை மாந்தருடைய மனத்தின் அடித் தளத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புகள், அவர்கள் காணும் கனவுகள், அவர்கள் பெறும் இன்ப துன்பங்கள், கதை மாந்தரிடத்து வெளிப்படையாகச் சொல்ல முடியாதபடி அமைந்திருக்கும் மிக இரகசியமான சில மனோபாவங்கள் இவ்வண்ணம் மனித இயற்கையை வெளிப்படுத்துவது நாவலின் ஆகியவற்றை ஆசிரியர் திறம்பட வெளிப்படுத்த முயல வேண்டும். தலையாய பணிகளுள் ஒன்றாகும்.

            நாவலில் வரும் கதை மாந்தர் உள்ளும் புறமுமாக இன்னின்னவாறு உள்ளனர் என்பது நமக்கு நன்கு விளங்குவதால் வரலாற்றில் வரும் மாந்தரைவிடத் தெளிவாகக் காணப்படுகின்றனர்; நம் நெருங்கிய நண்பர்களையும் விட நெருக்கமாகத் தெரிகின்றனர்; அவர்களைப் பற்றிச் சொல்ல முடிவதெல்லாம் சொல்லப்பட்டு விடுகின்றன; அவர்கள் குறைவுடையவர்களாக இருந்தாலும் சரி, உண்மை இல்லாதவர்களாய் இருந்தாலும் சரி, அவர்களைப் பற்றிய இரகசியம் எதுவும் இல்லை. உண்மை உலகில் நம் நண்பர்கள் கூடச் சில இரகசியங்களை வைத்திருப்பார்கள்; வைத்திருத்தல் வேண்டும். காரணம் இந்த நிலவுலகத்தில் வாழ்க்கைக்குரிய கட்டுப்பாடுகளில் இரகசியமும் ஒன்றாகும். நாவலில் இந்த நிலை இல்லை.

உரையாடல்

            நாவலில் இடம் பெறும் உரையாடல்கள், கதை மாந்தரின் இயல்புகளையும் பண்புகளையும் நன்கு வெளிப்படுத்து வனவாகவும் விறு விறுப்பு உடையனவாகவும் இருத்தல் வேண்டும். உரையாடலின் எந்த ஒரு பகுதியும் கதையின் விளக்கத்திற்கோ வளர்ச்சிக்கோ துணை செய்வதாய் இருத்தல் வேண்டும். நாவலைப் படிப்போர்க்குச் சலிப்பு ஊட்டக் கூடிய எதுவும் உரையாடலில் இடம் பெறலாகாது. நாடகத்தில் அமைவது போலவே நாவலிலும் உரையாடல் சுவையாக அமைய வேண்டும்; கதை மாந்தரின் செயல்களையும் கதை நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்தும் பாங்கிலும் அமையலாம்;

            கதை மாந்தரின் உள்ளப்பாங்கு, நடைமுறை, அன்னோர் வாழும் செயற்படும் சூழ்நிலை, நிகழ்ச்சியின் போக்கு முதலியவற்றிற்கு ஏற்ற வண்ணம் பொருத்தமாகவும் அமைய வேண்டும்.

சூழலமைப்பு (Settings)

            நாவல்கள் பலவகைப்படும். நிகழ்ச்சிகள் மிக்க நாவல் (novel of action), பண்பு நலன் விளக்கும் நாவல் (novel of character) விளக்கமும் வருணனையும் மிக்க நாவல் (picturesque novel) நாடகப் போக்கினதாகிய நாவல் (dramatic novel) என நாவல் நால்வகைப்படுமென்பர் திறனாய்வாளர். 13 இவற்றுள் எந்த வகை நாவலை ஆசிரியர் எழுதுகின்றாரோ அந்த வகைக்கு ஏற்றபடி பொருத்தமாகச் சூழலமைப்பும் அதன் விளக்கமும் இடம்பெற வேண்டும். வரலாற்று நாவலைப் பொறுத்த அளவில் அந்த நாவலால் குறிக்கப்படும் காலச் சூழ்நிலைக்கேற்ற பின்னணியே அமைதல் வேண்டும். அக்கால மக்களின் நடை உடை பழக்க வழக்கங்களையே கதையின் பின்னணியில் நாவலாசிரியர் அமைத்தல் வேண்டும்.

நன்றி

இலக்கியத் திறனாய்வு, டாக்டர் சு.பாலச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here