தொல்காப்பியத்தின் நூன் மரபின் இடமும் சிறப்பும்

தொல்காப்பியத்தின்-நூன்-மரபின்-இடமும்-சிறப்பும்

தொல்காப்பியத்தின் நூன் மரபின் இடமும் சிறப்பும்

மூவகைக் கருத்துகள்

            தொல் காப்பிய எழுத்ததிகார முதல் இயலாகிய நூன்மரபின் பெயர்க்காரணம், தொல் காப்பியத்தில் அதன் இடம். சிறப்பு ஆகியவை பற்றிப் பழைய உரையாசிரி யர்களிடையேயும் இன்றைய ஆய்வாளர்களிடையேயும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

            இவ்வேறுபட்ட கருத்துகளை மூன்று வகைப்படுத்தலாம். அவை,

1.எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியம் என்னும் நூல் முழுமைக்கும் பொதுவான இலக்கணம் கூறுவது. அதனால் நூன்மரபு எனப்பட்டது.

2.எழுத்ததிகாரத்திற்கு மட்டும் உரிய இலக்கணத்தினைத் தொகுத்து உணர்த்துவது.

3. நூலினது மரபுபற்றிய பெயர்களைக் கூறுவதனால் நூன்மரபு என்னும் பெயர் பெற்றது.   என்பன.

நச்சினார்க்கினியர் கருத்து

            மேற்கூறிய மூன்றனுள் முதற்கருத்தினை நச்சினார்க்கினியர் ஒருவர் மட்டுமே கொண்டுள்ளார். அவர் உரைப்பகுதி பின்வருமாறு:

 ‘இத்தொல்காப்பியம் நூற்கு மரபாந்துணைக்கு வேண்டுவனவற்றைத் தொகுத்து உணர்த்தின மையின் நூன்மரபு என்னும் பெயர்த்தாயிற்று.

            ஆயின் நூல் என்றது ஈண்டு மூன் றதிகாரத்தையும் அன்றே? இவ்வோத்து மூன்றதிகாரத்திற்கும் இலக்கணமாயவாறென்னை யெனின், எழுத்துக்களது பெயரும் முறையும் இவ்வதிகாரத்திற்கும் செய்யுளியற்கும் ஒப்பக் கூறியது. ஈண்டுக் கூறிய முப்பத்து மூன்றினைப் பதினைந்தாக்கி ஆண்டுத் தொகை கோடலின் தொகை வேறாம்.  அளவு, செய்யுளியற்கும் இவ்வதி காரத்திற்கும் ஒத்த அளவும் ஒவ்வா அளவும் உளவாகக் கூறியது. குறிற்கும் நெடிற்கும். கூறிய மாத்திரை இரண்டற்கும் ஒத்த அளவு. ஆண்டுக்கூறும் செய்யுட்கு அளவு கோடற்கு ஈண்டைக்குப் பயன்தராத அளபெடை கூறியது ஒவ்வா அளவு. அஃது ‘அள பிறந்துயிர்த்தலும்’ (67.33) என்னும் சூத்திரத்தோடு ஆண்டு மாட்டெறியு மாற்றான் உணர்க. இன்னும் குறிலும் நெடிலும் மூவகையினமும் ஆய்தமும் வண்ணத்திற்கும் இவ்வதிகாரத்திற்கும் ஒப்பக் கூறியன. குறைவும் இரண்டற்கும் ஒக்கும். கூட்டமும் பிரிவும் மயக்கமும் இவ் வதிகாரத்திற்கே உரியவாகக் கூறியன. ‘அம் மூவாறும்’ (67.22) என்னும் சூத்திர முதலியவற்றான் எழுத்துகள் கூடிச் சொல்லாமாறு கூறுகின்றமையின் சொல்லதி காரத்திற்கும் இலக்கணம் ஈண்டுக் கூறினா ராயிற்று. இங்ஙனம் மூன்றதிகாரத்திற்கும் இலக்கணம் கூறுதலின் இவ்வோத்து நூலினது இலக்கணம் கூறியதாயிற்று. நூல் என்றது தொல்காப்பியம் என்னும் பிண்டத்தை” (எ.1.நச்சி.உரை).

            நச்சினார்க்கினியர் கருத்தைப் பின் வருமாறு தொகுத்துக் கூறலாம்: நூன்மரபு மூன்றதிகாரங்களாய் அமைந்த காப்பியம் என்னும் பிண்டவகை தொல் நூல் முழுமைக்கும் மரபை அல்லது இலக்கண மாயவற்றைத் தொகுத்து உணர்த்துகிறது. அது பின்வருமாறு:

(அ)எழுத்துக்களது பெயர், முறை ஆகி யன செய்யுளியற்கும் எழுத்ததி காரத்திற்கும் பொதுவாகக் கூறியது.

(ஆ) அளபில் குறிற்கும், நெடிற்கும் கூறி யது பொது. அளபெடை செய்யு ளியலை எதிர்நோக்கியே கூறப் பட்டது.

(இ)குறில், நெடில், வல்லெழுத்து, மெல் லெழுத்து, இடையெழுத்து, ஆய்தம் ஆகியவை செய்யுளியலில் வண்ணத் திற்கும் எழுத்ததிகாரத்திற்கும் பொது.

(ஈ) எழுத்துக்களின் மாத்திரைக் குறைவைப்பற்றிய செய்திகள்
எழுத்து, பொருள் இரண்டதிகாரத்திற்கும் பொது.

(உ) எழுத்துக்களின் கூட்டம் (உயிரும் மெய்யும் கூடுதல்), பிரிவு போன்ற செய்திகள் எழுத்ததிகாரத்திற்கே உரியவை.

(ஊ) மயக்கம் எழுத்துக்கள் கூடிச் சொல் லாவதைக் கூறுவதால், எழுத்ததி காரத்திற்கும் சொல்லதிகாரத்திற்கும் பொது.

இளம்பூரணர், வேங்கடராஜுலு ரெட்டியார் கருத்து

            இரண்டாவது கருத்தினை இளம்பூரணரும் வேங்கட ராஜுலு ரெட்டியாரும் கொண்டுள்ளனர். இளம்பூரணர், “இவ்வதிகாரத்திற் சொல்லப்படும் எழுத்திலக்கணத்தினை ஓராற்றான் தொகுத்து உணர்த்துதலின் நூன்மரபு என்னும் பெயர்த்து. இதனுட் கூறுகின்ற இலக்கணம் மொழியிடை எழுத்திற்கன்றித் தனி நின்ற எழுத்திற்கென உணர்க” (எ.1.இளம்.) என்றுகூறுகிறார்.
            வேங்கடராஜுலு ரெட்டியாரும் முதற்கண் தனி (1944), “இவ்வதிகாரத்தின் இவ்வியலில் பெரும்பாலும் யெழுத்துக்களின் மரபினையுணர்த்துதலின் இவ்வியல் நூன்மரபு என்னும் பெயர் பெற்றது” என்று கூறி, மேலும் சிவஞான முனிவர் கருத்தை மறுத்தபின், தொடர்ந்து “எழுத்துக்களின் இயல்பே இவ்வியல் முழுவதும் கூறப்பட்டதனால் இஃது எழுத்து மரபு என்றவாறாயிற்று என்றல் அமைவுடையது, மொழியின் இயல் புணர்த்திய இயல் மொழி மரபு எனப் பட்டவாறுபோல” என்று கூறுகிறார். பின்னர், இவ்வியல் தனி எழுத்துக்களின் இயல்பினையே உணர்த்தியது என்பதனை, இவ்வியல் செய்தி முழுவதையும் ஒன்றன் பின் ஒன்றாகக் கூறி விளக்குகிறார். ஆயினும், அவரே “மேற்கூறியவாறு இவ்வியல் முழுவதும். எழுத்தின் இலக்கணமே கூறப்பட்டதாயின், இவ் வியலுக்கு எழுத்து மரபு எனப் பெயரிடாது நூன் மரபு எனப் பெயரிட்டது என்னையெனின், நூல் என்றது ஈண்டு எழுத்தினையே குறித்தது என்று கோடல் அமைவுடையதாகும். இப் பொருட்குத் தக்க மேற்கோள் இப்போழ்து அறியப் பட்டிலதாகலின் இன்னும் ஆராய வேண்டுவதாயுளது” (சிவலிங்கனார் பதிப்பு 1980:28-30) எனக் கூறி முடிக்கிறார்.

சிவஞானமுனிவர் கருத்து 

            மூன்றாவது கருத்து சிவஞான முனிவரால் கூறப்பட்டு சுப்பிரமணிய சாஸ்திரியாரால் தழுவப்பட்டது. சிவஞான முனிவர் தொல்காப்பிய முதற் சூத்திரவிருத்தியில் (ஆறுமுக நாவலர் பதி. 1956:26,27), ‘அஃதாவது, நூலினது மரபு பற்றிய பெயர் கூறுதல். எனவே, இதுவும் இவ் வோத்துட் கூறும் சூத்திரங்களுக்கெல்லாம் அதிகாரம் என்பது பெறப்பட்டது. மலை, கடல், யாறு, குளம் என்றற்றொடக்கத்து உலக மரபு பற்றிய பெயர் போலாது, ஈண்டுக் கூறப்படும் எழுத்து, குறில், நெடில், உயிர், மெய் யென்றற்றொடக் கத்துப் பெயர்கள் நூலின்கணாளுதற் பொருட்டு முதனூலாசிரியனாற் செய்து கொள்ளப்பட்டமையின், இவை நூன்மரபு பற்றிய பெயராயின வென வறிக. ஏனையோத்துக்களின் விதிக்கப்படும் பெயர்களும் நூன்மரபு பற்றி வரும் பெயராதல் உய்த்துணர்ந்து கோடற்கு முன்வைக்கப்பட்டது.

            “இப்பெற்றியறியாத உரையா சிரியர்முதலியோர். இவ்வதிகாரத்தாற் சொல்லப்படும் எழுத்திலக்கணத் தினை ‘ஒராற்றான் தொகுத்துணர்த்துதலின் நூன் என்னும் பெயராயிற்று என் மரபு பாரும், இவ்வோத்துட் கூறப்படும் விதிகள் மூன்றதிகாரத்திற்கும் பொதுவாகலின் நூன் மரபென்னும் பெயராயிற்று என்பாரும் ஆயினார். இவ்வதிகாரத்துட் கூறும் எழுத்திலக்கணத்தைத் தொகுத் துணர்த்தலாற் பெற்ற பெயராயின் அதிகார மரபெனப்படுவதன்றி நூன் மரபெனப் படாமையானும், இவ்வோத் துட் கூறப்பட்டன செய்கையோத்திற்கும் பொருளதிகாரத்துட் செய்யுளியல் ஒன்றற்குமே கருவியாவதன்றி மூன்றதி காரத்திற்கும் பொதுவாகாமையானும் அவை போலியுரையாதலறிக” என்கிறார். இவரைத் தழுவியே சுப்பிரமணிய சாஸ்திரியாரும் (1937:3) ‘நூற்கு இன்றியமையாத மரபுபற்றிய குறிகளை விதிக்கும் இவ்வியலுக்கு “நூன்மரபு” எனப் பெயரிட்டது மிகப் பொருத்தம்’ என்று கூறுகிறார்.


            சிவஞான முனிவர் இளம்பூரணர் கருத்தைப் பெயர்ப் பொருத்தமின்மை என்ற அடிப்படையில் மறுக்கிறார். நச்சினார்க்கினியரின் ‘நூல் முழுமைக்கும் இலக்கணம் கூறுவது’ என்ற கருத்தை முற்றப்பொருந்தாமை என்ற அடிப் படையில் மறுக்கிறார். எழுத்ததிகாரப் புணர்ச்சி பற்றிப் பேசும் இயல்களுக்கும், பொருளதிகாரத்தில் செய்யுளியலுக்குமே யன்றி மற்ற தொல்காப்பியப் பகுதிகளுக்கு நூன்மரபு பொதுவன்று என்பது சிவஞான முனிவர் கருத்து. ஆனால், சிவஞான முனிவரது ‘நூலினது மரபு பற்றிய பெயர்களைக் கூறுவது என்ற கருத்தை வேங்கடராஜுலு ரெட்டியார் மறுக்கி றார். ஆயின், சிவஞான முனிவர் கூறியவாறு நூலினது மரபு பற்றிய பெயர் கூறுதலின் நூன்மரபு எனப்பட்டது” என்று கொள்ளுதல் அமையும் எனின், அவ்வாறு கோடல் ஓராற்றான் அமையுமாயினும், அவர் கூறியவாறு (எழுத்தின் பெயர்க ளேயன்றி) நூன்மரபு பற்றிவரும் பெயர் அனைத்தும் ஈண்டுக் கூறப்படாமை குன்றக் கூறலாம் ஆதலானும், இவ்வியலுட் கூறுவது தனிநின்ற எழுத்துக்களின் இலக்கணமேயாகலானும், அதுவும் உண்மைப் பொருளாதல் இன்று” (சிவலிங்கனார் பதி. 1980:29). இதன் கருத்து, எழுத்திலக்கணம், பற்றிய மரபுப் பெயர்கள் மட்டுமே இங்குக் கூறப்பட்டனவேயன்றிச் சொல்லிலக்கணம், பொருளிலக்கணம் பற்றிய மரபுப் பெயர்கள் இங்குக் கூறப்படாமையின் நூலினது மரபு பற்றிய பெயர்களைக் கூறுவது இவ்வியல் என்று கொள்வது பொருந்தாது என்பதாகும்.

ஒப்பீடு

            மேலே கூறப்பட்ட மூவகைக்கருத்துக்களில், இளம்பூரணர் கருத்தைப் (1.2) பெயர்ப் பொருத்த மின்மை அடிப்படையில் சிவஞான முனிவர் மறுத்தார் (1.3). இளம் பூரணரைத் தழுவும் வேங்கடராஜுலு ரெட்டியாரும் இப்பெயர்ப் பொருத்த மின்மையை உணர்ந்து, இங்கு நூல் என்பது எழுத்தினையே குறித்தது எனக் கொள்ள வேண்டும் என அமைதி கூறுகிறார். இருப்பினும் அப்பொருளில் ஆளப்பட்ட மேற்கோள் இல்லை என்பதை அவர் ஒத்துக் கொள்கிறார். இது அவர் கருத்தில் வன்மை இல்லை என்பதைக் காட்டி விடுகிறது.

            பெயர்ப் பொருத்தமின்மை மாத்திரமன்றி, “எழுத்திலக்கணத்தை தொகுத்துணர்த்துதல்” ஓராற்றால் (எ.1.இளம்) என்ற கருத்தும் பொருத்த மில்லாததே. எழுத்ததிகாரப் பிறப்பியல் செய்திகள் இங்குப் பேசப்படவில்லை. புணர்ச்சிபற்றிப் பேசும் இயல்களுக்கு இங்குக் கூறப்பட்ட செய்திகள் கருவியாவ தன்றி அவற்றின் செய்திகள் இங்குத் தொகுத்துணர்த்தப் படவில்லை. எனவே இவ்வகையிலும் இளம்பூரணர் கருத்து ஏற்புடையதாகத் தோன்றவில்லை.


            “நூலினது மரபு பற்றிய பெயர் கூறுதல்” என்ற சிவஞான முனிவர் கருத்து வடமொழி இலக்கண மரபினை உட்கொண்டு கூறப்பட்டது. சம்ஜ்ஞைகள் எனப்படும் இலக்கணக் கலைச்சொற்களை முதற்கண் விளக்குவது பாணினீய மரபு. அம்மரபில் நல்ல பயிற்சியுடைய சிவஞான முனிவர் தொல்காப்பிய முதல் இயலிலும் அம்மரபே பின்பற்றப் பட்டிருப்பதாகக் கருதுகிறார். அதே போன்ற பின்னணி யுடைய சுப்பிரமணிய சாஸ்திரியாரும் (1939:3) இக்கருத்தைத் தழுவி உரை செய்தார். இக்கருத்து பொருத்தமற்றது என்பதை வேங்கடராஜுலு ரெட்டியார் மற்ற அதிகாரங்களுக்குரிய மரபுப் பெயர்கள் கூறப்படாமையைக் காட்டி மறுக்கிறார் (1.3). மற்ற அதிகாரங் களுக்குரிய மரபுபற்றிய பெயர்களே யன்றி எழுத்ததிகாரத்திற்குரிய ஓரெழுத்தொரு மொழி, ஈரெழுத்தொருமொழி, தொடர் மொழி (எ.45), புணர்ச்சி (GT.142). நிறுத்த சொல், (6.108). திரிபு. இயல்பு (67.109).. மெய்பிறிதாதல், மிகுதல், குறித்துவருகிளவி குன்றல் (எ.110), வேற்றுமை, அல்வழி, சாரியை (எ.113) போன்ற பல மரபு பற்றிய குறியீடுகளும் நூன்மரபில் கூறப் படவில்லை எனவே நூல் முழுமைக்கும் உரிய மரபுப் பெயர்கள் மட்டுமன்றி எழுத்ததிகாரமுழுவதற்கும் உரிய மரபு பற்றிய பெயர்கள் கூட முற்றிலுமாகப் பேசப்படவில்லை என்ற அடிப்படையில் சிவஞான முனிவர் கருத்து பொருந்தாதாகின்றது.

            நூன்மரபு தொல்காப்பியம் தொகுத்துணர்த்துவது என்னும் நூல் முழுமைக்கும் இலக்கண மாயவற்றைத் என்று கூறும் நச்சினார்க்கினியரே, மூவகை உரையாசிரியர்களுள் ஒன்றுக்கு மேற்பட்ட சான்றுகளைக் காட்டுகிறார். அவை எவ்வாறு பிற அதிகாரங்களுடன் தொடர்புடையன என்பதையும் பொருத் திக் காட்டுகிறார் (1.1). பெயர்ப் பொருத்தத்தை. தொலகாப்பியம் எவ்வகை நூலுள் அடங்கும் என்பதைக் கூறியதன் மூலம் குறிப்பாக உணர்த்துகிறார். ஆனால், சிவஞான முனிவர், அக்கருத்தை, இவ்வியலில் கூறப்பட்டவை செய்கை யோத்துக்களுக்கும் (புணர்ச்சி பேசும் இயல்கள்) செய்யுளியலுக்கும் மட்டும் கருவியாவதன்றி மூன்றதிகாரத்திற்கும் பொதுவாகாது எனக் கூறி மறுக்கிறார். எனினும் இம்மறுப்பு சொல்லதிகாரத் திற்கும் நூன் மரபிற்கும் நச்சினார்க்கினியர் காட்டிய தொடர்பை உட்கொள்ளவில்லை.

தொல்காப்பிய ஆய்வின் அடிப்படை

            மாறுபட்ட இக் கருத்துக் களில் முற்றிலும் பொருத்தமானது எது? அல்லது இம்மூன்றும் அல்லாத வேறொரு பொருத்தமான விளக்கம் கூற இயலுமா? என்று முடிவு செய்யுமுன் தொல்காப்பிய ஆய்வின் சில அடிப்படைக் கூறுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.

            தொல்காப்பியம் எழுதப்பெற்றுப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, இன்று நமக்குக் கிடைத்துள்ள தொல்காப்பிய உரைகள் எழுதப்பெற்றன. இவ்வுரைகளின் துணையின்றித் தொல்காப்பியத்தை நாம் புரிந்துகொள்ள இயலாது எனினும், உரையாசிரியர் கருத்தையே தொல் காப்பியர் கருத்தாகக் கொள்வது. முடிந்த முடிபாகக் கொள்வதும் அவர் கருத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளத் தடையாய் அமையும். தொல்காப்பியத்தைத் தொல் காப்பியத்தின் மூலமே-அதாவது முன்னும் பின்னும் அந்நூலில் கூறப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையிலேயே புரிந்துகொள்ள முயலுவதும் அதற்குத் துணையாக மாத்திரம் உரைகளைக் கொள்வதுமே தொல்காப்பிய ஆய்வை அறிவியல் அடிப்படையில் கொண்டு செல்வதுடன் தொல்காப்பியர் கருத்தை உணரவும் துணைபுரியும். இவ்வடிப்படை யில், நூன்மரபு பற்றிய உரையாசிரியர் கொள்கைகளை மதிப்பீடுசெய்ய நூல் பற்றிய தொல்காப்பியர் கொள்கை யையும், ‘மரபு’ என்ற பெயரைத் தொல் காப்பியர் பயன்படுத்து மாற்றையும், நூன்மரபில் கூறப்பட்ட செய்திகளுக்கும் தொல்காப்பியத்தின் மற்ற பகுதிகளுக்கும் உள்ள தொடர்பையும் ஆராய்தல் அவசி யமாகிறது. இவ்வாய்வின் பயனாய்க் கிடைக்கும் முடிபுகள் நூல் மரபின் பெயர்ப்பொருத்தம், தொல்காப்பியத்தில் அதன் இடம், உரையாசிரியர் கருத்துகளின் பொருத்தம் ஆகியவற்றை இயல்பாக விளக்கிவிடும்.

தொல்காப்பியரின் நூல் அடிப் பற்றிய கொள்கை

            தொல்காப்பியர் நூல் பற்றிய செய்திகளைப் பொருளதி காரச் செய்யுளியல், மரபியல் ஆகிய இரு இயல்களில் பேசுகிறார்.செய்யுளியலானது நூல்களை, உள்ளமைப்பின் படையில் வகைப்படுத்துகிறது (பொ. 468-474). மரபியலானது, நூல்களைப் பிற நூல்களின் சார்பின்மை, சார்புடைமை என்ற அடிப்படையில் முதனூல், வழிநூல் என வகைப்படுத்தி, பின்னர், நூலின் உள்ளமைப்பினை விரிவாகக் கூறுகிறது (பொ.639-656). இவ்விரண்டு இயல்களிலும் கூறப்பட்ட செய்திகளில் செய்யு ளியலில் கூறப்பட்ட செய்திகளே இங்குத் தொடர்புடையன.

            நூலின் பொது இயல்பு பின்வரு மாறு: “நூல் என்று சொல்லப்பட்டது எடுத்துக்கொண்ட பெரருளோடு முடிக்கும் பொருண்மை மாறுபடாமல் கருதிய பொருளைத் தொகையானும் வகையானும் காட்டி. அதனகத்து நின்றும் விரிந்த உரையோடு பொருத்தமுடைத்தாகி நுண்ணியதாகி விளக்குவது நூற்கியல்பு (பொ.468:இளம்). அந்நூல் நான்கு வகையை உடையது (பொ.469). அவை யாவன, ஒரு பொருளைக் குறித்துக் கூறும் சூத்திரத்தான் நூலாவன; இனமாகிய பொருள்கள் சொல்லப்படும் ஒத்தினால் நூலாவன; இனங்கள் பலவற்றையும் கூறும் படலத்தான் இயல்வன; சூத்திரம், ஒத்து, படலம் என்ற மூன்றுறுப்புகளையும் கொண்டு பிண்டமாவன என நான்கு வகைப்படும் (பொ.470). இவ்வாறு நூல் களை வகைப்படுத்தி இவ்வகைகளுக்கு அடிப்படையான சூத்திரம், ஓத்து, படலம் ஆகியவற்றின் இயல்புகளை விளக்குகிறார் தொல்காப்பியர் (பொ.471-473). இம்மூன்று உறுப்புகளையும்
தன்மையை உடைய நூல் அடக்கிய பிண்டம் எனப்படும் (பொ.474) எனவும் விளக்குகிறார்.


            சூத்திரத்தான் நூலாகியதற்கு இறையனார் களவியலும், ஒத்தினால் நூலாவதற்குப் பன்னிருபடலம், புறப் பொருள் வெண்பாமாலை போன்றவை படலத்தால் நூலாவதற்குத்களும், தண்டியலங்காரம், போன்றவையும் மூன்றுறுப்புகளையும் யாப்பருங்கலம் எடுத்துக்காட்டாய் அமையும். சூத்திரம், ஒத்து, படலம் என்ற அடக்கிய பிண்ட வகை நூலிற்கு எடுத்துக்காட்டாய் அமைவது தொல்காப்பியம்.’

            எனவே பிண்டவகையாய் அமைந்த தொல்காப்பியம் என்னும் நூலின் முதல் ஓத்தின் பெயராகிய ‘நூன்மரபில்’ உள்ள ‘நூல்’ என்னும் சொல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று படலங்களையும், இருபத்தேழு ஓத்துக்களையும், ஆயிரத்து அறுநூற்றுப் பத்து சூத்திரங்களையும் கொண்ட நூல் முழுவதையும் குறிப்பதாகவே கொள்ள வேண்டும். அவ்வாறன்றி ஓர் அதிகாரத்தை மட்டும் குறிப்பிடுவதாகக் கொள்வது தொல்காப்பியர் கொள்கையுடன் மாறு பட்டு அவர் நூலின் உறுப்பாகிய ஒரு பகுதிக்கே செல்லும். நச்சினார்க்கினியர் இதை உணர்ந்தே ‘நூல் என்றது தொல் காப்பியம் என்ற பிண்டத்தை” (எ.1.நச்சி, எனக் குறிப்பிடுகிறார்.

            ஆகையால், தொல்காப்பியரது நூல்பற்றிய கொள்கையின் அடிப்படையில் நூன்மரபு தொல்காப்பிய இலக்கணம் மூன்றதிகாரங்களுக்கும் கூறுவது என்று கொள்வதே பொருத்த முடையதாகும்.

‘மரபு’ என்னும் பெயர்

            ‘மரபு என்னும் பெயர் நூன்மரபு, மொழி மரபு, தொகை மரபு, விளி மரபு என்ற நான்கு யல்களின் தலைப்பில் வருகிறது. நான்கனுள், முதல் மூன்றும் எழுத்ததிகாரப் இந்பகுதிகள். விளிமரபு மட்டும் சொல்லதி காரப்பகுதி. மரபு என்ற சொல்லை நூலினுள் பல இடங்களில் தொல்காப்பியர் பயன்படுத்துகிறார். இச்சொல்லின் பல பொருள்களுள் ‘இலக்கணம்’, ‘தன்மை’ அல்லது ‘இயல்பு’ என்பதும் ஒன்று. உரையாசிரியர்களும் இப்பொருள் கூறு கின்றனர். ”சார்ந்துவரல் மரபின் மூன்று” (எ.1.4) என்ற தொடருக்கு, ‘சார்ந்து வருத லாகிய இலக்கணத்தினையுடைய மூன்று’ கூறுகின்றார். இளம்பூரணர் உரை நச்சினார்க்கினியரும் இலக்கணம் என்றே பொருள் கொள்கின்றார். “அம்மரபு ஒழு கும் மொழிவயினான” (எ.418.3) என்ற இடத்தில், “அவ்விலக்கணம் நடக்கும் மொழியிடத்து” என இளம்பூரணர் நச்சி னார்க்கினியர் இருவரும் பொருள்கொள் கின்றனர். ‘மயங்கல் கூடாதம் மரபின” (சொ.11.3), “ஏனைப்பெயரே தத்தம் மரபின’ (சொ.172.5) முதலாய பல இடங்களிலும் ‘மரபு’ என்ற பெயர் ‘இலக்கணம்’ என்ற பொருளில் வழங்கப் பட்டுள்ளது. இயல் தலைப்புகளுக்குப் பொருள் கூறுமிடத்தும் விளிமரபு என்ப தற்கு ‘விளிவேற்றுமையின் இலக்கணம் உணர்த்துவது’ என்ற பொருளை இளம் பூரணர், தெய்வச்சிலையார் இருவரும் கூறுகின்றனர். எனவே, ‘மரபு’ என்ற பெயருக்கு ‘இலக்கணம்’ எனப் பொருள் கொள்வது பொருத்தமானதாகும். இவ் வடிப்படையில், ‘நூன்மரபு’ என்பது ‘நூலினது இலக்கணம்’ அல்லது ‘நூலிற் ரிய இலக்கணம்’ எனப் பொருள்படும்.

நூன்மரபில் கூறப்பட்டுள்ள செய்திகளும் தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களும்

            இனி, நூன் மரபில் கூறப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் அதன்பெயர்ப் பொருத் தத்தையும் இடத்தையும் ஆராய்தல் வேண்டும்.

செய்திகள்
            நூன்மரபு, எழுத்துக்கள் சார்ந்துவரல் மரபின் மூன்றும் அல்லாத இடத்து முப்பது; சார்ந்து வரல் மரபின குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்று என எழுத்துக்களின் தொகை பற்றிப் பேசுகிறது (எ.1,2.). குற்றெழுத்தும் நெட்டெழுத்து மாய் அமைந்த பன்னிரண்டு உயிர்கள் (எ.3,4,8). வல்லெழுத்தும், மெல்லெழுத் தும், இடையெழுத்துமாய் அமைந்த பதினெட்டு மெய்கள் (எ.9,19-21) என எழுத்துக்களின் வகை பற்றிப் பேசுகிறது. குற்றெழுத்துக்கள் ஒரு மாத்திரை அளபின (எ.3); நெட்டழுத்துகள் இரண்டுமாத்திரை அளபின (எ.4). ஓர் எழுத்து மூன்று மாத்திரை பெறாது (எ.5). அவ்வாறு மூன்று மாத்திரையுடைய அளபெடை எழுத்துப்பெற வேண்டின் அவ்வளபுடைய எழுத்துக்களைக் கூட்டி ஒலிக்கவேண்டும் (எ.6). மாத்திரை என்பது ‘கண்ணிமைப் பொழுது’, ‘கைந்நொடிக்கும் ஒலி’ ஆகியவற்றை அளவாகக் கொண்டது (எ.7). மெய்களும் சார்ந்து வரும் மூன்றும் அரைமாத்திரை ஒலிப்பன (Gr.11,12). மகரமெய் சில இடங்களில் அரையள பினும் குறுகி ஒலிக்கும் (எ.13). இவ் வெழுத்துக்களின் அளவு மொழிக்கு உரியது; இவ்வெழுத்துக்கள் இசையில் பயன்படும்பொழுது இவ்வள பைக் கடந்து ஒலித்தல் உண்டு. அது இசை நூலின்பாற்பட்டது (61.33). இவ்வாறு அளபு பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன. பின், வடிவு பற்றிப் பேசும்பொழுது, மகரம் உட்பெறு புள்ளியுடன் (எ.14), எல்லா மெய்களும் புள்ளிபெறும் (எ.15). எகர ஒகரக் குறில்களும் அவ்வாறு புள்ளிபெற்றுவரும் (எ.16); உயிர்மெய்கள் புள்ளி இல்லாமல் அகரத்துடனும், வடிவு வேறுபட்டு மற்ற உயிர்களுடனும் வழங்கும் (எ.17); அவை, மெய் முன்னும் உயிர் பின்னுமாக ஒலிக்கப்படும் என்று கூறுகிறது. பின், பதினெட்டு மெய்களும் தம்மொடு பிறவும், தம்மொடு தாமும் மயங்கு முறை விளக்கப்படுகிறது (எ.22-30). இறுதியாக, சுட்டாகவும், வினாவாகவும் வரும் எழுத்துக்கள் கூறப்படுகின்றன (எ.31.32). இவ்வாறு, எழுத்துக்களின் தொகை, வகை, அளவு, வடிவு, மயக்கம் முதலியன பற்றியும்; அவற்றுட் சில சுட்டும் வினாவுமாய் வருவது பற்றியும் நூன்மரபு பேசுகிறது.

            மேலே கூறப்பட்ட செய்திகளுள் பெரும்பாலானவை எழுத்துக்களைப் பற்றிய செய்திகள் என்ற அடிப்படையில் எழுத்த திகாரத்திற்கு உரியவை. எனினும் மற்ற இரு அதிகாரங்களுக்கும் உரியவையும், அடிப்படையான பல தொடர்புடையவையும், வகையில் பயன்படுபவையும் ஆகும். இச் செய்திகளுக்கும் மற்ற அதிகாரங்களுக்கும் உள்ள தொடர்பை மூவகைப்படுத்தலாம்.

(1)மூன்று அதிகாரங்களுக்கும் அடிப்படையானவை.

(2)பிற அதிகாரங்களை எதிர் நோக்கிக் கூறப்பட்ட எழுத்து பற்றிய செய்திகள்.

(3)பிற அதிகாரங்களில் மாட்டெறியப்பட்டோ மாட்டேறு இன்றியோ பயன்படுத்தப்படுபவை.


மூன்று அதிகாரங்களுக்கும் அடிப்படையான செய்திகள்

எழுத்துக்களே, வழக்கும் செய்யுளுமாய் அமைந்த மொழிக்கு, மேல்நிலை அலகுகளைவாக்கும்(Basic Units)உரு அடிப்படை
அலகுகள் எழுத்துக்கள் தனித்தோ தொடர்ந்தோ சொல்லாகும்.  இக்கருத்தினை, நன்னூலார்,

‘எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின்

பதமாம்” . . .(நன்.128).

என வெளிப்படையாகக் கூறுகிறார். தொல்காப்பியர் இவ்வாறு வெளிப்படையாகக் கூறாவிடினும், இவ்வுண்மையை நன்குணர்ந்தவர் என்று காட்டும் வகையில் எழுத்தையும் சொல்லையும் தொடர்புபடுத்தி நூல் செய்கிறார்.
            சொல்லதிகாரத்தில் ‘எழுத்து’ என்ற சொல்லை ‘விகுதிகளைக்’ குறிக்கப் பயன் படுத்துகிறார். இருதிணை மருங்கின் ஐம்பால் அறிய

ஈற்று நின்றிசைக்கும் பதினோ

தோற்றம் தாமே வினையொடு வருமே -சொ.10

            தம் வினைக்கியலும் எழுத்தலங் கடையே-(சொ.62.4) எழுத்து, சொல்
நிலையில் பயன்படுவது இங்கு உட் கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,

மொழிப்பொருட் காரணம் விழிப்  பத்தோன்றா—சொ.388

எழுத்துப் பிரிந்திசைத்தல் வணியல் பின்றே-சொ.389

வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே-சொ.395

            இந்நூற்பாக்கள் எழுத்தாலாவது சொல் என்ற கருத்தை உட்கொண்டு தொல்காப்பிய ரால் இயற்றப்பட்டுள்ளமை வெளிப்படை.

            செய்யுட்கும் அடிப்படை அலகு எழுத்தே என்பது எழுத்தினைச் செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகக் கூறியிருப்பதி லிருந்தும் (பொ.310), அவ்வெழுத்துக்கள் தனித்தும் இணைந்தும் அடுத்தநிலை அலகாகிய அசையை உருவாக்குவதிலிருந்தும் (பொ.312-318) புலனாகும். எழுத்துக்களால் ஆகிய அசைகள் சீராகின்றன. சீர்களால் ஆகும் அடியும் தொல்காப்பியரால் எழுத்தின் அடிப்படையிலேயே வரையறுத்து வகைப்படுத்தப்படுகிறது (பொ.344-351).

            எனவே, எழுத்துக்களின் தொகை, வகை, அளபு, மயக்கம் போன்ற செய்திகள் மூன்றதிகாரத்திற்கும் அடிப்படையானவை என்பது தெளிவாகும்.

சொல், பொருள் அதிகாரங்களை எதிர்நோக்கிக் கூறப்பட்ட செய்திகள்

            நூன்மரபில் கூறப்பட்ட பெரும்பாலான செய்திகள் மூன்றதிகாரங்களுக்கும் பொது வானவை. ஆனால் சில செய்திகள் பிற அதிகாரங்களில் கூறப்படும் இலக்கணத்தை எதிர்நோக்கியே கூறப்பட்டவை.

            அளபெடை சொல்லதிகாரத்தையும் பொருளதிகாரத்தையும் மனத்தில் கொண்டே நூன்மரபில் விளக்கப்பட்டது. சொல்லதி காரத்தில் விளிமரபில் அளபெடை பயன்படுகிறது (சொல்.122,132,138,146). தொல்காப்பியர் அளபெடைப் பெயர்கள் விளிக்கும்பொழுது எவ்வாறு வழங்கும் என்று கூறுவதுடன்,

உளவெனப்பட்ட எல்லாப்பெயரும்

அளபிறந்தனவே விளிக்குங்காலைச்

சேய்மையின் இசைக்கும் வழக்கத்தான் (சொ.149).

            என்று அளபெடைப் பெயரல்லாத மற்றப் பெயர்களும் சேய்மை விளியில் அளபெடையாய் வழங்குவதைக் குறிப்பிடுகிறார். பின்னர், இடையியலிலும் (சொ.276) ஒளகாரம் அளபெடுத்தும் அளபெடையின்றியும் பொருள் வேறுபாடு காட்டிக் குறிப்பிடைச் சொல்லாய் வருவதைப் பற்றிப் பேசுகிறார்.’

அடுத்து, பொருளதிகாரம், செய் யுளியலில் ‘அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே” (பொ.325) என்று அளபெடை அசைநிலை பெற்று அலகு பெற்று வருவதைக் கூறுகிறார். பின்னர் அளபெடையின் அடிப்படையில் அள பெடைத்தொடை என்ற தொடையையும் (பொ.394, 402), அளபெடை வண்ணம் என்ற வண்ணம் ஒன்றினையும் (பொ.514, 520) வகுக்கிறார். இவை, தெளிவாக, அளபெடை நூன்மரபில் வகுக்கப்பெற்றது சொல்லதிகாரத்திலும் பொருளதிகாரத் திலும் பயன்படுத்துவதற்காகவே என்பதைக் காட்டும். எழுத்ததிகாரத்தில், மொழி மரபில்,

குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்

நெட்டெழுத் திம்பர் ஒத்த குற்றெழுத்தே (எ.41),

என ஓசை குன்றுமிடத்து அளபெடை வரும் எனக் கூறுவதும் பின் பொருளதிகாரத்தில் அளபெடை அசையாய் அலகு பெறுவதை மனத்திற்கொண்டே யாகும். இங்கு, நச்சி னார்க்கினியர் “இஃது எதிரதுபோற்றல் பற்றிச் என்னும் உத்தி செய்யுளியலை நோக்கி “நீட்டம் வேண்டின்” (எ.6) என முற்கூறிய அளபெடை யாமாறு கூறுகின்றது என்று விளக்குகிறார். இவ்விரு இடங்கள் தவிர எழுத்ததிகாரத்தில் அளபெடையைப் பற்றி வேறெங்கும் பேசாமையும் அது மற்ற அதிகாரங்களை எதிர்நோக்கியது என்பதனை வலியுறுத்துகின்றது.


சொல், பொருள் அதிகாரங்களில் பயன்படுத்தப்பெறும் நூன்மரபுச் செய்திகள்

முன் கூறியதுபோல, நூன்மரபுச் செய்திகள் மாட்டெறியப் பட்டோ மாட்டேறு இன்றியோ சொல், பொருள் அதிகாரங்களில் பயன்படுத்தப் பெறுகின்றன.

சொல்லதிகாரத்தில்

            எழுத்தே வழக்கிற்கும் செய்யுளிற்கும் அடிப்படை அலகு என்றும், அதைத் தொல்காப்பியர் உணர்ந்திருந்தார்) என்றும் மேலே (4.2) கண்டோம். அவ்வுண்மை யைக் காட்டுவது போல, எழுத்து என்ற குறியீட்டையும் அவற்றின் வகைகளையும் சொல்லிலக்கணம் கூறும்பொழுது பெரிதும் பயன்படுத்து கின்றார். மேல் (4.2) காட்டப்பெற்ற சில இடங்களுடன் (சொ.10,62) பின் வரும் நூற்பாவிலும் எழுத்து என்ற சொல்லை விகுதி என்ற பொருளில் சொல்லதிகாரத்தில் பயன் படுத்துகிறார்.

இயற்பெயர் முன்னர் ஆரைக்கிளவி

பலர்க்குரி எழுத்தின் வினையொடு வருமே (சொ.268)

“பலர்க்குரி எழுத்து” என்ற தொடர்பலர்பால்
விகுதியாகிய சொல்லைக் குறிக்கிறது. சொல்லதிகார விளிமரபில், நூன் மரபில் கூறப்பட்ட எழுத்தின் வகைகள், பெயர்கள் பலவும் பெரிதும் பயன் படுத்தப்படுகின்றன. பின்வரும் நூற்பாக்கள் அதனைக் காட்டும்.

அவைதாம்
உ ஐ ஒ என்னும் இறுதி

அப்பால் நான்கே உயர்திணை மருங்கின்

மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே (தொ.117).

உகரந்தானே குற்றியலுகரம் (சொ.120)

ஏனை உயிரே உயர்திணை மருங்கின் தாம்விளி கொள்ளா என்மனார் புலவர் (சொ.121)

அளபெடை மிகூஉம் இகர இறுபெயர் இயற்கைய வாகும் செயற்கைய என்ப (சொ.122)

னரலள என்னும் அந்நான் கென்ப புள்ளியிறுதி விளிகொள் பெயரே
(சொ.125)

            இங்கு இ,உ,ஐ,ஒ,ன,ர,ல,ள போன்ற எழுத்துக்களையும் உயிர், புள்ளி, பெடை, குற்றியலுகரம் போன்ற எழுத்து வகைகளின் பெயர்களையும் பயன்படுத்து கின்றார். விளியின் இலக்கணம் சொற் களின் ஈற்றெழுத்துக்களையும் அடையும் மாற்றங்களையும் பேசாமல் கூற இயலாது.

அவை பற்றியும்

இ ஈ ஆகும் ஐ ஆய் ஆகும் (சொ.118)

ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும் (சொ.119)

நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும் (சொ.141.2)

            போன்ற நூற்பாககள் இவ்வுண்மையைப் புலப்படுத்துகின்றன.
விளிமரபு மட்டுமன்றி, சொல்லதி காரத்தின் மற்ற இயல்களிலும் எழுத்து மாற்றங்கள் பேசப்படும்பொழுது நூன் மரபுச் செய்திகள் பயன்படுகின்றன.

அவற்றுள்

செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு

மெய்யொடும் கெடுமே ஈற்றுமிசை உகரம்

அவ்விடன் அறிதல் என்மனார் புலவர் (சொ.233)

 கு ஐ ஆன் என வரூஉம் இறுதி

அவ்வொடும் சிவணும் செய்யுளுள்ளே (சொ.104)

அந்நாற் சொல்லும் தொடுக்குங்காலை

வலிக்கும் வழிவலித்தலும் மெலிக்கும் வழி மெலித்தலும்

விரிக்கும்வழி விரித்தலும் தொகுக்கும் வழித் தொகுத்தலும்

நீட்டும் வழி நீட்டலும் குறுக்கும் வழிக் குறுக்கலும்

நாட்டல்வலிய என்மனார் புலவர் (சொ.397)

முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்

அன்னிலை மரபின் மெய்யூர்ந்து வருமே (சொ.445)

            இவை அனைத்தும் நூன்மரபில் கூறப்பட்ட எழுத்துக்கள், அவை பற்றிய செய்திகள், குறியீடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் சொல்லிலக்கணம். மேலே கூறப்பட்ட (4.1) காட்டப்பட்டதுபோல் நூன்மரபில் சுட்டு, வினா பற்றிய சொல்லிலக்கணச் செய்தியையும் கூறுகிறார். இவை இடைச் சொற்கள். அவற்றில், சுட்டுக்களும் ஆகாரவினாவும் அறிமுகப்படுத்தப்பட்டு நூன்மரபிலேயே விட்டதால், சொல்லதிகாரஇடையியலில் மீண்டும் பேசப்படவில்லை. ஆனால் ஏகார 252). ஓகாரங்களாகியஇடைச் சொற்கள் வினாப் பொருள் தவிர வேறு பொருளிலும் வருவதால், மீண்டும் இடையியலில் பேசப்படுகின்றன (சொ.251, சுட்டின் இலக்கணம் கூறப்படாவிடினும், பல இடங்களில் சொல்லதிகாரத்தில் சுட்டடியாகப் பிறந்த சொற்களைக் குறிக்கச் ‘சுட்டு’ என்னும் பெயர் பயன் படுத்தப்படுகிறது.

பொருளொடு புணராச் சுட்டுப் பெயராயினும் (சொ.37)

சுட்டு முதலாகிய காரணக் கிளவி

சுட்டுப் பெயரியற்கையிற் செறியத்  தோன்றும் (சொ.40)

தான்என பெயரும் சுட்டு முதற் பெயரும் (சொ.134)

இது தெளிவாக,செய்திகளைநூன்மரபிற் கூறிய மனத்திற்கொண்டே
சொல்லதிகாரத்தில் இலக்கணம் கூறுகிறார் தொல்காப்பியர் என்பதைக் காட்டுகிறது.

பொருளதிகாரத்தில்

            செய்யுள் அமைப்பிற்கு எழுத்தும் அளவும் இன்றி யமையாதவை. அதனாலேயே தொல் காப்பியர் முப்பத்திரண்டு செய்யுள் உறுப்புகளில் முதல் இரண்டாக மாத்திரை யையும் எழுத்தையும் சேர்த்துள்ளார் (பொ.310). ஆனால், மற்றச் செய்யுள் உறுப்புகளை ஒவ்வொன்றாக விளக்கும் தொல்காப்பியர்
மாத்திரையையும் எழுத்தினையும் அவ்வாறு விளக்காது. அடுத்த நூற்பாவில்
அவற்றுள்

மாத்திரை வகையும் எழுத்தியல் வகையும்

மேற்கிளந்தனவே என்மனார் புலவர் (பொ.311)

            என மாட்டெறிந்து கூறுகிறார். இம் மாட்டேறு தெளிவாக நூன் மரபிற்கே யாம். ஏனெனில், மாத்திரை, எழுத்து பற்றிய செய்திகள் பொருளதிகாரத்தில் வேறெங்கும் கூறப்படவில்லை. மற்றச் செய்யுள் உறுப்புகளாகிய அசைவகை, அடி, தொடை ஆகியவை மேலே (4.2) குறிப்பிட்டதுபோல இவ்வாறு மாட்டெறிந்து கொள்ளப்பட்ட எழுத்து, அளவு இவற்றின் அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றன. இவற்றை விளக்க நூன்மரபில் வரையறுக்கப்பட்ட குற்றெழுத்து (குறில்), நெட்டெழுத்து (நெடில்), மெய் (ஒற்று), குற்றியலிகரம், குற்றியலுகரம் முதலியவை பயன்படு கின்றன. குறில், நெடில் ஆகியவை தனித்தும் ஒற்றடுத்தும் வரின் நேர சை எனவும், குறிலிணை, குறில், நெடில் ஆ கியவை தனித்தும் ஒற்றடுத்தும் வரின் நிரையசை எனவும் பெயர்பெறும் (QUT.312). இவ்விருவகை அசைகள் இருவகை உகரத்தோடு இயைந்துவரின் நேர்பு, நிரைபு எனப் பொருள்பெறும். ஆனால் குறிலிணை உகரம் இங்கு வராது (பொ.313). தனிக்குறில் முதலசையாக மொழி சிதைத்து வராது (பொ.315) குற்றியலிகரம் ஒற்றெழுத்துப் போல அலகு பெறாது (பொ.316). குற்றியலுகரமும் முற்றியலுகரமும் ஒற்றோடு வந்து அசையாக நிற்கவும் பெறும் (பொ.318).

            அடிகள் எழுத்துக்களின் எண்ணிக் கை அடிப்படையில் வகுக்கப்படுகின்றன (பொ.343-351). நான்கெழுத்து முதல் ஆறெழுத்துவரை உள்ளது குறளடியாகும் (பொ.344). ஏழெழுத்து சிந்தடிக்கு அளவு. ஒன்பதெழுத்து
அதன்மேல் எல்லை (பொ.345). பத்து முதல் பதினான் கெழுத்து நேரடியில் அளவு (பொ.346). நெடிலடி பதினைந்திலிருந்து பதினேழு எழுத்து உடையது (பொ.347). எழுத்தின் அடிப்படையில் அடிவரையறை செய்யும் பொழுது உயிரில்லாத ஒற்றெழுத்துக்கள் (பொ.351). இவ்வாறு, எழுத்தே அடிவரையறைக்கும் அடிப்படையாகிறது. எண்ணப்படமாட்டா தொடையின் வரையறையிலும் எழுத்தியைபு பயன்படுகிறது (பொ.393- 406). அடிகள் தோறும் முதல் எழுத்து ஒன்றிவரின் மோனையாம் (பொ.397). இரண்டாம் எழுத்து ஒன்றினால் எதுகையாம் (பொ.398). இவ்விரு தொடைகளுக்கும் எடுத்த எழுத்தேயன்றி இனவெழுத்து ஒன்றிவருதலும் உரியதாகும் (பொ.399). அளவுதோறும் ஈற்றெழுத்து ஒன்றிவரின் அது இயைபுத்தொடை எனப்படும் (பொ.401). அடிதோறும் அளபெடைவரின் அளபெடைத்தொடை (QUTT.402). மற்ற பொழிப்பு, ஒரூஉ போன்ற தொடைகளும் எழுத்தொன்றுதல் அடிப்படையில் (பொ.403,404). வகுக்கப்படுகின்றன

            மற்றொரு செய்யுள் உறுப்பாகிய வண்ணத்தின் வரையறையிலும் நூன் மரபில் கூறப்பட்ட எழுத்தின் வகைகள் பின்வருமாறு பயன்படுகின்றன. வல்லெழுத்து மிக்கு வருவது வல்லிசை வண்ணம் (பொ.517). மெல்லெழுத்து மிக்கு வருவது மெல்லிசை வண்ணம் (பொ.518). இயைபு வண்ணம் இடை யெழுத்து மிக்கு வரும் (பொ519). அளபெடை பயின்றுவரின் அது அள பெடை வண்ணமாகும் (பொ.520). நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்தும், குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்தும் பயின்று வரும் (பொ.521.522). நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒப்பக் கலந்துவரின் அது சித்திர வண்ணத்தின்பாற்படும் (பொ.523). ஆய்தம் பயின்று வந்தால் அது நலிபு வண்ணம் எனப்படும் (பொ. இவ்வாறு வல்லெழுத்து, லெழுத்து, இடையெழுத்து, குற்றெழுத்து, நெட்டெழுத்து. 524). அளபெடை மெல் ஆகிய எழுத்து வகைகள் இங்கு பயன்படுத்தப் பட்டுள்ளன.

இவ்வாறு செய்யுளியல் நூன்மரபுச் செய்திகளைப் பெரிதும் பயன்படுத்துகிறது.

முடிவுரை

            நூன்மரபிற் கூறப்பட்ட செய்திகள் தொல்காப்பியம் முழுவதற்கும்
இன்றியமையாதவை என்பதையும். எழுத்ததிகாரம் அல்லாத பிற இரண்டு அதிகாரங்களிலும் தொல்காப்பியரால் எடுத்தாளப்பட்டுள்ளன என்பதையும் மேற்கூறிய செய்திகள் தெளிவுறக் காட்டு கின்றன. இவ்வடிப்படையில் நூன்மரபு நூல் முழுவதற்கும் இலக்கணம் கூறுவது; உரிய செய்திகளைத் தொகுத்துக் கூறுவது என்ற நச்சினார்க்கினியர் கருத்து வலியுறு கின்றது. எனினும் சிவஞான முனிவர் நூன்மரபுச் செய்திகள் பொருளதிகாரத்தில் செய்யுளியல் ஒன்றற்கு மாத்திரமே கருவியாகின்றன என்பதை கினியரை மறுப்பதற்குச் நச்சினார்க் சான்றாகக்,

குறிப்புகள்

1.ஒ.நோ.பொ.474 இளம்பூரணர் உரை. இளம்பூரணர், இங்கு, ”மூன்றுறுப் படக்குதலாவது சூத்திரம் பலவுண்டாகி ஓத்தும் படலமும் இன்றாகிவரினும், ஓத்துப் பலவுண்டாகி படலமின்றி வரினும், படலம் பலவாகி வரினும் பிண்டமென்று பெயராம் என்றவாறு. இவற்றுட் சூத்திரத்தாற் பிண்டமாயிற்று இறையனார் களவியல். ஓத்தினாற் பிண்டமாயிற்று பன்னிரு படலம். அதி காரத்தாற் பிண்டமாயிற்று இந்நூல்காட்டுகிறார் (1.3). நூன் மரபுச் செய்திகள் பொருளதிகார பேசப்படாமைக்குக் இயல்கள் பிறவற்றில் காரணம்
பின் வருமாறு: தொல்காப்பியத்தில் எழுத்து, சொல்லதிகாரங்களும் பொருளதிகாரத்தில் செய்யுளியலும் வழக்கும் செய்யுளுமாய் அமைந்த மொழியின் (Formal Structure) பற்றிய வடிவமைப்பு செய்திகளை ஆராய்பவை. பொருளதிகாரத்தின் பிற யல்கள் மொழியின் உள்ளடக்கம் (Content) அல்லது மொழி கூறும் பொருண்மையின் அமைப்பு, பாகுபாடு பற்றி ஆராய்பவை. அங்கே வடிவமைப்பு பற்றிய செய்திகள் இயல்பே.
பயன்படாதது வடி ஆனால், மொழியின் வமைப்பு விதிகளைப் பயன்படுத்தி உருவாகும் தொடர்புகளும், செய்யுளுமே மொழியின் உள்ளடக்கத்தை அல்லது பொருண்மையைத் தெரிவிக்கப் பயன்படுவதால் நூன்மரபில் கூறப்பட்ட வடிவமைப்பு பற்றிய செய்திகள்பொருளதிகாரத்தின் பிற இயல்களுக்கு மறைமுகமாகப்  பயன்படுவனவே.


            எனவே, நூல் என்ற சொல்லிற்குத் தொல்காப்பியரை ஒட்டிக் வேண்டிய பொருளின் அடிப்படையிலும் நூன்மரபிற் கூறப்பட்ட செய்திகளின் அடிப்படையிலும் இவ்வியல் நூன் முழுவதற்கும் உரியதும், அடிப்படையாய் அமைந்து பயன்படும் இன்றியமையாச் சிறப்புடையதும் ஆகும்.என்றுகொள்க’, கூறுகிறார். என்று இவ்வாறு பொருள் கொள்வது தொல் காப்பியச் சூத்திர வரிசை முறைக்குப் பொருத்தமாக இல்லை. நூலின் இயல்பை விளக்கி (468) அது நால்வகைப்படும். (469) என்று கூறி அந்நூல்வகைகள் சூத்திரத்தான், ‘ஓத்தினான், ம்மூன்று உறுப்படக்கிய பிண்டத்தான் யல்வன (470) என்று கூறுகிறார். எனவே இம் மூன்றுறுப்புக்களுள் உறுப்போ இரண்டு உறுப்போ மாத்திரம் படலத்தான் ஓர் கொண்டநூல்களையும் பிண்டம் என்று வழங்குவது தொல்காப்பிய நூற்பாவின் நேர் பொருளோடு மாறுபடுகிறது.


2.’மரபு’ என முடியும் நான்கு இயல் தலைப்புக்களுள், நூன்மரபு, நூலினது இலக்கணம்’, மொழி மரபு ‘மொழியினது இலக்கணம்’, விளிமரபு ‘விளியினது இலக்கணம்’என வேற்றுமைத் தொகையாய்ப் பொருத்தமாய் அமை
கின்றன. ஆனால், தொகைமரபு ‘தொகையினது இலக்கணம்’ எனப் பொருள்படாது. அது ‘தொகையாகிய இலக்கணம்’ என விரித்துப் பண்புத் தொகையாய்க் கொள்ளின் அதுவும் பொருத்தமாக அமைகிறது.

3. இளம்பூரணர், சேனாவரையர்,

சுருக்கக் குறியீடுகள்

இளம் – இளம்பூரணர் உரை

எ – எழுத்ததிகாரம்

சொ – சொல்லதிகாரம்

மேற்கோள் நூல்கள்

1.ஆறுமுகநாவலர், (1956) பதி. சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த தொல்காப்பியச் சூத்திர விருத்தி, சென்னை.

2.சிவலிங்கனார், ஆ. (1980) பதி. தொல் காப்பியம்-நூன்மரபு உரைவளம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

3.சுப்பிரமணியசாஸ்திரி, (1937) தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-குறிப்புரை, திருச்சிராப்பள்ளி.

4.தொல்காப்பியம், எழுத்ததிகாரம்,இளம்பூரணர் உரை (1955), சைவசித்தாந்த
நூற்பதிப்புக்கழகம், சென்னை.

5.தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நச்சினார்க் கினியர் உரை (1972). சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

6.தொல்காப்பியம், சொல்லதிகாரம், பூரணர் உரை
இளம் (1963)சைவசித்தாந்த நூற் நச்சினார்க்கினியர் ஆகியோர்,


ஈரளபிசைக்கும் இறுதியில் உயிரே

ஆயியல் நிலையும் காலத்தானும்

அளபெடை யின்றித்தான் வரு காலையும்

உளவென மொழிப பொருள் வேறுபடுதல்

குறிப்பின் இசையின் நெறிப்படத் தோன்றும் (சொ.276).

            என்ற நூற்பா ஔகாரத்தைக் குறிப்பதாகக் கொள்ளத் தெய்வச்சிலை யார் இதனை ஔ ஒழிந்த மற்ற நெடில் அளபெடுத்தும் அளபெடாதும் குறிப் பிடைச் சொல்லாய் வருவதைக் குறிப்பிடுகிறார்.
அவ்வாறுபொருள்கொள்ளினும் அளபெடை இங்கு பயன் பெற்றிருப்பதில் மாற்றம் இல்லை.

நச்சி.  – நச்சினார்க்கினியர் உரை

பதி.    – பதிப்பாசிரியர்

பொ. –            பொருளதிகாரம்.

பதிப்புக் கழகம், சென்னை.

7.தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையர் உரை (1938). பதி. சி.கணேசையர், சுன்னாகம்.

8.தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச் சிலையர் உரை (1929) கரந்தைத் தமிழ்ச் சங்கம், கரந்தை.

9.தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியர் உரை (1962) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

10.தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை (1953) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

11.வேங்கடராஜுலு ரெட்டியார், வே.(1944), தொல்காப்பிய எழுத்ததிகார ஆராய்ச்சி.
சென்னை (ஆ.சிவலிங்கனார் (பதி.) 1980 – இல் எடுத்தாளப்பட்டது).

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

க.பாலசுப்பிரமணியன்

வெளிவந்த இதழ் மற்றும் ஆண்டு :  தமிழ்க்கலை, தமிழ் 2, கலை 2 : 3, 1984

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here