சங்கப்பனுவல்களின் மறுவாசிப்பில் மலரும் புதிய மகரந்தங்கள் | முனைவர் சி.சிதம்பரம்

சங்கப்பனுவல்களின் மறுவாசிப்பில் மலரும் புதிய மகரந்தங்கள்-முனைவர் சி.சிதம்பரம்
இலக்கியம் என்ற சொல் முதன் முதலில் அது ஒரு கலைப்படைப்பு என்றும் அது வாசகனுக்கு இன்பம் பயப்பது என்ற பொருளில் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தோளாமொழிப்புலவர் “காமநூலுக்கு இலக்கிம் காட்டிய வளத்தால்” என்று சூளாமணியில் (459) குறிப்பிடுகிறார். இந்த இலக்கியத்தினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துறைகள் இன்று வளர்ந்து வந்துள்ளன. அதில் குறிப்பிடத்தக்கன: இலக்கிய வரலாறு, இலக்கியத் திறனாய்வு, இலக்கியக் கொள்கைகள் என்பனவாகும்.  இந்த மூன்றிற்கும் அடிப்படையில் சில நுண்ணிய வேறுபாடுகள் இருப்பதை அறியமுடிகிறது. இலக்கிய வரலாறு என்பது ஒரு இலக்கியம் தோன்றிய காலம், பாடுபொருள், அமைப்பு, படைப்பாளி குறித்த அடிப்படையான செய்திகளைக் கொண்டது. இலக்கியத் திறனாய்வு என்பது கவிஞன் தான் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறது. அதாவது கவிஞன் குறிப்பாகச் சொல்லியதை வாசகன் தெளிவாக அறியும்படி விளக்கி உரைப்பது. இலக்கியத்தில் உள்ள தெளிவற்ற பகுதிகளை தெளிவுபடுத்துவது ஆகும். அந்த வகையில் தமிழ்த்திறனாய்வின் முன்னோடிகளாக விளங்கும் உரையாசிரியர்களின் மறுவாசிப்பு அணுகுமுறை பற்றியும் சங்கப்பாடல்களுக்கு திணை, துறை வகுப்பதில் உள்ள சிக்கல்களையும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

உரையாசிரியர்களின் ‘மறுவாசிப்பு’ அணுகுமுறை

உரையாசிரியர்கள் இலக்கியத்தினை விளக்கும் முறையில் அமைந்தாலும் கூட பல உரையாசிரியர்கள் நன்கு யாவரும் அறிந்த செய்திகளை அவர்கள் விளக்க முற்படுவதில்லை. சிலப்பதிகார உரையாசிரியர் அரும்பத உரைகாரர் அரிய சொற்களுக்கு மட்டுமே உரை எழுதிச் செல்லும் போக்கு இதனை உறுதிசெய்கிறது. மேலும் தொடக்க காலத்தில் அமைந்த திறனாய்வு முறைகள் மூலநூல் ஆசிரியரை பொன்போல் போற்றும் பாராட்டுமுறைத் திறனாய்வு முயற்சிகளையே உரையாசிரியர்கள் பெரும்பாலும் பின்பற்றினர். ஏனெனில் திறனாய்வு என்ற சொல் புழக்கத்தில் வருவதற்கு முன் “விமர்சனம்” என்ற சொல்லே கையாளப்பட்டுள்ளது.

’விமர்சனம்’ என்ற சொல்லை முதன்முதலில் ஆ. முத்துசிவன் என்ற பேராசிரியரே ’அசோகவனம்’ என்ற நூலில் பயன்படுத்தியுள்ளார். விமர்சை என்ற சொல்லில் இருந்தே விமர்சனம் என்ற சொல் பிறந்துள்ளது. விமர்சை என்ற வடசொல் பிரமாண்டமான என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு இலக்கியத்தை சிறப்பான அளவில் பாராட்டுவதையே இச்சொல் குறிக்கிறது. தமிழில் தொடக்க காலத் திறனாய்வாளர்கள் மேலைநாட்டுத் திறனாய்வு முறைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் அ. ச ஞானசம்பந்தன் உள்ளிட்டொர் ”திறனாய்வு” என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஓர் இலக்கியத்தை விருப்பு, வெறுப்பு இன்றி அதன் இயல்பினை வெளிப்படுத்தும் போக்கில் அமைக்க வேண்டும் என்ற கருத்தாக்கம் நிலைபெறத் தொடங்கியது.

இலக்கியத் திறனாய்வுகளில் இருந்து பெறப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் பல்வேறு கால கட்டங்களுக்குப் பிறகு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாக மாறும் போது அது இலக்கியக் கொள்கையாக உருக்கொள்கிறது. இவ்விலக்கியக் கொள்கையானது ஒரு குறிப்பிட்ட இலக்கியத்திற்கு ஒன்றோ அல்லது இரண்டு கொள்கைகள் தான் இருக்கமுடியும். ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் தோன்றிய இலக்கியங்களுக்கு ஒரு குறிப்பிட்ட இலக்கியக்கொள்கைகள் மட்டுமே இருக்கமுடியும்.

திறனாய்வு முன்னோடிகளான உரையாசிரியர்கள் பலரும் மூலநூல் ஆசிரியரைப் பொன்போல் போற்றினாலும் பலரும் மூலநூல் ஆசிரியரின் கருத்துக்களை மறுப்பதையும் காணமுடிகிறது. சேனாவரையர் தொல்காப்பிய சொல்லதிகார உரையில் எல்லே இலக்கம் என்ற நூற்பாவிற்கு உரை செய்கையில் மூல நூலாசிரியரான தொல்காப்பியரையே மறுத்துரைக்கும் பகுதி ஈண்டு நோக்கத்தக்கது. மேலும் அன்றைய காலச் சூழலில் ஏட்டுப்பிரதியாக இருந்த மூலநூல்களில் உள்ள பாடபேதங்களை கையாளும் சூழலில் சில தவறுகளை உரையாசிரியர்கள் மேற்கொள்ளும் இடங்களும் உண்டு. தொல்காப்பியப் பொருளதிகார உரையில் பேராசிரியர், வண்டிற்கு மூக்கு உண்டோ எனின் மூல நூலாசிரியர் கூறப்பெறாலான் அது பெற்றாம் என்றே உரைசெய்வதையும் காணமுடிகிறது. இதுபோன்ற பாடபேதங்களை ஏட்டுப்பிரதிகளை அச்சு வடிவில் உருவாக்க முயன்ற பதிப்பாசிரியர்களும் பல்வேறு பாடபேதங்களை ஒப்பிட்டு ஒரு முடிவிற்கு வந்துள்ள செய்திகளையும் பதிப்பு வரலாற்றில் காண முடிகிறது. இது ஒரு நூலுக்கு எழுதியுள்ள உரைகளில் உள்ள குறைகளை நீக்க பின்வந்தவர்கள் அவற்றை விலக்கி புதிய தடைவிடைகளைப் பெற முயற்சியும் மேற்கொண்டனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

அந்த வகையில் ஒரு நூலுக்கு எழுந்த உரையையே முற்றிலுமாக மறுத்து ஒரு உரை எழுதப்பட்டுள்ளது என்பது முக்கியமாக நோக்கத்தக்கது. சிவஞான முனிவர் இலக்கண விளக்கத்திற்கு எழுந்த உரையை முற்றிலுமாக மறுத்து இலக்கணவிளக்கச் சூறாவளி என்ற முழுமுதல் மறுபுரை நூலை வரைகிறார். இது தமிழில் தோன்றிய முழு மறுப்புரை நூலாகும். எனவே ஒரு இலக்கியத்தை / பனுவலை / பிரதியை மறுவாசிப்பிற்கு உட்படுத்தும்போது தான் பல புதிய பார்வைகள் எழுகின்றன. எனினும் இம்மறுவாசிப்பு சில வேளைகளில் கேலிக்கூத்தாகவும் மாறிவிடும் தன்மையையும் திறனாய்வு வரலாற்றில் காணமுடிகிறது. இதற்குத் தக்க சான்றாக “உச்சிமேற்புலவர்” என்று அழைக்கப்படும் நச்சினார்க்கினியர் என்ற உரையாசிரியர் “முல்லைப்பாட்டு உரையில் ”பூப்போல் உன்கண் புலம்புநீர் முத்துரைப்ப” (முல்லை.பா.23) என்ற ஒரு பாடலடியை மட்டும் வைத்துக்கொண்டு நெய்தலுக்கு உரிய இரங்கல் பொருள் வருவதாகக் கூறி, மூலநூலின் உரிப்பொருளையே சிதைத்து உரை எழுதும் போக்கு பிற்காலத் திறனாய்வாளர்களின் எதிர்ப்பைப் பெறக் காரணமாக அமைந்துவிடுகிறது. (முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, மறைமலை அடிகள்). எனினும் நச்சினார்க்கினியர் உரைகளை மீண்டும் மீண்டும் படித்து மறுவாசிப்பிற்கு உட்படுத்தும் போதுதான் அவர் சீவக சிந்தாமணிக்கு இருமுறை எழுதிய வரலாற்றை அறியமுடிகிறது. இவர் இலக்கணம், இலக்கியம் என தமிழ் உரைவரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தபோதிலும் மூலப்பிரதியை அலைத்தும் கலைத்தும் பொருள்கொள்ளும் போக்கு (மாட்டு/பொருள்கோள்)  அவரின் பெருமதிப்பையே சிதைக்கும் வகையில் அமைந்துவிடுகிறது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் சில செய்திகள் தொடர்ந்து வலியுறுத்தப்படும் போது அதுவே தவறாக மாறிவிடுகிறது. இதற்குத் தக்க சான்று, தமிழ் இலக்கிய வரலாற்றில்  மணநூல் என்று அழைக்கப்படும் நூல் சீவகசிந்தாமணி என்று ஒரு கருத்தாக்கம் இங்கு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இது தவறான கருத்தாகும். ஏனெனில் சீவக சிந்தாமணி என்ற காப்பியத்தில் சீவகன் எட்டுப்பெண்களை மணம் முடித்து இறுதியில் துறவறம் பூண்ட செய்தியை அறிவிக்கும் நிலையில் சீவகசிந்தாமணி எப்படி மணநூல் என்று கூறமுடியும் என்ற கேள்வியும் எழுவது இயல்பே.

சங்க இலக்கிய மறுவாசிப்பின் சிக்கல்கள்

மேலாய்வும் மீளாய்வும் கூடிமுயங்கப் பிறப்பது மறுவாசிப்பு என்ற கருத்தாக்கத்தினை மெய்ப்பிக்கும் வகையில் பல புதிய செய்திகள் சங்க இலக்கியங்களில் தோண்டத் தோண்டக் கிடைப்பதை கண்கூடாகக் காணமுடிகிறது.  சங்க இலக்கியங்களை அணுகும் ஆய்வாளர் அடிப்படையில் மூன்று பேருண்மைகளை அறிந்திருப்பது முக்கியமாகிறது. அவையாவன:

1.சங்க இலக்கியங்கள் என்ற அடையாளப்படுத்தப்பெறும் பனுவல்கள் பல்வேறு காலகட்டங்களில் சேர, சோழ, பாண்டிய நாட்டில் பாடப்பட்ட தனித்தனி உதிரிப்பாடல்களாகும்.

2.பின்பு சில அரசர்கள் பல தமிழ் அறிஞர்களின் உதவியால் அவற்றை பொருண்மை, பாடலடிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அதனை வகை, தொகை செய்து செம்மை செய்தனர்.

3.வகைதொகை செய்யப்பட்ட பாடல்களுக்கு ஏற்ற பின்புலத்தை அடிப்படையாகக் கொண்ட திணை, துறை வகுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இரண்டாவது படிநிலையில் தொகுத்தலும் தொகுப்பித்தலுமான நடவடிக்கையில் வர்க்கச் சார்பும் சமயச்சார்பும் பெரிய அளவில் தாக்கம் செலுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது. 

சங்கப்பாடல்களுக்கு திணை, துறை வகுத்தவர்கள் தொல்காப்பியம், பன்னிருபாட்டியல், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இலக்கணநூல்களை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்ட நிலையில் சில இலக்கண நூல்கள் நமக்குக் கிடைக்காத காரணத்தால் எந்த இலக்கண நூல்களை அடிப்படையாகக் கொண்டு வகுத்தனர் என்பதை அறிய இயலவில்லை. இந்த சிக்கலே சங்க இலக்கியத்தை மறுவாசிப்பிற்கு உட்படுத்தும் போது வெளிப்படுகிறது.

சான்றாக குறுந்தொகை 31வது பாடலுக்கு துறைவகுத்தவர்கள் “நொதுமலர் வரைவுழித் தோழிக்கு தலைவி அறத்தொடு நின்றது” என்ற துறையைக் குறித்துள்ளனர். அதாவது தலைவி ஒரு தலைவனோடு களவுமணம் புணர்ந்து, கற்புக்கூடம் பூண்டமையை அறியாது அயலார் அவளை மகட்பேசி வந்தவிடத்து அதுகாறும் தன் தலைவனைப் பற்றிய செய்தியை வெளியிடாத தலைவி, அதனைத் தோழிக்குக் கூறியது என்று உரையாசிரியர் (குறுந்தொகை உரை, பொ.வே. சோமசுந்தரனார் , கழக வெளியீடு, பக். 90) விளக்குவர். இந்தப்பாடலுக்கு துறை வகுத்தவர்கள் இந்த ஒரு பாடலை மட்டும் படித்துவிட்டு அதன் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு துறை வகுத்த காரணத்தால் தான் இதுபோன்ற தவறுகள் ஏற்படுகின்றன. ஏனெனில் படைப்பை படைப்பாளியைத் தவிர்த்து ஆராயும் போக்கில் ஏற்படுகின்ற பிழையே இதற்குக்காரணம். ஏனெனில் ஆதிமந்தியார் சேர இளவரசனான ஆட்டனத்தியை திருமணம் செய்து, பின்பு காவிரியில் ஏற்பட்ட புதுப்புனல் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சூழலில் தன் கணவனைத் தேடி அலைந்து திரிந்ததாகவே இருக்க, பாடலை மட்டும் கருத்தில் கொண்ட காரணத்தால் இந்நிகழ்வு களவுக்காலத்தில் நடப்பதாக எண்ணி அறத்தொடு நிற்கத் தலைவி தோழியிடம் கூறுவதாக பொருள்கொள்கிறார். இந்தப் பின்புலத்தை தொல்காப்பியர் துணைகொண்டு பொருத்திப் பார்க்குமிடத்து புதிய விளக்கம் கிடைக்கிறது.

தொல்காப்பியர் தலைவனிருக்கும் இடத்தைத் தேடிச்செல்லும் வழக்கு இல்லை எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள போதும், சங்க இலக்கியத்தில் ஆதிமந்தியார் பாடல் (குறுந்.31) மட்டும் தன் தலைவனை ஊர் ஊராகத் தேடி அலைந்து புலம்பிய அவல நிலையைப் பாடியுள்ளது என்பது ‘பெண் எழுத்தைத் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதற்கான தேவை இன்று வரை நீடித்து வருகிறதென்றே புரிந்து கொள்ள வேண்டும். படைப்பிலக்கியம் புனைவதற்காக எழுதுகோளைப் பெண் ஏந்தத் தொடங்கிய காலகட்டத்திலேயே ஆணாதிக்கக் கருத்தியல்கள் சமூகத்தில் நிலைபட்டுப்போய் வேர்பிடித்துத் தழைத்துவிட்டன என்பதும் அவற்றின் தாக்கங்கள் குடும்பத்தளத்தில் மட்டுமின்றிக் கலை, இலக்கியம், சமயம், அரசியல் எனச் சமுதாயத்தின் பல தளங்களிலும் தமது சுவடுகளை அழுத்தமாகப் பதியத் தொடங்கிவிட்டன’ (எம்.ஏ.சுசீலா, பெண் இலக்கியம் வாசிப்பு, பக். 68,69) என்று கூறுகின்ற கருத்தாக்கம் ஈண்டு பொருத்திப்பார்க்கத்தக்கது.

சங்க அகப்பாடல்களில் அவற்றின் திணை துறை கட்டமைப்பிற்கேற்பக் காதல்வயப்பட்ட பெண்ணின் மன ஆற்றாமைகளையும், உடல் சார்ந்த பசலைத் துன்பங்களையும் ஆண்பாற் புலவர்கள் போலவே பெண் கவிஞர்கள் காட்டியுள்ள போதிலும் ஒருசில பாடல்கள் பெண்ணுக்குரிய மரபுவழி மதிப்பீடுகளை விமர்சனம் செய்து அவற்றை எல்லையைத் தாண்டப் பெண்கள் துணிவதைச் சித்தரிப்பதாகவே உள்ளன. அவற்றுள் ‘யாண்டும் காணேன் மாண்தக் கோனை’ என்ற ஆதிமந்தியாரின் பாடலும் குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியர் பிரிவால் உடம்பும் உயிரும் வாடிய போதும், இவை ஏன் இப்படியாயின என வருந்துவதல்லது, தலைவன் இருக்குமிடம் தேடிச்செல்வது தலைவிக்கு இல்லை என மீண்டும் வலியுறுத்துகிறார். தனித்து நெஞ்சோடு உசாவுங்காலத்து, தலைவனிருக்குமிடம் போவோமா? எனக் கூறுவதுண்டு. ஆனால் அவ்வாறு தலைவனை நாடிச் செல்லுதல் இல்லை (தொல்.பொரு.10) என்றும் குறிப்பிடுகிறார். இவ்வாறு தலைவன் இருக்குமிடம் செல்வோமா? என்ற கூற்று மடற்கூற்றை ஒத்தது. தலைவன் ‘மடலேறுவேன்’ என்று கூறுவது அன்பின் ஐந்திணை. அதுபோலவே தலைவி, தலைவன் உள்வழிப்படுவதாகக் கூற்று நிகழ்த்துவாளே தவிர, அவ்வாறு ‘உள்வழிச் செல்லுதல்’ இல்லை. வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியாரின் குறுந்தொகைத்தலைவி, தலைவனின் பிரிவால் வாடியவழி உழன்று,
“யாங்கண் செல்கம் எழுகென ஈங்கே
வல்லா கூறி இருக்கும் ……………….’   (குறுந். 219; 4 – 5)
என்று பாடுகிறாள். தலைவனே தலைவியை நாடிச்செல்லும் இயல்பு வழக்கத்தில் உண்டு. இந்தத் தமிழ்ப்பண்பாடே இன்றும் திருக்கோயில் வழிபாட்டு நெறிமுறைகளின் ஒன்றாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. திருக்கோயில்களில் வழிபாட்டு நெறிமுறைகளில் இறுதி நிகழ்ச்சியாக, ஒவ்வொரு நாளின் முடிவிலும், இறைவன் இறைவி இருக்கும் இடத்திற்குச் சென்று பள்ளியறையில் துயிலும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே, தலைவன் தலைவியை நாடிச் செல்லலாமே தவிர, தலைவி தலைவனைத் தேடி செல்லும் மரபு இல்லை என்பது வெளிப்படை.

பண்டைக் காலத்தில் தலைவி பெரும்பாலும் இல்லம் சார்ந்த இடங்களிலேயே உலவி நின்றாள் எனத் தெரிகிறது. ‘மனைவி’, ‘இல்லாள்’, ‘மனையுறை மகளிர்’ போன்ற சொற்றொடர்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. தலைவி குறிகள் நிகழும் இடத்தைக்கூடத் தானே குறிக்கிறாள். இதனைத் தொல்காப்பியர்,

“இரவுக் குறியே இல்லகத்துள்ளும்
மனையோர் கிழவிகேட்கும் வழி அதுவே
மனையகம் புகாஅக் காலையான’  (தொல். கள. 40)
 
“பகற்புணர் களனே புறம்என மொழிப
அவள் அறிவுணர வருவழியான’  (தொல். கள. 41)
என்று புலப்படுத்துகிறார். எனவே, தலைவி தன் இல்லத்தின் புறத்தே, இல்லில் உள்ளோர் பேசுவது கேட்கும் தூரத்தில் மட்டுமே செல்லும் இயல்பினை உடையவளாக இருந்திருக்கிறாள். இறையனர் அகப்பொருள் உரையும்,
“இரவு மனை இகந்த குறியிடத்தல்லது
கிழவோற் சேர்தல் கிழத்திக்கில்லை’  (இறை. அகப்பொருள். 21)
என்ற நூற்பாவில் தலைவி தலைவனைச் சேரும் எல்லையை வரையறை செய்கிறது. அகநானூற்றுத் தலைவியை, ‘தன் இல்லகத்தே விட்டுச் செல்லாதே; நீ பேதைப் பருவத்தினள் அல்லள் பெதும்பைப் பருவத்தினை அடைந்துவிட்டாய்!’ எனக் கடிந்து கொள்ளும் தாயைக் (அக.7; 5-7) கயமனார் காட்டுகிறார். ஆதிமந்தியார் தன் கணவனைக் காவிரியாற்றில் தொலைத்த நிலையில் அவனைத் தேடிச் செல்கிறாள்.

கரிகாற் சோழனின் மகளான ஆதிமந்தியார் என்னும் சங்கப் பெண்பாற்புலவர், தன் கணவனான ஆட்டனத்தியைத் தேடித் திரிந்ததாகப் பாடிய பாடல் குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது. ஆதிமந்தியின் கணவன் கிழார் நகரினை அடுத்த காவிரியில் புதுவெள்ளப்புனல் விழாவில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தன் கணவனைத் தேடி ஊர் ஊராகச் சென்று அலைந்து புலம்பிய அவல நிலையை, பரணர் தம் அகப்பாடல்களில் (அகம். 76,135,222,236) குறிப்பிடுகிறார் ஒளவையாரும்,
“நெறிப்படு கவலை நிரம்பா நீளிடை
வெள்ளி வீதியைப் போல நன்றும்
செலவயர்ந் திசினால் யானே…..’      (அகநா. 147; 8 – 10)
என்று வெள்ளி வீதியார் தன் கணவனைத் தேடி அலைந்து திரிந்த செய்தியைக் குறிப்பிடுகிறார். பரணரும், ஒளவையாரும் முறையே ஆதிமந்தி, வெள்ளிவீதியார் ஆகியோர் தம் காதலர்களைத் தேடி அலைந்த செய்தியை உவமையாகவே கையாண்டுள்ளனர் என்பது இவண் நோக்கத்தக்கது.
           
‘தன் கணவன் என்ன ஆனான்’ என்று தெரியாமல் அவனைத் தேடிச் செல்கிறாள். ஆதிமந்தியார் சென்ற செலவின் நோக்கம் வேறுபட்டது. தலைவி, ‘தலைவனைப் புணர்ச்சியின் நோக்கமாகத் தான் தேடிச் செல்லுதல் கூடாது’ என்று தொல்காப்பியர் வலியுறுத்துகிறார். ஆதிமந்தியார் புணர்ச்சி நோக்கமின்றித் தன் முதல்வனைத் தொலைத்த நிலையில் தேடிச் செல்லுதல், தமிழ்ப்பண்பாட்டு மரபைச் சிதைப்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது. தலைவி தன் முதல்வனையே (கணவனையே) தொலைத்த நிலையில் தலைவன் உள்ளவிடத்துத் தேடிச் செல்லலாம் என்ற புதிய விதி தொல்காப்பியத்துள் மறைந்து நிற்பதை ஆதிமந்தியாரின் பாடல்வழி அறியமுடிகிறது.

புறநானூற்றில் கடைநிலை
 கடைநிலைத் துறையில் பறநானூற்றில் அமைந்த பாடல்கள் பதினொன்று, இவற்றில் பறம் 127ஆவது பாடல் தவிர எனைய பாடல்கள், அனைத்தும் பறநானூற்றின் இறுதியில் பறம் 382, 383, 384, 391, 392, 393, 394, 395, 396, 398) தொகுக்கப்பட்டிருக்கின்றன.
    ஆய் அண்டிானது, அரண்மனையில் மங்கல அணி, கலிர வேறு ஏதும் அணியாக மகளிரும் களிறுகளின்றிக் காணப்படும் கட்டுக்கறிகளும் உள்ளன பொலிலிமந்த அரண்மனையாகக் காட்சியளிக்கிறது. என்று அண்டிானின் அரண்மனையை உறையூர், எணிச்சேரி முடமோசியார் சிறப்பிக்கிறார் (புறம்.127). இப்பாடலின், துறை, கடைநிலை, எனக் குறிக்கப்படுகிறது. எனிம்ை இப்பாடலில், ஆய் அண்டிானின் கொடைக்கன்மை மட்டுமே கட்டப்படுகிறது. இப்பாடலில் மோசியார் வாயில் காவலனிடம் கூறியகாகவோ வாயிலில் நின்றகாகவோ, குறிப்பு இல்லை. அவ்வாறு இருக்க இதற்குக் கடைநிலை, என்று கொண்டகன் பொருக்கம் பவனாகலில்லை. இப்பாடலில் அண்டிானின் அரண்மனைவாயில் இடம் பெறுவதால் கடைநிலை என்று குறிக்கனர் போலும்.
      சோழன், நலங்கிள்ளியின் மறம்பாடும் பொருநர் கூட்டக்கைச் சந்திக்க கோவூர்கிழார் கிணைப் பொருநன், கூற்றில் சோமன் நலங்கிள்ளியின் வண்மையைப், பகழ்ந்து பறம், 382) பாடுகிறார் நான் சந்தித்த பொருநர் உன்னைக் கலி, வேறு யாரையம் பாடமாட்டோம் என்று கூறி என்னை உன்னிடம் ஆற்றுப்படுக்கினர், நான் முன்பு பரிசு பெற்ற சிறாருடன் ஃனைக் காண வந்துள்ளேன் பாம்ப போலக், கொடர்ந்து, வரும் வறுமை நீக்கி, அருள்வாயாக என்று கோவூர்கிழார் வினவகிறார், பலவர் இவ்வாறு. மன்னனிடம், கான். வேண்டும் பரிசிலை வேண்டுவது, பரியில் துறையாகும் இப்பறப்பாடலில், ஆற்றுப்படையின் அமைப்பம் அமைந்து கிடக்கிறது. ஆனால் இப்பறப்பாட்டு, கடைநிலையில் கொகுக்கப்பட்டுள்ளது. இப்பாட்டைக் கொல்காட்பியர் கூறும் ‘கடைநிலை’ என்று, கொள்வகைவிடப் பரிசில் கடைஇய கடைக்கூட்டு, நிலை’ என்று, கொள்வகே பொருக்கமாக உள்ளது.
      கோவூர்கிழார் பாடல் பறவாயிலில் பலவன், நிற்பதாகக் கூறவில்லை. பாடலில் பயிலுகின்ற நின் பொருநர் விடுகி அக்கை நினவே என்று வருகின்ற சொற்கள் கோவூர்கிழார் சோமன் நலங்கிள்ளியை நேருக்கு நேர் பார்க்கட், பாடுவதாகவே பாடியிருக்கிறார் இப்பாடலில் பலவர் கன்ைைடய, வறுமை நிலையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார் ஆகலின் கடைநிலை, என்பது,பலவர், (அ) கலைஞர்களின் வறுமை நிலையை, வாழ்க்கையின் கடைநிலையைக் கூறுவதரகப், பொருள், செயின், இது கூமைக்கப் பொருக்கமாக அமையம் மற்றும் கற்ற கூரையாசிரியர்கள், இவ்வாறு, பொருள் கொண்டனர். இப்பாடலுக்கு உரையெழுதிய ஒளவை. சு.துரைசாமிப்பிள்ளை, கொல்காட்பியர் உரைக்க கடைநிலையையம் பரிசில் கடைஇயகடைக்கட்டு, நிலையம், ஒன்று, என்று, கொண்டு இங்கு விளக்கம் தந்தள்ளார், ஆனால், பரிசில் கடைக்கூட்டு நிலை, என்னும் இத்துறையை இரண்டாகக் கொண்டு, இது பரிசில் கேட்பதாகப் பாடலில் வருவகால் பரியில் கடைஇயநிலை.என்று, துறையாக வகுப்பதும் பொருக்கமாக உள்ளது. பாண்டிய நாட்டுப் பவவர், நப்பசலையார் அவியன் என்ற குறுநில மன்னனைப் பாடிய பாட்டு பறம் 283) கிணைப் பொருநன் கூற்றில், அமைந்துள்ளது.

“நுண்கோற் சிறு கிணை சிலம்பவெற்றி
நெடுங்கடை நின்று பகடுபல வாழ்க்கிக்
தன்புக ழேத்தினெ னாக. (புறம்.383;3-5)

     என்று அடிகளில், நெடுங்கடை நின்று என்று, வருவது, கடைநிலைக் துறைக்குப் பொருக்கமாக வருகிறது. இங்கும் பலவர் அவியனையன்றிப் பிறரைப் பாடமாட்டேன் என்று குறிப்பிடுகிறார். பல்வரின் வறுமைநிலை. பாடலில் பேசப்படவில்லை நன்னாகனார் பாடலும், கிணைப், பொருநன், கூற்றாக அமைந்துள்ளது. எக்காலக்கம், கம்மைப், பொருள், கொடுக்கப் பாப்பான்: என்று, பலவர் பாடுகிறார். வறுமைக் குறிப்பு இல்லையென்றாலும் வள்ளல், கங்களுக்குச் செய்வகைக் கூறிக் கன் பரிசில் வேட்கையைக் குறிப்பிடுகிறார்.
       கல்லாடனார், பாடலிலும், கன்னைக் கிணைப் பொருநனாகவே பாடுகிறார் வேங்கடப், பகுதியிலிருந்த வறட்சி காரணமாகச் சோழ நாட்டிற்கு வந்தகாகப் பாடுகிறார். கரும்பனார் ஜி.மானிடக்கே, கல்லாடனார், பரிசில் வேண்டி நிற்கிறாரே கவிர வேறுவொன்றும் வேண்டி, இல்லை அரண்மனை வாயிற்காவலனிடக்கே பாடிய குறிப்பும் இல்லை. பரிசில் வேண்டும் நிலையே இங்கு சுட்டப்படுகிறது.
    அதியமான் நெடுமான் அக்கியின் மகன், பொகப்டெமினியை ஊளவையார் கடைநிலைத்துறைபட (பறம் 392) ஒரு பறப்பாடலைட், பாடியள்ளார். இந்தப் பாடலும், கிணைப்பொருநன் கூற்றில் அமைந்துள்ளது. பொருநன் ஒருவன் எழினியின் பெருமையினை முற்றக்கில் விடியற்பொழுதில் நின்று. பறையறைந்தவாறு சிறப்பிக்கிறான் ஏம் மன்னவனிடம் பணிந்து, வரி செலுக்காக பகை மன்னர் அரண்களை அழிக்க. அவர்களைக்கொன்று, கமுகை எப்பூட்டி உழுக, என், கொள், வாக முதலியவற்றை, விகைக்கும், ஜீரமுடைய மன்னா, நீ வாழ்வாயாக என்று பகர்கிறான், இந்தப் பாடலில், கிணைப் பொருநன் பொகுட்டெழினியின், அரண்மனை முற்றத்தில் நின்று பாடுவதாகக் குறிப்பு உள்ளது. நெடுங்கடை நின்றியான் என்று குறிப்பினைக் கொண்டு இப்பாடலைக் கடைநிலைத்துறை என்பது பொருந்தும், இப்பாட்டில், இளவையார், ஒரு, பகுதியில் எழினியை, வாழ்த்துகிறார். மற்றொரு பகுதியில் அவன் கொடை, நலக்கைப் பாடுகிறார் கடைநிலைத் துறையில், வாழ்க்க எவ்வாறு பொருந்தும், என்பது. கெரியவில்லை. இப்பாடலுக்கு வாழ்க்கியல் என்றும் துறை வகுக்க இயலும் இங்கு கடைநிலைத் துறை, வாழ்க்கோடு கலந்து பதிய பொருண்மை பெறுகிறது. இப்பாடலில் கடைநிலை, என்ற சொல்லோ, வேறு குறிப்போ இல்லை பலவன், வாழ்க்கையின் கடைநிலையில் நிற்கிறான், அவைைடய, வறுமையம் உண்டியற்ற அவலமுமே பாடலில் புனையப்படுகின்றன.
      பல நாட்கள் உணவின்றி வறுமையில் வாடிய ஒருவன் கன்னைக் காக்க, ஒருவருமின்றி இறுகியில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் நிணம் கலந்த சோறும் மலர் போன்ற மெல்லிய ஆடையம் கந்து, கம்மை ஆகரிக்கு, முகமாகக் கிணைப் பொருநன், கூற்றில் அமைந்த பாடலை பலம் 393) நல்லிறையனார் பாடியள்ளார். இந்தப் பாடலில் கன்னை யாரும், ஆதரிக்காத நிலையில் இறுதியாகச், சோமன் ஆகரிக்க, வேண்டும் என்று பாடுகிறார்.
          கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமானார் சோமிய வேனாகி இருக்கட்டுவனைப் பகழ்ந்து, பாடும் பாடல் (பறம், 394) இன்று, உள்ளது, இதில், வறுமையற்ற பலவரைக்கிருக்குட்டுவன் சில நாட்கள் ஆகரிக்கான் ஒரு நாள். பல்வன், விடைபெற வேண்டி மன்னனிடம் அனுமதி கேட்டான் மன்னனும் யானையடன் பொருளும், உடன்வாக் குமானார்க்குப் பரியில் நல்கினான், யானையினைக் கண்டு, அஞ்சிய பலவர் அதனைக் திருப்பி அனுப்பினார் ஏனெனில் அது, போரில் ஈடுபட்ட, மறக்களிறு. மன்னன் திரும்பி வந்த யானைப்பரிசில் சிறியது எனப் பலவர் எண்ணினாரோ என்று நாணி மற்றொரு, யானையையம், பரிசாக, அனுப்பி வைக்கான். அதனை, வியந்து, கிணைப் பொருநன், பாடுவதாகப் பலவர் பாடியிருக்கிறார், இப்பா.ஜிலும், மன்னனை அரண்மனையில் விடியற்காலையில் பகழ்ந்து, பாடுவதால் கடைநிலையாயிற்று.
      மதுரைநக்கீரர் சோழநாட்டுப் பிடவூர் கிழான். மகன் பெருஞ்சாக்கனின், அரண்மனை வாயிலில் நின்று கான், வந்த செய்கியை அறிவிக்ககின் பயனாக நீ என்னை அழைக்க உன், மனைவியிடம் காட்டி என்னைப்போல, இட்டலவரையம் பேணுது என்று அமைந்த பறப்பாடலொன்றைப் பறம் 395) பாடியள்ளார் இப்பாடஜில் பலவர், கம்மைக் கிணைப் பொருநனாக வைக்க, மன்னனின் வாயிலில் கன் வரவை அறிவித்த செய்கியை கன்கடைக் கோன்றி யன்யை விசைக்கலிற் பறம், 395:24) என்ற பாடலுடி சுட்டும், இந்தப் பாடலில், கடைநிலை, மிகக் கெளிவரகச் சுட்டப்படுகிறது. இப்பாடலில் கொல்காட்பியர் கட்டும் கேய்வால் வருக்கம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இங்கு பலவர் பெருஞ்சாக்கன் மனைவியையம், கொடர்பபடுத்திப் பாடுவது. நக்கீரனின் பதுமை படைக்கும் கிறக்கைக் காட்டுகிறது; இப்பாட்டிலும் பாடல் முடியம் பொழுது வாழ்த்தாக முடிகிறது.
    கடைநிலை என்ற கருத்துக்குப் பொருத்தமாகச் சில பாடல்களில் பறம் 392, 393, 394, 395) வாயில் பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன. எல்லாவற்றிலும் பாடுவோரின், வறுமைக் குறிப்போ, அல்லது பிரிவில் பெற்ற குறிப்போ இடம் பெறுகிறது. கடைநிலைக் கறையில் அமைந்த பாடல்களில் பெரும்பாலானவற்றில் பரிசில் பெற்ற கலைஞன் பெறாதவனுக்கு தான் பெற்ற பெருவளத்தை விளக்கிக் கூறுவதாகவே அமைந்துள்து. இஃது ஆற்றுப்படையின் தன்மையது. எனவே, இப்பாடலின் வளர்ச்சியாகவே பொருநராற்றுப்படை அமைந்துள்ளது, எனவே ஆற்றுப்படைத் துறையிலிருந்து வளர்ந்த ஒரு கிளையாகவே இப்பாடல்கள் உள. இவற்றை அடக்கும் துறைகள் வேறின்மையின் இத்துறையுள் அடக்கிக்கூறினர் என்ற ந.வி. செயராமனின் கருத்து இவண் நோக்கத்தக்கது.
       இளம்பூரணர் உரையில் குறிப்பிடுவது போல எந்தப் பாட்டிலும் வாயிற்காவல் பற்றிய குறிப்பு இல்லை. கடைநிலை என்பதற்குப் பொருத்தமாக எல்லாப் பாடல்களிலும் கடைநிலை பற்றிய குறிப்பு இல்லை. இதனை நோக்கும்பொழுது தொல்காப்பியர் கூறிய கடைநிலைத் துறையின் கருத்து வளர்ச்சி பெற்ற நிலையையே புறநானூற்றுப் பாடல்கள் காட்டுகின்றன. கடைநிலைத்துறை நயமும் சுவையும் மிக்க ஒரு துறையாகும்; புரவலனின் அன்பையும், பலவனின் பெருமிதத்தையும் விளக்கும் துறையாகும். ஆதலின் அதனைப் பல்வேறு வகையில் பனைதற்கு, வாய்ப்புள்ளது, ஆதலால் பன்னிரு பாட்டியல் கடைநிலையை ஒரு சிற்றிலக்கியமாகக் கொண்டு இலக்கணம் வகுத்து, ஓர் இலக்கிய வகையாக உருவாக்கிவிட்டது என்பதை உய்த்துணர இயலும்.

நிறைவாக…

உரையாசிரியர்கள் மூலப்பிரதியை அனுகும் போக்கில் பல புதிய கோணங்களை முன்வைக்கும் பாங்கு, மறுவாசிப்பு மூலம் சங்கப் பாடல்களில் திணை, துறை வகுப்பதில் உள்ள சிக்கல்களையும் இக்கட்டுரையில் விவாதிக்கிறது.
உரையாசிரியர்களின் உரை செய்யும் மரபில் ‘மறுவாசிப்பு’ என்ற அணுகுமுறை இருந்தாலும் கூட மூலப்பிரதியை அலைத்தும் கலைத்தும் பொருள்கொள்ளும் போக்கு இருந்ததையும் அறிய முடிகிறது.

சங்க இலக்கியப் பனுவல்கள் தொகுப்பு முறைமையின் போது வர்க்கச் சார்பும் சமயச் சார்பும் பெரிய அளவில் தாக்கம் செலுத்தியிருப்பதால் சங்கச் செய்யுள்கள் குழப்பங்களான பொருள்கோடல்கள் நிகழ்ந்திருப்பது சான்றுப் பாடல்களின் வழியே உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடைநிலை என்ற துறை எவ்வாறு வெவ்வேறு பொருள்கோடல்களுக்கு இட்டுச் சென்றுள்ளது என்பதை புறநானூற்றில் உள்ள கடைநிலைப் பாடல்களின் வழியே கட்டுரையில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

துணை நின்ற நூல்கள்
1. அரவிந்தன். மு.வை. (2010). உரையாசிரியர்கள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.          

2. ஞானசம்பந்தன். அ.ச. (2007). இலக்கியக் கலை. சென்னை: பாவை பப்ளிகேஷன்ஸ்.

3. சிதம்பரம். சி. (2004)  உறந்தைத் தமிழ் வளம். காரைக்குடி: முதல்வன் பதிப்பகம்

4. சுசிலா.எம்.ஏ. (2001). பெண் இலக்கிய வாசிப்பு. மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.

5. சுப்பிரமணியன். ச.வே. (2013). தொல்காப்பியத் தெளிவுரை. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.          

6. சோமசுந்தரனார். பொ.வே.(உ.ஆ). (2007). குறுந்தொகை. சென்னை: சைவசித்தாந்தக்கழகம்.

7. மறைமலை அடிகள். (2017). முல்லைப்பாட்டு ஆராய்ச்சி. சென்னை: கெளரா பதிப்பகம்.

8. உ.வே.சாமிநாதையர் (உ.ஆ). (2014). புறநானூறு மூலமும் உரையும். சென்னை: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்.

9. தென்னவன் வெற்றிச்செல்வன் (க.ஆ). (2021). ”சங்கச்செவ்வியல் மறுவாசிப்பு – பெரியாரை துணைக்கோடல்”. திராவிடப்பொழில் இதழ். அக்டோபர்-திசம்பர் 2021, 45-65.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சி.சிதம்பரம்., M.A.,M.Phil., Ph.D.,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை
,
இந்திய மொழிகள் மற்றும் கிராமியக்கலைகள் பள்ளி,

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,

காந்திகிராமம் – 624 302.
திண்டுக்கல்மாவட்டம்.
முனைவர் சி.சிதம்பரம் அவர்களின் படைப்புகளைக் காண..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here