காதலாய் ஒரு முத்தம் | வெ. கெளதம்

காதலாய் ஒரு முத்தம் வெ. கெளதம்

 

காதலாய் ஒரு முத்தம்!

💋 காதலிக்கும் போது
 

ஒரு வேலையும் தெரியாது உனக்கு
 

எனக்காக கற்றுக் கொண்டாய் 
 

திருமணமானதும் எனக்காக..!


 

💋 வீட்டில் நீ பாவம்


காத்திருக்கும் அழுக்குத் துணிகள்
 

கழுவாத பாத்திரங்கள்


அடுத்த வேலை – சமையல் 
 

எனக்கும் பல பணிவிடைகள்
 

குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும்


பல பணிவிடைகள் செய்தாய்..!
 

 

💋 நான் உன்னை


பாதி இரவில்


விழித்துப் பார்த்தால்
 

களைத்துப்  போய்


குழந்தைப்  போல
 

உறங்கிக் கிடப்பாய்..!


 

💋 Sorry
 !

உன்னை அறியாமல்


தூங்கும்பொழுது


ஒரு முத்தம் கொடுத்து


தூங்கி விடுகிறது
 

என் காமம் (காதல்)
 

பல இரவுகளில்…!


 

பேருந்து பயணத்தில் !


🚌 உனக்கு தெரியாது
 

நாம் அருகருகே  அமர்ந்து
 

நெடுதூரம் பயணித்த போது
 

உன் காதல் பார்வையும்
 

உன் மூச்சுக்காற்றும்
 

ஓராயிரம் பூகம்பத்தையும்      


ஒட்டுமொத்த புயலையும்
 

உள்வாங்கியது போல


உணர்ந்தேன்..!
 

 

🚌 நீ பார்க்கும் இடங்கள்


உன் பார்வைகளை


நேரில் வாங்கத்


திறமை இல்லாமல்


திக்கு முக்காடிப் போனேன்..!
 

 

🚌 கதைப்  புனைகளையும் பேசி
 

ஜன்னலுக்கு வெளியே பார்த்தும்


எனக்கு தெரியாமல்
 

என்னை ரசிப்பதும்


கைகள் கோர்க்க ஆசை தான்


அதற்கு முதலில் ஏங்கியது


இருவரின் விரல்கள்..!
 

 

🚌 தோள்களில் 


சாய்ந்து கொள்ள


தலை ஏங்கியது 


அனைவரும் உள்ளார்


எனக் கண்கள் தயங்கியது


இறங்குமிடம் வந்தவுடன்


மீண்டும் தொடரக்கூடாதா 


இந்த பயணம் என்று


ஏங்கிய இதயங்கள்
 

இறங்கியவுடன்


மீண்டும் இந்த பயணம்


எப்போது  எனக் கேட்க துடிக்கும்

உதடுகள்..!


 

🚌 போகும்போது 


பார்க்கும் அந்த நொடிகள்


இமைகளுக்கும்  ஓய்வில்லாமல்


அந்த ஒரு நொடி


பயணத்தில்


நினைத்தேன்  


நீயே எனது வாழ்க்கை


பயணம் என்று..!


கவிதையின் ஆசிரியர்

வெ. கெளதம்


துறைத் தலைவர் மற்றும் உதவி பேராசிரியர்


தமிழ்த்துறை


சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி


விஜயமங்கலம்

 

Leave a Reply