👑 திங்களிலே பிறந்தவளாய்,
தென்பொதிகைச் சீமாட்டி!…
👑 மையலிலே திளைத்தவளாய்,
அவளுக்காக இவள்!…
👑 சீமையிலும் சிங்காரியாய்ச்
சீமாட்டியவள், பைந்தமிழே!…
👑 தாலாட்டிச் சீராட்டி,
தங்கமென வளர்ப்பாளை,
👑 தங்கசிங்க ஆசனத்தில்,
கம்பீரத் தோற்றத்திலே,
👑செங்கமல நாயகிபோல்
செந்தாமரைத் தடக்கையால்
👑 தாங்கித் தாங்கியே!
சிற்றுளியாய் வெற்றிகளைப்
👑பொழிந்திடும் அன்னைக்கு
மணிமகுடஞ் சூட்டலிலே,
👑 மாணிக்க ரத்தினமாய்
மாளா(றா)த காதலினால்
👑 செம்பிராட்டி ஒளிர்வாளே!
சொக்கத் தங்கங்களாய்!…
👑 கோடிகள் கூறினாலும்,
கோபுரத்தில் ஏற்றினாலும்,
👑 செம்மொழியாள் அவளிற்கு
உவமைகள் சொல்வதிலே,
👑கோடிகளாய்த் தயக்கங்களே!
இணையாகா இன்பத்திற்கு,
👑 இணையான உவமை கூற
வேறென்ன மொழியிலடீ?!
👑 உம் குழவி தேடிடுவாள்,
பேருவமைகளை!!…
👑 திகட்டாத் திரவியமாய்,
திரண்டு நிற்பதிலே
உமக்கென்ன அத்துனை ஆனந்தம்?!
👑 உவமைக்கு உருவகமாய்
அணிகளாவது சொல்லிவிடு!
👑 எம் பெயரிணைக்காப் புத்தகமாய்,
உம் பெயரிலே,