∅ உயிரில்லாத புத்தகம்
உயிர் பெறுகிறது
வாசகனிடம்..!
∅ புத்தகம் எல்லாம்
மௌனமாக,
பேசுகிறது..!
∅ காகிதத்திற்கு எல்லாம்
அழகு சேர்கிறது,
சொற்கள்..!
∅ வெட்டுபவனுக்கு
நிழல் தருகிறது,
மரம்..!
∅ அம்மாவின்
நகைகள் எல்லாம்
அடகு கடையில்,
படித்துக் கொண்டு இருக்கிறது..!
∅ ஐந்து நாளும் பள்ளி பாடம்
இரண்டு நாளும் விடுமுறையோ,
அதிலும் விட்டுப்பாடம்..!
∅ வயதான மரத்திற்கு
இளமை தருகிறது,
இலைகள்..!
∅ மழை முடிந்த பிறகு
மரத்தின் இலைகள் எல்லாம்,
கண்ணீர் விடுகிறது..!
∅ பட்டுப்போன மரத்திற்கு
உயிர் தருகிறது
ஏதோ ஒரு பறவை..!
∅ சுடுகாட்டிற்கு
உயிர் தருகிறது,
ஏதோவொரு பிணம்..!
∅ அப்போது தீட்டு
இப்போது நீட்டு
எப்போது விடியும்..!
∅ மீன்கள் எல்லாம் விற்றாலும்
அவன்(ள்) மேல்,
மீன் நாட்றம் போகவில்லை..!
∅ மனிதனாகப் பிறந்திருப்பதை விட
ஒரு மழை நீராக பிறந்திருக்காலம்..!
∅ பட்டாம்பூச்சிகள் போர் புரிகின்றன
இந்த மழைக் காலத்தில் தான்..!
∅ மழை துளிகள் எல்லாம்
மண்ணின்
மகத்துவம் அறிந்து பேசுகிறது..!
∅ எங்கள் ஊர் தார்ச்சாலைகள்
கண்ணீர் விடுகிறது
இந்த மழைக் காலத்தில் தான்..!
∅ என்றோ ஒரு நாள்
நீயும் நானும்
சந்திப்போம்..!
∅ காகிதமும் பேனா முனையும்
பேசிக்கொள்கிறது,
எழுத்தாளருக்கு தெரியமால்..!
∅ கோடியில் வாழ்கிறான்
தெருக் கோடியை சுரண்டுகிறன்..!
∅ பகலெல்லாம் வேலை
இரவெல்லாம் உறக்கம்
உன் வாழ்க்கை எப்போது..?
∅ சிலந்திகள் எல்லாம் வருந்துகிறது
என்னுடைய நூல் வாங்குவதற்கு
இங்கு யாரும்(மே) இல்லையே..!
∅ பல வார்த்தைகள் பேசி
அதில் ஒரு வார்த்தையும்
பயனில்லை.
∅ மின்விசிறி எல்லாம் அழுகிறது
குழந்தை எல்லாம்
நன்றாக உறங்குகிறது.
∅ நிலத்தை உழுது
உன்னவன் இன்று
அதனை விற்று உண்கின்றன
இந்த விவசாயி..!
∅ இறைய தேடுகிற
மீன்கள் எல்லாம்
மற்றவர்களுக்கு
இறைச்சியாக மாறுகிறது..!
∅ போர்க்களத்தில்
சென்று பார்த்தால்
ஈக்களும் எறும்புகளும்
சண்டைப் போடுகிறது
இறந்துபோன விலங்குகளிடம்..!
∅ ஒரு மனிதன்
அவன் வாழ்க்கையை வாழவில்லை
மற்றவர் தன்னை எவ்வாறு நினைக்கிறார்கள்
என்று நினைத்துக்கொண்டு வாழ்கிறான்..!
∅ சேற்றில் முளைத்தாலும்
தாமரை பற்றி பேசுவதற்கு
இன்று குழந்தைகள் வட்டாரம் உண்டு..!
∅ பணத்திற்கு இருக்கும் மதிப்பு
இன்று மனிதர்களுக்கு இல்லை..!
∅ அவள் என்னிடம்
சண்டை போட்டுச் சென்றால்
என்ன காரணம் என்று நினைத்தேன்
அவளைப் புரிந்துக் கொண்டு
அவளை அழைத்து வரலாம் – என
புறப்படும்போது இந்த மழையும் என்னைப்
புரிந்து கொள்ளாமல் பொழிகிறது..!
∅ நான் வைகறையில் காத்திருந்தேன்
அவள் தென்கரையில் காத்திருந்தாள்
எங்கள் இருவரும் பற்றி யோசிக்காமல்
ஆற்றில் நீர் ஓடிக்கொண்டே இருக்கிறது..!
∅ பார்க்கதான் முடிந்தது
பேசதான் முடியவில்லை
கடிதம் எழுதினேன்
கவிதை எழுதினேன்
ஓவியம் வரைந்தேன்
இவை அனைத்தும்
கனவுகள் தான்..!
∅ மழை வருவதற்கே
இயற்கை படைக்கப்பட்டன
ஏரிகள் உருவாகுவதற்கே
மழைநீர் படைக்கப்பட்டன
பெரும் வௌ்ளம் உருவாகுவதற்கே
நதிகள் படைக்கப்பட்டன
நதிகள் உருவாகுவதற்கே
கடல்கள் படைக்கப்பட்டன
வெயில் உருவாகுவதற்கே
மனிதன் படைக்கப்பட்டான்..!
∅ பழைய வீடு
பழைய நட்பு
தாத்தவின் நினைவு
என் பாட்டியின் புகைப்படம்
அந்த ஆலமரம்
நான் வாங்கிய பழைய புத்தகம்
இன்று படிக்கும் போது
புதிய நினைவுகள் கொடுக்கிறது..!
கவிதையின் ஆசிரியர்
ச. கார்த்திக்
முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர்.