Abstract
Veeramamunivar left a unique mark among the Christian priests who visited Tamil Nadu. All his books are excellent. He made some changes in writing in Tamil. He used punctuation marks correctly. He reformed the spelling. He created dictionary systems. This article is about Veeramamunivar work in Tamil.
“அயல்நாட்டுத் தமிழ் அறிஞர்களில் வீரமாமுனிவரின் தமிழ்ப்பணி”
ஆய்வுச் சுருக்கம்
தமிழகத்திற்கு வருகைதந்த கிறித்துவ பாதிரிமார்களில் வீரமாமுனிவர் தனித்த அடையாளம் பதித்தார். அவரது நூல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. தமிழில் எழுதுவதை ஒரு சில மாற்றம் செய்தார். நிறுத்தற் குறியீடுகளை சரியாக பயன்படுத்தியுள்ளார். எழுத்து சீர்த்திருத்தம் செய்தார். அகராதி முறைகளை உருவாக்கினார். வீரமாமுனிவரின் தமிழ்ப் பணி பற்றி இக்கட்டுரை அமைந்துள்ளது.
முன்னுரை
உலகம் முழுவதும் தமிழின் பெருமை சுடர் ஒளிவிட்டுப் பரவும் உயர்வான ஒரு இடத்தைப் பெற்றுள்ளது எனில் மிகையாகாது. தமிழை மறுமலர்ச்சி அடையச் செய்தவர்களும் குடத்தினுள் இருந்த விளக்கை குன்றின்மேல் இட்ட விளக்காகச் செய்த பெருமை வெளிநாட்டு அறிஞர்களின் பங்கு உண்டு என்றேச் சொல்லலாம். கிறித்துவ சமயத்தைச் சார்ந்த வெளிநாட்டவர்கள் வரும்வரை அனைத்தும் செய்யுள் இருந்தன. தமிழ் தனிமொழி இல்லை. சமஸ்கிருத்தின் ஒரு பிள்ளை என கூறப்பட்டு வந்த காலத்தில் வடமொழி வேறு, தமிழ்மொழி வேறு, தமிழ்மொழி தனி இனத்தைச் சார்ந்தது என உலகறியப் பறைசாற்றினர்கள் ஐரேப்பியர். அந்த வகையில் அயல் நாட்டுத் தமிழ் அறிஞர்கள் வரிசையில் வீரமாமுனிவர் தமிழ் இலக்கியத்திற்குச் செய்த தொண்டு பெருமைக்குரியது. அதைப் பற்றி இக்கட்டுரையில் விவரிக்கிறது.
வீரமாமுனிவர் தோற்றம்
1680 இல் நவம்பர் மாதம் 08 ஆம் நாள் பாதிக்கப்பட்டார். இவருடைய கூர்மையான நோக்கும் மொழிகளைக் கற்பதில் அவருக்கு இருந்த மிதமிஞ்சிய திறமையும் கத்தோலிக்க சமயக்குழுவிற்கு ஓர் அபூர்வச் செல்வமாய் இருந்தன. 1721-இல் நாடல் பாதிரியார் பாரீசுக்குக் கீழ்வருமாறு எழுதினார் என்ன வெனில் “பெஸ்கி பாதிரியார் தமிழை முழுமையாக அறிந்துள்ளார். அழகிய செய்யுள்களை அவர் எழுதுகிறார். வேறு எந்தச் சமயம் பணியாலும் இவ்வித்தையை இதுவரைக் காத்திருக்கவில்லை என்று குறிப்பட்டுள்ளார்.
பெஸ்கியின் தமிழ்ப்பணி
மாணவர்களில் அறிவுக் கூர்மை உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தமிழ் இலக்கணம், யாப்பு, அணி முதலியவற்றைக் கற்றுத் தந்தார். எழுப்பட்ட இலக்கண விதிகளின்படி மொழியின் ஒலிப்புத் தன்மையைக் கடினமாக இருப்பன அறிந்த இவர் ஓர் ஆசிரியனின் வாயால் கேட்டு அதை அப்படியே திரும்பத் திரும்ப ஒலித்துப் பழகினால் குறுகிய காலத்திலும் எளிமையாகவும் இருப்பதாக தம்முடைய கொடுந்தமிழ் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். எழுத்தாற்றல் என்பது ஒருமொழியின் ஒலிப்புத் தன்மையால் ஏற்படுகிறது என்பதை அவர் உணர்ந்திருத்தார். தமிழில் உள்ள நெடில் குறில் ஒலிகளில் வேறுபாடுகள் தனித்த இயல்புடையனவாக இருப்பதோடு அந்நியர் புரிந்து கொள்ளக் கடினமாகவும் உள்ளன என பெஸ்கி குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்நியர்களால் ஒலிக்கமுடியாதவை அவர்கள் மொழியிலிருந்து பெரிதும் வேறுபட்டுள்ள உயிர்மெய்எழுத்துக்கள் நான்கைக் குறிப்பிட்டுகின்றார். அவ்வெழுதுகள் ட, ண, ள, ழ என்பவையே. பாதிரியார்கள் தமக்குப்பின்னே வருகின்றவர்களின் உருதிக்காகவும், எளிதா வாய்விட்டு கூறும்நிலையை உருவாக்கவும் தமிழை எழுவதில் ஒருசில மாற்றத்தைக் கொண்டு வந்தனர். தமிழ் எழுத்துக்களில் நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்தி புதுமுனையைப் புகுத்தியவர்கள் இவர்களே. தமிழில் சொற்களைத் தனித்தனியாகப்பிரித்து படிக்கும்வழக்கத்தை முதல்முதலில் அறிமுகப்படுத்தியவர் அயல்நாட்டினர்தான். இம்மாற்றம் தமிழர்களிடையே பெரும்ஆர்வத்தை ஏற்படுத்தியது எனலாம் அம்முறையே இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சொற்களைப்பிரித்து எழுதும் முறையை உரைநடைநூல்களில் மட்டும் கையாண்டனர். நல்லதமிழ்பற்றிய ஆய்வைப் பெஸ்கி வெற்றிகரமாகச் செய்து முடித்தார் என்பதை அவருடைய செந்தமிழ் என்ற நூலின் மூலம் அறிகிறோம்.
வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்த்திருத்தம்
இத்தாலியிலிருந்து சமயப் பணிக்காக வந்த இவரின் தேம்பாவணி என்ற காப்பியத்தின் மூலம் அழியாத புகழைப்பெற்றுள்ளார் எனலாம் பலவகையிலும் தமிழுக்குத் தொண்டு செய்துள்ளார். பழங்காலத்தில் சொற்களுக்குப் பொருள்தரும் நூல்கள் அனைத்தும் செய்யுள் வடிவில் நிகண்டு என்னும் அமைப்பிலேயே இருந்தன. பலவகைப் பொருட்கள் தலைப்புகளின் கீழ் அவ்வப்பொருள் பற்றிய சொற்கள் தரப்பட்டன. ஐரோப்பிய அகரவரிசையில் சொற்கள் அனைத்தும் பொருள்தரும் முறையாகிய அகராதி முறையில் முதன் முதலில் தமிழில் நூலை உருவாக்கியவர் வீரமாமுனிவர். அந்த அகராதி தமிழ் எழுத்துக்களில் எகரத்துக்குப் புள்ளி இருந்தது. நெடில் ஏகாரத்திற்குக் கீழ் விளைவு தராமல் எழுதப்பட்டு வந்தது. அதே வகையால் குறில் ஒகாரத்திற்கும் புள்ளி இருந்தது நெடில் ஓகாரத்திற்குக் கீழ் வளைவு இல்லை. மற்ற உயிரெழுத்துக்களுக்கு ஒப்புமைப்படும் வகையில் குறிலுக்குப்புள்ளி இல்லாமல் நெடிலுக்கும் சிறிதுமாற்றம் செய்து அதாவது இன்றைய நடைமுறையில் உள்ளகுறில் நெடில் எழுத்துக்களை மாற்றி அமைத்தவர் இவரே இவர் செய்த இந்த எழுத்துச்சீர்திருத்தமே இன்றுவரை பயனுள்ளதாய் போற்றப்படுகிறது.
வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள்
இவர் படைத்த நூல்கள் ஏராளம். எனினும் தேம்பாவணியை என்ற காப்பியம் இவருக்கு புகழையும் பெருமையையும் தேடித் தந்தது. அது மட்டுமன்று திருக்காவலூர்க்கலம்பகம் கித்தேரியம்மாள் அம்மானை என்ற நூல்களையும் இயற்றியுள்ளார். தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலையும் இயற்றினார். குட்டித்தொல்காப்பியம் என போற்றப்படும் பெருமைக்குரியதாக அந்நூல் உள்ளது.
முடிவுரை
தமிழ்மொழியில் வளர்ச்சியானது ஐரோப்பிய அறிஞர்களில் வரவால் மறுமலர்ச்சி அடைந்தது. அந்தவகையில் இத்தாலி நாட்டைச்சேர்ந்த பெஸ்கி வீரமாமுனிவர் உயரியமேலான இடத்தை தம்படைப்புகளில் மூலம் தமிழ் இலக்கியத்தில் பெற்றிருக்கிறார். இவர் கொண்டுவந்த எழுத்துச்சீர்திருத்தம் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. செய்யுளில் உள்ள செய்திகளை உரைநடையில் கொண்டுவந்தவர். தமிழ்கற்று தமிழாகவே வாழ்ந்த இவரது பணிகள் சொல்லில் அடங்காது. இவருக்கு நிகர் இவரே.
பார்வை நூல்கள்
1.நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரமாமுனிவர் -பூவண்ணன்
2.தமிழ் அகராதிகளின் தந்தை வீரமாமுனிவர் – என்.வி. கலைமணி
3.வீரமாமுனிவரின் இலக்கிய ஆய்வரங்க மலர் – அருளாளர் அகத்தியன் அடிகள்
4.வீரமாமுனிவர் – ம.செ.இரபிசிங்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் வ. கலையரசி,
உதவிப் பேராசிரியர்,
பதிப்புத்துறை,
திராவிடப் பல்கலைக்கழகம்,
குப்பம். சித்தூர் மாவட்டம் 517 426.




ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

