Abstract
Among the Sangam literature’s celebrated rivers, the Vaigai (Vaiyai) is the lifeline of Madurai. The Kaveri nourished the prosperity of the Chola kingdom, the Tamiraparani enriched the Pandya country, the Palar flowed in the northern direction, the Ponniyar was a branch of the Kaveri, and the Peraru is often mentioned in Sangam works. The Chengan River is also found in many distinguished Sangam verses. The river Aru is also seen in several ancient references
The most frequently mentioned rivers in Sangam literature are the Vaigai, Kaveri, Tamiraparani, Ganga, Yamuna, Palar, Ponniyar, and Peraru. Rivers may originate from springs, lakes, melting snow streams, rainfall, or various other sources. Usually, other rivers join them, and these are called tributaries. The volume of water in a river is the sum of surface flow and the underground water flow unseen to the eye.
From Sangam age poetry to modern times, hardly any poet has failed to sing of rivers. Our forefathers described rivers with the same beauty as they did women, highlighting their charm and significance. Yet today, due to human exploitation and pollution, their condition has become pitiable. The Vaigai, which once gave life to Madurai, enriched it, and brought glory to its name, played a major role in the prosperity of the Pandya land. Like a radiant maiden, she was celebrated for her fertility, expansiveness, and eternal fame. But now, that glory is fading away. Though people have eyes, they turn a blind eye; though they have ears, they refuse to listen. Indifferent, they continue on their way.
The misery of the Vaigai, the sorrow of our rivers, and the future of our coming generations — these are matters we must reflect upon.
“வற்றாத வைகையின் வறுமை”
ஆய்வுச் சுருக்கம்
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட சிறப்பான ஆறு வைகை (வையை) – மதுரையின் உயிர் நதி.காவிரி – சோழநாட்டின் செழிப்பை அளித்த நதி.தாமிரபரணி – பாண்டிய நாட்டின் வளநதி. பாலாறு – வடக்கு பக்கம் பாய்ந்தது பொன்னியாறு – காவிரி கிளைநதி.பேராறு – சங்கத்தில் பல இடங்களில் வரும்.செங்கண் ஆறு – சிறப்பு வாய்ந்த சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகிறது.அறவாறு – பண்டைய குறிப்புகளில் சங்க இலக்கியங்களில் அதிகம் காணப்படும் ஆறுகள்:வைகை, காவிரி, தாமிரபரணி, கங்கை, யமுனை, பாலாறு, பொன்னியாறு, பேராறு ஊற்றுக்களில் இருந்தோ, ஏரிகளில் இருந்தோ, பனியாறுகள் உருகுவதன் மூலமோ, மழை நீர் வழிந்தோடுவதனாலோ அல்லது வேறு பல வழிகளிலோ ஆறுகள் உருவாகக் கூடும். பொதுவாக ஆறுகளுடன் வேறு ஆறுகள் வந்து இணைவது உண்டு. இத்தகைய ஆறுகள் சிற்றாறுகள் அல்லது துணையாறுகள் என அழைக்கப்படுகின்றன. ஆற்றில் கொண்டு செல்லப்படும் நீரின் அளவு. ஆற்றில் மேற்பரப்பில் செல்லும் நீரும், கண்ணுக்குத் தெரியாமல் நிலத்துக்குக் கீழ் செல்லும் நீரும் சேர்ந்தது ஆகும்.. சங்க கால பாடல்கள் முதல் இக்காலம் வரை ஆறுகளைப் பற்றி பாடாத கவிஞர்களே இல்லை. பெண்ணைப் போல ஆற்றையும் அதன் சிறப்புகளையும் எடுத்துக் கூறி உள்ளனர் நமது முன்னோர்கள் ஆனால், அதன் இன்றைய நிலை மனிதர்களால் மாசுபட்டும் அழிக்கப்பட்டும், அபகரிக்கப்பட்டும் வருகிறது. வைகை நீர் வாழ்வில் மதுரையை செழிக்க வைத்து புகழ் பாட வைத்த சிறப்புகளில் மிகுந்த பங்கு வைகை நதிக்கும் உண்டு. பாண்டி நாட்டு சிறப்பைச் சொல்லும் பைங்கிளி அவள். அதன் பரப்பும், செழிப்பும் ,வளமையும், மங்காத புகழும் மங்கிக் கொண்டிருக்கும் காலம் வைகைக்கு வந்துவிட்டது.கண்கள் இருந்தும், பாராமுகமாய், செவிகள் இருந்தும், கேட்கும் மனமின்றி மக்கள் அவரவர்கள் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். வைகையின் அவலமும், நதிகளின் துயரமும், நாளைய எதிர்காலமும் சிந்திப்போம்.
முன்னுரை
நதிகளும் ஏரிகளும் குளங்களும் இயற்கை வளங்களுமே மனித சமுதாயத்தை மேன்மைப்படுத்தி மனிதனின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் எதிர்கால மக்களின் வாழ்வாதாரங்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது ஆனால் இன்று ஒவ்வொரு நதிகளும் விதவிதமான கழிவுகளோடும் வண்ணச் சாயங்களோடும் தன் நிலை பிறழ்ந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மனிதன் ஆக்கிரமிப்பாலும் அசத்தப்படுத்துவதாலும் அக்கறையின்மையாலும் அந்நியனாக மாறி நதிகளுக்கு கண்ணீரைப் பரிசாகத தந்து கொண்டிருக்கிறான். நதிகளில் நீராடி. அள்ளிக் குடித்து அமுதுண்டு வாழ்ந்த காலம் போய் நதிகளில் கால் வைத்தால் நச்சுத்தன்மை நம்மைத் தாக்கி விடும் என்ற பயத்தில் மனிதன் வாழும் நிலையை உருவாக்கி விட்டான். சங்க காலப் புலவர்கள் காதல, மரம் ,வீரம் ,கல்வி, கேள்வி, ஞானம், பக்தி, ஒழுக்கம் ,பண்பாடு மட்டும் பேசவில்லை எத்தனையோ சான்றோர்களும் கவி பெரும் மக்களும் நதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தெய்வமாகவும் புண்ணிய நதியாகவும் ,பாவங்களைப் போக்கும் ஆறாகவும் சங்க கால முதல் இக்காலம் வரை பாடி வந்துள்ளார்கள். மனிதனால் இன்று கண்ணீரோடு ஓடிக் கொண்டிருக்கிறது. கங்கை தூய்மையானது காவிரி அசுத்தமானது. வைகை வலுவிழுந்தது. வாழ்க்கையில் குடி தண்ணீருக்கும் விலையானது. சங்ககாலத்தில் நதிகளுக்கு அளித்த முக்கியத்துவத்தை வைகை நதி பெற்ற சிறப்பையும் இவ்வாய்வு பகுதியில் அழிந்து வரும் இக்காலங்களில் மக்கள் நதிகளைக் காக்க வேண்டும்.நதிதான் அனைத்து உயிர்களின் வாழ்வாதாரம் என்பதை உணர வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும்.
தமிழகத்தில் ஓடும் சில ஆறுகள்
தமிழகத்தில் பல சிறிய, பெரிய ஆறுகள் பாய்கின்றன. அவற்றில் சில முக்கிய உயிர்நதிகள் ஆகும். காவிரி நதி தமிழகத்தின் மிகப்பெரிய பாசனநதியாக விளங்குகிறது. இது கர்நாடகத்தில் தோன்றி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளைச் செழிப்பாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. வைகை நதி மதுரை மாவட்டத்திற்கு உயிர்நதியாகும்; இது மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி மதுரையை ஊடறுத்து பாய்கிறது. தாமிரபரணி நதி திருநெல்வேலியும் தூத்துக்குடிப் பகுதிகளுக்கு வளம் தருகிறது.மேலும் பாலாறு வடமாநிலங்களிலிருந்து வந்து வேலூர், காஞ்சிபுரம் பகுதிகளில் பாசன வளம் வழங்குகிறது. பென்னாறு வட ஆந்திரா மாநில எல்லையிலிருந்து வந்து வடதமிழகத்தில் பாய்கிறது. வெள்ளாறு, மன்னாறு, பரமனாறு போன்ற ஆறுகள் கிழக்குக் கடலில் கலக்கின்றன. சரபணா ஆறு, சித்தாறு, குந்தாறு போன்ற பல சிறிய ஆறுகளும் கிராமப்புற பகுதிகளுக்கு குடிநீர், பாசனம் வழங்குகின்றன.இதற்குப் பிறகு நொய்யல், அமராவதி, மணிமுத்தாறு, நந்தி, வத்தாறு, பச்சை ஆறு, சிருவாணி போன்ற பல துணை ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. இவ்வாறு, தமிழகத்தில் பாயும் ஆறுகள் விவசாயம், குடிநீர், மின்சாரம் உற்பத்தி, நீர்த்தேக்கம் போன்றவற்றில் மிகப்பெரும் பங்காற்றுகின்றன.
மணிமேகலையில் வைகை
முதல் காண்டம் (காஞ்சி காண்டம்) – காஞ்சிப் புறத்தில் வாழ்ந்த மணிமேகலை தன் தாயார் மாதவியுடன் மதுரைக்கு வருகிறார். அங்கு வைகை ஆற்றின் கரையில் மக்களின் செல்வச் செழிப்பு, வியாபாரம், மன்னன் செல்வம் முதலியவை வர்ணிக்கப்படுகின்றன.
மதுரை நகர வர்ணனை
மதுரையைச் சுற்றி ஓடும் வைகை ஆறு குறித்து விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.வைகை கரையில் செழித்து வளர்ந்த வியாபார நகரம்.ஆற்றின் கரையில் வணிகர்களின் அலைச்சல், மக்கள் கூடி வியாபாரம் செய்வது. மூன்றாம் காண்டம் (அருகாண் காண்டம்) – மதுரையில் மணிமேகலை பிச்சை எடுக்கும் நிகழ்வில் வைகை ஆற்றங்கரையோரக் காட்சிகள் வருகிறது.
அமுதசுரபி நிகழ்வு
பசியால் வாடும் மக்களுக்கு உணவு அளிக்க,மணிமேகலை பெற்ற அமுதசுரபி (மந்திரக் கிண்ணம்) முதலில் மதுரையில், வைகை கரையோரத்தில் பிச்சை எடுத்து அனைவருக்கும் உணவளிக்கிறது..
மதுரைக் காஞ்சியில் வைகையின் சிறப்பு
“வைகை விரிந்த பெருநீர் வீழ்ந்து
கடற்கரை கலந்தன போன்றன;
நெய்தல் நுண்ணறிவினோடும்,
மருதம் மகிழ்ந்தன போலவும்,
பசும்புல் கொழித்தன பசும்பொன் சேர்த்தன,
மதுரை நகர் வைகைத் தண் நீரே.” (பா. 153–160) அடிக் (1) மது.காஞ்
வைகை பெருநீர் பாய்ந்து கடலில் கலக்கிறது. அதன் நீர் நெய்தலையும் மருதநிலத்தையும் வளமாக்குகிறது. பசும்புல் செழித்து பொன்னின் வளம் போன்றதாக விளங்குகிறது. அக்காலத்தில் பறந்து விரிந்த மக்களுக்குப் பசி இல்லா வாழ்வை வைகை தந்துள்ளதை அறிய முடிகிறது.
“வைகை அணையோடு வயல் மலர்ந்து,
பசும்பொன் துளித்தன பசும்பயிரே;
பாசறை பாடி வண்டுகள் சூழ்ந்து,
மணமிகு மலர்கள் மலர்ந்தனவே. (பா. 221–228) அடிக்(2) மது.காஞ்சி
வைகை அணைக்கு அருகே வயல்கள் மலர்ந்தன. பசும் நெற்பயிர் பொன்னின் துளி போலத் திகழ்கிறது. மணமிகு மலர்களில் வண்டுகள் இசை பாடுகின்றன. மலர் போல உள்ள வயல்கள் வறண்ட பாலைவனமாக மாறிக் கொண்டுள்ளது பொன்னிறமான நெற்பயிர்த் துளிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சோலை வளமான மதுரையின் வைகை நதிப் பகுதிகள் இன்று கட்டிடங்களால் உயர்ந்து நிற்கிறது.
“வைகையோடு விரிந்த மருதநிலத்து
உழவர் தொழுது பாடி உழுதனரே;
தண் நீர் பெருகி வற்றாத செழுமையால்
பசுந்தழை விரிந்து பரப்பினவே.” (பா. 301–310) அடிக் (3) மது.காஞ்சி
வைகை ஆற்றங்கரையின் மருதநிலத்தில் நீர் செல்லும் பொழுது வைகை கொண்டு வரும் மலர்களும் தாவர இலைகளும் போட்டு உழவர்கள் பாடலோடு உழுதனர். வைகைத் தண்ணீர் எப்போதும் பெருகி குறையாததால் பசுந்தழைகள் பரந்து விரிந்தன. வயல்வெளிகளிலும் செழித்து வளர்ந்தன. மண்ணின் மைந்தர்களான விவசாயிகளும் மனம் மகிழ்ந்து வாழ்ந்தனர். அன்றைய காலத்தில். ஆனால் இன்றோ அனைத்தும் பொய்த்துப் போய் வறண்ட நிலமாக நோய்வாய்ப்பட்டு புரையோடிக் காணப்படுகிறது மதுரை மண்.
“வைகை வடியும் தண் நீர் சூழ்ந்து,
மதுரை மணிமாடம் விளங்கிய நகர்;
வளம் பெருகிய வளந்தோன்றல் போல
எல்லாம் இணைந்து எழிலுற்றதே.” (பா. 511–518) அடிக்(4) மது.காஞ்
வைகை தண்ணீர் சூழ, மணிமாடங்களால் விளங்கியது . ஆனால் இன்று வைகை நதி எல்லாம் மாடுகளும் ஆடுகளும் மனித கழிவுகளும் குப்பைக் கூலங்களும் நிறைந்து வைகையினுடைய பரப்பளவு குறைந்து வறுமையாய் போனால் வைகை அன்னை. மதுரை நகரம் எழிலுறத் திகழ்ந்தது. அது செழித்து வளம் தரும் வளந்தோன்றல் போல இருந்தது வைகை ஆறு மதுரையின் உயிர்நாடியாகப் படைக்கப்பட்டுள்ளது.உழவுக்கும் வளத்துக்கும் ஆதாரமாக இருந்தது.மதுரை நகர அழகையும் வளத்தையும் வைகை பெருமிதமாக்கியது. மதுரை நகரத்தையும், அதனுடன் இணைந்த வைகை நதியையும் அழகாகப் புகழ்கிறது, மதுரைக்காஞ்சி. ஏடுகளில் மட்டுமே ரசிக்கக் கூடிய நிலையை இன்றைய மனித சமுதாயம் உருவாக்கி விட்டது நதிகளும், குளங்களுக்கும் ,நல்ல நீர் நிலைகளும் அழிவின் விளிம்பில் உள்ளது.நல்ல நீர் என்பதும் நாம் பருகக்கூடிய தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
“ஆற்றினும் பெரிது மதுரை;
அங்கே வையை பாய்கின்றது;”
அதனால் உழவர் வளம் பெருகி, வணிகரும் செழித்தனர். வைகை பாய்ந்து வந்ததால், மதுரை நிலங்கள் செழித்து, உழவர், வணிகர் அனைவரும் வளம் பெற்றனர் என்கிறது.மதுரைக் காஞ்சி (சிறப்புரை) மதுரைக்கு வைகை நதி உயிராக இருந்தது.நகரின் புறங்களில் வைகை வழியாக மண் வளம் பெற்றதால், அரிசி, பண்டங்கள் மிகுந்தன.வைகையைக் கடந்து வந்த வணிகர்கள் மதுரையைப் புகழ்ந்தனர்.
பதிற்றுப்பத்து
பாண்டியர்களின் தலைநகராக இருந்த மதுரைக்கு வைகை முக்கியம் சில பாடல்களில் வைகை கரையில் பாண்டிய மன்னர்கள் யானை, குதிரைப் படையுடன் விளங்குவர் என வர்ணிக்கிறது.வைகையை அடிப்படையாகக் கொண்டு பாண்டியர் வளம் பெருகுவதாகக் கூறுகிறது.
அகநானூறு & புறநானூறு
பல இடங்களில் “வையை” கரையில் நடந்த போர்கள், விழாக்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அகநானூறு பாடல்களில் காதல் பின்னணியில் வைகை கரையைச் சுட்டி, காதலர்கள் சந்திக்கும் இடமாகக் கூறப்பட்டுள்ளது. புறநானூற்றில், வைகையைத் தாண்டி வந்த போர்த் தளங்கள், பாண்டியர் வெற்றி விழாக்கள் சொல்லப்படுகிறது.
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தில் வைகை நதி பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் வைகையின் அழகும், நீரின் பெருக்குமும், மதுரையின் வளமும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் வரும் வைகை பற்றிய பாடல் வரிகள்,
சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் (வைகை நதி வர்ணனை)
“வைகையொடு புனல்படர் பாண்டிமதுரை
பூக்கள் தொடுத்து நிறைந்த புலி நகர் எய்தி
நீரில் உலாவிய நெடுங்குழல் யாழ் இசை
காணும் இடமெலாம் இனிதாகும்” சிலம்பு அடிக்(4)
வைகை வழியொடு வரும்பெருங் கணங்கள்
மதுரை மணிமாடம் சூழ்ந்து விரிந்தன
பெருகிய புனலினில் பெண்மணி கூத்தாட
கரையொடு கரையெனக் களிப்புற நின்றன
வைகைத் துறைமுகம் வாழ்விடம் பெற்றனர்
ஆயர்தம் குழுவினர் ஆட்டமாடினர்
மணியொலி முழங்கிய மதுரைத் துறைமுகம்
அணியொடு விளங்கிய அற்புத நகர்”
வைகை நதியின் பெருக்கால் மதுரை வளமுடன் காட்சியளிக்கிறது. வைகையில் நீராடும் பெண்கள் பாடல் பாடி விளையாடுகின்றனர். நதிக்கரையில் யாழிசை, நடனங்கள், மக்களின் ஆனந்தம் நிறைந்து காணப்படுகிறது. வைகையால் மதுரை “மணிமாட நகரம்” எனப் பெருமைப்படுகிறது. கண்ணகி மதுரையைச் சுட்ட அத்தியாயத்தில், வைகையின் அருகிலுள்ள மதுரை நகரமே எரிந்து சிதைகிறது. வைகை நகரின் அடையாளமாகக் காணப்படுகிறது. தொல்காப்பியம் (செய்யுள் இலக்கணம்) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணையில் மருத நிலம் குறித்துப் பேசும்போது, வைகை நதியின் பாசன வளம், உழவர் வாழ்க்கை முதலியவை எடுத்துரைக்கப்படுகிறது. தவிர வைகை இடம் பெற்றுள்ளன.
மருதநிலத்தின் சிறப்பு ஆறுகள்
ஆற்றின் மூலத்தில் இருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் ஆறுகள் பொதுவாகக் கடலிலோ அல்லது பெரிய ஏரிகளைப் போன்ற நீர் நிலைகளிலோ கலக்கின்றன. வரண்ட பகுதிகளில் ஆற்று நீர் ஆவியாவதன் மூலம் இவ்வாறான நீர் நிலைகளை அடையு முன்னரே வறண்டு விடுவது உண்டு. சில ஆறுகள் மண்ணுக்கு ஊடாகவோ, ஊடுசெல்லவிடும் பாறைகளூடாகவோ நிலத்துக்குள் உறிஞ்சப்படுவது உண்டு. இது நிலத்தடி நீராகத் தங்கிவிடுகிறது. தொழிற்சாலைகளுக்கும், நீர்ப்பாசனத் தேவைகளுக்கும் பெருமளவில் நீரை எடுப்பதனாலும் அதன் இயற்கையான முடிவிடத்தை அடையும்முன்பே ஆறு வற்றிவிடுவதையும் காணலாம். ஆற்றுக்கு நீரை வழங்கும் பகுதி அல்லது ஆற்றினால் வடியச் செய்யப்படும் நிலப்பகுதி வடிநிலம் அல்லது நீரேந்து பகுதி எனப்படுகின்றது. ஆறுகளுக்கு மலைகளுக்கும் இடையில் அன்று அணைகளை கட்டினார்கள் நம் முன்னோர்கள். மக்கள் பயன்படுத்தும் வாழ்வாதாரமாக நதிகள் இருந்தது. மனிதனின் ஆசைகளால் குளங்களும் ஆறுகளும் வறுமையாகி நிற்கிறது.
சங்க புலவனின் சிறப்பு
குறுநிலமன்னர்களையும், அரசர்களையும், புகழ்ந்து வந்தால் பொன் பொருள் கிடைக்கின்ற அக்காலத்தில் அதையும் தாண்டி நற்புலவர்கள் பல நமது நாட்டில் ஓடுகின்ற நதிகளையும், கடல்களையும், இயற்கையையும் பாடல்களில் பதிவு செய்தனர். நதிகளால் ஏற்பட்ட வளமை வாழ்க்கை, பொருளாதார நிலை, சமுதாய மேம்பாடுகள் வாழ்க்கைத்தரம் வாழ்வியல் சூழல் அமைதியாகவும், மகிழ்வாகவும் அமைந்திருந்தது.
வைகையின் வறுமையின் கொடுமை
“வைகை பெருகப் பொழில்கொள் மதுரை”சிலம்பு அடிக்.குறி (5)
(மதுரையின் செழிப்பு வைகையின் நீரால் வளர்ந்தது எனக் கூறுகிறது) வளமான சந்தை பற்றிய வரிகள்
“வைகைத் துறை வணிகம் வளர்ந்து”
(வைகைத் துறையில் வணிகம் மிகுந்தது) வளம் குறையாத மதுரை வற்றாத வைகை வளம் குன்றா மதுரை” (வைகை வற்றாததால் மதுரையின் வளமும் குறையவில்லை)
“வைகையருகின் மகிழ்ந்தோர்தம் விளையாட்டு”
(வைகை கரையில் மக்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினர்) சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில், “வைகை” (அதாவது வைகை ஆறு) பற்றிய தொடர்ச்சி மற்றும் உள்தர்ம உணர்ச்சிகளை எழுத்தாளர்கள் அழகாகக் கேள்விப்பட்டுள்ளனர். குறிப்பாக, புலவர்கள் வர்ணிக்கும் விதத்தில்: கோவலனும் கண்ணகியும் மதுரையை அடைகின்றனர். வையை நதியைக் கடக்க அதனைச் சார்கின்றனர். பூக்கள் நிறைந்த அந்த ஆறு தன் நீரைக் கரந்து செல்கிறது. கண்ணகி கோவலனுக்காக வருந்தும் வைகை தன் கண்ணிரை உள்ளடக்கி மறைத்துச் செல்வதைப் போல அதன் நீர் வெள்ளம் மறைந்து கிடக்கிறது.” இதில்: “பூக்கள் நிறைந்த உயர்ந்த அணை ஊற்று… தன் நீரைக் கரந்து செல்கிறது” — என்று சீரிய அழகுடன் செல்கிறது., “கண்ணகி கோவலனுக்காக வருந்தும் வைகை” என்று, மனிதன் (கண்ணகி) மற்றும் இயற்கை (வைகை ஆறு) ஒருங்கிணையும் உணர்ச்சியாக வெளிப்படுகிறது.அதன் நீர் “கண்ணிரை” (இரக்கத்தாலும் அன்பாலும்) மறைத்து செல்கிறது என்று எழுத்தாளர் சுட்டிக்காட்டுகிறார் — இது வைகையின் வறுமைக் காட்சியாகும்.இவ்வாறு, மனவியல் முகத்திலிருந்து விவசாய அல்லது இயல்பியலில் அமைந்த “வறுமை” அல்ல;இது உணர்ச்சி சார்ந்த உருவகம், வறுமையும் துயரமும் காட்டும் அழகிய மொழி வடிவமென பொருள் கொள்ளலாம் அன்றைய காலகட்டத்தில் இது பொருந்தும்.ஆனால் இன்றோ இதன் நிலை முற்றிலும் மாறுபட்ட அமைந்துள்ளது.. “கோவலனும் கண்ணகியும் மதுரையை அடைகின்றனர். வையை நதியைக் கடக்க அதனைச் சார்கின்றனர். பூக்கள் நிறைந்த அந்த ஆறு தன் நீரைக் கரந்து செல்கிறது. கண்ணகி கோவலனுக்காக வருந்தும் வைகை தன் கண்ணிரை உள்ளடக்கி மறைத்துச் செல்வதைப் போல அதன் நீர் வெள்ளம் மறைந்து கிடக்கிறது. ”சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் (புனைவியல் வர்ணனை ஆகும். இலக்கியத் தரம் சங்க இலக்கியத்தின் அழகிய வடிவமான உணர்ச்சி எடுக்கும் உலக கோணத்தை நிறைவேற்று உள்ளது.
பரிபாடலில் வைகை நதி
பரிபாடலில் வைகை நதியைப் புகழ்ந்து பாடியுள்ள பாடல்கள் சில உள்ளன. வைகையின் அழகையும், அதன் கரையோர வாழ்வையும், செழிப்பையும், சஞ்சாரிகளின் மகிழ்வையும் விவரிக்கின்றன.
“வைகை நீர் பரப்பின்
நளிர்நிறைத் தண் புனல்,
மைகொள் கமழ் தும்பை
மலரொடு படர்ந்தன,
அம்புயம் புனைசேர்
அன்னம் தம் குடியென
தும்பையொடு புணர்ந்து
சூழ்ந்தன கொக்குகள்.” அடிக்குறி.(6)பரி
வைகை நதியின் நீரில் மிகுந்த குளிர்ச்சியுடனும் இனிமையுடனும் ஓடும் தன்மை சொல்லப்படுகிறது.அதன் கரையில் தும்பை மலர்கள் மலர்ந்து மணம்கொடுக்கின்றன.தாமரை மலர்கள் (அம்புயம்) மலர்ந்து நிற்க, அதனுடன் சேர்ந்து அன்னப்பறவைகள் குடியிருந்து விளையாடுகின்றன.தும்பை மலர்களோடு கூடியவாறு, கொக்கு பறவைகளும் அங்கங்கு சூழ்ந்து காணப்படுகின்றன.இதன் மூலம் வைகை நதி ஒரு சாதாரண நதி அல்லாமல், இயற்கையின் அழகை நிரப்பிய செழிப்பின் அடையாளமாகவும், பறவைகளின் வாழ்விடமாகவும், மணமிகு மலர்களின் பூங்காவாகவும் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. சங்க இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்ட வைகை நதி இன்று வளமை குன்றி ,தன்னிலை பிறழ்ந்து, அளவில் சுருங்கி, அழகை இழந்து, அவலத்தைச் சுமந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
முடிவுரை
வைகை நதி சங்க காலத்தில் உயிரோடு பாய்ந்து மதுரைக்கு செழிப்பையும் வளத்தையும் அளித்தது. புலவர்கள் பாடல்களில் வைகை இயற்கையின் அழகு, விவசாய வளம், வணிகச் செழிப்பு, மக்களின் ஆனந்தம் எனப் பல்வேறு பரிமாணங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் வைகை “மதுரையின் உயிர்நாடி” எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய நிலையில், மனிதனின் அக்கறையின்மை, மாசுபடுத்தல், ஆக்கிரமிப்பு ஆகிய காரணங்களால் வைகையின் நீர்ப்பெருக்கு குறைந்து, அதன் இயற்கை வளமும், பழம்பெருமையும் சிதைந்து வருகிறது.ஆகவே, நதிகள் என்பது வெறும் நீரோட்டம் அல்ல; அவை மனித வாழ்வின் அடித்தளம், பண்பாட்டு அடையாளம், பசுமையின் மூலாதாரம். வைகை உள்ளிட்ட நதிகளைப் பாதுகாப்பது நம் வருங்கால சந்ததியின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் கடமையாகும். சங்க காலத்தில் புலவர்கள் வைகையைப் புகழ்ந்தது போல, இன்றைய காலத்தில் நாம் அதை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். “வைகை வற்றாதால் மதுரை வளம் வற்றாது” என்ற பழமொழி போல, நதிகளின் வளம் தான் நம் வாழ்வின் வளம் என்பதனை உணர்ந்து செயல்பட வேண்டியது நம் கடமை. எனவே, வைகையும், தமிழகத்தின் பிற நதிகளும் காக்கப்பட்டால் மட்டுமே நமது பண்பாட்டும், சமூக வளர்ச்சியும், எதிர்கால தலைமுறையின் வாழ்வாதாரமும் உறுதி பெறும்.
துணை நூற்பட்டியல்
1.மதுரைக் காஞ்சி, இளங்குமரன், இரா., பதிப்பாளர், புரட்சிக் கவிஞர் மன்றம் : மதுரை, பதிப்பு ஆண்டு, 2014
2.முனைவர் ரா. சீனிவாசன், சிலப்பதிகாரம் மூலமும் திறனாய்வும், அணியகம் 3, செல்லம்மாள் தெரு, செனாய் நகர், சென்னை.
3.முனைவர் இரா. சாரங்கபாணி, பரிபாடல், முல்லை பதிப்பகம் .
4. புலியூர்க் கேசிகன், பரிபாடல், திருமகள் நிலையம், கௌரா பதிப்பகம்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் த.சங்கீதா
உதவி பேராசிரியர்,
தமிழ்த்துறை,
புனித பீட்டர் உயர்கல்வி மற்றும்
ஆராய்ச்சி நிறுவனம் ஆவடி, சென்னை.