பண்டைய மனிதன் தன் வாழ்வோடு பின்னிப் பிணைந்த இயற்கை எழிலையும், காடு, மலை, விலங்கு, பறவை போன்றவற்றையும் நேரில்கண்டு, உணர்வால் உந்தப்பட்டு பெருமலைகளிலும், சிறு குன்றுகளிலும், இயற்கைக் குகைகளிலும் உருவாக்கிய வண்ணக் கோடுகளே உன்னத ஓவியங்களாயின. இவையே ஓவியக் கலையின் தொடக்கச் சான்றுகளாக அமைந்துள்ளன. இந்நிகழ்வு மனித இனம் நாகரிகத்தின் தொடக்க நிலையில் இருந்த நாளிலிருந்து நடைபெற்று வந்துள்ளது. பழங்கால மாந்தர் வாழ்ந்த இயற்கைக் குகைகளில் வேட்டைக் காட்சிகளும் பிறவும் காணப்படுகின்றன. பழைய கற்காலம் தொட்டு மனிதன் தம்முடைய தொழில் திறன், சிந்தனைத் திறன், பேச்சுத் திறன் ஆகியவற்றில் படிப்படியாக முன்னேறி கி.மு. 500 அளவில் மிகச்சிறந்த நாகரிக நிலையை எட்டியிருக்கிறான். தொல் பொருளாய்வில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களின் மேல் பல எழுத்துருவங்களும் பிற உருவங்களும் காணப்படுகின்றன. ஒலி வடிவ எழுத்துக்களுக்கு முன்னர் படவெழுத்துக்கள் (pictograph) வழக்கிலிருந்தன. அவன் அவ்வாறு நாகரிக நிலையில் முதிர்ச்சி அடைந்ததின் அடையாளமே இன்று நமக்குக் கிடைத்திருக்கின்ற சங்க இலக்கியங்கள் ஆகும்.
சங்க இலக்கியங்கள், ஓவியக் கலையின் சீர்சான்ற மரபினை நமக்கு எடுத்தியம்புகின்றன. ஓவியம், ஓவம், ஓவு என்பன ஒரு பொருட் கிளவியாகும். ஓவியம் என்னும் சொல்லை மிகுந்த அழகு என்னும் பொருள் கொண்டதாக அன்றைய சான்றோர் வழங்கினர். அவை தொடர்பான செய்திகள் இலக்கியங்களில் நிரம்பக் காணப்படுகின்றன.
திறவுச் சொற்கள் : சங்க இலக்கியங்கள், ஓவியம், நாகரிகம்
முன்னுரை
கடந்த கால் நூற்றாண்டுக்குள் தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. இவை விழுப்புரம், வட ஆர்க்காடு, திண்டுக்கல், மதுரை, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கிடைத்துள்ளன. மல்லப்பாடி, கீழ்வாலை, செத்தவரை, பாடியேந்தல், கொல்லூர், ஆலம்பாடி, நாயனூர், சிறுமலை, திருமலை, கிடாரிப்பட்டி அழகர்மலை, வேட்டைக்காரன் மலை, தாளப்பள்ளி, சையது பாஷா மலை, மல்ல சமுத்திரம், மகாராஜ கடை, கொணவக் கரை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினக்குடி சீகூர், சந்திரபுரம், இரத்தினகிரி, சென்னராயன் பள்ளி, நெகனூர் பட்டி ஆகிய ஊர்களில் குகை மற்றும் பாறைகளில் வரிக்கோடுகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவ்வகைப் பாறை ஓவியங்கள் அனைத்தும் பண்டைய மக்களின் அளவிட முடியாத ஓவிய ஆற்றலை அறிந்து கொள்வதற்கான அடிப்படைச் சான்றாக அமைந்துள்ளன. அவர்கள் தேர்ந்தெடுத்த, வெள்ளை, செங்காவி, மஞ்சள் காவி போன்ற வண்ணங்களும், சித்தரிக்கப்பட்டுள்ள மனிதன், விலங்கு, பறவை முதலியவற்றின் இயக்கங்களும், அவ்வோவியங்களில் ததும்பும் உயிர்த் துடிப்பும் நம்மை வியப்பிலாழ்த்துவையாக அமைகின்றன. இவ்வகை ஓவியங்கள் சங்க கால மக்களின் பண்பாட்டையும், வாழ்க்கை முறையையும் படம் பிடித்துக் காட்டுபவையாக அமைகின்றது.
முதன் முதலாக கண்டறிந்த பாறை ஓவியங்கள்
இந்தியாவில் எ. கார்லைல், ஜெ. காக்பர்ன் போன்ற தொல்லியல் ஆய்வாளர்கள் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முதன்முதலாக கற்கால மனிதர்களின் ஓவியங்களைக் கண்டறிந்தனர். தொன்மையான குகை ஓவியம் ‘பிம்பெட்கா’ என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் முதன்முதலாக 1980-இல் மல்லப்பாடியில் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குதிரை மீது அமர்ந்திருக்கும் மனிதன் கையில் எறிவேல் ஒன்றை ஏந்தி எதிரே உள்ளவனைக் குறி வைப்பது போன்ற ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இதனை வேட்டைக்காட்சி என்றும் போர்க்காட்சி என்றும் கூறுவர். இப்பாறை ஓவியங்களுக்கு அருகில் நடந்த அகழ்வாய்வில் புதிய கற்காலக் கருவிகள் (Neolithic Stones) கிடைத்துள்ளன. எனவே இத்தகைய ஓவியங்கள் புதிய கற்காலத்தைச் சார்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
ஓவியன்
வண்ணங்களின் துணை கொண்டு எண்ணங்களுக்கு உயிர் கொடுப்பவன் ஓவியன் என்றழைக்கப்படுகின்றான். இவனே கண்ணுள் வினைஞர், வித்தகர், சித்திரக்காரர் என்று அழைக்கப்படுகின்றனர். ஓவிய நூலில் புலமை பெற்றவன் “ஓவியப் புலவனென்றும்’, அக்கலைஞர் குழாம் ‘ஓவியமாக்கள்’ என்றும் சங்க இலக்கியங்களில் கூறக் காண்கிறோம். இத்தகைய கண்ணுள் வினைஞரை “நோக்கினார் கண்ணிடத்தேதம் தொழிலை நிறுத்துவோர்’ என்று நச்சினார்க்கினியர் கூறுவர்.
ஓவியம்
பல வண்ணக் கலவையால் துகிலிகைக் கொண்டு படைக்கப்பட்ட கண்கவர் காட்சி, ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், பாடாம், வட்டிகைச் செய்தி என்றும் அழைக்கப்பட்டன.
ஓவியத்தின் வாயிலாக சங்ககால மாந்தர்கள் கருத்துக்களைப் புலப்படுத்தினர். காலப் போக்கில் இவ்வோவியங்களே வரி வடிவானமையை வரலாறு காட்டும். இவற்றை ஓவிய எழுத்துகள் என்பர். இவ்வகையில் எழுத்து என்ற சொல் சங்க இலக்கியங்களில் ஓவியம் என்ற பொருளில் வழக்கப்பட்டதை நம்மால் அறிய முடிகிறது.
ஓவியங்கள் மாடத்திலும், கூடத்திலும் மணடபத்திலும், அம்பலத்திலும் தீட்டப் பெற்றிருந்தன என்பதைச் ‘சித்திரக் கூடம்’ , ‘சித்திரமாடம்’, ‘எழுத்துநிலை மண்டபம்’, எழுதெழில் அம்பலம் என்ற சொற்களால் அறிகிறோம். கலையுள்ளங் கொண்ட பாண்டிய மன்னனொருவன் சித்திர மாடத்தில் இறந்துபட்டான் என்பதைச் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று புறநானூறு குறிக்கிறது. அது போன்று அரசர் தம் அரண்மனை அந்தப் புரங்களிலும் பலவண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன என்பதை நெடுநல்வாடை வரிகள் நமக்குத் தெளிவாக்குகின்றன. மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் திருக்கோயில் சுவர்களில் பலவகைச் சித்திரங்கள் வரையபெற்றிருங்கின்றன என்பதை,
இருசுடர்நேமி
ஒன்றிய சுடர்நிலையுள் படுவோரும்
இரதிகாமன் இவனிவன் எனா அ
விரகியர் வினவ வினாவிறுப் போரும்
இந்திரன் பூசை இளவகலிகை யிவன்
சென்ற கவுதமன் சின்னுறக் கல்லுரு
ஒன்றிய படியிதென்றுரை செய்வோரும்
இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம்
என்ற பாடல் வரிகளால் அறிகிறோம். மேலும் மணிமேகலையில்,
சுடுமண் ணோங்கிய நெடுநிலை மனைதொறும்
மையறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை யுயிர்களு முவமங் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தக ரியற்றிய
கண்கவ ரோவியங் கண்டு நிற்கு நரும்
என்று செல்வர் வாழும் வளமனைச் சுவர்கள் மீதும், மாடங்கள் மீதும் வானவர் முதல் எல்லா உயிர்களையும் குறிக்கத்தக்க ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தது என்பதை சங்க இலக்கியங்களின் மூலம் நாம் அறியலாம். சுடுமண் சுவர்கள் மீது வெண்சுதை பூசினர். வெண்சுதை மீது செஞ்சாந்து கொண்டு பூசினர். இதன் மேல் அழகிய பூங்கொடிகளை ஓவியமாகத் தீட்டினர் இத்தகைய சுவர்கள் செம்பைப் போன்று உறுதி படைத்தும், கழையழகு கொண்டதுமாக அமைந்திருந்ததை இலக்கியங்களின் மூலம் நாம் அறியலாம்.
சுவர்களில் மட்டுமல்லாது திரைச் சீலைகளிலும் கிழிகளிலும் கவின் மிகுக் காட்சிகள் தீட்டப்பட்டிருந்தன. நாடக அரங்குகளில் திரைச் சீலைகளில் பல வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. இதனை ‘ஓவிய எழினி’ என்று இலக்கியம் கூறும். மணிமேகலை ஆசிரியர்
செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்
எரிமல ரிலவனும் விரிமலர் பரப்பி
வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கை படாம்போர்த் ததுவே
ஒப்பத் தோன்றிய உவவனம் (மணி. மலர் வனம் : 165-69)
என்கிறார்.
குகை ஓவியங்கள்
திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலைப் பகுதியில் பல ஓவியங்கள வரையப்பட்டுள்ளன. இத்தகைய ஓவியங்களில் வேட்டையாடுதல், விலங்குகளின் சண்டை, மனிதர்களின் சமய சடங்குகளில் ஈடுபட்டிருத்தல், காட்டுப் பூனை ஒன்றைப் பலியிடுதல் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள மானின் உருவ அமைப்பு பிற குகை ஓவிய அமைப்பினை ஒத்துள்ளது. இக்கண்டுபிடிப்பினைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் கிடாரிப்பட்டி, அழகர் மலை, திருமலை, கருங்காலக்குடி, திருவாதவூர், நாகமலை, திருமயம் கோட்டை போன்ற பகுதிகளில் குகை ஓவியங்களும், பாறை ஓவியங்களும், குகைத்தள ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது சிறப்புக்குறிய செய்தியாகும்.
புனையா ஓவியம்
வண்ணங் கலவாமல் வடிவம் மட்டும் கரித்துண்டுகளால் கோடுகளாகக் காட்டப்படுதலைப் புனையா ஓவியம் என்பர். கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளில் பின்பற்றப்பட்ட இம்முறை (கரித்துண்டு ஓவியம்) இன்றைய 20-ஆம் நூற்றாண்டில் ‘மென் கோட்டு ஓவியம்’ என்ற பெயரில் நடைமுறையில் இருத்தல் குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஓவியன் தான் எண்ணிய படத்தை வண்ணம் புனைந்து தீட்டுவதற்கு முன் கற்பனை ஓவியத்தைப் புனையா ஓவியமாகத் தீட்டுதல் பண்டைய வழக்கமாக இருந்தது. இத்தகைய புனையா ஓவியத்தைப் ‘புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்’ என நக்கீரரும், புனையா ஓவியம் போல நிற்றலும்’ எனச் சாத்தனாரும் கூறியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.
சங்ககால மக்கள் வீட்டையும் ஓவியங் கொண்டு அலங்கரித்தனர். ‘ஓவத்து அன்ன வினைபுனை நல் இல்’ (அகம் 98:11) என்று செல்வர் தம் இல்லம் என்று சிறப்பிக்கப்பட்டிப்பதைக் காணலாம். ‘ஓவத்தன்ன இடனுடைவரைப்பிற் புறம்’ என்று புறநானூறும் புகழ்ந்து கூறும். மேலும் சங்ககால ஓவியர்கள் இயற்கைக் காட்சிகள், சமுதாய வாழ்க்கை என்றிவற்றை மட்டுமின்றி, சோதிட, வான சாஸ்த்திர நூல் மற்றும் புராண இதிகாசங்களையும் கற்றறிந்து அழகுறத் தீட்டினர். ஆடு முதலான பன்னிரண்டு ராசிகளையும், விண் மீன்களையும் வரைந்ததை,
புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்ணிலை மருப்பி னாடு தலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலன் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பின் செலவனோடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிதுயிரா
என்று நெடுநெல்வாடை கூறுகிறது.சங்க காலச் சாதாரண நிலையில் இருந்த மகளிரும், பெருங்குடிப் பெண்டிரும், ஆடல் அணங்குகளும் ஓவியம் தீட்டினர். நாட்டிய மகள் மாதவி ஓவியக் கலையை நன்கு அறிந்திருந்தாள் எனச் சிலம்பதிகாரம் எடுத்துரைக்கின்றது.
முடிவுரை
சங்க காலத்தில் தொல் மாந்தர்கள் தங்களது பண்பாட்டு வரலாற்றை இத்தகைய ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தினர் என்பதோடு மட்டுமல்லாமல் பண்பாட்டுப் பாதையில் அடியெடுத்துவைத்த நம் முன்னோர் ஓவியத்தின் வழியேதான் முதன் முதலில் தம் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள் என்பதும் அதன் வெளிப்பாடே பண்டைய மாந்தர்களையும் அவர்களின் நாகரிகப் பின்புலத்தையும் அறிந்துகொள்ள சிறந்ததோர் சான்றாக அமைந்துள்ளது என்பது சிறப்பிற்குரியது.
துணை நின்ற நூல்கள்
1.சாமி.சிதம்பரனார் (2011) : தமிழர் வாழ்வும் பண்பாடும், சாரதா பதிப்பகம், சென்னை – 600 014
2.முனைவர் அ. பாண்டுரங்கன் (2016) : சங்க இலக்கியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். 41-டீ, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098
3.முனைவர். அ.தட்சிணாமூர்த்தி (2019) : தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஐந்திணைப் பதிப்பகம், AP 1108, தென்றல் காலனி, மேற்கு அண்ணாநகர், சென்னை – 600 040
4.இரா.பவுந்துரை : தமிழகப் பாறை ஓவியங்கள் பக் – 79.
5.நா.சுலைமான் : பாண்டி மண்டலத்தில் குகை ஓவியங்கள் – நுண் கலை, மலர் 7 – இதழ் 2 பக் 26,32.
ஒரு தொடரில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத் தொகை எனப்படும்.
(எ.கா) ஊட்டி சென்றான்
இத்தொடர் ஊட்டிக்குச் சென்றான் என விரிந்து நின்று பொருள் உணர்த்துகின்றது. இரு சொற்களுக்கும் இடையில் ‘கு’ என்னும் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருளை உணர்த்துவதால் இது ‘வேற்றுமைத் தொகை’ எனப்படும்
வேற்றுமைத் தொகைத் தொடர்
உவம உருபு
வேற்றுமைத்தொகை
பால் அருந்தினான்
ஐ
இரண்டாம் வேற்றுமைத் தொகை
தலை வணங்கினான்
ஆல்
மூன்றாம் வேற்றுமைத்தொகை
பள்ளி சென்றான்
‘கு‘
நான்காம் வேற்றுமைத்தொகை
ஊர் நீங்கினான்
இன்
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
முருகன் நூல்
அது
ஆறாம் வேற்றுமைத் தொகை
கடல்வாழ் உயிரிகள்
கண்
ஏழாம் வேற்றுமைத்தொகை
முதல் வேற்றுமைக்கும், எட்டாம் வேற்றுமைக்கும் உருபு கிடையாது. ஒரு தொடரில் வேற்றுமை உருபும், அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது ‘உருபும் பயனும் உடன்தொக்க தொகையும்‘ என்பர்.
2.வினைத்தொகை
காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்சவிகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் ‘வினைத்தொகை’ எனப்படும். காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகை ஆகும். வினைப்பகுதியும் அடுத்த பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும்.
(எகா) ஊறுகாய், விரிகடல்
இவற்றில் ஊறு, விரி என்பவை வினைப்பகுதிகள். இவை முறையே காய், கடல் என்னும் பெயர்ச் சொற்களோடு சேர்ந்து பெயரெச்சங்களாயின. மேலும், இவை ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காப் முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள் எனத் தருகின்றன. காலம் காட்டும் இடைநிலைகள் இப்பெயரெச்சங்களில் தொக்கி இருக்கின்றன.
(எகா) சுடுசோறு, குடிநீர்
3.பண்புத் தொகை
பண்புப்பெயருக்கும் தழுவிநிற்கும் அது பெயர்ச் சொல்லுக்கும் இடையே ‘மை’ என்னும் பண்பு விகுதியும் ‘ஆகிய’, ‘ஆன’ என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
(எகா) செந்தாமரை – செம்மையான தாமரை
வட்டக்கல் – வட்டமான கல்
இன்சொல் – இனிமையான சொல்.
இத்தொடர்களில் செம்மை, வட்டம், இனிமை என்பன பண்புப் பெயர்கள் தாமரை, கல், சொல், என்பன பெயரைத் தழுவி நிற்கும் பெயர்ச்சொற்கள் இவ்விரண்டிற்கிடையில் ஆகிய, ஆன, என்னும் பண்புருபுகளும், மை என்னும் பண்பு விகுதியும் மறைந்து வந்துள்ளதால் இவை ‘பண்புத்தொகை’ ஆகும்.
4.இருபெயரொட்டுப் பண்புத்தொகை
சிறப்புப் பெயர் முன்னும், பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வருவது இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகும்
(எ.கா) தமிழ்மொழி
இத்தொடர் தமிழாகிய மொழி என விரிகிறது. மொழி என்பது அனைத்து மொழிகளையும் சுட்டும் பெயராகவும், தமிழ் என்பது பல மொழிகளுள் ஒன்றாகிய தமிழைக் குறிப்பாகச் சுட்டுவதால் சிறப்புப் பெயராகும். இவ்விரு சொற்களுக்கும் இடையே ‘ஆகிய’ என்னும் பண்பு உருபு மறைந்து வந்துள்ளதால் இது இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகும்.
(எ.கா) பனைமரம், புளிச்சைக்கீரை
5.உவமைத் தொகை
உவமைக்கும் உவமேயத்திற்கும் (பொருளுக்கும்) இடையில் போல, போன்ற, நிகர, அன்ன என்னும் உவம உருபுகளுள் ஏதேனும் ஒன்று மறைந்து உருவது உவமைத் தொகையாகும்.
(எ.கா)மலர்க்கரம்
மலர் போன்ற கரம் எனப் பொருள் தருகிறது.
மலர் -உவமை.
கரம் – உவமேயம் (பொருள்)
இடையில் ‘போன்ற’ என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளதால் இது உவமைத் தொகையாகும்.
6.உருவகம்
உவமையும் உவமிக்கப்படும் பொருளும் வேற்றுமை தோன்றாதபடி இரண்டுமே ஒன்றுதான் என்பன போல் வருவது உருவகம் எனப்படும். பொருள் முன்னாலும் உவமை பின்னாலும் வரும்.
இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வருவது ‘உம்மைத் தொகை’ எனப்படும்.
(எ.கா) இரவு பகல், ஆடு மாடு, வெற்றிலை பாக்கு.
மேற்கண்ட தொடர்கள் இரவும் பகலும், ஆடும் மாடும், வெற்றிலையும் பாக்கும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன. இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருளை உணர்த்துவதால் இது ‘உம்மைத் தொகையாகும்.
8.எண்ணும்மை
‘உம்’ என்னும் இடைச்சொல் வெளிப்பட்டே வருமானால் அது ‘எண்ணும்மை’ என்று அழைக்கப்படுகிறது.
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி (மறைந்து) நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை ஆகும்.
(எகா) பொற்றொடி வந்தாள் (தொடி என்றால் வளையல் ஆகும்)
இத்தொடரில் முதலில் உள்ள ‘பொற்றொடி’ என்னும் சொல் ‘பொன்னால் ஆன வளையல் என்னும்’ பொருளைத் தரும். இது மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்சு தொகையாகும். இத்தொடர் ‘வந்தாள்’ என்னும் வினைச்சொல்லைத் தழுவி நிற்பதால் பொன்னால் ஆன வளையலை அணிந்த பெண் வந்தாள் எனப்பொருள் தருகிறது. அணிந்த பெண் என்பது தொடரில் இல்லாத மொழியாகும். வேற்றுமைத் தொகையை அடுத்து அல்லாத மொழி தொக்கி நிற்பதால் இத்தொடர் ‘வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
10.குற்றியலுகரம்
குற்றியலுகரம் – குறுமை + இயல்+உகரம். குறைந்த அளவு ஒலிக்கின்ற ‘உ’ என்னும் எழுத்து. இது அரை மாத்திரை அளவு ஒலிக்கும். வல்லின மெய்களுள் ஏதேனும் ஒன்றன்மேல் சேர்ந்து வரும் உகரம் (கு, சு, டு, து, பு, று) சொல்லின் இறுதியில் வரும்பொழுது, தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவினதாக ஒலிக்கும். இதுவே குற்றியலுகரமாகும். ஆயின், இவ்வாறு ஒலிக்கும்பொழுது இரண்டு எழுத்துக்களாலான சொல்லாக இருப்பின் முதல் எழுத்து நெடிலாக இருத்தல் வேண்டும். உ என்னும் எழுத்தைத் தனியாக ஒலிக்கும் பொழுது உதடுகள் குவிந்து ஒரு மாத்திரை அளவு ஒலிக்கின்றது.
குறிப்பு : இரண்டே எழுத்தாலான சொல்லில் இறுதி எழுத்து வல்லின மெய்யுடன் சேர்ந்த உகரமாக இருந்தாலும் முதல் எழுத்து குறிலாக இருந்தால் குற்றியலுகரம் ஆகாது.
எ-டு : பசு என்பதன் இறுதி உகரம் குற்றியலுகரம் அன்று.
குற்றியலுகரத்தை ஆறு வகையாகப் பிரித்துக் கூறுவர். அவையாவன.
வ.எண்
குற்றியலுகர வகைகள்
எடுத்துக்காட்டுகள்
1
நெடில் தொடர்க்குற்றியலுகரம்
பாகு, காசு. தோடு. காது. சோறு
2
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
எஃது
3
உயிர்த் தொடர்க்குற்றியலுகரம்
அழகு, முரசு, முரடு, எருது, மரபு, பயறு
4
வன்றொடர்க் குற்றியலுகரம்
பாக்கு, தச்சு, தட்டு. பத்து, உப்பு, புற்று
5
மென்றொடர்க் குற்றியலுகரம்
பாங்கு, பஞ்சு, வண்டு, பந்து, அம்பு, கன்று
6
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
மூழ்கு, செய்து, சால்பு
11.குற்றியலிகரம்
குற்றியலிகரம் = குறுமை + இயல் + இகரம். குறைந்த ஒலியை உடைய ‘இ’ என்னும் எழுத்து இது அரை மாத்திரை அளவு ஒலிக்கும். “இ“ என்னும் எழுத்தைத் தனியாக ஒலிக்கும் பொழுது முழுமையாக ஒரு மாத்திரை அளவு ஒலிக்கின்றது. பட்டு +யாது: பட்டியாது. ‘டி’ என்னும் எழுத்தில் உள்ள இகர ஒலி (ட் + இ) முழுமையாக ஒலிக்கவில்லை. அரை மாத்திரை அளவே ஒலிக்கின்றது. ஆதலின் ‘பட்டியாது’ என்பதில் உள்ள இகரம் குற்றியலிகரமாகும்.
இலக்கணம் : ஒரு குற்றியலுகரச் சொல்லின் முன், யா என்னும் எழுத்தை முதலாக உடைய சொல் வந்து சேரும்பொழுது அக்குற்றியலுகரச் சொல்லின் இறுதியில் உள்ள உகரம் இகரமாக மாறும். இதுவே குற்றியலிகரம் எனப்படும். இதற்குக் கால அளவு அரை மாத்திரை ஆகும். மேலும் ‘மியா என்னும் அசைச்சொல் வருமொழியாக வந்தால் அதில் உள்ள இகரமும் (ம் + இ =மி) ஒலி குறைந்து, குற்றியலிகரம் ஆகும்.
எடுத்துக்காட்டு
வீடு + யாது? – வீடியாது
எஃகு +யாது? – எஃகியாது?
உலகு +யாது ? – உலகியாது?
பட்டு + யாது? – பட்டியாது?
பந்து + யாது? – பந்தியாது?
சால்பு + யாது? – சால்பியாது?
கேள் + மியா? – கேண்மியா
12.தொழிற்பெயர்
ஒரு தொழிலை உணர்த்தும் பெயர் தொழிற்பெயர் எனப்படும். தொழில் என்பது இங்கு ஒரு பொருளின் புடைபெயர்ச்சியைக் குறிக்கும்.
காலை எழுந்தவுடன் படிப்பு
மாலை முழுதும் விளையாட்டு
என்கிற இத்தொடர்களில் உள்ள படிப்பு, விளையாட்டு தொழில்களைக் குறிக்கும் சொற்கள்.
எ.டு. பொறுத்தல் தலை
பொறுத்தல் என்பதில் ‘பொறு’ என்பது முதலிலும் ‘தல்’ என்பது இறுதியிலும் அமைந்துள்ளன. முதலில் உள்ளதை முதனிலை அல்லது பகுதி என்றும் இறுதியில் உள்ளதை இறுதிநிலை அல்லது விகுதி என்றும் கூறலாம். பொறுத்தல் என்பது ‘தல்’ என்னும் விகுதி பெற்ற தொழிற்பெயராகும். தொழிற்பெயர் விகுதிகள் பலவாகும். தொழிற்பெயர் விகுதிகளும் எடுத்துக்காட்டுகளும் கீழே தரப்பெற்றுள்ளன.
வ.எண்
விகுதி
எடுத்துக்காட்டு
1
தல்
நடத்தல்
2
அல்
பாடல்
3
அம்
ஆட்டம்
4
ஐ
கொலை
5
கை
தொழுகை
6
வை
பார்வை
7
பு
நடப்பு
8
வு
வரவு
9
தி
மறதி
10
சி
வளர்ச்சி
11
வி
உதவி
12
உள்
கடவுள்
13
காடு
சாக்காடு
14
பாடு
கோட்பாடு
15
அரவு
தோற்றரவு
16
ஆனை
வாரானை
17
மை
கொல்லாமை
18
து
பாய்ந்து
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
சூடு போட்டார்
‘கெடுவான் கேடு நினைப்பான்’
இவற்றுள் சூடு, கேடு என்பன சுடுதல், கெடுதல் என்னும் தொழில்களை உணர்த்துகின்றன. சுடுதல், கெடுதல் என்னும் தொழிற்பெயர்களின் விகுதிகளை நீக்கினால் முறையே சுடு, கெடு என ஆகும். சுடு,கெடு என்பனவற்றின் முதல் எழுத்தான சு, கெ என்னும் குறில்கள் நெடிலாக மாறி சூடு,கேடு என ஆகும். இவ்வாறு தொழிற்பெயரின் விகுதியின்றி, பகுதியில் உள்ள குறில், நெடிலாகி வருவது முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும். (சில தொழிற்பெயர்களின் முதனிலை மட்டும் திரியும்).
தொழிற்பெயரின் விகுதி கெட்டு, பகுதி திரிந்து வருவது முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.
எடு. பட்ட பாடு (படுதல் – படு – பாடு)
பெற்ற பேறு (பெறுதல் – பெறு – பேறு)
13.வினையாலணையும் பெயர்
குமரன் படித்தான். படித்தவன் தேர்ச்சி பெற்றான். இவற்றுள் குமரன் என்பது பெயர்ச்சொல்; படித்தான் என்பது வினைச்சொல். படித்தவன் என்பது சொல்லா? வினைச்சொல்லா? படித்தவன் என்பது எழுவாயாக இருப்பதால் பெயர்ச்சொல்லின் தன்மையும் பெற்றுள்ளது. படித்தல் என்னும் தொழிலையும் இறந்த காலத்தையும் காட்டுவதால் வினைச்சொல்லின் தன்மையும் பெற்றுள்ளது. எனவே ‘படித்தவன்’ என்னும் சொல், வினையின் தன்மையும் பெயரின் தன்மையும் அமைந்த சொல் ஆகும். இவ்வாறு வருவதே வினையால் அணையும் பெயர் என்று குறிப்பிடப்படும்.
இலக்கணம் : ஒரு வினைமுற்று, பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும். அது. தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்று இடங்களிலும் மூன்று காலங்களிலும் உணர்த்தி வரும்.
எடுத்துக்காட்டு
அகழ்வாரைத் தாங்கும் நிலம் (அகழ்வாரை வினையாலணையும் பெயர்)
இகழ்வார்ப் பொறுத்தல் தலை (இகழ்வார் வினையாலணையும் பெயர்)
வ.எண்
தொழிற்பெயர்
வினையாலணையும் பெயர்
1
நடித்தல்
நடித்தவன்
2
எழுதுதல்
எழுதினவன்
3
உண்டல்
உண்டவன்
4
படித்தல்
படித்தவன்
5
நோன்பு
நோற்பார்
6
சேர்தல்
சேர்ந்தார்
7
வாழ்தல்
வாழ்வார்
தொழிற் பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடுகள்
ஒரு பொருளின் இயற்பெயர், அதனை உணர்த்தாமல் அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்குத் தொன்றுதொட்டுப் பெயராகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
(எ.கா) ஊர் சிரித்தது, கிரிக்கெட்டில் இந்தியா வென்றது
15. வினைமுற்று
ஒரு பொருள் செய்த தொழிலைக் குறித்து வந்து, முற்றுப்பெற்ற சொல் வினைமுற்று எனப்படும். அது திணை, பால், எண், இடம் காட்டும்; காலம் காட்டும்; பயனிலையாக வரும்; வேற்றுமை உருபை ஏற்காது.
எ.டு. “பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்”
பொறுத்தாரைப் பொன்போல் வைப்பர்”
இத்தொடர்களில் வந்துள்ள ‘ஏறுமின்’, ‘வைப்பர்’ ஆகியவை வினைமுற்றுகள்.
வினைமுற்று வகைகள்
1.தெரிநிலை வினைமுற்று
2.குறிப்பு வினைமுற்று
3.உடன்பாடு வினைமுற்று
4.எதிர்மறை வினைமுற்று
5.ஏவல் வினைமுற்று
6.வியங்கோள் வினைமுற்று
1.தெரிநிலை வினைமுற்று
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினையும் வெளிப்படையாகத் தெரிவிக்கும் வினைமுற்று தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
எ.டு. மங்கை, கூடத்தில் அரிசிமாக்கோலம் அமைத்தனள்.
மங்கை, இல்லத்தில் யாழ் எடுத்துத் தமிழிசை பாடினாள்.
2.குறிப்பு வினைமுற்று
செய்பவனையும் திணை பால்களையும் வெளிப்படையாகக் காட்டிக் காலத்தைக் குறிப்பாக உணர்த்தும் வினைமுற்று, இவ்வினைமுற்று குறிப்பு வினைமுற்று எனப்படும். இவ்வினைமுற்று பொருள், இடம் முதலான அடிப்படையில் தோன்றும்.
3.உடன்பாடு வினைமுற்றுகள் மற்றும் 4.எதிமறை வினைமுற்றுகள்
செயல் நிகழ்வைக் குறிக்கும் வினைமுற்று உடன்பாட்டு வினைமுற்று எனப்படும்.
செயல் நிகழாமையைக் குறிக்கும் வினைமுற்று எதிர்மறை வினைமுற்று எனப்படும்.
எ.டு. நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண் துறவார் நாணாள் பவர்.
பெருங்குணத்தார்ச் சேர்மின்
பிறர் பொருள் விரும்பான்
துறப்பார்,சேர்மின் – உடன்பாடு.
துறவார். விரும்பான் – எதிர்மறை
4. ஏவல் வினைமுற்று
முன்னிலை இடத்தில் கட்டளைப் பொருளில் எதிர்காலம் காட்டி வரும் வினைமுற்று ஏவல் வினைமுற்று எனப்படும். இது ஒருமை, பன்மை உணர்த்தும்.
எ.டு. வாராய, பாரீர்
குறிப்பு: ஏவல் ஒருமை வினைமுற்றுகள் இ, ஐ, ஆய் என்னும் விகுதிகளைப் பெறும். ஏவல் பன்மை வினைமுற்றுகள் இர், ஈர்,மின்,உம் என்னும் விகுதிகளைப் பெறும்.
எ.டு. வருதி, செல்வாய் – ஏவல் ஒருமை
வருவீர், வம்மின், வாரும் – ஏவல் பன்மை
5.வியங்கோள் வினைமுற்று
வேண்டல், விதித்தல், வாழ்த்துதல், வைதல் முதலிய பொருள்களில் மூவிடங்களிலும் ஐம்பால்களிலும் வரும் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று எனப்படும். இது ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாக வரும். க, ய, ர் என்னும் விகுதிகளைப் பெறும்.
எடு. திருவளர் மூதூர் வாழ்க
வாழிய சூசை
வாழியர்
தீமை ஒழிக
மருந்து உண்க
நான் வாழ்க,
நீ வாழ்க
அவர் வாழ்க.
ஏவலுக்கும் வியங்கோளுக்கும் உள்ள வேறுபாடுகள்
வ.எண்
ஏவல் வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
1
கட்டளைப் பொருளில் வரும்
வாழ்த்துதல், வைதல், வேண்டல், விதித்தல் பொருள்களில் வரும்.
2
முன்னிலை இடத்தில் மட்டும் வரும்
மூன்று இடங்களிலும் வரும்
3
ஒருமை, பன்மை உண்டு
ஒருமை, பன்மை என்னும் பகுப்பு இல்லை
16. ஒருபொருட் பன்மொழி
ஒரு பொருள் தரும் இரண்டு சொற்கள் சேர்ந்து வந்து பொருட்சிறப்பைத் தருவது ஒரு பொருட் பன்மொழி எனப்படும்.
எ.டு. உயர்ந்தோங்கு மலை
உயர்ந்து, ஓங்கு என்னும் இரு சொற்களும் ஏறக்குறயை ஒரே பொருளைத் தந்து, ‘மிக உயர்ந்த மலை’ என்னும் பொருளை உணர்த்துகின்றன. இவ்வாறு ஒரு பொருள் தரும் இரண்டு சொற்கள் சேர்ந்து வருவது ஒரு பொருட் பன்மொழி எனப்படும்.
எ.கா மீமிசை ஞாயிறு
17.இரட்டைக்கிளவி
ஒரு சொல்லை பிரித்தால் பொருள் தராமல் இருப்பது இரட்டைக்கிளவி ஆகும்.
எ.கா சலசல, படபட, சரசர, கரகர, பளபள, என்பன
18.அடுக்குத்தொடர்
ஒரு சொல், விரைவு, வெகுளி, தெளிவு, அச்சம், உவகை முதலியன காரணமாக, இரண்டு அல்லது மூன்று முறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும். இதனைப் பிரித்தாலும் பொருள் தரும்.
எ.டு. பாம்பு பாம்பு, தீ தீ, வெற்றி வெற்றி
அடுக்குத் தொடருக்கும் இரட்டைக் கிளவிக்கும் வேறுபாடுகள்
வ.எண்
இரட்டைக்கிளவி
அடுக்குத்தொடர்
1
இரண்டு முறை மட்டுமே வரும்
இரண்டு, மூன்று, நான்கு முறைகளும் அடுக்கி வரலாம்
2
பிரித்தால் பொருள் தராது
பிரித்தால் பொருள் தரும்
3
இரண்டும் சேர்த்து வந்து ஒரே பொருள் தரும் எ.கா பாம்பு சரசர என ஊர்ந்தது
அடுக்கி வருவதற்கு ஏற்ப, விரைவு, அச்சம், தெளிவு, உவகை என முதலிய பொருள்களைத் தரும் எ.கா புலவர் மன்னனை ‘வாழ்க வாழ்க‘ என வாழ்த்தினர்
19.இயல்பு புணர்ச்சி
நிலைமொழியும் வருமொழியும் சேரும்பொழுது நிலைமொழியிலோ வருமொழியிலோ எந்த மாற்றமும் இல்லாமல் சேர்வது இயல்பு புணர்ச்சி எனப்படும்.
எ.டு. வாழை + மரம் = வாழைமரம்.
20.விகாரப்புணர்ச்சி
நிலைமொழியும் வருமொழியும் சேரும்பொழுது இடையே எழுத்தோ, சாரியையோ தோன்றல், எழுத்துத் திரிதல், எழுத்துக் கெடுதல் என்பவற்றுள் ஒன்றே.. பலவோ விகாரங்களைப் பெற்றுப் புணர்தல் விகாரப் புணர்ச்சி ஆகும்
(அ) தோன்றல் : நிலைமொழிக்கும் வருமொழிக்கும் நடுவில், எழுத்து தோன்றுவது.
எ.கா. வாழை + பழம் = வாழைப்பழம், பூ + கொடி = பூங்கொடி
(ஆ) திரிதல் : நிலைமொழி, வருமொழிகளில் உள்ள எழுத்து, மாறி வருவது.
எ.கா. மண் + குடம் = மட்குடம், பல் + பொடி = பற்பொடி
(இ) கெடுதல் : நிலைமொழி, வருமொழிகளில் உள்ள எழுத்து, கெட்டுச் சேர்வது.
எ.டு. மரம் + வேர் = மரவேர்.
21. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இறுதி எழுத்துக் கெட்டு எதிர்மறைப் பொருளை உணர்த்தி நிற்கும்.
எ.கா. பறவாப் பறவை, ஓடாக் குதிரை, காணாக் கண், செல்லாக் குதிரை
22. உரிச்சொல் தொடர்
இசை, குறிப்பு, பண்பு ஆகியவை நிலைக்களனாக ஒருசொல் ஓரியல்பு உணர்த்தவும் பலவியல்பு உணர்த்தவும் சால, உறு, தவ, நனி, கூர், கழி, உரு, ஏ, மழ, குழ, கதழ், தட, கய, நளி, மாதர், கலி, வியன், நாம, பே, வய, துய, வை, எறுழ், கடி போன்றன வருமாயின் அவை உரிச்சொல் எனப்படும்.
கௌதமபுத்தர், ஒரு வழியில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காரி எச்சிலை துப்பினான். தன் மேல்துண்டால் துடைத்து விட்டு. “இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?” என்றார் புத்தர். அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார் “ஆனந்தா. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார். ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார். வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்ற உணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்.. அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார். “இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!” என்றார். அவன் எழுந்து கேட்டான். “நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?” என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார். “நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?”
உனக்கு நீயே கேட்டுப்பார்
ஒரு கனவை நீங்கள் மட்டும் கண்டுகொண்டிருப்பது வெறும் கனவாகத்தான் இருக்கும். கனவோடு இணைந்து பயணம் செய்தால்தான் அது நிஜமாகும்’ என்கிறார் ஜப்பானைச் சேர்ந்த நடிகையும் அமைதிப் போராளியுமான யோகோ ஓனோ (Yoko Ono). இதற்கு எல்லோருக்கும் தெரிந்த சாவியைத் தொலைத்த முல்லர்வின் கதையை உதாரணமாகச் சொல்லலாம். ஒருநாள் ஊருக்கு வெளியே எதையோ தேடிக்கொண்டிருந்தாராம் முல்லா நஸ்ருதீன். ஒருவர் அவரிடம், என்ன தேடுகிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார். என் சாவியைத் தேடுகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார் முல்லா. எங்கே தொலைத்தீர்கள்?’ என்று அவர் கேட்டதற்கு, வீட்டுக்கருகில்’ என்று பதில் சொன்னாராம். ஆச்சர்யப்பட்டுப் போன அந்த ஊர்க்காரர், வீட்டுக்கருகே சாவியைத் தொலைத்துவிட்டு இங்கே வந்து தேடுகிறீர்களே?’ என்றாராம். இங்கேதானே வெளிச்சமாக இருக்கிறது?’ என்று ஒரு போடு போட்டாராம் முல்லா. இது போலத்தான். நம்மில் பலருக்கும் பல லட்சியங்கள் இருக்கும்; அதை அடைவதற்கான முயற்சியில்தான் பலரும் தோற்றுப் போகிறார்கள். வாழ்வில் நம் இலக்கை அடைவது எப்படி என்று யாரும் வந்து நமக்குப் பாடம் எடுக்க மாட்டார்கள்; கற்றுக் கொடுக்கவும் மாட்டார்கள். நாம்தான் நமக்கான குறிக்கோளை வகுத்துக்கொண்டு இலக்கை அடையப் போராட வேண்டும். அதற்கு அத்தியாவசியமாக ஒன்று வேண்டும். அது இருந்தால் வெற்றி எளிது. அது என்ன? தன்னம்பிக்கை. நம் பலம் நமக்கே தெரியாதது. அதனால்தான் வெற்றி கைநழுவிப் போகிறது; பலரால் இலக்கை எட்ட முடியாமல் போகிறது. அந்த யதார்த்தத்தை விளக்குகிறது இந்தக் கதை.
ஒரு மனிதருக்குப் பெரிய கனவு இருந்தது. அது என்ன கனவு என்பது இங்கே முக்கியமில்லை. வேண்டுமானால், சினிமாவில் ஹீரோவாக வேண்டும்’, சென்னை அண்ணாசாலையில் எல்.ஐ.சி மாதிரி ஒரு கட்டடம் கட்டி அதற்கு உரிமையாளராக வேண்டும்’, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிவிட வேண்டும்’. இப்படி ஏதோ ஒரு பெருங்கனவு என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், அந்த மனிதர் ஒரு கட்டத்தில் தன் கனவு நனவாகும் என்கிற நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டார். தன் கனவை அடையத் தன்னிடம் போதுமான பலம் இல்லை என்று கருதினார். யாரிடமாவது உதவி கேட்க வேண்டும் என்றும் அவருக்குத் தோன்றியது. முதலில் அந்த மனிதருக்கு நினைவுக்கு வந்தது வயதான அவருடைய அம்மா. அவரிடம் கேட்டுவிடுவது என்று முடிவெடுத்தார்.
ஒருநாள் தன் அம்மாவோடு அவர் கிளினிக்குக்குச் செல்லவேண்டியிருந்தது. அது வீட்டுக்கு அருகிலேயே இருந்ததால், இருவரும் நடந்தே சென்றார்கள். மருத்துவரைப் பார்த்து, வழக்கமான சில பரிசோதனைகளை அம்மா செய்துகொண்ட பிறகு இருவரும் வீடு திரும்பினார்கள். வழியில் அவர், அம்மாவிடம் மௌனப் பேச்சை ஆரம்பித்தார். அம்மா, என் கனவு என்னனு உங்களுக்குத் தெரியும்தானே?’’ ஆமாம்ப்பா. அதுக்கென்ன இப்போ…’’ இல்லம்மா. அந்தக் கனவை நனவாக்குறதுக்கான பலம் என்கிட்ட இல்லைனு தோணுது. அதுக்கான சக்தியை எனக்குக் குடுங்களேன்…’’ அம்மா சொன்னார்… உனக்கு உதவி செய்யறதுல எனக்கு சந்தோஷம்தான். ஆனா, அந்த அளவுக்கு சக்தி என்கிட்ட இப்போ இல்லை. இருந்த எல்லாத்தையும் உன்கிட்ட ஏற்கெனவே குடுத்துட்டேனேப்பா.’’
அந்த மனிதர் இதைக் கேட்டு துவண்டு போனார். ஆனால், கனவை நிறைவேற பலம் வேண்டுமே… யாரிடமிருந்தாவது, எந்த வழியிலாவது பெற்றுத்தானே ஆக வேண்டும்? ஒவ்வொருவரிடமாகக் கேட்டுப் பார்ப்பது என்று முடிவு செய்துகொண்டார். தனக்குத் தெரிந்த ஒரு ஞானியிடம் போனார். விஷயத்தைச் சொன்னார். ஐயா. எனக்கு சக்தி வேண்டும். அது எங்கே கிடைக்கும்?’’ என்று கேட்டார். ஞானி சொன்னார், இமயமலையில் நமக்கு வேணுங்கிற சக்தியெல்லாம் கிடைக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். நானும் இமயமலைக்குப் போயிருக்கேன். ஆனா, அங்கே பனியையும் குளிரையும் தவிர வேற எதையும் நான் பார்த்ததில்லை. எனக்கும் சக்தி எங்கே கிடைக்கும்னு சரியா சொல்லத் தெரியலையேப்பா…’’
அடுத்து அந்த மனிதர் ஒரு துறவியிடம் போனார். விஷயத்தைச் சொன்னார். குருவே, என் கனவு நிறைவேறுவதற்கான சக்தி எனக்கு எங்கே கிடைக்கும்?’’ என்று கேட்டார்.
நீ செய்யும் பிரார்த்தனையால்தான் சக்தி கிடைக்கும். அதே நேரத்தில் நீ கண்டுகொண்டிருப்பது தவறான கனவு என்றால் அதையும் நீ தெரிந்துகொள்வாய். எனவே, அமைதியாக பிரார்த்தனையில் ஈடுபடு’’ என்றார் துறவி.
அவர் சொன்னது ஒரு வழி என்றாலும், அதுவும் அந்த மனிதருக்குக் குழப்பத்தையே தந்தது. ஏதேதோ சிந்தனையில் வீடு நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது வழியில் அவருக்குத் தெரிந்த முதியவர் ஒருவர் எதிர்ப்பட்டார். என்னப்பா. ஏதோ யோசனையோட போற மாதிரி தெரியுது!’’ அவரிடமும் அந்த மனிதர் விஷயத்தைச் சொன்னார். என் கனவு நிஜமாறதுக்கு சக்தி வேணும். அது எங்கே கிடைக்கும்னு ஒவ்வொருத்தரா கேட்டுக்கிட்டிருக்கேன். ஆனா, யாராலயும் எனக்கு உதவி செய்ய முடியலை.’’ ஒருத்தரால கூடவா முடியலை?’’ ஆமா.’’ அந்த முதியவர் கேட்டார்! சரி, உனக்கு நீயே கேட்டுப் பார்த்துக்கிட்டியா?’’ அந்த மனிதருக்கு இதைக் கேட்டதும் ஏதோ தெளிவு கிடைத்ததுபோல இருந்தது.
ஒரு பொருளின் இயற்பெயர், அதனை உணர்த்தாமல் அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்குத் தொன்று தொட்டுப் பெயராகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
(எ.கா) ஊர் சிரித்தது
எங்கும் ஊர் சிரிக்காது. ஊரிலுள்ள மக்கள்தான் சிரிப்பார்கள். நேரிடையாக மக்கள் சிரிப்பதைச் சொல்லாமல் மக்கள் வசிக்கின்ற (தொடர்புடைய) ஊரைச் சொல்லியது ஆகும்.
“பொருள்முதல் ஆறோடு அளவை சொல்தானி
கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத்
தொன்முறை உரைப்பன ஆகுபெயரே” – நன்னூல்.290
என்பார் நன்னூல் ஆசிரியர் பவனந்தி முனிவர்.
ஆகுபெயர் பதினாறு வகைப்படும்.
1.பொருளாகு பெயர்
ஒரு முழுப்பொருளின் பெயர் தன்னைச் சுட்டாது அதன் உறுப்புக்கு ஆகி வருவது பொருளாகுபெயர் எனப்படும். இதனை முதலாகுபெயர் எனவும் கூறுவர்.
(எ.கா) தமிழரசி மல்லிகை சூடினாள்
இத்தொடரில் உள்ள மல்லிகை என்னும் சொல் வேர், கொடி. இலை, பூ ஆகிய உறுப்புகள் அனைத்தும் சேர்ந்த முழுப்பொருளைக் குறிக்கிறது ஆனால் அடுத்துள்ள சூடினாள் என்னும் பயனிலையால் மல்லிகை என்னும் பெயர், முழுப்பொருளை உணர்த்தாது, அதன் ஓர் உறுப்பாகிய மலரை மட்டும் உணர்த்துகிறது. எனவே இது பொருளாகு பெயர்.
(எ.கா) பூசணிச்சாம்பார் சுவையாக இருந்தது.
2. இடவாகு பெயர்
ஓர் இடத்தின் பெயர் அந்த இடத்தோடு தொடர்புடைய வேறு பொருளுக்கு ஆகி வருவது ‘இடவாகு பெயர்’ எனப்படும்.
(எ.கா) கிரிக்கெட்டில் இந்தியா வென்றது.
இந்தச் சொற்றொடரில் உள்ள இந்தியா என்னும் இடப்பெயர் அப்பெயரால் அமைந்த நாட்டைக் குறிக்காது அந்நாட்டிற்காக விளையாடிய வீரர்களைக் குறிக்கிறது. எனவே இது இடவாகு பெயர் ஆகும்.
(எ.கா) காஞ்சிபுரம் என்ன விலை?
3. காலவாகுபெயர்
காலப்பெயர் காலத்தோடு தொடர்புடைய வேறு பொருளுக்கு ஆகி வருவது காலவாகுபெயர் எனப்படும்
(எ.கா) மார்கழி சூடினாள்
மார்கழி என்னும் சொல் தமிழ்த்திங்களைக் குறிக்கும் காலப் பெயராகும். ஆனால் சூடினாள் என்னும் குறிப்பால் மார்கழித் திங்களில் மலர்ந்த மலரை (டிசம்பர் பூ எனப்படும் நீலக்கனகாம்பரம்) உணர்த்துகிறது. எனவே இது காலவாகுபெயர் ஆகும்.
(எ.கா) கோடை நன்றாக விளைந்துள்ளது.
4.சினையாகு பெயர்
ஒரு சினையின் (உறுப்பு) பெயர், அதனோடு தொடர்புடைய முழுப்பொருளுக்கு ஆகி வருவது சினையாகுபெயர் எனப்படும்.
(எ.கா) ஆசிரியர் தலைக்கு ஒரு வினாத்தாள் தந்தார்.
‘தலை’ என்பது நம்முடலின் ஓர் உறுப்பு இத்தொடரில் உள்ள ‘தலை’ என்னும் உறுப்பின் பெயர், ஆனால் அடுத்துள்ள குறிப்புச் சொற்களால் மாணவனைக் குறிக்கின்றது. எனவே இது சினையாகுபெயர் எனப்படும்.
(எ.கா) தலைக்கு ஒரு பழம் கொடு
5. பண்பாகு பெயர்
ஒரு பண்புப்பெயர், அப்பண்பைக் கொண்ட பொருளுக்கு ஆகி வருவது பண்பாகு பெயர் எனப்படும். இது ‘குணவாகு பெயர்’ என்றும் வழங்கப் பெறுகிறது.
(எ.கா) இளங்கோ இனிப்பு வழங்கினான்
இத்தொடரில் இனிப்பு என்னும் பண்புப்பெயர், ‘வழங்கினான்’ என்னும் குறிப்பால் இனிப்புச் சுவையுடைய பொருளை உணர்த்துகிறது. எனவே இது பண்பாகுபெயர் எனப்படும்
(எ.கா) செவலையை வண்டியில் பூட்டு
6. தொழிலாகுபெயர்
ஒரு தொழிற்பெயர், அத்தொழிலிருந்து பெறப்படும் பொருளுக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் எனப்படும்.
(எகா) அழகன் அவியல் உண்டான்.
இத்தொடரில் அவியல் என்னும் சொல் காய்கறிகளை என்னும் பொருளைத் தருகிறது. எனவே இது தொழிலாகுபெயர் எனப்படும். அவித்தலாகிய தொழிலைக் குறிப்பதாகும். ஆனால் ‘உண்டான்’ என்னும் பயனிலையால் அவிக்கப்பட்ட காய்கறியினை உண்டான்.
(எ.கா) பொரியல் சுவையாக இருந்தது.
7. தானியாகுபெயர்
ஓர் இடப்பெயர். அவ்விடத்திலுள்ள பொருளுக்கு ஆகிவருவது இடவாகுபெயராகும். ஓரிடத்திலுள்ள பொருள் அவ்விடத்திற்கு ஆசி வருவது தானியாகுபெயர் எனப்படும்.
(எ.கா) பாலை வண்டியில் ஏற்று
பால் என்னும் நீர்மப்பொருள் ஏற்றும் என்னும் குறிப்பால், பால் வைக்கப்பட்டிருக்கும் தானமாகிய (இடமாகிய) குடத்திற்கு ஆகி வந்து தானியாகு பெயர் ஆயிற்று (தானம் – குடம், தானிக் பால்
8. உவமையாகு பெயர்
உவமானப் பெயர், தொடர்புடைய உவமேயப் பொருளுக்கு ஆகி வருவது உவமையாகுபெயர் எனப்படும்.
(எ.கா) காளை வந்தான்
காளை மாட்டைக் குறிக்கும் பெயராகிய காளை என்பது காளை மாடு போன்ற வலிமையும் வீரமும் வாய்ந்த ஆண் மகனுக்கு ஆகி வந்தது. காளை போன்றவன் வந்தான். எனவே இது உவமையாகுபெயர் ஆயிற்று
(எ.கா) பாவை ஆடினாள்
9. கருவியாகுபெயர்
ஒரு கருவியின் பெயர், அதனால் உண்டாகிய காரியப் பொருளுக்கு ஆகி வருவது கருவியாகுபெயர் எனப்படும்.
(எ.கா) குழல்கேட்டு மகிழ்ந்தான்.
குழல் என்னும் இசைக் கருவியின் பெயர், அதனால் உண்டான இசைக்கு ஆகிவந்து குழலோசை கேட்டு மகிழ்ந்தான் என்றானதால், இது கருவியாகுபெயர் ஆயிற்று
10. காரியவாகு பெயர்
ஒரு காரியத்தின் பெயர், அது உண்டாவதற்குக் காரணமான கருவிப் பொருளுக்கு ஆகிவருவது காரியவாகுபெயர் எனப்படும். இது கருவியாகு பெயர்க்கு எதிர்மறையாகும்.
(எ.கா) களவியல் படித்தான்.
களவியல் என்றும் காரியத்தின் பெயர் அதனை உணர்த்துவதற்குக் கருவியாகிய நூலிற்கு ஆகி வந்தது, களவியல் என்னும் அகத்திணை இலக்கணத்தைப் படித்தான் என்றானதால் இது காரியவாகு பெயர் ஆயிற்று.
11. கருத்தா ஆகுபெயர்
ஒரு கருத்தாவின் பெயர், அவரால் இயற்றப்பட்ட நூலிற்கு ஆகிவருவது கருத்தா ஆகுபெயர் எனப்படும்.
(எ.கா) அழகனுக்குத் திருவள்ளுவர் மனப்பாடம்
திருக்குறளை எழுதிய கருத்தாவின் பெயர் திருக்குறள் என்பதாகும். இத்தொடரில் திருவள்ளுவர் என்னும் பெயர் அவரைக் குறிக்காது அவரால் எழுதப்பட்ட காரியமாகிய திருக்குறளுக்கு ஆகிவந்ததால் இது கருத்தாகுபெயர் ஆயிற்று.
12. சொல்லாகுபெயர்
ஒரு சொல்லின் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகிவருவது சொல்லாகுபெயர் எனப்படும்.
(எ.கா) தம்பி என் சொல்லைக் கேட்டான்
’சொல்’ என்னும் பெயர், கேட்பான் என்னும் குறிப்பால், எழுத்துகளாகிய சொல்லைக் குறிக்காது அறிவுரைக்கு ஆகிவந்ததால் சொல்லாகுபெயர் ஆயிற்று.
(எ.கா) பாட்டுக்கு உரை எழுதுக.
13. எண்ணல் அளவை ஆகுபெயர்
எண்ணைக் குறிக்கும் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது எண்ணல் அளவை ஆகுபெயர் எனப்படும்.
(எ.கா) நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
இத்தொடரில் உள்ள நான்கு, இரண்டு என்னும் சொற்கள் எண்ணிக்கைப் பொருளை உணர்த்தாது. நான்கு அடிகளாலான நாலடியாரையும், இரண்டடிகளாலான திருக்குறளையும் குறிக்கின்றன. இவ்வாறு எண்ணலளவைப் பெயர் தொடர்புடைய நூல்களுக்கு ஆகிவருவதால் இஃது எண்ணலளவையாகுபெயர் எனப்படும்.
(எ.கா) தலைக்கு ஒன்று கொடு
14. எடுத்தல் அளவை ஆகுபெயர்
எடுத்தல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது எடுத்தல் அளவை ஆகுபெயர்.
(எகா) கிலோ என்ன விலை?
‘கிலோ’ என்னும் எடுத்தலளவைப் (நிறுத்தலளவை) பெயர், தொடர்புடைய பொருளுக்கு (அரிசி, பருப்பு, சர்க்கரை ) ஆகி வந்ததால் இது எடுத்தலளவையாகு பெயர் எனப்படும்.
15. முகத்தல் அளவை ஆகுபெயர்
முகத்தல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகிவருவது முகத்தல் அளவை ஆகுபெயர் எனப்படும்.
(எ.கா) இரண்டு லிட்டர் கொடு
லிட்டர் என்னும் முகத்தல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு (பால், மண்ணெண்ணெய்) ஆகி வந்தது. எனவே இது முகத்தளலவையாகு பெயர் எனப்படும்.
16. நீட்டல் அளவை ஆகுபெயர்
நீட்டல் அளவைப் பெயர் தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது நீட்டல் அளவை ஆகுபெயர் எனப்படும்.
(எ.கா) சட்டைக்கு இரண்டு மீட்டர் வேண்டும்.
மீட்டர் என்னும் நீட்டல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு (துணி) ஆகி வந்தது. எனவே இது நீட்டல் அளவையாகுபெயர் எனப்படும்.
தமிழ் மொழியில் எழுதும்போது எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுதுவதே மிக நன்று. பிழைகளோடு எழுதினால் நாம் சொல்ல வந்த கருத்துக்கு மாறாகவும் வேறொரு செய்தியாகவும் மாறக்கூடும். அதனால் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதுதல் வேண்டும்.
இவற்றில் முதலாவதாகச் சந்திப்பிழைகளைப் பார்க்கலாம். தேவையான இடத்தில் மட்டுமே ஒற்றுகளைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு ஒருசில விதிமுறைகளும் உண்டு. மற்ற இடங்களில் ஒற்று போட வேண்டும் என்ற அவசியமில்லை.
1.அது, இது, அவை, இவை என்னும் சுட்டுச்சொற்களின் பின்னும் எது ? யாது ? எவை ? என்னும் வினாச்சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.
அது + போயிற்று = அது போயிற்று
இது + பறந்தது = இது பறந்தது
அவை + பறந்தன = அவை பறந்தன
எது + கண்டது = எது கண்டது ?
யாது + சொல் = யாது சொல் ?
எவை + போயின = எவை போயின?
2. அத்தனை, இத்தனை, எத்தனை எனும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.
அத்தனை + பழங்களா = அத்தனை பழங்களா
இத்தனை + பூக்களா = இத்தனை பூக்களா
எத்தனை + பெண்கள் = எத்தனை பெண்கள்
3.வினாவை உணர்த்தும் ஆ,ஓ,ஏ,யா என்னும் வினா எழுத்துகளில் வல்லினம் மிகாது.
அவளா + தைத்தாள் = அவளா தைத்தாள்
இவளோ +போனாள் = இவளோ போனாள்
அவனே + செல்வான் = அவனே செல்வான்
4.சில, பல என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.
சில + குடிசைகள் = சில குடிசைகள்
பல + சொற்கள் = பல சொற்கள்
5.விளிப்பெயர், வியங்கோள் வினைமுற்று ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.
கண்ணா + கேள் = கண்ணா கேள்
வேலா + சொல் = வேலா சொல்
வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்
6.எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.
நாய் + போனது = நாய் போனது
அழகன் + படித்தான்= அழகன் படித்தான்
7.வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
ஊறு + காய் = ஊறு காய்
ஆடு + கொடி = ஆடு கொடி
விரி + கதிர் = விரி கதிர்
8.இரண்டாம் வேற்றுமைத்தொகை மறைந்து வந்தால் வல்லினம் மிகாது.
தமிழ் மொழியில் எழுதும்போது எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுதுவதே மிக நன்று. பிழைகளோடு எழுதினால் நாம் சொல்ல வந்த கருத்துக்கு மாறாகவும் வேறொரு செய்தியாகவும் மாறக்கூடும். அதனால் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதுதல் வேண்டும்.
இவற்றில் முதலாவதாகச் சந்திப்பிழைகளைப் பார்க்கலாம். தேவையான இடத்தில் மட்டுமே ஒற்றுகளைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு ஒருசில விதிமுறைகளும் உண்டு. அவற்றை மட்டும் பார்த்தால் இச்சந்திப்பிழைகளைத் தவிர்க்கலாம்.
இதற்கு நாம் இரண்டு இடங்களை மட்டும் உற்று நோக்கினால் போதுமானது.
1.நிலைமொழி மற்றும் நிலைமொழியின் ஈற்றெழுத்து
2.வரும்மொழியின் முதலெழுத்து க,ச,த,ப – ஆக இருக்க வேண்டும்.
( க்,ச்,ட்,த்,ப்,ற் என்ற 6 வல்லின எழுத்துகளில் க,ச,த,ப என்ற 4 எழுத்துகளும் வரும்மொழியில் முதலாவதாக வந்தால் மட்டுமே அவ்விடத்தில் ஒற்று மிகும் என்பது விதி. அதனால்தான் இதற்கு வல்லினம் மிகும் எழுத்துகள் என்கிறோம். அந்த 4 எழுத்துகளின் ஒற்று க்,ச்,த்,ப் என்று வரும்)
கண்டேன் என்பது வரும்மொழி (நிலைமொழியோடு சேர வரும் சொல்)
இராமன் + ஐ என்பதில், நிலைமொழி ஈற்றெழுத்து இரண்டாம் வேற்றுமை உருபு ன் +ஐ = னை என்று வருகிறது. வரும்மொழியின் முதலில் ”க” என்று வல்லினம் வருவதால் இவ்விடத்தில் ”க்” என்ற ஒற்று வரும்.
கீழ்க்கண்ட அனைத்து விதிகளும் நிலைமொழிக்கு மட்டுமே பொருந்தும். வரும்மொழியில் முதலெழுத்து – க,ச,த,ப என இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்தால் போதும். வல்லினம் மிகும் இடங்கள், ஒற்று மிகும் இடங்கள் என்றும் அழைப்பர்.
1.நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்க, வருமொழி முதலில் வரும் வல்லினம் மிகுந்து ஒலிக்கும். (உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்)
நிலா + சோறு = நிலாச்சோறு
மழை + காலம் = மழைக்காலம்
பனி + துளி =பனித்துளி
2.அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் ‘எ’ என்னும் வினா எழுத்திற்குப் பின்னும் வலி மிகும்.
அ+ குடம் = அக்குடம்
இ+ புத்தகம் =இப்புத்தகம்
உ + சிறுவன் =உச்சிறுவன்
எ + தொழில் =எத்தொழில்
3.அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
அந்த + கிணறு = அந்தக்கிணறு
இந்த + தோட்டம் = இந்தத்தோட்டம்
எந்த + செயல் = எந்தச்செயல்
4.அப்படி, இப்படி எப்படி என்னும் சொற்களின் பில் வல்லினம் மிகும்.
அப்படி + கூறினான் = அப்படிக்கூறினான்
இப்படி + சொன்னான் = இப்படிச்சொன்னான்
எப்படி + தந்தான் = எப்படித் தந்தான்
5.அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களின் பில் வல்லினம் மிகும்.
அங்கு +சென்றான் =அங்குச்சென்றான்
இங்கு +போனான் = இங்குப்போனான்
எங்கு + தேடினான் = எங்குத்தேடினான்
6.ஆறாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும்.
தாமரை+ பூ = தாமரைப்பூ (தாமரையின் பூ)
குதிரை +கால் = குதிரைக்கால் (குதிரையினது கால்)
7. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்
குடி +பிறந்தார் = குடிப்பிறந்தார் (குடியின்கண் பிறந்தார்)
வழி +சென்றார் = வழிச்சென்றார் (வழியின்கண் சென்றார்)