Abstract
A life without love is like a barren desert. Love alone is the foundation for every living being to exist in this world. From Adam and E ve to Valluvar and Vasuki, Kamban, Ilango, Avvaiyar, and the poets of the Sangam age, the various states of love have been beautifully expressed. Even in this century, there is no poet untouched by the theme of love—be it Bharati, Bharathidasan, Kannadasan, or Vaali. Along with romantic love, there are poets who express love towards socialism, non-human living beings, and nature itself. Bharathidasan’s love is like a threefold sweet blend of romance, classical Tamil, and socialism. In his lines on love, the poet vividly portrays the different states of life with colorful imagery.
“பாவேந்தரின் காதல் பாவையும் பைந்தமிழும்”
ஆய்வுச் சுருக்கம்
அன்பில்லாத வாழ்வு வறண்ட பாலைவனம் போலாகும்.ஒவ்வொறு உயிர்களும் உலகில் வாழ்வதற்கு அன்பு ஒன்றே அடிப்படை. அம்பிகாபதி ,அமராவதி, ஆண்டாள், உதயனகுமாரன் உலகப்பொதுமறை தந்த வள்ளுவன் வாசுகி ஆதாம் ஏவாள்கம்பன் இளங்கோ,ஔவையார் ,அக்காலப் புலவர்களும் சங்க இலக்கியங்களும் அன்பின் நிலைகளை அழகாக கூறியுள்ளது. இந்நூற்றாண்டிலும் பாரதி,பாரதிதாசன்,கண்ணதாசன்,வாலி என காதலைத் தீண்டாத கவிஞர்கள் இல்லை.காதலோடு பொதுவுடமை அஃறிணை உயிர்கள்,இயற்கை என எல்லாவற்றிலும் அன்போடு இயற்கைமேல் காதல் கொண்ட கவிஞர்கள் உண்டு.பாரதிதாசனின் காதல் பாவையோடும் பைந்தமிழோடும் பொதுவுடமை மும் கலந்த முக்கனிச்சாறாக உள்ளது. காதல் வரிகளிலே வாழ்வின் நிலைகளை வண்ணக் கோலமிட்டு கவிஞர் சுட்டிக்காட்டியுள்ளார் அவரின் தமிழ் மேல் காதலை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
முன்னுரை
வண்டிக்காரன் மாடு மேய்ப்பவன் பாவோடு பெண்கள் தறித்தொழிலாளி நினைவுகள் உழவன் பாட்டு, உழத்தி, ஆலைத் தொழிலாளி, இரும்பாலைத் தொழிலாளி, கோடாலிக் (கோடரி) காரன் கூடைமுறம் கட்டுவோர், பூக்காரி, குறவர், தபால்காரன், சுண்ணம் இடிக்கும் பெண்கள், ஓவியக்காரன் போன்ற பல தொழிலாளிகளின் காதல் பாடல்களைப் படைத்துள்ளார் பாரதிதாசன்.அழகு தவழ் மங்கை பழகு தமிழ் போன்றாள்.கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்.”என்று காதலின் வலிமை எத்தகையது என்று ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ எனும் காவியத் தன்மை கொண்ட கவிதையில் பாடுகிறார் பாவேந்தர்.ஒவ்வொறு வரிகளிலும் புதுமையான சிந்தனைகளைப் புகுத்திப் பகுத்தறிவு சிந்தனைகளை பைந்தமிழில் காதலின் எழுச்சிக்கனலாய் அனைவருக்கும் பொருந்தும்படி அமைத்துள்ளார்.
சுருக்கச் சொற்கள்:
காதல், ஆமை, அன்பு, கடமை,காதல், காதலியர், பைந்தமிழ் கன்னித்தமிழ் தமிழ் காதலே, சமூகப் புரட்சி, பொதுவுடமை, அழகு, வர்ணனை, தொழிலாளி, விதவை, மறுமணம், உழவன், வாழ்வுணர்வு, சுயமரியாதை, பசி – வறுமை, புரட்சிக் கவிஞர்.
விதவை மேல் காதல்
புலவர்களில் சிலர் அரசர்களின் காதலைப் பாடியவர்கள் மத்தியில் உழைப்பாளிகளின் காதலைப் பாடிய ஒருவர் பாவேந்தர் “மாந்தோப்பு” எனும் கவிதையில் அமுதவல்லிக்கும் குப்பனுக்குமான காதலை பாடியிருப்பார். ஒரு பெண்ணை விரும்பி அவளிடம் தன் காதலைச் சொல்லும்போது, நான் சிறுவயதில் விதவையானவள் என்று அவள் கூறுகிறாள். குப்பன் தன் காதலில் உறுதியாக இருக்கிறான். பிற்போக்கு எண்ணம் கொண்ட ஊர்க்காரர்கள், சாதிகாரர்கள் போன்றோர் ஊர் விலக்கம் செய்வோம் என்று பல எதிர்ப்புகளை தெரிவிக்கிறார்கள். சாதியவாதிகளை எல்லாம் மீறி அப்பெண்ணை மணக்கும் அந்த கவிதையில் மறுமணத்தை வலியுறுத்தி பாரதிதாசன் எழுதிய வரிகள் சிறப்பு வாய்ந்தவை. ”உன்னை எனக்குக் கொடுத்துவிடு! – நான்
உனக்கெனைத் தந்திட அட்டியில்லை’ – இந்தக்
கன்னல் மொழிக்குக் கனிமொழியாள் – எட்டிக்
காய்மொழி யாற்பதில் கூறுகின்றாள்;
‘சின்ன வயதினில் என்றனையோர் – பெருஞ்
சீ மான் மணந்தனன் செத்துவிட்டான்! – எனில்
அமங்கலை’ என்றுகண் ணீர்சொரிந்தாள்!
பாவேந்தரின் இப்பாடல் வரியில் கன்னல் மொழிக்கு கனிமொழியானவல் நீ என்று விதவைப் பெண்ணை கன்னித்தமிழ் போலானவள் என்று மார்க்ஸிய கவிஞராக கையாண்டுள்ளார்.இன்றைய விதவைப் பெண்கள் கன்னித்தமிழ் போல் கன்னிகளாக விதவைகள் கோலம் கொண்டு வாழ்கின்றனர்.இந்நிலையை அன்றே தனது பாடலில் கணித்துள்ளார்.
தமிழ் போல் அவளின் அழகு
வஞ்சிக்கொடி போல இடை
அஞ்சத்தகு மாறுளது
நஞ்சுக்கிணையோ, அலது
அம்புக்கிணையோ, உலவு
கெண்டைக்கிணையோ கரிய
வண்டுக்கிணையோ, விழிகள்
மங்கைக்கிணை ஏதுலகில்
அங்கைக்கிணையோ மலரும்?
மேனி அதுவோ அமிழ்து, வீசுமண மோமிகுதி
கானிடை உலாவுமயில் தானுமெனையே அணைய நினையாளோ?
அமிழ்தான மொழியாலே நஞ்சுகொண்ட பாம்பு போல அவள் இடையும்,எதிரியை வீழ்த்தும் அம்பான பார்வை கொண்டு உலா வருகிறாள். ,வண்டு போல் அவள் கண்களும் என்னை வட்டமிட்டு சுத்தி வருகிறது.,வானில் உள்ள தேவலோக மங்கை போல் வந்தவளோ இந்தப் பெண்., காணகத்தில் உலவும் மயிலானவள் என்று அழகான பைந்தமிழில் அழகான தமிழ் பெண்ணாக ஆடைகட்டி வந்து நிற்கிறாள் .அவளைக் கண்டு மனம் தல்லாடி போகும் பேரழகி ,தேன் தேடி ஓடிவரும் வண்டு போல் என் மனம் அவளை நாடிப் போகும் பேரழகே உன்னை ஆராதிக்க தமிழை விட அழகானமொழியில்லை.அத்தமிழே என் காதலியாக வருகிறாள் இதயத்தில் எத்தனை அழகான உவமை நயம்கொண்ட காதல் பாடல் படிப்பவர் உள்ளம் கொள்ளைபோகும் படி அமைப்பது தமிழின் தனிச்சிறப்பு..
பாவேந்தரின் தமிழ் காதலி
பெண்ணொருத்தி பார்த்துவிட்டால் போதையாகும் உள்ளமது பாவேந்தரின் காதலிலே கன்னித்தமிழும் கலந்து விட்டால் காதல் தீயை ஏற்றிவிட்டால் அவரின் மங்கையும் மங்காத தமிழ் போல் அழகானவளாக மாறிவிட்டாள்.கையில் இறகும் உண்டு!அவளைக் காதல் மைதொட்டு மெய் தொட்டு வடித்துவிட்டேன் நானும் ஒரு பட்டாம்பூச்சி பறவையாகி,பறக்கிறேன்.கொம்பிற்கினிய கனியாகி என் பசிதனிக்க வருகிறாள்.கடவுள் படைத்தல் நல்அமுதாக அரசர்கள் உணவைவிட தித்திப்பு சுவைமிகுந்தவள் நான் உண்ண காத்திருக்கிறாள்.இசையின் ஏழு சுரங்களும் இசைக்க அழகான சுனையிலே நீராடி மகிழ்வது போல் என்னில் வந்தாள்.என்னோடு நீராடி காதல் மொழி சொன்னாள்.
அழகு தவழ் மங்கை பழகு தமிழ் போன்றாள்
கொஞ்சுப்பரி மாறுமொழி
பண்டைத்தமிழோ, அலது கொம்பிற்கனி யோ
——– —— ——- —————- ————– —-
கூடுமெனிலோ பெரியபேறு பெறுவேன் அலது.
நீடுதுயரே அடைவேன் ஈடுசொலவோ அரிது,
தேடுபொருள் யாதுமிலை, சீருமிவளே, உறவு
பழமையானவளோ கொஞ்சும் மொழி பேசிவரும் பாவையிவளோ, கொம்பில் பழுத்த முக்கனிச் சுவையானவள்,என் அன்பிற்கினிய காதலியைத் தேடுவது தவிற ஒன்றுமில்லை .பொன்போல மின்னும் அழகான புன்னகை கொண்டவள் தமிழோடு விளையாடும் எதுகை நயம் உறவாட உதித்த காதலில் மோனையும் எதுகை , கரங்களால் இணைந்திட நற்பண்புகளை அணிகலனாக காதலிக்கு தேன்கவிகளை சூடியுள்ளார். நான் தேடும் பொருள் யாதுமில்லை தேவதையாய் அவள் எனக்கு கிடைத்துவிட்டாள் பொன் பட்டது தென்பட்டது மின்னும் தங்கம் போல் அவள் மேனி ஒளிரும் பொண்ணிலவு ஒன்று பூமிக்கு வந்தது போல் அவளின் தோற்றம்.அன்பு மாது அவள் புன்னகை பூத்திடும் புது வசந்தம் அவள் அவளாலே இன்புற்றுடும் என் வாழ்வு. அன்பிலே அழகிய தமிழ் மொழி .அவள் புன்னகை பூத்திட்ட பூங்காவனம் என்று தனது காதலியைக் கூறியுள்ளார்.இன்றைய காதலர்களுக்கு முன்னோடியாக கவிஞரின் தமிழ் மொழி காதல் அமைந்துள்ளது.
பாவேந்தர், பாடலில் தேடும் பைங்கிளி
பாடலவள் நான்ந(ல்)லுரை ஆடலவள் நானடையும்
ஓடைமலரே அரசி ஊறுமணம் நானுமதில்
நீடவரும் யாழுமவள், நீர்மை இசை நான்அதனில்
ஈடுபடு மேனியவள் ஏழைஅதில் ஆவிஎன
அமைவாளோ அவள் …. எனக்கா?
தமிழும் அவளும் நான் தேடிய மனதில் குடி கொண்டவர்கள் நெஞ்சிற்குடி யேறிய நிலை நான் அறியவில்லை. அவள் என் இதயத்தில் எப்பொழுது குடியேறினால் ஓடை மலராக என் மனதில் மணம் வீசுகிறாள். நானும் அதில் அவளோடு வாழுகிறேன். நீரின் இசை போல அவளின் குரலில் நான் மயங்குகின்றேன் என் இதயத்தில் குடிகொண்டு அவள் வாழுகின்றாள். ஏழை என் மன மாளிகையில் அமர்ந்து ஆட்சி செய்கிறாள். இந்த ஏழையின் நறுமணம் வீசுகின்ற மலர் போல மயங்கி நின்றாலோ என்னிடம் தெரியவில்லை என்னுள் ஆவியாக புகுந்து விட்டால். அவள் எனக்காக பிறந்தவள் என்று அவளிடம் என் மனதை நானும் இழந்து விட்டேன்.
மானமவளே, எனதின் ஊனுமவளே. எனுயிர்
தானுமவளே, புகழ்மை மானமவளே, கொடிய
மாமழையி னாலுலகு தானமழையுமாறு நலம்
அருள்வாளோ
நான் பாடும் இசையானவள், மழையானவள்,அமிழ்தானவள், யாழ்போல ஊனும் உயிருமாக கலந்தவளாய் நெஞ்சிலே குடிகொண்டுள்ளவள் நதிபோல் மான்போல் ஓடிவருவாள். நங்கையுள்ளமும் நானறிவேன் என்னைத்தவிர என் தமிழ்காதலியை யாரும் அறியமுடியாது.ஏழ்மை இளவரசனாய் நான் வாழ்கிறேன். என் இல்லத்திலே தோழமையோடு மொழியும் மங்கையென வந்த கங்கை இவளோ? மழை போல அமிழ்தானவள். கானகத்து தேன் போல சுவையானவள்.ஏழ்மை எழிலரசியாய் என்னுள் வீற்றிருப்பவள். அஞ்சத்தகமோ அவளின் பேச்சை நான் கேட்டால். இன் சொல்லால் என்னை இதயம் நிறைப்பாளோ? வன்சொல் சொல்லி என்னை மறுப்பாளோ? மங்கைக்கு மங்கையாக மனதை மாற்ற வந்தவளும் இவளோ? என் உயிரானவள். என் உணர்வாக நிற்கிறாள். இதயம் என்னும் மாளிகையில் ஒளிரும் வண்ண நிலவும் தமிழ் கொடியும் இவள்தான்.என்னில் நிறைந்தவள்.. என்று தமிழை வர்ணித்து பாடியுள்ளார்.
காதலி முகவரி தேவை
இன்று காளையொருவன் பெண்ணை விரும்பி விட்டாள் அவளைத் தேடி பித்தனாக அழைக்கிறான், முகம் பார்த்து முகவரி வாங்கும் வரை அவனின் தவிப்பு காட்டாற்று வெள்ளம் போல் ஆரம்பிக்கிறது .நண்பனை ஒற்றனாக தூது போக வைக்கிறார்கள்,வாட்ஸ் அப், முகநூல் தேடி அழைக்கிறது இளைய சமுதாயம் இன்று.ஆனால் அன்றோ தகவல் தெரியவில்லை. அவள் சென்ற இடம் முகவரி அறியவில்லை. அவளின் நெற்றியோ ,நிலாப் பிறை,மைவிழிக் கண்களும் காதலைப் பேசுகிறது. அப்பட்டமான ஒப்பற்ற நீல நிற கார் கூந்தலும் காதலால் கட்டிப்போட்டது என்னை. அன்றலர்ந்த மலர் போல முகமும் ,ஒப்பற்ற மேனி, பத்தரை மாற்றுத் தங்கம் இழைத்தது போன்ற உடல் அழகு. இத்தனையும் நான் கண்டேன்.முத்தை பழிக்க அவள் பற்கள் போதும்.. கூந்தல் மலையின் மீது விழும் அருவி போல ஆர்ப்பரித்து நின்றது. அந்த கூந்தலிலே என்னை முடிந்து சென்றாலோ சென்ற இடம் தெரியாமல் சித்தம் கலங்கி செந்தமிழை ருசித்து பித்தனாய் நானும் வாழுகிறேன். அவளைத் தேடி அலையும் மனதிற்கு பதில் கூற வழி இன்றி விழி பிதுங்கி இருக்கின்றேன் . வெறுமனே. கீழ் திசை வானம் நோக்கி தலை குனிகிறேன். மீண்டும் வருவாளோ சிந்தாமணி போன்ற குற்றமில்லாத தமிழ் காவியமாய் என் காதலை ஏற்று மோட்சம் தருவாளோ? என்று காத்திருக்கிறேன் வழி தெரியாது நானும் வலியோடு நித்தமும் வாயிலில். காதலின் மேல் கொண்ட அன்பே தமிழ் ஊற்றாக்கி உள்ளக்கிடங்கை ஓசையின்றி உலா விட்டுள்ளார் கவிஞர்.
தகவல் தெரியவில்லை – அவளின்
முகவரி அறிந்துவா ஒற்றா!
அகல நெற்றி நிலாப்பிறை! ககண்கள
—— —- —— —– —— —— —– —–
சரிகுழல் மலையின்வீழ் அருவி?
புகை வண்டியில் என் மேற் புன்னகை
புகைவண்டியில் புகையிற்க்கு நடுவே தனது காதலி யார் என்று தேடுகிறார். கண்டுபிடித்துவிட்டார்.பொழிந்து நடுவே புன்னகை பூத்த மலராக எழுந்து போனாள். (தகவல்) அழகாக தனது காதலியாரென்று கவிதைப் பாடலில் ஓவியமாக காதலியை யார் என்று காட்டியுள்ளார்.
பாவேந்தரின் பாவையும் காதல் பார்வையும்
சிதைந்தது முதற்பார்வை? – காதற்
சிரிப்போடு பார்த்தாள் பிற்பாடு!
மிதந்து வந்த தங்கத் தோணி எனைவிட்டு
மறைந்தது! காதல் வெள்ளத்தில் நொந்தேன்,
அழகான புகைவண்டி அதில் எதிரே வந்தவள் என் தேவதையாகி நின்றால் அவளும் எனக்கென்ன என்று மனம் நிறைய புன்னகையோடு என்னைப் பார்த்துச் சிரித்தாள். நானும் அவளை நோக்கி சிரித்தேன். பாவையின் கண் பட்டது. அவளும் அடடா என்னை அழகாகப் பார்த்து சிரித்தாள்.நான்கு கண்களும் கதை பேசியது. சிறப்பாய் அமைந்தது முதல் பார்வை. பார்வை பட்டதால் காதல் சிரிப்போடு பார்த்தால். பிறகு மறைந்து போன நிலவாக என்னைவிட்டு விலகிப் போனாள். அருகே வந்த தங்க தோனி என்னை விட்டு மறைந்தது. காதல் வெள்ளத்தில் கொஞ்சம் நானும் வழியறியாது நின்றேன்.அவள் சென்ற திசையைப் பார்த்து.புகைவண்டி நில்லாது சென்றது. அங்கு என் மனம் பறிபோய் நின்றது. தேவதை இறங்காமல் சென்றுவிட்டாள். நானும் அவளின்றி உயிர் வாழ்வேன் என்ற நம்பிக்கை இன்றி புகைவண்டியை பார்த்துக் கொண்டே எந்த எண்ணமும் இன்றி நடந்தேன். கொல்லிமலை செவ்வாழை போல கனிச்சுவை அந்த இதழை அவளிடம் மட்டுமே நான் கண்டேன் கோவைப்பழ இதழோ ?இல்லை செந்நிற மிளகாயின் நிறமோ! பவளத்தின் நிறத்தை பாதி விலைக்கு வாங்கி வந்தாலோ? அதுபோல அவளின் உதடு அழகு இருந்தது..பெண் அவள் என் உள்ளத்தை தழுவி ஊடுருவி நல்ல அடையாளத்தைப் பறித்து சென்றாள் மீண்டும் என்னைத் தேடி வருமா அந்த முகம் என்று மனதிலே ஆயிரம் கேள்விகள் பாவை முகமோ பதிந்தது. பசுமரத்து ஆணி போல நானும் பதித்து விட்டேன் மீண்டும் தேடுகிறேன். ஒவ்வொரு புகைவண்டிகளாக மீண்டும் அவள் வருவாளா என்று காதலிக்காக காத்திருக்கிறார்.
பறந்து வந்த காதல் கிளியே:
திறந்த என் மனக்கூடு புகுவாய்!
பிறந்த பெண்கள் பல கோடி – உன்போல்
பெண்ணொருத்தி தேடி – நான்
இறந்துபோகுமுன் னாடி – மில
எழில் சுமந்தபடி என்னை நாடிப்
பாவேந்தரின் காதலி பறந்து வந்த நின்றாளோ பார்வையிலே கொன்றாளோ !கவிஞர் காதலின் வலிகளை இக்காலக் கவிஞரகளின் காதல்போல் பார்த்த ஞாபகம் இல்லையோ? பருவ நாடகம் தொல்லையோ? வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ எனப் புகைவண்டியில் கண்டதும் மனம் மயங்கி பாவேந்தரின் உள்ளம் வலியால் துடித்தது. எந்த காலமானாலும் காதல் மனம் படும் பாட்டை ஆயிரம் மொழிகள் இருந்தாலும் செந்தமிழவளைப் போலாகுமா ? உள்ளத்திலே நீ இருக்க வேறு பெண்ணொருத்தி நாடுமோ இந்த பூமியில் பிறந்தது பல ஆயிரம் கோடிப் பெண்கள் உன்னைப் போல பெண்ணொருத்தியை என் வாழ்வில் நான் கண்டதில்லை பிறந்த மலர்களும் பெண்களாக இருந்தாலும் நான் அவர்களை ஏற்க மாட்டேன் எனக்கு தேவதையும் நீதான். காதலியும் நீ தான். என் இமைகளும் நீ தான், நான் இறக்கும் முன்னே என்னைக் காண வந்துவிடு என்று காதலி சிறப்பை காவியமாக்கிவிட்டார்.
தேடிவந்த தமிழ்காதலே:
இலங்கைதனில்இருந் தாயா? – அவர்செய்
இழிவு கண்டு நைந் தாயா? – நீ
கலங்கி இங்குவந் தாயா? – என்
உன்னை யார் தீண்ட நினைத்தாலும் என்கரம் கொண்டு ஒடிப்பேன் கடல் தாண்டி வந்தாயா காதலன் நான் என்று நின்றாயா ?உனது உள்ளக்குறைகளை என் கரம் கொண்டு காப்பேன் உன்னைத் தீண்டும் காற்றைக் கூட கைது செய்வேன். உன் உள்ளத்தை நான் அறிவேன் அதில் உள்ள குறைகளையும் நான் களைவேன். என்னைத் தேடி வந்தவளே என் உயிரில் வைத்து காத்திடுவேன். உனக்கு ஒரு இழிவு என்றால் நான் அதனைத் தீர்த்திடுவேன் உள்ளம் எனும் மனக் கோவிலிலே உயர்ந்து நிற்கும் என்னவளே நீ நாடு தாண்டி வந்தாலும் என் இதயம் தொட்ட இளவரசி நீயே வாழ்க என்று சூளுரைத்துள்ளார்.
அமைந்திட்ட திண்ணையிலே
நண்பன் வருகையினை
நான்பார்த் திருக்கையிலே
நண்பனுக்காய் நான் காத்து இருக்கையிலே அழகான பூஞ்சோலையில் ஊறும் மணி கீற்று போல அமைந்திட்ட திண்ணையிலே நண்பருக்காய் பார்த்திருந்தேன் நீ வந்து முன் நின்றாய் நினைவெல்லாம் நீயாக உன்னைத் தேடி அலைகின்றேன். நானே கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் பெண்ணழகி நீயென்று நான் அறியவில்லை.
வெண்பல்லைப் பூவிதலால்
மூடியொரு மெல்லிதான்
போனாள் இடதுகை
பொற்குடத்தைப் போட்டணைத்தே
வெண்பல் புன்னகையால் ,பொற்குடத்தை அவள் அனைத்து முத்தமொன்று தந்துவிட்டாள் இவளை நான் எந்த நிலையிலும் பிரியமாட்டேன் பிரிந்தால் வாழமாட்டேன்.என்று இன்றைய இளைஞர்கள் பாடும் பாடலாக நான் உன்னை நீங்க மாட்டேன் என்று காதல் கண்ணனாக பாடியுள்ளார்.
கொஞ்சாமை ஒன்று மகிழாமை
ஒன்று குளிர் தமிழால்
கெஞ்சாமை ஒன்று கிடவாமை
பாராமை ஒன்று பகராமை
திடுக்கிட்டு மனம் கொதித்தேன்
பருக்கைக் கல்லும் உருகிவிடும்.
எத்தனையோ ஆமை உண்டு அதில் காதலில் முயலாமை, இயலாமை,சேராமை ,பேசாமை, புகழாமை எத்தனையோ மையிருந்தாலும் காதலி கண்மை போல் என் கைகளில் இல்லாமை மட்டும் வேண்டாம்..என் கையில் இறகும் உண்டு காதலி நீ என்மனதில் உண்டு சிரிக்கும் ஓவியமே உனது புன்னகையில் போதை கொண்டேனடி பாவை உன்னாலடி..செந்நிற மலரும் தோற்குமடி,திரும்பிப் பார்க்க பிறந்தவளே,உன்னாலே திடுக்கிட்டு மனம் தறிகெட்டு நின்றேன்.பாராங்கல்லும் உருகி விடும் உனக்கு மனம் ஏனடி இலகவில்லை,காதலின் கவலை தந்தாயே என் பாடலை கேட்டால் கல்லும் உருகும் காதலியே !நீ ஏன் என்னைத் திரும்பிப் பார்க்கமல் போகிறாய்…தமிழ் கூட என்பதை கேட்டு அருள்வாளே இயலாமை எனக்கில்லையே.நீ பார்த்ததிட்டு போனாலும் பார்க்காம போனாலும் பார்த்திட்டிருப்பேன் என்று பாரதிதாசனும் எதிர்கால இளைஞர்கள் இப்படிதான் இருப்பார்கள் என்று அன்றே பாடிவிட்டார் .
என்னுயிர் காதலியே அருகேவா;
பச்சிளநீர், வெண்ணிலவு,
பாங்கி என்று நினைத்தேன் – எனைப்
பார்த்திடவும் மறுத்து விட்டாய்
பதறி மனம் கொதித்தேன் தீயால் நெஞ்சு கொதித்தேன்,
ஆனை ஒன்றும் மதம் அடங்கும்
தனது காதலி பச்சிளநீர் காதலியே பெளர்ணமி நிலவே வெளியே வா, தமிழின் அருள்உண்டு தரணியில் வாழ இடமுண்டு நீபேசாத நிமிடங்கள் தீயாக மனம் கொதிக்கிறது .தமிழ் கொண்ட அருளாலே என் நோயும் கொஞ்சம் குறைகிறது.தோழியாக நினைத்தேன்.ஏனோ நீ பார்த்ததும் மறுத்து விட்டாய் தேனருவி பூந்தோட்டம் தேடி வந்தேன் வண்டாட்டம் செல்வம் என்று உன்னை நினைத்தேன். சேரமுடியாது நானும் தவித்தேன். தீயாய் நெஞ்சு கொதித்தேன் திரும்பிய இடமெல்லாம் உன்னால் துடித்தேன். பாதியான இதயத்தை பக்குவமாய் காத்திடவே பறந்து வந்தால் ஆகாதா? பாவையுள்ளம் என்னை நாடாதா?.பேசாது நீ போனால் தீயாக கொதிக்குதடி உள்ளமோ நெருப்பில் வெந்து சாகுதடி அன்னைத் தமிழ் எனக்கு அருமருந்தாகி நின்றால் பாவேந்தரின் ஒவ்வொரு வரியும் செந்தமிழை காதல் கனிச் சுவையாக்கி தன் காதலைத் தந்துள்ளார்.
நீலவான ஆடையில் காதலி
”நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகிறாய் ஒளிமு கத்தைக்
கோலமுழுதும் காட்டிவிட்டாற் காதல்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ?”
கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!”
காதலியைக் காணும் இன்பம் குறித்து எழுதுகிற போதும் மொழிச்சுவையுடன் பொதுவுடமைச் சிந்தனையைச் சேர்த்து சுரண்டப்படும் மக்களின் வாழ்வையும் பாடினார்பேறெனில் அவளன்பு பெறுவதாகும். காதலிலும் பொதுவுடைமைப் புரட்சிப் போக்கைக் கொண்டு வந்தவரே பாரதிதாசன். தனது பாடல்களில் ஏழை மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.. ஏழைத்தொழிலாளியின் மனைவி, மாட்டுவண்டிக்காரன் மனைவி போன்று சாதாரணப் பெண்களின் வாய்மொழிப் பாடல்களாக அமைவதுடன் பொதுவாகப் பழந்தமிழ் பாடல்களில் வரும் காதலியர் தம் காதல் உணர்வுகளைத் தமது காதலனிடம் வெளிப்படையாகக் கூறமாட்டார்கள். ஆனால் பாரதிதாசன் பெண்டீர் புரட்சிப் பெண்டீராகத் தம் காதல் உணர்வுகளைக் காதலனிடம் வெளிப்படையாக கூறவல்லவர்களாகவே படைத்துள்ளார்.
எதிர்பாராத அன்பின் முத்தம்
எதிர்பாராத முத்தம் என்னும் நூலிலே ஒரு பெண்ணின் வருகையை வர்ணிக்கும் வரிகளில் எம் கண்முன்னே ஒரு பெண்ணைக் கொண்டு வந்து நிறுத்துகின்றார்.
நீலப் பூவிழி நிலத்தை நோக்கக்
கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச்
செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும்
பெண்ணழகி அன்னப் பேடுபோல் செல்கையில் – செத்துப்
போகவும் மனம் நொந்தேனே
காதலின் தவிப்பும் ,காதலிக்கு வாங்கி வரும் தாவணி ஏற்கமறுத்தால் இதயத் துடிப்பும் அதனால் படும் வேதனை தேவதாஸாக மாறிவிட்டார்.காதலி வார்த்தை கேட்டு வாழ்க்கை இழக்கவும் துணியும் ஆண்வர்க்கத்தை இங்கு சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார்.
காதல் காவியம் குடும்ப விளக்கு
குடும்பவிளக்கு என்னும் அவரின் நூலைப் படிக்கும் போது ஒரு திரைப்படத்தைப் பார்த்த உணர்வு கண்முன்னே சித்திரிக்கப்பட்டிருந்தது. குடும்பவிளக்கு நாயகியின் கண்களை வர்ணிக்கும் போது தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி குளத்து நீரில் குதிக்கும் கெண்டை மீன் எனக் கண்களைக் கெண்டை மீனுக்கு ஒப்பிட்டுப் பாடுகின்றார்.இவ்வாறே பெண்களின் கண்களை வர்ணிக்கும்
வண்ணக்களஞ்சியப்புலவர்
தளம்குளிர் புனல்என நெடிய
கருவிழிஇரண்டும் கயல்எனத் தோன்றக்
கண்டுவந்து உடல் அசையாது
மாடத்திலே நிற்கின்ற பெண்ணின் கண்கள் பளிங்குத் தரையிலே பிம்பமாகத் தோன்றுகின்றன. அந்நிலப்பகுதி குளிர்புனல் என நினைத்து மீன்கொத்திப் பறவைகள் பறந்து வருகின்றன.அந்தப் பெண்ணின் கண்கள் இரண்டும் கயல்மீன்கள் போல் காட்சியளிக்கின்றன. எனவே அப்பெண்ணின் கருவிழிகள் இரண்டையும் கயல் மீன்கள் என்று நினைத்து மீன்கொத்திப் பறவை கவ்விக் கொள்ள வந்து வீழ்கின்றது என்று அழகாகப் பாடியுள்ளார்..
மதுரையில் பிறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே!
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை உன் புருவத்தில் கண்டேனே என்று வாலி பாடுகின்றார்.
இதே கண்கள்
வள்ளுவர் 1093 ஆவது குறளிலே
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்
நான் பார்க்காத போது என்னைப்பார்த்தாள். பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள். இந்தச் செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும் என சாலமன் பாப்பையா பொருள் கூறுகின்றார்.
காதல் குற்றவாளிகள்
இதனையே பாரதிதாசன் காதல் குற்றவாளிகள் என்ற தலைப்பில் வெளிவந்த கவிதைகளில் அழகான ஆண் ஒருவனை ஓடை குளிர் மலர் பார்வையால் அவள் பார்த்து விட்டாள். பாடம் படித்து நிமிர்ந்த விழி பட்டு திரிந்தது. அந்த மானின் விழி பட்டதால் என் மனம் பறிபோனது .ஆடை திருத்தி அழகாக நின்றால். விழி பட்டு மெய் பட்டு மெய்மறந்து நின்றேன். பட்டு மேனி அவளை நானும் கண்டு. ஆயிரம் ஏடுகளைத் திருப்பினாலும் மனம் அதில் செல்லவில்லை அவள் விழிகளில் விழுந்து விட்டது மனமும். ஏடு எடுத்து நான் பயில மறந்தேன்.இதுதான் அன்பென உணரவைக்கிறது.
ஓடைக் குளிர் மலர்ப் பார்வையினால்- அவள்
உண்ணத் தலைப்படும் நேரத்திலே,பாடம் படித்து நிமிர்ந்த விழி- தனிற்
பட்டுத் தெறித்தது மானின் விழி!
உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே.!. விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே” என்று கவியரசு கண்ணதாசன் கூட அற்புதமாக எடுத்துக் காட்டியுள்ளார்.
காதலில் பெண்மையின் பெருமை
பெண்மையின் பெருமையையும் உலகுக்கு உணர்த்துவதற்கு பாரதிதாசனின் குடும்பவிளக்கு ஒன்று போதும். பெண் வீட்டின் கண். அவள் உறவிலே விளங்கிடும் குடும்பம் என்னும் தத்துவத்தை அழகாகச் சித்திரித்திருக்கின்றார். காலை எழுகின்றாள். கோலமிட்டாள், கணவனைப் பிள்ளைகளைத் துயிலெழுப்புகின்றாள், காலையுணவு தயாரிக்கின்றாள். காதலின் மேன்மை உணவுப் பரிமாற்றத்தில் அறியக் கூடியதாக இருக்கின்றது.
என்னவளை நான் மறப்ப தெப்படி?
அவன் மேல் தானே நானேஆசை வைத்தேன் மானே! (அவன் மேல்).
வீட்டுவேலைகள், தையல்வேலைகள், மரச்சாமான்கள் பழுதுபார்த்தல், கொல்லூற்றுவேலை, மாமன்மாமி தேவைகளின் கவனிப்பு, பிள்ளைகளுக்கு, கணவனுக்கு எது பிடிக்கும் என தேடிச் சமைத்தல், உணவு பரிமாற்றம், கடைக்குச் சென்று கணக்கு வழக்குப் பார்த்தல், பிள்ளைகளைக் கடற்கரைக்கு அனைத்துச் செல்லல், பிள்ளைகளை அழைத்து வரல், பெற்றோர் பெருமை பிள்ளைகளுக்கு எடுத்துரைத்தல், பிள்ளைகளை உறங்கச் செய்து கணவன் கட்டிலண்டை வந்து பேசல், விருந்தினர் வரவேற்றல், இவ்வாறு நீண்டு கொண்டு செல்லும் குடும்பவிளக்கு நல்ல பல கருத்துக்களையும் இவற்றினூடு இடையிடையே தமிழின் பெருமை, பொதுவுடைமைக் கருத்துக்கள், போன்றவற்றையும் சுவையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.காதல் அடைதல் உயிரியற்கை! – அது
நீதடு மாற்றம் அகற்றிவிடு! – கை
நீட்டடி! சத்தியம்! நான்மணப்பேன்! – அடி
கோதை தொடங்கடி! என்று சொன்னான் – இன்பம் என மூடக் கொள்கையை உடைத்தெறிந்து தன் எண்ணச் சுதந்திரத்தை எழுத்தில் வடிக்கும் திறம்பெற்றவர் பாரதிதாசன் என்பதை அவரின் காதல் வரிகளிலும்,தமிழ் மொழி மேல் கொண்டகாதலிலும் நாம் கண்டுனற முடிகிறது.
முடிவுரை
முதுமையில் ஏற்படும் காதல் பற்றி சுவை மிகுந்த பாடல் குடும்பவிளக்கிலே வாசித்து இன்புறத்தக்கது. இளமையிலே காதல் வரும் எதுவரையில் கூட வரும் என்றால், முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை ஓடி வரும் என்று கண்ணதாசன் கூறுவதுபோல் இங்கு இளமை வடிந்து விட்டதோற்றம் ஒட்டிய மேனியில் காமத்தின் கடைசிச் சொட்டுக் கூட இல்லாத வயது. ஆனால், உண்மை அன்பு மனைவியில் காணுகின்ற வயதில் எல்லையைத் தொடும் ஆண்மகன் அவள் அழகை இழந்து விட்டாலும் அவள் உயிரோடு இருக்கின்றாள் என்பதே எனக்குப் போதும் என்கின்றார் ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்று கண்ணதாசன் கூறியதுபோல் இந்த உலகத்தில் எல்லாம் ஒருநாள் ஓய்ந்து போகும் ஆனால், உங்கள் அன்பைச் சுமந்திருக்கும் மனம் மட்டும் ஓய்வதில்லை என முதுமை கண்ட கணவனில் கொண்ட காதலை முதாட்டி உரைக்கும் போது அறம் செய்த கையும் ஓயும்!மக்களை அன்பால் தூக்கிப்புறம்போன காலும் ஓயும்!செந்தமிழ்ப் புலவர் சொல்லின் திறம் கேட்ட காதும் ஓயும்!செயல்கண்ட கண்ணும் ஓயும்! காதல் மறவரைச் சுமக்கும் என்றன் மன மட்டும் ஓய்தலில்லை என்று மூதாட்டி காதலை குடும்பவிளக்கிலே நாம் காணமுடிகிறது.பாவேந்தரின் தமிழும் அவரின் தமிழ் காதலும் படித்தாலும் சுவைக்கும் கேட்டாலும் இனிக்கும்.பாவைகள் உள்ளமோ அதிகம் துடிக்கும் ..
எக்காலமும் ஏற்கும் அழகான பாடலில் மோனை எதுகை இயைபு என முக்கனிச் சுவை கலந்து காலங்கள் ஆனாலும் காலத்தால் அழியாத தமிழ் காதலியவள் எல்லா இடங்களிலும் காவியமாகி நிற்பாள் பாரதிதாசன் பொதுவுடமை, தொழிலாளிகள், மறுமணம், இயற்கை,உவமை உருவகம் என எல்லா நிலைகளையும் தொட்டுச் செல்லும் காதல்.வரிகள் ஒவ்வொன்றும் வைரம் போல் மின்னுகிறது.எக்காலத்திற்கும் பொருந்தும் காதல் கவிதையல்ல .காதலை காவியமாக்கித் தந்துள்ளார்.இன்றைய இளைய சமுதாயத்திற்கு எது உண்மையான அன்பு என்பதையும் அதனை எவ்வாறு வெளிக்காட்டி வாழ்வில் கடைபிடிப்பது, இல்லறத்தில் நல்லறமாக காதலோடு வாழமுடியும் என்பதற்கு அவரின் நூல்களே சான்றுகளாகி உள்ளது.
துணை நூற்பட்டியல்
1.பாரதிதாசன் கவிதைகள் -பாரதிதாசன் செண்பகா பதிப்பகம் 2002
2.நூல் -புரட்சிக் கவி ஆசிரியர் மா.பா.குருசாமி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு .2007.
3.பாரதிதாசன் ஓர் உலகக் கவிஞர. செல்லப்பன் -சிலம்பொலி அருணோதயம் பதிப்பகம் .1989
4. பாரதிதாசன் கவிதைகள் ஆ.திருவாசகன் அருள் சுடர் பதிப்பகம். வளசரவாக்கம் சென்னை.
5. பாரதிதாசன் பாடல்கள் தொ.பரமசிவன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அம்பத்தூர் சென்னை.
 ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் த.சங்கீதா
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த் துறை,
புனித பீட்டர்ஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
ஆவடி, சென்னை




 ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்