Volume: 06 Issue : 02 Dr. S. Ilavarasi
E-ISSN: 3048 – 5495 Assistant professor
DoI No: Department of Tamil
ABCD Index Journal Jamal Mohammed college
Peer Reviewed Journal Tiruchirappalli – 620 020
Abstract
The hospitality of guests is an important symbol of Tamil culture. During the Sangam period, treating and caring for strangers who came to one’s home was considered a noble virtue. It reflects the humanistic values and traditional practices of the Tamil people. The virtue of hospitality has continued from ancient times to the present day without discrimination based on caste, religion, race, or language. Various Tamil literary works have highlighted this important cultural practice. This article presents information and references related to hospitality found in both Tamil grammar and literature.
Hospitality serves as an important record of the lifestyle of the ancient Tamils. Sangam literature greatly praises and illustrates the practice of hospitality. The virtue of hospitality also helped alleviate the hunger and hardships of poor and underprivileged people. Therefore, this study examines how even people living in poverty demonstrated exemplary hospitality and highlights the importance given to this virtue in Sangam literature.
Keywords:
Young girl / Young woman, Child / Infant, Remainder / Leftover→ Protects / Safeguards → Pledge / Mortgage
“சங்க இலக்கியங்கள் உணர்த்தும் விருந்தோம்பல் பண்பாடு”
ஆய்வுச்சுருக்கம்
தமிழர்களின் பண்பாட்டின் அடையாளம் விருந்தோம்பல். சங்க காலத்தில் தன் வீட்டுக்கு வரும் புதியவர்களே பேணுவது உயர்ந்த அறமாகக் கருதப்படுகிறது. மனிதநேய பண்பையும் பாரம்பரிய முறைகளை விளக்குவது குறிக்கின்றது. விருந்தோம்பல் பண்பு என்பது ஜாதி, மதம், இனம், மொழி என்று பார்க்காமல் பண்டையகாலம் தொற்று இன்றுவரையிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதனை பல்வேறு தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. இலக்கணத்திலும் இலக்கியத்திலும் விருந்தோம்பல் பற்றியச் செய்திகளும் தகவல்களை இக்கட்டுரையின் வாயிலாக எழுத்தாளப்பட்டுள்ளன. பண்டையத் தமிழரின் வாழ்வியல் ஆவணமாக இருக்கின்றது. சங்க இலக்கியங்கள் போற்றும் விருந்தோம்பல் பண்பு நிலையை விளக்குகின்றது. விருந்தோம்பல் பண்பின் காரணமாக ஏழை எளியவர்களின் பசியின்மையை கொடுமைகளை தடுப்பதற்கு வழிவகை செய்கின்றன. இதனால் சங்க இலக்கியங்களில் வறுமை நிலையில் இருந்தவர்கள் கூட விருந்தோம்பல் பண்பு சிறந்தவர்களாக திகழ்ந்துள்ளது ஆராயப்பட்டுள்ளன.
திரவுச்சொற்கள்
குறுமகள்-இளம்பெண், குழவி-குழந்தை, மிச்சல்-எஞ்சியது, ஓம்புவான்-பாதுகாப்பவன், பணயம்-அடமானம்.
முன்னுரை
தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புகளில் முதன்மையானது ‘விருந்தோம்பல்’ ஆகும். மக்கள் உயிர்வாழஉணவு இன்றியமையாதது. மனிதனின் அடிப்படை தேவையான உணவு, உடை,உறைவிடம் என்ற மூன்றில் முதலிடம் பிடிப்பது உணவே ஆகும். தாம் உண்பதோடு மட்டுமல்லாமல் உணவில்லாமல் வறுமையில் வாடிய ஏழை எளியவர்களுக்கும் வீட்டில் வரும் புதியவர்களுக்கும் உணவினை வழங்கி அவர்கள் உண்பதை கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். ‘இட்டு கெட்டவர் யாரும் இல்லை’ என்று ம்கூறுவார்கள். அந்த அளவிற்கு தானமும், தர்மமும் தலைகாக்கும் என்பதே நம்முடைய மரபாகும். அதன் வாயிலாகவே ஈகை பண்பு அடுத்தவர்களுக்கு உணவளிக்கும் உயரிய மாண்பு தமிழர்களின் வரலாற்றில் இலக்கியங்கள் பெரிதும் விளக்கப்பட்டதுஎன்பதை இக்கட்டுரையின் வாயிலாக காணலாம்.
விருந்தோம்பல் பண்பு
விருந்து என்றால் புதுமை அல்லது புதியவர் என்று பொருள். முன் பின் அறியாத வழிப்போக்கர்களாக இருந்தாலும் பாரபட்சம் இன்றி உணவும் இருப்பிடமும் வழங்கப்பட்டது. பண்டையத் தமிழரின் பண்பாட்டில் தலையானது விருந்தோம்பல் ஆகும். பண்டமாற்று முறை வழக்கில் இருந்த அக்காலத்தில் போக்குவரத்து வசதிகளும் இல்லாத சூழ்நிலை நிலவியது.எனவே இரவல்கள் மட்டுமின்றி ஏனையோரும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கால்நடையாகவே நடந்து செல்ல வேண்டியிருந்தது. உணவு விடுதிகள் இல்லாத காரணத்தினால் உண்டிக்கும் உறையுளுக்கும் அனைவரும் செல்லும் ஊர்களையே நம்பி வேண்டியிருந்தது. ஆகவே புதியதாக வருவோருக்கு பசிக்கு உணவளிக்க வேண்டிய நிலை இருந்தமையால் விருந்தோம்பல் பண்பாடு நிலவியது நிலவியது. விருந்தோம்பல் என்பது இல்லம் தேடி வரும் புதியவர்கள் இன்முகத்துடன் வரவேற்று இனிய மொழிகளை கூறி உபசரித்து உணவு அளிக்கும் உயரிய பண்பாகும்.
விருந்தேதானும்
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே-1
என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.
விருந்தோம்பும் முறை
விருந்தோம்பலில் உபசரிக்கும் பாங்கே முதன்மையானது. உப்பில்லாத கூழாக இருந்தாலும் அமிர்தத்தின் இனிமையை போல் சங்ககால மகளிர் நள்ளிரவில் விருந்தினர் வந்தாலும் முகம் திரிந்து நோகாது அவர்களை எதிர்கொண்டு வரவேற்று உணவளித்தமையை கற்புடைமைக்கு பொருந்தி காட்டியுள்ளார்.இதனை,
“அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்லிய குறுமகள்-2
என்ற பாடல் வரிகள் விருந்தோம்பல் நிலையை பற்றின் நற்றிணை பாடல்களின் மூலமாக அறியப்பெறுகின்றன.
இலக்கியங்கள் போற்றும் விருந்தோம்பல்
தமிழர்களின் நாகரிகம் பண்பாட்டில் சிறந்து விளங்கியது விருந்தோம்பல். உணவு விடுதி இல்லாத காரணத்தால் பசி என வருபவருக்கு இல்லங்களில் உணவு வழக்கும் முறை விருந்தோம்பல்பண்படாகும். இக்கருத்து வலியுறுத்தும் விதமாக விருந்தினர் மூலம் தலைவன் தலைவியரிடையே ஏற்படும் ஊடலும் கூடலாக மாறியுள்ளன என்பதை,
தடமருப்பு எருமை மட நடைக்குழவி
சிறிய முள் எயிறுதோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கும்மே-3
நற்றிணையில் மருத நிலத் தலைவியின் ஊடலை இப்பாடல் வழி எடுத்துரைக்கப்படுகின்றது.
குறுந்தொகை –விருந்தோம்பல்
குறுந்தொகையில் நெய்தல் நிலத் தடவி தன் தோழியிடம் பலர்வரும் அளவிற்குள்ள பெரிய வாயிலை அடைப்பதற்கு முன்னர் உணவருந்த வரவிருக்கும் விருந்தினர் யாராவது இருக்கிறார்களா என அறிவிக்குமாறு வினாவுகிறாள். இதனை,
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
வருவீர் உளரே? எனவும்
வாரார் தோழி நம் காதலரே-4
என்ற பாடல்வரிகள் உணர்த்தப்படுகின்றன. சங்ககாலத்தில் யாராவது பசியாய் பாடி விடுவார்கள் என்பதற்காகவே யாராவது உணவருந்தாமல் இருக்கிறார்களா என்று வருந்தும் நிலையைஇலக்கியங்கள் நமக்கு சுட்டுகின்றன. இக்கால கட்டத்தில் இத்தகைய சூழல் அற்றவர்களாக நாம் பலர் இருந்து வருகின்றோம் என்பதில் ஐயமில்லை.
புறநானூறு- விருந்தோம்பல்
பண்டைய தமிழர்கள் கிடைப்பதற்கு அறிய அமுதம் கிடைத்தாலும் அதைத்தான் மட்டும் உண்ணாமல் பகிர்ந்து உண்ணும் பண்புடையவர்களாக திகழப்படுகின்றார்கள்.
உண்டாலம்ம இவ்வுலகம்
இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும்
இனிதெனத் தமியார் உண்டலும் இலரே-5
என்ற பாடல் அனைவருக்கும் கொடுத்து உதவும் பண்பினை விளக்குகின்றது. அதியமான் என்ற மன்னன் தன்னிடம் வரும் இரவல்களுக்கு ஒரு நாள் வந்தாலும், இரு நாள் வந்தாலும், பல நாள் பல புலவர்களோடு வந்தாலும் முதல் நாளில் வரவேற்றது போலவே இன் முகத்தோடு வரவேற்று விருந்து கொடுப்பார் என்பதை,
ஒருநாள் செல்லலம் இருநாள்செல்லலம்
பன்னாள் பயின்றுபலரோடு செல்லினும்
தலைநாள் போன்றவிருப்பினன் மாதே-6
என்ற பாடல் வரிகளில்மக்களின் ஒழுக்க நெறிகளையும், வழக்கங்களையும் பாடண் திணை பின்பற்றி வருகின்றார்கள்.
வள்ளுவர் போற்றும் விருந்தோம்பல்
நாள்தோறும் தன்னை நாடிவரும் விருந்தினரை போற்றுகின்ற அவருடைய இல்வாழ்க்கை என்றுமே துன்பத்தால் பாழ் படுவதில்லை நாம் ஒருவருக்கு உடம்பு அழிப்பதால் நமக்கு என்றுமே துன்பம் நேராது என்பதே வள்ளுவர்விளக்குகிறார்.
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று-7
என்ற குறளின் வயிலாக விளக்கியுள்ளார். மேலும் கிரேக்கத்தில் ஒரு வீட்டுக்கு வெளியே சென்று கொண்டிருக்கும் அந்நியர் ஒருவரைஅவ்வீட்டில் வசிப்பவர்கள் இல்லத்தினுள் நூல் வருமாறு அழைப்பு விடுப்பர். வீட்டின் தலைவரான புலவலர் அந்த அந்நியரின் பாதங்களைக் கழுவி உணவு மற்றும் திராட்சை ரசத்தை அளித்து அவர் தன்னை ஆகவாசப்படுத்திக் கொண்டபிறகே அவரது பேரைக் கூட கேட்பார் என்கிறது கிரேக்க வரலாறு அப்படி இருக்க கிரேக்க வரலாற்றையே மிஞ்சுகிறது நம் இலக்கியம் இதனைத் தான் வள்ளுவர்
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சல் மிசைவான் புலம்-8
வீட்டுக்கு வந்த விருந்தினரை முதலில் உணவு உண்ணச் செய்து மீத உணவை உண்பவர்களது நிலத்தில் விதைக்காமலே பயிர் விளையும் என்பதே வள்ளுவர் சுட்டி காட்டியுள்ளார். ஒருவரது பசியினை போக்கும் நிலை இம்மையிலும் மறுமையிலும் நற்பயனை தரக்கூடியவையாக திகழுகின்றது. ஒரு உழவு செய்து தன் வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் உழவன் முதலில் விருந்தினரை சாப்பிட செய்து பிறகு இருப்பதை தன் வீட்டுக்கும் உள்ள உறவுகளோடு உண்டு வாழும் வாழ்க்கையை வள்ளுவர்குறள்வயிலாக விளக்கியுள்ளார்.
நற்றிணை-விருந்தோம்பல்
விருந்தினர்களுக்காக நம்மிடமிருந்த பொருள்களை பணயம் வைத்து பொருளீட்டி விருந்தினர்களுக்கு உபசரித்து பிறகு பணயம் வைத்த பொருளை மீட்கின்ற செய்தியை பற்றி பின்வரும் நற்றினை பாடல் ஒன்று விளக்குகின்றது.
கள்ளின் வாழ்த்தி கள்ளின் வாழ்த்தி
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்
நாட்செருக்கு………..
இரும்புடைப் பழவான் வைத்தனன்-9
என்ற பாடல் வரிகளில் வீரர்களின் வெற்றியை கொண்டாடப்படும் நிகழ்வினை எடுத்துரைக்கின்றன.
சிலப்பதிகாரத்தில் விருந்தோம்பல்
சங்ககாலத்தில் விருந்தோம்பல் சிறந்த நிலையில் பேணப்பட்டுள்ளது. கணவனுடன் கூடி வாழும் மகளிர் மங்கள மகளிர் க்குரிய தனி உரிமை ஆக இருந்துள்ளது.கணவனை இழந்தவர்களுக்கும் பிரிந்து வாழ்பவர்களுக்கும் விருந்தை எதிர்கொள்ளும் வரவேற்கும் உரிமையை பெற்றதாக குறிப்புகள் காணப்படவில்லை. கோவலன் பிரிந்திருந்த கண்ணகி தனக்கு நேர்ந்த இழப்புகளை நிழல் படுத்தும்போது,
அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெகிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை-10
என்ற வரிகள் புலம்பும் நிலையை எடுத்த இயம்புகின்றன. இளங்கோவடிகள் விருந்தோம்பலை இல்லற வாழ்வியல் இணைத்துள்ளார் இதனை
மறட்பருங் கேண்மையோடயப்பரி சாரமும்
விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்-11
என்ற பாடல்வரிகள் விளக்கப்படுகின்றன.
முடிவுரை
விருந்தோம்பல் என்பது தம்மை தேடி வந்த விருந்தினரை இன் முகத்தோடு வரவேற்கும் நிலையாகும். தம்மிடம் இருப்பது மற்றவர்களுக்கு இன்முகத்தோடு அமர்ந்து மகிழ்வுடன் உபசரிப்பது, விருந்தினரை மனம் மகிழ செய்யும் செயல்பாடுகள் அறிவுடைய பண்பாளர்களுக்கு அழகாகும். மேலும் இதனையே இலக்கியங்களில் நற்றிணை, குறுந்தொகையை,திருக்குறள், சிலப்பதிகாரம் புறநானூறு, பெரியபுராணம் போன்ற இலக்கணங்கள்இலக்கியங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. ஒருவருக்கு உணவை வழங்கும் முறையினையும் பசியை போக்கும் நிலையையும் அறிவுறுத்தும் செயல்பாடுகளே விருந்தோம்பல். பிறவி பயனே பெறுதலை விருந்தோம்பல் பண்பாகும். மற்றவர்களின் மனம் அறிந்து அவர்களுக்கு உணவு பரிமாறும் முறையினை பற்றிய செய்திகள் இக்கட்டுரையின் வாயிலாக அறியப்பெறுகின்றது. இன்றைய சூழலில் நாம் தினந்தோறும் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டு உணவின் பயனை அறியாமல் வாழ்கின்றோம். பசியின் கொடுமையையும், உணவின் முக்கியத்துவத்தையும் அக்கால இலக்கியங்கள் நமக்கு தெளிவாக எடுத்துக்காட்டி விளக்கியுள்ளது. விருந்தினர் உபசரிக்கும் பாங்கினை தெளிவாக எடுத்தாளப் பட்டுள்ளது.
சான்றெண் விளக்கம்
1.தொல்காப்பியம் -231
2.நற்றிணை -142
3.மேலது-120
4.குறுந்தொகை -118
5.புறநானூறு -142
6.மேலது-101
7.திருக்குறள்-83
8.மேலது-85
9.நற்றிணை -136
10.சிலப்பதிகாரம் -71-73
11.மேலது-85-86
துணைநூற்பட்டியல்
1.இளம்பூரணர்-தொல்காப்பியம், கழகவெளியீடு, சென்னை, பதிப்பு-1955.
2.பரிமேலழகர்-திருக்குறள், கழகவெளியீடு சென்னை, முதற்பதிப்பு-1963.
3.பாலசுப்பிரமணியன் கு. வெ-நற்றிணை, நியூசெஞ்சுரிபுக் ஹவுஸ் பி லிட், அம்பத்தூர், சென்னை 98,முதற்பதிப்பு-2004
4.புலியூர்க்கேசிகன்-புறநானூறு, பாரிநிலையம் 184,பிரைவேட் சென்னை-8, மறுபதிப்பு-2011
5.வேங்கடசாமிநாட்டார் ந. மு-சிலப்பதிகாரம், கௌராபதிப்பகம், சென்னை.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சு. இளவரசி
உதவிப்பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
ஜமால் முகமது கல்லூரி
திருச்சிராப்பள்ளி – 620 020.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

