Naattupura Nambikkaigal Kuriththa Paarvaigal|Dr.P.Santhi

நாட்டுப்புற நம்பிக்கைகள் குறித்த பார்வைகள்
Abstract
        
      The Field of Folklore is one of the growing fields.The field has intertwined itself with Sociology,Anthropology,psychology,history and linguistics.It has been started as a separate department at TamilUniversity and is growing.Floklore includes people’s belief system and customs.We get to know the views on how belif system arose When human life was connected with nature. 


“நாட்டுப்புற நம்பிக்கைகள் குறித்த பார்வைகள்”

ஆய்வுச் சுருக்கம்
    
      நாட்டுப்புறவியல்  துறையானது  வளர்ந்து வருகின்ற துறைகளில் ஒன்றாக விளங்குகின்றது. இந்த துறையானது சமூகவியல்இ மானிடவியல்இ உளவியல் இதத்துவம்இ வரலாறு இமொழியியல் ஆகிய துறைகளுடன் பின்னிப் பிணைந்து வளர்ந்து வருகிறது  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தனி ஒரு துறையாக தொடங்கப்பட்டு வளர்ந்து வருகிறது நாட்டுப்புறவியல் என்பது மக்களது நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். மனித வாழ்க்கையானது இயற்கையோடு இணைந்த போது நம்பிக்கைகள் உருவாகின இவ்வாறாக நம்பிக்கைகள் குறித்த பார்வைகளை காணலாம்.

முன்னுரை
    
         மக்களின்   மூலம் வளர்ந்து  வரும் துறைகளில் ஒன்றாக நாட்டுப்புறவியல் துறை வளர்ந்து வருகிறது. அதனுடைய வளர்ச்சிக்காக இன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தனி ஒரு துறையாக தொடங்கப்பட்டு வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இத்துறையானது மானிடவியல், சமூகவியல் ,உளவியல், தத்துவம், வரலாறு, மொழியியல் ஆகிய துறைகளுடன் பின்னிப்பிணைந்து வளர்ந்து வருகிறன. நாட்டுப்புறவியல் என்பது ஒரு நாட்டினுடைய மக்களின் நாகரீகத்தையும் பண்பாட்டினையும் பழக்க வழக்கத்தினையும் வரலாற்றினையும் நாட்டு நடப்பினையும் உண்மையான முறையில் எடுத்துச் சொல்வதாகும். நாட்டுப்புறத்தில் மக்களிடத்தில் காணப்படும் நாட்டுப்புற நம்பிக்கைகள் குறித்த பார்வைகள் என்கின்ற தலைப்பில் வருகின்ற செய்தியினை காணலாம்.

நாட்டுப்புறவியல் என்பதன் பொருள்
       நாட்டுப்புறவியல் என்பது நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றினால் பாதுகாக்கப்படும் ஒரு குறிப்பிட்ட மக்களினுடைய பண்பாடாகும். நாட்டுப்புறவியல் என்பது மக்களின்  நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். நாட்டுப்புற நம்பிக்கை என்பது நாட்டுப்புறவியலின் அடிப்படை பொது கூறு என்பர்
’மானிடவியல் பேரறிஞரான டைலர்’ அவர்கள் மக்களின் அறிவு  மூலம் ஏற்படக்கூடிய நம்பிக்கை கலை, ஒழுக்கம், சட்டம்,  பழக்கவழக்கம் முதலியவைகள் தான் பண்பாடாக மலர்கின்றன என்கின்றார் ‘மாலினோவஸ்கி ‘ என்பார் வாழ்க்கை முறைகளின் கூட்டுச்சேர்க்கை பண்பாடு என்கிறார்.
         
          வாழ்க்கை  முறையாகப் பண்பாட்டை கருதினால் மனிதனின் சடங்குகள், நம்பிக்கைகள் .பழக்க வழக்கங்கள் இதன் கண் அடங்கி விடுகின்றன. மனிதனின் தேவைகளின் அடிப்படையில் தோன்றியவை தான் பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள் ஆகும். அறிவுக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையும் நம்பிக்கைகள் என்பர். பழைய   காலங்கள் தோன்றியது முதல் மனிதனானவன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றான். ”மாற்றம் என்பதே மாறாதது” என்பது போல இயற்கையின் மாறுதலுக்கு ஏற்ப மனிதனின் மனமும் மாறுபடுகின்றன.
மனிதனின் வாழ்க்கையானது இயற்கையோடு இணைந்த போது நம்பிக்கைகள் உருவாகின. உலகில் வாழுகின்ற பழங்குடி சமுதாய வரலாற்றை நோக்கினால் உண்மையானது புலனாகின்றது. பண்டையத் தமிழர்களிடையே நிலவிய நம்பிக்கைகளையும் மக்கள் பின்பற்றிய சகுனங்களையும் பற்றி பார்க்கலாம்.
        
          பழங்கால இலக்கணமான தொல்காப்பியதிலேயே ‘நாளும் புள்ளும்’ பிறவற்றின் நிமித்தமும் (தொல்-பொருள் 91) என்று கூறப்பட்டுள்ளது. புள் எனக்குறிப்பிடுவது பழைய காலத்திலே பறவைகளையும் பிற்காலத்திலே சகுனங்களையும் பற்றியும் குறிப்பிடுவனவாக அமைந்துள்ளதை வாய்ப்புள் பறவாப்புள் என குறிப்பிடுவதில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
கூகை (சாவுக் குருவி) அலறினால் துக்க செய்தி வரும் அதாவது இறப்பு வரும்என்று பண்டையத்தமிழ் மக்கள் இடையே நம்பிக்கை நிலவிவருவதை காண முடிகிறது. அதை இன்றளவும் நிலவி வருவதனையும் அறிய முடிகிறது .இதனை சங்க இலக்கியத்தில் காணப்படும். புறநானூற்றில் நமக்குச் “அஞ்சுவரு குராஅல் குரலுந் தூற்றும் “என்று கூறுவதன் மூலம் காணமுடிகிறது.
(புறம்-280) இதனைப் போன்று சீவக சிந்தாமணியிலும் சீவகன் சுடுகாட்டில் பிறந்தவுடன் விசயை அழுது புலம்புகின்ற காட்சி ஆனது தேவர்களின் உள்ளத்தை உருக்கி விடுகிறது. அந்த பாடல்வரியானது
         
          ” எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட என்ற பாடல்    வரிகளின் மூலம் காண முடிகின்றது. இதனைப் போன்றே இன்னும் பல நம்பிக்கைகளும் காணப்படுகின்றன. காகம் கத்தினால் விருந்தினர் வருவர் என்பது பழைய காலம் முதல் இக்காலம் வரை தமிழ் மக்களிடையே நிலவி வருகின்ற  நம்பிக்கைகளுள் ஒன்றாக பார்க்க முடிகின்றது.

இறைவன் நம்பிக்கை         
          பண்பாட்டு  வளர்ச்சியினுடைய  படிநிலைகளாக  விளங்குவன நம்பிக்கைகள் ஆகும். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நம்பிக்கையின் வழி நின்றே வாழ்கின்றான். இறைவனை  வழிபட்டால் துன்பங்கள் நீங்கும் எண்ணிய செயல்கள்  நிறைவேறும் என்று நம்புவதும் குழந்தை இல்லாத நிலையில் பெண்கள் கடவுளை வேண்டினால்  குழந்தை பேறு கிடைக்கும் என்று நம்புவதும் எல்லா சமூக மக்கள் இடையேயும் காணப்படுகின்ற வழக்கமாகவே உள்ளது.எண்ணற்ற நம்பிக்கைகள்பலவகையில் நம்பிக்கைகள் நாட்டுப்புற மக்களிடையே நிலவுகின்றன. அவைகளாவன,   
       
      குழந்தைப்பற்றிய நம்பிக்கைகள், பருவமடைதல் பற்றிய நம்பிக்கைகள், திருமணம் பற்றிய நம்பிக்கைகள், கர்ப்பிணிப் பெண்கள் நம்பிக்கைகள், வேளாண்மை பற்றிய நம்பிக்கைகள் மழை பற்றிய நம்பிக்கைகள் விலங்கு பறவைகள் பற்றிய நம்பிக்கைகள், விருந்தினர் பற்றிய நம்பிக்கைகள், எண் பற்றிய நம்பிக்கைகள், நட்சத்திரம் பற்றிய நம்பிக்கைகள், அங்க பலன் பற்றிய நம்பிக்கைகள், மச்சங்களின் பலன் பற்றிய நம்பிக்கைகள், கிழமை பற்றிய நம்பிக்கைகள், திசை பற்றிய நம்பிக்கைகள், கோலம் பற்றிய நம்பிக்கைகள் இமாரி அம்மனை பற்றிய நம்பிக்கைகள் ,வீடு பற்றிய நம்பிக்கைகள், உணவு உடை அணிகலன்கள் பற்றிய நம்பிக்கைகள் இவற்றினை போன்று இன்னும் பல நம்பிக்கைகள் உள்ளன.
         
        திருமணமான பெண்கள் தாய்மை அடைய எண்ணுதல் பிள்ளை பேற்றிற்காக பல விரதங்கள்( நோன்புகள்) இருப்பார்கள் திருமணமான பெண்கள் விரைவாக தாய்மை அடைந்து விட வேண்டும் என விரும்புவார்கள் பிள்ளை இல்லை என்றால் சமுதாயத்தினுடைய தூற்றுதலுக்கு ஆளாக வேண்டும் என்று எண்ணுவார்கள். குடும்பத்தினர் பெயர் சொல்ல வாரிசு வேண்டும் என விரும்புவார்கள் குழந்தைக்காக பெண்கள் அரசமரத்தை சுற்றி வருதலும் உண்டு அரசமரத்தை சுற்றி வந்து அடிவயிற்றைப் பார்த்தாளாம் என்ற பழமொழியும் வழங்கி வருகிறது.
சங்கர் சென் குப்தா தமது நூலில் அரசமர வழிபாடானது மலட்டுத்தன்மையைப் போக்கக்கூடியது என்கின்றார் பிள்ளை பேற்றின் நோன்புக்காக வெள்ளிக்கிழமை விரதமும் பாம்பு புற்று புற்று வழிபாடும் நோன்புகளாக கருதப்படுகின்றது. குழந்தைகளுக்கு கண்ணேறு (திருஷ்டி) கழித்தல் பலரினுடைய கண்களில்  சிலருடைய கண்களுக்கு தீமையினை விளைவிக்கின்ற சக்தி உண்டு என்றும் அதனால் குழந்தைகளுக்கு கண்ணேறு( திருஷ்டி) கழிப்புச் செய்வதும் உண்டு. கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று கூறுவர் எனவே சில பேர்களின் கண் பட்டால் குழந்தைகளுக்கு நோய் நொடி வரும் என்று நம்புகின்றனர். கண்ணேறு பட்டதை கழிப்பதற்காகச் சுண்ணாம்பையும் மஞ்சளும் கொண்டு சுற்றி வீதியில் எரிவார்கள் இவ்வாறு செய்தால் கண்ணேறு கழிந்து விடும் என்று மக்கள் மத்தியில்  நம்பிக்கை நிலவுகின்றன.
         
        பூசணிக்காயில் மனிதனின் உருவம் இட்டு கரும்புள்ளி இட்டு வைக்கின்ற வழக்கம்மும் உள்ளது. இது எதற்காக எனில் புது வீடு கட்டுகின்ற போது பல மனிதர்களின் கண் திருஷ்டி படாமல் இருப்பதற்காக இவ்வாறு செய்வர் இது மட்டும் இல்லாமல் விளைந்த நிலத்தில் வைக்கோல்இ துணி முதலியவற்றால் உருவம் செய்து கரும்புள்ளி இட்டு வைக்கின்ற வழக்கமும் உள்ளது.  இதனையும் கண்சிறு கழித்தல் என்ற நம்பிக்கையில் அடக்குவர்.  காது குத்தும் வழக்கத்தில் உள்ள நம்பிக்கைகள் குழந்தைகளுக்கு சிறு காயமானது ஏற்படாவிட்டால் எவனானவன் அந்த குழந்தையினை தூக்கி சென்று விடுவான் என்ற நம்பிக்கையின் காரணமாக காது குத்தும் வழக்கம் தமிழ்நாட்டில் தோன்றியிருக்க வேண்டும் .காது குத்துகின்ற வழக்கமானது தமிழ்நாடு மட்டுமின்றி ஆசியாஇ எகிப்து போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றது. காதினை குத்துகின்ற போது ஏதேனும் உலோகத்தினையும் அணிவிப்பர் தீமைகள்  தருகின்ற ஆவிகளானது தலைஇ வாய் இமூக்குஇ காது ஆகிய உறுப்புக்கள் வழியாக எளிதில் புகுந்துவிடும் என்கின்ற நம்பிக்கையில் காதில் துளையிட்டு தீய ஆவிகளை விரட்டுகின்ற சக்தியாக காதில் ஏதேனும் ஒரு உலகத்தை அணிவித்தால் காது வழியாக தீய ஆவி நுழைவதை தடுத்து விடலாம். என்ற நம்பிக்கையில் இந்த பழக்கமானது ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

திருமணம் பற்றிய நம்பிக்கைகள்
       திருமணத்திற்கு முன்னர் ஜாதக பொருத்தம் பார்ப்பது உண்டு. அவ்வாறு பார்க்கின்ற போது பொருத்தம் இருக்கிறது எனில் பெரும்பாலான ஜாதகங்களில் ஆணினுடைய இரத்த பிரிவும்(பிளஸ்ஸாக) இருந்தால் பெண்ணினுடைய ரத்த பிரிவும் பிளஸ்ஸாக இருக்கும். அதனைப் போன்றே ஆணினுடைய இரத்தப் பிரிவு மைனஸ் ஆக இருப்பின் பெண்ணினுடைய ரத்த பிரிவும் மைனஸாக இருக்கும் இவ்வாறாக ஜாதக பொருத்தம் பார்க்கின்றபோது திருமணத்திற்கு பிறகு குழந்தை பேற்றில் சிக்கல் வராமல் இருப்பதற்கு இவ்வாறு செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஒரே வீட்டில் இரண்டு திருமணங்களை ஒரே நேரத்தில் நிகழ்த்தினால் ஒரு குடும்பமானது சிறக்கும் மற்றொரு குடும்பமானது தாழ்ந்த நிலையினை அடையும் என்றொரு நம்பிக்கையும் உள்ளது. திருமணத்திற்குபின் அந்த பெண்ணை வெள்ளிக்கிழமை அன்று கணவன் வீட்டிற்கு அனுப்பக்கூடாது என்றும் திருமணம் பற்றிய கனவு நல்லது அல்ல என்றும் நம்ம படுகின்றது.கர்ப்பிணி பெண்கள் பற்றிய நம்பிக்கைகள் கர்ப்பமாக இருக்கின்ற பெண்கள் (நிலைப்படி) தலைவாசலில் உட்காரவும் கூடாது தலை வைத்து படுக்கவும் கூடாது என்று நம்பப்படுகிறது கர்ப்பிணிப் பெண்கள் விரும்பும் பொருட்களை வாங்கிக் கொடுக்காவிட்டால் குழந்தையினுடைய காதில் சீல் வடியும் என்று நம்புகின்றனர் இது கர்ப்ப காலத்தில் இருக்கின்ற பெண்களுக்கு நம்பப்படுகின்ற நம்பிக்கைகளாக கருதப்படுகின்றது.

மழை பற்றிய நம்பிக்கைகள்
         
       மின்னலானது வடக்கேயும் தெற்கேயும் தோன்றினால் மழை வரும் என நம்புகின்றனர் அதனைப் போன்று தட்டான் தாழப் பறந்தாலும் கோழிகளானது தனது சிறகை விரித்து மண்ணில் பதுங்கினாலும் மழையானது வரும் என்று மழை கூறிய நம்பிக்கைகளாக எண்ணப்படுகிறது.

நட்சத்திரங்கள் பற்றிய நம்பிக்கைகள்
         
         பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் தரணியையே ஆள்வான் என்றும் அவிட்ட நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என்றும் நம்பப்படுகின்றது.

அங்க பலன்கள் பற்றிய நம்பிக்கைகள்
         
       மாறுகண் அதிஷ்டம் என்றும் மாறுகண் மாறி மாறி யோகம் என்றும் கூறுவர் முன்பல் நீண்டிருந்தால் எதிர்காலத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் என்றும் சுருட்டை முடி சோறு போடும் என்றும் கோரை முடி கோத்திரத்துக்கு ஆகாது என்றும் கையில் ஆறு விரல் இருந்தால் யோகம் என்றும் நம்பப்படுகிறது.

முடிவுரை
         
       நம்பிக்கையில் தான் மனித வாழ்க்கையானது இருக்கிறது என்பார்கள் அந்த நம்பிக்கையில் இறை நம்பிக்கை திருமணம் பற்றிய நம்பிக்கை கர்ப்பிணிபெண்கள் பற்றிய நம்பிக்கை மழை பற்றிய நம்பிக்கைகள் நட்சத்திரம் பற்றிய நம்பிக்கைகள் அங்க பலன்கள் பற்றிய நம்பிக்கைகள் முதலியவற்றில் உள்ள நம்பிக்கைகளில் சிலவற்றினை கண்டு தெளிந்தோம்.

துணை நூற்பட்டியல்
1.நாட்டுப்புறவியல் ஓர் ஆய்வு, சு சக்திவேல், மணிவாசகர் பதிப்பகம், சிங்கார தெரு பாரிமுனை, சென்னை -600108.

2.தொல்காப்பியம் (பொருளதிகாரம்), இளம்பூரணர், சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை 1974

3.புறநானூறு மூலமும் உரையும், சாமிநாதையர் உ.வே, உ. வே. சா நூல் நிலையம், சென்னை

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ப. சாந்தி
உதவி ப்பேராசிரியர்
இ எஃப் எல் தமிழ்
எஸ். ஆர். எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்    நிறுவனம்
அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம் சென்னை-89

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here