உன்னை அழித்து உருவாக்கிய
காகிதத்தில் கவியெழுதி
நான் பேசுகிறேன்
இப்பொழுது நீ பேசு..!
மனிதர்கள் போல் சாதி பலவுண்டு
ஆனால் நாங்கள்
விஷத்தை வெளியிடுவதில்லை
ஏசி இருக்கும் வரை..!
என்னருமை உங்களுக்குத் தெரியாது
எனக்கும் வலிக்கும் வெட்டாதே
ஊதியம் போதவில்லையாம்
ஒரு சிலர் வேலைநிறுத்தம்
காணக்கண்டேன்..!
ஒரு நாள் நான் வேலைநிறுத்தம் செய்தால்?
நல்ல வேளை என் இலைகள்
காற்றை வெளிவிடுகின்றது
காசு பணத்தை அல்ல
அப்படி வெளிவிடுவேனாயின்
உங்களிடம் பேசும் கடைசி மரம் நான்..!
கவிதையின் ஆசிரியர்
த.பிரகாஷ் ராஜ்
புறாகிராமம்
நாகப்பட்டினம் மாவட்டம்.