Sunday, August 30, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home கவிதைகள் நறுக்கென குத்திய முள்|கவிதை|முனைவர் கா. குமார்

நறுக்கென குத்திய முள்|கவிதை|முனைவர் கா. குமார்

நறுக்கென குத்திய முள் - முனைவர் கா. குமார் -நேபாளம் வெள்ளப்பெருக்கு பாதிப்பை முன்வைத்து

(நேபாளம் வெள்ளப்பெருக்கு பாதிப்பை முன்வைத்து)

🌊 நறுக்கென குத்திய முள்ளாய்..

விடுக்கென உதறிய

காலைப் போல்..

திடுக்கென எழுமுன்னே

சிந்தை மறைப்பதென்ன நியாயம்..!

🌊 யாம் செய்த தவறென்ன

என அறியா குழந்தையும்..

தையத் தக்கன குதித்த

கால்களும் ஒடிக்கப்பட்டு..

ஓரமாய் அடுக்கப்பட்ட

தென்ன பாவம்..!

🌊 பட்டதெல்லாம் போதும்

போ அங்கிட்டு என

வெள்ளமாய் குளியாட்டி

விட்டதென்ன கொடுமை..!

🌊 மை இட்ட இமை மூடிட்டு..

நட்ட மரமெல்லாம் நடுங்கி

வீழ்ந்தது ஏனோ நடுக்கத்தால்..!

🌊 வீணாய் போன விபரீதத்தை

விவரித்தால் வெள்ளமென

கண்ணீர் குபீரென்று வரும்..!

🌊 வந்து மட்டுமென்ன ஆகப்போகுது..

ஆகப்பெரும் வெள்ளத்தில்

மூழ்கி கிடக்கையில்..

எம் கண்ணீரும் அதில் கரைந்து

இன்னும் மிகை வெள்ளமாகுதோ..!

🌊 இயற்கையை மிஞ்சத் துடிக்கும்

மனிதன் ஆனாலும்,

மனிதனை மிஞ்சும் இயற்கை

இருக்கையில் யாரென்ன செய்ய..!

🌊 மொழி கடந்து..

இனம் கடந்து ..

நாடுகடந்து வருத்தம்..!

🌊 காலம் கடந்து வரும்

தலைமுறையேனும்

இந்த குளியல் சாவில்

தப்பிக்க வழி கேட்போம்

வலி கொடுக்கும்

அந்த இயற்கையை..

இரு கையை நீட்டி..!

கவிதையின் ஆசிரியர்

முனைவர் கா. குமார்,

உதவிப் பேராசிரியர்,

அ.வீ.வா. நினைவு திருபுட்பம் கல்லூரி,

தஞ்சாவூர்.

நறுக்கென குத்திய முள் PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »