ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்|முனைவர் அ எபநேசர் அருள் ராஜன்

ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்_முனைவர் அ எபநேசர் அருள் ராஜன்

♟️ வானம் 


மேகக் கூட்டங்களை வைத்து
ச்

சிலுவைப்பாதை நிகழ்த்துகிறது!


 

♟️பறவையின்
அலகுகளாய்

ஆணிகள்!


 

♟️ஆணியை


ஒற்றை அடியில் 


இறக்கும் சுத்தி!


 

♟️அழகான


முட்களாலான கிரீடம்!


 

♟️அறையப்பட


வழுவழுப்பான சிலுவை!


 

♟️மேலெழுப்பிட


சொரசொரப்பான கயிறு!


 

♟️காயங்களைத்


தொட்டு முத்திக்க


சாரை சாரையாகக் கூட்டம்!


 

♟️திரண்டு திரண்டு

வரும்
முகில்கள் !


 

♟️காற்றின் கைகளால்


மாரடித்துப் புலம்புகின்றன!


 

♟️தந்தையின் கையில்


ஆவியை ஒப்படைக்க


எதிர்பார்க்கும் கண்கள் !


 

♟️வானமெங்கும்


தென்படுகின்றன

தளர்தசைக்காய் !


 

♟️எச்சூரியவாறு 


மெல்ல நகரும் முதலைகள்!


 

♟️ஆடைகளைப்


பங்கிட்டுக் கொள்வோர் 


சூழ்ந்து நிற்கின்றனர்!


 

♟️இப்படி 


சுற்றம் சூழ


வருகை தந்து

எல்லோருக்கும்


எல்லாமுமான


அநாதி அன்பை


கொள்ளையாட நிற்கையில்


இரண்டு பக்கமும் 


கள்வர்களாக மரிக்க


ஆளில்லாமல் 


கலைந்து தேடச் சென்றது 


மேகக் கூட்டம்!

கவிதையின் ஆசிரியர்

முனைவர் அ எபநேசர் அருள் ராஜன் 

உதவிப் பேராசிரியர் 

தமிழ்த்துறை 

அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி)

 சிவகாசி

 

Leave a Reply