🎯அம்மாவைப் பற்றி எழுதவே
நினைத்தேன்,
கண்ணீர் தான் வருகிறது.
🎯எழுத்து கூட்டியாவது
படித்துக் கொண்டு இருக்கும்
தாயை பார்க்கிறான்
மகள்(ன்).
🎯அம்மாவின் கண்ணீர்
துளிகள் எல்லாம்,
மகன்(ள்) மகிழ்ச்சியைக் காண.
🎯வெயிலைப் பார்த்து
தாய் நிழலை தேடுகிறது,
கன்று..
🎯அவளை அறியாமால்
துப்பட்டாவை சரி செய்துக்கொண்டே இருக்கிறது
காற்று…
🎯இருந்ததாலோ என்னமோ
வெளி உலகம் தெரியாமலே போனது
வயதான பாட்டிக்கு.
🎯அம்மாவை எதிர்ப்பார்த்துக் கொண்டே
சமையல் அறையில்
நடுங்கிக் கொண்டிருக்கிறது பூனை..
🎯காற்றெல்லாம்
சண்டை போடுகிறது
அவள் கூந்தலிடம்
சரி செய்துக் கொண்டிருக்கிறது கை.
🎯திசையெங்கும்
அழுகுரல் கேட்கிறது,
மகள்(ன்) உயிர் பிரிந்தப் பிறகு.
🎯சத்தம் போட்டு அழும் குழந்தைகள்
வளர்ந்த பிறகு,
சத்தம் போடாமல்
அழ கற்றுக்கொள்கிறது.
🎯கதவு தட்டியே செல்கிறது
காற்று,
திறந்து பார்க்கும்
குழந்தைகள்,
ஏமாற்றத்துடன் செல்கிறது
மீண்டும் மீண்டும்..
🎯கோவிலுக்குச் சென்ற குழந்தைகள்
இன்றும் ஏமாற்றத்துடன்
வீட்டிற்கு திரும்புகிறார்கள்.
🎯குழந்தையை அழ வைத்துப்
பார்க்கிறது
பொம்மைகள்.
🎯 குழந்தையின் சிரிப்பு
புல்லாங்குழலின் வேதனையில்.
🎯புத்தகம் எல்லாம்
கரையான் படிக்கிறது.
🎯புத்தகம் வாங்குவதற்கு
சென்றேன்,
விலை பார்த்துவிட்டே வந்தேன்.
🎯என்னை எப்போதும்
சோதித்து பார்த்துக் கொண்டே
இருக்கிறது புத்தகம்.
🎯கூட்டிற்கு விடுதலை தருகிறது
ஏதோ ஒரு பறவை தான்.
🎯பறவைகள் வீடு
எல்லாம்
வாடகைக்கு விடுவதில்லை.
🎯ஒரு பறவையின் நிழலை
கண்டு பயப்படுகிறது
மீன்கள்.
🎯ஏதோ ஒரு மரத்தின் மீது
கூடு கட்டி வாழ்கிறது பறவை.
🎯வாழை என்ற பெயரோ
இந்த ஏழைதான் வைத்தான்.
🎯பொய் என்று தெரிந்தும்
நீ – ரசிக்கிறாய்.
🎯வாசம் இல்லாத பூ விடம்!
ஏதோ ஒரு பட்டாம்பூச்சி
சுற்றிக் கொண்டே தான் வருகிறது.
🎯நீ எந்தப் பக்கம்
சென்றாலும்
நான் உன்
நிழலாய் தொடருவேன்.
🎯நிலவைப் போல் விலகியிருந்தாலும்
நட்சத்திரம் போல்
உன்னை நினைத்துக்கொண்டே
இருப்பேன்.
🎯அவள் பார்வையில்
நான் எப்போதும்
தோற்கிறேன்
போர் புரிவதன் மூலம்.
🎯நட்பாய் பழகி
காதலாக முடிகிறது,
நீயும் நானும் சாட்சி
அந்த வெற்று காகிதத்திற்கு..
காதலுக்கு தெரிந்தயொன்று சாதியின்
வலி போராட்டம்…
இந்த மண்ணுலகில்
யாரோ ஒருவர் மட்டும்(மே)
வாழ்கிறோம்
அடுத்த தலைமுறைக்கு
கடத்திச் செல்கிறோம்
சாதியின் பெயரில் தான்.
🎯ஊரைக் காக்கும்
கடவுளைக் காக்க
பூட்டு எதற்கு..
🎯சீடன் குருவிடம் கேட்கிறான்
மழை வருவதற்கு இறைவன் தான் காரணமா?
இல்லை!
நம் வேண்டுதலை நிறைவேற்றுவாரா ?
தெரியவில்லை
அவர் வேலை என்ன
கடவுளாக இருப்பதே ஒரு வேலை.
🎯ஊருக்கு போவோம் என்று சொன்னால்
எனக்கு நினைவுக்கு வருவது(தே)
ஆலமரத்தடியில் பேசிக்கொண்டு இருக்கும்
தாத்தாவின் கதையாடலும்,
என் பாட்டி(யின்) மௌனத்தின் வெளிப்பாடுகள்,
நண்பர்களும்,
அது மட்டும் இல்லாமல்
அவளைப் பார்ப்போம் என்று
நினைத்துக்கொண்டே வருவேன்,
அப்போது,
அம்மாவின் குரல் மட்டும் கேட்கும்
விடிந்து விட்டது எழு தம்பி என்று கூறுவார்
அவளைப் பார்க்காமல் எழுகிறேன்.
இந்த கனவில் தான்.
கவிதையின் ஆசிரியர்
ச. கார்த்திக்
முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
திருப்பத்தூர்.






