புதுப்பொலிவு – கவிதை

கண்ணைச் சிமிட்டி

கைகால்களைத்

தாளமிட்டு

பெண் பிறப்பாய்…

இவ்வுலகில்

அம்மாவின்

முந்தானையைப்

பிடித்துக்கொண்டு

அழும் குழந்தையாய்…

கையைப்பிடித்துக்கொண்டு

பள்ளிக்குச் செல்லும்போது

சிறுமியாய்…

அம்மாவுடன் சண்டை

தம்பியுடன் சச்சரவு

அப்பாவுடன் சமாதானம்

விளையாட்டுப் பிள்ளையாய்…

விவரம் தெரிந்த பூவையாய்

கல்யாணம் பெண்களுக்கே

உரிய புதுப்பொலிவு!

கண்களில் சிரிப்பும்

உதட்டில் புன்னகையும்

கால் கட்டை விரல்

தரையில்

கோலம் போடுவதுமாய்…

பெண்ணாகப் பிறந்தவளுக்கு

பிள்ளைப்பேறு…

உண்மையின் விளக்காய்!

குடும்பச் சுமைகளை

உள்ளங்கையில்

தாங்கிய

இல்லத்தரசியாய்…

பெண்ணே – உனக்கு

எத்தனை பிறப்புக்கள்

ஒவ்வொரு பிறப்பிலும்

புதுப்புது பொலிவுடன்…

கவிஞர் முனைவர் க.லெனின்

2 COMMENTS

  1. பெண்களின் ஒவ்வொரு கால வளர்ச்சி நிலை. மிக நன்று

  2. அருமையான புரிதல்…
    பெண்கள் தங்கள் வாழ்வை சுமையாக எண்ணாமல் சுகம் என நினைத்தால் வசந்தம் தான்…

Leave a Reply